Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை புதை தோண்டிப் புதைத்த, புலித்தோல் போர்த்து உரிந்த/உரித்த மிருகங்கள்

Featured Replies

... இங்கு யாழில், இத்தலைப்பில் சிலவற்றை கிறுக்க முற்பட்டதன் நோக்கம், தனி நபர்களை தாக்குவதற்காகவோ அன்றி சில அமைப்புகளை தாக்குவதற்காவோ இல்லை. ...

.. உலகில் யூத இனம் கண்ட ஹொலகோஸ்ற் அழிவுகளுக்கு ஒத்த, ஆனால் உலகமே பார்த்தும், பாராமல் இருக்க இந்த 21ம் நூற்றாண்டில் நடந்து முடிந்த, ஈழத்தமிழினத்துக்கு எதிரான முள்ளிவாய்க்கால் இனவழிப்பு படுகொலைகள் நடந்தேறி, மே18 உடன் தமிழ் தேசியத்தின் ஆயுதப் போராட்டமும் முடிவிற்கு வந்தது. புலத்தில் எல்லாவற்றையும் எம் கனவுகளுக்காகவே அர்ப்பணித்து, அதனையும், அங்கு கொலைக்கரங்களில் சிக்குண்டிருக்கும் எம்மக்களையும் இறுதி நேரத்தில் எப்படியாவது காப்பாற்ற நாடு நாடுகளாக, வீதி வீதிகளாக, இரவு பகல்களாக உறங்காது போராடினோம். ... ஆனால் எல்லாம் முடிந்து விட்டது.

மே18இன் பின், ... சிறுகச் சிறுக எத்தனையோ உயிர்கள், உடல்கள், ஆன்மாக்களின் அர்பணிப்புகளுடன் கட்டப்பட்ட கூடு, பிய்த்தெறியப்பட்டு அழித்தொழிக்கப்பட்டதினால், ... எம் வேதனைகள் கோபங்கள், விரக்திகள் எல்லாம் அதனை செய்து முடித்த சிங்களம், ஒட்டியிருந்த தாமும் தமிழர்கள் என்பவர்கள், அதற்கு துணை போன சர்வதேசம் என்பவைகள் மீதிலிருந்து, இந்தப் போராட்டத்தை நடத்தி வந்த புலிகளின் தலைமைகள், அதன் அமைப்புகள், அதன் ஆதரவாளர்கள் மீது திரும்பியது. எங்கள் ஆத்திரங்களின் வெளிப்பாட்டை, ஏற்கனவே மிக திட்டமிடப்பட்டவாறு சரியாக பயன்படுத்தியது சிங்களம்.

ஆனால் ....

... 2001ல் கையெழுத்து இடப்பட்ட யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்தது முதல், புலிகளை எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என்ற குறியுடன் செயற்திட்டங்களை சிங்களம் தீட்ட ஆரம்பித்தது. கடந்த காலங்களில் ஆயுதங்கள் மூலம் புலிகளை அழித்தோமா? பல தமிழ் ஆயுதம் தாங்கிய குழுக்களின் ஒத்துளைப்புகள் முழுமையாக இருந்தும், ஏன் முடியாமல் போய் விட்டது? என்ற பல கேள்விகளுக்கு விடை தேட முற்பட்டது சிங்களம்.

....கடந்த காலங்களில் சிங்களம், தம்முடன் ஒட்டியிருந்த மாற்றுக்கருத்தாளர்கள் என்று தம்மைத்தாமே கூறும் ஆயுதக்குழுக்கள் மூலம் எதனையும் சாதிக்க முடியவில்லை. மாறாக மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் செயற்பாடுகள், நடத்தைகளினால் வெறுப்புற்ற மக்களின் ஆதரவு புலிகளுக்கு கூடியதையே உணர்ந்தது. ...

... சிங்களத்தின் தேடலுக்கு ... முள்ளை முள்ளால் தான் அகற்ற வேண்டும் ... இன்னும் சொல்லப்போனால் ... வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் ... என்ற விடையும் கிடைத்தது. ..

