Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. துரோகத்திற்கு துணைபோகும் வால்பிடி அரசியல்.! வீரத்திற்கும் தியாகத்திற்கும் பெயர் பெற்ற ஒரு மகோன்னதமாக விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடம்தான் கிளிநொச்சி. தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சி மண் அன்றைக்கு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த மண்ணையும் அந்த மண்ணில் நடந்த விடுதலைப் போராட்டத்தையும் கேவலப்படுத்தும் வால்பிடி அரசியல் இன்று அங்கே நடப்பதுதான் பலருக்கும் வேதனை தருகின்ற விடயம். மற்றவர்களை நம்ப வைத்த கழுத்தறுப்பதும் நம்பிக்கைக்கு எதிராக செயற்படும் மாத்திரம் துரோகம் அல்ல. பெரும் துரோகங்கள் நடக்கின்ற சமயத்தில் எதையும் பேசாமல் கள்ளமாக இருப்பதும் துரோகம்தான். உலகமே முகம் சுழிக்கும் ஒரு விடயத்தை முன்னாள் பாராளும…

  2. அமெரிக்கா பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-03#page-6

  3. பொலிஸ்துறையில் களம் இறங்கத் தமிழர்கள் தய(கல)ங்குவது ஏன்? கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி, யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில், பெரிய அளவிலான தொழிற்சந்தை நடைபெற்றது. அதில் சுமார் 44 நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான துறைசார் பணியாளர்களை (மனித வளம்) பெறும் பொருட்டு பங்கு பற்றியிருந்தன. அந்த நிகழ்வில், யாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். “தொழில் வாய்ப்புகளைத் தேடுவோர், தொழிலாளர்களைத் தேடுவோர், அதே போன்று தொழிற் பயிற்சியை வழங்குபவர்கள், இத்துறையிலுள்ள தொண்டு நிறுவனங்கள் என நான்கு (04) தரப்புக்கும் இவ்வாறான தொழில் சந்தைகள் பயனுறுதி மிக்கதாக அமையும்” என மாவட்டச் செயலாளர் தனத…

  4. கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள் 07/30/2018 இனியொரு... வாக்குக் கட்சிகளால் மக்களுக்கான எதையும் சாதித்துவிட முடியாது. அதிலும் இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பிரித்தானிய காலனியாதிக்க வாதிகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் மக்கள் விரோத ஆட்சிகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறது. இந்த ஒட்டு ஜனநாயகத்தின் மத்தியிலிருந்து தோன்றிய விரல்விட்டு எண்ணக்கூடிய சீர்திருத்த வாதிகள் சிலர் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவும், பின் தங்கிய சமூக உற்பத்தியை புதிய நிலைக்கு நகர்த்தவும் தம்மாலான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். வெனிசூலா நாட்டின் சனாதிபதியாக தனது இறுதிக்காலம் வரை பதவிவகித்க ஹுகோ சவேஸ் இன் சீர்திருத்தக் கருத்துக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகள்…

  5. மீண்டும் அரசியலுக்கு வருவாரா மகிந்த ராஜபக்ச? – கேணல் ஹரிகரன் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுமத்தப்படும் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படாவிட்டால், ராஜபக்சவை ஆதரிக்கும் 5.8 மில்லியன் வாக்காளர்களும் அவரை ஒரு அதிகாரத்துவ ஆட்சியாளராக நோக்குவதை விட, ஒரு அரசியல் தியாகியாகவே கருதுவார்கள். இவ்வாறு, ‘சிலோன் ருடே’ நாளிதழில், இந்திய ஆய்வாளரான ‘கேணல் ஆர்.ஹரிகரன்’ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. ஜனவரி 2015ல் இடம்பெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரதமராக வருவதற்கான ஏற்பாடுகளை மேற…

    • 1 reply
    • 397 views
  6. எங்கு பார்த்தாலும் வரிசை, எப்பொருளை எடுத்தாலும் விலையேற்றம், எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என இலங்கை அதளபாதாளத்தில் விழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுக்குள்கொண்டுவருவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தேவை என்பதைத் தெற்கின் அரசியல்வாதிகள் பலரும் கூறிவருகின்றனர். இந்தக் கோரிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் சாதகமாக சிந்திக்க முடியுமா? நாட்டின் அவசரநிலை கருதி ஏதாவதொருவகையில் புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா என்பது குறித்த உரையாடல்கள் ஆங்காங்கே இடம்பெற்றும்வருகின்றன. இந்தப் பத்தியும் அதற்கான பதிலைத் தேட விளைகின்றது. புலம்பெயர்க்கும் பொறி இலங்கை 1948ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்கள் இந்நாட்டை விட்டு வ…

