அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
"முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை தோற்கடித்த மகிந்த தேர்தல் யுத்தத்தில் மக்களிடம் தோற்றுப்போனார்"குளோபல் தமிழ் செய்திகளுக்காக பிரியதர்தசன் வடக்குத் தேர்தலும் தமிழ் மக்களின் தீர்ப்பும் இதை ஒரு போராட்டம் என்றே குறிப்பிடவேண்டும். ஆழ்கடலில் தவிப்பவனுக்கு சிறு துரும்பும் ஓடம் என்பதுபோல இன்று ஈழத் தமிழர்கள் இந்த உலகத்தால் தள்ளப்பட்ட சூன்ய அரசியல் வெளிக்குள் வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு போராட்டமாவே செய்து முடித்திருக்கின்றனர். அதுவும் இரக்கமற்ற கொடிய இலங்கை அரச படைகளின் துப்பாக்கிகளின் நிழலில்தான் வடக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தலின் பொழுது வாக்களிப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட பொழுது மக்களை அச்…
-
- 0 replies
- 789 views
-
-
போரில் உயிரிழந்த சிங்களப் படைகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று நிகழ்வை நடத்தமுடியும் என்றால், தமிழ் மக்களுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு தமிழ் மாணவர்கள் ஏன் அஞ்சலிசெலுத்தக் கூடாது? ஐயோ அம்மா ! அடிக்காதேங்கோ சேர் ! இந்தக் காட்டுக் கத்தல்களை காதில் வாங்காத படைச்சிப்பாய்கள் தாக்குவதற்காகவே களமிறக்கப்பட்டது போல தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருந்தார்கள். செத்த பாம்பை அடிப்பது போல் தனித்து மாட்டுப்பட்ட ஒருவன் மீது கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தமது வீரத்தைக் காட்டினார்கள். தமிழர்களது உணர்வுகளைச் சீண்டிப் பார்த்து அதனால் வந்த விளைவுகளை தென்னிலங்கை மறந்து விட்டது. அதனால் மீண்டும் தமிழர்களது தமிழ் மாணவர்களது உணர்…
-
- 2 replies
- 789 views
-
-
பாலஸ்தீன சுதந்திரநாடு உருவாகுமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) இன்று ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில் பலவித சாதனைகளை ஐ.நா. அமைப்பும் அதன் முகவர் நிலையங்களும் நிகழ்த்தியுள்ளன என்பதை பொது வெளியில் மறைக்கவோ மறுக்கவோ முடியாது என்பது யதார்த்தமானது. இரண்டு உலக யுத்தங்களை எதிர்கொண்டு மானிட இனம் அனுபவித்த இன்னல்களால் மீண்டும் ஒரு உலகயுத்தம் ஏற்படக் கூடாதென்ற அடிப்படையில் ஐ.நா. சபை தாபிக்கப்பட்டது. பிரதான நோக்கமாக சமாதானமும் பாதுகாப்புமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. எனினும் மூன்றாம் உலகமகா யுத்தம் உருவாகவில்ல…
-
- 1 reply
- 788 views
-
-
கை விரிக்கும் இராணுவம் கே. சஞ்சயன் / 2019 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:43 Comments - 0 போரின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் கூறியிருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. “இராணுவத்தினரிடம் புலிகள் யாரும் சரணடையவில்லை” என்றும், “இலங்கை அரசாங்கத்திடமே புலிகள் சரணடைந்தனர்” என்றும், இராணுவத் தலைமையகத்தின் சார்பில், இராணுவத் தகவல் தொடர்பு அதிகாரியான பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியிருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘தமிழ்மிரர்’ சார்பில் எழுப்பப்பட்ட, கேள்விக்கு, மூன்று மாதகால இழுத்தடிப்புக்குப் பின்னர், முற்றுமுழுதாகச் சிங்களத்தில், இந்தப் பதிலை அவர் …
-
- 0 replies
- 788 views
-
-
