அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9223 topics in this forum
-
நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் அபிவிர…
-
- 0 replies
- 548 views
-
-
நோயைக் குணப்படுத்துவதை விடுத்து, நோய் அறிகுறிக்கு மருந்து போடுதல் இந்தப் பத்தி வெளியாகும் போது, இலங்கையில் சமூக ஊடக வலையமைப்புகளின் இணையத்தளங்களையும் செயலிகளையும் அணுகுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டிருக்கலாம்; இல்லையெனில், அத்தடைகள் தொடர்ந்த வண்ணமும் இருக்க முடியும். எது எவ்வாறாக இருந்தாலும், இலங்கையின் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்தல், தனிமனித உரிமை எதிர் தேசிய பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை, இந்தத் தடை அல்லது கட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில், இவ்வ…
-
- 0 replies
- 411 views
-
-
-பீஷ்மர்- * யுத்தக் கண்காணிப்புக்குழு பற்றிய பேச்சு; சமாதானம் பற்றிய கண்காணிப்பாக மாறிய கதை சென்ற வியாழன் அன்று நோர்வேயில் தமிழ்ச்செல்வன் எடுத்த நிலைப்பாடு சர்வதேச மட்டத்தில் இலங்கை பற்றி சிரத்தை காட்டுபவர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அத்தீர்மானத்தின் எதிர்பாராத்தன்மை நோர்வேயின் எதிர்பார்ப்புகள் பலவற்றை சிதறடித்துவிட்டது என்பது நன்கு புலனாகின்றது. இக்குறிப்பு எழுதப்படும் வரை ஐரோப்பிய நாடுகள் எதுவுமோ அல்லது ஜப்பானோ அந்த சம்பவம் பற்றிப் பேசாமல் இருப்பது தமிழ்ச்செல்வனின் நிலைப்பாடு வழியாக வந்த தீர்மானத்தின் அரசியல் உள் அர்த்தங்கள் சற்றும் எதிர்பாராத திசைகளுக்கு இலங்கை இனக்குழுமப் பிரச்சினையை இட்டுச் செல்லலாம் என்ற அச்சத்தை முதல் நிலைப்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒஸ்லோப் பேச்சுககளும் ஒருங்கிணைப்பாளர் பணியும் -------------------------------------------------------------------------------------------------- - இளந்திரையன் இலங்கைத் தீவில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் இராஜதந்திர நகர்வின் திசையைப் பெரிதும் தீர்மானிக்கும் சக்தியாக இன்று பல நெருக்கடிகளிற்கும் இழப்பிற்கும் தியாகங்களுக்கும் பின்னர் தமிழர் தலமை பெற்றிருக்கின்றது. போரியல் சம பலம் என்ற இராணுவ வலுவின் மீது அடையப் பெற்ற இனப்பிரச்சினக்கான தீர்வை நோக்கிய பேச்சுகளுக்கு வழி சமைக்கும் சமாதான ஒப்பந்தத்துக்கு அமைய பேச்சுகளில் தமிழர…
-
- 4 replies
- 1.7k views
-
-
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் மாகாண சபை மூன்ற…
-
- 2 replies
- 726 views
-
-
பகடிவதை: இனியாவது புனிதங்களை களைவோமா? பல்கலைக்கழகங்கள் பற்றி, எமது சமூகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள புனிதங்கள் பல. அவையே, பல்கலைக்கழக சமூகத்தை, அனைத்துக்கும் மேலானதாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றியுள்ளன. ‘கற்றோருக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோநிலை, தமிழ்ச் சமூகத்தை ஆண்டாண்டு காலமாகப் பீடித்த நோய். அது, படித்தவர்கள் அரசியல் செய்தால், உரிமைகள் கிடைக்கும் என்று நம்பி, வாக்களிக்கத் தொடங்கிய காலம் முதல் இருந்து வரும் ஒன்று. ‘அப்புக்காத்து’ அரசியலின் அடிப்படையும் இதுதான். இன்றுவரை, பல்கலைக்கழகங்களை அதுசார்ந்த சமூகங்களைக் கேள…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஈழப்பிரச்சினையில் சிறீலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பது போன்ற தோற்றப்பாடு அண்மைக் காலமாக இந்திய - சிங்கள ஊடகங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததையும், அண்மையில் நிகழ்ந்தேறிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணத்தையும் மையப்படுத்தியே இத்தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. வன்னிப் போரில் சிங்களம் மேற்கொண்ட தமிழின அழித்தொழிப்பு யுத்தத்திற்கு உறுதுணை நின்ற இந்தியா உண்மையில் இப்பொழுது சிறீலங்கா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதா? இதனால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது விடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா? இதுதான் இன்று எம்மவரிடைய…
