நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்பதை ஆட்சியாளர்களும் சிங்கள பேரினவாதி களும் ஒருபோதும் விரும்பவில்லை என்பது தெள்ளத் தெளிவு. இதற்கு துணைக் காரணங்கள் பல இருந்தாலும் பிரதான காரணங்கள் இரண்டு. அதில் ஒன்று நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் தலைமையை எடுத்துக் கொண்டால், அவரை ஏமாற்றவோ அல்லது சலுகைகளைக் காட்டி தம்பக்கம் வாலாசப்படுத்தவோ முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்குதெரியும். இதனால் அவரை அவர்கள் விரும்ப வில்லை. இரண்டாவது காரணம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எழுந்து பேசுவாராயின் அதற்கு சர்வதேச சமூகம் நிச்சயம் செவி சாய்க்கும் மதிப்பளிக்கும். அதிலும் குறிப…
-
- 0 replies
- 327 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்தியாவில் வைத்து இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமை தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். "இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் இலங்கைத் தமிழர் நலனுக்காகவும் இலங்கை தொடர்பில் இதுவரை எடுத்து வந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்" என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் . "இந்திய_ இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்காகவாகும். ஆனால் இன்று இந்திய_ இலங்கை ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிர…
-
- 0 replies
- 245 views
-
-
கனவுகளை களைந்து நினைவில் வாழ புத்தி கூர்மை அவசியம் தமிழா !! (தமிழா- தமிழ் மொழி பேசுவோர்.) நூருல் ஹுதா உமர் ஆசிய நாடுகளில் முதன் முதலாக ஆண் பெண் என இருபாலாருக்கும் வாக்குரிமையை வழங்கிய நாடு இலங்கை. ஆசியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பை ஆரம்பித்த நாடு. உலகின் முதலாவது பெண் பிரதமரை தெரிவுசெய்து உலகுக்கு பாலின சமநிலையயை காட்டிய நாடு. உலகிலேயே முதன் முதலாக வனவிலங்கு சரணாலயத்தை அமைத்த நாடு. உலகுக்கு உயர்தர தேயிலை மற்றும் உயர்தரமான வாசனைகொண்ட கறுவாவை ஏற்றுமதி செய்த நாடு என பட்டியல் இடும் அளவுக்கு சிறப்புகள் நிறைந்தது எமது தேசம். பல்வேறு சிறப்பு பெருமைகள் கொண்ட இந்துசமுத்திரத்தின் முத்துக்கு... மரகதத்தீவுக்கு... புராதன பாரசீக வணிகர்கள் விளித்த செரண்டிப்…
-
- 2 replies
- 977 views
-
-
அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களிலிருந்து ட்ரம்ப் விடுவிப்பு! அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளதாக செனட் சபை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் தமது எதிர் வேட்பாளரான ஜோ பைடனை வீழ்த்த திட்டம் தீட்டியதாகவும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செனட் சபையில் இதுகுறித்து விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் பதவி நீக்கம் செய்ய கோரும் இரண்டு தீர்மானங்களின் இறுதி வாக்களிப்பில் 52 – 48, 53 – 47 என்ற எண்ணிக்கையில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். செனட் சபையில் பிற்பகலில் வாக்கெடுப்பு நடத்…
-
- 0 replies
- 191 views
-
-
சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் காரணமாக உங்கள் வாழ்க்கையே மாறிப் போவதைப் பற்றி கற்பனை செய்து பாருங்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் அவருடைய வீட்டுக் கதவை காவல் துறை அதிகாரிகள் தட்டியபோது, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் மிக உயர்ந்த நிலையில் இருந்த ஒரு விஞ்ஞானிக்கு இதுதான் நடந்தது. தேச துரோகி பட்டம் கால் நூற்றாண்டுக்கு முன்பு குளிர்காலத்தின் பகல் நேரத்தில் காவல் துறையினர் 3 பேர், கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் நகரில் குறுகலான ஒரு சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் பணிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொண்டனர் என்று நம்பி நாராயணன் நினைவுகூர்கிறார். டி.ஐ.ஜி. அவருடன் பேச விரும்புவதாக நம்பி நாராயணனிடம் காவல…