மாகாண சபைத் தேர்தலும் இந்தியாவும் -மொஹமட் பாதுஷா நாட்டில் மாகாண சபைத் தேர்தல், நீண்டகாலமாக இழுபறியாக உள்ள நிலையில், மாகாண சபை முறைமையே இல்லாதொழிக்கப்பட்டு விடுமோ என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதற்கிடையில், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை, முறையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்தியா அதிகப்படியான அழுத்தம் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது. ‘இப்போதைக்கு தேர்தலொன்றை நடத்துவதில்லை' என்று அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய நிலையிலேயே, முதலாவதும் இரண்டாவதும் அலைகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை கவனிப்புக்குரியது. அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை, எந்த எல்லை வ…
-
- 0 replies
- 788 views
-
-
தமிழினி அல்லது முன்னால் போராளிகள் வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம் பல தவறுகளும், மக்கள் விரோத செயல்களும் செய்தவர்கள் போட்டியிடுவதை விட இறுதிவரைக்கும் களத்தில் நின்ற போராளிகள் போட்டியிடுவது மேல் இல்லை, போட்டியிடுவது பெரும் தவறு - கொண்ட இலட்சியத்துக்கு ஊறு விளைவிப்பது ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன எனக்கொரு கவலை இல்லை இந்தக் கருத்துக்கணிப்பே தவறானது - அவர்களை அவர்கள் பாட்டுக்கு வாழ விடுங்கள் கருத்துக்கணிப்பு: http://www.ampalam.com/
-
- 2 replies
- 788 views
-
-
[size=5]கோதபாயாவின் வெருட்டலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும்;[/size] [size=4](ஐ.தி.சம்பந்தன்)[/size] [size=4]அண்ணன் அளவு மீறிய அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக ஆட்சிபுரிகிறார் என்ற் மமதையில், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குப் பொறுப்பான அரச ஊழியரான பாதுகாப்புச்செயலாளர் கோதபாயாவின் பேச்சுக்களும் செயலும் தமிழ் மக்களை அச்சத்திற்குட்படுத்தியுள்ளது. இவர் பதவியின் அடிப்படையில் ஒரு அரச ஊழியர். அரச ஊழியர் என்ற நிலையிலிருந்து கொண்டு அரசியல் ரீதியான கருத்துக்களைக் கூறும் அதிகாரம் இவருக்கு இல்லை. அதுவும் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருப்பவர் அரசியல் கருத்துக்கள்கூற உரிமை இல்லை.[/size] [size=4]அரச ஊழியராகவிருந்த திரு. ரி.;பி.இலங்கரத்தினா அரச லிகிதர் சேவைச் சங்கத்தில், …
-
- 4 replies
- 788 views
-
-
http://www.yarl.com/forum3/topic/185803-வைகோவிற்கு-கிடைத்துள்ள-சந்தர்ப்பம்/#comment-1223338 தகுதி, திறமை இருந்ததும் வைக்கோ ஒரு அதிஷ்டாமில்லா அரசியல் வாதி. திமுகவின் உண்மையான தொண்டராக, கலைஞர் மேல் விசுவாசம் மிக்க ஒருவராக இருந்த இவர், எதிர்காலத்தில் தனது வாரிசுகளுக்கு தடையாக இருக்கும் அளவு வளர்ந்து வருகிறார் என்றவுடன், வீண் பழி சுமத்தி வெளியே திருத்தி அடிக்கப் பட்டார். கட்டுமரத்தின் வாரிசுகள் சண்டையே அவரையும், அவரது கட்சியையும் அழிக்கப் போகின்றது என்பது வேறு கதை. தனியே கட்சி தொடங்கினாலும், அதை கரை சேர்க்க தேவையான பணம் அவரிடம் இருந்ததில்லை. பணத்தினை எறிந்து அவரையே கட்டுமரம் விழுத்திய போது, வேறு வழி இன்றி, சிறையில் அடைத்த அம்மாவுடன் கூட்டு சேர்ந்தார். …
-
- 4 replies
- 788 views
-
-
சிறிலங்காவில் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கான முக்கியமான கேந்திர நிலையமாக திருகோணமலை விளங்குகிறது என்று சிலோன் ருடே ஆங்கில நாளிதழில், உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார். இதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் கார்வண்ணன். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். சீன அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனம் ஒன்று திருகோணமலையில், விமானப் பராமரிப்பு திட்டம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி அளித்திருந்தால், அதுபற்றித் தெரியப்படுத்துமாறு அவர் கோரியிருந்தார். அந்த திட்டம், இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை மீறுகின்ற ஒன்று என்றும், அது இந்தியாவுக்குப் ப…