-
- 1 reply
- 937 views
-
-
பகடைக்காய் ஆக்கப்படும் அரசியல் கைதிகள் கே. சஞ்சயன் / 2019 நவம்பர் 01 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரச படையினர் விடுதலை செய்யப்படுவார்கள் என்றொரு வாக்குறுதியைத் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. அதுபோலவே, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 274 விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மற்றொரு பக்கத்தில், கடந்தவாரம் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்…
-
- 0 replies
- 553 views
-
-
பகிரங்க விவாதம் சுமந்திரனுக்கு அனுகூலமா? 'புதிய அரசியலமைப்புத் தொடர்பாகவோ இடைக்கால அறிக்கை பற்றியோ யாராவது விவாதிக்க முன்வரலாம். முதலமைச்சரோ (விக்கினேஸ்வரன்) அல்லது வேறு யாராவது கூட வரலாம். யாரோடும் பகிரங்கமாக விவாதிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்'. 'தமிழ் மக்களுடைய அபிலாைஷகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் விட்டுக் கொடுக்கவில்லை. சமஷ்டியை முன்மொழிந்தவர்கள் சிங்களவர்களே. கண்டிச் சிங்களவர்களே சமஷ்டிக் கோரிக்கையை முதலில் முன்வைத்தவர்கள். இப்பொழுது சமஷ்ட…
-
- 0 replies
- 540 views
-
-
பகிரங்கமாகும் இந்திய வியூகம்..?அம்பலமாகும் அமெரிக்கத் தரகு..?
-
- 1 reply
- 546 views
-
-
ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதற்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கும் இடையில் உள்ள பாரதூரமான வேறுபாடு என்ன?. பகிஸ்கரிப்பதானது வெல்லப்போகும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதற்கு சமமானது. அது சிங்கள ஜனாதிபதி வேட்பாளரின் வாக்கு வீதத்தை அதிகரிக்கவே உதவும். அதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை வாக்காளரின் எண்ணிக்கையில் இருந்து கணிக்கப்படுவதில்லை. மாறாக அளிக்கப்பட்டு செல்லுபடி ஆகும் வாக்குக்களில் இருந்தே கணிக்கப்படும். அளிக்கப்பட்டு செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குக்கனைப் பெறும் ஒருவர் வேட்பாளர் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலேய…
-
- 0 replies
- 242 views
-
-
பகுத்தறிவும் பட்டறிவும் இன்றேல் கெட்டறிவுதான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தின் செயற்பாட்டாலேயே தமிழீழம் கிடைக்கலாம் எனவும் மஹிந்த ராஜபக் ஷ அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றத் தவறான பிரசாரங்களைச் செய்வதாகவும் சம்பந்தன் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் மூலம் யாப்பு இயற்றப்பட்டு தமிழீழம் வழங்கப்படவிருப்பதாகவும் அதற்கு இத் தேர்தல் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பாக நடத்தப்படுவதாகவும் மஹிந்த கூறியது தவறு. தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எங்குமே பிரிவினைக்குரிய வார்த்தை இல்லை என்பதை சம்பந்தன் சுட்டிக்காட்டினார். இவர் உயர் நீதிமன்…
-
- 1 reply
- 510 views
-
-
