Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் தியாகு ஜயாவின் போராட்ட செய்தி உடனுக்குடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2evh.jpg தமிழின உணர்வாளகளே அவசர செய்தி,,,,அனைவருக்கும் பரப்புங்கள்,,,,, இன்றுடன் 13வது நாளாக பட்டினிப் போராட்டத்தை தொடர்கிறார் தோழர் தியாகு.அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.இதற்கு மேலும் நாம் மவுனம் காப்போமேயானால் நாமே அவரை கொலை செய்கிறோம் என்று தான் அர்த்தம்.அவரை இழந்த பின்பு நாம் புலம்புவதில் ஒரு அர்த்தமும் இல்லை.வாருங்கள் தோழர்களே தியாகுவின் உயிரை காக்க.திரள்வோம் தோழர்களே தோழர் தியாகு இருக்கும் இடம் நோக்கி.இன்று மாலை 4 மணிக்கு வாருங்கள்.நீங்கள் மட்டுமல்ல உங்களுக்கு தெரிந்த அனைத்து நன்பர்களையும் அழைத்து வாருங்கள்.தமிழினத்திற்காக களமாடிய ஒரு போராளியை காக்க ஏதேனும் செய்வோம் வாருங்கள்.அவரது கோரிக்கைகளுக்கு வழு சேர்ப்போம்.அவரது உயிரை காப்போம். கட்சி கடந்து,இயக்கம் கடந்து தமிழினத்திற்காக போராடும் போராளி உயிரை காக்க வாருங்கள்.திரள்வோம் பெருந்திரளாய். நேரம் 4 மணி,உழைக்கும் மக்கள் மன்றம், வாசுதேவன் தெரு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பின்புறம்,
  • Replies 111
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
vgwx.jpg
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மெலிந்து நலிந்து போயுள்ளார்.. :(:unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மெலிந்து நலிந்து போயுள்ளார்.. :(:unsure:

 

அந்த ஜயாவின் உடல் நிலை மிகவும் கலவைக் கிடம் அண்ணா....

 

 

 

 

தோழர் தியாகுவின் போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல ,எமது எளிய ஊடகமாம் --சுவரொட்டி--மன்னார்குடியில் 

m4zt.jpg

 
 

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
69r3.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சினிமா, கிரிக்கெட், கோயில், பூசை, என்று அலையும் தமிழனுக்கு மற்றவர்களுக்காக பாடுபடுபவர்களை பற்றி நினைக்க நேரமேது? y5ym.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தனிமனிதன் மீது, தனிப்பட்ட காழ்ப்புணர்வுகள், கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவன் எமது இனத்துக்காகத் தன்னை மெழுகுவர்த்தியாக்கும் போது, அந்தக் கனலில் அந்த உணர்வுகள் அந்தனையும் எரிந்து போய்விடும்!

 

அந்தத் தனிமனிதனின் உண்ணாவிரதம், உங்கள் மனதை, ஒரு கணமாவது பாதித்திருக்கும் எனின், அது அந்தத் தனிமனிதனின் வெற்றியே! அதுவே, அஹிம்சையின் வெற்றியுமாகும்!

 

தமிழக ஊடகங்கள் இனியாவாது விழித்துக் கொள்ளட்டும்!

 

1376462_754569554559368_1086302429_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வந்து... சீமானையும், தியாகுவையும் தூற்றிக் கதைக்க.... ஒரு குரூப் வீடியோவுடன் வந்தவுடன்.... அதுக்கு, செம்பு தூக்கி காவடி எடுத்து.... தனது முகப் புத்தகத்தில் பதிகின்றேன் என்னும்....  ஆக்கள் இருக்கும் போது....  எவனுக்கும்.... ரோசம் வரும் தானே....
தியாகுவும்..... யாழ் களத்தை பார்க்கும் உறுப்பினர், என்பதை.... இந்தச் சிறு பிள்ளைக் கூட்டம், இலகுவாக மறந்து விட்டது.

