நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
சுரஞ்சனா திவாரி பிபிசி செய்தியாளர் கிட்டத்தட்ட 200 கோடி மக்கள்தொகை கொண்ட தெற்காசியா, தற்சமயம் மிகவும் கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. கொரோனா தொற்றுப் பரவல் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. சிறிய நாடுகளில், குறிப்பாக இலங்கையில் இது தீவிரமாகக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், இந்த நாடுகளில் சீனா செய்துள்ள நிவாரணப் பணிகளின் வேகம், இந்த நாடுகளில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையின் நகரங்களில் உள்ள சாலைகள் வெறிச்சோடியுள்ளன. மே 25 வரை, மக்கள் அத்தியாவசி…
-
- 0 replies
- 501 views
-
-
வணக்கம், சில நாட்களுக்கு முன்பதாக, யூ டியூப் தளத்தில் எமது பிரச்சினை சார்ந்த இரு ஒளிப்படங்களுக்கு எனது கருத்தினப் பதிந்திருந்தேன். பல சிங்களவர்கள் அதற்கு எதிர்க்கருத்துப் பதிந்திருக்கிறார்கள். நானும் முடிந்தவரை பதிலளித்து வருகிறேன். அரசியல் சார்ந்த கருத்தாடலில் எனக்கு கள உறவுகளின் உதவி தேவை. நேரமிருந்தால் நான் இணைத்திருக்கும் ஒளிப்பட இணைப்பிற்குச் சென்று உங்கள் கருத்தையும் பதியுங்கள். அன்டன் தேவசகாயம் என்கிற பெயரில் நான் பதிவிட்டிருக்கிறேன். http://www.youtube.com/watch?v=bnoxwLaaiHY http://www.youtube.com/watch?v=PUS_R1q3ND8 மிக்க நன்றி. ரகுனாதன் (அன்டன் தேவசகாயம்)
-
- 0 replies
- 501 views
-
-
தமிழர்கள் ஒன்றுபடாத வரை -விமோசனம் கிடைக்காது!! தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படாதிருந்தால் தனி ஈழம் என்ற சிந்தனை அவர்கள் மத்தியில் எழுந்திருக்கமாட்டாதென நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளமை ஆட்சியாளர்களின் கவனத்துக்குரியது. தற்போதும் தமிழர்களுக்குப் பல வகையிலும் அரசியல் நகர்வுகளால் அநீதிகள் இழைக்கப்பட்ட வண்ணம்தான் இருக்கின்றன. தமிழர்கள் எதிலும் முன்னிலை வகிக்கக்கூடாது என்பதை வேதவாக்காகக் கொண்டு பெரும்பான்மை இனவாதிகள் செயற்பட்டு வருகின்றனர். அரச நிர்வாக சேவையில் ஆட்களை இணைப்பதற்கான போட்டிப் பரீட்சையில் தமிழர்கள் அதிகம் சி…
-
- 0 replies
- 501 views
-
-
இலங்கையில் ஐ.எஸ். தாக்குதலும் உலகநாடுகளின் அனுதாபங்களும் ! இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் ஐ.எஸ் ஐ.எ.ஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு உலக நாடுகள் பலவற்றில் அஞ்சலிகள் மற்றும் கட்டணங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தற்கொலை தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் என்பன குறிவைக்கப்பட்டு இத்தாக்குல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இத்தாக்குதல்களை கண்டித்து உலக நாடுகளின் தலைவர்கள் ம…
-
- 0 replies
- 501 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் திடீரென தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை அவசியம் என்றும் கூட்டமைப்புடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் யாழில் வைத்து அழைப்பு விடுத்துள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனினால் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் ஒருங்கிணைக்கப்பட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பது சிறு பிள்ளையும் அறியும். அவ்வாறு அமைக்கப்பட்டிருந்த கூட்டமைப்பினை ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம் பூ சார்க்கரையாக கட்சிக்குள் நுழைந்த சுமந்திரன் 'தமிழரசுக் கட்சியை பலமுள்ளதாக்குகின்றேன்' என்று அக் கட்சியின் தலைமைக்கு கூறி வந்தார். ஆனால், தமிழரசு பலமடை…
-
- 0 replies
- 501 views
-
-
