நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
மழைக்குமிழிகள்: கரோனா களத்தில் மருத்துவர் குடும்பத்தின் அனுபவக் குறிப்புகள்! “படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித்- தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்”- நாலடியார் வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இவ்வுலகில் காண இயலுமோ?? பல ஊரடங்குகளைச் சந்தித்த வேளையில் செய்கின்ற வேலை காரணமாக - முக்கிய உயிர் காக்கும் பணியில் உள்ள அரசு ஊழியர்களின் பயணங்கள் தொடர்கின்றன. மருத்து…
-
- 0 replies
- 461 views
-
-
தமிழ் நாட்டில் ஒரு ஊரே சேர்ந்து இன அழிப்பு நாளை நினைவு கூறுர்ந்தவை , புலம்பெயர் நாட்டில் நாம் என்ன செய்தோம் , எமக்காக குரல் கொடுப்பவர்களை கேலியும் கிண்டலும் செய்ததை தவிற எம்மவர்கள் 2009ம் ஆண்டுக்கு பிறக்கு வாயால் வடை சுட்டு தங்களை விளம்பரப் படுத்தியது தான் நிதர்சன உண்மை , பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியா செய்யும் அநீதிகளை ஜனா முன் நின்று எடுத்து சொல்லுகிறார்கள்
-
- 41 replies
- 2.7k views
-
-
திராவிடம் இனி இங்கு செருப்பாய் தேயுமடா..வீறுகொண்ட தமிழினம் புலிகளாய் தாக்குமடா..பட்டது போதும் ஆயிரம் காயமடா..இனி துடைத்தே எறிவோம் ஆரிய சாயமடா..!
-
- 0 replies
- 454 views
-
-
-ஹரிகரன் இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்திருக்கின்ற கைகலப்புச் சண்டைகள், இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் ஒரு நிகழ்வு தான். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளைப் பேண முனையும் இலங்கையைப் பொறுத்தவரை, இது சங்கடமான சூழலை தோற்றுவித்திருக்கிறது. இந்திய சீன நாடுகளுக்கிடையில், போர் வெடித்தால் அது இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்திய- சீன எல்லையில். என்ன நடந்தது என்று பார்த்து விட்டு, அந்தச் சம்பவம் இலங்கையில் விளைவுகளை ஏற்படுத்துமா என்று பார்ப்பதே பொருத்தம். இந்திய சீன எல்லையில், கிழக்கு லடாக் பிரதேசத்தில், உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு. இமயமலையில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக…
-
- 1 reply
- 452 views
-
-
தமிழ் மக்கள் வட,கிழக்கு தாயகங்களில் தமது இருப்பை எவ்வாறு உறுதி செய்து கொள்வது ! இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 16 ஆவது அமர்விற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி ஆவணி மாதம் 5 என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் தற்போது முகப்புத்தகம் மற்றும் சமூகவலைத்தளங்கள் என்பது தேர்தல் வேட்பாளர்களின் பிரசாரத் தளமாக மாறி இருப்பதை குறிப்பாக நீங்கள் அனைவரும் அவதானித்திருப்பீர்கள். முகநூலில் உள்ளவர்கள் தத்தமது ஆதரவாளர்களையும் கட்சிகளையும் ஆதரவளித்து பதிவுகளை இட்ட வண்ணமாக உள்ளார்கள். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் வடக்கு கிழக்கு மாகாண தேர்தல் களம் எங்கு சூடு பிடித்துள்ளது என்பதே. இவ்விடயத்தை ஆராய்வோமானால் அந்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களை விட வடக்கு, கிழக்…
-
- 1 reply
- 498 views
-
-
