நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
இலங்கையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் சீனா- கேணல் ஆர்.ஹரிகரன் சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மே 20 ஆம் திகதி பாராளுமன்றததில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நிவேற்றப்பட்டமையை ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பலரும் கருதுகிறார்கள். சட்டமூலவரைவு நடைமுறை ரீதியான முரணபாடுகளையும் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்களையும் கொண்டருப்பதாக இலங்கை உச்சநீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் தெரிவித்திருந்தது. இறுதியில், அரசாங்கம் உச்சநீதிமன்றத்தினால் விதந்தரைக்கப்பட்ட யோசனைகளில் சர்வஜன வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பிரிவுகளை நழுவிக் கொண்ட போதிலும், ஏனைய சகல திருத்த…
-
- 17 replies
- 1.4k views
- 1 follower
-
-
கடந்த கால வரலாற்றை உற்று நோக்கினால் உலக நாடுகள் பல்வேறு கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணி திரண்டதையும் பின்பு அணி மாறியதையும் கண்டோம். அனைத்துலக அரசியல் நோக்குக்கும் தேவைக்கும் ஏற்ப அதன் போக்கும் காலத்துக்குக் காலம் மாறுபட்டுச் செல்வதை அவதானிக்க முடிகிறது .” இவ்வாறு கடந்த வாரம் நியூசிலாந்து தமிழ் சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற கறு ப்பு ஜூலை நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய அதன் தலைவர் வைத்திய கலாநிதி சிவ வசந்தன் தெரிவித்தார் . அவர் தொடந்து பேசுகையில் - "இன்று தென் ஆசிய வட்டகையில் முக்கிய இடம் வகிக்கும் இந்து மாக்கடல் என்றுமில்லாத அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகின் முக்கிய வணிகக் கப்பல் வழித்தடமாகவும் அதனூடாக உலகின் ஒரு முக்கிய பொருளாதார…
-
- 0 replies
- 346 views
-
-
அன்பரசன் எத்திராஜன் பிபிசி நியூஸ் சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட பிறகும், வெளியேற மறுக்கிறது. சீனக் கப்பல் இப்படி அடம்பிடிப்பதால், ராஜீய உறவிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது ஏன்? காரணம், கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் தவறாகிவிட்டது. நெருக்கமான நட்பைக் கொண்டிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய ரீதியிலான மிக அரிதான ஒரு மோதல் ஏற்படுவதற்கும் இது காரணமாகிவிட்டது. ஒரு வங்கி தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய அந்தக் கப்பலின் பெயர் ஹிப்போ ஸ்பிரிட். கடந்த செப்டம்பர் மாதம் …
-
- 0 replies
- 180 views
-
-
காணொளி : இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தந்தி தொலைக் காட்சிக்கு வழங்கிய பேட்டி..
-
- 0 replies
- 517 views
-
-
அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்! திகதி: 01.04.2010 // தமிழீழம் கருணாநிதிக்கு "அண்ணா விருது" வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம். அன்புள்ள தம்பி, செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்றஎண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை. தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான், தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை. வடக்கு வாழ்கி…
-
- 0 replies
- 2.2k views
-
-
பதிக்கப்டட்ட முஸ்லீம் சகோதரனே, சகோதரியே, உங்களுக்காய் நான் இறைவனை வேண்டிகொள்கிறேன். வலி எல்லோருக்கும் பொது, இதில் இருந்து நீ மீண்டு வருவாய் அது நிச்சயம் ...தெளிந்து வருவா ..அது ஒன்றே என் ஆதங்கம். என் சிறு வயதில் மூன்றுக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு எதிரான சிங்கள காடையர்களின் வன்செயல்களை நேரில் கண்டவன் நான். ஒன்று 1977 மற்றையது 1983 .. 1977 - கண்டி இரயில் நிலையத்தில் (3 ஆம் பிளாட்போரம்) என் கண் எதிரே பிளாட்போரத்தில் அமர்ந்து வெற்றிலை சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஒரு ஆண், அவரோடு இருந்த ஒரு பெண், மற்றும் 3 தமிழர்கள் எங்கோ இருந்து கூட்டமாய் வந்த காடையர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்கள்... வெள்ளை வெட்டி போன்ற சாரம் அணிந்த பெரியவர் நொடியில் அம்மனமாகப்பட்டார், அவரின் பின்புறத்த…
