அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
-
- 0 replies
- 563 views
-
-
நிலப்பிரச்சினையும் எச்சரிக்கை மணியும் - கருணாகரன் “2020இல் இலங்கைத் திருநாடு” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுக. “2020இல் இலங்கை என்று ஒரு நாடு, அநேகமா இருக்காது. இந்தக் குட்டி நாடு, இன்னும் குட்டி குட்டியாப் பிரிஞ்சு, ஒவ்வொரு துண்டிலும் சீனாவுடையதும் அமெரிக்காவுடையதும் ரஷ்யாவுடையதும் இந்தியாவினுடையதும் கொடிகள் பறந்து கொண்டிருக்கும். “இலங்கைக் கொடி எங்கும் பறக்காது. அப்படிப் பறந்தாலும், அது ஏதோ ஓர் ஒதுக்குப் புறத்தில்தான் அசைந்து கொண்டிருக்கும். பறக்கும் திராணியெல்லாம் அதற்கிருக்காது. இங்கே உள்ளவர்கள் எல்லாம், ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் காரில் போகவும் விசா எடுக்கவும் எல்லையில் கடவு…
-
- 0 replies
- 498 views
-
-
இழப்பிலிருந்து மீள்தல் என்.கே.அஷோக்பரன் கொவிட்-19 பெருந்தொற்றினாலான இறப்புக்கள் தினசரி 200 என்பதைத்தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி 4000-ற்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள். இது நடத்தப்படும் பரிசோதனைகளின் அளவிலான தரவு மட்டுமே. தொற்று இலங்கையில் பரவத்தொடங்கியது முதல் இதுவரை ஏறத்தாழ நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றாளர்களாக அடையாங்காணப்பட்டுள்ளதுடன், இந்த பெருந்தொற்று இலங்கையில் மட்டும் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலியெடுத்துள்ளது. “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” என்ற வள்ளுவன் வாக்கினை அன்றாட வாழ்வில் தினம் தினம் கண்ணூடாகக் காணும் நிலையை…
-
- 0 replies
- 622 views
-
-
இராஜதந்திரப் போர் தமிழர்களுக்குப் புதிதல்லவே - வளவன் 04 அக்டோபர் 2013 உலக இராஜதந்திரக்களம் எப்போதும் தமிழர்களுக்கு சார்பானதாகவோ, அல்லது தமிழர்கள் மீதான அனுதாபம் மிக்கதாகவோ இருந்தது எனக் கொள்ள முடியாது. அது போலவே அது எல்லாவேளைகளிலும் தமிழர்களுக்கு எதிரானதாகவே இருந்தது என்றும் கருத முடியாது. தமிழர்கள் மீது கரிசனையும் அனுதாபமும் கொண்டதாக உலக அரசியல் - இராஜதந்திரக் களம் தோற்றமளித்த சந்தர்ப்பங்களை மீள்வாசிப்புச் செய்தல் இன்றைய களநிலைமையின் கனதியையும், காலம் கையளித்துள்ள கடமையையும் உணர உதவும். போருக்குப் பிந்திய இந்தக் காலகட்டத்தில், ஈழத் தமிழர்கள் அரசியலில் எதைச் சாதித்தனர், எதைச் சாதிக்கப் போகின்றனர், ஈழத்தமிழரின் இலக்கை அடையும் முயற்சிகள் சரியான திசையில் செல்கின்றனவா என…
-
- 0 replies
- 695 views
-
-
தமிழர்கள் ஒரு தேசமா இருக்கின்றார்களா? - யதீந்திரா தமிழ் சூழலில் கருத்துருவாக்கங்களில் ஈடுபடும் சிலர் தேசம் என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. தமிழர்கள் ஒரு தேசமாக சிந்திக்க வேண்டும் – அப்படி சிந்தித்தால்தான், இன்றைய சவால்களை வெற்றிகொள்ள முடியுமென்று சொல்வோர் உண்டு. இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகின்றது. அதாவது, தமிழர் தேசம் தொடர்பில் பேசுபவர்கள் – சுயநிர்ணய உரிமையை வெற்றிகொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே தேசம் என்னும் சொல்லை பயன்படுத்துகின்றனர். தமிழர் தாயகமாக அடையாளப்படுத்தப்படும் வடகிழக்கை தங்களின் வாழ்விடமாக கொண்டிருக்கும், தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்பதுதான் ‘தமிழர் தேசம’ என்பதால் உணர்த்தப்படுகின்றது. இந்த பின்புலத்திலிருந்துதான் ‘…
-
- 0 replies
- 271 views
-
-
20 ஆவது திருத்தம் சாத்தியமாகுமா? 18 ஆவது திருத்தமொன்றைக் கொண்டுவந்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. மஹிந்த ராஜபக் ஷ தனது மூன்றாவது பருவகால ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய வீழ்ச்சியை சந்தித்தாரென்பது உலகறிந்த விடயம். அதைப்போன்றதொரு அரசியல் மற்றும் ஆட்சி நெருக்கடியை உருவாக்கும் விவகாரமாகவே 20 ஆவது திருத்தத்தை கொண்டுவர நினைக்கும் நல்லாட்சி அரசாங்கமானது பல நெருக்கடிகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடுமென்ற நிலையே இன்றைய அரசியல் களமாக மாறியுள்ளது. ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவத…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 898 views
-
-
