அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
புலிகள் செய்ததென்ன கூட்டமைப்பு செய்ததென்ன?
-
- 2 replies
- 830 views
-
-
இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் ஜுலை நினைவுகள்! 83 ஜுலை இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை என்றோ கூற முடியாது. அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஓர் இன அழிப்பு. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று நினைத்தும் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கிருந்த பொருளாதாரப் பலத்தை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டும் மேற்கொள்ளப்பட்ட ஓர் இன அழிப்பு. அதில் அப்போதிருந்த அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. வன்முறைகளிற்கு முன் பின்னாக அப்போதைய அரசுத்தலைவர் ஜெயவர்த்தன தெரிவித்த கருத்துக்கள் தாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாதுகாப்புத் தருபவைகளாக இருக்கவில்லை. அதற்கு …
-
- 4 replies
- 830 views
-
-
அது இப்பொழுதுதான் நடந்தது போல இருக்கின்றது. 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனையின் பொழுது திரு.பரராஜசிங்கம் அவர்கள் படுகொலைசெய்யப்பட்டபொழுது மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்தில் நானும் இருந்தேன். திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களிடம் பலிப்பீடத்தில் தேவநற்கருனையைப் பெற்றுக்கொண்டு திரும்பிய பொழுதுதான் அவர் மீதான துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே அவர் சுருண்டு வீழ்ந்தார். ஒன்பது துப்பாக்கி வேட்டுக்கள் அவர் மீது பாய்ந்திருந்தன. அவரது துணைவியாரான திருமதி சுகுணம் ஜோசப் அவர்கள் மீது நான்கு துப்பாக்கி வேட்டுக்கள் பாய்ந்திருந்தன. இரத்த வெள்ளத்தில் க…
-
- 0 replies
- 830 views
-
-
இலங்கை அரச படைகளுக்கும் அமெரிக்கப் படைத்துறைக்கும் இடையே நிறுவனம் சார்ந்த இறுக்கமான, தொழில் முறை உறவுகள் உள்ளன. இவற்றின் பல அம்சங்கள் வெளியே தெரிந்தவை பல அம்சங்கள் இரகசியமானவை. இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1951ம் ஆண்டு அமெரிகக்காவின் 'குரல' (Voice of America) வானொலி நிகழ்ச்சிகளைத் தென்னாசியப் பகுதிகளுக்கு ஒலிபரப்பும் அஞ்சல் நிலையமொன்றை இலங்கையில் அமைபப்தற்கு உடன்பாடு ஏற்பட்டது. பிற்பாடு 1983ல் ஜே.ஆர். ஜயவர்த்தன அதிபராக இருந்தபோது 500 ஏக்கர் நிலத்தை இந்த வானொலி நிலையத்தை விரிவுபடுத்துவ தற்காக வழங்கினார். தென்னாசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க நிலையமாக இது அமைநத்து. அக்காலகடட்டத்தில் நுண் அதிர்வு அலைவரிசைகளை (Low Fre…
-
- 0 replies
- 830 views
-
-
காய் நகர்த்தும் ரணில் - சஜித்: வேட்பாளராகப் போவது யார்..? ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடு பிடித்துக்கொண்டிருக்கின்ற நிலை யில் கட்சிகளின் வேட்பாளர்களும் ஒவ்வொருவராக வெளிவந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் வேட்பாளர்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றனர். தற்போது அரசியல் களப்போக்கை பார்க்கும்போது இருமுனைப்போட்டி மும்முனைப்போட்டி அல்லது நான்கு முனைப்போட்டியாகக் கூட தேர்தல் வந்துவிடுமோ என்று தோன்றும் அளவிற்கு அரசியல் காய் நகர்த்தல்கள் மற்றும் களநிலைமைகள் முன்னேற்றமடைந்து வருகின்றன. தற்போதுவரை இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரம…
-
- 0 replies
- 830 views
-
-
கோட்டபாயவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் - யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அழுத்தம் திருத்தமாக பேசிவருகின்றார். அதாவது, பெரும்பாண்மை (சிங்கள) மக்களின் ஆதரவின்றி அப்படியான ஒன்றை செய்ய முடியாது. இதன் காரணமாகவே கடந்த 70 வருடங்களாக அதனைச் செய்ய முடியவில்லை. அரசியல் தீர்வு என்று கூறி மக்களை அரசியல்வாதிகள் தொடர்ந்தும் ஏமாற்றியிருக்கின்றனர். தானும் அவ்வாறு கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. இதற்கு முன்னர் இலங்கைத் தீவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரமே, இந்தளவு வெளிப்படையாக அதிகாரப் பகிர்வை நிராகரிக்கவில்லை. அதில் தாங்கள் கரிசனை கொண்டிருக்கின்றோம் – அதனை பரிசீலிப்போம் என்றவாறே பேசி வந்திருக்கின்றனர் ஆனால் அவ்வாற…
