Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல தமிழக வார இதழ் செய்தியாளர் இலங்கைப் படையினரால் கைது - குளோபல் தமிழ் செய்தியாளர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Tamil%20prapa_CI.jpg

தமிழகத்திலிருந்து சென்ற பிரபல வார இதழ் ஒன்றின் செய்தியாளர் கைது செய்யப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இவ்வாறு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில்இ கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் தம்முடன் குறித்த தமிழக பத்திரிகையாளரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் சேதமடைந்து குன்றும் குழியுமாக இருந்த வீதியின் மோசமான நிலையினை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை படையினர் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கிராமத்திற்குச் சென்று மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அங்கு சென்ற படையினர், பத்திரிகையாளரான தமிழக பிரஜையை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

 

மகா தமிழ் பிரபாகரன் எனப்படும் அந்தச் செய்தியாளர் கடந்த வருடமும் இலங்கை சென்று இலங்கையின் நிலவரங்களை அவர் பணியாற்றும் பிரபல இதழில் எழுதியிருந்தார்.

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அத்துடன் இந்தப் பத்திரிகையாளருடன் நின்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் காவற்துறை நிலையம் சென்றனர் ஆயினும் அவர்களின் புகைப்படக் கருவிகள் பரிசோதித்த பின் அவை ஒப்படைக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை விடுவிக்கப்படாது தொடர்ந்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுளார். அவர் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவித்த  ஜெயபுரம் பொலிசார் வேறு எவரையும் கைது செய்யவோ தடுத்து வைக்கவோ இல்லை என எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100838/language/ta-IN/article.aspx

  • Replies 77
  • Views 4.5k
  • Created
  • Last Reply

5% ஊடக சுதந்திரத்தை அனுபவிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஜூனியர் விகடன் பத்திரிகை நிருபர்.
நத்தார் விடுமுறை நேரம் கைது செய்யப்பட்டது, வருத்தம் அளிக்கின்றது.
விரைவில் விடுதலை செய்து... அவரின் பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலித்தடம் தேடி…! என்ற தொடரை இங்கு எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil24news.com/news/archives/39111

  • கருத்துக்கள உறவுகள்
விகடன் பத்திரிகையாளர் மகா தமிழ் பிரபாகரன் வன்னியில் மக்களோடு உரையாடிக்கொண்டிருக்கையில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஊடகச் சுதந்திரத்தின் குரல்வளையை இலங்கை அரசு ஈனயிரக்கம் இல்லால் திருகிக்கொண்டிருக்கிறது. ஒருமித்த குரலுடன் இலங்கை அரசைக் கண்டிப்பது சனநாயகத்திற்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் குரல்கொடுப்பவர்களின் கடமையாகிறது. மவுனம் என்பது சாவுக்குச் சமம்!
1521230_10202683183462248_1604494319_n.j

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

fb

புலித்தடம் தேடி…! என்ற தொடரை இங்கு எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil24news.com/news/archives/39111

 

நன்றி இணைப்பிற்கு.

 

சுற்றுலா விசாவில போயிருப்பார்ன்னு நினைக்கிறேன்! விரைவில் விடுதலையாகணும்! :( 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு: கைதுசெய்யப்பட்ட மகா தமிழ்ப் பிரபாகரனை குடிவரவு அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைப்பார்கள்:

 

 

Tamil%20prapa_CI.jpg


இலங்கையின் கிளிநொச்சிப் பகுதியில் சுற்றுலா விசாவில் சென்று பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டுள்ள இடங்களை படம் பிடித்ததற்காக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதனை உறுதிப்படுத்திய பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண, சுற்றுலா விசாவில் வந்த ஒருவர் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடன் இடங்களை புகைப்படம் எடுத்த காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை அந்த நபர் மீறினார் என்றும், நாளை மேலதிக நடவடிக்கைக்காக அவரை குடிவரவு அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைப்பார்கள் என்றும் ரோஹண தெரிவித்தார்.


கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், 24 வயதான அவர் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று தெரிவிக்கவில்லை என்றும் கூறும் அஜித் ரோஹண, சுற்றுலா விசாவில் வருபவர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் சுட்டிகாட்டினார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அந்த நபருடன் பயணித்தார் என்றும், அவர்கள் ஏன் வட மாகாணத்தில் அதிமுக்கியமான பாதுகாப்பு தொடர்பான இடங்களை படம் எடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார் அஜித் ரோஹண.


ஆனால் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் தனது நண்பர் என்றும், வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை, பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் உட்பட தமது குழுவினருடன் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி, ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு தான் பயணித்தபோது, அவரும் உடன்வந்தார் என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடகங்களுக்கு   உறுதிப்படுத்தியுள்ளார். 

அந்தப் பகுதியிலுள்ள மக்களைச் சந்திப்பதற்காகவும், அவர்களுடன் சில விஷயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் தாம் சென்றிருந்த்தாக சிறீதரன் தெரிவித்தார். 

இராணுவ முகாம்கள் இருக்கும் பகுதிகளுக்கு தாங்கள் செல்லவில்லை என்றும் அவர் கூறினார். 
கைது செய்யப்பட்டுள்ள தனது நண்பர் இதற்கு முன்பும் ஒரு முறை இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் எனவும் சிறீதரன் தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100838/language/ta-IN/article.aspx

விகடன் குழுமத்தின் கனத்த மவுனம்.

 

மகா.தமிழ்ப் பிரபாகரன்.   இலங்கை ராணுவம் மற்றும் உளவுப் படையால் தற்சமயம் கடத்தப்பட்டு,  இலங்கை தீவிரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

1010250_567294269981232_1533622636_n.jpg
 

இந்த மகா. தமிழ்ப் பிரபாகரன், புலித்தடம் தேடி என்ற நூலின் ஆசிரியர்.  22 வயது.  தீவிரமான தமிழ் உணர்வு காரணமாக ஊடகத்துறைக்கு வந்தவர்.  குறிப்பாக புலிகளின் மீதும், ஈழத்தமிழர் விவகாரத்திலும் உள்ள ஆர்வத்தின் காரணமாகவே ஊடகத்துறைக்கு வந்தவர்.   விகடனின் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்.

பயிற்சியின் முடிவில் 2011ம் ஆண்டின் சிறந்த மாணவப் பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். சிறந்த மாணவப் பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, அவரை ஜுனியர் விகடனிலேயே பணியில் சேரச் சொல்லி வழங்கப்பட்ட வாய்ப்பை நிராகரித்து விட்டு, புலம்பெயர்ந்த தமிழர்கள் மூலம் எனக்கு நார்வேயில் ஒன்றரை லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்க உள்ளது என்று கூறி, விகடன் வாய்ப்பை நிராகரிக்கிறார்.  அதன் பின்னர், நார்வே வேலை கைகூடாத காரணத்தால், தந்தி டிவியில் சீமானின் மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் சில காலம் பணியாற்றுகிறார். ஈழத் தமிழர் விவகாரத்தில் உள்ள ஆர்வம் மற்றும் உணர்வின் காரணமாக, தன்னிச்சையாக இலங்கை சென்று, அங்குள்ள தமிழர் பகுதிகளை பார்வையிட்டு வந்தார்.  அந்த அனுபவங்களை தொடராக எழுத ஜுனியர் விகடனில் அனுமதி கிடைத்ததையொட்டி,  "புலித்தடம் தேடி" என்ற பெயரில் அந்த அனுபவங்களை தொடராக எழுதுகிறார்.  அந்த தொடர், தமிழகத் தமிழர் மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

aa.png

அந்த தொடரை, நூலாக வெளியிட விகடன் பிரசுரமே முன் வருகிறது.  விகடன் பிரசுரம் நூல் தயாரித்து முடித்ததும், விகடன் குழுமத்தில் யாரிடமும், தகவலும் தெரிவிக்காமல், அனுமதியும் பெறாமல், தன்னிச்சையாக ஒரு நூல் வெளியீட்டு விழாவை நடத்துகிறார் தமிழ்ப் பிரபாகரன். அந்த நூல் வெளியீட்டு விழாவில், பிரபல ஈழ வியாபாரி வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.  இது விகடன் நிறுவனத்தில் பெரும்பாலானோருக்குப் பிடிக்கவில்லை.