-
- 0 replies
- 788 views
-
-
தமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு இம்மாதம் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்து இரண்டரை மணிநேர பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவந்த முறுகல் நிலைக்கு இப்பேச்சுவார்த்தைகளின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலமும் தொடர வேண்டுமென்று இதில் உடன்பாடு காணப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதற்கு இணங்க அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதிலும் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் இனப்பிரச்சினைக…
-
- 0 replies
- 788 views
-
-
தவறான போக்கு தேர்தல் என்பது மாற்றங்களுக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்துவது. அல்லது நிலவுகின்ற நன்மையான நிலைமையைத் தொடர்ந்து பேணுவதற்கு வழிசமைப்பதாக அமையும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால், குட்டித் தேர்தல் என்று வர்ணிக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அத்தகைய எதிர்பார்ப்பைக் கடந்து ஓர் அரசியல் வியூகத்தில் கால் பதிக்க முற்பட்டிருக்கின்றது. இதனால் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற நிலையைக் கடந்து, அடுத்த கட்ட அரசியல் நிலைமைகள் என்ன ஆகும் என்ற கவலை தோய்ந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றது. அடிமட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, கிராமிய போக்குவரத்து, குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி, சுகாதாரம் மற்றும் பொது வசதிகள் என்பவற்றில் அபிவ…
-
- 0 replies
- 788 views
-
-
‘குப்பை அரசியல்’ காலம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 29 கடந்த வாரத்தில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள், குப்பைகள் அகற்றப்படவில்லை. வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள வீதிகளின் மத்தியில், குப்பைகள் பெருமளவில் கொட்டப்பட்டிருந்தன. அதுபோல, வவுனியா நகரப் பகுதியிலும், ஒரு வாரமளவில் குப்பை அகற்றப்படாத நிலையொன்று அண்மையில் காணப்பட்டது. இலங்கையில் குப்பை அகற்றுதல், மீள்சுழற்சி செய்வது தொடர்பிலான முறையான செயற்றிட்டங்கள், பெரியளவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் நகர எல்லைப் பகுதிகளில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை, நகரத்துக்கு அப்பாலுள்ள பகுதியொன்றில் கொட்டுவதையே, குப்பை அகற்றுதலாகக் கருதுகிறார்கள். அவ்வாறு சேரும்…
-
- 0 replies
- 787 views
-
-
சவால் “நான் ஒரு திருடனல்ல” என்று, இந்த நாட்டிலிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளால் கூற முடியும் என்று, அமைச்சர் மனோ கணேசன் கேள்வியொன்றை முன்வைத்திருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, இதை அவர் கேட்டிருந்தார். மேலும், தன்னால் அவ்வாறு கூற முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மனோ கணேசனின் கேள்வியிலுள்ள தீவிரத் தன்மையும் நையாண்டியும் கவனத்துக்குரியன. அரசியல்வாதிகளிடையே மலிந்து கிடக்கும், ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து, அதேதுறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவரின் சாட்சியமாகவும் இதைப் பார்க்க முடிகிறது. அரசியல் என்பது இப்போது, பெரும் வியாபாரமாக மாறிவிட்டது.…
-
- 0 replies
- 787 views
-
-
