அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தானாக முன்வந்து, 2022 நவம்பரில் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, “இலங்கை தனது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் 2023 பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்பதாக, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று கூறியதுடன், தமிழர் தரப்பை அதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருந்தார். இதைத் …
-
- 0 replies
- 898 views
-
-
தமிழர் கட்சிகளின் நிறம் September 19, 2023 —- கருணாகரன் — ஈழத் தமிழர்களின் அரசியல் இன்று பிரதானமாக மூன்று வகைப்பட்டதாக உள்ளது. ஒன்று, “தமிழ்த் தேசிய அரசியல்” என்ற பிரகடனத்தின் கீழ் அரச எதிர்ப்பு மற்றும் தமிழின விடுதலையை மையப்படுத்திப் பேசுவதாகும். இதற்குத்தான் தமிழ்ப் பெருந்திரளினர் ஆதரவளிக்கின்றனர். இதனால் இந்தத் தரப்பே பாராளுமன்றத்திலும் மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்கள் போன்றவற்றிலும் முன்னிலையில் உள்ளது. 1980 – 2009 வரையில் இது ஆயுதப் போராட்ட அரசியலாக – செயற்பாட்டு அரசியலாக இருந்தது. 2009 க்குப் பின்னர், செயற்பாட்டுப் பாரம்பரியம் இல்லாதொழிந்து, பேச்சு அரசியலாக – அறிக்கை அரசியலாகச் சுருங்கி விட்டது. அதனால்தான் இதை “தமிழின விடுதலையை மையப…
-
- 0 replies
- 898 views
-
-
தலையங்கத்தை பார்த்து பதில் மயங்க வேண்டாம். இது நோர்வேயில் எனக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த வேதனைகள். முடிந்தால் இதனை அடிப்படையாக வைத்து எதாவது அலசுங்கள். 1.நோர்வேயின் புலிகளின் குரல் "தமிழ்முரசம்" எதற்காக சிவப்பு கட்சிக்கு வாக்கு போடுவதுதான் தமிழருக்கு நன்மை என்று பட்டும் படாமல் பிரசாரம் செய்ய முயன்றது??? தொழிற்கட்சியில் புலிகளின் இன்னொரு ஆதரவாளர் போட்டியிடும் போது? 2்். சாதி ரீதியில் இங்கு ஆதரவாளர் பிரிந்துள்ளதாக வந்த தகவல் உண்மையா? 3.கேபி நெடியவன் என நாங்கள் இரு குழுக்களாக இருக்கிறோமா? 4். இதில் எது ஒட்டுக்குகுழு? 5்்். நான் மாதாந்தம் அனுப்பும் பணம் எங்கே போகிறது??????? நேர்மை இல்லாமல் எதை செய்தாலும் அது தற்காலிகம்தான்.
-
- 2 replies
- 898 views
-
-
2017- இலங்கை நிலவரம் -கவனத்துகான சில புள்ளிகள் December 18, 2017 இலங்கைக்குள் வாழும் ஒடுக்கப்படும் மக்கள் – மற்றும் தமிழ் பேசும் மக்கள் சமீப கால கட்டத்தில் பல கடும் அதிர்சிகளைச் சந்தித்துள்ளார்கள். 2009ல் படுகொலையுடன் முடிந்த யுத்தம் ஒரு பெரும் அதிர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்னிகழ்வு தெற்கில் இனவாத சக்திகளுக்கு குறிப்பிடத்தக்க பலத்தை வழங்கும் நிகழ்வாக மாறியதற்கு அபோதைய மகிந்த அரசு வழங்கிய அதிகார பூர்வ அங்கீகாரம் முக்கிய காரணம். மகிந்த அதிகாரத்தின் நிழலில் மேலதிக பலமடைந்த சிங்கள பௌத்த இனவாதாம் இலங்கை வரலாறு காணாத அளவு பலத்துடன் இயங்கி வருகிறத…
-
- 2 replies
- 898 views
-
-
மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - I ) சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் முன்னநாள் இயக்குநரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவருமான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் சூரியநாராயன் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை, அதுகுறித்த இந்தியாவின் கரிசனை, பூகோளச் சூழல் நிலைகள், தெற்காசிய பிராந்தியத்தில் சமகால நிகழ்வுகள், சிறுபான்மை பிரதிநிதிகள் மற்றும் தேசின இனங்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விடங்கள் குறித்து விசேட செவ்வியொன்றை வழங்கினார். அச்செவ்வியின்…
-
- 1 reply
- 898 views
-
-
-
- 0 replies
- 898 views
-
-
பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நடாத்தி வரும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீண்டும் தீவிர கவனிப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு விவகாரம் என்பன, அவ்வப்போது சில சம்பவங்கள், போராட்டங்களால் உச்ச கவனிப்புக்குரியதாக மாறுவதும், பின்னர் அது தணிக்கப்படுவதும் அல்லது தணிந்து போவதும் வழக்கமாகியுள்ளன. அந்தவகையில், இப்போது மூன்று வாரங்களாக, தமிழ் அரசியல் கைதிகள் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தினால…
