Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்தில் முன்னாளல்ப் பெண்போராளிகள் மேல் சிங்களப் பேரினவாதத்தால் நாளாந்தம் நடத்தப்படும் திட்டமிட்ட இனவழிப்புப் பாலியல் வன்புணர்வுகள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

90 களின் ஆரம்பக் காலத்தில் பொஸ்னியா மற்றும் குரோஷியாவில் சேர்பியப் பயங்கரவாதிகளால் முஸ்லீம் மற்றும் குரோஷியப் பெண்கள் மேல் நடத்தப்பட்ட திட்டமிட்ட பாலியல் வண்புணர்வுகளை ஒத்த கட்டாயச் சிங்களக் கருவூட்டல்களை சிங்களப் பேரினவாதம் தமிழர் தாயகத்தில் முன்னால்ப் பெண்போராளிகள் மேல் நடைமுறை வழக்காக இன்று நடத்திவருவதாக மருத்துவ அறிக்கைகளும், சம்பவங்களின் தொகுப்புக்களும் உறுதிப்படுத்திவருகின்றன. இனவழிப்பிற்குத் துணைபோனவர்கள் இன்றுவரை அதை முற்றாக மறைக்கவோ அல்லது மறுக்கவோ பகீரதப் பிரயத்தனம் செய்துவருகையில் சிங்களம் தங்குதடையின்றி இனவழிப்பை முன்னெடுத்து வருகிறது.

பல முன்னால்ப் பெண்போராளிகள் சித்திரவதைக் கூடங்களில் அடைபட்டுக் கிடந்த காலத்திலோ அல்லது “விடுதலை” செய்யப்பட்டு வாராவாரம் காவல் நிலையத்திற்கு பதியப் போகும் போதிலோ சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தால் தொடர்ச்சியாகப் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டு கட்டாயக் கருவூட்டலுக்கு ஆளாகி வருகின்றனர். கட்டாயக் கருவூட்டலை மறுக்கும் பெண்போராளிகளின் குடும்பங்கள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கபடுவதால், பல பெண்போராளிகளின் நிலமை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. இவ்வாறு கட்டாயச் சிங்களக் கருக்களைத் தாங்கி தம்மிடம் வரும் முன்னால்ப் பெண்போராளிகளை என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவ அதிகாரிகளும் கலங்கி நிற்கின்றனர்.

அந்தக் குறிப்பிட்ட மருத்துவ அதிகாரியின் கருத்துப்படி, தம்மிடம் ஒரு 8 மாதக் கற்பினிப் பெண்போராளி வந்ததாகவும், அவரைத் தான் கன்னியாஸ்த்திரிகளின் பராமரிப்பில் ஒப்படைத்ததாகவும் கூறுகிறார். “இப்படியாகப் பல பெண்போராளிகள் எம்மிடம் வருகிறார்கள், எம்மால் என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று அவர் கூறுகிறார்.

“இப்படியானவர்களை உள்ளூரில் பாதுகாப்பதற்குச் சர்வதேசச் சட்டங்களோ அல்லது வெளியுலகில் புகலிட வசதிகளோ இல்லை” என்று கூறும் அவரின் கருத்தையே இன்னொரு பெண் மருத்துவ அதிகாரியும் கூறுகிறார்.

[size=5]சுருக்கமான மொழிபெயர்ப்பிற்கு நன்றிகள் [/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107334

http://www.yarl.com/forum3/index.php?showtopic=107289

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னால்ப் பெண்போராளிகள் மீதான கட்டாய பாலியல் வன்புணர்வுகள் இரு கட்டங்களில் நடைபெறுகிறது.

முதலாவதாக சித்திரவதை முகாம்களிலும், பின்னர் "விடுதலை" செய்யப்பட்டபின்னர் நடக்கும் சம்மண்களின்போது நடக்கிறது.

முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளினால் கைதுசெய்யப்பட்ட 3000 இற்கும் மேற்பட்ட பெண்போராளிகளுக்கு நடந்த கதி இதுவரை யாருக்கும் தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா என்கிற தகவல்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டு அமைப்புக்களிடமோ இதுவரையில் கிடைக்கவில்லை. கைதுசெய்யப்பட்டவர்களின் கணக்கிற்கும் இதுவரை விடுததலையானவர்களின் கணக்கிற்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கிறது. கொழும்பைப் பொறுத்தவரை இன்னும் 600 பெண்போராளிகள் மட்டுமே முகாம்களில் இருக்கிறார்கள். அப்படியானால் மீதி 2400 பெண்போராளிகளுக்கும் என்ன நடந்தது என்று வினவுகிறார் அந்த பெண் மருத்துவ அதிகாரி.

மூத்த பெண்போராளிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாக இருப்பதாக விடுதலை செய்யப்பட்ட பெண்போராளிகள் தன்னிடம் தெரிவித்ததாக அந்த சமூக சேவகி மேலும் சொல்கிறார். அந்த மூத்த பெண்போராளிகளை பலர் முகாம்களில் கண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு இப்போது என்ன நடக்கிறதென்பது யாருக்கும் தெரியாது என்று அவர் கவலையுடன் சொல்கிறார்.

இரண்டாவது கட்டம், விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்போராளிகளுக்கு வாராந்தம் இராணுவ முகாம்களில் நடைபெறும் விசாரணைகள் என்கிற பெயரில் நடக்கும் பாலியல் வண்புணர்வுகள். இவ்வாறான விசாரணைக் கருவூட்டல்கள் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் இருக்கும் இராணுவ முகாம்களிலும், புலநாய்வுப் பிரிவு முகாம்களிலும், வன்னியில் அமைந்திருக்கும் எல்லா இராணுவ முகாம்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அந்தச் சமூக சேவகி சொல்கிறார்.

ஒரு தடவை தனது 13 மாதச் சிசுவை யாரிடமாவது கொடுத்து விடக் காத்திருந்த ஒரு முன்னால்ப்பெண்போராளி பற்றிக் கூறும் அந்தச் சேவகி, இராணுவ முகாம் விசாரணையின்போது தான் கட்டாய பாலியல் வன்புணர்வுக்கும் அதன் மூலம் கருத்தரிப்பிற்கும் ஆளாகியதாகவும், ஆனால் தனது சிசுவைக் கொல்ல மனமில்லாத அந்தப் பெண்போராளி யாரிடமாவது கொடுத்துவிடத் தீர்மானித்ததாகவும் அவர் கூறுகிறார்.

சிங்கள இனவழிப்பு அரசாங்கமும், அதனது ஊதுகுழல்களும் இந்தக் கட்டாயச் சிங்களக் கருவூட்டல்களுக்கு தாயகத்தின் சமூகச் சீர்கேடுகள் என்று பெயர் சூட்டி தமது திட்டமிட்ட இனவழிப்பை மறைக்க முனைந்தாலும் கூட, பெரும்பாலான இந்தக் கட்டாயப் பாலியல் வன்புணர்வுகளும் கருவூட்டல்களும் சிங்கள இராணூவத்தாலேயே நடத்தப்படுவதாகக் கூறும் அந்தச் சமூக சேவகி, ஆண் மருத்துவரைபோலவே இப்பெண்களைப் பாதுகாக்க சர்வதேசச் சட்டங்கள் இல்லை என்று வேதனைப்படுகிறார்.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவங்கள் பற்றி தனது கருத்தைத் தெரிவித்த முன்னால் தமிழ்நெட் ஊடகவியலாளர் லோகீசன் அவர்கள், தம்மிடம் கைதுசெய்யப்பட்டுக் கிடக்கும் தமிழ் பெண்கள் மீது கட்டாயப் பாலியல் வண்புணர்வில் ஈடுபடச் சிங்களச் சிப்பாயை ஊக்குவிக்கும் நோக்குடன் அவர்களிடையே பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் இராணுவம் தாராளாமாகப் பழக்கத்தில் விடுவதாகக் கூறுகிறார். நீண்ட காலத்துக்கு தமிழர் தாயகத்தில் தங்கி நிற்கப்போகும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தின் விளைவை எண்ணிப்பார்க்க இச்சம்பவங்கள் உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கான நிரந்தரத் தங்குமிடங்களை சீனா கட்டி வருகிறது. இந்தியாவும் தன் பங்கிற்கு இனவழிப்பு இராணுவத்துக்கு பயிற்சிகளை வழங்கிவருகிறது. ஐ. நாவோ சிங்களத்துடன் தனது உறவைப் புதுப்பித்துக்கொள்ள அதன் பின்னால் போகிறது.