-
- 4 replies
- 782 views
-
-
குரோசியாவின் வெற்றியும் தமிழர்களின் சுயமதிப்பீடும்! உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி ரஷ்யாவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த பெரிய அணிகள் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்படாத, வயதானவர்களின் அணி என எள்ளி நகையாடப்பட்ட குரோசியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்ததன் மூலம் தம் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது அந்த அணி. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், அந்த அணி இந்தச் சாதனையை…
-
- 1 reply
- 303 views
-
-
இலங்கைக்கு தேவை ஒரு தர்மன் அல்ல…! September 13, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — வெளிநாடுகளில் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் அல்லது வட அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர்கள் அல்லது புலம்பெயர்ந்த சமூகத்தவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படும் அரசியல் உயர் பதவிகளுக்கு வரும்போது இலங்கையிலும் அவ்வாறு நடைபெறமுடியுமா என்று மக்கள் மத்தியில் பேசப்படுவதும் ஊடகங்களில் அலசப்படுவதும் வழமையாகிவிட்டது. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பராக் ஒபாமா ஜனாதிபதியாக தெரிவானபோது, இந்திய — ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக வந்தபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் கடந்த வருடம் பிரிட்டிஷ் பிரதமராக வந்தபோது அவ்வாறெல்லாம் பேசப்பட்டது. …
-
- 0 replies
- 666 views
-
-
முற்றிய மனநோயாளிகள்! லக்ஷ்மி சரவணகுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார். அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ‘பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தை கடிதம் பெற்று வரவேண்டுமென.’…
-
- 0 replies
- 464 views
-
-
‘கோட்டாவுக்கு ஆபத்தில்லை’ Editorial / 2019 ஏப்ரல் 16 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:30 Comments - 0 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, தன்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அவரது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யும் தீர்மானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதென, கோட்டாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள, கனேடியத் தமிழரான ரோய் சமாதானம் தெரிவித்தார். மத்திய இலண்டன் - பிம்லிகோ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில், ரோய் சமாதானத்தைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சீவினிங் புலமைப் பரிசில் கிடைக்கப்பெற்று, இலண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய ஊடகவியலாளர் கற்கைநெறியைத் தொடர்ந்துகொண்டிரு…
-
- 0 replies
- 765 views
-
-
-
- 13 replies
- 2.2k views
-
-
காங்கிரஸ் கட்சி மீண்டுமொரு தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஆனால், இதனை மற்றொரு தோல்வி என கடந்து சென்று விட முடியாது. இந்தியாவின் நேரு - காந்தி அரசியல் வம்சத்தின் இருப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது இந்த தோல்வி. காங்கிரஸின் தோல்வி, அதற்கான காரணம், ராகுல் என்ன செய்ய வேண்டும்? - என பல விஷயங்களை ஆராய்கிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே. ராகுல் காந்தி நேரு வம்சத்தின் வாரிசு ராகுல் காந்தி. அவருடைய எள்ளு தாத்தா ஜவஹர்லால் நேரு இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் பிரதமர். அவரது பாட்டி இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெ…
-
- 5 replies
- 1k views
-
-