-
- 1 reply
- 897 views
-
-
ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள் தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. ‘ஈழத்துக் கலைஞர்கள்’ என்கிற பெயரினால் நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளவும், அதனைச் சூழவுள்ள பகுதியும் நூற்றுக்கணக்கான போராட்டங்களைக் கண்டவை. ஆலய வளவுக்குள் போராட்டங்கள் நடத்த அனுமதியில்லை என்று ஆலய நிர்வாகம் அறிவித்த பின்னரும், ஒரு சில போராட்டங்கள் அங…
-
- 2 replies
- 897 views
-
-
கிழக்கின் அடுத்த முதலமைச்சர் யாரோ? Editorial / 2018 ஒக்டோபர் 09 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:54 - அதிரன் கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார், போட்டியிடும் கட்சிகள் யாரை முதலமைச்சராக நியமிக்கும் அல்லது அறிவிக்கும் என்ற கேள்விகளுக்குப் பதில் காண்பதற்குரிய காலமாக, இதனைக் கொள்ள வேண்டும்; அதற்குத் துணிந்துமாக வேண்டும். 1987ஆம் ஆண்டு ஜூலை 29அம் திகதி கையெழுத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் படி, அதே ஆண்டின் நவம்பர் 14இல் இலங்கை நாடாளுமன்றம், அரசமைப்பில் 13ஆவது திருத்தம், மாகாண சபைச் சட்டம் ஆகியவற்றை அறிவித்திருந்தது. அதன்படி 1988ஆம் ஆண்டு பெப்ரவரியில், 9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த மாகாண சபைகளில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பட…
-
- 3 replies
- 897 views
-
-
இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது. தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது. இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இ…
-
- 0 replies
- 896 views
-
-
முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள் கே. சஞ்சயன் / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 09:40 Comments - 0 இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாகக் கூறியிருக்கிறது. அவ்வாறு இணங்கினால், அடுத்தவாரம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. இணங்காவிடின், வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும். ஐ…
-
- 0 replies
- 896 views
-
-
நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன் நிலாந்தன் “யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த நீதிமன்ற அமர்வின் போது கொழு…
-
- 0 replies
- 896 views
-
-
[size="4"]உன்னதங்களுக்காகப் போராடுவோம்[/size] ஈழத்தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டபின்னடைவு காரணமாகத் தோன்றியுள்ள மனச்சோர்வுகள்,குழப்பங்கள்,விரக்திகள் என்பவற்றிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு,மீண்டும் புத்துணர்ச்சியுடனும்,புதுவேகத்துடனும் எழுந்து முன் செல்லவேண்டியது நம் கடமையாகும்.நம் தாயகத்தில் அரக்கத்தனமான அடக்- குமுறை நிலவுவதால், புலம்பெயர்தமிழர்கள் கைகளிலேயே விடுதலைப்போராட்- டத்திற்கான முழுப்பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்- துகொள்ளவேண்டும்.நாம் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளிலுள்ள மக்களாட்சிவழி- முறைகள் நமக்கு அதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. நாம் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, அமை…
-
- 0 replies
- 896 views
-
-
அரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும் நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை தண்டிக்க முற்படும் வெளிச்சக்திகளை வெற்றிகரமாக தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படு;கிறது. அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின் ஊடகங்களுக்கும் படைத்துறை பிரதானிகளுக்கும் தெரிவித்துவரும் கருத்துக்களும் அத்தகையவைதான். இதுபோலவே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவிலும் ஏனைய வெளிநாட்டுத் தலைநகரங்களிலும் தெரிவித்துவரும் கருத்துக்களும் ஏறக்குறைய அத்தகையவைதான். இவை அனைத்தையும் செறிவாக கூராகச் சொன்…