வடக்கில் அதிகரிக்கும் குடும்ப விரிசல்கள்! 'போதைக்கு என்ர கணவர் அடிமையானதால், தினமும் எனக்கு சித்திரவதைதான். என்ர உடம்பில காயமில்லாத இடம் ஒன்றுமே இல்ல. சித்திரவதை தாங்க முடியாமல் டிவோஸ் எடுத்தேன்' என்கிறார் கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த 30 வயதுடைய புவனா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆசிரியராகக் கடமையாற்றும் அவர், கடந்த பதினைந்து வருடங்களாக பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தினம் தினம் சித்திரவதைகளை தாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், இனியும் வேதனைகளை…
-
- 0 replies
- 501 views
-
-
பௌத்த அராஜகத்தின் கொடுந்தன்மையையும் சிங்கள மேலாதிக்கத்தின் அத்து மீறல்களையும் பௌத்த குருமாரின் அடாவடித்தனங்களையும் எடுத்துக்காட்டும் ஒரு சம்பவம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பெளத்த பிக்குவின் மயான அடக்கம். இந்து தர்மத்தையும் சம்பிரதாயங்களையும் அவமதிக்கும் விதமாக, பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் இறுதிக் கிரியைகளை மேற்கொண்டு மதத்தையும், மக்களையும் அவமதித்தது மாத்திரமல்ல சட்டத்தையும் நீதியையும் மீறிச் செயற்பட்டுள்ளமை குறித்த நாடொன்றுக்குள் நாம் மாத்திரமே அதிகாரங்கள் கொண்டவர்கள், எமது மதமே அரச ஆதிக்கம் கொண்டது, ஏனைய சமூகங்களும் மதத்தினரும் அடங்கிப்போய் விட வேண்டும…
-
- 0 replies
- 501 views
-
-
சீன கம்யூனிச அரசு உருவான 70ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. நாட்டுக்காக உழைத்தவர்களை நினைவுகூர்ந்துவரும் சீனா, தேசிய தினத்தை போற்றிவருகிறது. இந்நிலையில், சீனாவின் தொடக்கக்காலத்தை விவரிக்கிறது இந்த கட்டுரை. சீன குடியரசின் குவோமின்டாங் படைகளை எதிர்த்து மக்கள் விடுதலைப் படையினர் (பி.எல்.ஏ.) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக அப்போது பீகிங் என்று அழைக்கப்பட்ட நகரில் டியானென்மன் சதுக்கத்தில் பல நூறாயிரம் சீனர்கள் 1949 அக்டோபர் 1 ஆம் தேதி கூடினர். சீன நேரத்தின்படி பிற்பகல் 3 மணிக்கு, தலைவர் மாவோ சே- துங் - இப்போது மாவோ ஜெடாங் என உச்சரிக்கப்படுகிறது - சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி.) உருவாக்கப்படுவதை அறிவிக்க, வரிசையாக இருந்…
-
- 2 replies
- 500 views
-
-
தைவானை ஒலிம்பிக்கில் ஒரு நாடாக அங்கீகரித்ததற்கு எதிராக மாவோ 1956யில் ஒலிம்பிக் வெறும் விளையாட்டு என்று விட்டுவிடாமல் சீனா புறக்கணிப்பதாக அறிவித்தார். அடுத்த 25 வருடம் அதே காரணத்திற்க்காக சீனா ஒலிம்பிக்கை புறக்கணித்தது. அதே 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரி படையெடுப்பை கண்டித்து நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் புறக்கணித்தது. 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்ப்பிக்கில் நிறவெறிக்காக தென்னாப்பிரிக்கா ஒலிப்பிக்கில் இருந்து தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு தான் அனுமதிக்கப்பட்டது.1976 ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக்கில் இனவெறி கொண்ட தென்னாப்ரிக்காவோடு ரக்பி விளையாடிய நீயுசிலாந்து பங்கேற்றதற்காக 26 ஆப்பரிக்க நாடுகள் புறக்கணித்தது. 1…
-
- 1 reply
- 500 views
-
-
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று. ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை. அடுத்தது என்ன? முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீது அங்கொன்றும் இங்கொன்றுமாக தாக்குதல். இஸ்லாமியருக்கு சொந்தமான பிரபல வர்த்தகநிலையத்திற்கு எதிராக போராட்டம். இலங்கையில் இஸ்லாமியரின் ஜனத்தொகை விகிதாசாரம் வேகமாக அதிகரிக்கிறது. இதைத் தடுக்க இஸ்லாமியரைப்போல பௌத்தர்களும் ஐந்து தடவை மணமுடிக்க சட்டத்தில் மாற்றம் செய்யவெண்டுமென புத்தமதகுரு அறிக்கை. என்ன இன்னமும் புரியவில்லையா சிங்கள இனவாத சக்திகள் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகி…
-
- 1 reply
- 500 views
-
-
மக்களின் கேள்விகளுக்கு சீமானின் பதில்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது.. முகநூல் அன்பர்களின் கடினமான கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்.
