Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன்

Featured Replies

  • தொடங்கியவர்

அப்பு சாணக்கியம்!

எனக்கு உமதும், தமிழ்மகன் போன்ற சிலரின் பதிவுகளில் இருந்தும் நான் விளங்கிக் கொள்வது,

உங்கள் கருத்துக்கள் எல்லாம் ஒரு உறுதியான கொள்கைத்தளத்தில் இருந்து வருவதில்லைப் போல்த் தெரிகிறது.

அண்மையில் பஸ் குண்டுதாக்குதலில் கொல்லப் பட்ட அப்பாவி சிங்கள மக்களின் மரணங்களை, உமது சிந்தனை தமிழ்தேசியத்தின் தேவை என்று காட்ட முற்பட்டதும், அதை புலிகளின் கரத்தில் பழியைக் கொடுத்து கொண்டாடவும் ஆசைப் பட்டது.

அடுத்து இராணுவ ஆக்கிரமிப்பு தமிழ் பிரதேசங்களை அபகரித்துக் கொண்டு வரும் போது,

புலிகளின் போர்மௌனம் கலைக்க வேண்டும் என்று வசை பாடுகிறது.

நீர் புலிகளை ஆதரிப்பதும் , எதிர்ப்பதும் உமது விருப்பம் அதை எமது விருப்பம் ஆள விருப்பவில்லை ஆக உமது கொள்கைகளுக்கு ஒரு முகத்தைக் காட்டுவது இங்கே அவசியமாகிறது.

மேலும் சாணக்கியனுக்கு!

உமது களப்பெயர் பலபேர் உபயோகத்துக்கு விடப்பட்டுள்ளதா?

இல்லை என்றால் ஏன் இப்படி முன்னுக்கு பின் முரண்பாடு கொண்டதாக உமது கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கிறது:

புலிகளின் பின்வாங்கல்களுக்கு வசைபாடி புலிகள் பதிலடி தொடர்வதே இன்றய தேவை என்று பிதற்றுகிறீர்.

சிலவேளை இப்படி: உங்கள் போர்பித்தம் ஏன் இன்னும் தணியவில்லை சமாதானமே வாழ்வளிக்கும் என்று பிதற்றுகிறீர்.

சிலவேளை இப்படி: மனித உரிமை, மனிதாபிமானம் இவற்றைப் பற்றி எழுதித்தள்ளுகிறீர்.

இன்னும் ஒருசமயம் இப்படி: சிங்கள் மக்கள் பயங்கரவாதத்தால் கொல்லப் படும்போது சந்தோசப் படுகிறீர்.

ஆக உமது கருத்துப் பதிவுகளின் குறிக்கோள், புலிகளுக்கு அவப்பெயரைக் கொடுப்பதற்கு, கருத்துப் போக்கின் எந்தெந்த திசைகள் வசதியோ, அவைதான் தீர்மானிக்கின்றதோ உமது கருத்துருவாக்கத்தின் தன்மையை.

சிங்கத்தின் மடியில் இருந்து எலும்பு நக்கும் உம் புத்திக்கு நாம் என்னத்தால் சாத்த வேண்டும் நீரே சொல்லும் அதை.

தேவனிசத்திற்கு சாணக்கியனின் விளக்கம்,

பேசுவது பாதுகாப்பற்றது என கருதி அடக்கிவைத்திருந்த என் கருத்துக்களை (அரசியல்) முதலில் எழுத ஆரம்பித்தது இங்கே யாழ்களத்தில்தான். உமது மேற்குறித்த முதலாவது கருத்திற்கு ஒரு நீண்ட விளக்கத்தை அப்போதே நான் எழுதிய போதும் இணைய கோளாறு காரணமாக அது காணாமற் போய்விட்டது. வேலை நேரம் தவிர்ந்த கிடைக்கும் சிறிய ஒய்வு நேரத்தில் தான் நான் கருத்தெழுது என்பதால் எல்லோருக்கும் எப்போதும் என்னால் பதில் எழுத முடியாது.

எனக்கு நினைவிருக்கின்றபடி நான் ஆரம்பத்தில், சிறிலங்கா அரசியல் வாதிகளுக்கெதிராகவும் மற்றும் அவர்கள் சார்ந்த தமிழ் அரசியல் வாதிகளுக் கெதிராகவுமே எழுத ஆரம்பித்து பின்னர் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் இறுதியில் இருதரப்பினராலும் (அரசு, புலிகள்) மக்களுக்கு ஏற்படும் அவலம் குறித்தும் எழுதிவருகின்றேன்.

