Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டிப் பார்க்க 3 கோடி!

Featured Replies

குடாநாட்டு மக்களின் வரிப்பணம் அவர்தம் சுகாதார நலனுக்குப் பயன்பட வழிகாட்டிச் செல்வாரா ஜனாதிபதி?


கடந்த ஆறு மாத காலமாக திறக்கப்படாதிருந்த யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒருவாறாக விடிவு கிடைக்கின்றது. அத்தியாவசிய தேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள வைத்தியசாலையைக் கூட, ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக மூடப்பட்டிருந்ததும் ஆசியாவின் அதிசயங்களில் ஒன்றுதான்.

 

இந்த வைத்தியசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்க வராமலிருந்திருந்தால், கடந்த செப்ரெம்பெர் மாதத்திலிருந்து வைத்தியசாலை இயங்கத் தொடங்கியிருக்கும். அத்துடன் நாட்டு மக்களின் முதுகில் மேலும் வரிச்சுமை அதிகரித்திருக்காது.


ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வதால் சில வேலைகள் நடக்கின்றன. அவர் பயணிக்கும் வீதிகள் இரவோடு இரவாக காப்பெற்றாகின்றன. வாய்க்கால்கள் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றன. அத்துடன் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் வேலை செய்கின்றனர்.

 

இவ்வளவும் ஆட்சியாளரைத் திருப்திப்படுத்துவதற்கே. மக்கள் நலனில் அக்கறையிருந்தால் இவற்றை அவர்கள் எப்போதோ செய்திருப்பார்கள். ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வருவதால் இந்த வேலைகள் நடந்தாலும், அவர் ஒரு முறை இங்கு வந்து செல்வதற்கு ஒரு கோடி செலவாகிறது.


மஹிந்தவால் விழுங்கப்படும் பணம், மக்கள் வரிகளிலிருந்தே கறக்கப்படுகின்றது.

 

வடமாகாணத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக உலகுக் காட்டப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்கே அதிகளவான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதாகச் சொல்கின்றார்.

 

அவர்கள் அந்த நிதியை வடமாகாண சபைக்கு ஒதுக்கி விட்டுப் பின்னர், வடமாகாண சபையின் நிதியில் மத்திய அமைச்சின் ஜனாதிபதியே இங்கு வந்து ஒதுக்கிய பணத்தில் செலவு செய்து செல்கின்றார்.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1589746314704548

Edited by akootha

  • தொடங்கியவர்

மத்திய அரசின் யுக்தி

மொத்தத்தில் தெற்கிலிருந்து  மத்திய அரசிலிருந்து  ஒதுக்கப்படும் வடமாகாண சபைக்கான நிதி மத்திய அரசாலேயே செலவு செய்து முடிக்கப்படுகின்றது. இதனால் வடமாகாண மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் கிடைப்பதில்லை. இந்த யுக்தியையே மத்திய அரசாக பதவி வகிக்கின்ற மஹிந்த அரசு செய்து வருகின்றது.

 

கடந்த வருடம் பெப்ரவரி 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் ஜனாதிபதி. இதற்காக அவர் பெயரில் விழுங்கப்பட்ட தொகை 140 இலட்சங்கள். இந்தப் பணமே எங்களின் வரி அதிகரிப்பாக முதுகில் சுமையாக விழுந்திருக்கின்றது.

 

இது ஜனாதிபதியின் தனிப்பட்ட செலவு மாத்திரமே, அவருக்கு குடை பிடித்து கூட வந்த அமைச்சர்களின் செலவுகளையும் சேர்த்துக் கொண்டால் 180 இலட்சத்தை தாண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.


சாவகச்சேரி வைத்தியசாலையத் திறப்பதற்கான (திறந்து வைத்த கட்டத்தை திறந்தது அது வேறு கதை) ஒரு மணி நேர நிகழ்வுக்காக யாழ்.பிராந்திய சுகாதாரத் திணைக்களம் செலவு செய்த தொகை 80 லட்சம்.

