அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
சிறிலங்காவிற்கு இவ்வாண்டு அதிகளவில் வெளிநாட்டு உதவியை வழங்கிய சீனா, தொடர்ந்தும் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு ‘முழுமையான ஒத்துழைப்பை’ வழங்குவேன் என உறுதியளித்துள்ளது. இந்தியாவின் அதிருப்தி வலுவடைந்து வரும் நிலையிலும் சீனா இவ்வாறானதொரு உறுதியை வழங்கியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அண்மையில் மேற்கொண்ட சந்திப்பின் போது, சிறிலங்காவை அபிவிருத்தி செய்வதற்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஜூலை 10 அன்று முடிவிற்கு வரும் வகையில் சிறிலங்காவிற்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் ஜி, சிறிசேனவின் ஆட்சியின் போது சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த முதலாவது சீ…
-
- 0 replies
- 978 views
-
-
இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொழும்பு கிளர்ச்சியின் விளைவால் ஆட்சி மாற்றத்துக்கு பதிலாக ஆள் மாற்றம் நிகழ்ந்து ரணில் ஜனாதிபதியானார், இந்திய தரப்பு உடனடியாக வாழ்த்துச் செய்தி அனுப்பாது தாமதமாகவே வாழ்த்து அனுப்பி இருந்தது இந்நிலையில் அழகப்பெரும ஜனாதிபதி நாற்காலியில் அமர்வதையே இந்திய உளவுத்துறை விரும்பியதாக ரணில் இந்திய தூதரகத்திடம் குற்றம் சாட்டி முறைப்பாடு செய்திருந்தார் . அதனை இந்திய தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் முற்றாக மறுத்தும் இருந்தது. கரடு முரடான உறவு இலங்கையில் யார் பதவிக்கு வந்தாலும் அவர்களது முதலாவது வெளிநாட்டு பயணம் புதுடெல்லியாகவே இருக்கும். ஆனால் ரணில் பதவிக்கு வந்தபின் அவ்வாறு நிகழவில்லை. இந்தப் பின்னணியில் ரணிலுக்கும் இந்தியாவ…
-
- 0 replies
- 652 views
-
-
இந்தியாவுக்கு முன்னர் தலைவலியாக இருந்த லலித் அத்துலத்முதலியின் மறுபிரதிதான் கோத்தாவா? [ சனிக்கிழமை, 01 யூன் 2013, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போது, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய ராஜபக்ச, வடக்கு மாகாண சபைக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்கின்ற தனது கருத்தை மிக ஆழமாக முன்வைத்திருந்தார். இவ்வாறு பத்தி எழுத்தாளர் உபுல் யோசப் பெர்ணாண்டோ அண்மையில் Ceylon Today எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டள்ளார். அதனை பதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. வடக்கு மாகாணசபைக்கான தேர்தல்களை நடாத்துதல் மற்றும் வடக்கு வாழ் தமிழ் மக்களுக்கான மீளிணக்கப்பாட்டை மேற்கொள்ளுதல் போன்றவற்ற…
-
- 0 replies
- 792 views
-
-
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்பும் இனப்பிரச்சினையும்! நிலாந்தன். “இன்று நாம் நடத்திய கலந்துரையாடல் இலங்கை-இந்தியாவின் அடுத்த 25 வருடங்களுக்கான அடித்தளத்தை இடும்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓர் இந்திய ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான தனது இரு நாள் விஜயத்தைக் குறித்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைவர்கள் இந்தியாவிற்கு போகும்பொழுது இதுபோல கவர்ச்சியான பல பிரகடனங்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவை செயலுக்கு வந்ததில்லை. ஏனெனில் யதார்த்தத்தில் இலங்கைத் தீவுக்குள் சீனா கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு நிற்கப் போகின்றது. அம்பாந்தோட்டையில் 99 ஆண்டு கால குத்தக…
-
- 1 reply
- 214 views
- 1 follower
-
-
தி.ராமகிருஷ்ணன் கொழும்பில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பிரமாண்டமான தோற்றக்கவர்ச்சியுடைய தாமரைக்கோபுரம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளின் புத்தம்புதிதான சின்னமாக கருதப்படுகிறது.பலநோக்கு செயற்பாடுகளுக்கான இந்த தொலைத்தொடர்புக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே 2012 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. சீனாவுக்கு விரோதமான உணர்வு நிலவிய ஒரு நேரத்தில் பதவிக்கு வந்த ஒரு அரசாங்கத்தின் கீழ் இந்த கோபுரத்தின் பெருமளவு நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன என்பது விசித்திரமானதாக தோன்றக்கூடும். 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான நாட்களில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த ரணில் விக்கிரமசிங்க சீனாவின் இன்னொரு பாரிய திட்டமான 140 கோடி அமெரிக்க டொலர்கள் …
-
- 0 replies
- 408 views
-
-