77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே(காணொளி இணைப்பு) 77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள். என கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து பாராளுமன்றில் ஆற்றிய உரை M.A. சுமந்திரன். 1983ல் திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராகவே 1983 கலவரம் ஏற்பட்டது. இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள் என்றால், அதற்கு முன் வன்முறைகள் நிகழ்த்தப்படவில்லையா? 56ல், 58ல், 61ல், ஆயதம் ஏந்தாத தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது இளைஞர்கள் வன்முறையை கையில் எடுக்கவில்லை. இன்னும…
-
- 3 replies
- 787 views
-
-
தமிழர் அரசியலில் புதிய கட்சி உருவாக்கமும் தடம்மாறும் தலைமைகளும் Editorial / 2018 ஒக்டோபர் 23 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:50 Comments - 0 -க. அகரன் இன்றைய தமிழ்த் தரப்பு அரசியல் களமானது, பரபரப்புகளை மாத்திரம் கொண்டதாகவும் செயற்றிறன் அற்றிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயப்படுத்தல்களை முன்வைப்பதாகவுமே உள்ளது. பல்வேறு உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்கள், அவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களால் நம்பிக்கை வைக்கப்பட்ட தரப்புகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மைகளும் அரசியல் காழ்புணர்ச்சிகளும் பழிவாங்கல்களும் ‘தமிழரின் இழி நிலை’ என்ற வகிபாகத்துக்குக் கொண்டு செல்ல நீண்ட காலம் தேவையில்லை என்பதையே சுட்…
-
- 0 replies
- 787 views
-
-
இந்துசமுத்திர மாநாடு சீனாவுக்கு எதிரான நகர்வா? கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதியும் புரட்டாதி 1ஆம் திகதியும் கொழும்பு நகரில் இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாடு இந்து சமுத்திர ஓரத்தில் அமைந்துள்ள நாடுகளினதும் இந்து சமுத்திர நாடுகளினதும் அவதானத்தையும் கரிசனையையும் பெற்றுள்ளது. இந்து சமுத்திர மாநாட்டினை 1970களில் இலங்கை முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இந்து சமுத்திரத்தை யுத்த சூன்யமற்ற வலயமாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் குழப்பக் கூடாது. இரண்டும் சாரம்சத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபட்டவை இந்து சமுத்திர மாநாடு தனியொரு அரசாங்கத்தினாலோ அல்லது அர…
-
- 1 reply
- 787 views
-
-
தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும் பிரதமர் ஹரினி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடு…
-
-
- 2 replies
- 787 views
-
-
I இரு பெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அப்பால் ஈழப்பிரச்சினை குறித்து நிறைய எழுதி வந்திருக்கிற, மாவோகால சீனசார்பு கொண்ட மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரை தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடையதும் ஈழம் தொடர்பான பாரா முகங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தவர். ஈழம் தொடர்பாக அவர் எழுதி வந்த எழுத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்துக் கடுமையான விமர்சனங்களையே கொண்டிருந்தன. தனித் தமிழீழத்தை அவர்கள் அங்கீகரிக்காதது குறித்து தனது கடுமையான விமர்சனங்களை ராஜதுரை தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறார். திருநாவுக்கரசு மற்றும் சேரன் போன்றோர் எழுதிய ஈழப் போராட்டம் குறித்த அரசியல் மற்றும் கவிதை நூல்களைத் தமிழகத்ததில் எஸ்.வி.ராஜதுரைதான் பதிப்பித்தார். மனித உரிமைப் பிரச்சினையினாலும் இன்னபி…
-
- 0 replies
- 787 views
-
-