காட்டுமிராண்டி கூட்டம் என கேள்விப்பட்டுள்ளேன் .......................ஆனாலும் அதையும் விட மோசமான கூட்டம் எம் இனத்தில் இருக்கிறார்கள் என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை .இந்த உன்னாவிரத்தத்தில் வீடியோ படம் காட்டியவர்களையும் அதனை பார்த்து ரசித்தவர்களையும் ......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 தியாகு அண்ணனின் கோரிக்கைகள் நிறைவேறவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் தோழர் தியாகு கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். இந்நிலையில் தோழரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. நீரிழிவு நோய் இருக்கும் தோழர் தியாகு மயக்கமடைய நேர்ந்தால் அது மிகவும் ஆபத்தானதாகும்.இதற்கு மேலும் இந்த தமிழ் சமுதாயம் மௌனம் காப்பது என்பது அவரை கொள்வதற்கு சமம். எனவே தோழர்களே இன்று மாலை 5 மணிக்கு அவர் உண்ணாவிரதம் இருக்கும் உழைக்கும் மக்கள் மன்றம், வாசுதேவன் தெரு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பின்புறம், புரசைவாக்கத்தில் ஒன்றுகூடுவோம். தோழர் தியாகுவின் கோரிக்கையை முன்னெடுப்போம். அவரது உயிரை காப்பாற்றுவோம். prq7.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. கோரிக்கைக்காக பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் தோழர் தியாகுவை காக்க என்ன செய்யப் போகிறோம். தோழர் தியாகுவை கொலை செய்துகொண்டிருப்பது இந்திய அரசு மட்டுமில்லை. மவுனம் காக்கும் ஒவ்வொரு தமிழனும் தான். தமிழ்த் தேசிய கருத்தியலை பரப்பிய முக்கியமான உண்மையான போராளிகளில் தோழர் தியாகும் ஒருவர் .தமிழ் தேசிய இனத்திற்கு,இளம் தலைமுறையினருக்கு வழி காட்ட இவர் போன்ற போராளிகள் மிகவும் தேவை .ஒரு வேளை இவரை இழப்போமேயானால் தமிழினத்திற்கான போராட்டக் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும். முத்துக்குமாரை இழந்தது போதும்,செங்கொடியை இழந்தது போதும்.நம் கண் முன்னே செத்துக்கொண்டிருக்கும் தோழர் தியாகுவை காக்க ஏதேனும் செய்வோம் தோழர் தியாகு உயிரை காக்க ஏதேனும் செய்வோம். w3w2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழன் எவ்வளவு... இழிவானவன்.
என்பதற்கு....  போன சனிக்கிழமை வந்து நின்று வாதாடிய.... ஒரு ஓட்டுக்குக்குழு மிருகமாவது .... வந்து,  தனது தரப்பு நியாயத்தை சொல்லியிருக்கலாம். எங்கை... போய்..... இந்த நாய்கள்.... பதுங்க்கியிருக்குதுகள்.  வள்..  .. வள்...
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு உயிரை காப்போம்! சர்வதேசமே காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே! baxq.jpg

தியாகு ஐயாவின் போராட்டத்திற்கு புதிய திரி ஆரம்பித்தமைக்கு நன்றி பையன் அண்ணா...

 

தியாகு ஐயா உண்ணாவிரதத்தை தொடர்கிறார் என நேற்று சத்யம் tv இல் கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் சென்று வீடியோவை பாருங்கள்.

http://sathiyam.tv/english/featured/thyagu-continues-hunger-strike-12th-day

 

 

  • கருத்துக்கள உறவுகள்

thiyagu1.jpg

 

தியாகு அவர்களின் இளமைத் தோற்றம்.

இதில் ஏற்கனவே தியாகு ஐயாவின் போராட்ட செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன. பார்க்காதவர்கள் சென்று பார்க்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=942846

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு அவர்கள் 12 நாள் கடந்தும் அவர்கொண்ட கொள்கையில் எந்த மாற்றமும்,இறந்துவிடுவேனோ என்ற பயமும் இல்லாமல் உறுதியோடு போராடிக்கொண்டு இருக்குறார் ..... அனால் இந்த நாட்டை ஆளும் அரசியல் வெறியர்கள் தியாகு அவர்களின் உயிரை பற்றியோ தமிழர்களின் உணர்வு பற்றியோ சிறிதேனும் கவலைப்படுவதாக தெரியவில்லை,ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லிகொள்ளும் போராளிகளும் தியாகு அவர்களின் போராட்டத்தை மக்களிடம் சரியாக கொண்டு செல்லவில்லை .... தியாகு அவர்களின் உயிர் இந்தியா என்ற மாயையை கலைக்கும் தனி தமிழீழம் போல தனி தமிழ் நாடு கோரிக்கையை வலுப்படுத்தும் என்பது மட்டும் உறுதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 நாளாக தனது பட்டினிப் போராட்டத்தைத் தொடர்கிறார் தோழர் தியாகு. தமிழ் உணர்வாளர்களே, ஈழ உணர்வாளர்களே, நண்பர்களே, அன்பர்களே அனைவரும் வாருங்கள். தொடர்ந்து ஊடகங்களும் ஆளும் அரசுகளும் கோரிக்கைகளைப்பற்றியும் தோழர் தியாகுவின் உயிரைப்பற்றியும் வாய்திறக்காத நிலையில் அடுத்தக்கட்டப் போராட்டங்களைப்பற்றி விவாதிப்போம். மக்களைத்திரட்டிப் பலக்களங்கள் அமைப்போம். இந்தியாவை இனக்கொலை இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பங்கேற்கவிடாமல் மறிப்போம். கோரிக்கைகளை வென்றெடுப்போம். தியாகு தோழர் உயிரைக் காப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
j6jw.jpg பட்டினிப் போராட்டம் இருந்து வரும் தோழர் தியாகுவை நேற்று இரவு தோழர் சீமானும், தோழர் கயல்விழியும் சந்தித்து கலந்துரையாடினர். போராட்டத்தை வலிமையாக முன்னெடுப்பது பற்றி தோழர் சீமான் நம்பிக்கை தெரிவித்தார்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8aq9.jpg