... சில வருடகால தேடல்களில் கேள்விப்பட்ட சம்பவங்கள், அனுபவித்த நிகழ்வுகள், சில ஊகங்கள் போன்றவற்றின் அடிப்படையில் ... இக்கிறுக்கல்கள் ... யாழில் ...

(முக்கியமாக:- ... புலித்தோல் போர்த்து உரிந்த/உரித்த ... என்று எல்லோரையும் அடக்க முற்படவில்லை, அப்படியும் இல்லை. ஒரு சிலரே என்பதே உண்மையாகும்.)

... தொடரும் ...

  • கருத்துக்கள உறவுகள்

சொல்கின்றேன் என்று குறைநினைக்கவேண்டாம் நெல்லையன்

இதுவரை நீங்கள் இங்கு எழுதியவற்றை வெட்டி ஒட்டி ஒன்று சேர்க்கப்போகின்றேன் என்று தலைப்பை வையுங்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் இல்லாத கிறுக்கல்கள் வெறும் கிறுக்கல்கள் தான். :huh:

  • தொடங்கியவர்

சொல்கின்றேன் என்று குறைநினைக்கவேண்டாம் நெல்லையன்

இதுவரை நீங்கள் இங்கு எழுதியவற்றை வெட்டி ஒட்டி ஒன்று சேர்க்கப்போகின்றேன் என்று தலைப்பை வையுங்கள். நன்றி.

... அரோகரா ...! :lol:

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

... அரோகரா ...

  • தொடங்கியவர்

... ..

சில வாரங்களுக்கு முன், நண்பர் ஒருவரின் வீட்டில், சிறு ஒன்று கூடல் ... அங்கு சில முன்னால்கள் வந்திருந்தார்கள் .. கதைகளின் நடுவே ... பிரான்சிலிருந்தும் ****வை, பெரியவர்(?) வரச்சொல்லி, கொழும்பு போய் சந்தித்து வந்திருக்கிறானாம். ... எனக்கோ ஆச்சரியம், வாயில் வந்தது ... ஆரம்ப கால உறுப்பினர், பல தாக்குதல்களில் பங்கு, ஏதோ இந்திய இராணுவத்திடம் பிடிபட்டதினால், பின் சேர்க்கப்படவில்லை, அதன் பின்பும் இங்கு வந்து முழுமையாக வேலை செய்ததாக கேள்விப்பட்டேன் என்றேன் .. பதில் வந்தது ... அந்த இந்திய காலத்தில் பிடிபட்டு, பின் சேர்க்காமல் விட்டதை இலக்கு வைத்தே ... அணுகி கூப்பிடப்பட்டார்!!!!!!!!!! ... இது நடந்தேறியது நேற்று!!!

ஏறக்குறைய பெரியவர்(?) கைது செய்யப்பட்டு சரணடைந்த நாடகம் நடைபெற்று முடிந்த சில நாட்களில், மலேசியாவில் இருந்து ஒருவருக்கு ஓர் தொலைபேசி அழைப்பு ... அந்த ஒருவர், ஓர் முக்கிய முன்னாள்/ல்), எடுத்தாலாம் ... அண்ணை எப்படி இருக்கிறீர்கள்? இப்படி உதுகளை விட இயலாது அண்ணை! ஏதாவது செய்ய வேண்டும்! உங்க பிரிந்ததுகளையும் சேர்க்க வேண்டும்! உதுகளுக்காக நானும், **(இத்தனை) பேருடன் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று இறங்கி இருக்கிறன் அண்ணை. நீங்கள் கட்டாயம் உதிலை சேர வேண்டும்???? ... வினாடிகள் தாமதிக்காமல் இவரின் வாயிலிருந்து பதில் ... சுகி, உன்னை அண்ணை அனுப்பியது படிக்க!!!!??? நீ முதலில், உதுகளை உன் சொந்த மூளையில் கதைக்கவில்லை என்று எனக்கு தெரியும்! உனக்கு கொடுத்ததை மட்டும் செய்! உன்னை, அண்ணை உதுகளை கதைக்கவும் விட்டவரா??? .... கேள்விகள் துளைக்க ... தொலைபேசியும் துண்டித்தது!! ... ஆனால் அந்த சுகியின் வீச்சு பலரை குறி வைத்து நகர்ந்ததாம்!!!!!! ... இது நடந்தேறியது பெரியவரின் கைது சரணடைதல் நாடகத்துக்கு பின்!!!!

