Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரத்தில் தமிழ் தேசியத் தலைமைகள் தாறுமாறாகவும், காட்டமாகவும் பேசி வருகின்றன. நட்புறவோடு நாங்கள் நடந்து கொள்கின்றபோது, மிகவும் பக்குவமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றபோது தமிழ் தேசியத் தலைமைகளிடமிருந்து வருகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் காட்டமாக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெயர்ந்த வாக்காளர்கள் மத்தியில் ஆலங்குடா ‘பீ’ முகாம் என்ற கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சமகா…

  2. Seelan Ithayachandran இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? - இதயச்சந்திரன் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கையில் எழும் விமர்சனங்கள். இதில் முதலாவது விடயத்தை நோக்கினால், பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தடை போடப்படுகிறது என்கிற பொதுவான குற்றச் சாட்டுக்களைவிட, வேட்பாளர் மீதான நேரடித்தாக்குதல்களும், வீட்டின் வாசலில் கழிவு எண்ணெய் அபிசேகம் செய்வதுமே முக்கிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சூழலியலாளர் பொ.ஐங்கரநேசனின் காரியாலய வாசலிலும்…

  3. ‘வாராது வந்துற்ற மாமணிகளை தோற்றோம்’ July 20, 2023 (சுகு ஸ்ரீதரன் நேர்காணல்) —- கருணாகரன் —- தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சுகு ஸ்ரீதரன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவர். ஏறக்குறைய 45 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டவர். ஆயுதப் போராட்ட அரசியல், ஜனநாயக நீரோட்ட அரசியல் என இரண்டிலும் செழிப்பான அனுபவங்களைக் கொண்ட சுகு, பல தரப்பினருடைய மதிப்பையும் தன்னுடைய நற்குணத்தினாலும் சிந்தனைத் திறத்தினாலும் பெற்றவர். புதுடில்லி, தமிழ்நாடு, தென்னிலங்கை, மலையகம் என விரிந்த பரப்பில் அரசியல் உறவுகளைக் கொண்டிருக்கும் சுகுவுக்கு, தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடத்திலும் அந்தந்தச் சமூகத் …

  4. முஸ்லிம்கள் மீதான இனவாதமும் அவர்களின் பொறுப்பும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய இனக்குழுமமாக, முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஏறத்தாழ 1.6 பில்லியன் முஸ்லிம்கள், உலகெங்கிலும் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும், ஏராளமான நாடுகளின் முதன்மை இனக்குழுமமாகவும் இருக்கிறார்கள். ஆனால், உலகில், அதிக சர்ச்சைகளோடு சம்பந்தப்படுகின்ற இனக்குழுமமாகவும் அவர்களே இருக்கிறார்கள். மியான்மாரில் ஒடுக்கப்படுதலாக இருக்கலாம், பயங்கரவாத நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டோருக்கும் முஸ்லிம்களின் சமயமான இஸ்லாத்துக்கு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் குற்றச்சாட்டுகளாக இருக்கலாம், எண்ணெய்வள நாடுகளின் கட்டுப்பாடுகளாக இ…

  5. தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் போரில் மட்டும் தோல்வி கொள்ளவில்லை. இவர்கள் தோற்றுவித்த புலிகள் அமைப்பும் முற்றாக அழிக்கப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் உடல் உள ரீதியாக பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட்டனர். இவர்கள் இன்றும் போரின் வடுக்களைச் சுமந்தவாறு வாழ்கின்றனர். இவ்வாறு The New York Times ஊடகத்தில் AATISH TASEER எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரத்தில், சிறிலங்காவின் வடக்கில் தனித் தாய்நாடு கோரிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் தமது போராட்டமானது தற்போது 'கசப்பான முடிவை எட்டியுள்ளதாக' அறிவித்திருந்தார்கள். புலிகள் அமைப்பானது தமிழ் மக்கள் சார்பாக கால் நூற்றாண்டுக்கும் …

  6. போர் இல்லா பூமி வேண்டும்! ஜூன் 28, 2022 –உதயை மு.வீரையன் முதல் இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட அழிவினால் மக்கள் போரையே வெறுத்தனா். சமாதானத்தையே விரும்பினா். சோவியத் நாட்டிலிருந்து பிரிந்த உக்ரைனுடன் ரஷியா போர் தொடுத்திருப்பது மிகப்பெரிய அவலம். 100 நாட்களையும் கடந்து விட்டது. தேவையில்லாமல் ஒரு நாடு அழிவது யாருக்குச் சம்மதம்? ஆயிரக்கணக்கான மக்கள் அநியாயமாக மாண்டு கொண்டிருக்கின்றனா். தாய்நாட்டை விட்டு அகதிகளாக ஓடியவா்கள் படும் வேதனை சொல்ல முடியாதது. முதியவா்களும் குழந்தைகளும், பெண்களும் படும் துயரம் போர்க்களத்தில்தான் பார்க்க முடியும். நெடிதுயா்ந்த கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டதனால் ஏற்படும் துயரம். உக்ரைன், உயா்கல்வியும் மருத்துவக்கல்வியும்…