-
- 0 replies
- 896 views
-
-
இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள். June 11, 2021 சேனன் ஈழம் - இலங்கை, காணொளி, சேனன், தெரிவுகள் 132 . Views . 1 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் ரோகான் குணரத்ன இங்கிலாந்து நீதிமன்றத்துக்கு வழங்கிய சாட்சியின்போது இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இலங்கை அரசியலை அறிந்தவர்களுக்கு ரோகான் குணரத்ன நன்கு தெரிந்த பெயரே. பயங்கரவாதம் சார் நிபுணர் என்ற பெயரில் பயணி வருபவர். இலங்கைப் புலனாய்வுத் துறையுடன் ‘நெருங்கிய தொடர்பு’ உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இல…
-
- 5 replies
- 895 views
-
-
ஐ.நா தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன் March 3, 2019 நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்பு கூறல்தான். பாதிக்கப்பட்ட தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்திய தரப்பு பொறுப்புக் கூறுவதுதான். இரண்டு தரப்புக்களுக்கும் இடையே நீதியை நிலை நாட்ட விழையும் எல்லாத் தரப்புக்களும் பொறுப்பு கூறுவதுதான். இவ்வாறு நிலைமாறுகால நீதியை இலங்கைத்தீவில் ஸ்தாபிக்கும் நோக்கத்தோடு 2015செப்டெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதன் படி நிலை மாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கென்று ஏறக்குறைய 25 பொறுப்புக்களை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இப் பொறுப்புக்களை …
-
- 0 replies
- 895 views
-
-
பிரெக்ஸிட்; மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 செப்டெம்பர் 05 வியாழக்கிழமை, மு.ப. 08:53Comments - 0 வரலாற்றில், தனி மனிதர்களின் பாத்திரம் முக்கியமானது. பல வரலாற்று நிகழ்வுகளைத் தனி மனிதர்களின் செயல்களே தீர்மானித்து இருக்கின்றன. இது, பண்டைய காலம் முதல் தற்காலம் வரை அனைத்துக்கும் பொதுவானது. வரலாறெங்கும் தனிமனிதர்கள், தேசங்களின் தலைவிதியைத் தீர்மானித்து இருக்கிறார்கள். அவ்வாறு, ஒரு தேசத்தின் தலைவிதியை, ஒருசிலர் தீர்மானிக்கின்ற நிகழ்வு, இப்போது நடந்தேறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளிவருவதைக் குறிக்கும் ‘பிரெக்ஸிட்’, இப்போது பேசுபொருளாகி உள்ளது. இது, பிரித்தானிய நாடாளுமன்ற ஜனநாயகத்தையே ஆட…
-
- 0 replies
- 894 views
-
-
காசுமீர் : புதைக்கப்பட்ட உண்மைகள் ""துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிணங்களே இங்கு வருகின்றன. பெரும்பாலும் அடையாளம் தெரியாதவாறு சிதைந்து போயிருக்கும் அவற்றைப் போலீசு அதிகாரிகளின் ஆணைக்கேற்ப நாங்கள் புதைத்து விடுவோம்'' என்கிறார் இக்கல்லறையை நிர்வகிக்கும் குழுவின் தலைவரான முகமது அக்பர் ஷேக். இக்குழு புதைக்கப்படும் பிணங்களைப் புகைப்படமெடுத்து ஆவணமாக்குவதற்கு முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி இராணுவத்தால் தடை செய்யப்பட்டது. இறந்து போனவர்களைப் பற்றிய விவரங்கள் குப்வாராவில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கின்றன என்று தடைக்கான காரணம் கூறப்பட்டது. ""யாரேனும் காணாமல் போன தனது உறவினரை தேடிக் கொண்டு குப்வாரா காவல் நிலையத்திற்குச் சென்றால், அவர்கள் புகைப்படங்…
-
- 0 replies
- 894 views
-
-
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் 8 ஆகஸ்ட் 2020 அ. நிக்ஸன், மூத்த ஊடகவியலாளர் பிபிசி தமிழுக்காக Getty Images மஹிந்த ராஜபக்ஷ - கோட்டாபய ராஜபக்ஷ (இந்தக் கட்டுரையில் இருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்து. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்) மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் நினைத்ததைச் சாதிக்கவில்லை. பதவிக்கு வந்த மூ…
-
- 1 reply
- 894 views
-
-
