Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சாலே நியமிக்கப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் கடந்த வாரம் அதிக முக்கியத்துவத்தை பிடித்திருந்தது. இலங்கையின் புலனாய்வுப் பிரிவு ஒன்றுக்கான பணிப்பாளர் நியமனம் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தது கிடையாது. அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. அது மாத்திரமே இந்த அளவுக்கு சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டமைக்கு காரணமல்ல. புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான படை அதிகாரிகளுக்கு அளித்து வரும் உயர் பதவிகள், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னரான சூழல், பிரிகேடியர் துவான் சுரேஷ் …

    • 1 reply
    • 1.1k views
  2. ரட்ணஜீவன் கூலும், தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும் : ரகுமான் ஜான் ஒவ்வொரு கலாச்சாரமும், அது எந்த சூழலில் உருப்பெற்றதோ, எப்படிப்பட்ட சூழலில் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அந்த சமூகச் சூழலில் வைத்துத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். வேற்று ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தமது சமூகத்தில் காணப்படும் கலாச்சார பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறொரு சமூகத்தின் கலாச்சாரத்தை மதிப்பிடுவது, அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பல்வேறு சமூகங்களின் கலாச்சாரங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிப்பது அபத்தமானது. இந்த விதமான மதிப்பீடுகள் வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் ‘அதிகாரப் படிநிலைவரிசையை’ (Hierarchial Order) கற்பிப்பதற்கும், அந்த கற்பிதங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தை இன்ன…

  3. ஜனாதிபதி பதவி விலகலுக்கு சாத்தியமுண்டா? லக்ஸ்மன் ஜனாதிபதி உரையாற்றுகிறார் என்றவுடனேயே எல்லோரும் பதவிவிலகும் அறிவித்தலைத்தான் சொல்லுவார் என்று எண்ணுமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. வாழ்க்கைச் சுமை அதிகரித்துவிட்டது. யார் எதனைச் செய்யமுடியும் என்றே இருக்கிறது. ஒரு சமூகமோ நாடோ, வெறுமனே வசதி படைத்தவர்களை மாத்திரமோ, சாதாரண மக்களை மாத்திரமோ கொண்டதல்ல. அதில் நடுத்தர மக்களும்தான் உள்ளடங்குகிறார்கள். இதில் யாருக்குத் திண்டாட்டம், யாருக்கெல்லாம் பெரும் திண்டாட்டம் என்று யாரும் கணக்குக் போட முனைவதில்லை. நாட்டுக்குள் கேள்விக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன உரிமை, மனித உரிமை மீறல் விடயங்கள், சர்வதேசத்திலிருந்து வரும் மனித உரிமைப் பிரச்சினைகள் ஒருபுறம், அழுத்தங…

  4. தமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா? அ. நிக்ஸன் படம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும் என வேறு சிலர் காரணமும் கூறுகின்றனர். உள்ளக முரண்பாடுகள், முதலமைச்சா விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், தமிழர்களின் சமகால அரசியல் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில்…

  5. விக்கிலீக்ஸ் - அம்பலமாகும் இரட்டை வேடங்கள் சந்திர பிரவீண் குமார் 1940களில் லக்ஷ்மிகாந்தன் என்ற பத்திரிகையாளர் சினிக்கூத்து என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மட்டுமல்லாது நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய அவதூறான செய்திகளை வெளியிட்டதால் பத்திரிகை தடை செய்யப்பட்டது. ஆனால் அவர் அசராமல் ஹிந்துநேசன் என்ற பத்திரிக்கையைத் துவங்கி அதில் நடிகர்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பற்றி விமர்சனம் செய்தார். இறுதியில் லக்ஷ்மிகாந்தன் கொல்லப்பட்டார். அவரது கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு அந்த நாளைய நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருக்கு நாடு கடத்தும் தண்டனை வழங்கப்பட்டது. கடைசியில் அவர்கள் ந…

  6. முஸ்லிம்களின் ’இதயம்’ என்னவாகும்? ஒரு பொதுத் தேர்தல் கணிப்பு முகம்மது தம்பி மரைக்கார் நாட்டில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு காணப்படுகின்றன. அவை, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில், இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் எட்டுப் பேர், இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை ஐந்து உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். இலங்கை முஸ்லிம்களின் இதயமா…

  7. ‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’ காரை துர்க்கா / 2020 ஜனவரி 14 யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது... அந்தத் தம்பதி, யாழ்ப்பாணம் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; கணவன், மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்; அவர்களுக்கு இரு பிள்ளைகள்; இருவரும் பாடசாலை செல்பவர்கள்; அவர்களின் பிள்ளைகளின் கல்வியை முன்னிட்டு, அடுத்த ஆண்…

