Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

வனு-அற்று என்ற நாடு எத்தனை பெயருக்குத்தெரியும்?. இலங்கையில்,பிரித்தானியாவில் இருக்கும் போது இப்படி ஒரு நாடு இருக்கும் என்று கேள்விப்படவில்லை. சிட்னியில் புலம் பெயர்ந்த பிறகு சென்ற அவுஸ்திரெலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற துடுப்பாட்டப்போட்டி பற்றி Cricinfo இணையத்தளத்தில் Testskillனால் நடத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி அறுதல் பரிசினைப்பெற்றேன். அப்பரிசு வனு-அற்று நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. அன்று தான் எனக்கு முதன் முதலாக அப்படி ஒரு நாடு இருப்பதாக அறிந்தேன்.

தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான (மற்றைய நாடுகள்-Fiji,New Caledonia,Soloman Islands,Niue,Tonga,Samoa, Tahiti........ ) வனு-ஆற்று அவுஸ்திரெலியாவுக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. சிட்னியில் இருந்து விமானத்தில் பிரயாணம் செல்ல 3அரை மணித்தியாலம் எடுக்கும். பிரான்ஸ்,பிரித்தானியா ஆகிய இருனாடுகளினால் ஒரே நேரத்தில் ஆட்சிக்குட்பட்ட வனு-ஆற்று 1980ல் சுதந்திரம் அடைந்தது. ஆங்கில எழுத்து Y வடிவில் 83 தீவுகளினை கொண்ட இன்னாட்டின் தலை நகரம் Efate தீவில் உள்ள போட் விலா(Port Vila). இன்னாட்டின் 110 மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் தற்பொழுது 109 மொழிகள்(Akei,Amblong,Aore........)பேசப்பட்டு 1 மொழி(Ifo) வழக்கில் இல்லாது போய் விட்டது. அரச மொழியாக பிஸ்லாமா(bislama a pidgin language, based on English), ஆங்கிலம், பிரேன்சு ஆகிய மூன்று மொழிகளும் பேசப்படுகிறது. ஆங்கிலத்தில் இருந்து பிறந்த பிஸ்லாமா( அருகில் உள்ள நியூ கலிடொனியா நாட்டிலும் பேசப்படுகிறது) மொழி இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. இங்குள்ளவர்களில் 92 வீதமானவர்கள் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்தவர்கள். மிகுதியானவர்கள் கற்காலத்து கடவுள்களினை வழிபாடு செய்கிறார்கள். 80 வீதமான மக்கள் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் கமத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். சிலர் மின்பிடித்தொழிலில் ஈடு படுகிறார்கள். கிராமப்புறங்களில் இங்கு கல்வி கற்பதற்கு அதிக பணம் தேவை என்பதினால் கிராமப்புறமக்களில் பலர் படிக்கச் செல்வதில்லை.61 வீதமான சிறுவர்கள் 5ம் வகுப்பு வரையே படிக்கிறார்கள்.20 வீதமான சிறுவர்களே 5ம் வகுப்புக்கு மேல் படிக்கிறார்கள். இங்கு வாழ்பவர்களின் சராசரி ஆயுள் காலம் 61 வயது மட்டுமே. 206,000 மக்கள் உள்ள இன்னாட்டில் 40 வீதத்துக்கு குறைவான மக்கள் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இன்னாட்டில் 6வீதமான மக்களே வெளினாட்டில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். பிரித்தானியா,பிரெஞ்ச் ஆட்சிக்காலத்தில் வந்த ஐரோப்பியர்கள்.,வியட்னாம் நாட்டில் இருந்து வேலைக்காக வந்தவர்கள், சீனர்கள் , தென் பசுபிக் நாடுகளில் இருந்து வந்தவர்களும் அடங்குவார்கள். இன்னாட்டுக்கு நான் அண்மையில் 6 நாட்களுக்கு பிரயாணம் செய்தேன்

vanuatumaplo4.png

Edited by Aravinthan

  • Replies 290
  • Views 37k
  • Created
  • Last Reply

வனக்கம் அரவிந்தன்

சுவையான தகவலைத் தந்திருக்கிறீர்கள்.தனியான ஒரு தளத்தில் இவற்றைப் பதிந்து வைத்திருப்பதும் நல்லது.

