நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4203 topics in this forum
-
பந்து இப்போது தமிழர்களின் பக்கம்’. பேராசிரியர் வி.சூரியநாராயண் பிரத்தியேக நேர்காணல் பேராசிரியர் வி.சூரியநாராயண இந்தியாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகளில் பிரபலமான நிபுணராவார். இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் அவர் சென்னை பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்று தென்கிழக்கு கற்கைகளுக்கான நிலையத்தில் முதலில் தாபக பணிப்பாளராகவும் பிறகு சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றனார். இந்தியா, அமெரிக்கா மற்றும் இலங்கை யில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராக இருந்த சூரியநாராயண் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினராக ஒரு பதவிக்காலத்துக்கு பணியாற்றினார்.அவரை அரசியல் ஆய்வாளரும் மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளரும…
-
- 1 reply
- 315 views
-
-
“பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம்” July 14, 2021 தாயகத்தில் குறைந்தளவிலான தொழில் நுட்ப மருத்துவ வசதிகள் இருக்கின்ற போதும், மருத்துவர் கதிரவேல் இளஞ்செழிய பல்லவன் ஓர் மருத்துவ சாதனையை நிகழ்த்தி யுள்ளமை குறித்து அறிந்திருப்பீர்கள். இந்நிலையில், வரும் யூலை 15ஆம் திகதி ‘உலக இளையோர் திறன் நாள்’ கொண்டாடப்படுவதை முன்னிட்டு ‘இலக்கு’ ஊடகத்தினருக்கு அவர் வழங்கிய சிறப்பு செவ்வி. பாதுகாப்பான சத்திர சிகிச்சை வசதிகளை வழங்குவதே என்னுடைய இலட்சியம் கேள்வி: உங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தினை வழங்க முடியுமா? பதில்: கதிரவேல் இளஞ்செழிய பல்லவன். பிளாஸ்டிக் (Plastic) சத்திர சிகிச்சை நிபுணராக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் பண…
-
- 3 replies
- 401 views
-
-
இலங்கையின் வடக்கு நோக்கி நகரும் சீனாவின் பிரசன்னம்: யாரைப் பாதிக்கும்? இந் நிலையில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம், தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் எத்தகைய அச்சுறுத் தல்களை உருவாக்கலாம் என்பது தொடர்பான விளக் கம் ஒன்றைப் பெறுவதற்காக சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், பாரதி புத்தகா லய பதிப்பாசிரிய ருமான, ப.கு.ராஜன் அவர்களிடம் ‘இலக்கு’ ஊடகத்தினர் நேர்காணல் ஒன்றைப் பெற்றி ருந்தனர். கேள்வி: இலங்கையின் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வரும் சீனாவின் பிரசன்னத் தினால் தமிழகத்தில் நிகழும் ‘நன்மை’ என்ன?’ பதில்: மிகவும் சிக்கலான கேள்வி. இன்று தமிழ் நாட்டிலும், ஈழத் தமிழ் பகுதியிலும் …
-
- 0 replies
- 227 views
-
-
அ.தி.மு.கவை கைப்பற்ற நினைக்கும் சசிகலா - ஆடியோ ரிலீஸின் அடுத்தகட்ட முயற்சிகள் என்னென்ன? பட மூலாதாரம், Getty Images அ.தி.மு.க தொண்டர்களுடனான ஆடியோ பேச்சுகளின் அடுத்தகட்டமாக தொலைக்காட்சியில் பேசுவதற்கு சசிகலா தயாராகி வருகிறார். `அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்பேன்' எனவும் தொண்டர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். சசிகலாவின் எண்ணம் ஈடேறுமா? அவர் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா பேசி வருகிறார். இந்த ஆடியோ உரையாடல்கள், எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் கொதிப்பை அதிகப்படுத்தியுள்ளன. ஒருகட்டத்தில் சசிகலாவுடன் பேச…
-
- 0 replies
- 386 views
-
-
-
- 0 replies
- 388 views
-
-
மேதகு எழுச்சி, வடக்கை நோக்கி நகரும் சீனா அமெரிக்காவில் பசில் ராஜபக்சே|பொய்யா விளக்கு நிராகரிக்கப்படுகிறதா ?AROOS,போர் இயல் ஆய்வாளர் OPEN TALK
-
- 0 replies
- 941 views
-
-