  8. [size=5]ஜெனிவா பொறியில் இருந்து மீள்கிறதா இலங்கை?[/size] [size=4]நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வெளியிட்டுள்ளது. என்னதான், அரசாங்கம் மேற்குலக நாடுகளையும், ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளையும் காட்டமாக விமர்சித்து வந்தாலும், அவற்றின் அழுத்தங்களைத் தட்டிக்கழிக்க முடியவில்லை என்பதை இந்த செயற்திட்டம் உறுதிசெய்கிறது. மேற்குலக மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு அரசாங்கம் உள்ளாகியுள்ளது. அதனால் தான் இந்த செயற்திட்டம் வெளியாகியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா…

    • 3 replies
    • 1.1k views
  9. [size=3] [size=4]உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்க[/size] [size=4]ளே !அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது. …

    • 3 replies
    • 1.1k views
  10. கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள் 07/30/2018 இனியொரு... வாக்குக் கட்சிகளால் மக்களுக்கான எதையும் சாதித்துவிட முடியாது. அதிலும் இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பிரித்தானிய காலனியாதிக்க வாதிகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் மக்கள் விரோத ஆட்சிகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறது. இந்த ஒட்டு ஜனநாயகத்தின் மத்தியிலிருந்து தோன்றிய விரல்விட்டு எண்ணக்கூடிய சீர்திருத்த வாதிகள் சிலர் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவும், பின் தங்கிய சமூக உற்பத்தியை புதிய நிலைக்கு நகர்த்தவும் தம்மாலான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். வெனிசூலா நாட்டின் சனாதிபதியாக தனது இறுதிக்காலம் வரை பதவிவகித்க ஹுகோ சவேஸ் இன் சீர்திருத்தக் கருத்துக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகள்…

  11. தமிழ் டயாஸ்பொறா பலமானதா? கலாநிதி சர்வேந்திரா தமிழ் டயாஸ்பொறாவின் பலம் தொடர்பான கருத்துக்கள் அண்மையில் வெளிப்பட்டிருந்தன. எரிக் சூல்கெய்ம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டன் பேச்சுவார்த்தை தொடர்பாக நிலாந்தன் எழுதிய கட்டுரையில் எரிக் சூல்கெய்ம் வெளிப்படுத்திய கருத்தைக் குறிப்பிட்டு இலண்டன் பேச்சுவார்த்தைகளின் போதும் பின்னும் தமிழ் டயாஸ்பொறா நடந்து கொள்வதைப் பாரத்தால் அப்படியா தெரிகிறது என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார். உண்மையில் தமிழ் டயாஸ்பொறா பலம்மிக்கதுதானா? இதுவே இன்றைய பத்தியின் பேசுபொருள் ஆகிறது. இங்கு பலம் என்பது எதனைக் குறிக்கிறது? வளங்கள் நிறைந்த சமூகம் என்பதையா? அனைத…

    • 3 replies
    • 1.1k views
  12. மாயக்கல்லி மலை: விடாப்பிடி முகம்மது தம்பி மரைக்கார் / நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை அடாத்தாக வைத்ததிலிருந்து தொடங்கிய சர்ச்சை, இப்போது இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை முன்னிறுத்தி, அங்கு விகாரை ஒன்றை அமைப்பதற்காக, ஓர் ஏக்கர் காணி வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் டி.டி.அநுர தர்மதாஸ உறுதியளித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளத…

  13. தமிழனா? இந்தியனா? "தமிழன் மட்டும்தான் ஏமாளியாக இந்தியா, இந்தியா என்று வாய்கிழியப் பேசி ஏமாந்து போகிறான். வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவனும் அவனது மாநிலப்பற்றோடு மட்டும் தான் இருக்கிறான்.'' என்றார் ஒரு தமிழ்த்தேசியவாதி. "இங்கு மட்டும்தான் தமிழன் தமிழன் என்று மாநிலப் பற்றோடு இருப்பதாக அல்லவா பலர் பேசுகிறார்கள்" என்றேன். "கன்னடரைப் பாருங்கள், நீர்ப் பிரச்சனை வந்தால் எல்லா கட்சிக்காரனும் ஒரே குரலில்தான் பேசுவான். கேரளத்தைப் பாருங்கள் எந்த பிரச்சனையென்றாலும் எல்லா கட்சிக்காரனும் ஒரே குரலில்தான் பேசுவான். மராட்டியனைப் பாருங்கள் அவனும் அப்படியே" என்றார். "அதனால் அவர்களுக்கு தேசப்பற்று இல்லை. இந்தியா என்றால் ஒன்றுபடமாட்டார்கள் என்று எப்படிச் சொல்கிறீர…