நீர் கூறியபடி நான் ஒரு தளத்தில் நிலையாக நிற்கவில்லை. ஒவ்வொரு முறையும் நான் எழுதும் போதும் என் அடிமனதில் இருந்து எழும் ஆதங்கத்தின் அடிப்படையிலும் ஒரு செய்தியை குறித்து எனக்கு ஏற்படும் உணர்ச்சியின் அடிப்படையிலும் மட்டுமே நான் எழுதுகிறேன். நீர் கூறியபடியே எனக்கு ஒரு பின்புலமோ தளமோ கிடையாது. ஒரு தரப்பு சார்ந்து எழுதவேண்டிய கட்டாயத் தேவையும் கிடையாது. ஒரு பாமரனாக மக்களில் ஒருவனாகவே எழுதுகிறேன். ஆனால் துணிவாக ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக எழுதுகிறேன். கூட்டத்தில் கல்லெறியும் வேலையை நான் செய்வதில்லை. பண்பான எதிர்கருத்துகளுக்கு முடியுமான வரை பதிலும் தருகிறேன்.

ஆரம்பத்தில் இராணுவத்திற் கெதிரான தாக்குதல்களில் பொதுமக்கள் மிகசர்வசாதாரணமாக்க கொல்லப்படும் போது அதனை தனியொருவனாக கண்டித்தேன். பின்னர் வாகரையில் மக்கள் இடம்பெயர அனுமதிக்கப்படாமல் வைத்திருந்த போது இராணுவத்தாக்குதல் ஆரம்பித்தால் அதன் விளைவை எண்ணி அதனையும் கண்டித்தேன். பொதுமக்கள் மீதான விமானத்தாக்குதல்கள் பரவலாக இடம்பெற்று வரும் சந்தர்ப்பத்தில் மன்னாரில் ஒரு ஊரே அழிக்கப்பட்ட போது தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை பாதுகாக்கும் கடமையை புலிகள் செய்யாததினால் கண்டித்தேன். பின்னர் பதிலாக தெற்கில் இடம்பெற்ற பஸ் குண்டுத் தாக்குதல்களால் விமானத்தாக்குதல்களை தடுக்கும் என்ற நோக்கில் அதை ஆதரித்தேன். ஒரு சாதாரணத் தமிழனாக இவ்வாறு தான் என்னால் சிந்திக்க முடிந்தது. நான் ஒன்றும் உம்மைப் போல உள்நோக்கம் கொண்ட தீவிரவிசுவாசியும் அல்ல, யாழ்களம் அதிகார பூர்வ இணையத்தளமும் அல்ல. நீர் எதிர்பார்ப்பது போன்ற ஒரு பக்கச்சார்பான கருத்துக்களை மட்டுமே பேசவேண்டும் எனில் அதற்கு புதினம் இணைத்தளம் இருக்கிறது. யாழ் கருத்துக் களம் என்பதே தேவையில்லையே.

ஆரம்பகாலத்தில் சில கருத்துகள் குறித்து உம்மிடமே ஆலோசனை கேட்டுமிருக்கிறேன். ஆனால் அதற்காக நான் உம்மை பின்பற்றுபவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு எதிர்பார்க்காதீர். கருத்துக்களை நேர்மையான ஆதாரபூர்வமான கருத்துக்களால் மட்டும் எதிர்கொள்ளும். அதன் மூலமே உமது கருத்தை நியாயப்படுத்தும். மாறாக தீய தமிழில் வசைபாடுவதன் முலமோ என் பிறப்பை, தொழிலை, குடும்பத்தினரை கிழ் தரமாக விமர்சிப்பதால் நீர் சார்ந்து நிற்கும் தமிழ் தேசியத்திற்குத்தான் சேறு பூசுகின்றீர் என்பதை எண்ணிப்பாரும். அவ்வாறான கருத்துக்களையும் கருத்தாளர்களையும்(?) நான் கருத்திலெடுப்பதில்லை. பதிலும் தரப்போவதில்லை.

மக்கள் சார்பில் எமது விடுதலை போராட்டம் குறித்து கேள்வி கேட்பதற்கு முன் தகமைகள் ஏதும் அவசியமில்லை. இதனால் பாதிக்கப்படும் மற்றும் பாதிக்கப்படுபவர்களுடன் வாழும் ஒருவன் என்ற உரிமையே போதுமானது. இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டவர்கள், வாழ்வாதாரங்களை இழந்து ஏழ்மை மற்றும் படிப்பறிவின்மையால் எமது சமுத்தினராலேயே இடம்பெயர்ந்த இடங்களில் சீரழிகப்படும் அபலைப் பெண்களின் கண்ணீர் கதைகள், மொழி தெரியாததால் விரக்தி அடைந்தவர்கள், புலிகளால் அடிப்படை உரிமை மீறப்பட்டவர்கள், சக சிங்கள தொழிளார்கள் என பல தரப்பட்டவர்களை நாளாந்தம் என் வாழ்வில் சந்திக்கின்றேன். அந்த கலவையான உணர்வுகளில் இருந்து தோன்றுவதே என் சிந்தனைகள். சில சமயங்களில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் வெட்கித் தலைகுனிந்துள்ளேன். சில சமயங்களில் அதனையே கேள்வியாக நான் இங்கே கேட்கிறேன். அதற்கான தகுந்த நேர்மையான எத்தனை பதில்கள் எனக்கு கிடைக்கின்றது? பெரும்பாலும் வசைகளே பதிலாக கிடைக்கின்றது.