ஈழப் பெண்களின் உடல்சார் தன்னாட்சி உரிமை ஈழமக்களின் அரசியலுரிமையின் மூலக்கல் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் 2021ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை நாட் சிந்தனை 11.07.2021 உலக மக்கள் தொகை நாள். மனிதக் கருவளத்தின் ஊற்று பெண்கள் என்பதனால், மக்கள் தொகை என்றாலே பெண்கள் முக்கியத்துவம் பெறுவர். கோவிட் – 19 கால உலகில் பெண்களுக்கான, அவர்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை அறிவார்ந்த ஆய்வுகள் வழி ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது. இதன் அடிப்படையில் பெண்களின் உடல் மீதான தன்னாட்சி உரிமை இவ்வாண்டு அனைத்துலக மக்கள் தொகை நாளின் மையக் கருவாகின்றது. இந்நிலையில் ஈழப் பெண்களின் உடலின் தன்னாட்சி உரிமை ஈழ மக்க…
-
- 0 replies
- 276 views
-
-
Friday, July 2, 2021 https://youtu.be/2oeotNpiNwY வணக்கம் சாந்தி, இன்று காலை சிறையில் இருந்து மீண்ட 16பேர் பற்றியும் இன்னும் விடுதலைக்கான நாளை எதிர்பார்த்திருக்கும் எல்லோர் பற்றியும் பேசினோம். நீண்ட நாட்களின் பின் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எங்கட செல்வச்சந்திரன் இறந்துவிட்டான். அவன் இன்று மதியம் குளிக்க கிணத்தடிக்கு போன நேரம் மயங்கி விழுந்து இறந்து போனான். அவனுக்கு ஆதரவு தேவைப்பட்ட காலம் நீங்கள் செய்த மருத்துவ உதவிகள் ஆதரவு பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நம் ஒவ்…
-
- 19 replies
- 1.9k views
-
-
ரெலோ முயற்சி – புதிய போத்தலில் பழைய கள்ளு July 10, 2021 — கருணாகரன் — தமிழ் அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு அவ்வப்போது ஏதாவதொரு புதுக்கதையைச் சொல்வதுண்டு. சற்று உன்னிப்பாகப் பார்த்தால் அதொன்றும் புதிய கதையாக இருக்காது. சலித்துப்போன பழைய கதையைச் சற்று உருமாற்றிச் சொல்லியிருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் அதை எப்படியே சனங்கள் நம்புகிறமாதிரிச் செய்து விடுவார்கள். இதில் அவர்கள் மகா கெட்டிக்காரர்கள். உண்மையில் இதில் இவர்கள் பலே கில்லாடிகள். நிபுணர்கள். இல்லையென்றால் எந்தப் பயனையுமே தராத – எதிர்விளைவுகளையே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற – தமிழ் (தேசிய) அரசியல் இன்னும் சூடு குறையாமல் இருக்குமா? இந்தப் பழைய கத…
-
- 0 replies
- 207 views
-
-
அம்பலமாகிய அக்கினிக் குஞ்சு “சிறுமியைப் பாலியல் செயற்பாடுகளுக்கு விற்பனை செய்த நபர் கைது” கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் நாட்டின் அனேக அனேக ஊடகங்களில் அவ்வப்போது பேசப்பட்ட செய்தியொன்று, நாளடைவில் தலைப்புச் செய்தியாகும் அளவுக்குப் பிரபல்யமானது. இவ்வாரத்தின் ஆரம்பத்தில், இலங்கையின் அயல்நாடுகளான மாலைதீவு மற்றும் இந்திய நாட்டு ஊடகங்களும் இச்செய்திக்கு முன்னுரிமை அளித்திருந்தமையைக் காண முடிந்தது. அது மாத்திரமல்லாமல், இவ்விடயம் தற்போதும் சமூகவலைத்தளங்களுக்குத் தீனி போட்டு வருகின்றது. சரி, சம்பவத்துக்கு வருவோம்; 15 வயதுச் சிறுமியைப் பாலியல் நடவடிக்கைளுக்காக, இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், 35 வயதான நபரொருவர், கடந்த ஜூன் மாதம் 9ஆம் தி…
-
- 1 reply
- 358 views
-
-
வடக்கில் வாள்வெட்டு, வன்முறைகள்: ‘லீ’ பின்னணி ஹாவா ‘ஆவா’வானதா அல்லது ஆவாயன் ‘ஆவா’வானதா? கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் எட்டுப் பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார், மூவரைக் கைது செய்திருந்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , ‘ஆவா’ குழுவில் இருந்து சிலர் பிரிந்து, ‘லீ’ குழுவை ஆரம்பித்து உள்ளனர் எனவும் அந்தக் குழுவுக்கு உத்வேகம் அளிக்கும் பாடலை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றியமையால் தான் ‘லீ’ குழுவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு , பாடல் உருவாக்கிய கலையகத்தையும் (ஸ்டூடியோ) தீயிட்டு கொளுத்தியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட…
-
- 0 replies