அமெரிக்காவுக்கு தாக்குதல் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட பெண் தற்கொலைப் போராளி என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்ட துஸியந்தினி கனகசபாபதிப்பிள்ளை உண்மையில் ஒரு ஊடகவியலாளர் ஆவார். இவர் பி.பி.சியின் ஊழியர். பி.பி.சியின் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான செய்தியாளராக இருந்த பிரான்சிஸ் ஹரிசனின் உதவியாளர். அமெரிக்க தூதரகம் தொடர் புலனாய்வு விசாரணைகளின் பின் இத்தகவல்களை கண்டு பிடித்துக் கொண்டது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த துஷியந்தினி கனகாபாபதிப்பிள்ளை புலிகளால் அனுப்பப்பட்டு இருக்கின்றார் என்று தூதரகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்த அன்ரன் மோசஸ் என்பவரை நேரில் சென்று தூதரக அதிகாரிகள் விசாரித்து இருக்கின்றனர். …
-
- 0 replies
- 894 views
-
-
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு பல்லாயிரக்கணக்கானோர் அகதியாக நாள்தோறும் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த நாடுகளும் பெரிய அளவில் அவர்களுக்கு உதவிகள் எதுவும் செய்யவில்லை. கடந்த வாரம் அகிதிகள் குழு ஒன்று ஐரோப்பாவிற்கு செல்லும் போது, துருக்கி அருகே அந்த படகு விபத்துகுள்ளானதில் ஆலன்(3) மற்றும் அவனது ஐந்து வயது சகோதரன் காலிப்(5) மற்றும் தாய் ரேகனா ஆகியோருடன் 12 சிரியர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள். உலகின் மனசாட்சியை உலுக்கிய சிரியாவைச் சேர்ந்த அந்த 3 வயது சிறுவனின் மரணத்திற்குப் பிறகு அகதிகளின் வாழ்வில் புதிய மாற்றம் சிறிய அளவிலேனும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிரி…
-
- 0 replies
- 248 views
-
-
கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு நாம் முரண்பட்டுக்கொண்டு நிற்ககையில் எமது தாயகமே காணாமல் போகப்போகிறது: மூத்த ஊடகவியலாளர் பாரதி Jun 16, 20190 நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும் என்றும் தினக்குரல் வார இதழ் பத்திரிகையின் ஆசிரியரான ராஜநாயகம் பாரதி தெரிவித்துள்ளார். அமரர் க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே அவர் இவ்வாறு …
-
- 1 reply
- 470 views
-
-
எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி) உரலுக்கு ஒரு பக்கம் அடி தவிலுக்கு இரண்டு பக்கமும் அடி என்று கிராமங்களில் பழமொழியொன்றுகூறப்படுவது வழக்கம். தவிலைப் போன்று இரண்டு பக்கமும் மாறி மாறி அடி விழுவது இலங்கை முஸ்லிம் சமூகத்தின தொடர் கதையாக மாறிவிட்டது. இலங்கை வாழ் முஸ்லிம் சமுதாயம் சிங்கள பேரினவாத சக்திகளாலும் தமிழ் குறுந்தேசியவாதிகளாலும் சுதந்திர வரலாற்றிலிருந்து இற்றைவரை இன நெருக்குவாரங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்பது கண்கூடு. இலங்கையில் வரலாற்றுக் காலம் முதல் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்ந்து வந்துள்ளது. தற்போதைய இன முறுகல்கள் சுமார் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலேயே ஆரம்பித்துள்ளது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற …
-
- 0 replies
- 825 views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கருதி நாம் இந்த ஆண்டு அவர்கள் வழங்கிய செவியினை மறு பிரசுரம் செய்கின்றோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – நடிகர் சுந்தர்ராஜன் அவர்கள் வழங்கிய செவ்வி. http://youtu.be/UbZa15XOn6Y http://youtu.be/yv4YieZ-XhI http://www.tamilthai...newsite/?p=8838
-
- 0 replies
- 661 views
-
-
- இலைஜா ஹூல் - ஜனவரி 9, 2015 காலையில் மனதில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு. ஒரு வித அமைதி. சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் ஒரேயிரவோடு விலகியது போன்ற தோற்றம். மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்று போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருந்தார். இரவு பூராகவும் நான் வானொலிப் பெட்டியில் தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பாரிய சுமையொன்றை இறக்கி வைத்ததைப் போன்ற நிம்மதியை நான் அன்றை காலை உணர்ந்தேன். ஒரு நாடாக நாம் கொடியதோர் தசாப்தத்தைத் தாண்டி விட்டதாக நான் நம்பினேன். சமத்துவமும், சமாதானமும், நியாயயும் நிறைந்த சமூகமொன்றை நாம் கட்டியெழுப்புவோம். கடந்த ஆட்சியில் பொதுமக்கள், ஊடகவியலாளர், முரண் சிந்தனை கொண்டோருக்கு எதிராகக…