இலங்கையில் சீனாவின் இராணுவப் பிரசன்னம் ஏதும் இல்லை என்று இந்தியாவிடம் மீண்டும் தலையில் அடித்துச் சத்தியம் செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியிருக்கிறது. சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பயணத்துக்கு முன்னதாக, கொழும்புத் துறைமுகத்தில் சீனக் கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பலொன்று தரித்து நின்ற விவகாரம் தான், இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம். சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த விபரத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டதால் தான் இந்தச் சிக்கல் இந்தளவுக்குப் பூதாகர வடிவெடுத்தது. கடந்தவாரம், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே. டோவனின் அழைப்பின் பேரில் இலங்கைக் கடற்படைத் …
-
- 0 replies
- 756 views
-
-
இந்தியாவுடன் பேசித்தான் ஆகவேண்டும் | அரசியல் களம் | ஆய்வாளர் நேரு குணரட்ணம்
-
- 0 replies
- 508 views
-
-
இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு அரசியல்- இந்தியாவும் 13 ஆவது திருத்தச் சட்டமும் இலங்கை அரசுக்கு ஈழத்தமிழர்கள் தொல்லை கொடுக்கக் கூடாதென்பது இந்தியாவின் நிலைப்பாடு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness--MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கின்றார். இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 1…
-
- 0 replies
- 476 views
-
-
இந்தியாவானது தென்னாசியாவின் மையமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பிற்கு எழும் அச்சுறுத்தலானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக எழும் என்கின்ற நியாயத்தை இந்தியா கவனத்திற் கொள்ள வேண்டும். இவ்வாறு இந்தியாவின் முன்நாள் வெளியுறவுச் செயலரான நிருபமா ராவ் தனது உரையொன்றில் தெரிவித்துள்ளார். 'த இந்து' ஆங்கில நாளேட்டில் வெளிவந்த அந்த உரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. பொருளாதார விவகாரங்களைப் பொறுத்தளவில் பூகோள மூலோபாய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள துரித மாற்றங்கள் இந்தியாவிற்கும் பசுபிக் சமுத்திர நாடுகளுக்கும் முக்கியமானதாக உள்ளன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் தென்னாசியாவிலுள்ள அயல்நாடுகளும் வளைகுடாப் பிராந்திய நாடுகளும் தமக்கான கொள்…
-
- 3 replies
- 809 views
-
-
இந்தியாவும் கஜேந்திரகுமாரும் கே. சஞ்சயன் / 2019 ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 12:23 Comments - 0 குண்டுவெடிப்புகள், அதனைச் சார்ந்த அரசியல் பரபரப்புகளுக்குள், அமுங்கிப் போய்க் கிடந்த வடக்கு, கிழக்கு அரசியல் விவகாரங்கள், தேர்தல்கள் நெருங்கி வரத் தொடங்கியுள்ளதால், மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கின்றன. தமிழ் மக்கள் பேரவையின் அண்மைய செயற்குழுக் கூட்டத்தில், பேசிய அதன் இணைத் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், “மாற்று அணி ஒன்றை வலுப்படுத்துவதற்கான, அவசியமும் சூழலும் எழுந்துள்ளது. அதற்குத் தமிழ் மக்கள் பேரவை, காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருந்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, தமது…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவும் கோட்டாவும் தமிழர்களும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:23 இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற மறுதினமே, இந்திய வௌியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமண்யம் ஜெய்ஷங்கர் இலங்கை விரைந்து, ஜனாதிபதி கோட்டாபயவை நேரில் சந்தித்து வாழ்த்தியதுடன், இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு, அழைப்பையும் விடுத்திருந்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்று, சரியாக 11 நாள்களில், ஜனாதிபதி கோட்டாபய, தன்னுடைய முதலாவது உத்தியோகபூர்வ சர்வதேச விஜயமாக, புதுடெல்லி சென்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்திய விஜயத்தின் விளைவாக, இந்தியா, இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க…
-
- 0 replies
- 406 views
-
-
இந்தியாவும் தமிழ் மக்கள் பேரவையும் by A.Nixon படம் | OMLANKA இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்தச் சந்திப்பு தொடர்பாக அதீத நம்பிக்கையுடன் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வது வழமை. ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்தியா பற்றிய பேச்சுக்களை விட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பேசுகின்ற பண்பை காணமுடிகின்றது. அதுவும் இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன்தான் என்று சில விமர்சகர்கள் கூறுகின…