- 426 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக சீனாவே தமது உண்மையான நண்பன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து, தெற்காசிய பிராந்திய அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதுமாத்திரமன்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. இவ்வாறான நிலையில், ஏனைய உலக நாடுகளை விடவும் இலங்கை அரசாங்கம் ஏன் சீனாவை உண்மையான நண்பனாக ஏற்றுக்கொள்கின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அர…
-
- 0 replies
- 242 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ: "சீனாவே எமது உண்மையான நண்பன்; ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழி நடத்தும்" ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA/FB சீனாவே தமது உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம் எனவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவில் இணைய வழியாக நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும், சீன ஜனாதிபதியுமான ஷி ஜின்பிங்கை தனது உரையில் விழித்துப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக ச…
-
- 3 replies
- 989 views
- 1 follower
-
-
தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: தி.மு.க வெற்றியின் பரிமாணங்கள்! மின்னம்பலம்2021-07-05 ராஜன் குறை நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து அணிகளில் கமல்ஹாசன், சீமான், டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை முதல்வர் வேட்பாளர்களாகக் கொண்டு களம் இறங்கிய அணிகளைக் குறித்து கடந்த நான்கு வாரங்களில் விவாதித்தோம். இந்த வாரம் இறுதியாக தி.மு.க-வின் வெற்றியைக் குறித்து சிந்திப்போம், மத்தியில் ஆளும் கட்சி, மாநிலத்தில் ஆளும் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்த கூட்டணியை எதிர்த்து தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இரண்டும் ஆளும் கட்சிகள் மட்டுமல்ல; பணபலம் மிக்கவை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படியிருந்தும் தி.மு.க அறுதிப் பெரும்பான்மையுடன், தன…
-
- 0 replies
- 311 views
-
-
‘ஐயோ சீனா நுழைகிறதே…இது நியாயமா?’ July 4, 2021 — கருணாகரன் — “கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி –கௌதாரிமுனைக் கடலில் சீனர்கள் வந்து தொழில் செய்கிறார்கள். உங்களுக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார் கொழும்பிலிருந்து ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர். “ஐயா நான் நான்கு ஐந்து வயதிலேயே எங்கள் வீட்டில் வைத்தே சீனர்களிடம் உடுபுடவைகளை வாங்கியவன். (அப்பொழுது – 1960 – 1975 வரையில் –சீனத்துத் துணி வியாபாரிகளும் பீங்கான் விற்பனையாளர்களும் ஊர்களில் சர்வசாதாரணமாகத் திரிவார்கள்) அப்படியிருக்க ஏதோ இப்பதான் சீனர்கள் வந்திருப்பதைப்போலக் கதைக்கிறியள்! அதுபோக கௌதாரிமுனையில் சீனர்கள் தூண்டில் போடுற செய்தியைச் சொல்லும் நீங்கள்தான் அதனுடைய மேலதிக விளக்கத்தையு…
-
- 1 reply
- 923 views
-
-
இலங்கையில் நீதி தேவதைக்கே அல்வா பாதுகாப்பு செயலராக இருந்த மகன் கோத்தபாய, தகப்பன் ராஜபக்சேவுக்கு ஒரு நினைவு மண்டபம் அமைத்தார். தகப்பன் ராஜபக்சே, நாட்டின், ஜனாதிபதியாகவோ, பிரதமராகவரோ இருக்கவில்லை. சரி சொந்த காசில் அமைத்து இருக்கலாம். அதுதான் இல்லை. அரச பணத்தினை ஆட்டையினை போட்டு அமைத்தார், 2015ல் புதிய அரசு இதனை கிண்டி, கோத்தபாய உள்பட, 7 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. அந்த அரசு பதவியில் இருக்கும் வரை, தலைகுல குத்துது, நெஞ்சுக்குள்ள குடையுது... அமேரிக்கா போட்டு ஓடி வாறன் எண்டு, ஒவ்வொரு வழக்கு தவணைகள் வரும் போதும் கதை விட்டுக் கொண்டிருந்தார் கோத்தா. இந்த நிலையில் கோத்தாவும் ஜனாதிபதி ஆனார். மகிந்தாவும் பிரதமர் ஆனார். விசாரணை செ…
-
- 2 replies
- 868 views
-
-