-
- 0 replies
- 444 views
-
-
சிறீலங்காவின் தமிழின அழிப்பை மௌனமாக வேடிக்கை பார்த்த உலகம், இப்போது கண்டன அறிக்கைகளுடன் காலத்தைக் கழிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தமிழர்களுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து சிங்களம் தீர்வை வழங்கிவிடும் என்று எதிர்பார்த்த உலகம், இருந்த நிலத்தையும் இழக்கும் நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதையும் இப்போது வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. மீட்பர்கள் இல்லாமையால் நாளுக்கு நாள் பறிபோகும் தமிழரின் நிலங்களும், உரிமைகளும் மீண்டும் கிடைக்காதோ என்ற ஏக்கமே தமிழர்களைச் சூழ்ந்துள்ளது. தமிழ் மக்கள் ஐனநாயக வழியில் போராட முனைந்தால் கிறீஸ் பூதங்களை அனுப்பிய சிங்களம், இப்போது கழிவு எண்ணைகளை ஊற்றியும், புலனாய்வாளர்களை அனுப்பியும் தமிழர்களின் குரல்வளைகளையும் ஒடுக்க மு…
-
- 0 replies
- 527 views
-
-
டக்ளஸ் தேவானந்தாவிற்கு, நாகேஸ் நடாவின் ஒரு மடல்… December 30, 2019 என்னை உங்களுக்கு தெரியுமோ எனக்கு தெரியாது. ஆனால் உங்களை எனக்கு 1980களில் இருந்து நன்கு தெரியம். பத்மநாபா தலமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் வரதராஜப்பெருமாள், சுரேஸ் பிறேமச்சந்திரன், யோகசங்கரி, கிருபாகரன் போன்றோருடன் ஒன்றாக இருக்கும் போது புரட்சிகர இராணுவத்தின் தளபதியாகவும், மத்தியகுழு உறுப்பினராகவும் இருந்த போதிருந்து உங்களைத் தெரியும். பினனர் உள்முரண்பாடுகளில் சிக்குண்டு சிரேஸ்ட உறுப்பினர்கள், இப்ராகிம், அசோக், பத்மன், சிவதாஸன் போன்றோருடன் வெளியேறி தனிக்கட்சி அமைத்து இந்தியாவில் கஸ்டப்பட்டதில் இருந்து சூழைமேட்டு துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் குற்றம்சாட்டப்பட்டத…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
ஜெனீவா தீர்மானம் இனிமேல் பலவீனப்பட்டுப்போய்விடும்; முன்னாள் இராஜதந்திரி தர்மகுலசிங்கம் நேர்காணல் August 9, 2020 “தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால் ஜெனீவா தீர்மானங்கள் இனிமேல் பலவீனப்பட்டுப்போய்விடும்” என்று சொல்கின்றார் முன்னாள் இராஜதந்திரியான ஐயம்பிள்ளை தர்குலசிங்கம். ஜெனீவா உட்பட பல நாடுகளின் தலைநகரங்களில் இராஜதந்திரியாகப் பணிபுரிந்த ஐயம்பிள்ளை தர்குலசிங்கம் பொதுத் தேர்தலின் முடிவுகள் குறித்தும், சர்வதேச அரங்கில் அதன் தாக்கம் தொடர்பாகவும் ஞாயிறு தினக்குரலு…
-
- 0 replies
- 280 views
-
-
தமிழீழம் இது வெறும் வார்த்தையல்ல. தமிழீழம் என்பது ஒரு இனத்தின் வரலாறு, ஒரு மொழியின் வரலாறு, தமிழ் இன கலாச்சாரத்தின் மொத்த உருவம், வீரத்தின் அடையாளம், வெற்றியின் குறியீடு என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஏனெனில் மேற்கூறிய அனைத்துக்குமான ஒரு உருவமாக தமிழீழம் காணப்பட்டது. நீண்டகால வரலாற்றை கொண்ட தமிழீழத்தில் இனவிடுதலையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக ஆயுத போராட்டம் இடம்பெற்றது. அது வெறும் ஆயுதப் போராட்டமல்ல. புதையுண்டு போன தமிழினத்தின் வாழ்க்கையை, நிலத்தை, உரிமையை, மீட்பதற்கான போராட்டம். இந்த கொடிய ஆயுத போராட்டத்தில் ஏற்பட்ட அத்தனை இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் சிறந்த ஒரு வாழ்க்கை கட்டமைப்புடனேயே வாழ்ந்தார்கள். 2009ஆம் ஆண்டு இட…
-
- 0 replies
- 299 views
-
-
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று. ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை. அடுத்தது என்ன? முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக தாக்குதல். இஸ்லாமியருக்கு சொந்தமான பிரபல வர்த்தகநிலையத்திற்கு எதிராக போராட்டம். இலங்கையில் இஸ்லாமியரின் ஜனத்தொகை விகிதாசாரம் வேகமாக அதிகரிக்கிறது. இதைத் தடுக்க இஸ்லாமியரைப்போல பௌத்தர்களும் ஐந்து தடவை மணமுடிக்க சட்டத்தில் மாற்றம் செய்யவெண்டுமென புத்தமதகுரு அறிக்கை. என்ன இன்னமும் புரியவில்லையா சிங்கள இனவாத சக்திகள் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி…
-
- 1 reply
- 495 views
-
-