    • 1 reply
    • 446 views
  7. வடக்கு கிழக்கில் மீள் எழுச்சி பெறும் மாற்று அரசியல் கட்சிகள்! தாக்கு பிடிக்குமா தமிழ் தலைமைகள்.. வடக்கில் யாழ்ப்பாணம் தொடக்கம் கிழக்கில் அம்பாறை வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்திலிருந்து அப்பகுதிகளில் மேலோங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இராட்சியம் தற்போது ஆட்டம் காண துவங்கியுள்ளதாக பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல், அதன் முடிவுகள் என்பன அந்த கருத்தினை தமிழ் மக்களுக்கு தெட்டத் தெளிவாக புடம்போட்டு காட்டியிருந்தன எனலாம். கடந்த பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அமர்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்ற…

  8. எழுக தமிழின் போக்கும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரமும் இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்காக மக்களைத் தயார்படுத்தும் பிரசாரப்பணிகள் குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியில் சுமார் 8,000 பேர் கலந்து கொண்டிருப்பார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்ட வடிவமொன்றில் அதிகளவான தமிழ் மக்கள் கூடிய தருணம் அது. அப்படியொரு மக்கள் திரட்சியையும் கோரிக்கைகளின் கோசத்தையும் மீளவும் நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. அதனை, கிழக்கிலுள்ள…

  9. தமிழ்த் தேசிய வாக்குகளைக் குறிவைக்கும் பேரினவாதக் கட்சிகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 17 'நித்திரையா தமிழா, நீ நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு, எழுந்து சேரடா...' என்று ஆரம்பிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலொன்றை, ஜனவரி 12, 2018இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டமொன்றில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒலிபரப்பியது. அந்தப் பாடலின் இறுதி வரிகள், 'தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா, தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா...' என்றவாறாக அமைந்திருக்கும். இங்கு தலைவன் எனும் இடம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் குறிக்கும். அப்போது, இலங்கையின் ஜனாதிபதியாகவும் சுதந்த…

  10. அமெரிக்காவின் மூலோபாய அக்கறை யாரை மையப்படுத்தியது? - யதீந்திரா கடந்த பத்தியில் 2009 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட, இலங்கை: யுத்தத்திற்கு பின்னரான அமெரிக்க மூலோபாயத்தை மீள்சட்டகப்படுத்துதல் (SRI LANKA: RECHARTING U.S. STRATEGY AFTER THE WAR) என்னும் அறிக்கை குறித்து பார்த்திருந்தோம். இப்பத்தியில் அது குறித்து மேலும் சில விடயங்களை பார்ப்போம். அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் சுமார் 27 வருடங்களாக ஈடுபட்டுவரும் ஜோன் கெரி தற்போது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பத்தி அவர் இலங்கை தொடர்பாக எத்தகைய அவதானத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதை விளங்கிக்கொள்ள முயல்கிறது. இலங்கையின் புவியியல் இட அமைவானது ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ச…

  11. கட்டலோனியா சுதந்திர பிரகடனம் சாதிக்குமா? சோதிக்குமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) கட்­ட­லோ­னியா மாநில அர­சாங்கம் 27.10.2017 இல் தனி­நா­டாக சுதந்­தி­ர­மான அர­சாக பிர­க­டனம் செய்­துள்­ளமை உலகம் பூராகவும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும் அச்சு ஊட­கங்­க­ளிலும் தற்­போ­தைய சூழ்­நி­லையில் பிர­தான பேசு­பொ­ரு­ளாக இடம்­பி­டித்­துள்­ளது. இதற்கு முன்­ன­தாக ஐப்­பசி திங்கள் முதலாம் திகதி கட்­ட­லோ­னியா மாநில அர­சாங்கம் அம்­மா­நில மக்­க­ளி­டையே தனி­நாட்­டுக்­கான கோரிக்­கையை முன்­வைத்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நிகழ்­த்தி­யது. அவ்­வாக்­கெ­டுப்பை ஸ்பெயின் மத்­திய அரசு சட்­ட­வி­ரோ­த­மா­னது எனப் பி…

  12. குழம்பும் தென்னிலங்கை – தமிழர் பிரச்சனை என்னாகும்? யதீந்திரா இலங்கை அரசாங்கம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நாளுக்குநாள் தென்னிலங்கை அரசியலில் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாரம் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவுள்ளதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்து. ஆனால் பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் என்றுமில்லாதவாறு நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதமிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக செய்திகள் வெளியாயிருக்கின்றன. பா…