ஆளுமைகளின் பங்களிப்பு …… எமது வாழ்க்கையில் சிறு வயதில் இருந்தே பலவகையான ஆளுமைகள் தங்களின் செல்வாக்கை பலவிதங்களிலும் செலுத்தி எங்களின் சொந்த ஆளுமை வடிவமைப்பை ஆக்குவித்திருந்திருப்பார்கள். பெற்றோர் , உடன் பிறந்தோர் , நண்பர்கள் , ஆசிரியர்கள் , ஊரார் , முன்னர் இருந்த பிரபலங்கள், சம கால பிரபலங்கள் என்று ஒரு நீண்ட நிரல் . யாழ் திண்ணை வாசிகள் தங்களின் ஆளுமை வளர்ச்சியில் மற்றையவர்கள் செல்வாக்கும் பங்களிப்பும் எவ்வாறு இருந்தது என்பதனை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மீட்டலாகவும், மற்றயவர்களுக்கு உதவியாகவும் சுவாரசியமாகவும் இருக்கக்கூடுமே. தொடக்கமாக எனது தந்தையாரின் பங்களிப்பைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு. குழப்படி செய்து பிடி பட்டால் அம்மா பிரம்பை தூக்க…
-
- 0 replies
- 440 views
-
-
ஒரு ஊமை பெண்ணை, பெரும் பணம், நகைக்காக கலியாணம் செய்து, ஒரு குழந்தையையும் பெற்று, பின்னர் மனைவியை, கொலை செய்து வேறு ஒரு பெண்ணை கலியாணம் செய்யும் திட்டத்தில் ஒரு மனித மிருகம் செய்த வேலை கேரளாவை திடுக்கிட வைத்துள்ளது. பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த உத்ரா சமீபத்தில் இறந்துவிட்டார்.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொன்றுள்ளார் இவரது கணவர் சூரஜ்!! மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது.. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அ…
-
- 2 replies
- 652 views
-
-
இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையில் யார் பக்கம் நிற்கப் போகிறது இலங்கை? விமலநாதன் விமலாதித்தன் ஊடகவியலாளர் - சர்வதேச விவகாரங்கள் Getty Images (இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) ஆசியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்திகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், இருந்த எல்லைப்பூசலானது உயிர்ச்சேதம் மிக்க மோதலாக உருமாற்றம் கண்டுள்ள வேளையில், ஆசியாவின் பிற நாடுகள் இந்தப் பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. தெற்காசியப் புவியியலில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாய் அமைந்துள்ள இலங்கை, இன்று வரை அந்த இரு நாடுகளுடனும் மிகச்சிறந்த உறவைப் பேணி வருகின்றது. இந்தியாவின…
-
- 6 replies
- 635 views
-
-
தவறுகளைச் சுட்டிக்காட்டும் பணியில் நியாயமாக நடந்து கொண்டு இருந்த ஊடகங்கள், கடந்த பல வருடங்களாக ஒருதலைப்பட்ச செய்திகளாலும், அரசியல் சார்ந்தும் செயல்பட்டதால் மதிப்பை இழந்து விட்டன. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு அரசியல் கட்சியைச் சார்ந்தே தற்போது இயங்கி கொண்டுள்ளன. Image Credit ஆன்லைன் செய்தித்தளங்கள் வந்த பிறகு புற்றீசல் போல ஆளுக்கொரு தளங்களை உருவாக்கிச் செய்திகள் என்று கொடுத்து வருகின்றன. இதில் 90% க்கும் மேல் Deskwork எனப்படும் மற்ற செய்திகளைப் பட்டி பார்த்துக் கொடுப்பதே. ட்விட்டர் ஃபேஸ்புக் பயன்படுத்திய பிறகு தற்போது மக்கள் எதையும் சிரமம் இல்லாமல் உடனே படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதாவது சுட்டியை (Link) க்ளிக் செய்து படிக்கச் சோம்பேறித்தனம். இரு வ…
-
- 0 replies
- 311 views
-
-
வவுனியாவில் அம்மாச்சி உணவகங்களை இலக்கு வைத்து அமைக்கப்படுகின்றதா மதுபானசாலைகள்? பழையன புகுதலும் புதியன புகுதலும் இயல்புதான். அந் நிலையில் இன்றைய பரபரப்பான சூழலிலே உணவிற்கும் அந்நிலை வரும்போது தான் நம் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினை, சாமை என சிறுசிறு தானியங்கள் ஆதிக்கம் செலுத்திய காலமும் உண்டு. இத் தானியங்கள் நம் நாட்டு நிலத்தில் எம் மக்களுக்காக விளைவிக்கப்பட்டவையாகும். பின்னர் அரிசியின் வருகை ஏற்பட்டது. இதனால் சிறுதானியங்கள் அழிவை நோக்கி மெல்ல நகர்ந்தது. இதனால் அசைவ உணவுகளில் ஆடு, நாட்டுக்கோழி ,மீன் என உண்டு கழித்த மக்கள் இன்று வெளிநாடுகளிலிருந்து வரும் இரசாயனங்கலந்த உணவுகளிற்கு அடிமையாகும் நிலை உருவாகியிருக்கின்றது. நூடில்ஸ் , பீ…