-
- 1 reply
- 750 views
-
-
இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபயராஜபக் இலங்கையின் சுதந்திரதினம் நேற்றைய நாள் கொண்டாடப்பட்டதுசுதந்திர தினத்திற்கான மரியாதையை ஏற்றுக் கொண் டார். இவை வழமையான சம்பிரதாயங்களாக இருப்பினும் இந்த நாட்டின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் முக்கியமான இரண்டு சம்பவங்கள் நடந்தாகி அதில் ஒன்று தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் இசைக்கப்பட்டு தமிழ் புறக்கணிக்கப்பட்டது. அதாவது சுதந்திரதின நிகழ்வின் போது தேசிய கீதம் சிங்களத்தில் முதலிலும் தமிழில் இரண்டாவதாகவும் இசைக்கப்படுவது வழக்கம்.ஆனால் இம்முறை தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தவிர இரண்டாவது சம்பவம் ஜனாதிபதி கோட் டாபய ராஜபக் சுதந்திரதின நிகழ்வில் முதன்மைக்குரிய மரியாதையை ஏற்பதற்காக இராணுவ பட்டயங்களுடன் வந்திருந்…
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கையின் 72 ஆவது சுதந்திரதினம் இன்றாகும். இதை நாம் கூறும் போது இலங் கையின் சுதந்திர தினமா அல்லது சிங்கள இனத்தின் சுதந்திர தினமா என்ற கேள்வி எழுகிறது. இந்தக்கேள்விக்கான பதிலை தமிழ் மக்கள் கூறுவதாக இருந்தால் கூறுவர். இந்தப்பதில் கண்டு யாரேனும் விளிப்பார்க ளாயின் சுதந்திரம் இலங்கைக்கானது என் றால் அந்தச்சுதந்திரம் எங்களுக்கு மட்டும் இல்லாமல் போனது ஏன் என்ற கேள்வி அடுத்த தொடராக எழும். ஆக இலங்கைக்குச் சுதந்திரம் வழங்குவ தாக நினைத்த பிரிட்டிஸார் அதனை சிங்கள தரப்பிடம் கையளிக்க; அவர்கள் இலங்கை பெளத்த சிங்கள நாடு என கூற இலங்கைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் ஓர் இனத்திற்காகிப் போயிற்று. இதன் காரணமாக கடந்த 72 ஆண்டுக ளாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காகப…
-
- 0 replies
- 471 views
-
-
தமிழில் தேசிய கீதம் என்.கே. அஷோக்பரன் இலங்கை தனது 72ஆவது சுதந்திர தினத்தை நாளை (04) அனுஷ்டிக்கிறது. பிரித்தானிய கொலனித்துவத்தின் பிடிகள் தளர்ந்த 1948லிருந்து, இலங்கை பல்வேறுபட்ட சவால்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அதில் பெருந்துரதிர்ஷ்டம் மிகுந்த சவால், இலங்கையை இன்றுவரை தொற்றிக்கொண்டு நிற்கும், இனப்பிரச்சினை என்றால் அது மிகையல்ல. எழுபத்தி இரண்டாவது சுதந்திரதினத்தின் கொண்டாட்டங்கள் தொடர்பில், இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்விகளில் ஒன்று, இம்முறை தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுமா என்பதாகும். 2015 ஜனவரி, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இடம்பெற்ற சுதந்திரதின விழாக்களில், தேச…
-
- 0 replies
- 331 views
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்து - பெளத்த மாநாட்டில் கலந்து கொண்ட பெளத்த பிக்குகள் ஆற்றிய உரைகள் தமிழ் மக்களை அவர்கள் பால் கவனிக்க வைத்துள்ளது. பெளத்த பிக்குகள் என்றால் அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்றே இது காறும் தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அதில் நியாயமும் உண்டு. எனினும் கோட்டாபய ராஜபக் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிற்பாடு பெளத்த தேரர் களின்கை இன்னும் ஓங்கியிருப்பது போன்ற நிலைப்பாடு தெரிகிறது. அதேநேரம் கடந்த காலங்களில் இனப்பிரச் சினைக்கான தீர்வு முயற்சிகளையயல்லாம் தடுத்தாற்கொண்டவர்கள் பெளத்த தேரர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வாகப் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதை முன்வைத்தபோது, அதனை எதிர்ப் பதில…
-
- 0 replies
- 279 views
-
-