  13. தமிழ்க் கவிதைகளின் நவீன கால வரலாறு சுப்ரமணிய பாரதியில் இருந்து தொடங்குகிறது என்பது பரவலான பார்வை. அவரது முறுக்கு மீசையையும், மிடுக்கான கோட்டையும் போலவே உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே என்ற அவரது வரிகளும், அவரது அடையாளத்தோடு கலந்தவை. ஆனால், எல்லா வரலாற்று மனிதர்களின் வாழ்விலும் அவர்களது எழுச்சியான பக்கங்களைப் போலவே, சங்கடமான பக்கங்களும் இருக்கும். தமது எழுச்சிமிகு விடுதலைப் போராட்டப் பாடல்களால் பெரிதும் அறியப்பட்ட சுப்ரமணிய பாரதியின் வரலாற்றிலும், அப்படி ஒரு பக்கம் உண்டு. பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணத்தில் இருந்து புதுவைக்கு சென்ற பாரதியார் 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகாலம் புதுவையில்…

  14. இலங்கைக்கு எதிரான அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானம்- ஒரு பார்வை இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்க…

    • 1 reply
    • 813 views
  15. தொடரும் துரோக வரலாறு செப்டம்பர் 2019 - இரா.முரளி · கட்டுரை ஆகஸ்ட் 4ஆம் தேதி நள்ளிரவு. காஷ்மீர் உறைந்து போனது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர்அப்துல்லா, மஹபூப் முப்தி உட்பட பல அரசியல் தலைவர்கள் வீடுகளில் சிறைப்படுத்தப்பட்டார்கள். நாடு முழுவதும் சிறைச்சாலை ஆனது. 70 லட்சம் காஷ்மீரிகள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை. ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த ராணுவத்துடன் புதிதாக 35000த்துகும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அமர்நாத் யாத்திரை சென்றவர்களும், பிற சுற்றுலா பயணிகளும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்ற பொய்க் காரணம் காட்டி அச்சுறுத்தப்பட்டு, ஏர் இந்தியா விமானத்தில் 50 சதவிகிதம் சலுகை கட்டணத்தில் காஷ்மீரை விட்டு அவசர அவசரம…

    • 1 reply
    • 1.2k views
  16. கிழக்கே ஓர் அஸ்தமனம்.. 1961இல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அங்கே தமது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்குத் தமிழர் ஒவ்வொருமுறையுமே படாதபாடுபட வேண்டியிருக்கிறது. அறுபது வருடங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டபோது அங்கு ஏறக்குறைய ஒரு இலட்சம் முஸ்லிம் மக்களும் அறுபதினாயிரம் சிங்கள மக்களும் ஐம்பதினாயிரம் தமிழ் மக்களும் இருந்தனரெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இறுதியாக 2012இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை புள்ளிவிவரப்படி இங்கே முஸ்லிம்களின் தொகை மூன்றுமடங்கு ஆகியுள்ளதுடன் சிங்களவர்களின் தொகை நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருக்கும் அதேவேளை, தமிழர்களின் தொகையானத…

  17. எண்ணெய் ஊற்றும் இனவாத அரசியல் மொஹமட் பாதுஷா சமூகங்கள் சார்ந்த எந்தவொரு பிரச்சினைக்கும், பொதுவாகவே நிரந்தரமான தீர்வு காண்பதை விடுத்து, மய்யப் பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத விடயங்களுடன் முடிச்சுப்போட்டு, பூதாகரமாக்கி, காலத்தைக் கடத்துகின்ற போக்குகளையே, இலங்கையின் அரசியல் சூழலில் கண்டு வருகின்றோம். குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களின் இன, மத ரீதியான அபிலாஷைகள், கோரிக்கைகள் என்று வருகின்ற போது, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி, அதில் யாகம் வளர்க்கின்ற வேலையைத்தான், பெருந்தேசிய அரசியல்வாதிகள் சிலரும் அவர்களை ஆட்டுவிக்கின்ற இனவாத சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒன்றாக, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸா) எரிப்பு விவகாரமும்…

  18. ஜெனிவா... யதார்த்தம் ? நிலாந்தன். இம்மாதம் பன்னிரண்டாம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்றது.இக்கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு எதிரான போக்கு அதிகமாகக் காணப்படலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் கடந்த 13 ஆண்டு கால அனுபவத்தின்படி, அதிலும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களை தொகுத்துப்பார்த்தால் ஒரு முடிவுக்கு வரலாம்.அதாவது,இம்முறை ஜெனிவாவில் ரணில் விக்கிரமசிங்கவை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் பெரியளவுக்கு இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தொகை குறைந்து வருவதைக் காணலாம்.பெருந்தொற்று நோய் ஒரு காரணம். எனினும்,த…