 

வடமாகாண சபையில் எல்லோரையும் ஆட்டிப்படைத்து, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரியின் கட்டளைப்படியே கடந்த ஆண்டு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.


இதில் எந்தவொரு வேலையும் கேள்விகோரல் இன்றியே மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான வேலைகள் முடிக்கப்பட்டு அதற்குரிய பற்றுச்சீட்டு அனுப்பப்பட கேள்வி எதுவுமின்றி பணம் இறைக்கப்பட்டது.

 

சாவகச்சேரி வைத்தியசாலையில் மஹிந்த உரையாற்றுவதற்காக இடம் தயாரிக்கப்பட்டது. அதற்காக வைத்தியசாலையினுள் இருந்த பல பயன்தரு மரங்கள் அழிக்கப்பட்டே அரங்கு தயார்படுத்தப்பட்டது. மேலும் மேடுபள்ளமாக இருந்த குறித்த அரங்கை புனரமைக்க 15 இலட்சம் வரையில் செலவு செய்யப்பட்டது.


அத்துடன் வைத்தியசாலையில் வர்ணம் பூசுவதற்கும், அழகுபடுத்துவதற்கும் 14 இலட்சத்து 50 ஆயிரம் வரையில் செலவு செய்யப்பட்டது. வர்ணம்பூசும் வேலை, அலங்கார வேலைகள், மின் வேலைகள் அனைத்தும் இராணுவத்தாலேயே மேற்கொள்ளப்பட்டன.

 

இராணுவத்தினர் கேட்கக் கேட்க பொருள்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. அதில் எந்தவித கணக்கு வழக்குகளும் பார்க்கப்படவில்லை.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1589746314704548

  • தொடங்கியவர்

செலவுகளால் பின்னர் திண்டாட்டம்

மேலும் ஜனாதிபதி பாதுகாப்புபிரிவினர் ஒரு வாரமாக ஹோட்டலில் தங்கியிருந்த செலவு, சாப்பாட்டுச் செலவு என்று 8 இலட்சம் ரூபா பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இவற்றை விட மேடைக்கு மாத்திரம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன்.

 

அத்துடன் 40 x 40 அளவில் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட பனர் கொழும்பிலிருந்து செய்து கொண்டு வரப்பட்டது. மேடையின் பின்பாக வைத்துக் கட்டும் போது ஜனாதிபதியின் தலை வெட்டப்படுவதன் காரணமாக உடனடியாக இரவோடு இரவாக 10 x 10 அளவில் புதிய பனர் செய்யப்பட்டது. மேலும் வைத்தியசாலையினுள் பனர்கள் மட்டும் அமைப்பதற்காக 4 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டது.

 

இவை அனைத்தும் பிராந்திய சுகாதார சேவை நிலையத்தினால் 2012 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலேயே செய்து முடிக்கப்பட்டன. இவ்வாறு சுகாதார சேவை நிலையத்தினால் செலவு செய்யப்பட்டதால், கடந்த ஆண்டு மாகாண அமைச்சின் கீழான வைத்தியசாலைகளுக்கான சிறிய புனரமைப்பு வேலைகளுக்கும் நிதியில்லாமல் திண்டாட்டம் நிலவியுள்ளது.
 
மேலும் மாவட்டச் செயலகத்தில் கடந்த ஆண்டு நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்காக 800 உணவுப் பார்சல்கள் 800 ரூபா வீதம் பெறப்பட்டுள்ளன. இரண்டு உணவகங்களிலிருந்து 400 பார்சல் வீதம் அவை பெறப்பட்டுள்ளன. இதனை அமைச்சர் ஒருவரது சகோதரரே நேரடியாகச் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.


யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு 800 ரூபா செலவில் உணவு விநியோகம் செய்யப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்கும். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை திறந்து வைப்பதற்கான நிகழ்வு ஏற்பாட்டுக்கு மாத்திரம் 50 இலட்சம் வரையில் கல்வித் திணைக்களத்தின் நிதி செலவு செய்யப்பட்டது.