-
- 0 replies
- 325 views
-
-
எந்தவகையிலும் பாராளுமன்றம் செல்ல விரும்பவில்லை : ரணில் - சஜித் ஒன்றிணையப் பிரார்த்திக்கின்றேன் - பல தகவல்களை வெளியிட்டார் மங்கள -நேர்காணல்:- ஆர்.ராம் பாராளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகியுள்ள நான் எந்தவொரு முறையிலும் சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கூடாரமாக மாறப்போகும் பாராளுமன்றத்திற்கு வருகை தரவிரும்பவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான ஆரம்ப கொள்கைகளை அடியொற்ற வகையில் தாராளவாத ஜனநாயகவாதிகளுடன் இணைந்து எனது அடுத்த கட்ட அரசியல் பயணம் ஆரம்பமாகவுள்ளதாக முன்னாள் நிதி மற்றும் வெகுஜன தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு, கேள்வி:- 2019ஆம் ஆண்டு …
-
- 1 reply
- 384 views
-
-
தமிழர்களும் கையாள்தல் அரசுறவியலும் கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம் கொடுத்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009இல் அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக்கினார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்பதை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. …
-
- 0 replies
- 864 views
- 1 follower
-
-
தேர்தல் என்றாலே... விளம்பரங்களும், சுவரொட்டிகளும்... "கட் அவுட்களும்" முக்கிய இடத்தைப் பிடிக்கும். உங்கள் கண்ணில் பட்ட... விளம்பரங்களையும் பதியுங்கள்.
-
- 45 replies
- 4.5k views
-
-
'இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இலங்கை அரசுடன் இணைந்து தீர்வு' ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக senthil thondaman facebook page இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணைந்தே இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார். ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியின்போது செந்தில் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டார். கேள்வி: இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு தலைமைத்துவம் தற்போது இல்லாத…
-
- 0 replies
- 389 views
-
-
தொங்கவிடப்படும் கோப்பி மற்றும் உணவுவகைகள் .. (Suspended coffee & food ) அண்மையில் அறிந்தது .. நீங்கள் உணவகத்திற்கு செல்லும் நேரங்களில் , சில இடங்களில் உணவு வகைகட்கு நீங்கள் பணம் செலுத்தி தொங்க விடலாம் ( suspend ), தேவையுள்ள வேறு எவராவது அந்த உணவகத்திற்கு வந்து அதனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பல வகைகளில் நன்மை .. தேவையுள்ளவர் பொது இடங்களில் இரந்து கொள்வதை தவிர்க்கலாம் , உதவியவருக்கு முகம் தெரியாமலேயே உதவி செய்யும் திருப்தி , பணப் புழக்கம் அதிகரிப்பு என ... எவருக்காவது அனுபவம் இருக்கின்றதா , இலங்கையிலோ அவுஸ்திரேலியாவிலோ நான் செல்லும் இடங்களில் இது வரை சந்தித்ததில்லை …
-
- 5 replies
- 715 views
-
-