தமிழர் தாயகத்தின் மீதான இனவழிப்பென்பது தனிநபர் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக நடைபெறும் ஒன்று. சர்வதேச அமைப்புகள் இந்தத் திட்டத்தின் அடிப்படைகளைக் கண்டறிந்து அதைத் தடுத்தாலொழிய அதனைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது.

சில தனிப்பட்டவர்களாலும், சில நிறுவனங்களாலும் இந்த திட்டமிட்ட இனவழிப்புப் பற்றித் தொடர்ச்சியாக ஆவனப்படுத்தப்படு வருகிறது. ஆனாலும் இனவழிப்பின் நாயகர்களும், தொண்டர்களுமான ஐ. நா செயலர் பான் கீ மூன், ரொபேட் பிளேக்,ஏரிக் சொல்கெயிம், யசூசி அகாஷி, சிவ் ஷங்கர் மேனன், நாராயணன் போன்றவர்களைச் சர்வதேசத்தின் முன்னால் பொறுப்புக் கூறவேண்டிய நிலைக்கு தள்ளுவதன் மூலம் மனித குலத்தின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை நல்கமுடியும் என்று யாழ்ப்பாணத்துப் புத்தி சீவி ஒருவர் கூறுகிறார்.

திட்டமிட்ட இனவழிப்பின் பங்குதாரர்களான அரசியல் வாதிகளும், இனவழிப்பை மறைக்கப் பாடுபட்டுவருபவர்களும் ஒருமுறை தமிழர் பக்க நியாயங்களை பார்ப்பது நல்லது என்றும் அவர் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காகவே அவர்களை அழிக்கத் துணை போனதாகச் சொல்லும் இந்தத் திட்டமிட்ட இனவழிப்பின் பங்காளிகள் இன்று செய்துவரும் புரிந்துணர்வு, புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி என்கிற பாசாங்குகள் புலிகளின் செயற்பாடுகள் என்று அவர்களே அறிவித்த தீமைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான அழிவை உண்டாக்கக் கூடியவை என்பதை அறிவார்களா என்றும் சமூக தொண்டர்கள் வினவுகிறார்கள்.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எனக்கு இங்கு வாழவே பிடிக்கவில்லை. வேறு எங்காவது சென்றால் என்னால் நிம்மதியாக வாழ முடியும்.அப்படி இல்லையென்றால் எனது குடும்பத்துடன் தற்கொலை செய்வதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை" என்று கண்ணீருடன் கூறுகிறார் ஒரு முன்னால்ப் பெண்போராளி. விடுதலைக்குப் பின்னரான விசாரணைகள் என்கிற பெயரில் தான் தொடர்ச்சியாகச் சிங்கள் இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டதாக இந்தப் பெண்போராளி கூறுகிறார். இராணுவ முகாமிலிருந்து அந்தப்பெண் விடுதலையாகி வந்தபோது அவர் 6 மாதக் கற்பிணியாக இருந்ததாக அந்தப் பெண்ணின் தாயார் தொங்கிய முகத்துடன் தெர்விக்கிறார். "நாங்கள் அந்தக் கருவைக் கலைப்பதற்காக சட்டரீதியற்ற வைத்திய உதவியை நாடினோம்" என்று அவர் கவலையுடன் மேலும் சொல்கிறார்.