  19. தாக்குப் பிடிப்பாரா மைத்திரி? கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 04 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:50 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல், அதன் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது குழம்பிப் போயிருக்கிறார். 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டார். சிறிசேனவின் முயற்சியால், அந்தப் பதவி அவரது கைக்கு வரவில்லை. சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரின் முயற்சியால் தான், கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிபால சிறிசேனவின் கைக்கு வந்தது. மிகஇலகுவாக, கட்சித் தலைமைப்…

  20. அட்சர கணிதத்தில் இரண்டு மைனஸ், பிளசுக்கு சமமானது, இதன் அர்த்தம் ஒன்றும் இல்லையென்பதே'' மிக்னோன் மக்லோக்ளின் அமெரிக்க பத்திகையாளர் (1913 1983) மூன்று வருட கால இடைவேளையின் பின்னர் 13 பிளஸ் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது. இவ் உற்பத்திப் பொருள் யார் யாருக்கு விற்கப்படப்போகிறது என்பது தான் எல்லோருடைய கேள்வியாகும். முள்ளிவாய்க்காலுக்கு முன் ஓர் முக்கிய காரணத்தினால் இப்பொருள் நன்றாக சர்வதேச ரீதியாக சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு பின் 13 பிளஸ் என்னும் வாய்ப்பொருளை நம்பி வாங்கியவர்கள் தமக்கு விற்பனை செய்தவரை தேடத் தொடங்கினார்கள். இவர் இறுதியாக தமக்கு 13 பிளஸை விற்றவர், மிகவும் சந்தோஷத்திலும் கேளிக்கைகளிலும் மூழ்கி 13 பிளஸ் விற்பதை நிறுத்திவிட்டு வேறு ஒர…

  21. இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்பதும்தான் - நிலாந்தன்:- இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது துக்கம் அனுஷ;டிப்பது மட்டுமல்ல அந்த கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் கோபத்தையும் ஆக்க சக்தியாக மாற்றுவதும்தான். அதை இவ்வாறு ஓர் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதென்றால் அந்தத் துக்கம் அல்லது இழப்பு ஏன் ஏற்பட்டது என்பதிலிருந்தும் அதை ஏன் தடுக்க முடியவில்லை என்பதிலிருந்தும் படிப்பினைகளைப் பெறுவதுதான். அதன் மூலம்தான் அவ்வாறான துக்கம் அல்லது பேரிழப்பு இனிமேலும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு இறந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்பது என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இரு பகுதிகளைக் கொண்டது. …

  22. முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும். இரு பிரதான அரசியல் கட்சிகளையும் விட்டு கடந்த காலங்களில் வெளியேறி புதிய கட்சிகளை அமைத்துக் கொண்டவர்கள் தங்கள் நோக்கங்களில் வெற்றிபெற முடியாத நிலையில் மீண்டும் தாய்க்கட்சிகளுடனேயே இணைந்து கொண்டதை இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். இந்த வரலாற்று அனுபவங்களின் தொடர்ச்சியாக ஶ்ரீலங்கா மக்கள் முன்னணிக்கும் அதே கதிதான் நேரும் என்று கூறுவதற்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நி…

  23. மீன்பிடிப் பிரச்சினையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அரசியலும் -என்.கே. அஷோக்பரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், 27.01.2021 திகதியிட்டு, ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே, தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்’ என்ற தலைப்பிட்ட, நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்கு உள்ளாகியதில், உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, அஞ்சலி செலுத்தும் அறிக்கையை வௌியிட்டிருந்தது. இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான மோதல், மீகநீண்ட காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும், பல உயிர்களையும் பலிவாங்கிய துர்ப்பாக்கியம் என்பதில், யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், எல…

  24. இருமுனைப்போட்டி வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யா­னது, தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் இரு முனை­களில் மிக மோச­மாகக் கூர்மை அடைந்­துள்­ளதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. மரபு வழி­யாகப் பேணப்­பட்டு வந்த அர­சியல் தலை­மைக்கு ஏற்­பட்­டுள்ள மிக மோச­மான சோத­னை­யாகக் கூட இந்த நெருக்­க­டியை நோக்­கலாம். தமிழ் மக்­க­ளின் ­அ­ர­சியல் தலை­மையை முழு அளவில் ஏற்றுச் செயற்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் வீழ்ச்­சியின் பின்னர், தமிழ் மக்­களின் அர­சியல் தலைமை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தோள்­களில் வந்­தி­றங்­கி­யது. விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் பாரா­ளு­மன்ற அர­சியல் தலை­மை­யாக – ஓர் அர­சியல் அலங்­கார நிலை­யி­லேயே தமிழ்த்­தே­சிய கூட…

    • 1 reply
    • 576 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.