Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா? நிலாந்தன்:- 02 மார்ச் 2014 இம்முறை ஜெனிவாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் லொபியானது, முன்னைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், துலக்கமான ஒரு கருத்தொருமைப்பாட்டை எட்டியிருப்பது தெரிகிறது. தமிழ் டயஸ்பொறாவிலும், தமிழகத்திலும் ஒழுங்கு செய்யப்படும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், முன்வைக்கப்படும் சுலோகங்கள் என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அது தெரியவரும். அதாவது, முன்னைய ஆண்டுகளைப் போலன்றி இம்முறை போர்க்குற்ற விசாரணை என்ற மையப்பொருளைக் கடந்து இனப்படுகொலை எனப்படுவதே மையப்பொருளாக மாறியிருக்கிறது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை நிறுவுவதன் மூலம் அதற்குரிய உச்சபட்ச பரிக…

  2. மே 2009, 2022: மஹிந்த ராஜபக்ஷ இலங்கை அரசியலில் பெற்ற உச்சமும் வீழ்ச்சியும் விக்னேஷ். அ பிபிசி தமிழ் 10 மே 2022 ஓரிடத்தில் நிலைமை மோசமாகிறது என்றால் 'பற்றி எரிகிறது' என்ற உவமையைப் பயன்படுத்துவோம். பொருளாதார நெருக்கடியால் போராட்டங்களைச் சந்தித்துவந்த இலங்கை இப்போது உண்மையாகவே பற்றி எரிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட 2009ஆம் ஆண்டு மே மாதம் அரசியல் செல்வாக்கின் உச்சத்தைத் தொட்ட மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் போராட்டம் தீவிரமடைந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்வில் மறக்க முடியாத காலங்களாக அமைந்த இந்த இரண்ட…

  3. ஆணாதிக்க காவலராக மைத்திரி இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றை உற்றுநோக்கிப் பார்ப்பவர்களுக்கு, ஒரு விடயம் மாத்திரம் உறுதியாகத் தெரிந்திருக்கும். சாதாரண சமூகத்தில், கலாசாரக் காவலர்கள் என்று கேலியாக அழைக்கப்படுபவர்களிடம் காணப்படும் அத்தனை குணாதிசயங்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணப்படுகின்றன என்பது தான் அது. கலாசாரக் காவலர் எனும் சொற்கள், சாதாரணமாகப் பார்க்கும் போது, பழைமைவாதத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும் சொல்லாகவே தெரியலாம். ஆனால், நவீன காலக் கலாசாரக் காவலர்கள் என்போர், முன்னைய காலங்களில் காணப்பட்ட ஆணாதிக்கச் சூழலை மீண்டும் கொண்டுவருவதற்கே விரும்புகிறார்கள் என்பதை, சற்று அவதானித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளக் கூடியதா…

  4. சமந் சுப்ரமணியம் [samanth Subramanian] 'இந்த பிளவுபட்ட தீவு' [This Divided Island] என்கின்ற தலைப்பில் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இந்நூலானது சிறிலங்காவின் மிகமோசமான கடந்த காலத்தையும் நிச்சயமற்ற நிகழ்காலத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நூலின் ஆசிரியருடன் Hindustan Times ஊடசகத்திற்காக Sudha G Tilak மேற்கொண்ட நேர்காணலின் விபரம் வருமாறு: கேள்வி: இந்த நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது? பதில்: போர் என்பதன் தாக்கம் என்பதை உணர்ந்ததன் ஒரு பகுதியாகவே இந்த நூலை நான் எழுதியுள்ளேன். நான் சிறிலங்காவை சேர்ந்தவன் அல்லன். ஆனால் நான் சென்னையில் வளர்ந்தவன் என்ற வகையிலும் நான் ஒரு தமிழன் என்ற வகையிலும் சிறிலங்காவில் எத்தகைய போர் இடம்பெற்றது என்பதை எழுதியுள்ளே…

  5. புதுடெல்லி: மத்திய அமைச்சரவையிடம் தெரிவிக்காமலேயே இலங்கைக்கு இந்திய படைகளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அனுப்பி வைத்ததாகவும், தொடக்கத்திலிருந்தே இலங்கை தமிழர் பிரச்னை தவறாக கையாளப்பட்டு, இறுதியில் முற்றிலும் தோல்வியில் முடிந்ததாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் மற்றொரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்திரா - சோனியா குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், 'ஒரு வாழ்க்கை போதாது: ஒரு சுயசரிதை' ( 'One Life is Not Enough: An Autobiography') என்ற தலைப்பில் என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் தனது அரசியல் வாழ்க்கையில் தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து அவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில…