அடுத்த மாதத்திற்குள் எரிபொருள் பிரச்சினையை நிச்சயமாக எம்மால் சமாளிக்கமுடியும் -பிரதமர் ரணில் கூறுகிறார் “நான் சவாலொன்றை எடுத்துக் கொண்டுள் ளேன் , அது எங்கு முடிவடைகின்றது என்று பார்ப்போம். ஆனால் நான் கட்சியில் ஒருவராக இருப்பது பலமென்றும் , பலவீனம் அல்ல என்றும் எப்போதும், நினைத்தேன். எதிர்க்கட்சி அல்லது அரசாங்கத்தில் உள்ள எவருடனும் சமாளிக்கலாம். எவருக்கும் அச்சுறுத்தலாக இல்லை, தொடரமுடியும் .”- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 0000000000000 நெருக்கடி தொடர்பாக இடைவிடாத அரசாங்…
-
- 0 replies
- 411 views
-
-
தெற்கின் ஆளுமையும் தமிழ் தலைமையின் கையறுநிலையும் நாட்டு மக்கள் எதிர்பார்த்ததைப் போன்றும் இந்த பத்தி ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போன்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடைய முழுமையான கட்டுப்பாட்டை தன்னகத்தே கொண்டு வந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுத் தளத்தை குறைக்கும் வகையிலும் ஜனாதிபதி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே இது நடைபெறும் என்று எதிர்பார்த்த போதிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இருவேறு ஆணைக்குழுக்களின் அறிக்கை ஜனாதிபதிடம் கையளிக்கப்பட்டு அந்த அறிக்கைகளின் பேரில் ஜனாதிபதி தனது கருத்துக்களையும், …
-
- 0 replies
- 304 views
-
-
அடிமை யுகம் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டு வெற்றிகரமாக சீனாவின் கொடியும் அங்கு பறக்கவிடப்பட்டுவிட்டது. அந்தக் கொடியை பார்த்து இலங்கை கவலைப்பட்டதோ என்னவோ நிச்சயம் இந்தியா கடும் கோபத்தில் உள்ளது. நல்லாட்சி அரசாங்கம் இந்தியா சார்பானதாக இருக்குமென அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மஹிந்த காலத்தில் இருந்ததை விட, பன்மடங்கு சீன ஆதிக்கத்தை நல்லாட்சி அரசு விரும்புகின்றது. அதற்கு பல உதாரணங்களை கூறிவிடலாம். முதலில் கொழும்புத் துறைமுக நகரத்தை இடைநிறுத்திவிட்டுச் சீனாவுடன் முரண்பட்டாலும் அந்த முரண்பாட்டை ஈடுசெய்வதற்காக தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை தாரைவார்த்துள்ளது என்றே சொல்லவேண்டும். 9…
-
- 0 replies
- 354 views
-
-
முதுகெலும்பில்லையா, விருப்பமில்லையா? இலங்கையின் கிழக்கிலும் மத்தியிலும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள், அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருண்டதொரு யுகத்துக்கு, நாடு மீண்டும் தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை, இவ்வன்முறைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த வன்முறைகளின் உயிரிழப்புகளும் அழிவுகளும் பாதிப்புகளும் கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தாமதமான, போதுமற்ற நடவடிக்கைகள், அதிக ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன. அண்மைய நாட்களில், அம்பாறையில் ஆரம்பித்த வன்முறைகள், பெருமளவுக்குப் பரவியிருந்தன. பின்னர், கண்டியில் இவ்வன்முற…
-
- 0 replies
- 345 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் – நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள் உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அடுக்குமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அரசுத்தலைவர் மைத்திரிபாலசிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் வரும் இக்கல்லூரியின் மேற்படிக் கட்டடம் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்போடு கட்டப்பட்டது. இந் நிகழ்வுக்கு அரசுத்தலைவர் அழைக்கப்பட்டதை ஒரு பகுதி பழைய மாணவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இக்கல்லூரியின் முத…
-
- 0 replies
- 315 views
-
-
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்? வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார்? 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எவரை நிறுத்துவது ? இந்தக் கேள்வி பல மட்டங்களிலும் தலைதூக்கியிருந்தது. தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளை அவசர அவசரமாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிரா…
-
- 1 reply
- 1.2k views
-
-