-
- 0 replies
- 499 views
-
-
கோத்தாபயவின் மூன்று முகம்! கர்னல் ஆர் ஹரிஹரன் இலங்கையில் ஆகஸ்ட் 5 இல் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. முன் நடந்த தேர்தல்களிலிருந்து, இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. முதல் காரணம் கொரோனா தாக்கத்தால் தேர்தல் திகதி ஏற்கனவே இரண்டு முறை மாற்றப் பட்டது. அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் கூட்டங்களுக்கும், வீதியோர சந்திப்புக்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடத்தும் இடங்களில் அதிகாரிகளும், வாக்காளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள், எவ்வாறு வாக்குப்பதிவை பாதிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. இரண்டாவது, இலங்கை அரசியல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மா…
-
- 0 replies
- 499 views
-
-
சம உரிமையுடன் வாழ்வதை யார் ஏற்கிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்; சிவசக்தி ஆனந்தன் July 24, 2020 ரொஷான் நாகலிங்கம் “யாருடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது என்பது கேள்வியல்ல. யார் எம்தேசிய இனமும் இந்நாட்டின் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று நினைக்கின்றனரோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயார். அந்த அங்கீகாரத்தை ஏற்காதவரை எமது போராட்டமும் தொடரும்” என்று தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்ப்பாளருமான சிவசக்தி ஆனந்தன், “நாம் மேற்சொன்னபடி எமது நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமானால் எமக்குரிய அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். …
-
- 0 replies
- 499 views
-
-
மகிந்தவுக்கு என்னையா நடந்தது? ஆரப்பா வெருட்டினது???? https://www.youtube.com/watch?v=6r0tWQwUjkY&feature=youtu.be
-
- 0 replies
- 499 views
-
-
மூணாறில் அண்மையில் நடந்த மண்சரிவில் கொல்லப்பட்ட 86 தமிழர்களின் இழப்புக்கு நீதிகோரி தமிழர்களின் பிரதிநிதியான கோமதி அவர்கள் வீதியில் போராடி வருகிறார். தமிழர்கள் கொல்லப்பட்டு 7 நாட்களுக்குப் பின்னர் இப்பகுதிக்கு விஜயம் செய்தார் கேரள முதலமைச்சர். அவரது கார் தொடரணி போகும் பாதையில் நின்று அவரிடம் நீதிகேட்க, தன் உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் கோமதியை ஏறெடுத்தும் பார்க்காத முதலமைச்சர், தனது அதிகாரிகளுடன் இடத்தைப் பார்வையிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். வீதியில் போராடியதற்காகக் கோமதியை சிறையில் அடைத்துவிட்டது கேரளக் காவல்த்துறை. தமிழர்கள் என்பதற்காக வஞ்சிக்கப்படும் எமதினத்தின் வாக்குகளை விலைபேசி பதவிக்கு வரும் உள்ளூர் அரசியல்வாதிகள், பதவிக்கு வந்தபின்னர் தமிழர்கள் என்று …
-
- 2 replies
- 498 views
-
-
http://xa.yimg.com/kq/groups/16842064/806306129/name/FeTNA%20response%20to%20NCCT.pdf
-
- 1 reply
- 498 views
-
-
ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து மாற்றம்-வேல்ஸிலிருந்து அருஷ் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனா திபதித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையில் ஒரு அரசியல் தளம்பலை ஏற்படுத்தியுள் ளதுடன், பூகோள அரசியல் நலன்சார்ந்த அனைத்துலக வல்லரசுகளிடமும் புதிய நகர்வுக்கான சந்தர்ப்பங்களை தேடும் பணிக ளையும் விட்டு சென்றுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட் சிகள் பலமாக போர்க்கொடி தூக்கி வருகின் றன. கடந்த புதன்கிழமை கொழும்பில் அவர் கள் பேரணி ஒன்றை மேற்கொண்டதுடன், கண்டியில் நடைபெற்ற இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தையும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க புறக்கணித்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக எங்கு முறையிடுவது என்பது தொடர்பில் எதிர்க்கட் …
-
- 0 replies
- 497 views
-
-
12 பேர் கொண்ட ஐ.நா விசாரணைக்குழுவை மனிதஉரிமை ஆணையாளர் நியமித்தார்! [Friday, 2014-06-13 08:07:28] ஐ.நா.மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ளார் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிரேஷ்ட ஐ.நா. அதிகாரியான சண்ட்ரா பிடஸ் அம்மையார் இந்த விசாரணைக் குழுவின் இணைப்பாளராக இருப்பார் – செய்தி. (கறுப்பி யாழ் இணையம்) சரியான திசையில் அவசியமான நகர்வு. ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆமையின் முதுகில் சவாரி செ…
-
- 1 reply
- 497 views
-
-
மாதன முத்தாக்களின் கும்மாளம் November 20, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பெரும்பாலான சிங்கள வீடுகளில் இப்பொழுது “மாதன முத்தாக்களின்” கதையே பேசப்படுகிறது. மாதன முத்தாக்களை நம்பித் தங்களுடைய ஆட்டின் தலையைக் காப்பாற்றுவதற்குக் கொடுத்து விட்டோமோ என்று சிங்கள மக்கள் யோசிக்கிறார்கள். கடைசியில் பானையும் மிஞ்சாது. ஆடும் மிஞ்சாது என்ற நிலையென்றால் யாருக்குத்தான் யோசினை வராது? முட்டாள்களை நினைத்துச் சிரிப்பதற்கு இலங்கையில் மாதன முத்தாவின் கதை பிரபலம். அதிகாரத்தையும் அறிவீனத்தையும் பரிகாசம் செய்வதற்கு –பழிப்பதற்கு – இந்தக் கதையை விட வேறு எதுவும் சிறப்பில்லை. காலந்தோறும் இந்தக் கதையை நினைவூட்டும் ஆட்கள் இருப்பார்கள். வரலாற்று நிகழ்வுகளும் நடந்து கொண்டி…
-
- 0 replies
- 497 views
- 1 follower
-
-
வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு! பயங்கரவாதி ஷாகறான். கொழும்பு, ஜூலை 22, 2025: 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிழையான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான ஒரு பொலிஸ் பரிசோதகர் நேற்று (திங்கட்கிழமை, ஜூலை 21) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். வவுணதீவு சம்பவத்தின் பின்னணி (2018): 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வல…
-
-
- 7 replies
- 497 views
- 1 follower
-
-
கொரோனாவை விஞ்சிய ரிஷாட் – இலங்கையின் பேசுபொருளானார்… October 17, 2020 ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டு… அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்ற கருத்தை தனி்பட்டவகையில் தானும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பேருந்துகளில், புத்…
-
- 0 replies
- 497 views
-
-
