அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
சிறப்புக் கட்டுரை: உலகின் எதிர்காலம்: அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருவாய் மின்னம்பலம் ராஜன் குறை காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புரட்சிகரமான வாக்குறுதியைக் கொடுத்தது. அது வறுமையில் இருப்பவர் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத வருமானமாக 6,000 ரூபாய் தருவதாகச் சொன்னது. இந்த வாக்குறுதி அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், தேர்தலுக்குக் குறைந்த நாட்களுக்கு முன்னர் இதை அறிவித்ததாலும், கட்சியினரால் மக்களிடையே இந்தப் புரட்சிகர திட்டத்தை விளக்கச் சொல்லி பிரச்சாரம் செய்ய முடியாததாலும் நியாயமான அளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. எதிர்முனையில் நரேந்திர மோடி அரசு வருடம் 6,000 ரூபாயை மூன்று தவணைகளாகத் தருவதாக அறிவித்து, முதல் தவணையை உட…
-
- 1 reply
- 499 views
-
-
தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து மகிந்த ராஜபக்ஷ விடுபடவேண்டும்; விக்கினேஸ்வரன் பதிலடி Bharati May 31, 2020தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து மகிந்த ராஜபக்ஷ விடுபடவேண்டும்; விக்கினேஸ்வரன் பதிலடி2020-05-31T22:24:43+00:00 “இலங்கை பூராகவும் ஒரு பௌத்த நாடு, அது ஒரு தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுபடவேண்டும்” என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்ரன் வலியுறுத்தியிருக்கின்றார். வாரம் ஒரு கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே இதனை அவர் கூறியிருக்கின்றார். கேள்வி – பதில் வருமாறு: கேள்வி – தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல …
-
- 0 replies
- 438 views
-
-
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நான்கு நாள் இலங்கைப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக கடந்த ஜூன் முதலாம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஜெனரல் பிக்ரம் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். இவர் இந்திய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்திக்கொள்வதற்காக நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவையெல்லாம் இந்தியாவுடன் தரைவழி எல்லைகளைக் கொண்ட நாடுகள் என்ற வகையில், தரைவழி எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள இராணுவத்தின் தளபதி என்ற வகையில் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இலங்கையுடன் தரைவழி எல்லை எதையும…
-
- 1 reply
- 976 views
-
-
எங்கே தொடங்கினோம்? எங்கே நிற்கின்றோம்? – சில குறிப்புக்கள் August 9, 2020 பிரான்சிலிருந்து கரிகாலன் புலத்திலிருந்து பார்க்கும் போது இலங்கைத்தீவின் தமிழர் அரசியல் வரலாறு விசித்திரமானதொரு யதார்தங்களுடன் சுழல்வது போன்று தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் அங்கயன் ‘அமோக வெற்றி’, மட்டக்களப்பில் பிள்ளையான் ‘வெற்றி’ என்கின்ற விசித்திரமான செய்திகள் தமிழ்தேசியம் பேசும் அரசியல் அதன் தாய்நிலங்களில் மூச்சிழந்துவிட்டது போன்றதொரு தோற்றத்தினைத் தருகின்றது. மறுபுறம், தமிழ்தேசியம் பேசிப் பேசியே அதனை சாகடிக்கின்றனர் என குற்றஞ்சாட்டப்பட்ட சம்பந்தரும், சுமந்திரனும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களாகிவிட்டனர். புலிகளின் வீழ்ச்சியின் பின்னான பத்தாண்டுகளும் தமிழ்தேசிய அரசியல் மட்டுமே பேசிய கும…
-
- 4 replies
- 1.4k views
-
-
‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஓகஸ்ட் 16 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை, இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு சுமார் ஒரு இலட்சத்து 88 ஆயிரம் வாக்குகளை, இந்தத் தேர்தலில் இழந்திருக்கின்றது. தமிழர் தேசம் எங்கும் வாக்களிப்பு சதவீதம், கடந்த பல பொதுத் தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை அதிகரித்திருந்தது. ஆனபோதிலும், கூட்டமைப்பு வாக்கிழப்பைச் சந்தித்திருக்கின்றது. 2015ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்துக்குள் 16 உறுப்பினர்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு, இம்முறை 10 உறுப்பினர்களோடு செல்கின்றது. கடந்த காலத…
-
- 0 replies
- 503 views
-
-
-
- 0 replies
- 483 views
-
-
தமிழ்த்தேசியம் வெல்லுமா | இங்கர்சால் நார்வே | ராஜவேல் நாகராஜன் | பேசு தமிழா பேசு
-
- 2 replies
- 695 views
-
-
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு; கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா Maatram Translation on November 6, 2020 பட மூலம், South China Morning Post தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா, வியட்னாம்) அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவே ஆகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை – இதைத் தெளிவாகக் காட்டுகின்றமை, சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு/ தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்க…
-
- 1 reply
- 523 views
-
-
‘நல்லாட்சி’யின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா? இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன. குறிப்பாக, அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், செயலற்ற தன்மையினாலும், பணவீக்கம் மோசமாக அதிகரித்து, விலைவாசிகள் கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளன. இது சாதாரண மக்களின் வாங்கும் …
-
- 0 replies
- 488 views
-
-
வடக்கில் கைதாவோர் மீது பயங்கரவாத தடைச்சட்டம் ‘பாய்வது’ சரியான நடைமுறையா? நாட்டில் இப்போது பயங்கரவாதம் இல்லை என்று அரசாங்கம் அடித்துக் கூறியிருக்கின்றது. குறிப்பாக யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் எந்தவொரு பயங்கரவாதச் செயற்பாடும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் உறுதியாக அறிவித்திருக்கின்றது. இத்தகைய நிலையில்தான் வடமாகாணத்தின் பல இடங்களிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்; கைது செய்யப்பட்டு வருகின்றார்கள். பயங்கரவாதமும், பயங்கரவாதச் செயற்பாடுகளும் இல்லாவிட்டால்…
-
- 1 reply
- 513 views
-
-
நாட்டுப்பற்று எனும் ‘முகமூடி’ -என்.கே. அஷோக்பரன் பிரித்தானிய அறிஞர் சாமுவல் ஜோன்ஸன், “நாட்டுப்பற்று (patriotism) என்பது, அயோக்கியர்களின் கடைசிச் சரணாலயம்” என்று, 1775இல் தெரிவித்திருந்தார். இப்படிச் சொன்னதன் மூலம், உண்மையாகவும் நேர்மையாகவும் தன் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களை ஜோன்ஸன் குறை சொல்லவில்லை. மாறாக, நாட்டுப்பற்று எனும் முகமூடியைப் பயன்படுத்தும், ‘பசுத்தோல் போர்த்திய நரிகளையே’ அவர் கடிந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனுக்கும் தான், தன்னுடைய குடும்பம், தன்னுடைய சுற்றம், தன்னுடைய சமூகம், தன்னுடைய இனம், தன்னுடைய மொழி, தன்னுடைய மதம், தன்னுடைய பண்பாடு, தன்னுடைய கலைகள், தன்னுடைய அடையாளம் என்று, தான் சார்ந்தவை சார்ந்த பிரக்ஞையும் ஈர்ப்பும் பெருமையும் காணப்ப…
-
- 0 replies
- 476 views
-
-
தமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்.! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தலை’தான் துரோகம் என தமிழ்ப் பழமொழி சொல்கிறது. தன்னலம் அல்லது சுயநலத்திற்கான துரோகங்கள் சமூகத்திற்கு எதிரான துரோகங்களாகத்தான் உருமாறும். இனத்திற்கு எதிராக துரோகம் செய்யபவர்கள், அடுத்தடுத்த கட்டங்களில் தாம் சார்ந்த அமைப்புக்களுக்கும் துரோகம் செய்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்து கடந்த பத்தாண்டுகளில் தமிழினத்திற்கு எதிரான துரோகத்தை அள்ளி நிறைத்த திருவாளர் சுமந்திரன், இப்போது தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த தமிழரசுக் கட்சியை ‘பலி’யிடத் துணிந்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்வில் இலங்கை தமிழரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்திருக்கிறது. வடக்…
-
- 1 reply
- 550 views
-
-
விகடன் டீம் – நிலாந்தன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப்பின் மறுபடியும் இலங்கை இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் மாகாண சபைகளின் மீது கவனம் குவிந்திருக்கிறது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சில தினங்களாக பேசப்படுகின்றது. ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி இம்மாதத்தோடு ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது. இந்த ஓராண்டுக் காலகட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பில் ராஜபக்சக்களும் அவர்களுக்கு நெருக்கமான அமைச்சர்களும் தெரிவித்துவரும் கருத்துகளைத் தொகுத்துப் பார்த்தால், அவர்கள் மாகாண சபைக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரு தோற்றமே கிடைக்கும். அதிபர் பதவியேற்ற புதிதில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கோத்த…
-
- 0 replies
- 639 views
-
-
வட இலங்கையில் தமிழரசு அமையுமா, அச்சப்படும் சிங்கள அரசாங்கம் ? இக்பால் செல்வன் இலங்கையில் நெடுங்காலமாக நடந்து வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இலங்கைத் தீவில் சமாதானம் நிலவுவதாகப் பலரும் நம்பி வந்தாலும் கூட, உண்மையான சமாதானத்தை இன்னமும் இலங்கை வாழ் மக்கள் பெறவில்லை. இலங்கைத் தீவு என்பது சிங்களம், தமிழ் பேசும் பலவித மக்கள் குழுமி வாழும் ஒரு தேசமாகும். ஒவ்வொர் பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலாச்சார, மத, மொழி மற்றும் வாழ்வியல் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. தமிழ் புலி பயங்கரவாதிகளின் தலைமையில் ஒரு தேசம் உருவாவதை பன்னாட்டு அரசுகள் விரும்பவில்லை, அத்தோடு தமிழ் புலிகள் இலங்கைத் தீவில் நீண்டதொரு சமாதானத்துக்கு ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐந்து கண்கள்: மானுட யாப்பின் மீறல் சேரன் 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எஸ்.ஏ. - 18 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையும் வேறு போர்க்கலங்களையும் வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈழத் தமிழ் இளைஞர்கள் மூன்று பேரை நியூயோர்க்கில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ கைதுசெய்தது. ஆயுத விற்பனையாளர்களிடம்தான் போர்க்கலங்களை வாங்குகிறோம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் எஃப்பிஐ உளவாளிகள்தான் ஆயுத விற்பனையாளர்கள் போலத் தொழிற்பட்டு அந்த இளைஞர்களைச் சிக்கவைத்துவிட்டார்கள். பிற்பாடு, வேறு இரு ஈழத் தமிழ் இளைஞர்களும் ‘பயங்கரவாதம்’ பரவ உதவிசெய்தார்கள் எனக் கூறியும் கனடிய அரசால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எல்லா இளைஞர்களும் கனடியக் குடி…
-
- 0 replies
- 751 views
-
-