    • 1 reply
    • 1.1k views
  14. எதிர்பார்த்துக் காத்திருத்தல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 12:52 இன்னோர் ஆண்டு எம்முன்னே விரிகிறது. எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்ததாக அது இருக்கிறது. நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும். எதிர்காலத்தை எதிர்வுகூற விளையும் ஒவ்வொரு தடவையும் இந்தச் சொற்றொடரை நினைத்துக் கொள்வது உண்டு. எதிர்காலத்தைக் கணிப்பது கடினம். அதிலும், அரசியலில் எதிர்காலத்தைக் கணிப்பது இன்னமும் சிரமம். நிச்சயமின்மைகளால் நிரம்பி வழியும் ஒன்றன் திசைவழிகள் குறித்து, நிச்சயமாகச் சொல்வது சவால் மிக்கது. ஆனால், அது முடியாத காரியமுமல்ல. சாத்தியங்களையும் சாத்தியமின்மைகளையும் கணிக்கவியலும்; ஆய்வறிவாளனின் கலையும் திற…

  15. வரதராஜ பெருமாள் - ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த சூழலில் அவரைச் சென்னையில் சந்தித்தோம். ''இத்தனை ஆண்டுகள் எங்கேதான் இருந்தீர்கள்?'' ''11 வருடங்கள் ராஜஸ்தானிலும் பத்து வருடங்கள் டெல்லியிலும் இருந்தேன். இலங்கையில் இருந்திருந்தால் இப்போது நான் இருந்திருக்க மாட்டேன். ராஜீவ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக இருந்ததால், என்னைக் கொல்வதும் இந்தியாவை அடிப்பதும் ஒன்று என புலிகள் கருதினார்கள். தலைமறைவாக இரு…

  16. சங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ் - நிலாந்தன் கோவிட் -19காலத்தில் வீட்டுத் தோட்டத்த்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதைப் போல கூட்டுறவு வாழ்க்கை குறித்தும் இயற்கைக்கு மீளத் திரும்புவது குறித்தும் உரையாடத் தொடங்கியுள்ளோம். குறிப்பாக சமூகத்தின் அன்றாடங் காய்சிகளுக்கும் நலிவுற்ற பிரிவினருக்கும் பாரபட்சமற்ற விநியோகத்தை மேற்கொள்வதற்கு கூட்டுறவுச் சங்கங்களை புதுப்பிக்க வேண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.. உண்மைதான். யுத்த காலங்களில் சங்கக் கடை மைய வாழ்க்கை ஒன்று இருந்தது. அந்நாட்களில் கூப்பன் கார்ட்டும் அடையாள அட்டையும் தொலைக்க முடியாத ஆவணங்களாக காணப்பட்டன. குடும்ப அட்டை என்பது நிவாரண அட்டையாகவும் நீட்சி பெற்றிருந்தது. குடும்ப …

  17. ஜேர்மனி ஹிட்லரை நம்ப ஆரம்பித்திருந்தது. அடாவடிக்காரர், போர்வெறி கொண்டவர் என்றெல்லாம் முணுமுணுப்புகள் காதில் விழுந்தாலும், ஹிட்லர் அவசியமானவர் என்று தான் தோன்றுகிறது. அங்கே தவறு செய்தார். இங்கே விதிகளை மீறினார் என்று அவ்வப்போது சுட்டிக்காட்டுகிறார்கள். இருக்கட்டுமே! யாருக்காக செய்கிறார் ஹிட்லர்? தனக்காகவா? தேசத்துக்காக தானே? தேசத்தின் முன்னேற்றத்திற்காக தானே? அவர் வெற்றி எமது வெற்றி அல்லவா? அவர் சறுக்கினால் ஜேர்மனி பின்னுக்குச் செல்லும் அல்லவா? கடந்த உலகப் போரில் பட்டது போதாதா? கடன்கள் போதாதா? ஹிட்லராக இருப்பதால் பிழைத்தோம். ஹிட்லர் அவர் பாதையில் செல்லட்டும். என்ன தான் ஆகிறது என்று பார்ப்போம். இதுவே ஹிட்லரின் ஆதரவாளர்களால் ஜேர்மனி மக்களுக்கு வைக்கப்பட்ட பிரச்சாரம். ஏ…