ஒண்டாரியோ பாராளுமன்ற தனிநபர் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தூதரகம் கருத்து. தனிநபர் ஒருவரின், இலங்கையின் இனப்படுகொலை தொடர்பில் பாராளுமன்றில் சபர்ப்பிக்கப்படுள்ள 104ம் இலக்க மனு தொடர்பில் கனடிய ஊடகங்களின் கருத்துக்களை நிராகரிப்பதாக இலங்கைத் தூதரகம் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக சில குழுக்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால், தவறான அபிப்பிராயங்களை எடுத்துக்கொள்ளாது, நிடுநிலையாக விடயங்களை அணுகுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. ஒட்டாவாவில் உள்ள தூதரகமும், டொரோண்டோவில் உள்ள துணை தூதரகமும், இவ்விடயம் தொடர்பில், மத்திய, மாநில அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இந்த மனு தொடர்பில், கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்யும் அதேவேளை, மக்கள் இழ…
-
- 4 replies
- 874 views
-
-
தென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக்கூடிய தமிழ் தலைமை எது? சண்முகவடிவேல் இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தயாராகிறது. தென் இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தலுக்கு தயாரானது போல் தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று தேர்தலுக்கு தாம் தயாரென அறிவித்துள்ளது.இத் தேர்தல் வடகிழக்கிலும் தென் இலங்கையிலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளது. ஆளும் தரப்பினைக் கடந்து தென் இலங்கையில் மோதிக் கொள்ளும் எதிர்கட்சியினரும் வடகிழக்கில் மோதிக் கொள்ளும் தமிழ் தரப்புமாக ஒரு ஆபத்தான அரசியலுக்குள் பிரவேசிக்கின்ற போக்கினைக் காணமுடிகிறது. இது தமிழ் தரப்பின் பராளுமன்ற தேர்தல் பற்றியதாக அமையவுள்…
-
- 0 replies
- 299 views
-
-
உரிமையா, அபிவிருத்தியா? தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்? Johnsan Bastiampillai / 2020 ஜூன் 06 , அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செ…
-
- 1 reply
- 402 views
-
-
தொண்டாவுக்கு அஞ்சலி செலுத்த அவரின் இல்லத்திற்கு திகா போகாதது ஏன்? : மனோ விளக்கம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஏன் செல்லவில்லையென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார். மனோகணேசனின் பதிவு வருமாறு, நண்பர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போது நான் ஒரு வெளிநாட்டு ராஜதந்திரியுடன் உரையாடலில் இருந்தேன். செய்தி கேட்டதும் உடனேயே தலங்கம மருத்துவமனைக்கு ஓடினேன். ஏன் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துமனைக்கு கொண்டு செல்லவில்லை என நினைத்துக்கொண்டேன். நான் போனபோது நான் மட்டும்தான் முதல் எதிர்கட்சிகாரனாக இருந்தேன். அப்புறம் ஒரே ஆளும்கட்சி கூட்டம். பிரதமர் வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு புத்தகத்தைக்கூட வாசிக்காதவன் எல்லாம் யாழ் நூல் நிலையம் எரித்ததை நினைவு கூர்கிறான் என ஒருவர் கிண்டலாக எழுதியிருந்தார். என்னடா இது? இந்த மகிந்த ராஜபக்சாவின் விசுவாசிக்கு ஏன் இத்தனை எரிச்சல் ஏற்படுகிறது என்று கொஞ்சம் விசாரித்து பார்த்தேன். 1981ம் ஆண்டு எரிக்கப்பட்டதை இப்பவும் தமிழர்கள் நினைவு கூர்கிறார்களே என்பதைவிட இம்முறை வழக்கத்தைவிட அதிகளவில் நினைவு கூர்கிறார்களே என்ற எரிச்சல் அது என்பதை புரிந்து கொண்டேன். ஆம். உண்மைதான். இந்த கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் …
-
- 2 replies
- 976 views
- 1 follower
-
-