இது நடைபெற்றது மே 18 இனுடன் ... இவர் முன்னால் முக்கிய தளபதி! தமிழ்செல்வனின் கால் வாருதலோடு வெளியேற்றப்பட்டு, இன்று ஐரோப்பிய நாடொன்றில் ... தொலைபேசி அலற, எடுக்க ... எப்படி இருக்கிறீங்கள்?? இல் தொடங்கி, அண்ணை கன பிழை கடந்த காலங்களில் விட்டுட்டார், அதில் நீரும் ஒருவர் பலி, என்று தொடங்கி அடுக்கி, இனி உந்த பிழைகளை சீர் செய்து நாம் முன் செல்ல வேண்டும், இனி உங்கள் போன்றோர்தான் எம்மக்களின் விடிவின் முதுகெலும்புகள்!!!!உண்மையில் பாதிக்கப்பட்டவராகிய உம்முடன் மன்னிப்பு கேட்டு, உம் போன்றோரை அரவணைத்து, கொண்டு செல்ல முயல்கிறேன், உங்கு பலர் கடந்த காலங்களில் புலி எனும் பெயரில் செயற்பட்டதற்கு முற்றுப்புள்ளி நாம் வைத்து, நாம் நடக்க வேண்டியவைகளை(????) ஆலோசித்து முன் நகர்வோம்... எம் கனவுகளை!! ... கேட்டுக் கொண்டிருந்ததோ, பொறுமையின் உச்சத்துக்கு சென்று ... புலியும், பூனையும் வையடா போனை!!! .... இது நடந்தது .. மே18இனுடன்!!!!

....... தொடரும் ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

..... இச்சம்பவங்கள் என்னத்தை சொல்கின்றன ...

முன்னர் ஊருக்கு ஊர் சந்திகளில் நின்று "புதினம்" கதைப்பார்கள். அப்படியான வசதிகள் புலம்பெயர் நாடுகளில் இல்லையென்பதைத்தான் சொல்லுகின்றன.

முழுப்புலி, முக்காப் புலி, சருகு புலி, கடதாசிப் புலி, புனுகுப் புலி....... இப்படி எல்லாமே தாங்கள் புலிகள் என்று சொன்னால் மற்றவர்கள் மறுக்கவா போகின்றார்கள் :blink:

த்தூத்தேரி தென்னாடா கீது நம்ம நெல்லியான் சாரு ஏதோ பெருசா கீட போறாரு என்னு நினைச்சாக்கா பூ .. வருவாரு கீசுவானுருன்னு நினைச்சாம் காட்டியும். அவரு வெறும் பூசு வாணம் ஆகிட்டாரே. வெறும் காமெடி பீசு

  • தொடங்கியவர்

பேரீச்சை பழத்துக்கு கப்பல் விட்டவர்களும் ....