இதிலிருந்து நான் புரிந்து கொண்டது இங்கே தமிழ்தேசிய ஆதரவாளர் என்ற போர்வையில் இருக்கும் பலருக்கு போராட்டம் குறித்து தெளிவான பார்வையில்லை. அவர்கள் முழுச் சுயநலவாதிகள், போராட்டத்தை ஒரு போகப்பொருளாக பார்கின்றனர். தமக்கு ஒரு கஷ்டம் என்றால் தாயகத்தை காட்டிக் கொடுத்கத்தயங்காதவர்கள் (மிக அண்மையில் யாழ் களத்திலேயே ஒருவரை உதாரணமாகக் கொள்ளலாம்). தாயகத்தில் உள்ள மக்களின் அலத்தை அறியாதவர்கள் அல்லது அறிந்தும் இரக்கம் கொள்ளாதவர்கள். தங்கள் படிப்பு, முன்னேற்றம், உழைப்பு, வீடு காணி கார் வாங்குதல் மற்றும் தங்கள் குழந்தைகளின் எதிர் காலத்தை வளமாக்கிக் கொள்வதில் குறியாக உள்ளவர்கள். தாயகத்தில் உள்ள தமிழ் குடும்பங்கள் முதியவர் இளைஞர் குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் போராட வேண்டும் என்று நினைப்பவர்கள். வீடியோக்களிலும் ஊடகங்களிலும் வெளியிடப்படுவதை மட்டுமே போராட்டமாக பார்ப்பவர்கள். அதன் பின்னே காட்டப்படாத காட்சிகள் குறித்து சிறிதும் சிந்தனை இல்லாதவர்கள். இவர்களை தான் நான் போர்பித்தம் தலைக்கேரியவர்கள் என்றேன்.

இனப்பிரச்சனையின் இன்றைய நிலையில் புலிகளின் மூலமாகவே தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்க வழியிருக்கின்றது. மக்களின் உச்ச அளவிலான அர்பணிப்புக்கள் மூலமாக தமிழ் மக்களின் அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக புலிகள் இன்று உள்ளனர். ஆனாலும் புலிகள் தவறே செய்யாதவர்கள் என்ற கூற்றுக்கு நான் உடன்பாடில்லை. அதற்காக புலிகள் சார்பில் மக்கள் செய்த தியாகங்களை கொச்சைப்படுத்தவும் மாட்டேன். புலிகள் தங்கள் சில தவறுகளை திருத்திக் கொண்டு தமிழ் மக்களின் உண்மையான தலைமைத்துவமாக வேண்டும் என்பதே என் விருப்பம். அதனை தான் நான் இங்கே செய்கிறேன். சிங்களத்தை மட்டும் இங்கே வசைபாடுவதனால் ஒன்றும் விளையப்போவதில்லை.

பல்வேறு காரணங்களால் எமது மக்கள் தாயகத்தில் பல கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இது வருந்தத்தக்கது. இராணுவ நோக்கம் கொண்டு அதனை இப்போதுள்ள நிலையில் மனிதாபிமான முறையில் சீர் செய்ய முடியாமல் உள்ளது. ஆனால் புலத்தில் ஏன் பிரிவினைகள்? சமுகத்தில் முன்னனிக்கு வந்த பலர் இன்று தமிழ்தேசியத்திற்கு எதிராக பக்கம் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் முற்றுமுழுதாக சிங்கள இனவாதத்தால் விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள் என்ற கருத்தை ஏற்க முடியவில்லை. தமிழ் தேசிய ஆர்வலர்கள் என்ற போர்வையில் அடாவடி பண்ணும் மேற்குறிப்பிட்டவர்களும் இதற்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். இந்த நேரத்தில் புலத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் தாயகத்தில் உள்ள எம்மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு தங்கள் நிலைகளில் இருந்து கீழிறங்கிவர வேண்டும். நின்றவன் போனவன் எல்லோரையும் துரோகி என்று பட்டம் கொடுத்து தங்கள் கடமையை நிறைவு செய்யாமல், எதிர்ப்பாளர்களை பண்பான அன்பான முறைகளில் தொடர்ச்சியாக அணுகி எம் பக்கம் கொண்டுவருவதே காலத்தின் தேவை. ஒரு வெள்ளை இனத்தவரிடம் தூதுபோய் அவரை வழிக்குக் கொண்டு வருவதைவிட இவர்களை உள்ளீர்த்துக் கொள்வது மிக்கவும் பயன் தரும்.