  • தொடங்கியவர்

வனு-அற்று தேசியக்கொடியில் உள்ள Y வடிவில் உள்ள மஞ்சள் நிறம் அன்னாடு Y வடிவில் அமைந்ததினையும், மஞ்சள் நிறம் சூரிய வெளிச்சத்தின் பிரகாசத்தையும் கிறிஸ்தவமதத்தையும்,பச்சை நிறம் அங்குள்ள பச்சைப்பசலான நிலத்தையும், சிகப்பு நிறம் சுதந்திரப்போரில் ஒடிய குருதியின் நிறத்தையும், கருப்பு நிறம் அங்குள்ள பூர்வீகமக்களினையும் குறிக்கும்.

flagul8.png

untitled3333tt8.png

The Pig's tusk and the Namele leaf represent Prosperity and Peace respectively

  • தொடங்கியவர்

26 யூலை 93ல் ஆரம்பிக்கப்பட்ட பாராளுமன்றம் கட்டுவதற்கு, திருத்தம் செய்வதற்கு சீனா அரசாங்கம் பெருமளவு நிதி வழங்கி உதவி செய்கிறது.

p3070243gi6.jpg

  • தொடங்கியவர்

வைத்தியசாலை

p3070244im2.jpg

  • தொடங்கியவர்

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைவர் உண்டு. அக்கிரமத்துத்தலைவர் தமிழகத்திரைப்படங்களில் வருவது போல ஆழமரத்தின் கீழ் இருந்து தனது தீர்ப்பினை வழங்குவார். அத்தலைவர்கள் எல்லோரும் மாதமொருமுறை சந்திப்பார்கள். அவர்கள் சந்திக்கும் இடத்தின் படம்.

p3080338yr6.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றியுங்கோ...தொடரட்டும் உங்கள் தேனிலவுங்கோ.......

  • தொடங்கியவர்

வைப்பகம். எல்லாவைப்பகமும் Reserve Bank Of vanuatu மேற்பார்வையின் கீழ் தான் நடைபெறுகிறது. அவுஸ்திரெலியா வைப்பகமான Westpac, ANZ banksம் இங்குள்ளது. அரசவைப்பகமாக The National Bank of Vanuatu உள்ளது. மற்றைய வைப்பகங்களினைப்போல European Bank Limited மக்களுக்கு சேவை செய்வதில்லை. ஆனால் பெரிய பணக்காரர்களுக்கும், நிறுவனங்களுக்கும் உதவிசெய்கிறது.

p3070248cv7.jpg

  • தொடங்கியவர்

வாசித்து கருத்துக்கள் தந்த கானாபிரபா, புத்தனுக்கு நன்றிகள்

இன்னொரு முக்கியமான விடயம் அண்மையில் உலகிலயே சந்தோசமாக வாழும் மக்கள் யார் என்ற நடத்தப்பட்ட அஐவில் வனவாட்டுவில் வசிப்பவர்களே உலகிலயே சந்தோசமானவர்கள் என்று தரவுகள் சொல்லியது.இது பற்றி பிபிசியில் வந்த கட்டுரை ஆங்கிலக் களத்தில் இணைதிருந்தேன் ,அதற்கான தொடர்பு இங்கே.

http://www.yarl.com/forum4/viewtopic.php?t=55

ஆகவே இந்த நாட்டைப் பற்றிய மக்களின் வாழ்க்கை பற்றிய அரசியல் பொருளாதாரம் நடைமுறைகள் சம்பந்தமாக உங்கள் பதிவுகளை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.

  • தொடங்கியவர்

வனக்கம் அரவிந்தன்

சுவையான தகவலைத் தந்திருக்கிறீர்கள்.தனியான ஒரு தளத்தில் இவற்றைப் பதிந்து வைத்திருப்பதும் நல்லது.

http://aravinthan29.blogspot.com/2006/07/vanuatu.html

  • தொடங்கியவர்

பிரயாண முகவரின் ஊடாக இன்னாட்டுப்பயணத்துக்கு செலுத்திய பணத்தில் விமானச்சீட்டுடன், விடுதி, காலை உணவு, விடுதியில் இருந்து இயந்திரம் இல்லாத படகுகளில் சவாரி (எத்தனை முறையும் செல்லலாம்),அரை நாள் சுற்றுலா இடங்களைக் காட்டுபவர் ஒருவர் துணையுடன் குளீருட்டப்பட்ட வானில் போட்விழாவைச் சுற்றி வருவதற்கு இலவச அனுமதிச்சீட்டு ஆகியவையும் அடங்கும்.