  6. சிறிய நாட்டின் பெரிய பிரச்சினைக்கு வயது நூறு கடந்த 08, 09, 10ஆம் திகதி என மூன்று நாட்கள் நடைபெற்ற ‘வடக்கின் பெரும் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மனதில் தோன்றியது. ஒரே சனத்திரள்; ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் கலகலப்பாக மைதானமும் சுற்றுப்புறமும் காட்சி அளித்தன. ஒரு மர நிழலில் அமர்ந்தவாறு, ஆட்டத்தை ஆர்வத்துடன் ரசித்தேன். அருகில் ஒரு முதியவர், கையில் புதினப் பத்திரிகையை வைத்திருந்து, அதைப் படிப்பதும் ஆட்டத்தைப் பார்ப்பதுமாகக் காணப்பட்டார். “ஐயா, துடுப்பெடுத்தாடும் பையன் …

  7. தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலம்!! 2015 ஆம் ஆண்டு தமிழ் மக் களின் ஆத­ர­வு­டன் தெற்­கில் மலர்ந்த அரசு, இனப் பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வாக புதிய அரசமைப்பு ஒன்றை உரு­வாக்க முனைந்­தது. இந்த முயற்­சி­யில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பும் பங்­கா­ள­ராக இணைந்து கொண்­டது. அர­சி­யல் கட்­சி­கள் தமது அர­சி­யல் பேரங்­க­ளை­யும் அரசமைப்பு உ­ரு­வாக்க முயற்­சி­க­ளையும் ஒன்­றா­கக் கலக்க முற்­பட்­டன. புதிய அரசமைப்பில் இனப்­பி­ரச்­சி­னைத்­தீர்­வுக்கு அடிப்­ப­டை­யாக இருக்க வேண்­டிய அம்­சங்­களை முதன்­மைப்­ப­டுத்­துதல் கைவி­டப்­பட்­டது. புதிய அரசமைப்பில் தமி…

  8. சி.ஐ.ஏ: சித்திரவதையின் உலகமயமாக்கல் அனைத்தும் உலகமயமாகியுள்ள சூழலில், சித்திரவதை விலக்கல்ல. சித்திரவதை பல வகைகளில் நடக்கின்றன. ‘உண்மையை அறியும் வழி’ என்ற போர்வை, சித்திரவதைகளைக் கண்மூடித்தனமான அனுமதிக்கிறது. ‘பயங்கரவாதி’ என்ற சித்திரிப்பு மட்டுமே, ஒருவர் சித்திரவதைக்குள்ளாகப் போதிய காரணியாகிறது. பொதுப்புத்தி மனநிலை, அதை விமர்சனமின்றி ஏற்கிறது. தம்மை நாகரிக ஜனநாயக சமூகங்கள் என்போர், சித்திரவதையை அனுமதிக்கிறார்கள். சித்திரவதை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. நாம், மனிதரை மனிதராக மதிக்கும் ஒரு சமூகமா என்ற கேள்வியை, நாமெல்லோரும் கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும். …

  9. சிறுத்தைகளும் விலங்குரிமைப் பாசாங்குகளும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில், சிறுத்தையொன்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், எதிர்பாராத விதமாக, தேசிய செய்தியாக மாறி, விலங்குரிமைக்கான கோரிக்கைகளும் விசாரணைக்கான கோரிக்கைகளும் எழுந்திருக்கின்றன. இத்தனை கருணை மிகுந்த தேசமாக இலங்கை இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் பலருக்கு எழுப்பியிருக்கிறது. உயிர்களைத் தேவையின்றிக் கொல்லக் கூடாது என்பது, எம்மில் அநேகர் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம் தான். அச்சிறுத்தை கொல்லப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது, மனது வலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. அதிலும், சிறுத்தை கொல்லப்பட்ட பின்னர், அதனுடன் “செல்பி” எடுத்துக் கொண்டு, அதை ஒரு க…