 

வழமையாக ஒரு நிகழ்வினை ஒழுங்கமைத்து அறிவிப்பு மேற்கொள்பவருக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 800 ரூபாவே வழங்கப்பட வேண்டும் என்று அரச சுற்றறிக்கை கட்டளையிட்டுள்ளது. ஆயினும் ஜனாதி பதியின் வருகைகளின் போது அறிவிப்பாளருக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.


இதைவிட ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருவதற்கான விமானச் செலவு, பாதுகாப்புப் பிரிவினர் பயணிக்கும் உலங்குவானூர்திச் செலவு என்று அடுக்கிக் கொண்டே போனால் கிட்டத்தட்ட ஒருமுறை அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்து போக 3கோடி ரூபாவுக்கு மேல் விரயமாகிறது.

 

இவ்வாறு கடந்த வருடம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு ஒரு நாள் வந்து சென்றதற்கு ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு செலவுகளையும் செய்து ஓர் அரச தலைவர் வரத்தான் வேண்டுமா?


மக்கள் ஏற்கனவே வாழ்க்கைச் சுமையினால் துவண்டு கொண்டிருக்கையில் இவ்வாறான ஆடம்பரக் கொண்டாட்டங்களுடன் திறப்பு விழாக்கள் தேவையா? அதுவும் ஜனாதிபதி திறக்க வேண்டும் என்பதற்காக அவசர சேவையான வைத்திய சாலையை 5 மாதங்கள் மூடி வைத்திருந்தது நியாயமானதா?

 

திருகோணமலையில் புல்மோட்டையில் இல்மனைட் அகழ்வதற்கு ஜப்பானிய அரசுக்கு இடமளித்ததற்கு நன்றிக் கடனாகவே யாழ். போதனா வைத்தியசாலை அமைத்துக் கொடுக்கப்பட்டதாகவும் அரசல்புரசலாகப் பேசப்படுகிறது. ஜப்பான் நிதியில் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையை திறந்து வைக்கிறார். ஆனால் யாழ்ப்பாணத்தின் சுகாதாரத்துறையோ திண்டாட்டத்தில் இருக்கின்றது.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1589746314704548

  • தொடங்கியவர்

கிராம வைத்தியசாலைகள் வசதிகள் அற்ற நிலையில் இருக்கும்போது இத்தனை செலவுகள்

யாழ்ப்பாணத்தின் கிராமிய வைத்தியசாலைகளில் இன்னமும் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவிக் கொண்டேயிருக்கின்றது. சில கிராமிய வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் நியமிக்கப்படவே இல்லை. அத்துடன் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

 

இதனைவிட பிராந்திய சுகாதார வைத்தியர் (எம்.ஓ.எச்) மற்றும் சிற்றுழியர்கள் என்று சகல இடங்களிலும் அவற்றுக்கான வெற்றிடங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இவை இன்னமும் நிரப்பப்படாததானால் மக்கள் தங்களது சேவைகளை உரிய முறையில் பெறமுடியாமல் தவிக்கின்றனர்.

 

மேலும் சில இடங்களில் அரசியல்வாதிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு நியமனங்கள் பெற்றுக் கொடுக்கின்றனர். இதனால் பல இடங்களில் தகுதியற்றவர்களும் மருத்துவ சுகாதாரத் துறையினுள் உள்வாங்கப்படுகின்றனர்.


இவர்கள் இவ்வாறு அரசியல் பரிந்துரைகளினால் உள்வாங்கப்படுவதால் அவர்களது தகுதி பற்றி யாரும் கவனிப்பதில்லை. இதனால் மக்களுக்கு தவறான வைத்திய நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

 

மேலும் யாழ். நகரிலேயே எத்தனையோ மருந்தகங்கள் அனுமதியில்லாமல் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் தனியார் வைத்தியசாலைகள் பல சேவைக்குரிய தகுதிகளை கொண்டிருக்காமலும் இயங்குகின்றன. ஆனால் இவற்றையெல்லாம்  தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடடிவக்கைகள் மேற்கொள்ளப் படுவதில்லை.