-
- 0 replies
- 545 views
-
-
இந்தியாவும் தெற்காசிய புவிசார் அரசியலும்! தெற்காசியாவின் புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானதாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் பிராந்திய கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவுக்கு கடினமான பணி உள்ளது. அதன் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதையும், அது தொடர்ந்து மேல்நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும். தெற்காசியா எப்போதும் ஒரு கொந்தளிப்பான பகுதியாக இருந்து வருகிறது. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு இடையே, மற்றும் அரசுகளுக்கு இடையேயான போட்டிகளுடன் கூடிய ஒரு பிராந்தியமாக இது இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் அந்நிய சக்திகளின் தலையீடுகள்…
-
- 0 replies
- 323 views
-
-
இலங்கையில் வரலாறு காணாத கோர முகத்துடன் இன்று யுத்தம் வாய் பிளந்து நிற்கின்றது. சிங்களப்படைகளின் கோரத்தாண்டவம் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்பாவி மக்களின் வாழ்விடங்களின் மேல் சிங்களப்படைகளின் விமானத்தாக்குதலில் உடலம் கிழிந்து உதிரம் சொரிந்து உயிர் துறக்கும் ஓலம் தினம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளின் மனிதாபிமானக் கோரிக்கைகள் எதனையும் காது கொடுத்துக் கேளாது சிங்களப்படைகள் போர் முரசம் கொட்டி ஆர்ப்பரித்து நிற்கின்றன. சிங்களப்படைகளின் தளபதி இவ்வாறு அறிக்கை விடுத்து நிற்கின்றார். கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008, வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிந…
-
- 1 reply
- 1.8k views
-
-
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்! அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஓர் அமைச்சருடைய இணைப்பாளர், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக பிரதேச சபைகளில் போட்டியிட்டவர், அவ்வாறு பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். அதுதொடர்பாக அவர் சார்ந்த கடல் தொழில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை உத்தியோகபூர்வமாக மறுப்பு எதையும் தெரிவித்திருக்கவில்லை.. அரசாங்க அமைச்சரின் இணைப்பாளர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாள், ஈழ மக்கள…
-
-
- 2 replies
- 284 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 618 views
-
-
திடீரென்று போர் வெடிக்கக் கூடிய இரு மையங்கள் உலகில் இருக்கின்றன. ஒன்று காஷ்மீர் அடுத்தது கொரியத் தீபகற்பம். காஷ்மீர் பிரச்சனை 1947ல் ஆரம்பித்து 64 வருடம் சென்றாலும் இன்று வரை தொடர்கிறது.1950ல் ஆரம்பித்த வடக்குத் தெற்கு கொரிய தீபகற்ப முறுகல் 61 வருடம் சென்றும் இற்றை வரை தொடர்கிறது. 1947ல் சுதந்திரம் வழங்கியதோடு இந்தியா பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளைப் பிரிட்டிசார் உருவாக்கினர். இந்திய உப கண்டம் முழுமையும் இருந்த 562 சிற்றரசுகள், ஜாமீன்கள், குறுநில ஆட்சிப்புலங்கள் விரும்பியவாறு இந்தியா, பாக்கிஸ்தானுடன் இணையலாம் என்று பிரிட்டிசார் ஆலோசனை கூறினர். அதன்படியே அவை இணைந்தன. இந்தியாவோடு இணைய மறுத்த ஜதரபாத் சமஸ்தானத்தை இந்தியா ராணுவ நடவடிக்கை மூலம் தன்னோடு இணைத்துக் கொண்…
-
- 1 reply
- 1k views
-
-
இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்.ராஜீவை தாக்கியமை அரச துரோகமானாலும் அது தேசத்துரோகமல்ல. இந்தியாவை திருப்திப்படுத்தவே எனக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப் பிழைப்பாக மாறிவிட்டது. நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, எமது நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எமது அரசியலமைப்புக்குள் புகுத்தினார். இதனால் ராஜீவ் காந்தியை எதிர்த்தேன். எனவே, எனது நாட்டை பாதுகாப்பதற்காகவே ராஜீவை பழிவாங்கும் எண்ணம் என் மனதுக்குள் உருவானது. இதன் காரணமாகவே கடற்படை அணிவக…
-
- 4 replies
- 680 views
-
-