டொனால்ட் ட்ரம்பின் தடுமாற்றங்கள் மிகப்பெரிய மெகா வர்த்தக பிரமுகரான டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக்கட்சி அபேட்சகராக 2016 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார். தை 20ம் திகதி 2017ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பதவியேற்ற பின்னர் அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில் அவரின் பேச்சுக்கள், செவ்விகள், டுவிட்டர் செய்திகள் அவரை வித்தியாசமானவராக அமெரிக்க ஜனாதிபதிகளின் பாரம்பரியத்தை விட்டு விலகியவராக காட்டின. சில சமயங்களில் அவரின் பேச்சுகள் ஏனைய அமைச்சர்களின் பேச்சுகட்கு முற்றிலும் மாறாக இருந்தன. ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த ஒரு வருடத்தை பூர்த்திசெய்துள்ள காலப்பகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட …
-
- 0 replies
- 451 views
-
-
இலங்கை இன பிரச்னைக்கு முட்டுக்கட்டை போடுகிறதா பௌத்த தேசியவாதம்? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD - SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க இலங்கை இனப் பிரச்னைக்கு தீர்வாக இந்தியாவின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்த ரணில் விக்ரமசிங்க திட்டமிட்ட நிலையில், பெரும்பான்மை சிங்களவர்கள் அந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 75வது சுதந்திர த…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
கோத்தாவை வெட்டியாடுகிறாரா மஹிந்த? தமிழ்மக்களைப் பொறுத்த வரையில், ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது. ஏனென்றால், சிங்களத் தலைவர்கள் யாரையுமே அவர்கள் விருப்புக்குரிய தலைவராக ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில் இல்லை 2020 ஜனவரிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டே ஆக வேண்டிய நிலையில், அடுத்த ஜனாதிபதி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தமக்குள் ஒருவரை மனதில் வைத்துக் கொண்டே, இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஐ.தே.கவினர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமான வேட்பா…
-
- 0 replies
- 297 views
-
-
ராஜபக்ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள் புருஜோத்தமன் தங்கமயில் / ராஜபக்ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, நாட்டுக்குள் சமூக ஊடகங்களை அதிகளவு கையாள்பவர்கள், அதன் வழி ஊடாடுபவர்கள் என்று பார்த்தால், ராஜபக்ஷக்களே முன்னிலையில் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பேஸ்புக் கணக்கு உள்ளிட்ட சமூக ஊடக விடயங்களைக் கையாள்வதற்கென்று, நிபுணர்கள் அடங்கிய பெரிய அணிகளே பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் பிரச்சினைகளில், மொழிக்கொள்கை முக்கியமானது. ஆட்சியிலிருந்த காலத்தில் அது தொடர்பான…
-
- 0 replies
- 419 views
-
-
கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா? பிபிசி இந்தி சேவைப்பிரிவுடெல்லி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சீனாவுடனான நெருக்கம் அதிகரித்தது இலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ,…
-
- 0 replies
- 800 views
-
-
நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி உலகில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் அரசுகள் தமது செல்வாக்கை பலப்படுத்தும் முகமாக பல்வேறு இதர அரசுகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வது சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான அங்கமாக பார்த்து கொள்ளப்படுகிறது. இத்தகைய கூட்டுகள் அரசுககள் மத்தியில் ஏற்படக் கூடிய புரிந்துணர்வுகளின் அடிப்படையிலும், அரசுகள் ஒன்றுடன் ஒன்று மேவும் தன்மையும் உள்ள இடங்களில், தமது நலன்களை அடிப்படையாக வைத்து பிரதானமாக செய்து கொள்ளப்படுகிறது. கூட்டுகளில் பாத்திரம் வகிக்கும் அரசுகள் தம்மத்தியிலே உள்ள நடத்தைகளை ஒழுங்கமைப்பு செய்து கொள்ள வேண்டியதன் தேவையை உணர்ந்து, பொதுவான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக குறிப்பிட்ட …
-
- 0 replies
- 716 views
-
-