பண்ணைக் கொலை: Call me -மயூரப்பிரியன் கணவன், மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வுகள், அன்யோன்யங்கள் குறைந்து, சந்தேகங்கள் எழுவதால் விரிசல்கள் ஏற்பட்டு, பல குடும்பங்களில், குடும்ப வன்முறைகள் தலை தூக்குகின்றன. அவற்றின் அடுத்த கட்டங்களாக, அவர்களிடத்தில் பிளவுகள், வன்மம் தோன்றி, விவாகரத்து மட்டும் நீளுகின்றன. இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம், இன்றைய சமூகத்தின் உள்ஊடாட்டங்களை வௌிப்படுத்தி நிற்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம், யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் மாத்திரமன்றி, முழு இலங்கையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. புதன்கிழமை, 22ஆம் திகதி, காலை வேளை, யாழ்ப்பாணம் வழமையான சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. யாழ்.நகர்…
-
- 6 replies
- 1.2k views
-
-
செய்திக்குழு பிபிசி மானிட்டரிங் படத்தின் காப்புரிமை Getty Images கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4500 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா தவிர வேறு எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என்பது குறித்தும், இந்த வைரஸ் பாதிப்பின் காரணம் வௌவால் இறைச்சி உள்ள சூப்தான் என்று கூறும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவ்வாறான காணொளிகள் எங்கிருந்து பகிரப்பட்டது, ஏன் பரவுகிறது என்பது குறித்து பிபிசி மானிடரிங் குழு ஆராய்ந்தது. வௌவால் சூப் காணொளிகள் கொரோனா வைரஸ் உருவானதன் காரணம் குறித்து ஆரம்பத்தில்…
-
- 0 replies
- 860 views
-
-
உலகின் மிகப்ப;ழை;மையான தொழிலாகக் கருதப்படும் பாலியல் தொழில், பல நாடுகளில் சட்ட;ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், மற்றும் சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வகையில் சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. நமது அயல்நாடான இந்தியாவில் இத்தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், பாலியல் தொழிலுக்கு பெயர் பெற்ற, சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்துள்ள மற்றும் அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் ஆசிய நாடான தாய்லாந்தில் அது சட்ட விரோதமானதாகவே கருதப்படுகிறது. இலங்கையைப் பொறுத்த வரையில், பாலியல் தொழிலானது சட்டவாக்க கட்டுரை 360(சி) பிரிவின்படி, சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தொழிலாகவே கருதப்படுகிறது. இத்தொழில் அயல்நாடுகளில் உள்ளதைவிட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. என…
-
- 0 replies
- 349 views
-
-
‘தலைக்கறிக்கு’ போட்டிபோடும் தலைநகரில் தமிழர் அரசியல் -விரான்ஸ்கி ஆட்சிக்கு வந்திருக்கும் கோட்டாபயவைத் தமிழர் தரப்பு எவ்வாறு சமாளிக்கப்போகிறது? அதற்குத் தமிழர் தரப்பு வகுத்திருக்கும் புதிய அரசியல் வியூகங்கள் என்ன? பழைய சூத்திரங்கள் இனிச் செல்லுபடியாகுமா? தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கின்ற அரசியல் கருத்துகளை வெளிப்படையாகவே தெரிவித்துவரும் கோட்டாபயவை, தமிழர் தரப்பு இனி யாரை வைத்து மடக்கப்போகிறது? என்றெல்லாம் கேள்விகள், சந்தேகங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றபோது, தமிழர் தரப்போ, புதிய அரசியல் சிக்கல்களோடு குத்திமுறிந்துகொண்டிருப்பது, அண்மைக்கால அரசியல் நகர்வுகள் மூலம் வெளிச்சமாகி இருக்கிறது. அதாவது, கொழும்பு தேர்தல் மாவட…
-
- 0 replies
- 603 views
-
-
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட தேசிய புலனாய்வு சட்டத்தை (National Intelligence Act) உருவாக்கும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதன்மூலம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை வரைவதற்கான ஆணையை அரசாங்கம், சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்ப முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கியமானதும் முதன்மையானதுமான இலக்கு. நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது தான். புலனாய்வுக் கட்டமைப்பை பலப்படுத்துவதையே அந்த இலக்கை அடைவதற்கான பிரதான மூலோபாயமாக அரசாங்கம் கையாளுகிறது. போர்த்தளபா…
-
- 0 replies