தொடர் எழுதும் முன்பாக இலங்கை சென்று வந்த பிரபாகரன், அதற்குப் பின்னால் நடந்த பல்வேறு விஷயங்களை, இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் மூலமாகவும், புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் இணையதளம் மூலமாகவும் தரவுகளை எடுத்து எழுதி வந்தார்.

ஆனாலும், அதன் பிறகும், விகடன் குழும இதழ்களுக்காக அவ்வப்போது கட்டுரைகளை எழுதிக் கொடுத்து வந்துள்ளார் தமிழ்ப் பிரபாகரன்.  இப்படியே சென்று கொண்டிருந்தபோதுதான், ஒரு நாள் திடீரென்று நான் இலங்கை செல்லப்போகிறேன்...  தற்போது தமிழ் மக்கள் என்ன நிலையில் உள்ளார்கள் என்பதை கண்டறிந்து மீண்டும் ஒரு கட்டுரை எழுதப்போகிறேன் என்று தன் நண்பர்களிடம் கூறி, அதற்கான பொருளாதார உதவிகளைச் செய்யுமாறு கேட்டுள்ளார்.  ஆனால் பெரும்பாலான நண்பர்கள், அந்த முயற்சி ஆபத்தானது, அதனால், அதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, பொருளாதார உதவியும் செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

Puliththadam-thedy100813seithy-11.jpg

இதற்குப் பிறகு எங்கிருந்தோ பொருளாதார உதவி பெற்று, யாரிடமும் சொல்லாமல், திடீரென்று கிளம்பி இலங்கை சென்றுள்ளார். இலங்கை சென்றவர், இலங்கையில் எதிர்க்கட்சி எம்.பியான ஸ்ரீதரன் உதவியோடு தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளார்.  இலங்கை எம்.பி ஸ்ரீதரனின் பேட்டியையும் எடுத்துள்ளார் பிரபாகரன்.  பேட்டி எடுத்ததோடு தமிழர்ப் பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கிளிநொச்சி மாகாணம், கிராஞ்சி என்ற இடத்தில், இலங்கை ராணுவத்தினரால் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாகரன் கைது செய்யப்பட்ட தகவல், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் மூலமாக வெளியுலகிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மதியம் கசிந்த இந்த செய்தி, இன்று காலை முதல், புலம் பெயர் இணையதளங்களால் பரவலாக வெளியிடப்பட்டது.  இன்று காலை முதல், சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பரவி வருகிறது.

ஆனால், இந்த நிமிடம் வரை, விகடன் நிறுவனத்தின் இணையதளத்திலோ, அல்லது விகடன் குழும இதழ்களிளுக்காக தனித்தனியாக வைத்திருக்கும் சமூக வலைத்தள பக்கங்களிலோ தமிழ்ப் பிரபாகரனின் கைது குறித்து ஒரு வரிச் செய்தி கூட வெளியிடப்படவில்லை.

விகடன் தரப்பில், பிரபாகரன் மீது கோபம் இருக்கலாம்.  பிரபாகரன், மாணவ நிருபர் பயிற்சி முடித்த பிறகு கூட, செல்லும் இடங்களிலெல்லாம் தன்னை விகடன் நிருபர் என்றே சொல்லி வந்திருக்கிறார்.  சில மாதங்கள் முன்பு, ஈழ வியாபாரி வைகோ சாஞ்சி சென்று, பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, தமிழ்ப் பிரபாகரனும் வைகோவுடன் விகடன் சார்பாக சாஞ்சி சென்றார்.   