இவரைப் போலவே மற்றைய பெண்போராளிகளும் தமது வாழ்வின் மிகவும் கடுமையான அத்தியாயத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அந்தச் சமூக சேவகி தெரிவிக்கிறார்.

இதுவரை காலமும் விசாரணை என்கிற பெயரில் பெண்போராளிகளைத் தமது முகாம்களுக்கு வரவழைத்த இராணுவம் தற்போது கட்டாயப் பாலியல் வண்புணர்வுக்கென்றே கூறி அழைப்பதாக அடிமைப்பட்டிருக்கும் பெண்களின் மேம்பாட்டிற்காக இயங்கும் அமைப்பொன்றின் பெண் உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கிறார்.

பலர் தமக்கு நடக்கும் அநியாயத்தை வெளியே கூறுவதில்லை. அவர்களது கலாச்சாரக் கட்டுப்பாடுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால் அவர்கள் மனதிற்குள் இறக்கிறார்கள். ஒரு கட்டத்தில் துன்பங்கள் எல்லை மீறும்போது தம்மையே மாய்த்துக்கொள்ளத் துணிகிறார்கள். முடிந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற எத்தனித்து வருகிறார்கள் என்றும் அந்த உறுப்பினர் சொல்கிறார்.

தமிழர் தாயகத்தில் எல்லாப் பகுதிகளிலுமே முன்னால்ப் பெண்போராளிகளுக்கு இந்த அவலம் நிகழ்த்தப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பெண்போராளி பலாலி முகாமில் நடக்கும் அக்கிரமம் பற்றித் தெரிவிக்கையில், தமது உள்ளூர் முகாம்களுக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்படும் முன்னால் பெண்போராளிகள் பின்னர் அச்செழு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், அங்கே அவர்களில் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு இராணுவ அதிகாரிகளைச் "சந்திக்க" அனுப்பிவைக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

வெளியார் பார்வையிலிருந்து எப்படி மறைவாக இது நடைபெறுகிறது என்று வினவியபோது, " தாங்கள் பஸ் மற்றும் வெள்ளை வான்களில் சிவில் உடை தரித்த இராணுவத்தினருக்கு அருகில் இருத்தப்பட்டு சாதாரண பயணிகள் போல அழைத்துச் செல்லப்படுவதாக" கூறினார். அவர்களிடம் தாராளமாக வெள்ளை நிற வான்கள் இருக்கின்றன. அவை தங்கு தடையின்றி முகாமின் உள்ளேயும் வெளியேயும் போய் வருகின்றன என்று அவர் கூறினார்.

பலாலி முகாமின் அக்கிரமத்தை அனுபவித்த இன்னொரு பெண்போராளி கூறுகையில், "மூன்று மணித்தியாலங்கள் என்னை விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்தினார்கள். முடிவில் நான் களைத்துப் போகவே குளிர்பாணம் கொடுத்தார்கள். அதைப் பருகிய பின்னர் எனக்கு எதுவுமே நினைவில் இருக்கவில்லை. நினைவு தெளிந்தபோது நான் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதை உணர்ந்தேன்" என்று கூறுகிறார். "என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை, உயிருடன் வெளியே வந்து கதறி அழுததைத்தவிர" என்று அவர் கூறினார்.

"நான் ஒன்றில் மறைந்து வாழவேண்டும் அல்லது இந்த நாட்டை விட்டே அகல வேண்டும், அப்படி நடந்தால் எனது தந்தையையோ, தாயையோ, தம்பியையோ அல்லது தங்கையயோ அவர்கள் வந்து பிடித்துச் செல்வார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இப்படியான பாலியல் வன்புணர்வுகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள தன்து உறவினர்களின் வீட்டில் தான் தங்கியபோது தனது தந்தையை இராணுவம் கடுமையாகத் தாக்கியதாகவும், இதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தனது தம்பிகளைக் கொன்றுவிடப்போவதாக இராணுவம் மிரட்டியதாகவும் இன்னொரு கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னால்ப் பெண்போராளி கூறுகிறார்.