இதனைப் போலவே யாழ்.போனா வைத்தியசாலையினுள்ளும் சுகாதாரச் சீர்கேடான நிலைமைகளே காணப்படுகின்றன. அங்குள்ள பழைய கட்டடங்களுக்குப் பக்கத்தில் காணப்படுகின்ற வாய்க்கால்கள் துப்புரவு செய்யப்படாமல் இருக்கின்றன.


வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகள், அரசினால் உரிய காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுவதில்லை. அத்துடன் கேட்கப்பட்ட அளவை விட குறைந்தளவே அனுப்பப்படுகின்றன. மேலும் பல அத்தியாவசிய மருந்துகள், விலை கூடிய மருந்துகளையெல்லாம் நோயாளர்கள் தனியார் மருந்தகங்களிலேயே வாங்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.

 

இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சுகாதாரத்துறையில் சீர்செய்யப்பட வேண்டிய நிறைய விடயங்கள் உள்ள போதும், அவை எதுவுமே நிவர்த்தி செய்யப்படவில்லை. மறுபுறம் புதிய வைத்தியசாலையை மாத்திரம் திறந்து வைத்தால் போதாது. அதனைச் சுற்றி அலங்கார வர்ணம் பூச யாழ்ப்பாணத்தின் சுகாதாரத்துறையின் உண்மை நிலையை ஒரு போதும் சொல்லமாட்டார்கள்.


கடந்த ஆண்டு மஹிந்த யாழ்ப்பாணம் வரும் போது சாவகச்சேரி வைத்தியசாலையில் பனடோல் இல்லாமல் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதை ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. அதனை ஜனாதிபதி நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, அப்படியொரு பிரச்சினையும் இல்லை என்று மூடி மறைக்கப்பட்டது.

 

இதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஊடகங்களைப் போட்டுக் கொடுக்கும் ஆட்சியாளரின் பக்கம் நிற்கும் அமைச்சரும் உள்ளதால், அவர்களுக்குச் சார்பாக இருப்பதால் சுகாதரத்துறையின் சீர்கேடுகள் சீர்செய்யப்படப் போவதில்லை.


யாழ். மாவட்டம் வாழ் பிரசைகளின் வரிப்பணம் வேண்டாத செலவுகளுக்கு விரயமாவதைத் தவிர்த்து, யாழ்ப்பாணத்தின் சுகாதாரத்துறை, மக்கள் நலனுக்குப் பயன்பட வழிகாட்டிச் செல்வாரா ஜனாதிபதி? யாழ்ப்பாணத்தின் சுகாதரத்துறையை சீரமைத்துச் செல்வாரா ஜனாதிபதி?

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1589746314704548

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கட்டிடத்தையோ, ஒரு வீதியையோ, தண்ணீஇர் தொட்டியையோ அல்லது ஒரு பஸ் தரிப்பிடத்தையோ... கட்டி விட்டு, அரசியல்வாதி வந்து திறந்து வைப்பதெல்லாம்....ஆசியாவுக்கே... உரிய ஒரு சாபக்கேடு. இங்கு ப‌ல‌ நூறு மில்லிய‌ன் யூரோக்க‌ளில் க‌ட்டிட‌த்தையோ.... வீதியையோ... க‌ட்டி முடித்த‌வுட‌ன் த‌ன்னுடைய‌ பாட்டில் எல்லாம்... இய‌ங்க‌த் தொட‌ங்கும். எங்க‌ளுடைய‌... அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு, எல்லாத்திலும் முன்னுக்கு நிற்க‌ வேணும் என்ற‌, *** குண‌த்தை மாத்த‌ ஏலாது.
 