மலையகம் 200: இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக செயற்பட்டாரா ஜீ.ஜீ ? என்.கே அஷோக்பரன் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின் கீழ், பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதில் அரச, மற்றும் அரச சாரா நிகழ்வுகள் எல்லாம் உள்ளடக்கம். ‘இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு’ என்று மலையக மக்கள் தொடர்ந்து விளிக்கப்பட்டாலும், அவர்களின் பொருளாதார நிலை உயர்ந்தபாடில்லை. இந்நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை எத்தனை காலத்துக்கு இந்த நாடும், நாட்டு மக்களும் சகித்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்? நிற்க! இந்த நாட்டின் ‘குடிமக்கள்’ என்று குறிப்பிடும் போது, இந்நா…
-
- 0 replies
- 261 views
-
-
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் கடைகள் பல புதிதாகஉருவாக்கப்பட்டுள்ளன. நாளொன்றிற்கு 5000 வரையான சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தைப் பார்வையிடச் செல்வதை நாம் எமது கண்களால் காணமுடியும். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Weekend Leader இணையத்தளத்தில் அதன் சிறப்பு செய்தியாளர் தொடராக எழுதிவரும் 'சிறிலங்காவின் உள்ளே' என்னும் பத்தியில் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழ்மக்கள் சுபீட்சமாக வாழ்வதைத் தடுக்கும் நோக்கில், தமிழ் மக்களால் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டி வளர்க்கப்பட்ட உள்ளுர் பொருளாதாரத்தை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு சிதைத்துவருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள பொருளாதார வளமானது திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், இப்பிரதேசங்களில் தற்போது சிங்கள வர்த்தகர்…
-
- 0 replies
- 531 views
-
-
பேரினவாதமும் காக்கிச் சட்டையும் உரசினால்தான் தமிழ்த் தலைமைகளின் இரத்தம் கொதிக்குமோ? – நடராஜா குருபரன்... 28 ஏப்ரல் 2015 யாழில் தற்போது வாள் வெட்டுடன் கூடிய வன்முறைக் கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.; இரவானதும் ஊருக்கு ஊர் கத்திகளோடு, கட்டுக்கடங்காத காளைகள் திரியத் தொடங்கி விடுகின்றனர். அந்த நேரம் யார் கண்ணில் தென்படுகின்றார்களோ அவர்களை வெட்டிச் சாய்ப்பதுவே இவர்களது வேலையாகிப் போகிறது என்கின்றனர் கிராம மக்கள்.யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட கலைப்பீட மாணவர்கள் 9 பேரை நேற்று முன்தினம் இனந்தெரியாத சில குண்டர்கள் சுதுமலை சந்தியில் வைத்து வெட்டியும், போத்தல் மற்றும் கொட்டன்களாலும் சரமாரியாகத் தாக்கியும் உள்ளனர். வெட்டப்பட்ட மாணவன் ஒர…
-
- 0 replies
- 327 views
-
-
கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பாக இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டன. சம்பந்தன் மூப்பின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதால் இந்தக் கேள்விகள் எழுவது இயல்பானது. இந்தியாவின் தமிழ்நாட்டில் மு.கருணாநிதியும் மூப்பின் எல்லையில் நின்றபோது தி.மு.கவுக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் வாரிசு அரசியலில் ஊறிப்போன இந்தியாவில் வழக்கம்போல கருணாநிதியின் மகன்களில் ஒருவரான மு.க. ஸ்டாலினின் பெயர் நீண்ட காலமாகவே அந்தப் பதவிக்கு அடிபட்டு வந்தது. இதற்கு ஏற்றாற்போன்று தி.மு.கவின் செயல் தலைவராக அவர் அந்தக் கட்சியின் தலைவரான அவரது தந்தையாரான கருணாநிதி…
-
- 13 replies
- 1.5k views
-
-
ஐ.நா தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன் March 3, 2019 நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு கூறல்தான். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு பொறுப்புக் கூறுவதுதான். இரண்டு தரப்புக்களுக்கும் இடையே நீதியை நிலை நாட்ட விழையும் எல்லாத் தரப்புக்களும் பொறுப்பு கூறுவதுதான். இவ்வாறு நிலைமாறுகால நீதியை இலங்கைத்தீவில் ஸ்தாபிக்கும் நோக்கத்தோடு 2015செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதன் படி நிலை மாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கென்று ஏறக்குறைய 25 பொறுப்புக்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இப் பொறுப்புக்களை …
-
- 0 replies
- 895 views
-
-
"மன்னிப்பு" [சமாதானம் நிலவ, மன்னிப்பு கேட்பது அவசியம்] "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற மனமே இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " [எனது ஒரு பாடலில் இருந்து எட்டு வரிகள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற…
-
- 0 replies
- 395 views
-