    • 2 replies
    • 1.1k views
  18. பிரசார ஆயுதமாகும் போர்க்குற்ற விசாரணை கே. சஞ்சயன் / 2019 பெப்ரவரி 15 வெள்ளிக்கிழமை, மு.ப. 01:07 Comments - 0 ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கில் நீதி கோரும் மக்களின் போராட்டங்கள், தீவிரம் பெறத் தொடங்கி விட்டன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள்; காணிகளைப் பறிகொடுத்து நிற்கிறவர்களின் போராட்டங்கள்; அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள்; இறுதிக்கட்டப் போரின் போது, நடந்தேறிய போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நீதியை வழங்கக் கோரும் போராட்டங்கள், போன்றவை நடக்கின்றன. இத்தகைய போராட்டங்கள், போர் முடிவுக்கு வந்த பின்னர், சுமார் 10 ஆண்டுகளாகத் தொடர்ந…

  19. தலைமைக்கு இதுதான் தகுதியோ? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 28 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:04 முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, “நான் அப்படிக் கூறினேனா” என்று கேட்பது, “அவ்வாறு கூறவேயில்லை” என்று தலையில் அடித்து சத்தியம் செய்வது போன்றன, அரசியல்வாதிகளுக்குப் புதிதான விடயமல்ல. இது அரசியல்வாதிகளின் பொதுமையான குணவியல்பாக மாறியிருக்கிறது. மிகச்சமீபத்தில், இந்தக் குணவியல்புகளை, அப்பட்டமாகவே வெளிக்காட்டியிருப்பவர்கள் இருவர். ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; இன்னொருவர் மஹிந்த ராஜபக்‌ஷ. இரண்டு பேருமே, ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்புக்கும் அதையடுத்த 51 நாள்கள் நீடித்த குழப்பங்களுக்கும் காரணமானவர்கள். இதனால் தான், இரண்டு பேரினதும் செல்வாக்கு, கடுமையாகச் சரிந…

  20. [size=2] [size=4]செப்டெம்பர் 11, 1973 அன்று சல்வடார் அலண்டேயின் ஆட்சி அமெரிக்க அரசாங்கத்தின் துணையுடன் தூக்கியெறியப்பட்டது. அலண்டே ‘மர்மமான முறையில்’ கொல்லப்பட்டார்.[/size][/size][size=2] [size=4]2001ம் ஆண்டு, செப்டெம்பர் 11 அன்று நியூ யார்க், வாஷிங்டன் டிசி ஆகிய நகரங்களின்மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3000 பேர் கொல்லப்பட்டனர். [/size][/size] [size=2] [size=4]இரண்டுமே ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகள். ஒன்று அமெரிக்காவின் துணையுடன் நிகழ்த்தப்பட்டது. இரண்டாவது, அமெரிக்காவின்மீதே.[/size][/size] [size=2] [size=4]பரமக்குடியில் சென்ற ஆண்டு செப்டெம்பர் 11 அன்று காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை மற்ற இரு செப்…

    • 0 replies
    • 1.1k views
  21. ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா? Editorial / 2019 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை, பி.ப. 05:06 -இலட்சுமணன் பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு காலச்சுழலினுள் இன்றைய தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது. கடந்த கால வரலாறுகளும் அவை கற்றுத்தந்த பாடங்களும் நல்லிணக்கமும் அதற்கான தேவைப்பாடுகளும், தற்காலத்தில் பேசுபொருளாக இருந்த போதும், அதனால் ஏற்பட்டிருந்த விளைவுகள், எமக்குப் பல்வேறு கருத்தியல்களை, பதிவுகளை பாடமாகத் தந்…

    • 5 replies
    • 1.1k views
  22. கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும் 06/12/2018 இனியொரு... விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதிய…

    • 3 replies
    • 1.1k views
  23. முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைக்க மறுக்கும் ஒரு நாட்டில் வைரசுக்குக் கழிப்புக் கழித்த அமைச்சர் – நிலாந்தன் கடந்த பௌர்ணமி தினத்தன்று யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஓர் ஆசிரியர் தனது மகளோடு பயணம் செய்து கொண்டிருந்தார். தென்மராட்சியில் ராணுவ தளங்களுக்கு முன்னே பௌத்த மதக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. அதைப் பார்த்துவிட்டு மகள் தகப்பனிடம் கேட்டாள் “இந்த ராணுவத்தில் வேறு மதத்தவர்கள் இல்லையா?” என்று. “இருக்கிறார்கள் இப்போது உள்ள தளபதி ஒரு கத்தோலிக்கர் தான்” என்று அவர் கூறினார். “அப்படி என்றால் ஏனைய மதத்தவர்களின் புனித நாட்களின் போது அவர்களுடைய கொடிகளையும் சின்னங்களையும் முகாம்களின் முன் கட்டுவார்களா?” என்று மகள் கேட்டாள் “ இல்லை அப்படி நான் பார்த்ததில்லை” என்று தகப்…

    • 14 replies
    • 1.1k views
  24. தடுத்து நிறுத்துவது யார்? | Dr.Sathiyamoorthy | Dr.Gadambanathan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.