பக்கச்சார்பான போர் அனைவரும் ஒல்லாந்து ஹேக் கொண்டு செல்லப்பட வேண்டியவர்களே.. நடைபெற்ற போர் வெறும் அப்பட்டமான பக்கச் சார்பான போராகும் என்று சனல் 4 தெரிவிக்கிறது. - சீனாவின் விமானம், இஸ்ரேலின் விமானங்கள் பறப்பதை அது காட்டுகிறது. இப்படியொரு சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் உள்ள மக்களை கொன்றொழிக்க வேண்டிய தேவை சீனர்களுக்கு ஏன் வந்தது என்ற கேள்வியை ஒளிநாடா எழுப்புகிறது. - இஸ்ரேலிய கொலைஞர்களுக்கு இங்குவர என்ன முகாந்திரம் இருக்கிறது என்ற கேள்வியையும் அத ஏற்படுத்துகிறது. - மேலும் இந்தியா என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்காமலே சீனாவை உச்சரிக்கிறார்கள். இது மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். சர்வதேச சமுதாயம் பக்கச் சார்பாக நடந்து சமநிலையற்ற ஒரு போரை …
-
- 2 replies
- 855 views
- 1 follower
-
-
பங்களாதேஷ்: அறிவுத்துறையை தாக்கும் மதவாதம் கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள, வலுவற்றோர் மலிந்த உலகில் வாழ்கிறோம் என, அங்கும் இங்குமாக உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் நிகழ்வுகள் விடாது நினைவூட்டுகின்றன. சகிப்பின்மையும் மதவாதமும் கருத்துகளை ஒடுக்கும் பிரதான கருவிகளாயுள்ளன. தென்னாசியாவில் கடந்த ஒரு தசாப்தமாக மதவெறி ஒரு வலிய நோயாக வடிவெடுத்துள்ளதோடு, பொதுப்புத்தி மனநிலையை வசப்படுத்திக் காரியங்களைச் சாதிப்பதைக் காண்கிறோம். மதங்கள் வேறுபடினும் அணுகுமுறைகளும் நடைமுறைகளும் ஒரே விதமாக உள்ளன. மதவெறிக்கு மனிதர் புலப்படுவதில்லை. இதை அண்மைய நிலைமைகள் மீண்டும் உணர்த்தியுள்ளன. பங்களாத…
-
- 0 replies
- 660 views
-
-
பங்காளிக் கட்சிகள் இனியும் சம்பந்தனை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியுமா ? யதீந்திரா ஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த ஆதிக்கம் எந்தளவிற்கு நீளக்கூடியது என்பது தற்போதுதான் தெட்டத் தெளிவாகியிருக்கிறது. உள்ளுராட்சித் தேர்தலில் தமது கட்சிக்கான ஒதுக்கீடுகள் இவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டுமென்று பங்காளிக் கட்சிகளான டெலோவும், புளொட்டும் வலியுறுத்தியிருந்தன. அது பற்றி பேசலாம் என்று தமிழரசு கட்சியும் உறுதியளித்திருந்தது. இது தொடர்பில் கொழும்பில் கூடிய கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்கள் …
-
- 0 replies
- 577 views
-
-
வணக்கம் நண்பர்களே விதுவுக் இப்ப 7 அரைச்சனி உச்சத்திலபோல வேண்டாத சிந்தனையெல்லாம் வருது சேர்மார்கற் இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கூறமுடீயுமா உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் கேள்விப்பட்டவை
-
- 3 replies
- 2.1k views
-
-
ரங்கநாதனுக்கு 1 லட்சம் பணம் தேவைப்பட்டது. என்ன செய்யலாம்? அந்தக் காலமாக இருந்தால் ஒவ்வொருவரிடமும் சென்று பணம் கேட்கவேண்டும். இல்லா விட்டால் நகையையோ, நிலத்தையோ, வீட்டையோ அடகு வைத்துப் பணம் பெற்றுக்கொள்ளலாம். இப்பொழுது ஒரு டயல் செய்தால் போதும். வீட்டிற்கே வந்து காசோலை கொடுத்து விட்டுச் செல்கிறார்கள். இந்தப் பணம் கடன். தனிநபர் கடன். திருப்பி வட்டியுடன் செலுத்த வேண்டும். இன்னொரு ரங்கநாதன் இருக்கிறார். ரங்கநாதன் & கம்பெனி. அவருக்கும் பணம் தேவைப்பட்டது. ஆனால் திருப்பிச் செலுத்தும் கடனாக இல்லாமல் திருப்பிச் செலுத்தாத வகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். பணம் என்ன கூரையில் இருந்தா கொட்டும்? ஆனால் ஒரு நிறுவனத்திற்குத் திருப்பிச் செலுத்த அவசியமில்லாத வகையில் பணம…
-
- 1 reply
- 3.4k views
-
-
பசிலின் மறுபிறவி எம்.எஸ்.எம். ஐயூப் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, நாளை (08 ஆம் திகதி) தேசிய பட்டியல் மூலமாக, பாராளுமன்றத்துக்கு வருவார் எனச் செய்திகள் பரவியுள்ளன. அவர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருந்த, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நான்கு பேர், அவருக்காக இராஜினாமாச் செய்யத் தயாராக இருப்பதாக, கடந்த வாரம் கூறப்பட்டது. கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், மர்ஜான் பலீல், ஜயந்த கெட்டகொட, பேராசிரியர் ரஞ்ச…