இன்று காலை உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் தலைவர் தோழர் குசேலர் தோழர் தியாகுவை சந்தித்து பட்டினிப் போராட்டத்தைப் பற்றி விசாரித்தார்

 

1380459_1440335176192786_785437113_n.jpg

 

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த முகநூல் தோழர்களே, தமிழ்ச்சமூகத்தின் போராட்டங்களை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில், நமக்கான மாற்று ஊடகமாய் வேறு வழியே இல்லாமல் நம் முன் நிற்பது முகநூல் மட்டுமே. 13நாட்கள் கடந்து, தன் உயிரை பணயம் வைத்து நமக்கான போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் தோழர் தியாகுவின் உடல் நிலை இன்று மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. 5நாட்கள் சந்திரபாபு டெல்லியில் உண்ணாவிரதம் இருந்ததையும், நஸ்ரியா தொப்புளையும் பெரிதாக எழுதும் ஊடகங்கள், 13நாட்கள் கடந்து நமக்காக போராடும் தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்தைப்பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.. ஊடகங்களின் இந்த வக்கிரப்போக்கிற்கு பதிலடியாய் விளம்பரம், பதாகைகள் என இணையம் அல்லாத மாற்று செய்தி முன்னெடுப்புகளுக்கு நம்மிடம் போதிய பணவசதி இல்லை. இருக்கும் கொஞ்ச தோழர்களும் உணர்வாளர்களைத்திரட்ட நேரில் சென்று ஆதரவு கேட்டு வருகிறார்கள். அது வலிமையற்றது. இருக்கும் வலிமையான ஒரே வாய்ப்பு இணையம்.. இணையத்தில் இருக்கும் முகநூல் பக்கங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு விடயங்களை மட்டுமே பெரிதாக பதிவிட்டு வருகின்றன. தோழர் தியாகுவை இழந்தால் கருத்தியலில் தமிழ் சமூகத்தை முன்னெடுத்துச்செல்லும் ஒரு பெரும் ஆற்றலை நம் சமூகம் இழக்கும். தியாகு தமிழனின் சொத்து! அவரை இப்படியே விட்டுவிட்டால், மௌனம் காத்து தோழரைக்கொன்ற கொலைப்பழியை நாம் ஏற்கவேண்டும். கேரளாவிலும், ஆந்திரத்திலும் நடக்கும் போராட்டங்கள் அங்குள்ள மக்களிடம் விரைவாக சென்றடைவதன் முக்கிய காரணம் அவர்கள் சோத்துக்கு உப்பு போட்டு சாப்பிடுகிற மான ரோசம் கொண்டவர்கள்.. இங்கே பெரும்பாலும் மொன்னயர்கள், அடிமைக்கூட்டம். விடுமுறைகளில் இன்பமாய் பொழுது போக்குங்கள், தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் நமக்காக, நம் கோரிக்கைக்காக போராடும் ஒரு போராளி இன்று செத்துக்கொண்டிருக்கிறார். நாம் என்ன செய்யப்போகிறோம்? குறைந்தபட்ச அறிவைக்கொண்ட காகங்கள் கூட, தம் இனத்தவன் யாரும் இறந்தால், கூட்டமாக வந்து பங்களிக்கும். இதற்கு மேல் எழுதவும் ஒன்றுமில்லை. தமிழனுக்காக குரல்கொடுக்கும் ஒருவர் யாராக இருந்தாலும் அவருக்கு உறுதுணையாய் நிற்பது தமிழனின் கடமை. நான் தமிழன்.. நீங்கள்? கட்சிகள், இயக்கங்கள் என்று கட்டுப்பட்டு நில்லாமல்((மொன்னைக்காரணம்)), உணர்வாளராய் வாருங்கள், இன்று (13-10-13) மாலை 4மணி: இடம்: புரசைவாக்கம்,பாதாள பொன்னி அம்மன் ஆலயம் அருகில், வாசுதேவன் சாலை,உழைக்கும் மக்கள் மாமன்றம்

1385535_1440559022837068_1820449183_n.jp

 

1385310_1440560389503598_359849876_n.jpg

 

994610_1440559199503717_1615087627_n.jpg

 

1393545_1440559456170358_919800057_n.jpg

 

(facebook)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.