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கட்டிடத்தையோ, ஒரு வீதியையோ, தண்ணீஇர் தொட்டியையோ அல்லது ஒரு பஸ் தரிப்பிடத்தையோ... கட்டி விட்டு, அரசியல்வாதி வந்து திறந்து வைப்பதெல்லாம்....ஆசியாவுக்கே... உரிய ஒரு சாபக்கேடு. இங்கு ப‌ல‌ நூறு மில்லிய‌ன் யூரோக்க‌ளில் க‌ட்டிட‌த்தையோ.... வீதியையோ... க‌ட்டி முடித்த‌வுட‌ன் த‌ன்னுடைய‌ பாட்டில் எல்லாம்... இய‌ங்க‌த் தொட‌ங்கும். எங்க‌ளுடைய‌... அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு, எல்லாத்திலும் முன்னுக்கு நிற்க‌ வேணும் என்ற‌, *** குண‌த்தை மாத்த‌ ஏலாது.

 

இவங்கள் எல்லாருக்கும்..எல்லாத்திலயும் முன்னுக்கு நிப்பதை வெட்டிவிட்டால் சரி அண்ணை.. :D

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து திருத்தப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கட்டிடத்தையோ, ஒரு வீதியையோ, தண்ணீஇர் தொட்டியையோ அல்லது ஒரு பஸ் தரிப்பிடத்தையோ... கட்டி விட்டு, அரசியல்வாதி வந்து திறந்து வைப்பதெல்லாம்....ஆசியாவுக்கே... உரிய ஒரு சாபக்கேடு. இங்கு ப‌ல‌ நூறு மில்லிய‌ன் யூரோக்க‌ளில் க‌ட்டிட‌த்தையோ.... வீதியையோ... க‌ட்டி முடித்த‌வுட‌ன் த‌ன்னுடைய‌ பாட்டில் எல்லாம்... இய‌ங்க‌த் தொட‌ங்கும். எங்க‌ளுடைய‌... அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு, எல்லாத்திலும் முன்னுக்கு நிற்க‌ வேணும் என்ற‌, *** குண‌த்தை மாத்த‌ ஏலாது.

 

sri lanka asia நாடுகள் தமிழனுக்குஆதரவானவையா? 3 கோடி சிலவழிக்கிறவனை கூட காசை விரயமாக்கினால் நல்லது. இனி இவர்களின் பொருளாதார அழிவிலேயே எமக்கான மீட்சி.

Edited by இணையவன்
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து திருத்தப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

யாழில் "அந்த மாதிரி இப்ப எல்லாம்" என கூறுபவர்கள் இந்த கட்டுரையை கருத்தில் கொள்வார்களாக.

 

அபிவிருத்தி என்ற பெயரில் விரயமாகும் யாழ் மக்களின் வரிப்பணம். அதே பணத்தில் சிங்களம் தன்னை வளர்க்கின்றது

 

இதுதான் இன்றைய நிலைமை.  

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் எல்லாருக்கும்..எல்லாத்திலயும் முன்னுக்கு நிப்பதை வெட்டிவிட்டால் சரி அண்ணை.. :D

 

முன்னுக்கு நிற்பது, மூக்குத்தானே..... அதை, வெட்ட வேணும் என்கிறீர்களா? சுபேஸ். :lol:

 

big-nose-smiley-1c.png

  • கருத்துக்கள உறவுகள்

முன்னுக்கு நிற்பது, மூக்குத்தானே..... அதை, வெட்ட வேணும் என்கிறீர்களா? சுபேஸ். :lol:

 

big-nose-smiley-1c.png

சரியாய் சொல்லி இருக்கிறீர்கள் தமிழ்சிறி அண்ணை..இவங்களுக்கு அடிக்கடி...மூக்கு வேர்ப்பதால்..மூக்கை வெட்டிவிட்டால் சரி... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.