இந்தியாவை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு.... -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற வினாவுக்கான உரிய பதிலை யாராலும் அளித்துவிட முடியாது. ஏனெனில், நிலையான நிலைப்பாடு என்று எதுவும் இருந்ததில்லை. இந்தியாவின் நலனும் மேலாதிக்கமும் விஸ்தரிப்புவாதமுமே இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளைத் தீர்மானித்து வந்துள்ளன. இந்தியா எப்போதும் தமிழ் மக்கள் பக்கம் நிற்கிறது என்கிற பிம்பம் உடைந்து, சுக்குநூறாகி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இருந்தாலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ தொடர்வது போல, இந்தியா மீதான நம்பிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன. இன்றுவரை, தமிழ் மக்களினதோ இலங்கையில் வாழும் தேசிய இனங்களினதோ சுயநிர்ணய உரிமையை இந்தி…
-
- 0 replies
- 516 views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
இந்தியாவை கையாளல் - யதீந்திரா முள்ளிவாய்க்காலின் 11வது ஆண்டை பல தரப்பினரும் நினைவு கூர்ந்திருக்கின்றனர். இம்முறை ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது. அதாவது, வழமைக்கு மாறாக அதிகமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது கொரோனாவின் விளைவு. வீடுகளில் இருந்தவாறே பலரும் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளக் கூடியதாக இருந்ததால், அதிகமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் ஒரு சில கலந்துரையாடல்களை செவிமடுக்க முடிந்தது. அதில் ஒன்று – தமிழர் உரிமைச் செயலரங்கம் என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையடல். இதில் இளம் தமிழகம் என்னும் அமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், இந்தியாவும் ஈழத் தமிழரின் விடுதலையும் (கள நிலைமை கருதி தலைப்பில் ஒரு சிறிய மாற்றம் செ…
-
- 0 replies
- 515 views
-
-
இந்தியாவை சீண்டும் மஹிந்த அணி முதல் தடவை நிதி மோசடிக் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ, இந்தியாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால், இரண்டாவது தடவையாக சிறைக்குச் சென்றிருக்கிறார். மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில், இடம்பெற்ற நிதி மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாமல் ராஜபக் ஷ முதல் முறையாக கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார். நாமல் மீது வீண்பழி சுமத்தப்பட்டதாகக் கூறி, அந்தக் கைது நடவடிக்கையை அர சியல் பழிவாங்க…
-
- 0 replies
- 821 views
-
-
இந்தியாவை திருப்திப்படுத்தாதுவிட்டால்? - யதீந்திரா தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள், குறிப்பாக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (Economic and Technical Cooperation) தொடர்பில், மகிந்த ஆதரவு எதிரணியினர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, இந்தியா தொடர்பான விவாதங்கள் மீண்டும் மேலெழுந்திருக்கின்றன. இவ்வாறான எதிரணி பிரச்சாரங்களுக்கு ரணில் கடுந்தொனியில் பதிலளித்திருக்கின்றார். அதாவது, யார் எதிர்த்தாலும் இந்தியாவுடனும் சீனாவுடனும் உடன்பாடுகளில் கைச்சாத்திட்டே ஆகுவோம் என்றும் ரணில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்ற…
-
- 2 replies
- 796 views
-
-
இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவிருக்கும் கூட்டுக்கோரிக்கை எது? நிலாந்தன். தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் நோக்கத்தோடு டெலோ இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் கடந்த செவ்வாய்க்கிழமையோடு புதிய திருப்பத்தை அடைந்திருப்பதாக தெரிகிறது. டெலோ இயக்கம் அந்த நகர்வை முன்னெடுத்த பொழுது 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது என்பதே பிரதான கோரிக்கையாக காணப்பட்டது. அக்கோரிக்கையை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் தமிழரசுக்கட்சி ஈடுபட மறுத்தமைக்கு அது மட்டும்தான் காரணமல்ல. அதைவிட ஆழமான காரணங்கள் உண்டு. சிறிய பங்காளிக் கட்சியான டெலோ அவ்வாறான ஒருங்கிணைப்ப…
-
- 0 replies
- 318 views
-
-
இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கை - யதீந்திரா ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கடிதம் இந்திய தூதுவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருக்கின்றது. யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களில் இந்தியாவை நோக்கி முதல் முதலாக தமிழ்தேசிய கட்சிகள் கூட்டுக் கோரிக்கையொன்றை முன்வைத்திருக்கின்றனர். கடந்த பன்னிரெண்டு வருடகால தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் அனைத்துமே மேற்கு நோக்கியதாக மட்டுமே இருந்தது. அதாவது, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்களே ஒரேயொரு பிரதான விடயமாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இ;வாற…
-
- 0 replies
- 366 views
-