  7. முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடு…

  8. கிழக்கின் தனித்துவ அரசியலை பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இப் பத்தியிலே கூறப்போகின்ற விடயம் ஏற்கெனவே இப்பத்தித் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயம்தானெனினும் அதனை மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அது கிழக்கின் தனித்துவ அரசியல் என்கின்ற விடயமாகும். கிழக்கின் தனித்துவ அரசியல் எனும்போது அதனை வடக்கிற்கு எதிரான அல்லது வடகிழக்கு இணைப்புக்கு எதிரான அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிற்கு முரணான பிரதேச வாதமாகப் பார்க்கின்ற தவறான புரிதலும் பிழையான விளக்கமும் இல்லாமலில்லை. இந்தத் தவறான புரிதலையும் விளக்கத்தையும் ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகளே வேண்டுமென்று முன்னெடுக்கின்றன. கிழக்கி…

  9. ஏதோ போர் முடிந்துவிட்டது தமிழர்கள் இனிமேல் அமைதியாக வாழ்வார்கள் என்று கொக்கரித்த சிங்கள அரசு, இன்று முன்னிலும் விட அடக்குமுறை ஆட்சியை நடத்துகிறது. விசாரணையின்றி தமிழ் மக்களை சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்வது தொடங்கி, கைதிகளை அடித்துக் கொல்லும் நிலைவரை சிங்கள அரச பயங்கரவாதிகள் செய்கிறார்கள். நூறு முள்ளிவாய்க்கால்களை சம்பந்தன் விரும்புகிறாரா என்று கேள்வி கேட்குமளவு தமிழர்களின் பரிதாப நிலையே இன்று நிலவுகிறது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் குகைக்குள் இருந்து கொண்டு மூச்சுவிடும் தமிழ் அரசியல்வாதிகளினால் வெளிப்படையான எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. மறைமுகமாக சில இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளையே தமிழ் அரசியல்வாதிகள் (தமிழ்த் தேசிய முன்னணி அரசியல்வாதிகளுக்கு …

  10. கிழக்கில் தமிழரசை வழித்துக் துடைக்க தயாராகும் டெலோ! December 10, 20205:38 am (நித்தி மித்திரன்) கிழக்கில் தமிழரசுக்கட்சி, கிழக்கின் தேசியவாதிகள்,கருணா,பிள்ளையான் ஆகிய தரப்பினரை எதிர்கொள்வதை விட டெலோவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தங்களை எதிர்கொள்வதே பெரிய வில்லங்கமாக உள்ளது. குறிப்பாக மட்டு. மாநகரசபை முதல்வர் சரவணபவானை நீக்கி விட்டு உதவி மேயராக உள்ள சத்தியசீலனை நியமிக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறது டெலோ. கட்சிக்கு அழுத்தம் கொடுத்தாவது பேச்சாளர் பதவியை எடுத்துவிடலாம் எனவும் கனவு காண்கின்றது டெலோ. தூண்டில் போட்டால் மீன் சிக்கலாம். ஆனால் சுறாவே சிக்குமென ஆழம் பார்க்கிறது டெலோ. மட்டு மாநகர சபை பாதீடு இன்னமும் சபையில் நிறைவேற்றப்படவில்லை சபையில் இது ச…

  11. உண்மைக்கு திரையிட முயலும் குழப்பகரமான சக்திகள்! தயாளன் 2009 க்குப் பின்னர் (மைத்திரியின் ஆட்சிக்காலம் உட்பட) சிங்களத்துக்கெதிராக எந்த ஆணியையுமே புடுங்கமுடியாது என்ற உணர்வு அநேகரிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் தமிழரின் இறுதித் தேசியத்தலைவர் கஜேந்திரகுமாரே எனப் பிரகடனப்படுத்திய சட்டத்தரணி சுகாஸ் “எங்களது சடலங்களைக் கடந்தே யாழ் கோட்டைக்குள் இராணுவம் புகமுடியும்” எனக் குட்டி யுத்தப் பிரகடனம் செய்தார். இதனை படைகளோ அரசோ,தமிழர்களோ சீரியஸ்யாக எடுக்கவில்லை. முன்னர் குடா நாட்டிலுள்ள 40 ஆயிரம் படையினரையும் சவப்பெட்டியில் அனுப்புவோம் என்றார் இக் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரன். இறுதி யுத்தத்தின் போது நாட்டிலேயே இவர் இருக்கவில்லை. முன்னாள் போராளிகள் நலன்,வட கிழக…