கல்குடா எதனோல் உற்பத்தி தொழிற்சாலை - மக்களுக்கு யார் விளக்கம் சொல்வது? - அதிரதன் வறுமையைப் பற்றியும், வருமானப்பிரச்சினை பற்றியுமே எல்லோரும் பேசுகின்றனர். ஆனால் அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் பற்றிய சிந்தனை, எத்தனை பேரிடம் இருக்கிறது என்றால் கேள்விக் குறியாகிறது. மட்டக்களப்பு, வறுமையில் முதலிடம் வகிப்பதாகவும் வருமானக்குறைவு, வீட்டுப்பிரச்சினைகள் கொண்ட மாவட்டமாகவும் கருதப்படுகின்றது. ஒன்றை இழந்தால்தான் மற்றென்றைப் பெறமுடியும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதெல்லாம் கூடப் பலருக்கு மறந்துபோய் விட்டது. ஏன் இந்த விடயத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்று யோசிக்கத் தோன்றலாம். ஒரு முறை கொழும்பு சென்ற வேளை, முச்சக்க…
-
- 0 replies
- 543 views
-
-
தேர்தல் அரசியலும், இலட்சிய அரசியலும் ஒன்றாகப் பயணிக்கமுடியுமா? - முத்துக்குமார் தேர்தல்கள் இலட்சிய அரசியலைச் சிதைக்கும் ஒரு கருவி என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதற்கு இடதுசாரி அரசியலோ, தேசிய இன அரசியலோ விதிவிலக்காக இருந்ததில்லை. இலட்சிய அரசியலின் எதிரிகள் அதனைத் தோற்கடிக்க எப்போதும் தேர்தல் அரசியலையே பயன்படுத்த முனைவர். தேர்தல் அரசியலில் ஈடுபடும்வரை இடதுசாரி இயக்கம், இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி வலுவானதாக இருந்தது. அவை எப்போது தேர்தல் அரசியலைத் தேர்ந்தெடுத்ததோ, அன்றிலிருந்தே சிதையத் தொடங்கியிருந்தன. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலும், சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒரு சில வருடங்களும், இடதுசாரி இயக்கங்கள் வலிமையான அமைப்புகளாக இலங்கையில் இருந்தன.…
-
- 0 replies
- 582 views
-
-
எதற்காக இந்த மாற்றம்? கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வீடுகள் அல்லது வீதிகளில் இறக்கும் காட்சிகளை எவ்வித தணிக்கையுமின்றி, சமூக வலைத்தலங்கள் அல்லது தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடாக, கடந்த சில வாரங்களாக பார்க்க நேரிட்டுள்ளதென்றால், அதற்கென தனியாக மனத் தைரியமும் திடகாத்திரமும் எமக்கு கணடிப்பாக தேவையாகவுள்ளது. அல்லது மனதைக் கல்லாக்கிக்கொண்டு, உணர்வுகளை மறுத்துப்போகச் செய்த பின்னர் தான் இவற்றையெல்லாம் பார்க்கவோ, அனுபவிக்கவோ வேண்டும்.எவ்வளவு மனவலிமையுடையவராக இருந்தாலும் எமது நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் உள்ளிட்ட தகனச்சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணக்குவியல்களைப் பார்த்தால் ஒரு கணம் இதயம் ஸ்தம்பித்து விடும். பல மாதங்களுக்கு முன்னர் எமது…
-
- 0 replies
- 764 views
-
-
"முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை தோற்கடித்த மகிந்த தேர்தல் யுத்தத்தில் மக்களிடம் தோற்றுப்போனார்"குளோபல் தமிழ் செய்திகளுக்காக பிரியதர்தசன் வடக்குத் தேர்தலும் தமிழ் மக்களின் தீர்ப்பும் இதை ஒரு போராட்டம் என்றே குறிப்பிடவேண்டும். ஆழ்கடலில் தவிப்பவனுக்கு சிறு துரும்பும் ஓடம் என்பதுபோல இன்று ஈழத் தமிழர்கள் இந்த உலகத்தால் தள்ளப்பட்ட சூன்ய அரசியல் வெளிக்குள் வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு போராட்டமாவே செய்து முடித்திருக்கின்றனர். அதுவும் இரக்கமற்ற கொடிய இலங்கை அரச படைகளின் துப்பாக்கிகளின் நிழலில்தான் வடக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தலின் பொழுது வாக்களிப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட பொழுது மக்களை அச்…
-
- 0 replies
- 789 views
-
-