கனேடிய பிரதமரின் நீண்ட மௌனத்தின் பின்னான வார்த்தைகள். அமேரிக்க நிலைமைகள் குறித்து என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு, நீண்ட மௌனத்தின் பின், லாவகமாக கையாண்டார் கனேடிய பிரதமர். https://www.bbc.co.uk/news/av/world-us-canada-52900486/george-floyd-protests-trudeau-s-epic-pause-when-asked-about-trump-s-response
-
- 0 replies
- 405 views
-
-
•எப்பேற்பட்ட அறிவுடைய ஜனாதிபதியை சிறிலங்கா மக்கள் பெற்றிருக்கிறார்கள்? இரவில் ஊரடங்கு சட்டம்போட்டுவிட்டு பகலில் ஊரடங்கை ஜனாதிபதி தளர்த்தினார். இதன் மூலம் பகலில் கொரோனா தொற்று ஏற்படாது என்பதை ஜனாதிபதி அறிந்திருந்தார். வெள்ளவத்தையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்த ஜனாதிபதி பக்கத்து ஊரான பம்பலப்பிட்டியில் ஊரடங்கை தளர்த்தினார். இதன்மூலம் கொரோனா எந்தெந்த இடங்களில் வரும் என்பதையும் ஜனாதிபதி அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல இறந்தவர்களுக்கு தமிழர் நினைவு அஞ்சலி செலுத்தினால் கொரோனா வரும் என்பதையும் ஆனால் கொழும்பில் போர் வெற்றிவிழா கொண்டாடினால் கொரோனா தொற்று ஏற்படாது என்பதையும் ஜனாதிபதி அறிந்திருக்கிறார். இறுதியாக, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மற்றவர்களுக்குதான் மாஸ…
-
- 1 reply
- 1.4k views
-
-
-சுபத்ரா இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முடித்துக் கொண்டு, இலங்கை அரசாங்கத்துடன் முறைப்படியான கலந்துரையாடல்களை ஆரம்பித்த கடந்த 26ஆம் திகதி- பாகிஸ்தான் தூதுவர் முகமட் சாட் ஹட்டக் (Muhammad Saad Khattak) யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். எந்த முன்னறிவிப்பும் இன்றி, பெரிதாக வெளிப்படையான எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், அவரது இந்தப் பயணம் இடம்பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணம், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குச் சென்று, பாடசாலை அதிபரைச் சந்தித்து, கிரிக்கெட் மட்டைகள், பாடசாலைப் பைகள் போன்றவற்றை அன்பளிப்புச் செய்திருக்கிறார். யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து, கோட்டையைச் சுற்றிப் பார்வையிட்டிர…
-
- 25 replies
- 2.4k views
- 1 follower
-
-
செளமியமூர்த்தி தொண்டமான் , ஆறுமுகன் தொண்டமான் மரபை பேணி பாதுகாக்க மகன் ஜீவன், மருமகன் செந்திலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பாராத மரணம் இ.தொ.கா.வின் தலைமைத்துவத்தில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறது. சிங்கள பெரும்பாண்மைவாத கட்சிகளின் ஆதிக்கத்தினுள் உள்ள இலங்கை அரசியல் முறைமையின் ஊடாக வெற்றிகரமாக பயணம் செய்வதற்கு ஆறுமுகனைப் போன்று துணிச்சலும் அரசியல் செயல் நோக்கும் ஆற்றலும் கொண்ட ஒரு தலைவரை இ.தொ.கா. கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பல்வேறு போட்டிக் குழுக்களாக பிளவுப்பட்டு போகாமல் இ.தொ.கா வை ஒற்றுமையாக வ…
-
- 0 replies
- 544 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்றே தோன்றியது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வயதானாலும் தனது உயிர் இருக்கும் வரை மீண்டும் ஒருமுறை விடுதலைப்புலிகள் அமைப்பு தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிங்கள சமூக வலைத்தள ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே இராணுவத்தளபதி இதனைத் தெரிவித்த…
-
- 1 reply
- 558 views
-