  12. கொழும்பு ஆட்சியாளரை பிடித்து இழுபடுவதா? மூக்கணாங் கயிற்றை பற்றிப் பிடிப்பதா? தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்? Digital News Team இலங்கை நாடாளுமன்றத்தில் 6 இல் 5 பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்பட்டு கடந்த 35 ஆண்டு காலமாக அரசியில் யாப்பில் இடம்பெற்றுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகக் கொண்ட ஜனாதிபதி குழப்பி சேறாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது என கை விரிக்கும் நிலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். சிங்கள – பௌத்த மேலாதிக்கவாத அரசியல் சமூகமானது தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் வழங்காமல் அடிமைகள் ஆக்கி சிங்கள – பௌத்த அடையாளத்திற்குள் கரைத்து விடும் வேலைத்திட்டங்…

    • 0 replies
    • 377 views
  13. யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டதுஅதன் பெயர் “டெலிஸ்” .அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது.முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந்து போகக்கூடிய தூர…

  14. இலங்கை அரகலய போராட்டங்கள் தோல்வியில் முடிந்துவிட்டதா? August 27, 2022 — கருணாகரன் — Go Home Gota அல்லது அரகலயவின் இன்றைய நிலை என்ன? இதனுடைய நாளைய பயணம் எப்படியாக இருக்கப்போகிறது? ஏனிந்தக் கேள்வி எழுகிறது என்றால், இந்தப் போராட்டத்தை ஆரம்பித்ததற்கான நோக்கம் அல்லது இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. அதாவது இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் பகிரங்கமாக முன்வைத்த அடிப்படையான விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதேவேளை இந்தப் போராட்டமானது, தற்போதைய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. போராட்டத்தின் இயங்குவிசைகளாக இருந்த முக்கியச் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றனர். அனைத்துப் பல்கலைக்கழக ம…

  15. குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளார். விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள பாய் சைஃப் பெல்ஹாசாவின் ஃபேம் பார்க் என்ற பூங்காவிற்கு சென்று மிருகங்களை பார்வையிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதேவேளை, 9 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டுபாயில் தங்கியிருப்பார் என அறியமுடிகின்றது. . https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-restoration-us-citizenship-1672873911

  16. அரசியலென்றால் பதவி ஆசை மட்டும் தானா? கடந்த 4ஆம் திகதி, குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடும் கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை, கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது மாநாடும், இதற்கு முன்னர் கடந்த ஆறு தசாப்தங்களில் நடைபெற்ற அக்கட்சிகளின் மாநாடுகளைப் பார்க்கிலும் வித்தியாசமானவையாக இருந்தன. இதற்கு முன்னர், இவ்விரு கட்சிகளில் ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஒரு கட்சியின் மாநாடு மற்றைய கட்சியைத் திட்டித் தீர்க்கும் தளமாகவே இருந்தது. ஆனால் இம்முறை, ஒரு கட்சியின் மாநாட்டில் மற்றைய கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஐ.தே.க மாநாட்டில் முன்னாள்…

  17. அரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை.! சிறந்த தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவலை வெற்றிகரமாக(?) கட்டுப்படுத்திய நாடு என்ற பெயரையும் புகழையும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை பெரும் அவதியை ஏற்படுத்தி வருவதை உணரமுடிகிறது. எப்பாடு பட்டேனும் பாராளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற நிலைப்பாடு மேலாங்க கொரோனா கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்வுக்கு கொண்டு வரப்பட்டது. ஈற்றில் நாடு வழமைக்கு திரும்பும் வகையில் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுதந்திரமான, அச்சுறுத்தல் அற்ற நிலையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற சட்டரீதியான காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த தளர்வு…

  18. ஈழம் திரும்பும் அகதிகள்- எதிர் நோக்கும் பிரச்சினைகள்!! இந்­தி­யா­வில் இருந்து இலங்­கைக்­குத் திரும்­பு­கின்ற ஈழ அக­தி­கள் எதிர்­நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­கள் பற்­றிய பேச்­சா­டல்­கள் எழுந்­துள்­ளன. ஈழத்­துக்­குத் திரும்­பு­கின்ற இந்த அக­தி­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தீர்வை ஏற்­ப­டுத்­து­ வ­தன் மூலமே இந்­தி­யா­வில் தஞ்­ச­ம­டைந்­தி­ருக்­கின்ற ஈழ அக­தி­கள் அனை­வர் மத்­தி­யி­லும் தாய­கத்­துக்­குத் திரும்­பும் மனோ­நி­லையை உரு­வாக்­கிக் கொள்ள முடி­யும் எனச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யில் இடம்­பெற்ற போரின் கார­ண­மாக வடக்­குக் கிழக்­கில் இருந்­து­வெ­ளி­யே­றிய கிட்­டத்­தட்ட 3இலட்­சம் மக்­கள் இந்­தி­யா­வில் தஞ்­ச­…