இலங்கைக்குத் தேவை ஒரு புதிய அரசியல் அமைப்பு, ஒரு புதிய பாதை இனவாதமும், மதச் செருக்கும் இந்த நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு இரட்டித்த சாபக்கேடாய் இருந்து வந்துள்ளன. நாட்டின் கடந்த நூற்றாண்டு கால வரலாற்றை நோக்குவோமாயின், இந்த நிலைமையானது ஆரம்ப கட்டத்திலேயே தோற்றம் பெற்று, வெவ்வேறு வடிவங்களில் இற்றைவரை நிலவி வருகிறது, 1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம டைந்ததை அடுத்து, குறிப்பாக கொரியா நாட்டில் நடைபெற்ற போர் மற்றும் சீனாவுடன் செய்து கொண்ட இறப்பர்- – அரசி ஒப்பந்தம் போன்ற நிலைமைகள் வாயிலாக, பொருளாதார வளர்ச்சி அறிகுறிகள் தென்பட்டன. எனினும், பின்பு சிங்கள மேலாதிக்கச் சிந்…
-
- 0 replies
- 359 views
-
-
கண் அரசியல்! - நிலாந்தன் “ 35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கடந்த 10 ஆம் திகதி கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமில்ல அண்மை வாரங்களாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதி அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவ்வாறு ஒரு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதற்கு காரணம் பாகிஸ்தானில் அடித்துக…
-
- 0 replies
- 421 views
-
-
தென்னாசிய வட்டகை ஆதிக்கப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் 1987 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் திகதிய நடாளுமன்ற அமர்வு கடும் வாதப் பிரதிவாதங் கள் மத்தியில் சூடு பிடித்திருந் தது. அந்த வேளைய அரச தலைவர் ஜே.ஆரின் தலைமை யிலான ஐ.தே.கட்சி அரசு, இந்தியாவுடன் செய்து கொள்ள விருந்த ஒப்பந்தம் குறித்த விவ ரங்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் சபையில் கடும் வற்புறுத்தல் மேற்கொண்டனர். நிலமையைச் சமாளிக்கும் நோக்கில் அரசு நாடாளுமன்ற அமர்வை ஓகஸ்ட் 18 ஆம் திகதிவரை ஒத்தி வைத்து எதிர்க்கட்சியினரது எதிர்ப்பைத் தற்காலிகமாக முறியடித்தது. நான்கு நாள்கள் கழித்து ஜுலை 28…
-
- 0 replies
- 601 views
-
-
இலங்கை தனது எரிசக்தி தொடர்பான இறைமையை இழக்கப்போகின்றது – முன்னிலை சோசலிஸ கட்சி ———- திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் என்ன இடம்பெறுவது என்ன? ———– Oil Tank Farm இலங்கை எரிசக்தி தொடர்பான தனது சொத்துக்களை தொடர்ந்தும் தனியார்களிற்கு விற்பனை செய்து வருவதால் இலங்கை எரிசக்தி தொடர்பான தனது இறைமையை இழக்கும் என முன்னிலை சோசலிச கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலையின் 99 எண்ணெய் குதங்கள் தொடர்பாக அடுத்த மாதம் இந்தியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்,என தெரிவித்துள்ள முன்னிலைசோசலிஸ கட்சியின் புபுது ஜயகொட இந்தியாவுடன் இது குறித…
-
- 0 replies
- 263 views
-
-
ஏமாற்றப்படும் கூட்டமைப்பு! இலங்கையின் சர்வதேச அரசியல் அணுகுமுறையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா கையில் எடுத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் அறிகுறி தென்படுகின்றது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டிருந்த நம்பிக்கை அற்றுப் போயிருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த அரசின்…
-
- 0 replies
- 396 views
-
-
புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து சம்பந்தன் தலைமையிலான அணியினர் தங்களது வேலையை ஆரம்பித்துவிட்டனர் என்பது தெளிவு. சம்பந்தன் தனதுரையில் பிறிதொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கின்றார் அதாவது, புதிய அரசியலமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மக்களின் விரும்பத்தினை அறிந்து கொள்ளும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு விடப்பட…
-
- 0 replies
- 393 views
-