ஊடகவியலாளர்களை, ஒரு நாட்டின் உளவாளிகள் என்ற எழுந்தமானமாக எதுவித ஆதாரமுமற்று குற்றம் சாட்டும் போக்கு ஒன்று வளர்ந்து வருவதைக் காண்கிறோம். இது ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை உருவாக்க உதவாது என்பதனை, பிரித்தானியாவில் இயங்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவதூறு அரசியலிற்குள் செல்ல விரும்பாததால் இதனை இத்தோடு விட்டு விடுகிறேன். ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் உருவாக வேண்டிய கால கட்டமிது. தமிழ், முஸ்லிம், சிவில் சமூகங்களும் முற்போக்கான சிங்கள சிவில் சமூகங்களும் இணைய வேண்டிய தேவையொன்று ஏற்படுகிறது. கட்சிகளைப் பொறுத்தவரை, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி …
-
- 0 replies
- 497 views
-
-
93 வயது முதியவர் அவர். தன் வாழ்நாள் முழுவதும் பொறியியல் துறையில் வேலை செய்து இப்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வேலையான துப்பாக்கி வடிவமைப்பு பரிசோதனைகளின் போது தொடர்ந்து உரத்த சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்ததால் காது செவிடாகி விட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக அவரது நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்கள் அவரைப் பெரிதாக ஏதும் பாதித்திருக்கவில்லை. அவர்தான் 1947-ம் ஆண்டு ஏகே 47 என்ற துப்பாக்கியை வடிவமைத்தவர். அவரது வடிவமைப்பில் உருவான துப்பாக்கி பின்னர் அவரது பெயராலேயே ஏகே 47 (அவ்டோமாட் கலாஷ்னிகோவ் மாடல் 1947) என்று அழைக்கப்படுகிறது. அவர் பழைய சோவியத் யூனியனைச் சேர்ந்த மிகயில் கலாஷ்னிகோவ். இப்போது சோவியத் யூனியனின் போலி சோசலிச குடியரசுகள் வீழ்த்தப்பட்…
-
- 0 replies
- 497 views
-
-
சமாதானத்துக்கான நொபல் பரிசு: இம்முறை யாருக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பரிசுகள் தருகிற சுவையை விட அது யாருக்குக் கிடைக்கும் என எதிர்வு கூர்வதில் சுவை அதிகம். பரிசுகள் ஏன் வழங்கப்படுகின்றன என்ற கேள்வி ஒருபுறம் பதில்களைத் தேடியபடி இருக்கையில், மறுபுறம் அது யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதைத் பொறுத்து பரிசின் நோக்கமும் போக்கும் விளங்கப்படுகின்றன; அங்கீகாரத்துக்கான ஆவல் பரிசுகளின் பெறுமதியை உயர்த்துகின்றன. இது உள்ளுரில் வழங்கப்படும் பரிசுகள் தொட்டு உலகளாவிய பரிசுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும். இதனாலேயே பரிசுகள் யாருக்குக் கிடைத்தன என்பதை விட யாருக்குக் கிடைக்கும் என்பதை அறியும் ஆவல் மிகுகிறது. நாளை 2016 ஆம் ஆண்டின் சமாதான நொபெல் பரிசு அற…
-
- 2 replies
- 496 views
-
-
மண்ணில் வாழும் மக்களுக்கு மழை தேவை என்பதற்காக மேகங்கள் திரள்வதில்லை.ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா சிறீலங்காவிற்கு வருவதில்லை. சீன மழை பொழிந்து சிறீலங்காவின் ஆறுகளும் குளங்களும் நிரம்பி விடக் கூடாது என்பதற்காக முதலீட்டு ஆதிக்க மழை பொழிய இந்திய மேகங்கள் இலங்கையின் வான் பரப்பை ஆக்கிரமிக்க முயல்கிறது. சிங்களத்தால் வரண்டு போயுள்ளன. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களில் 13 ஆவது திருத்தச் சட்டம் என்கிற சிறு மழை பொழிந்தாலே போதுமென நினைக்கிறது பாரத தேசம். பிரிந்த தாயக மண்ணில் மாகாண சபைக் குளங்களை நிர்மாணித்தாலும் கொழும்பிலுள்ள மத்திய நீரூற்றில் இருந்து ஓடிவரும் பேராறு தமிழர் தாயக எல்லைகளில் முடங்கி விடுகிறது. ஆனாலும் நீ…
-
- 1 reply
- 496 views
-