தங்களால் தமது குடும்பங்கள் அடையும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளாத பெண் போராளிகள் இராணுவ விசாரணைகளுக்கு உற்பட்டு முகாம்களுக்குச் செல்வதாகவும் அங்கே கடுமையாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கடுமையான சோகத்துடனும் அதிகரித்த பழிவாங்கும் உணர்வுடனும் வீடு திரும்புவதாகவும் அந்தப் பெண்போராளி கூறுகிறார்.

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான விசாரணைகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளுக்குப் பின்னர் தம்மை மாய்த்துக்கொள்ள எத்தனித்த பல பெண்போராளிகளுக்கு வைத்தியம் பார்த்ததாக யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில் சிலர் இராணுவ முகாம்களில் பிளேட் துண்டங்களை விழுங்கி தம்மை மாய்த்துக்கொள்ள எத்தனித்ததாகவும், இன்னும் சிலர் விசாரணைகளுக்குப் பின்னர் தம்மை தீமூட்டி எரித்துக்கொள்ள எத்தனித்ததாகவும் அவர் சொன்னர். வறுமை காரணமாக சிலர் தம்மை மாய்த்துக்கொண்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தாலும் அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்றும் அவர் மேலும் சொன்னார்.

வன்னி நிலப்பரப்பே மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். ஏனைய பகுதிகளிலிருப்பது போன்று சமூக சேவை அமைப்புகளின் செயற்பாடு வன்னியில் இல்லாத காரணத்தினால் இனவழிப்பின் பாலியல் வன்புணர்வு இங்கே தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.

முன்னால் போராளிகளைக் கண்காணிக்கவும் விசாரணைக்கு உற்படுத்தவுமென்றே வன்னியின் தெருவெல்லாம் முகாம்களை அமைத்துவரும் ஆக்கிரமிப்பு இராணுவத்திடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள இப்பெண்போராளிகளுக்கு உள்ள ஒரே வழி வேறு எங்காவது தப்பிச் செல்வதுதான். இராணுவம் கேட்டால் தமது பெண் யாரோடோ ஓடிச் சென்றுவிட்டார் என்று சொல்வதைத்தவிர பெற்றோரால் வேறு எதுவும் செய்ய முடியாது.

புனர்வாழ்வு என்பது முற்றான ஒரு பொய். வவுனியாவில் இருப்பது வெறும் கண்காட்சிக் கூடம் மட்டும்தான் என்று முன்னால் வவுனியாக் கைதியான பெண்போராளி சொல்கிறார்.

இனவழிப்புப் போரின் இறுதியில் கைதுசெய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்போராளிகளின் நிலை பற்றி இதுவரை எதுவும் தெரியாது என்று அங்கிருந்து தப்பிவந்த சில பெண்போராளிகள் தெரிவிக்கிறார்கள். நாங்கள் எல்லோருமே மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறோம், யாருடனும் பேசவோ, வெளியில் செல்லவோ எங்களால் முடியவில்லை. எங்களின் குழந்தைகளுக்காகவே இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று சித்திரவதை முகாமிலிருந்து விடுதலையாகி வந்த இன்னொரு முன்னால் பெண்போராளி கூறுகிறார்.

எனது கணவர் போரினால் புத்தி சுயாதீனமற்றவராக மாறிவிட்டார், எனது இரு குழந்தைகள் போரிலே கொல்லப்பட்டு விட்டன. எனது மீதி மூன்று குழந்தைகளுக்காகவே நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று இன்னொரு முன்னால்ப் பெண்போராளி சொல்கிறார்.

சிலருக்கு தமது பிள்ளைகளையாவது வெளியில் அனுப்பிவிடவேண்டும் என்கிற அவா இருக்கிறது. ஆனால் அவர்களிடம் அதற்கான வசதியில்லை.