- 472 views
-
-
எனக்கு இப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - பாராளு மன்றத்தில் ஹக்கீம். - செய்தி . . 2000 வசந்த காலமென ஞாபகம். இரவிரவாக தோழர் தலைவர் அஸ்ரப்புடன் பேசிக்கொண்டிருந்தேன்.அதிகாலைதான் என்னை என் விடுதிக்கு அனுப்பி வைத்தார். மாலை நோர்வேக்கு செல்லும் அவசரத்தில் இருந்தேன். ஆனால் சற்று நேரத்தில் தோழர் அஸ்ரப் கார் அனுப்பி திரும்பவும் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மாலை என்னை விமான நிலையம் அனுப்பிவைப்பதாக கூறி அதிகாலை தோழர் தலைவர் அஸ்ரப் அவர்கள் என்னை மாவனல்ல அழைத்துச் சென்று காலை விருந்தின்போது தனது வலது கையென தோழர ரவூப் ஹக்கீமை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதற்க்கு கொழும்பில் முதல்நாள் தனது வீட்டில் வைத்து தோழர் பசீர் சேகு தாவுதை எனது கை வாழ் என அறிமுகம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
பிறிதொரு கட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ள சுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் (எம். எப்.எம். பஸீர்) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் விசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு, குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்ர் பிரான்சிஸ் தொடர்பிலான விசாரணைகள் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்திய பிறிதொரு கட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சனின் கீழ் மனித படுகொலைகள் தொடர்பான விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சத் முனசிங்க, பொலிஸ் பரிசோதகர் .இக்பால் உள்ளிட்டோர் கொழும்பு பிரதான …
-
- 0 replies
- 764 views
-
-
பொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று இன்று தைப்பொங்கல். பூமியில் பயிர்கள் விளைந்து மானிடர் உள்ளிட்ட ஜீவராசிகள் பசியாறுவதற்கு மூல காரணனாய் நிற்கின்ற சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகத் தைப்பொங்கல் அமைகிறது. நிலத்தை உழுது பயிரை விளைவித்த விவசாயிகள் தங்களின் வேளாண் செய்கைக்கு உதவிய சூரியபகவானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து முக்கனிகளும் பசும் பால், நெய், தேன் வகைகளும் சேர்த்துப் படையல் செய்து, சூரியபகவானுக்குத் தமது நன்றியைத் தெரிவிக்கின்ற நாளாகத் தைப்பொங்கல் திருநாள் அமைகிறது. தமிழர் திருநாள் என்று போற்றப்படுகின்ற தைப்பொங்கல் தட்சணாய காலம் கடந்து, உத்தராயண காலம் தொடங்கும் தைமாதத்தை வரவேற்கின்ற பொங்கலாகவும் அமைகிறத…
-
- 3 replies
- 1.2k views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கரையோர…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒருவர் எவ்வளவு படித்தவராகவும் செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்ந்தாலும் தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். கண்டால் மரியாதை செலுத்தத் தவறவும் மாற்றார்கள். சில விஷயங்கள் மாற்றம் அடைவதில்லை. ஆசிரியருக்கு கனம் பண்ணுவதும் இவ்வாறே சங்க கால முதல் நம்மிடையே நீடித்து வந்துள்ளது. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணமும் உண்டு. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமீபத்தில் கிழக்கு மாகாணம் சென்றிருந்தபோது தனக்கு றோயல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியரைக் கண்டு அவரை கௌரவப்படுத்தி வந்திருக்கிறார். அந்த ஆசிரியர் பெயர் சிவலிங்கம் மாஸ்டர். அது பற்றி அவரிடம் பேசுவதற்காக பெரிய கல்லாற்றில் அமைந்துள்ள சிவலிங்கம் ஐயாவின் வீட்டிற்குச் சென்றோம்.பொக்ைக வாய், கபடமற்ற புன்…
-
- 0 replies
- 636 views
-
-
