அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
மகிந்த ராஜபக்ஷவும் அவர் வெளிக் கிளப்பும் வெள்ளை யானைகளும் - - வி.ஏ.கே.ஹரேந்திரன் 30 மார்ச் 2013 சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் சொந்த கிராமமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மத்தல பிரதேசத்தில் சீனாவின் நிதியுதவியுடன் பன்னாட்டு விமான நிலையமொன்று திறக்கப்பட்ட செய்தியே கடந்த வாரத்தில் இலங்கை நாளிதழ்களில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. இந்த விமான நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ஷ, சர்வதேசத்திற்கு மற்றுமொரு கதவு திறக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். எனினும், இந்த விமான நிலையத்தின் ஊடாக குறைந்தது அடுத்த 20 வருடங்களுக்கேனும் வருமானம் ஈட்ட முடியாது என பொருளாதார வல்லுநர்கள் கடிந்துகொண்டுள்ளனர். ஐ.நா., சர்வதேச அழுத்தம் எனக் கூறி இனவாதத்திலும் அபிவி…
-
- 1 reply
- 664 views
-
-
நாங்கள் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு கெடுதலையே செய்து கொண்டிருக்கிறோம். தமிழ் அரசியல் வார இதழான துக்ளக்கின் ஆசிரியரான சோ ராமசாமி,அவர்கள் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த அரசியல் ஆய்வாளராவார். ஷோபா வாரியாருக்கு அவர் வழங்கியுள்ள இந்த பிரத்தியேக நேர்காணலில் அவர் ஸ்ரீலங்காத் தமிழர்கள் விடயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறியது, மற்றும் அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அவரது எண்ணங்கள் என்பனவற்றை வெளிப்படுத்துகிறார். திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து(யு.பி.ஏ) வெளியேறப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தபோது, அவர்கள் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுவதாகத்தான் பலரும் எண்ணினார்கள். ஆனால் இறுதியாக அவர…
-
- 3 replies
- 941 views
-
-
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தமிழர்களும் - நிலாந்தன் 31 மார்ச் 2013 அமெரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ ஈழத்தமிழர்கள் மீது காதல் கிடையாது. அவர்களுக்கென்று நீண்ட கால நோக்கிலான ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. அந்த நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட ஒரு கருவியே ஈழத்தமிழ் அரசியல். புதுடில்லிக்கும் ஈழத் தமிழர்கள் மீது காதலோ பாசமோ கிடையாது. அவர்களுக்கென்றும் ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஜெயலலிதாவிற்கும் ஈழத்தமிழர்கள் மீது பாசம் கிடையாது. அவருக்கும் வாக்கு வேட்டை அரசியலுக்குரிய ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. கருணாநிதிக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு. ஆனால், தமிழ் நாட்டின் மாணவர்களுக்கோ அல்லது கட்சி சாரா அமைப்புகளுக்கோ மனித நேய நிறுவனங்களுக்கோ அல்லது மனித உரிமை ஆர்வலர்களுக்கோ ம…
-
- 1 reply
- 498 views
-
-
மலையாளிகளை எதிர்த்த சிங்கள பேரினவாதம், மறந்த வரலாறு எழுதியது இக்பால் செல்வன் தமிழ் நாட்டில் சிங்கள சிறிலங்கா அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வந்தனர். இதனால் தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாகத் திமுகக் கட்சி மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து விலகியது. அது மட்டுமில்லாமல் தஞ்சாவூரில் வைத்து இரு பௌத்த சிங்கள பிக்குகள் தாக்கப்பட்டனர். ஐநா சபை மனித உரிமைகள் கூட்டத்தில் இந்திய அரசு இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்திருந்தது. சென்னையில் அமைந்துள்ள சிறிலங்காவின் துணை தூதரகத்துக்கு அருகே கடுமையான ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் இத் துணைத் தூதரகத்தைக் கேரள மாநிலத்துக்கு ம…
-
- 1 reply
- 3.3k views
-
-