ஆரவாரமின்றி நாட்டுக்குள் நுழைந்துள்ள உலக பயங்கரவாதம், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 253 அப்பாவிகளின் உயிர்களை கொடூரமாகக் குடித்திருக்கின்றது. பயங்கரவாதத்தின் இந்தப் பிரவேசம் குறித்து சர்வதேச உளவுத் தகவல்களின் மூலம் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அதனை நாட்டின் பாதுகாப்புத்துறை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய உளவுத் தகவல்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் உளவுத் தகவல்களும் கூடிய கால இடைவெளியில் பயங்கரவாதிகளின் உருவாக்கம் குறித்தும், அவர்களின் நோக்கங்கள் குறித்தும் தகவல்களை வழங்கியதுடன் எதிர்கால நிலைமைகள் குறித்த எச்சரிக்கையையும் விடு…
-
- 2 replies
- 894 views
-
-
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்?- நிலாந்தன். adminOctober 13, 2024 கடந்த 15 ஆண்டுகளில் எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து, திரண்டு வாக்களித்தார்கள். அங்கே ஒரு திரட்சி இருந்தது. அதேசமயம் ஏனைய தேர்தல்களில் குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களைத் திரட்ட முடியவில்லை. தமிழ் மக்கள் சிதறி வாக்களித்தார்கள். இம்முறை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவானது அந்தச் சிதறலை மேலும் அதிகப்படுத்துமா? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுது “தேசமாகத் திரள்வோம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளாகச் சி…
-
-
- 10 replies
- 893 views
- 1 follower
-
-
Published by T. Saranya on 2019-09-21 15:30:41 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எவ்வித முடிவை எடுக்க வேண்டுமென்று வட, கிழக்கு தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ அந்த எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் பாணியில் நடந்துகொள்ள இரா.சம்பந்தன் முற்படுகிறார் என்பது அண்மைய சந்திப்புகளில் அவர் தெரிவித்த கருத்துக்களிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. கடந்த காலத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம் அல்லது பொதுத் தேர்தலாக இருக்கலாம், மாற்று தேர்தல்களாக இருக்கலாம், தீர்க்க தரிசனமாக, நடந்து கொள்ளாமையின் காரணமாகவே பல இழப்புகளையும் தோல்விகளை…
-
- 0 replies
- 893 views
-
-
-
வடக்கின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி. விக்கினேஸ்வரன் தமிழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டுள்ளார். தமிழர்கள் மாநாட்டில் பங்குபெறுதல், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பேசுதல், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தல், இனப்படுகொலைக்கு நீதியைப் பெறும் போராட்டத்தில் ஆதரவை திரட்டுதல் என பல்வேறு நோக்கங்களுக்காக முன்னாள் முதல்வர் இவ் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அல்லாமல், ஈழத் தமிழ் மக்களின் மேம்பாடு கருதிய பயணமே இதுவாகும். தமிழகம் என்றும் ஈழத்துடன் நெருங்கிய பந்தத்தை கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் இந்திய ஆதரவு சக்திகளையும் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள …
-
- 1 reply
- 892 views
-
-
நிருபாமா ராவே இலங்கைப் போர் இந்தியாவின் கை மீறி நடந்ததா? கைங்கரியமா? விகடன் குழும சஞ்சிகைகளை இந்திய உளவுத்துறையான் ரோ தமிழ் மக்கள் மத்தியில் பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு தந்திரமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் நியாயமானதே. பல தடவைகளில் விகடன் கபடத்தனமான கட்டுரைகளில் தமிழர்களுக்கு ஆதரவாகவும் கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களில் தமிழர்களின் போராட்டத்தை படு மோசமாகக் கொச்சைப் படுத்தியும் எழுதி இருந்தது. இலங்கை அரசின் கைக்கூலியாக விகடனைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் செயற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதும் உண்டு. 18/10/2012இலன்று வெளிவந்த ஆனந்த விகடன் இதழில் வெளியான இந்தியவின் வாஷிங்டனுக்கான தூதுவர் நிருபாம ராவின் பேட்டி வெளிவந்திருக்கிறது. இவர் முன்பு இந்தியாவின் கொழும்பிற்கான தூத…
-
- 0 replies
- 892 views
-