  10. பேச்சு அல்ல- செயலே தேவை- நீதியரசர் பேசுகிறார்!! தொகுதி-1 -த.செல்வராசா 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2013ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­திக்­குள் வட­மா­கா­ணத்­துக்­கான மின்­சா­ரம், வீதி­கள், பாலங்­கள், பாட­சா­லை­கள், தபால் நிலை­யங்­கள், விவ­ சா­யத் திணைக்­க­ளம், நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம், நில அள­வைத் திணைக்­க­ளம், பிர­தேச செய­ல­கங்­கள், நீர்த்­தாங்­கி­கள் எனக் குறித்­தொ­துக்­கப்­பட்ட சகல உட்­கட்­ட­மைப்பு வேலை­க­ளும் இயன்­ற­ள­வில் முடி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. அதற்கு அப்­போ­தைய வட­மா­காண ஆளு­நர் மேஜர் ஜென­ரல் ஜி.ஏ…

  11. இரண்டும் கெட்டான் நிலை பி.மாணிக்­க­வா­சகம் மாற்­றங்­களினூடா­கவே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும். நிலை­மை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அதனூடாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தே சிறந்த வழி­மு­றை­யாகும். எனவே, மாற்­றங்­க­ளின்றி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­யாது. மாற்­றங்­க­ளின்றி நல்­லி­ணக்கம் ஏற்­பட முடி­யாது. நல்­லு­றவும் இன ஐக்­கி­யமும் நிலை­யான சமா­தா­ன­மும்­கூட சாத்­தி­ய­மில்லை. இந்த வகை­யில்­தானோ என்­னவோ அர­சி­ய­ல­மைப்பை மாற்றியமைப்­பதினூடாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அணு­கு­மு­றையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. …

  12. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாட்டினை தமிழ், முஸ்லிம் மக்கள் எடுத்து , நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு வேலைத்திட்டமாக இல்லாது விட்டாலும் தனித் தனியே செயற்பட்டனர். இதில் முதலாவதாக தம்மை ஒடுக்குகின்ற பிரதான பொது எதிரி சிங்கள இன மேலாதிக்க ஆளும் குழுமம் என்பது மிக வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாக இருந்தது.அந்த சிங்கள இன மேலாதிக்க ஆளும் குழுமத்தினை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு இரு இன மக்களின் அபிலாசைக…

  13. ஒற்றையாட்சியைத் தமிழினம் ஒருபோதும் ஏற்றதில்லை - வி.ரி.தமிழ்மாறன் தேர்தலில் தோற்றிருந்தால் மண்ணுக்கடியில் சங்கமித்திருப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மண்ணில் நின்று (பொலனறுவையில்) விளம்பியுள்ளார். மண்ணுக்கடியில் போகவிருந்த எங்களில் பலரும் தற்போது தப்பித்து விட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள். ஆயினும் உரிமைக்கான குரலை உரத்து ஒலித்ததால் எங்கள் மீது திணிக்கப்பட்டிருந்த எல்லாவிதமான அச்சுறுத்தல்களும் முற்றாக நீங்கிவிட்டதாகக் கூறமுடியாது. வடக்கு கிழக்கில் குடிகொண்டிருக்கும் புலனாய்வுக் கட்டமைப்பு முற்றிலும் அகற்றப்படாத நிலையில் தான் நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்பதை மறக்கக் கூடாது. இராணுவக் கெடுபிடியிலிருந்து இன்னும் வ…

  14. இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது. அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noël Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ ஃபசோ. இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் ‘ஆபிரிக்காவின் சே குவாரா’. 1983ம் ஆண்டு இராணுவ புரட்சி நடவடிக்கை ஒன்றின் மூலம் Burkino Faso நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தோமஸ் சங்காரா கைப்பற்றினான். ஆட்சிக்கு வந்ததும் அவன் கொண்டுவந்த ம…

  15. என் தோழமை (My Comradery or Camaraderie) - சுப. சோமசுந்தரம் எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து திராவிட இயக்கச் சிந்தனையாளர்களால் பகுத்தறிவு எனும் உளி கொண்டு மொழியுணர்வு எனும் மெருகேற்றி செதுக்கப்பட்டேன் என்று நான் மார்தட்டிக் கொள்ளலாம். நான் சிறுவனாயிருந்த போதே என் இல்லத்தில் நிலவிய ஜனநாயகச் சூழலால் பெரியாரும் அண்ணாவும் என் உயிரிலும் உணர்விலும் கலந்தமை நான் பெற்ற பேறு. அவ்வயதிலேயே எல்லோர்க்கும் இது வாய்ப்பதில்லை. அதன்பின் திராவிட இயக்கத்தில் வந்தவர்களை பெரியாரோடும் அண்ணாவோடும் ஒப்பிட …