முன்னால் ஆயுத பயிற்சி பெற்ற போராளி, அதற்கு மேல் டாக்டர்! ... புலத்துக்கு வந்தும் ஒரு பிரிவாம் வைத்திய நிறுவனத்துக்கு பொறுப்பாளர்! ஆனால் அவரின் வைத்திய நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளிலும், அரசியல் செயற்பாடுகள். 2001 யுத்த நிறுத்தத்துக்கு பின் திடீர் அதிகரித்தது!!! ... அதனை பலர், இங்குள்ள தலைமைப்பூசாரி ஒன்றும் செய்கிறார் இல்லை, அதனால்தான் இவங்கள் ஏதும் செய்ய வேண்டும் என்று வெளிக்கிடுகிறார்கள் என நினைத்தார்கள் ... அக்காலத்தில் சில ஊத்தைகள் இங்கு சில சேஷ்டைகளை புரியவும், இவர் வந்து தானே ஒட்டி, இவன் தலைமை பூசாரி ஒன்றும் செய்கிறான் இல்லை, இவனை திறத்தினால் தான் ஏதும் இங்கு நடக்கும் என்ற புரட்டணியமுமாம்!!! ... அதற்கு மேல் அக்காலத்தில் வன்னி சென்று காஸ்ரோவிடம், தன்னை தான் இருக்கும் புலம்பெயர் தேசத்துக்கு பொறுப்பாளராக விடச் சொல்லி கேட்டதாகவும் ஓர் தகவல் ... அதற்கு மேல் பேரீச்சை பழத்துக்கு கப்பல் விட்டதாக முடிந்த, வணங்காமண் புரஜெக்டின் முக்கிய புரஜெக்ட் மனேஜர் இவர்!!! பின்னாளில் நா.க.த.அ இற்கான தேர்தல், சர்வஜன வாக்கெடுப்பிலும் முகிக்ய செயற்பாட்டாளரும்!! ... அதற்கு மேல் இங்கிருந்து வட அத்திலான்டிக் கண்டத்திலுள்ள நாடு ஒன்றில் கம்பு, கொட்டன் வாங்கலாம் என சென்று, கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் டாக்டர் அன்ட் கோவின் நெருங்கிய நண்பர்!!! அங்கு கம்பி எண்ணுவது, எங்கிருந்து போட்டுக் கொடுக்கப்பட்டது என்பதை உணர ஆறறிவு தேவையில்லை!!! ... இப்படியான தகுதிகளை எல்லாம் கொண்ட அந்த புலித்தோல் போர்த்த டாக்டர் .. பெரியவரின் கைது செய்யப்பட்டு சரணடையும் நாடகம் நடந்தேறிய பின் ... ஐயகோ இந்த முன்னாள் போராளிகளை நாம் வாழ வைக்க வேண்டும் என்ற கோசத்துடன் களமிறக்கப்பட்டு விட ... இந்தப் புலம் பெயர் தேசத்திலிருந்து ... ஐயகோ ஒப்பாரிக்கு இரங்கி ... இங்கிருந்து பழைய புலிகளை கயிறு போட்டு பிடித்து பெரியவரை சந்திப்பதாக, கோத்தாவை சந்திக்க தொடர்ச்சியாக அனுப்பிய மனிதராம் இந்த டாக்குத்தர்!!... அத்ற்கு மேல் வெள்ளம், வெக்கை, காத்து எண்டு ரிவிக்களிலும், ரேடியோக்களிலும் ஒப்பாரி வைத்து சேர்த்த மில்லியன்களை கோத்தாவின் கால்களில் சம்ர்பித்து, அஸ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிய கூட்டத்தின் முக்கியஸ்தகராம்!! ... சோழியன் குடுமி சும்மா ஆடாதென்பார்கள், ஆனால் விசிலடித்துப் பழகிய எமக்கு உந்த ஆட்டமெல்லாம் அன்று, தமிழ்த்தேசியத்துக்கான கரகாட்டமாகவே புலப்பட்டது ....!!!