தலை நகரம் போட் விலாவிலும் அருகில் உள்ள கிராமங்களிலும் தான் தார் வீதியினைக்காணக்கூடியதாக உள்ளது. மற்றைய பகுதிக்கு செல்லும் போது பள்ளங்கள் நிறைந்த வீதியினால் தான் செல்லவேண்டும். போட் விழாவில் தான் அரச அலுவலகங்கள், கட்டடங்களினைக் காணலாம். பாரளுமன்றம்,வைத்தியசாலை,வைப்

பகம், சிறைச்சாலை, போட் விலாவில் உள்ள பெரிய விடுதிகள்,பிரதமர் வதிவிடம்,பல்கலைக்கழகம், நீதிமன்றம், ஊர்த்தலைவர்கள் சந்திக்கும் இடம்,சுதந்திரதினம் கொண்டாடும் இடம்,கள்ளுக்கொட்டில்(Kava),சந்தை ஆடைத்தொழிற்சாலை உட்பட முக்கிய இடங்களினை காட்டி விளங்கப்படுத்தினார்கள்.

நான் சந்தித்த மக்களிடம் கதைக்கும் போது, சுதந்திரம் கிடைத்தபின்பு வனு-அற்று அரசாங்கம் வரிகளினை வசூலிப்பதினால் மக்கள் பிரித்தானியர்,பிரேஞ்சு ஆட்சியின் கீழ் இருந்திருக்கலாமே என்று தெரிவித்தார்கள். போட் விலாவில் அதிகவரி என்பதினால் மக்கள் கிராமப்புறங்களில் தான் வசிக்கிறார்கள். இங்கு சுதந்திர தினத்தினை 2 கிழமைக்கு மைதானம் ஒன்றில் கொண்டாடுகிறார்கள். அரசியல் பிரமுகர்கள்,பெரியவர்கள், தலைவர்களிருந்து பார்க்கக்கூடிய அவ் மைதானத்தின் படம் தான் இது.

p3080339tt5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இன்னாட்டுப் பணத்தினை வற்று(Vatu) என்று அழைக்கப்படுகிறது. அவுஸ்திரெலியா 1 வெள்ளி கிட்டத்தட்ட 80 வற்று. பேருந்தில் செல்ல குறைந்த காசு 100 வற்று தேவைப்படுகிறது. இதனால் கிராமப்புற மக்கள் கால் நடையாகவே நடப்பது அதிகம்.போட் விழாவில் தான் பேருந்துக்களினைக்காணலாம். கமக்காரர்கள் சந்தையில் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளினை விற்பதற்கு கால் நடையாகவே தூரக்கிராமங்களில் இருந்து இரவு இரவாக நடந்து போட்விலாவில் உள்ள சந்தைக்கு வருவதினால் அச்சந்தை திங்கள் முதல் சனி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை திறப்பதில்லை.

p3060238mv5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

வனு-அற்று மக்கள் அங்கே தயாரிக்கும் குடிவகையான கவா(Kava) வினையே அருந்துகிறார்கள். 10 வீதத்துக்கு குறைவானவர்களே வெளினாட்டு குடிவகைகளினை அருந்துவது வழக்கம். மற்றைய தென்பசுபிக் நாடுகளில் தயாரிக்கப்படும் கவா வினை விட வனு-அற்று கவா வித்தியாசமானது. உடனடியாகக்குடிக்கவேண்டும். 2 சட்டிக்கு மேல் குடித்தால் குடிப்பவர்கள் இருந்த இடத்தில் அசையாமல் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டு மறுனாள் தான் பழைய நிலைக்கு வரமுடியும். கவா அங்கு வளரும் தாவரம் ஒன்றின் வேரினைக் காச்சி அதில் கிடைக்கும் சாற்றினால் தான் தயாரிக்கப்படுகிறது. படத்தில் உள்ள கொட்டிலில் இருந்து மக்கள் கவாவினை அருந்துவார்கள்.

p3080337gz8.jpg

  • தொடங்கியவர்

ஆடைத் தொழிற்ச்சாலை(T-shirt factory). ஆடைகள் எவ்வாறு செய்வதினையும் இங்கே விளக்கம் தந்தார்கள்.

p3080336uc1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்புவும், வடிவேலுவும் செல்வதற்கு ஏற்ற இடம்- முக்கியமாக கவா

  • தொடங்கியவர்

நன்றிகள் நாரதர். இன்னாட்டு மக்கள் பற்றி போட் விலா பற்றிய தகவல்கள் தந்தவுடன் எழுதுகிறேன். 4 மாதத்தின் முன்பு சென்ற போது கிடைத்த தகவல்களினை வைத்துத்தான் வனு-அற்று பற்றி எழுதுகிறேன். புள்ளிவிபரங்கள் சில வேளை வித்தியாசப்படலாம்.