  16. நல்லிணக்கத்தை சாத்தியமாக்குவதற்கான உணர்வுநிலை March 13, 2023 Photo, @PMDNewsGov மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து கடந்த சில தினங்களாக பிரதானமாக மதத் தலைவர்களுடனும் அடுத்து அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்களில் முக்கியமானது பௌத்த மதத் தலைவர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அவர்கள் நடத்திய சந்திப்புக்களாகும். அவற்றுக்கு உயர்ந்தளவு சாதகமான வரவேற்பு கிடைத்தது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னர் இலங்கைக்கு வந்திருந்தால் அவர்கள் விடுதலை…

  17. ஆண்டுகளோ பத்து; வார்த்தைகளோ பொய்த்து காரை துர்க்கா / 2019 பெப்ரவரி 12 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:24 Comments - 0 “முப்பது ஆண்டுகாலப் போர் முடிந்து, பத்து ஆண்டுகள் கழிந்தும் தீர்வு வராதது வருத்தம்; இலங்கை மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன; அபிவிருத்தி அடைவதில் தோல்வி கண்டுள்ளோம்; செந்தணலின் மீதுள்ள சாம்பல் மீது நல்லிணக்கம் நிற்கின்றது; ஊழலை ஒழிக்க முடியாது உள்ளது; போதைப் பொருள் வணிகத்தை அழிக்க முடியாது உள்ளது” இவ்வாறாக, இலங்கையின் 71ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரிசையாகத் தெரிவித்த உண்மையும் ஏமாற்றமும் கலந்த உரை இதுவாகும். முப்பது ஆண்டு கால யுத்தம் முடி…

  18. இலண்டன் (ப)ரகசிய சந்திப்பு! (புருஜோத்தமன் தங்கமயில்) தோல்வி மனநிலையிலிருந்து விடுபட்டு இராஜதந்திரக் களங்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய கட்டத்தில் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராஜதந்திர களமாடுதலில் ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்றவர்களாக இருந்தது இல்லை. அது(வும்)தான், ஆயுதப் போராட்டத்தை(யும்) அடியோடு அழித்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போக்கில் தற்போது விரிந்துள்ள புதிய இராஜதந்திரக் களம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்தோடு அது, விரைவாக எம்மை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டாலும், சில காலத்துக்குப் பின்னர் …

  19. பயங்கரவாதமும் பாதுகாப்பும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்­தினால் தேசிய பாதுகாப்­புக்கு ஏற்­பட்­டுள்ள புதிய நெருக்­க­டி­யையும் அச்சுறுத்தலையும் முறி­ய­டிப்­ப­தற்­காக அல்லும் பக­லு­மாக ஆயு­தப்­ப­டை­யி­னரும் பொலிஸ் மற்றும் அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் சோதனை நட­வ­டிக்­கை­க­ளையும், தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளார்கள். இந்தத் தேடு­தல்கள் மற்றும் சோதனை நட­வ­டிக்­கை­களின் மூலம் நாட­ளா­விய ரீதியில் நில­விய அச்­ச­நி­லைமை தணிந்து வரு­கின்­றது. பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்கை என்­பது இலங்­கைக்குப் புதி­ய­தல்ல. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்றெடுப்ப­தற்­காக தமிழ் மக்கள் மேற்­கொண்ட சாத்­வீக வழியிலான அர­சியல் போராட்­டங்­களை நசுக்…

  20. மீண்டுமொரு கறுப்பு ஜூலைக்கு வழிவகுக்க திட்டமா? மற்­று­மொரு கறுப்பு ஜூலை நாட்டில் உரு­வா­கி­யுள்­ளதா என்று பீதி கொள்ளும் அள­வுக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (13.05.2019) குரு­நாகல், கம்­பஹா மற்றும் புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களில் வாழும் முஸ்லிம் குடி­மக்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட கொடூர வன்­முறைச் சம்­ப­வங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அப்­பாவி பொது­மக்கள் ஒருவர் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள், பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன, தீ வைக்­கப்­பட்­டுள்­ளன, வர்த்­தக நிலை­யங்கள் நாச­மாக்­கப்­பட்­டுள்­ளன, கொடு­மை­யா­ளி­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு அஞ்சி வீடு வாசல்­களை விட்­டோடி வயல்­வெ­ளி­களில் அப்­பாவி கிராம மக்கள் அடைக்­கலம் கோரி­யுள்­ளனர். படைத்­த­…