அதற்கு முதலில் தாயகத்தில் மக்கள் படும் அவலத்தை புலம்பெயர் தமிழர் உண்மையாக உணர வேண்டும். புலிகளின் போர் வெற்றிகள் பற்றி பெருமை பேசுவதை விடுத்து, மக்களின் துன்பங்களை தமதாக உணர்ந்து ஒற்றுமையுடன் விரைந்து செயற்பட்டு மக்களை காக்க முன்வர வேண்டும்.

என் கருத்துக்கள் தோற்கடிக்கப்படுவது குறித்து நான் வருந்தவில்லை. நான் அதை வரவேற்கின்றேன். அதன் மூலம் என் பிழையான கருத்துக்களை திருத்திக் கொண்டு என் சிந்தனைகளை சீர்செய்ய தயாராக இருக்கிறேன்.

இதுவே என் நிலை விளக்கம் அல்லது நீர் கேட்ட என் முகம். இதனை நல்ல நோக்கம் கொண்டு பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.

வணக்கம்

(இது தவிர இந்த எலும்பு சூப்புதல், எச்சிலிலை சோறு, வயிறு வளர்த்தல், கு** கழுவுதல் போன்ற நீர் அடிக்கடி விரும்பி உபயோகிக்கும் சொற்பதத்திற்கான பதிலை உமது இன்னோரு பிரதி விம்பமான தென்தமிழீழத்து செந்தமிழ் செல்வனுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளேன்.)

Edited by saanakiyan

அட பழைய சாணக்கியனா? நான் யாரோ சாணக்கியன் பெயரில் இன்னொருவர் வந்துப்புட்டார் என நினைத்தேன்.

அது யார் தேவனிசம்? புதுப்பெயராக இருக்கிறது.

  • தொடங்கியவர்

அட பழைய சாணக்கியனா? நான் யாரோ சாணக்கியன் பெயரில் இன்னொருவர் வந்துப்புட்டார் என நினைத்தேன்.

அது யார் தேவனிசம்? புதுப்பெயராக இருக்கிறது.

குழப்பத்திற்கு மன்னிக்கவும்,

மேற்கண்டது கீழ்வரும் இணைப்பிற்குரிய எனது பதில்.

http://www.yarl.com/forum3/index.php?showt...id=262593&#

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைச்சன் இந்தாளுக்கு இரண்டாந்தரம் தண்ணி வார்படுதாக்கும் எண்டு(சாமத்திய வீடு)

நான் நினைச்சன் இந்தாளுக்கு இரண்டாந்தரம் தண்ணி வார்படுதாக்கும் எண்டு(சாமத்திய வீடு)

கு.சா அண்ணாவுக்கு ஆட்களிற்கு தண்ணிவார்த்துவிடுவதில் நல்ல அனுபவமோ? நீங்கள் சொல்லும் தண்ணி H2O(Water)இல்லைத்தானே? :P :P :P

வணக்கம் அண்ணோய் மக்ஸிமஸின் வணக்கங்கள்

கு.சா அண்ணாவுக்கு ஆட்களிற்கு தண்ணிவார்த்துவிடுவதில் நல்ல அனுபவமோ? நீங்கள் சொல்லும் தண்ணி H2O(Water)இல்லைத்தானே? :P :P :P

அந்த தண்ணி H2SO4

கு.சா அண்ணாவுக்கு ஆட்களிற்கு தண்ணிவார்த்துவிடுவதில் நல்ல அனுபவமோ? நீங்கள் சொல்லும் தண்ணி H2O(Water)இல்லைத்தானே? :P :P :P

அந்த தண்ணி H2SO4 அல்லது HCL அண்ணை நிச்சயமாக H2O இல்லை

மக்ஸிமஸ்

அந்த தண்ணி H2SO4

அந்த தண்ணி H2SO4 அல்லது HCL அண்ணை நிச்சயமாக H2O இல்லை

பாவி மக்ஸிமஸ் எத்தின பேர்ப்பா கிளம்பி இருகுறீங்கள்....?

  • 2 weeks later...

வணக்கம் ம் என்ன கோபமா?

வணக்கம் வாருங்கள் நல்வரவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.