  19. இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் அனை­வரும் எதிர்­பார்த்­த­ப­டி­யேதான் மூன்று சட்டப் பேரவைத் தொகு­தி­க­ளுக்­காக இடம் பெற்ற இடைத்­தேர்தல் முடி­வு­களும் அமைந்­தி­ருந்­தன. ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு எது­வு­மில்லை. மூன்று தொகு­தி­களில் ஒன்­றி­லா­வது தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க. அல்­லது விஜ­ய­காந்தின் தே.மு.தி.க. ஆகிய கட்­சி­களில் ஒன்று வெற்­றி­பெற்­றி­ருந்தால் அதுதான் ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரிய விட­ய­மாகும். தஞ்­சாவூர், அர­வக்­கு­றிச்சி மற்றும் திருப்­ப­ரங்­குன்றம் ஆகிய மூன்று தொகு­தி­க­ளுக்கும் நடை­பெற்ற இந்த இடைத்­தேர்­தலில் ஆளுங்­கட்­சி­யான அ.தி.மு.க. வெற்றி பெற்­றது. அதே­வேளை அந்தக் கட்­சிக்கு அடுத்­த­ப­டி­யாக பிர­தான எதிர்க்­கட்…

  20. மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்பை தனிச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கையில் கொழும்பு மகிந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளதால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் போர் நடைபெற்ற காலங்களை விடவும், சமாதானம் ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு அரசாங்கம் தெரிவித்த பின்னர்தான், மிகக் கூடுதலானளவு தமிழர்களின் பூர்விகக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களம் அத்துமீறிய நில அபகரிப்பு இடம்பெறும் நிலையில், அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லீம் - சிங்களம் இணைந்து தமிழர் காணிகளை கபளீகரம் செய்கின்றனர். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரை…

  21. உலகை ஆக்கிரமிக்கும் பல்தேசிய நிறுவனங்களின் கண்களை உறுத்தும் இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகளில் நேபாளம் கோடிட்டுக்காட்டத்தக்கது. இந்தியாவின் கொல்லைப்புறத்தில் அதன் அடிமை நாடாக நடத்தப்பட்ட நேபாளத்தில் கிராமப்புற வறிய கூலி விவசாயிகள் இந்த நூற்றாண்டின் நவீன அடிமைகளுக்கு உதாரணம். பல கிராமங்களில் அரச நிர்வாகம் இருந்ததில்லை. மருத்துவ வசதிகளை அந்த மக்கள் கண்டறிந்திருக்கவில்லை. நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தின் கடந்த நுற்றாண்டின் கோரம் எந்த மாற்றங்களும் இன்றி காணப்பட்டது. இந்தியவின் காலனி நாடு போன்றே மிக நீண்டகாலமாக அடிமைத்தனதுள் மூழ்கியிருந்தது நேபாளம். இந்தியா ஆக்கிரமிப்பிற்கு எதிரான அரசியல் மாவோயிஸ்டுக்களுக்கு முன்னதாக யாரும் முன்வைத்ததில்லை. இந்த நிலையில் மாவோயிசக் கட்சி…

  22. யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது. பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரம் 06க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 06க்குரிய இஸ்லாம் (தமிழ் மொழி), தரம் 07க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10க்குரிய இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10க்குர…

  23. பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. தாமதமாக வந்த பருவமழையாலும் தொடர்ந்து ஏற்படும் காலநிலை மாறுபாடுகளாலும் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 12 மாதங்களில் அரிசியின் சந்தை விலை 11.5% அதிகரித்துள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் அரிசியின் விலை 3% அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அல்லாடும் அமெரிக்கா முன்பு கம்யூனிஸ்ட்டுகளை கிண்டல் செய்ய ஒரு வாசகம் சொல்வார்கள், ‘மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் அவர்கள் குடைபிடிப்பார்கள்,’ என்று. உலகமயமாக்கலுக்கு பின்பு இதுவே நிதர்சனம் ஆகிவிட்டது. உலகமயமாக்கல் புத…

    • 3 replies
    • 376 views
  24. ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:- என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று மீண்டும் திரும்பிப்பார்த்து, சில சம்பவங்களை எழுதுகிறேன். 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது. அதில் கலந்து கொண்டதுதான் முதல் போராட்டம். பன்னிரண்டு வயதிலேயே அரசியல்ரீதியான தெளிவுடன் அதில் கலந்துகொண்டேன் என பொய் சொல்லவில்லை. அப்புவுடன் நானும் அதில் கலந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.