வேதனைக்கு வேதனை என்பதா? அண்டவன் தந்த சோதனை என்பதா? எது எப்படி இருப்பினும் யதார்த்தம் என்ற ஒன்றும் ஈழத் தமிழர் வாழ்வில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த யதார்த்தத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பது என்ற நிலைக்கு எம் ஈழத்தமிழினம் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய விடயமே. எம் ஜி. ஆர் அவர்களின் மறைவிற்குப் பின், தமிழக அரசினதும், அரசியல் தலைவர்களினதும் உதவி எம் ஈழத் தமிழினத்திற்குக் கிட்டும் என்று எம்மவர்கள் நினைத்திருந்தால் அது தான் நாம் விட்ட மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என்று கூறவேண்டும். 1987ல் எம். ஜி. ஆர் அவர்கள் மறைந்த பின், தமிழக ஆட்சி பீடத்தில் ஏறியவர்கள் “ஈழம்” “ஈழத்தமிழர்” எனும் பதங்களைப் பயன்படுத்திய ஒவ்வொரு தடவையும் அதில் அவர்களது நலன் சார்ந்திருந்ததை அரசியல் …
-
- 2 replies
- 782 views
-
-
இதயத்தால் சிந்தித்த சில எண்ணங்கள் (இடிந்தகரைக் கடிதம்-2) இடிந்தகரை மார்ச் 28, 2013 அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே: வணக்கம். கூடங்குளம் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 600 நாட்கள் ஆகிவிட்டன. நானும், நண்பர்கள் ராயன், மை.பா., முகிலன், மில்டன், கெபிஸ்டன் உள்ளிட்டோர் இடிந்தகரைக்குள் முடக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் நாள், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடந்த அன்று, வைராவிக்கிணறு கிராமம் நோக்கி ஒரு பேரணி நடத்திக் கொண்டிருந்தோம். சரியாக மாலை 4:45 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, “ஆட்சித்தலைவர் டாக்டர் செல்வராஜ் உங்களையும், அருட்தந்தை செயக்குமார்…
-
- 0 replies
- 703 views
-
-
- -கே.சஞ்சயன் ஜெனிவாவில் மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்தமுறை 40 நாடுகளின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தமுறை 41 நாடுகளின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்டது. அதுபோலவே, கடந்தமுறை 24 நாடுகள் ஆதரவு தெரிவித்த தீர்மானத்துக்கு இந்தமுறை 25 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இம்முறை தீர்மானத்துக்கு ஆதரவாக அதிகளவு நாடுகள் வாக்களிக்கும் என்று தகவல்கள் வெளியான போதிலும், கடந்த முறையைவிட ஒரு நாட்டின் வாக்குத் தான் அதிகரித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 25 நாடுகள் மட்டும் ஏற்றுக்கொண்ட இந்தத் தீர்மானத்துக்கு, அதிகளவு நாடுகளின் ஆதரவு கிட…
-
- 0 replies
- 873 views
-
-
அமெரிக்கத் தீர்மானம்: நேற்று இன்று நாளை - யமுனா ராஜேந்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆதரித்து 25 நாடுகளும் எதிர்த்து 13 நாடுகளும் வாக்களித்திருக்கின்றன. சென்றமுறை இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்திருந்தன என்பது இங்கு சுட்டத்தக்கது. இந்த வீழ்ச்சியை சர்வதேச நாடுகளிடம் இலங்கை செல்வாக்கிழந்துவிட்டது என தயான் ஜயதிலக குறிப்பிடுகிறார். 8 நாடுகள் நடுநிலைமை வகித்திருக்கின்றன. காலம் சென்ற சாவேசின் 'இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிச' நாடான வெனிசுலா தவிர பெரும்பாலுமான இலத்தீனமெரிக்க நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கின்றன. உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் ப…
-
- 0 replies
- 816 views
-
-
வெற்றியின் அடுத்த கட்ட படிகளை நோக்கி முன்னேறுவோம்! தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு / திங்கள், 25 மார்ச் 2013 12:51 தமிழகமெங்கும் கல்வி வணிகமயமாக்கப்பட்டு கல்விக்கூடங்கள் சிறைகூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. சேனல் 4-ல் வெளிவந்த இனப்படுகொலை காட்சிகளும், மழலைச் செல்வன் பாலச்சந்திரனின் நெஞ்சை பதறவைக்கும் படுகொலையும் நம்மை பூட்டி வைத்திருந்த சிறைக் கதவுகளை உடைத்து சீறியெழ வைத்தது. ஈழத் தமிழர்களை படுகொலை செய்த "சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்", "வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு …
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு தொலைக்காட்சியால் என்ன செய்ய முடியும்? பதிவு செய்த நாள் - / மார்ச் 22, 2013 at 10:16:30 PM எந்தவொரு பொதுப் பிரச்சினையிலும் கருத்தொருமிப்பை உற்பத்தி செய்யும் வலிமை கொண்டவை ஊடகங்கள். உண்மையை ஊருக்குச் சொல்லுவதும் ஊடகங்களால் சாத்தியம்; உண்மையை மறைப்பதும் அவற்றால் சாத்தியம். ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று கிளர்ந்தெழுந்த்த தமிழக மாணவர் சமூகத்திற்கு முகம் கொடுத்தது புதிய தலைமுறை தொலைக்காட்சி. நீதிக்கான அறப்போராட்டம் பற்றிய தொடர் நேரலைகள், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் முக்கியப் பங்கு வகித்தன. 2009 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழக மாணவர் எழுச்சியும் ஐ.நா தூக்குத் தண்டனை நாடகமும் : சபா நாவலன் வன்னிப் படுகொலை விட்டுச் சென்றிருக்கும் வருடாந்த வைபவங்களுள் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாக ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் என்ற பெயரில் நடத்தப்படும் சந்தர்ப்பவாதிகளின் ஒன்றுகூடல் பிரதானமானதாகும். அவலங்களின் அழுகுரல்கள் நான்கு வருடங்களின் பின்னர் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க மக்கள் ராஜபக்சவை யாராவது தண்டித்து விடுவார்கள் என நாட்களை நம்பிக்கையோடு ஓட்டுகிறார்கள். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கூடுவதற்கு சற்று முன்னதும் பின்னதுமாக புலம் பெயர் நாடுகள் தூக்குததண்டனை நாடகம் ஆரம்பித்துவிடும். நாடகத்தில் நடிப்பதற்காக புலம்பெயர் தமிழ் அரசியல் தலைவர்கள், இலங்கை அரசு, அமரிக்க அரசு, இந்தியா, தமிழ் நாட்டின் அ…
-
- 2 replies
- 844 views
-
-
தமிழர் அரசியல் - அமெரிக்க இந்திய காய்நகர்த்தல்களுக்கு இடையில் - யதீந்திரா கடந்த பத்தியில் ஜெனிவை முன்னிலைப்படுத்தி இடம்பெற்றுவரும் சில விடயங்களை அவதானித்திருந்தோம். இப்பத்தியில் மேலும் சில விடயங்களை உற்று நோக்குவோம். சமீபத்தில் ஒரு நண்பர் சற்று வித்தியாசமான அபிப்பிராயம் ஒன்றை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அது சற்று வித்தியாசமான பார்வையாக இருந்தது. அது எந்தளவிற்கு இன்றைய சூழலில் பொருத்தமாக அமையும் என்பதற்கு அப்பால், இன்றைய சூழலில் எந்தவொரு கருத்தையும் உடனடியாக நிராகரித்துவிட முடியாதவொரு சூழல் நிலவுகிறது என்னும் யதார்த்தத்தையும் நிராகரிக்க முடியவில்லை. அமெரிக்கா, ஜெனிவாவில் மேற்கொண்டுவரும் நகர்வுகள் உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானதல்ல, அது இந்திய அரசுக்கு எதி…
-
- 0 replies
- 623 views
-
-
இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் இப்போது சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாற்றமடைந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், இதே காலப்பகுதியில் போர் முடிவுக்கட்டத்தை அடைந்திருந்தபோது, குண்டுவீச்சுகள், உயிரிழப்புகள், காயங்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தன. போரில் காயமுற்ற, சுகவீனமுற்ற பொதுமக்கள், நூற்றுக்கணக்கில் கடல் வழியாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு மூலம் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவினதும், ஐ.நாவினதும், செய்மதிகள் பிடித்த படங்கள், சூடு தவிர்ப்பு வலயங்களிலும் குண்டுகள் விழும் தடயங்களைப் புலப்படுத்தியபோதிலும், அப்போது போரை நிறுத்தும் முயற்சிகளிலோ, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத…
-
- 3 replies
- 760 views
-
-
ஆளுங்கட்சியும், வடநாட்டுக் கட்சிகளும் தமிழினத்திற்கு எதிராக ஒரே நிலையில்... த.தே.பொ.க. / வெள்ளி, 22 மார்ச் 2013 11:24 நாட்டு மக்களுக்கு உறுதியளித்தவாறு ஒரு மெல்லிய திருத்தத்தைக் கூட சேர்க்க முனையாமல் எற்கெனவே தான் நீர்த்துப்போகச் செய்த அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் வாக்களித்தது. இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற போதிலும் அந்த மன்றத்தில் கூட இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றோ, இப்போதைய தேவை 2008-2009 இறுதிகட்ட போரின் போது நடைபெற்ற மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மீது தற் சார்பான பன்னாட்டுப் புலன் விசாரணை என்றோ ஒரு தீர்மானம் நிறை…