ஆனால் சிலருக்கோ, இந்தப் பெண்போராளிகள் மீதோ அல்லது அவர்களின் குடும்பத்தவர்மீதோ வெறுப்பிருக்கிறது. இதனால் இவர்கள் பற்றி பிழையான தகவல்களை இராணுவத்திற்கு வழங்கி வருவதோடு, இப்பெண்கள் மேலும் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தையும் இவர்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

Edited by ragunathan

:( :( :( :( :(

இவர்களை விடுதலை செய்விக்க நடவடிக்கை எடுக்க வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பொலிகண்டியில் தனதுயிரை மாய்த்துக்கொண்ட 32 வயதுடைய சுபோதினி சிவலிங்கம் தாயக விடுதலைப் போராட்டத்திற்காக தனது வாழ்வின் 15 வருடங்களை அர்ப்பணித்தவர். 1999 இல் இராணுவ நடவடிக்கையொன்றின்போது அங்கவீனமடைந்த இவர் வன்னிப்போரின் இறுதிவரை புலிகளின் மருத்துவப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது தற்கொலைக்கான காரணம் வறுமை என்று சொல்லப்பட்டது. ஆனால் ஊரில் இருந்து வந்த தகவல்களின்படி இவர் தொடர்ச்சியாக சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பாலியல் வன்புணர்வுகளுக்கும் பாலியல் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வந்ததாகவும், கொல்லப்படப்போவதாக பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பாதினி என்றழைக்கப்படும் சுபோதினி, பொலிகண்டியிலிருக்கும் தனது வீட்டின் பூட்டிய அறையொன்றில் தன்னைத்தானே தீமூட்டி எரித்துக்கொண்டார்.

பல முன்னால்ப் பெண்போராளிகள் இராணுவ முகாம்களிலும் சித்திரவதைக் கூடங்களிலும் தமக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்புணர்வுகளை ஒரு கெட்ட கனவாகவே நினைத்து மறந்துவிட நினைக்கிறார்கள். " ஆனால் ஆக்கிரமிப்பு இராணுவமோ பாலியல் வண்புணர்வை ஒரு திட்டமிட்ட இனவழிப்பாகவே எம்மீது தொடர்ந்தும் திணித்து வருகிறது. இவற்றை நாம் எப்படி மறக்க முடியும்?" என்று கேட்கிறார் இன்னொரு பெண்போராளி.

" எனக்கு மீண்டும் போராட வேண்டும் போல இருக்கிறது. என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்தால் நிச்சயம் சிலரைக் கொன்றுவிட்டுத்தான் நான் இறப்பேன்" என்று கோபத்துடன் சத்தியம் செய்கிறார் இராணுவத்தால் பலமுறை பாலியல் வன்புணர்விற்கும் சித்திரவதைக்கும் ஆளான இன்னொரு பெண்போராளி.

மூலம் தமிழ்நெட்

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

மொழிபெயர்ப்பிற்கு நன்றிகள் ரகுநாதன்.. தமிழ்நெற் ஆங்கிலக் கட்டுரையை இணைக்கும்போது நீங்கள் கட்டாயம் மொழிபெயர்ப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கிருபன். நான் மொழிபெயர்ப்பை இணைக்கும்போது நீங்கள் ஏற்கனவே இணைத்துவிட்டீர்கள் என்பதைத் தெரிந்திருக்கவில்லை.

தமிழ்நெட்டைத் தொடர்ந்து வாசிப்பேன். என்னைப் பாதித்த விடயங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது அவா. அந்தவகையில் தமிழ்நெட்டில் அவ்வப்போது வரும் அரசியல் கட்டுரைகள், தாயக மக்களின் ஆக்கிரமிற்குள்ளான வாழ்வு பற்றி நான் வாசித்ததை இங்கே இணைத்து வருகிறேன். ஆங்கிலத்திலிருப்பதால் எம்மவரில் ஒரு சிலரே நேரம் செலவிட்டுப் படிக்கிறார்கள். அதுவே தமிழில் இருந்தால், இன்னும் கொஞ்சம் அதிகப்பேர் படிப்பார்கள் என்கிற நப்பாசைதான்.