சில மாதங்களுக்கு முன் இங்கு லண்டனிலுள்ள குறைடன் பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது, போனால் ... பஜாரில் ... ஒரு தெரிந்த முகம் நெருங்கி வந்து ... அண்ணை எப்படி இருக்கிறீர்கள்! என்னைத் தெரியும் தானே? நான் தான் பெரியவரின் மருமகன் (வாரிசாம்)!!!! நாட்டுக்கு போகப் போகிறீர்களோ? ஒரு போன் அடித்து விடுகிறேன், அந்த மாதிரி அங்கையெல்லாம் கூட்டிக் கொண்டு போய் காட்டுவார்கள்! அங்கை ஒரு பிரட்சனையும் இல்லை அண்ணை!! கிழமைக்கு ஒரு ஐந்து பத்துப் பேரை பிடித்து அனுப்புகிறதுதான் இப்போதையான் என் வேலை! ... தொடர்ந்தது அவ்வாரிசின் குரல்!! ... அந்த பெரியவரின் வாரிசு, பேரீச்சை பழத்துக்கு கப்பல் விடும் புரஜெக்டில் மிக முக்கிய செயற்பாட்டாளர்!! அதற்கு மேல் அப்புரஜெக்ட்டானது, பெரியவரின் சிந்தனையில் இருந்து தோன்றியதாகவும், அது பல மேற்கத்தேய நாடுகளின் அரசுகளுன் அறிவுறுத்தலுக்கு அமையத்தான் செயற்படுத்த பெரியவர் முயற்சி எடுத்து (அக்காலத்தில் தான் பெரியவர் முக மாற்றலுடன், தலைமைக்கும் பூச்சுற்றி புலம்பெயர் தேசமெங்கும் வெளிக்கிட்டவர் ... உந்த முகமாற்று மந்திரத்தை நாமும் விசிலடித்து மகிழ்ந்தது வேறு கதை!!), நம்பிக்கையானவர்களை கொண்டு செயற்படுத்த முனைகிறார் என்றும் விட்டவர்!!!

... உந்த பேரிச்சை பழத்துக்கு கப்பல் விட்டதில் ... பலர் கவுண்டார்கள்தான்!!! ... ஆனால் அதில் பலர் எழுந்து விட்டார்கள் என தப்பி விட்டார்கள், மீட்கப்பட்டு விட்டார்கள்!!!! ... ஆனால் இன்னும் கப்பல் விட்டு மீண்டவர்கள் என்று சில கறுத்த ஆடுகளும் கரை ஒதுங்கி கூட்டத்தினுள் ஒழிந்திருக்கிறனதான்!!!

....

  • தொடங்கியவர்

... ஆதாரங்கள், வதந்திகள், ஊகங்கள் ....

அண்மையில் இருவர் கதைத்துக் கொண்டிருந்த போது ... கதை சுற்றி வளைத்து, நாட்டுநடப்புகளில் வர ...

... அவன் (குத்தி) தன்னிருப்பை நிலைநிறுத்த தொடர்ந்து சிங்களவனுக்கு சேவகம் செய்தபடி, காட்டிக்கொடுக்கும் செயலை செய்கிறான்!! ... கண்டனீரா?? ... இல்லை அவன்(குத்தி) அங்கு கொலைகள், மிரட்டல்கள், கடத்தல்களில் ஈடுபடுகிறான், எல்லோருக்கும் தெரிந்தது தானே!! ... அவற்றை செய்ய பார்த்தனீரா?? ... அவனின்(குத்தியின்) அடியாட்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளர். பலர் தப்பியோடி உள்ளனர், இதற்குமேல் என்ன வேணும் ... அடேயப்பா, அவனுக்கு கீழ் ஓர் ஆயிரம் உள்ளார்கள், அதுகளில் ஒன்று இரண்டு செய்வது, அவனை(குத்தியை) எப்படி குற்றம் சாட்டுவீர்கள்??? ... கேள்வி ... அதற்கு பதில் ... வந்து கொண்டிருந்தது.

...முடிபென்ன ... கண்ணால் காணாததும், கண்டவர்களும் சிலரே, அவர்களும் சொல்ல பயப்படுவதினால் .... அங்கு குத்தி அன்ட் கோ செய்வனவைகள் ஆதாரமற்ற? அடிப்படையற்ற? வைக்களாகின்றனவா? ... விட்டு விட முடியுமா????