-
- 0 replies
- 830 views
-
-
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன? ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடொராவின் இலங்கைக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம், இந்தியாவும் சீனாவும் தமது கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்து சமுத்திரத்தில் ஜப்பானும் ஆழக்கால்பதிக்கி;ன்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஒனொடொராவின் விஜயம் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு முதல்தடவையாக மேற்கொண்ட விஜயமாகும். இந்த விஜயத்தின்போது சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய இடங்களில் ஒன்றான அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் அமைச்சர் சென்றிருந்தார். இந்த வருடம் அம்பாந்தோட்டைக்கு ஜப்பானின் இரு வ…
-
- 3 replies
- 830 views
-
-
ஜெனீவா வருடாந்த திருவிழா உங்க, ஜெனீவால வருசா, வருசம் ஒரு கொடி ஏத்தி, திருவிழா நடக்கிறதெல்லே... உந்த முறை, இந்தியன் மேளம் அடிக்க மாட்டினம் எண்டு, காசோடை, டெல்லிக்கு ஆள் போயிருக்கு. இவங்களை தப்ப விட்டால், ஒரு வருசத்திக்கிடையில, சீனாவோட சன்னதம் கொண்டாடுவாங்கள் எண்டு டெல்லி வாலாக்கள் நினைத்தாலும், போனவர், கொடுக்கிற இடத்திலை, கொடுக்க வேண்டியதை கொடுத்தால் நடக்க வேண்டியது, நடக்கும் என்று, சிரிச்சுக் கொண்டு அலுவல் பார்க்கிறாராம். நம்மடை பொறுக்கி, சுப்புரமணிய சுவாமி தான், முதலிலை ஆவெண்டவர் போலை கிடக்குது. ராஜபக்சேக்களை நம்பலாம். ஆக்கள் தங்கப்பவுன் எண்டு கொண்டு நிக்குதாம் மனிசன். ஜெனீவாவிலை, எல்லா உதவிகளையும் செய்யோணும். மகிந்தா எண்ட மச்சான் எண்டு நிக்கிறாராம். அவைய…
-
- 1 reply
- 829 views
-
-
புதிய ஜனாதிபதியால் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியுமா? கடந்த சில மாதங்களில் இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை மையப்படுத்தி உச்சத்தை அடைந்தது, அவரது இராஜினாமாவின் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்றார். எனினும் பாராளுமன்றத்தை கூட்டி புதிய ஜனாதிபதியை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி சார்பில் டலஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக…
-
- 0 replies
- 829 views
-
-
கண்கட்டி விளையாட்டு உத்தேச அரசமைப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டம் மற்றும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் போன்ற பேச்சுகளால்தான் அரசியல் அரங்கு நிறைந்து போயுள்ளது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர், இவை தொடர்பில் எதுவிதப் புரிதல்களும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். படித்த மட்டத்தவர்களிடம் கூட, இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையான தெளிவுகளைக் காண முடியாதுள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பில், அடிக்கடி வெவ்வேறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் எதை நம்புவது, எதை நிராகரிப்பது என்பதைப் பகுத்தறிவதற்கே, அநேகமானோருக்கு நேரம் போதாமலுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் ச…
-
- 0 replies
- 829 views
-
-
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் - யதீந்திரா Apr 26, 20190 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்கும் போது, கூட்டமைப்பிற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா என்னும் கேள்வி எழுகிறது. டக்களஸ் தேவானந்தா 1990இல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை நிறுவினார். 1994இல் முதல் முதலாக ஒரு சுயோற்சைக் குழுவாக போட்டியிட்டு, ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டக்களஸ் தனது பாராளுமன்ற அரசியல் வாழ்வில் நுழைந்தார். ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதுதான் டக்களசின் நிலைப்பாடு. இன்றுவரை டக்களசின் நிலைப்பாட்டி…