70 வருடங்களாக அரசமைப்பின் 370 வது பிரிவு ஜம்முகாஸ்மீர் மக்களிற்கான நன்மைகள் அனைத்தையும் பறித்தது-இரண்டு வருடங்களில்பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐஏஎன்எஸ் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஜம்முகாஸ்மீரின் இரு முன்னாள் முதல்வர்கள் தமது நிலைப்பாடுகளில் கடும் வித்தியாசத்தை வெளிப்படுத்தினர். அரசமைப்பின் ஜம்முக காஸ்மீருககு விசேட அந்தஸ்த்தை 370வது பிரிவு மீண்டும்சாத்தியமில்லை என ஒமர் அப்துல்லா வெளிப்படையாக தெரிவித்த அதேவேளை மெஹ்மூபா முவ்டி ஜம்முகாஸ்மீர் தனது விசேட அந்தஸ்தினை மீண்டும் பெறும்வரை தான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனகுறிப்பிட்டார். மீண்டும் அரசமைப்பின் 370வது பிரிவை நடைம…
-
- 0 replies
- 173 views
-
-
தமிழ்நாட்டின் கோடிப்புறத்தில் வளரும் சீன நிழல்-கேணல் ரமணி ஹரிஹரன் இலங்கையில் கடந்தமாதம் துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப்பட்டமையால் பாக்குநீரிணையின் இரு மருங்கிலும் வாழும் மக்கள் மத்தியில் விசனமும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.கொழும்பு துறைமுகத்தை எதிர்நோக்கியவாறு நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுகநகரத்தில் விசேட பொருளாதார வலயம் சீனாவின் கட்டுப்பாட்டில் வருவதன் விளைவாக தென்னிந்தியாவுக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல் பற்றி ஊடகங்கள் பெருமளவு பரபரப்பை தோற்றுவித்துவருகின்றன. அடுத்த இரண்டு தசாப்தங்களில் கொழும்பு துறைமுக நகரம், துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச நிதியியல் மையமாக முழுமை முதிர்ச்சியுடையதாக வளரப்போகிறது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், சீனஅரசுக்கு …
-
- 4 replies
- 688 views
-
-
பிரபாகரன், கருணாநிதி முதலில் தி.மு.க-வை ஆதரிப்பவர்களையெல்லாம் தி.மு.க கட்சியின் உறுப்பினர்கள் போல முத்திரை குத்துவதே தவறான செயல். பிரீமியம் ஸ்டோரி `புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு சிறப்பாகச் செயல்படுகிறது’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். மற்றொரு தரப்பினரோ, `அதிகாரிகள் நியமனம், மின்வெட்டு உள்ளிட்ட விஷயங்களில் தி.மு.க அரசு தடுமாறுகிறது’ என்கிறார்கள். ஆக்கபூர்வமான இவர்களின் விமர்சனங்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் `அரக்கர் கூட்டம்’, `திராவிடம் 2.0’ ஆகிய பெயர்களில் ‘தி.மு.க ஆதரவாளர்கள்’ என்று கூறிக் கொள்பவர்கள் பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும் கடுமையாக வசைபாடுவது தி.மு.க-வுக்குக் கடும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்குப் பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: அகில இந்திய அண்ணா தி.மு.க-வின் எதிர்காலம் மின்னம்பலம் ராஜன் குறை தமிழில் ஒரு வார்த்தைக்கு முன்னால் ‘அ’ என்ற எழுத்து சேர்க்கப்படும்போது அது அந்தச் சொல்லுக்கு எதிர்மறையான பொருளைத் தருவது வழக்கம். ‘நீதி’ என்ற சொல்லுக்கு முன் ‘அ’ சேர்த்தால் ‘அநீதி’ என்ற சொல்லாக மாறும். அதுபோல பேரறிஞர் அண்ணாவின் பெயரின் முதல் எழுத்தாக ‘அ’ இருந்தாலும் அதிமுக என்பது தி.மு.க-வின் எதிர்ச்சொல்லாகவே மாறியது. அதற்கேற்றாற்போல அது திராவிடத்துடன் ‘அகில இந்திய’ என்பதையும் சேர்த்து அதன் எதிர்த்தன்மையை அதிகரித்துக்கொண்டது. ஆனாலும் அது தி.மு.க-வின் கொள்கைகளிலிருந்து முற்றாக மாறுபட்டால் மக்கள் ஆதரவை இழந்துவிடலாம் என்ற பிரச்சினையும் இருந்தது. அதனால் தி.மு.க-வ…
-
- 0 replies
- 304 views
-
-
தமிழ் கைதிகள்: புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் June 26, 2021 — கருணாகரன் — வரலாறு விசித்திரங்கள் நிறைந்தது. சில சந்தர்ப்பங்களில் நம்பக்கடினமான சங்கதிகளையே கொண்டது என்று சொல்வார்கள். அப்படியான ஒன்றே இதுவும். “தமிழ் அரசியற் கைதிகளை அரசாங்கம் விடுவிப்பதற்குச் சிந்திக்க வேண்டும்”என்று கேட்டிருக்கிறார் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ. “வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 10 – 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இந்தக் கைதிகள் தங்களுக்கு எதிரான வழ…