தமிழர் ஜனாதிபதியாக முடியுமா? என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 05 திங்கட்கிழமை, மு.ப. 02:12 Comments - 0 ஒவ்வொரு முறை ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, தமிழ் மக்களிடையே ஏதோ ஒரு வகையில், ஒரு கேள்வி, மீண்டும் மீண்டும் மீண்டெழுந்து விடுகிறது. இலங்கையில் தமிழரொருவர் ஜனாதிபதியாக முடியாதா? ‘சிங்களப் பௌத்தர்’ ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற தொனியிலான இந்தக் கருத்து, என்ன காரணத்தாலோ, மிக ஆழமாகப் பல தமிழர்களின் மனங்களில் பதிந்திருக்கிறது. சட்ட ரீதியாகத் தமிழர் ஒருவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கோ, ஜனாதிபதி ஆவதற்கோ வௌிப்படையாகச் சட்டத்தில், இலங்கையின் அரசமைப்பின் படி, தடைகள் எதுவுமில்லை. இந்த விடயம், எத்தனை தடவை மீள எடுத்துரைக்கப்பட்டாலும், ‘த…
-
- 0 replies
- 787 views
-
-
எது சரியான மாற்று அணி? ? நிலாந்தன்… February 23, 2020 விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் தெளிவைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார்கள். இன்னொரு…
-
- 2 replies
- 786 views
-
-
அமெரிக்கா - சீனா வர்த்தக போர் இன்று இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் சமூகவலைத்தளங்களில் பிரதான சர்வதேச பேசுபொருளாக அமெரிக்க - வடகொரிய தலைவர்கள் சந்திப்பு, பலஸ்தீன விவகாரம், ISIS பயங்கரவாதம், சிரிய நெருக்கடி, அகதிகள் விவகாரம், புவி வெப்பமடைதலும் காலநிலை மாற்றங்களும் போன்ற பல விடயங்கள் காணப்படுகின்றன. இதே சூழ்நிலையில் அமெரிக்க - சீன வர்த்தகப் போர், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் வர்த்தகப்போர் என்ற வாசகங்களும் உலகச் செய்திகளில் பரவலாக பேசப்படுகின்றன. பூலோகம் இரண்டு மகா யுத்தங்களையும், சோவியத் சீன, வியட்நாமிய கொரிய கம்யூனிச புரட்சிகளையும், அமெரிக்க சோவியத் வல்லரசுகள் உல…
-
- 0 replies
- 786 views
-
-
இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 பெப்ரவரி 05 சீனாவில் பெருமளவில் பரவி, தற்போது ஏனைய சில நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால் 2019-CoV என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரியதோர் ஊடகப் பரபரப்பு உருவாகி இருக்கிறது. இதில் நன்மையைப் போலவே, தீமையும் இருப்பதாகவே தெரிகிறது. இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஊடகங்களில், கடந்த நாள்களில், இந்த நோயைப் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் பெருமளவில் வெளியாகியிருந்தன. சீ.என்.என், பி.பி.சி, அல் ஜெசீரா, டி.டபிள்யூ, சனல் நியூஸ் ஏசியா, ஏ.பி.சி, என்.எச்.கே, பிரான்ஸ் 24 போன்ற, சகல சர்வதேச ஊடகங்…
-
- 0 replies
- 786 views
-
-
-
- 1 reply
- 786 views
- 1 follower
-
-
சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:27 Comments - 0 மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர். தம்முடைய ஆட்புல எல்லையை விஸ்தரிப்பதற்காக, நாடுகள் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போக்கு, இன்னும் அவதானிக்கப்பட்டு வருகின்ற சமகாலத்தில், தாம் வாழ்வதற்கான ஒரு துண்டுக் காணிக்காக, மக்கள் போராடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்…
-
- 0 replies
- 786 views
-
-
தமிழ் கட்சிகள் அனைத்தும் வாக்கு அரசியலை முதன்மைப்படுத்துகின்ற கட்சிகள் – கலாநிதி கெனடி விஜயரத்தினம். ( வீடியோ) Published on April 10, 2016-9:57 am · No Comments (கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் ஆங்கில விரிவுரையாளரும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கல்வித்திட்;டத்தின் கீழ் எத்தோப்பிய பல்கலைக்கழகம் ஒன்றில் இணைப்பேராசிரியராக இருக்கும் கலாநிதி கெனடி விஜயரத்தினம் இலங்கை அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். மட்டக்களப்பில் சிவராமுடன் இணைந்து தமிழர் மறுமலர்;ச்சிகழகம் போன்ற அரசியல் செயல்பாட்டு அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கலாநிதி கெனடி விஜயரத்தினத்திற்கும் முக்கிய பங்க…
-
- 0 replies
- 786 views
-