-
- 0 replies
- 494 views
-
-
பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு? – அகிலன் பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு? பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்தக் கேள்விகளை அரசியல் வட்டாரங்களில் எழுப்பி யிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப் பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப் பட்டிருக்கின்றார். அதே வேளையில் பேச்சுக்களுக்கு முன்னோடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேசியிருக்கின்றார். இவை எல்லாம் பகிரங்கப் படுத்தப்படாமல் இரகசியமாக இடம் பெற்றிருக்கின்றது. ஆனால், தகவல்கள…
-
- 1 reply
- 368 views
-
-
பசில் ஒரு மந்திரவாதியில்லை ? நிலாந்தன். July 25, 2021 அமெரிக்கா வழங்கிய மிலேனியம் சலேன்ச் உதவித்தொகையை நிராகரித்த ஒரு அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்சவை நிதியமைச்சராக நியமித்திருக்கிறது. இதை அகமுரண் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மேற்கு நாடுகளோடு சுதாகரித்துக்கொள்ளும் ஓர் உத்தி என்று எடுத்துக் கொள்வதா ? கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கு நாடுகளைச் சமாளிக்கும் விதத்தில் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தாவிட்டால் அல்லது அகற்றாவிட்டால் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது என்ற தொனிப்பட எச்சரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவே…
-
- 0 replies
- 364 views
-
-
-
- 7 replies
- 694 views
-
-
பச்சைத் தங்கத்துக்கு சர்வதேசத்தின் அடி நூற்றைம்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறையானது, சர்வதேசத்தில் தனக்கென முத்திரையைப் பதித்துள்ளது. தேயிலையினால் தயாரிக்கப்படும் தேநீர் என்பது இலங்கையர்களின் தேசிய பானம் என்று கூறுமளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துவிட்ட ஒன்றாகும். தேநீரின் சுவையைச் சுவைக்காத இலங்கையர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இல்லை என்றே சொல்லுமளவுக்கு தேநீர் ஓர் உற்சாக பானம் என்று கூறுவதில் தவறில்லை. வீட்டுக்கு வரும் புதிய விருந்தினரைக் கூடத் தேநீரைக் கொடுத்து உபசரிக்கும் பண்பானது இலங்கையர்களின் தேநீர் மீதான மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு பண்பாகும். …
-
- 1 reply
- 604 views
-
-
பஞ்சாயத்தில் முடிவுறவுள்ள தமிழர் அரசியல்! இலங்கைதீவில் தேர்தல்! உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான பிரச்சார மேடைகள் முழங்குகின்றன. தெற்கில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் கட்சியினர் கூறுகிறார்கள் - போரை வென்றோம், பயங்கரவாதத்தை ஒழித்தோம்! நல்லாட்சி என கூறப்படும் அரசின் கட்சியினர் கூறுகின்றனர் - குடும்ப ஆட்சியை ஒழித்தோம், ஊழலை ஒழித்தோம், நல்லாட்சியை ஏற்படுத்தினோம். முஸ்லீம் அரசியல் கட்சியினர் கூறுகின்றனர் - எமது பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றினோம். எமது மக்களிற்காக இரவு பகலாக உழைக்கிறோம். மலையக அரசியல் கட்சிகள் கூறுகின்றன, எமது மக்களின் ஏழ்மை நிலைகளை ஒழிக்கிறோம், வாழ்விடங்களை புதுப்பிக்கின்றோம் இன்னும் பல செய்வோம்.…
-
- 0 replies
- 448 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் இலங்கை ஜனாதிபதியும், 6 தடவை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, படலந்த சித்திரவதை முகாம் பேசுபொர…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
விகடன் டீம் – நிலாந்தன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு தோற்றமே கிடைக்கும். அதிபர் பதவியேற்ற புதிதில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கோத்த…
-
- 0 replies
- 639 views
-