-
- 1 reply
- 829 views
-
-
ராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன் (இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி) “ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்டார்” இப்படி சமீபத்தில் நேர்காணல் கொடுத்திருப்பவர் ரோஹன விஜித முனி. யார் இந்த விஜிதமுனி. 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்த போது இராணுவ அணிவகுப்பில் வைத்து தாக்கிய கடற்படையினன் தான் இந்த விஜிதமுனி. இன்று வரை இலங்கையில் பெரிய ஹீரோவாக சிங்கள மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படும் பிரமுகர். அதுமட்டுமன்றி இன்றுவரை ராஜீவ் காந்தியைத் தாக்கியதை பெருமையாக ஊடகங்களிடமும், கூட்டங்களிலும் பகிரங்கமாக பேச…
-
- 0 replies
- 829 views
-
-
"பரம்பரை நோயால் அவதிப்படும் இவருக்கு வாழ்நாள் முழுவதும் 60000 ரீச்மார்க்கள் செலவாகிறது.மக்களே இது உங்கள் பணம்."நாசிகளின் பிரச்சார போஸ்டர் 1938 உலகில் பெரும்பாலான மக்கள் ஹிட்லர் யூதர்களை மட்டும்தான் படுகொலை செய்ததாக நினைக்கின்றனர்.ஆனால் ஹிட்லரின் நாசிப்படைகள் தங்களின் கொலைவெறியை யூதர்களை கொல்வதன் மூலம் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை.அவர்களின் கொலைவெறியை தனித்துக்கொள்ள அவர்களினால் கொல்லப்பட்ட இன்னொரு மனிதக் கூட்டம் தான் உடல் ஊனமுற்றோர்கள் மற்றும் பரம்பரை நோயால் அவதிப்படுபவர்கள். நாசிகளின் இந்த கொடுமையான நிகழ்ச்சித் திட்டம் T4 என்ற குறியீட்டுப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.ஹிட்லரின் நாசி கட்சியால் திட்டமிடப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படை குறிக்கோள் " இனத்தை சுத்தப்படு…
-
- 0 replies
- 829 views
-
-
-
-
விபரீதங்களோடு விளையாடும் விந்தை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபத்தான விளையாட்டைப் பெரும்பாலான நாடுகள் விளையாடுகின்றன. அந்த நாடுகள், தமது சொந்த மக்களின் உயிரைப் பணயம் வைத்து, இந்த வித்தையை ஆடுகின்றன. இங்கே எழுகின்ற கேள்வி யாதெனில், இவ்வாறானதோர் ஆபத்துப் பற்றி, அறிவியலாளர்கள் தொடர்ச்சியாகச் சொல்லி…
-
- 0 replies
- 828 views
-
-
கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் – மட்டு.நகரான் 92 Views தமிழர்களின் ஜனநாயக ரீதியான போராட்டம் இன்று சர்வதேச ரீதியான அங்கீகாரத்தினைப் பெற்றுவருகின்றது. ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது தமிழ் மக்களுக்கு சாதகம், பாதகம் என்பதைவிட சர்வதேச ரீதியில் தமிழர்களின் ஜனநாயக ரீதியான கோரிக்கைகளுக்கு வலுவான ஆதரவுத் தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வடகிழக்கு இணைந்த தாயகத்தின் கோட்பாட்டை தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து பலமான முறையில் வெளிப்படுத்தி வந்ததன் விளைவே, இன்று சர்வதேசம் தமிழ் மக்களுக்கான சமிக்ஞையை காட்டியுள்ளது. ஆனால் வடகிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் ஒற்றும…
-
- 5 replies
- 828 views
-
-
கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் தமிழீழ விடுதலைப் புலிகள், தனிநாடு கோரிப் போராடவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (கஜன்கள் அணி) செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசிய விடயம், கடந்த வாரம் சர்ச்சையானது. அதுபோல, அதேவாரத்தில் வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பில், பாராளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவரத் தீர்மானித்திருந்த முன்னணி, இந்திய தூதரக அதிகாரியின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அந்த ஒத்திவைப்புப் பிரேரணையைக் கைவிட்டது. இது, வடக்கு மீனவர் அமைப்புகளால் நம்பிக்கைத் துரோகமாக விமர்சிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நெருக்கடியான காலப்பகுதியில், (குறிப்பாக, 2010 பொத…
-
- 4 replies
- 828 views
-
-
வெடுக்குநாறி மலையை இனி விடமாட்டார்கள்!