  21. அவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும் – நிலாந்தன்… June 2, 2019 கழுத்துறை சிறீ தேவானந்தா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதிப்பதற்கு ஒரு புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. அவ் ஒளிப்படங்களில் கரடியாக வேடமணிந்து ஒரு நபர் குழந்தைகளின் புத்தகப் பைகளை சோதிக்கிறார் இவ்வாறு சோதிப்பதன் மூலம் பாடசாலை வாசலில் தமது புத்தகப் பைகள் சோதிக்கப்படுவதை குறித்து பிள்ளைகளுக்கு எதிர்மறையான ஒரு மனப்பதிவு வரக்கூடாது என்று சிந்திப்பதாக கூறப்படுகிறது. பாடசாலை வாசல்களில் துப்பாக்கிகளோடு படைத்தரப்பு நிற்பதும் பொலிசார் நிற்பதும் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் பிள்ளைகளின் புத்தகப் பைகளை சோதி…

  22. தமிழ் டயாஸ்பொறாவை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக்கி அரசுடன் இணைக்கும் முயற்சி வெற்றியடையுமா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை தமது சொந்த அரசாகக் கருதுகிறார்களா? இக் கேள்வி தாயக மக்களுக்கும் பொருந்தும். ஆனால் தாயகத்தில் வாழும் மக்கள் சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாம் தாம் வாழும் நாடுகளின் அரச கட்டமைப்புக்குள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு தமது தாய்நாட்டின் அரசுடன் கொண்டிருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து தெரிவுகள் உண்டு. இதனால்தான் இக் கேள்வி இங்கு புலம்பெயர் மக்கள் குறித்து முன்வைக்கப்படுகிறது. டயாஸ்பொறா தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட Gabriel Sheffer என…

  23. புறக்கணிக்கப்படும் பாதிக்கப்பட்டோர் காணாமல்போன எமது அன்புக்குரிய வர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள்? எங்களுக்கு ஏன் இந்த வேதனை எமது காணிகள் எப்போது விடுவிக்கப்படும்? எங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்? சர்வதேசத்தின் பங்கேற்புடன்தான் எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் -_ இப்படி பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம்; காண்கின்றோம். அடிக்கடி இடம்பெறும் ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்கும் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பும் வினாக்களாக இவை உள்ளன. கடந்த 10 வருடங்களாகவே பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இவ்வாறு தமது மனக்குமுறல்களை வெளியிட்டு வருகின்ற போதி…

  24. இலங்கைக்கு வெளியில் பொறிமுறை அவசியம் ! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து அதற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான தொடர் போராட்டம் உள்நாட்டில் ஆயிரமாவது தினத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நெருக்குதல்கள், அச்சுறுத்தல்கள், வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வீதியோரப் போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவினர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். தன்னெழுச்சியாக ஆரம்பமாகி தீவிரமடைந்…

  25. முகம்மது தம்பி மரைக்கார் சிறுபான்மையினர் தலையை உயர்த்தி, மலைப்புடன் பார்க்கின்ற வெற்றியொன்றை, ஜனாதிபதித் தேர்தலில் பெற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்‌ஷ. கணித ரீதியாக, இந்த வெற்றியை, ஓரளவு முன்னதாகவே சிலர் கணித்துக் கூறியிருந்தனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட 50 இலட்சம் வாக்குகளும் அதேதேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த சுமார் 15 இலட்சம் வாக்குகளும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைக்கும் போது, அவர், வெற்றி வேட்பாளராகி விடுவார் என்பதே அந்தக் கணக்காகும். ஆனாலும், மிக வெளிப்படையான இந்த உண்மையைச் சிறுபான்மையினர் தட்டிக்கழித்தனர். அதன் விளைவாக, தனிமைப்பட்டு நிற்கும் வகையிலான தேர்தல் முடிவு…

    • 0 replies
    • 500 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.