எனது அரைகுறைத் தமிழில் என்னால் முடிந்தளவிற்கு மொழிபெயர்க்கிறேன். எப்படியோ எம்மக்களினதும் முன்னால்ப் போராளிகளினதும் அவலம் உலகிற்குத் தெரிந்து அதன்மூலமாவது ஏதாவது விடிவு பிறக்குமா என்பதுதான் என்போன்ற பலரின் ஆதங்கம்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

இதுபோலவே பெண் போராளிகள் மற்றும் சாதாரண தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிய பின் விபச்சார விடுதிகளில் கட்டாயப்படுத்தி கொண்டுபோய் சேர்ப்பதும் நடக்கிறது. யாழ்ப்பாணம் முதல் வடக்கு கிழக்கு வரை. அல்லது இலங்கை முழுவதும் இது நடக்கிறது.

கைதிகளை விடுவிக்க அமெரிக்கா, ஐ.நாவின் உதவி தேவை. ஆனால் அமெரிக்கா தனது எந்த நலனுக்காக இலங்கை விடயத்தை கையில் எடுத்ததோ அந்த நலனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக இலங்கையுடன் ஒப்பந்தம் செய்வதன் மூலமோ பெற்று விட்டால் பின்னர் எமது பிரச்சினையை மீண்டும் கைவிட்டு விடுவார்கள். அதற்கு முன் நாம் அமெரிக்காவினதும் ஐ.நாவினதும் ஆதரவுடன் இவர்களை விடுவிக்க வேணும்.

அப்படி விடுவித்தால் கூட பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை மட்டும் தான் விடுவிப்பார்கள். இடத்துக்கிடம் மறைவாக வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் கைதிகளின் நிலை என்ன?

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகுநாதன் தமிழில் செய்திகள் வரும்போது பரவலாக எல்லோரையும் சென்றடையும் . சிரமத்திற்கு மன்னிக்கவும் கிருபன்ஜி :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த America UN இந்தியா பற்றி கதைப்பதெல்லாம் சுத்த வேஸ்ட் அவங்க எதுவுமே செய்ய போறதில்ல

Edited by SUNDHAL

இந்த America UN இந்தியா பற்றி கதைப்பதெல்லாம் சுத்த வேஸ்ட் அவங்க எதுவுமே செய்ய போறதில்ல

அவர்கள் இல்லாமல் தனியே நாம் எதுவும் செய்ய முடியாது. அவர்களும் நடப்பதெல்லாம் தெரிந்து கொண்டு தான் மௌனமா இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தேவை நிறைவேறும் வரை இலங்கை மீது சிறிதளவென்றாலும் அழுத்தத்தை பிரயோகிப்பார்கள். அப்பொழுது தாம் நல்லபடி நடக்கிறோம் என்று சர்வதேசத்திற்கு காட்டுவதற்காகவாவது கொஞ்ச கைதிகளை என்றாலும் விடுதலை செய்வார்கள் தானே?

அதோட நாங்களும் அழுத்தங்களை பிரயோகித்து ஏனையோரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேணும்.

முடியாது என்று சொல்வதை விடுத்து முடிந்த வரை முயற்சி செய்வோம். முயற்சி செய்து தோற்றால் அதில் ஒரு திருப்தி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களதேசத்து தேநீரைப் பருகி, சிங்கள நாட்டு துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தந்து, சிங்கள விமானத்தில் பயணம் செய்யும் மானங்கெட்ட சூடுசுறணையற்ற கேவலம் கெட்ட ஈனத்தமிழர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,உங்கள் மொழிபெயர்ப்புக்கு நன்றிகள்.அடுத்த ஐ.நா அமர்வில் விவாதித்து இலங்கைக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்க கூடிய வகையில் யாழ் கள உறவுகள் கூட்டாக முயற்சிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மொழிபெயர்ப்புக்கு நன்றிகள் ரகு..

நான் நன்றி தெரிவிக்க மறந்து விட்டேன். மொழிபெயர்ப்புக்கு நன்றி ரகு அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.