-
- 2 replies
- 828 views
- 1 follower
-
-
போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா? அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கு என்ன? அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா? தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது ஈடுபட்டுள்ளாரா? ஆனால், ஏதோ துட்டகைமுனு, எல்லாளனை நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் சண்டையிட்டு, வெற்றி கண்டதைப் போல், தானும், பிரபாகரனை நேரில் சந்தித்து, சண்டையிட்டு வெற்றி கண்டதாக, போர் வெற்றியின் முழுப் பெருமையையும் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ம…
-
- 1 reply
- 828 views
-
-
நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 16 தமிழ் நாடாளுமன்ற அரசியல் பெரும்பாலும் ஏதோவோர் அந்தத்திலேயே இயங்கி வந்திருக்கிறது. ‘ஏக பிரதிநிதித்துவம்’, ‘கூட்டான மக்கள்தெரிவு’, ‘வலுவான பேரம்பேசல் சக்தி’ என்று காலகாலத்துக்குப் பெயர்களும் கோரிக்கைகளும் மாறினாலும் கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும் மாற்றுக் குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தன. அவை இணக்க அரசியலை ஒருபுறமும் எதிர்ப்பு அரசியலை மறுபுறமும் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை நாடாளு மன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவ்வாறல்ல. தமிழ் மக்கள் எக்குரலுக்கும் வஞ்…
-
- 0 replies
- 828 views
-
-
இறந்தவர்களை நினைவுகூர்தல் நிலாந்தன் சில ஆண்டுகளுக்கு முன் ஜே.வி.பி.யின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஒருவரோடு உரையாடும்போது அவர் சொன்னார், 'ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி நசுக்கப்பட்டபின் அதில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்வது என்பது உடனடுத்து வந்த ஆண்டுகளில் மிகவும் ஆபத்தாக இருந்தது. ஆனால் சந்திரிக்காவின் வருகைக்குப் பின் நிலமை மாறத் தொடங்கியது. 90 களின் முன்கூறில் ஓரளவுக்கு இரகசியமாக இறந்தவர்களை நினைவுகூரக் கூடியதாக இருந்தது. அப்பொழுது அது மிகவும் புனிதமானதாகவும் ஒரு வழிபாடாகவும் இருந்தது. அந்த வழிபாட்டிற்கு ஓர் ஆத்மா இருந்தது. பின் வந்த ஆண்டுகளில் நிலமைகள் மேலும் இறுக்கம் குறைந்தன. இதனால் இறந்தவர்களை நினைவு கூர்வது ஆபத்தற்ற ஓர் அரசியல் நிகழ்வாக மாறியது. அந்நாட்கள…
-
- 1 reply
- 827 views
-
-
யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளா…
-
- 0 replies
- 827 views
-
-
புலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா? - யதீந்திரா தமிழ்த் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற்தொடர்களை அடிக்கடி அரசியல் பத்திகளில் கண்டிருப்பீர்கள். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது, இந்தச் சொல்லை தொடர்ந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தகுதி நமக்கு இருக்கிறதா என்னும் கேள்வியே எழுகிறது. இது ஒரு சுய விமர்சனம் சார்ந்த கேள்விதான். அதேவேளை இப்பத்தி ஒரு விடயத்தையும் அழுத்தி உரைக்க முயல்கிறது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியெல்லாம…
-
- 0 replies
- 827 views
-
-
பழசைக் கிளறிக் கிளறி புதிதாக்குதல் காரை துர்க்கா / 2020 மார்ச் 03 உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த 1983ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலங்களில், புலம்பெயர்ந்து கனடா நோக்கிச் செல்லும் தமிழ் மக்களது எண்ணிக்கை, சடுதியாக அதிகரித்தது. இவ்வாறு, வேறு பல நாடுகளிலிருந்தும் கனடா நோக்கி, இடம்பெயர்ந்து மக்கள் சென்றார்கள். இவ்வாறு செல்லும் குடியேற்றவாசிகளை, அங்கு சிறையில் அடைத்து வைப்பார்கள். பிறநாட்டு அகதிகள் தங்கியிருந்த அறை, அவர்கள் வெளியே செல்லாதவாறு, பூட்டுகள் போட்டுப் பூட்டப்பட்டிருக்கும். ஆனால், இலங்கைத் தமிழ் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குக் கதவே கிடையாது. இந்நிலையில், ஒரு நாள் சிறைச்சாலையைப் பார்வையிட, அந்நாட்டு அரச உயர் அதிகாரி வந்தார். கதவே இல்ல…
-
- 0 replies
- 827 views
-