-
- 0 replies
- 602 views
-
-
ஜெனிவா தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல - ஆனால் சிறிலங்காவுக்கு தோல்வி! - ருத்திரகுமாரன் அறிக்கை அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை நெருங்கி வரவில்லை. இதனால் இத்தீர்மானத்தை நாம் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமதர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்திரமாரன் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் 1965ல் மாணவர் போராட்டம் வெடித்தது. 'மதுரையில் இரண்டு நாட்களில் அறுபத்து மூன்று முறை தடியடி நடத்தினேன்' என்று ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் சொன்னது போல அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் பெருமிதத்துடன் சொன்னார். அன்றைய மொழிப் போர்க் கிளர்ச்சி மூன்று விபரீதமான நகர்வுகளை இந்திய அரசிடம் உருவாக்கியது. 1. இந்திய விடுதலைக்குப் பிறகு, மாநிலங்களில் நுழைந்திராத (காஷ்மீர் தவிர) இந்திய ராணுவம், முதன் முதலாக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. ராணுவத்தின் கரகரத்த பூட்ஸ் ஓசையை தங்களது சொந்த பூமியில் தமிழக மக்கள் கேட்டனர். 2. முதன்முதலாக தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தணிக்கை செய்யப்பட்டது. அஞ்சல் நிலையம் ஒவ்வொன்றும் …
-
- 0 replies
- 800 views
-
-
அமெரிக்க தீர்மானம் - இனி நாம் செய்ய வேண்டியது என்ன? கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் / வியாழன், 21 மார்ச் 2013 11:05 இன்றைய நமது நிலைப்பாடுகள்: தனித் தமிழீழம் என்பது மட்டுமே ஈழத் தமிழ மக்களின் துயரற்ற, கண்ணியமான எதிர்கால வாழ்விற்கான நிரந்தரத் தீர்வு. இந்த கருத்தைப் பரந்த அளவில் அனைத்து மக்களிடமும் கடந்த சில நாட்களில் நாம் கொண்டு சென்றிருக்கிறோம் – வெற்றிகரமாக. ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷனின் முன்பாக மார்ச் 21 ஆம் தேதியன்று ஈழத் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வுரிமை குறித்து அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவரவுள்ளது. இந்தத் தீர்மானம ஒன்றுபட்ட இலங்கை என்ற நியாயமற்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே அதனை நாம் நிராகரித்துள்ளோம். …
-
- 1 reply
- 790 views
-
-
http://www.youtube.com/watch?v=loPDteNKMDY
-
- 0 replies
- 738 views
-
-
நேர்பட பேசு : 20 பங்குனி 2013 http://www.youtube.com/watch?v=4q7h0lPFNZU
-
- 2 replies
- 642 views
-
-
மண்ணெண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒன்று சேரமுடியாதோ அதேபோல ஈழத்தமிழர்களின் நல்வாழ்வும் கருணாநிதியின் அரசியலும் ஒருபோதும் ஒன்று சேரமுடியாதவை. PostDateIcon புதன்கிழமை, 20 மார்ச் 2013 05:52 ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற ராஜபக்ஷவின் அதி உயர் நட்பு சக்தியான காங்கிரஸ் கட்சியுடன், ஒரு தசாப்தகாலமாக கூட்டமைப்பிலிருந்த கருணாநிதியின்,திமுக, ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக அந்தக் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதாக, ஈழ தமிழினத்துக்கு ஆற்றுண்ணா துரோகம் செய்த அக்கட்சியின் மானங்கெட்ட தலைவர் கருணாநிதி, வெட்கம் கெட்டு இன்று அவசரமாக புது அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு தமிழ் இனத்திற்கு மகிழ்ச்சியையோ, மறந்தேனும் நற்பலனையோ ஒருபோதும் ஈட்டிவிடப்போவதில்லை. மாறாக…
-
- 0 replies
- 691 views
-
-