.... வதந்திகள் ... நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்!!! .... கிண்டினால் தான் அதனுள் தணல் உள்ளது தெரியவரும்!!! .... கிண்டுதலே நமக்கு ஈசி ... கனக்க வரும் ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நரம்பில்லாத நாக்கு

எப்படியும் வளைக்கலாம்

ஆனால் இதற்குள் எத்தனையோ பேரில் இளமை வாழ்க்கை மூச்சு மூழ்கிக்கிடக்கிறது.

பார்த்து..........

  • தொடங்கியவர்

நரம்பில்லாத நாக்கு

எப்படியும் வளைக்கலாம்

ஆனால் இதற்குள் எத்தனையோ பேரில் இளமை வாழ்க்கை மூச்சு மூழ்கிக்கிடக்கிறது.

பார்த்து..........

விசுகர் அண்ணா, ... சொல்கிறேன் என குறையேதும் நினைக்காதீர்கள், தங்களுக்கு சொந்தமாக இதை எழுதுவதற்கேற்ற ** இல்லை!! ... ஓரிருவர் சொல்ல ஆடுகிறீர்கள்! ... இல்லை. ** இருக்குமேயாயின், தேடுங்கள் .... எங்கே இப்போ நிற்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை வரும்! ... நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கின்றேன்

எமக்குள் எந்தளவுக்கு கருத்து மோதல்களோ பாதை மாற்றங்களோ இருந்தாலும் எவரும் எவரையும் காட்டிக்கொடுக்கவோ சிங்களவனிடம் மண்டியிடவோ இலட்சியத்தை அடைமானம் வைக்கவோ இல்லை. இதை மட்டுமே என்னால் ஆணித்தரமாக சொல்லமுடியும். சிலருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டதால் எமக்குள் வந்த இந்த பிரிவுகள் நிரந்தரமானவையல்ல. அவற்றை குறைப்பதற்கான வழிகளை விடுத்து பெருப்பிப்பதற்கான எந்த முயற்சியும் ஏற்புடையதல்ல. அத்துடன் அவர்களே எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்ற எமது எதிர்பார்ப்பும் நல்லதல்ல. முதலில் அவரவர் தேசியக்கடமையை நம்புவோம். அங்கீகரிப்போம்.

என்னைப்பொறுத்தவரை தமிழரின் தேசிய அபிலாசைகளுக்கு இடையூறு செய்பவர்கள் புலத்தில் மட்டுமல்ல தாயகத்திலும் மக்கள்முன் நடமாடமுடியாது. அப்படி நடமாடும்வரை அவர்கள் தமது கடமையைச்செய்யட்டும். நன்றி

  • தொடங்கியவர்

நரம்பில்லாத நாக்கு

எப்படியும் வளைக்கலாம்

ஆனால் இதற்குள் எத்தனையோ பேரில் இளமை வாழ்க்கை மூச்சு மூழ்கிக்கிடக்கிறது.

பார்த்து..........

... கருணா, புலிகளிலிருந்து வெளியேறிய கால கட்டத்தில் .. இங்கு ஐரோப்பாவில் இருந்து ஒட்டுக்குழுக்களினால் இயக்கப்பட்ட வானொலி ஒன்றுக்கு .. தீடீர் காதல் கருணா மேல் வந்து விட்டது, ... நாள் தோறும் கருணா புராணம்தான்!! ... அதற்கு தொலைபேசியில் வருபவர்களோ ... அந்தப்பிள்ளைதானே, எல்லாவற்றையும் செய்தது, அப்படியான பிள்ளைக்கு இவர்கள் செய்வதெல்லாம் சரியா??? என்ற கேள்விக்கு மேல், அந்தப்பிள்ளையை வாய் கூசாமல் இப்போ திட்டுகிறார்கள் ... என்றெல்லாம் அழுதார்கள்!!! ...

... அந்தப்பிள்ளை கருணா மட்டுமல்ல, முன்னுக்கும் போன பிள்ளை மாத்தயாவும், பின்னுக்கும் போன பிள்ளை கேபிக்காகவும், இப்படி சிலர் ஒப்பாரி வைத்தும்/வைத்துக் கொண்டும் தான் இருக்கிறார்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.