சிஎன்என் தமிழில் வீரகேசரி இணையம் ஈரானில், யுத்தம் குறித்த அச்சங்களிற்கு மத்தியில் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் ஈரான் ஜனாதிபதி 1988 இல் இடம்பெற்ற சம்பவத்தை உலகம் மறக்ககூடாது என வேண்டுகோள் விடுத்தார். 1988 ம் ஆண்டு அமெரிக்க கடற்படை கப்பலொன்றின் தாக்குதலில் 290 பேருடன் பயணித்த ஈரானின் விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவத்தையே அவர் நினைவுகூர்ந்தார். ஈரானின் எயர்பிளைட் 655 எனும் எயர்பஸ் 300 ரக விமானம் 290 பேருடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை அமெரிக்காவின் யுஎஸ்எஸ் வின்செனஸ் என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை அந்த விமானத்தை தாக்கியது. 1988 ம் ஆண்டு யூலை 3 ஆம் திகதி துபாயிலிருந்து ஈரானிற்கு பாராசீக வளை…
-
- 1 reply
- 973 views
-
-
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை மரங்களுக்கு வேரோட மண் இருக்கிறது. பறவைகளுக்குக் குஞ்சு பொறிக்கக் கூடு இரக்கிறது. காட்டு விலங்குகளுக்கு உறங்குவதற்குக் குகை இருக்கிறது. ஆனால்.... தங்களுக்கென்று தரையோ, வானமோ, கடலோ, நிலமோ இல்லாத அனாதைகளாய், அடிமைகளைவிடக் கேவலமாய்... வாழ்க்கை என்ற சூழலில் வாடிக் கொண்டிருப்பவர்கள் அகதிகள். இனங்களுக்கிடையேயான இனக் கலவரங்கள் காலகாலமாய் நடந்து வரும் நிலையில் வரலாறு காணாத மிகப் பெரிய இனக்கலவரம் 1983-இல் இலங்கையில் ஏற்பட்டது. கலவரங்களும் யுத்தங்களும் ஏற்படுத்திய கொடிய பாதிப்புகளில் இருந்து.... தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிய துணியோடு குழந்தை குட்டிகளுடன் தமிழ்நாட்டின் கரைகளைத் தேடி, படகுகளில் உயிரைப் பணயம் வைத்து வந்து த…
-
- 0 replies
- 621 views
-
-
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் நாட்டில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்ததாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவை வேலூர் ஊரீசு கல்லூரியில் இன்று (10) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் க.வி.விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கை…
-
- 2 replies
- 693 views
-
-
தமிழரசு கட்சியை சேர்ந்த குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக வெளியான குற்றசாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது. வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக எமது கட்சியின் உறுப்பினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வவுனியாவில் இன்று கூடிய தமிழரசுகட்சியின் வவுனியா கிளை ஆராய்ந்திருந்தது. இந்நிலையில் அவர் மீது கட்சியின் தலைமை விசாரணை ஒன்றை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் வவுனியா மாவட்ட கிளை ஏகமனதாக தீர்மானித்துள்ளது. …
-
- 1 reply
- 328 views
-
-
இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். மலையக உரிமை குரல் உட்பட சில அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரை தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் தங்கை ஏற்றி ஆரம்பித்து வைத்தார். அத்துடன், நிகழ்வின் போது, அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான 'கள்ளத்தோணி' நூல் வெளியிடப்பட்டது. அத்தோடு, காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம், மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெற்றது. அதன்பின்னர் மலையகத் த…
-
- 0 replies
- 682 views
-
-
கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவதாக பொது மக்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர். தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசல கூடமாக காணப்படும் இம் மலசல கூடம் சுத்தம் செய்யப்படாது கைவிடப்பட்டது போன்று காணப்படுகிறது. மலசலம் கழிக்க செல்கின்ற பொது மக்களும், வர்த்தகர்களும் முகம் சுழிக்கும் வகையில் குறித்த மலசல கூடம் துர்நாற்றம் வீசுவதோடு சிறுநீர் கழிக்கும் பகுதியில் சிறுநீர் தேங்கி நிற்பதனையும் காணக் கூடியதாக உள்ளது. கரைச்சி பிரதேச சபையினர் சந்தையில் உள்ள வர்த்தகர்களிடம் நாளாந்தம் இவற்றுக்கெல்லாம் சேர்த்து வரிகளை அறவிட்டு வருகின்ற போதும் சந்தைiயினை சுத்தமாக வைத்திருக்கவில்லை என …
-
- 0 replies
- 380 views
-