  • தொடங்கியவர்

அமெரிக்கா ஜனாதிபதிகள் வெள்ளைமாளிகையிலும், பிரித்தானியாப்பிரதமர்கள் 10,Downing Streetலும் வசிப்பது போல வனு-அற்று பிரதமர்கள் வசிக்கும் இடத்தின் படம் இது. தற்போதைய பிரதமரின் பெயர் Ham Lini.

p3070246sp7.jpg

அழகான தகவலுக்கும் படங்களுக்கும் நன்றிகள் அரவிந்தன்.

  • தொடங்கியவர்

1ம் உலகப்போரின் போது வனு-அற்றுவில் தளம் அமைத்த அமெரிக்காப்படைகளுக்கு உதவச்சென்று மரணம் அடைந்த அவுஸ்திரெலியா, நியூசிலாந்து போர்வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட தூபி. இத்தூபி Reserve Bank Of vanuatu முன்னால் இருக்கிறது. அடுத்த வீதியில் தான் வனு-அற்று பிரதமரின் வீடும் அமைந்துள்ளது.

p3070247ge6.jpg

  • தொடங்கியவர்

இங்குள்ள மக்கள் பொதுவாக நேர்மையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. பெரிய கொலை,கொள்ளை, பாலியல் வல்லுறவுச்சம்பவங்கள் இங்கே காணமுடியாது. இதனால் சிறு குற்றங்கள் செய்த குற்றவாளிகளையே சிறைச்சாலையில் காணலாம். குற்றவாளிகள் தங்கள் உறவினர்கள், நண்பர்களினைச் சந்திக்க சிறைச்சாலையின் இரும்புப் படலைக்கு உட்புரமாக நின்று, படலைக்கு மறு புரத்தில் வீதியில் நிற்கும் அவர்களுக்கு தெரிந்தவர்களோடு கதைப்பார்கள். அருகில் ஒரு காவலாலியையும் காணமுடியாது. படலையின் மேல் ஏறி தப்பிவிடக்கூடியதாக வசதி இருந்தாலும் அவர்கள் தப்புவதில்லை. ஒரு, இருவர் தப்பியதாகவும், பிறகு பிடிபட்டதாகவும் அங்கு சொன்னார்கள். முன்னால் பிரதம மந்திரி Barak Sope ஊழல் குற்றம் ஒன்றில் ஈடுபட்டதாக 2001ல் குற்றம் சாட்டப்பட்டு 3 வருடம் சிறைத்தண்டனை அடைந்து 2004ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்பொழுது வெளிவிகார அமைச்சர் பதவி வகிக்கிறார்.

பிரித்தானிய,பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இங்கு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிக்கென இரு வேறு பல்கலைக் கழகங்கள் இருந்தன. சுதந்திரம் அடைந்தபின்பு பிரித்தானியர்களினால் நடாத்தப்பட்ட ஆங்கிலப்பல்கலைக்கழகத்திலே ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழி பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. தற்பொழுது உயர் நீதிமன்றமாக விளங்கும் முன்னால் பிரெஞ்சு பல்கலைக்கழகத்தின் படம்.

p3080340cg3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

விடுதியில் இருக்கும் போது நான் இருந்த கதிரை 1 நிமிடம் ஆடுவது போலத்தென்பட்டது. விடுதியில் விசாரிக்க அங்குள்ளவர்கள் 'எதாவது தீவில் நில அதிர்வு ஏற்பட்டிருக்கும், இது இங்கு அடிக்கடி நடைபெறும்' என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்கள். போட் விலாவினைச் சுற்றிப்பார்த்துக்கொண்டு வரும் போது படத்தில் தண்ணீரில் தெரியும் குன்று "2001ல் நடந்த நில அதிர்வின் போது பக்கத்து மலையில் இருந்து பிரிந்து வீதியில் உருண்டு தண்ணீரில் விழுந்தது.. நல்லகாலம் இரவு என்பதினால் ஒருவரும் அவ்வீதியாகச் செல்லவில்லை" என்றார்கள். போட்விலா துறைமுகத்திற்கு அருகில் இக்குன்று இருக்கிறது.

p3080335ul0.jpg

Edited by Aravinthan

அரவிந்தன்,,தகவல்களுக்கு நன்றி...

படங்கள் அருமை...

  • தொடங்கியவர்

வாசித்து கருத்துக்கள் சொன்ன ரசிகை, தூயாவுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

வனு-அற்றில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் போட் விலா இருக்கிறது. பயணம் செய்பவர்கள் வனு-அற்று விமான நிலையத்தில் இருந்து நடந்து போய் விமானத்தில் ஏற வேண்டும்.

p3080357ka6.jpg

p3080361ea7.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.