-
- 13 replies
- 748 views
-
-
மூடவும் முடியாது; திறக்கவும் இயலாது ஷேக்ராஜா எப்பொழுதுமே, ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருப்போர், தாம் செல்கின்ற வழித்தடம் தவறானது எனத் தெரிய வரும்போது, உடனடியாக அந்த இடத்திலேயே வாகனத்தைத் திருப்பிக் கொண்டு, சரியான பாதையில் பயணிக்க எத்தனிப்பார்கள்; இதுதான் உலக வழக்கமாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தவறான தரவுகளின் அடிப்படையிலேயே கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர், பயணத்தடையை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதாவது, அந்தப் பாதையில் இன்னும் கொஞ்சத் தூரம் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளது. ஆனால், உடனடியாகப் பயணத்தடையைத் தளர்த்தவில்லை. ஏற்கெனவே திட்டமிட்டதன் பிரகாரம், 21ஆம் திகதியே த…
-
- 4 replies
- 775 views
-
-
கொடுத்ததை பறிக்கும் மத்தியும், பாராமுகமாக இருக்கும் தமிழ் தலைமைகளும் June 22, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — “புத்திமான் பலவான்” என்று சொல்வார்கள். அதைத் தொடர்ந்தும் சிங்களத்தரப்பு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய இந்தப் புத்திபூர்வமான நடவடிக்கையில் இப்பொழுது வட மாகாணசபையின் கீழுள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்ட மருத்துவமனைகளும் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை அவர்கள் எடுத்துள்ளனர். இதற்கான ஆதரவை அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவும் வழங்கியிருக்கிறார். அதாவது “மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி” என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (EPDP) எந்த அடிப்ப…
-
- 0 replies
- 712 views
-
-
கீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு கோத்தாவை சந்திக்க இருந்த, தமிழ் கூட்டமைப்பினரில், மாவையர் ஒரு ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்க இருந்தார். அதாவது மகிந்த காலத்தில், கீரிமலையில் கட்டப்பட்ட மாளிகை சீனாவின் கைகளில் போக இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களே அவையாகும். அது குறித்து காட்டமான எதிர்ப்பினை வெளிக்காட்ட தயாராக இருந்தார் மாவை. ஆனால் சந்திப்பு ரத்தாகி விட, மறுநாள் இந்திய தூதரை சந்தித்துள்ளனர், கூட்டமைப்பினர். இந்த சந்திப்பில், அந்த ஆவணத்தினை, மாவை இந்திய தூதர் இடம் கையளித்து, சீனாவின் கையில் அது போனால், இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் உண்டாகலாம் என்றும் சொல்லி இருக்கிறார். எரிச்சல் அடைந்த தூதர், அதனை நாம் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்ல…
-
- 7 replies
- 1k views
-
-
தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம் - தினகரன் என்ற அரசியல் புதிரை அணுகுவது எப்படி? மின்னம்பலம் ராஜன் குறை கடந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன், சீமான் தவிர முதலமைச்சர் பதவிக்கான போட்டியாளராக இரண்டு பிரதான கட்சிகளுக்கு வெளியில் களம்கண்டவர் டி.டி.வி.தினகரன். இந்தத் தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றமும் இவருடையதுதான். அ.இ.அ.தி.மு.க வாக்குகளை தென்மாவட்டங்களில் கணிசமாகப் பிரிப்பார் என்றும், குறைந்தபட்சம் அவர் போட்டியிட்ட தொகுதியிலாவது வெல்வார் என்றும் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டுமே நிகழவில்லை. அ.இ.அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில் தே.மு.தி.க இவருடன் கூட்டணி அமைத்ததும், ஓவைசி கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய இஸ்லாமிய கட்சிகள் இவருடன் கூட்டணி வைத்ததும் இவருடைய…
-
- 0 replies
- 819 views
-