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கூட திமுகவுக்கு இவ்வளவு இழப்பு ஏற்பட்டதில்லை-ப.சிதம்பரத்திடம் சீறிய கருணாநிதி! சென்னை:காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிதன் பின்னணியில் கடந்த இரு நாட்களில் நடந்த விறுவிறு விவகாரங்கள் வெளியில் வர ஆரம்பித்துள்ளன. திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது கருணாநிதி-சோனியா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, பரஸ்பர நம்பிக்கையோடு நீடித்த கூட்டணி. முதல் 6 ஆண்டுகள் மிக மிக நெருக்கமான கூட்டணியாக இது இருந்தது. எப்போது 2ஜி விவகாரம் வெளியே வந்ததோ அப்போது தான் இந்தக் கட்சிகளிடையே முதலில் விரிசல் விழுந்தது. அடுத்து ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளரார் ஆனாரோ, அன்று முதல் இந்தக் கூட்டணியின் விரிசல் அளவு அதிகரித்துக் கொண்டே வந்தது. கருணாநிதியை ராகுல் …
-
- 1 reply
- 643 views
-
-
ஜெனிவா யோசனை: பயங்கரமானது, இல்லை போலியானது, இல்லை பிரயோசனமானது. 17 மார்ச் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - சுனந்த தேசப்பிரிய ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுளின் மனித உரிமை ஆணைக்குழுவின கூட்டத் தொடர் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பற்றி பார்க்கும் அடிக்கடி விசனம் ஏற்படுகிறது. எந்த அரசியல் நிலைப்பாடுகளில் ஒவ்வாருவரும் உள்ள போதிலும் இவற்றில் மாற்றங்களும் உள்ளன. அமைச்சர் மகிந்த சமரசிங்க போன்ற ராஜபக்ஷ நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள், இது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் ஏகாதிபத்திய சூழ்ச்சி எனக் கூறுகின்றனர். அத்துடன் ராஜபக்ஷ…
-
- 5 replies
- 719 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் இலங்கை இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக் கூறப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் , பிரச்சினைகளையும் பெரும்பான்மையினர் தொடர்ந்து திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதே இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் நாட்டுப் பிரிவினைப் போராட்டத்திற்கும் முக்கிய காரணங்களாகும். இலங்கையின் இனப் பிரச்சினைக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்செயல்களுக்கும் தீர்வு காணும் அவசியத்தையும் இலங்கையில் வாழும் சகல இன மக்களின் பாதுகாப்பு , நல்வாழ்வு ஆக…
-
- 10 replies
- 1.3k views
-
-
வடக்கின் வசந்தம் வன்னியை வளப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ஒரு புதுயுகம் படைத்துக் கொண்டிருப்பதாகத் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அது போர் இடம்பெற்ற காலம். கிளிநொச்சி வளர்ந்து வரும் ஒரு நகரமாக உருப்பெற்றிருந்த நாள்கள். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகங்கள் அத்தனையும் அங்குதான் மையம் கொண்டிருந்தன. அப்போது அங்கே அகன்ற அழகான ஏ9 வீதி இருக்கவில்லை. ஓங்கி உயர்ந்த கட்டடங்கள் இருக்கவில்லை. பிரதான வீதியால் பறக்கும் நவீன வாகனங்களையோ பெரும் கனரக வாகனங்களையோ காணமுடியாது. எனினும் நகரம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். கிபிர் வரப் போகும் முன்னறிவிப்பு விசில் அடித்ததுமே மக்கள் ஆங்காங்கே இருக்கும் பதுங்கு குழிகளுக்குள் இறங்க…
-
- 0 replies
- 909 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை முதலும் கடைசியுமாக ஒரு பிராந்தியப் பிரச்சினைதான். இரண்டாவதாகத் தான் அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை. சுமாராக கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாகியபோது அது ஒரு பிராந்தியப் பிரச்சினையாகவே காணப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த திருப்பகரமான மாற்றங்களால் அது அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓர் அனைத்துலகப் பிரச்சினையாக மாறியது. அதில் முதலாவது திருப்பம், ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை. அதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதோடு அதன் உயர் தலைவர்கள் இருவரும் இந்தியாவில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகளாகினர். எனவே, ரஜீவ் வழக்கிலிருந்து தொடங்கி புலிகள் இயக்கத்திற்கும் புதுடில்லிக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டு உரு…
-
- 0 replies
- 582 views
-