இது போல, தொடர்ந்து விகடன் நிறுவனம், பிரபாகரனை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டது.  இதனால் இயல்பாக தன்னை விகடன் ஊழியராகவே பிரபாகரன் செல்லும் இடங்களிலெல்லாம் அடையாளப்படுத்திக் கொண்டார்.  இது குறித்து  விகடன் குழுமத்தினருக்கு கோபம் இருப்பது நியாயமானதே.  ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பாக மாணவப் பத்திரிக்கையாளராக பயிற்சி முடித்தவர்களை இன்று வரை விகடன் நிறுவனம், தன்னுடைய பல்வேறு குழும பத்திரிக்கைகளுக்காக ஊதியமின்றி பயன்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மை.  மாணவர்களாக உள்ள இளைஞர்களுக்கு, விகடன் நிறுவனம் வழங்கும் அடையாள அட்டை, சமுதாயத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்தை தருகிறது.  அந்த அடையாள அட்டையை வைத்திருந்தால், குடித்து விட்டு வாகனம் ஓட்டலாம், காவல்துறையில் சென்று பஞ்சாயத்து பேசலாம், ஆசிரியர்களை மிரட்டலாம்.  இது போல் பல்வேறு பயன்களை ஊடக அடையாள அட்டை தருவதால், அந்த மாணவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் ஊதியமின்றி வேலை செய்து வருகின்றனர்.

பிரபாகரன் போல, பல்வேறு முன்னாள், இன்னாள் மாணவப் பத்திரிக்கையாளர்கள் விகடன் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது விகடன் நிறுவனத்திற்கு தெரியாதது இல்லை.  அப்படி இருக்கையில் குறைந்தபட்சம் மகா.தமிழ்ப் பிரபாகரனின் கைது குறித்து செய்தியை வெளியிடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும் ?  குறைந்தபட்சம், தங்கள் நிறுவனத்தில் மாணவப் பத்திரிக்கையாளராக இருந்தவர், புலித்தடம் தேடி தொடர் எழுதியவர் என்ற அளவிலாவது செய்தி வெளியிடலாம் அல்லவா ?  இப்படி செய்தி கூட வெளியிட முடியாத அளவுக்கு விஷயத்தை இருட்டடிப்பு செய்து கொண்டு, மணலில் தலையை புதைத்துக் கொண்டுள்ளது விகடன் நிறுவனம்.

தற்போது கிடைத்த செய்தியின்படி, கைது செய்யப்பட்ட தமிழ்ப் பிரபாகரன், கொழும்பில் உள்ள தீவிரவாத குற்றத் தடுப்புப் பிரிவு கட்டிடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிகிறது.

இன்று கைது செய்யப்பட்டுள்ள பிரபாகரன், சில நாட்கள் சித்திரவதைக்குப் பிறகு விடுதலை செய்யப்படுவார்.  ஆனால், இந்த விவகாரத்தால் விகடன் நிறுவத்தின் இரட்டை நிலைபாடு, மற்றும் அயோக்கியத்தனம் அம்பலமாகியுள்ளது.  பிரபாகரன் மாணவப் பத்திரிக்கையாளராக இல்லாமல் கூடப் போகட்டுமே....  தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்தியப் பிரஜை என்ற அளவில் ஒரு செய்தி வெளியிடலாம் அல்லவா ?

மாவேயிஸ்டுகளால் ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கைது செய்யப்பட்டபோது, அலெக்ஸ் ஒரு முன்னாள் மாணவப் பத்திரிக்கையாளர் என்று பெருமையாக செய்தி வெளியிட்டது விகடன்.  தேவயானி கோபராகடே என்ற அதிகாரி அமெரிக்காவால் கைது செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்து செய்தி வெளியிட்டது விகடன்.  அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தேவயானி பத்திரமாக உள்ளார்.  மாவோயிஸ்டுகளால் கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பால் மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் தன்னுடைய முன்னாள் மாணவப் பத்திரிக்கையாளர் ஒருவர், எவ்வித ஜனநாயக விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத ஒரு கொடுங்கோல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கும் செய்தியை நன்கு அறிந்தும், அது குறித்து தூதரகத்தை தொடர்பு கொண்டு, பிரபாகரனை மீட்க வேண்டிய பணிகளில் ஈடுபட வேண்டிய விகடன், இன்று செய்தி கூட வெளியிடாமல் கனத்த மவுனம் சாதிக்கிறது.

vikatan-logo.jpg

தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று ஊரை ஏமாற்றும் விகடன் குழுமம், மற்ற எந்த கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் சளைக்காத, ஒரு சுயநல முதலாளித்துவ கும்பல் என்பதையே விகடனின் இந்த கனத்த மவுனம் பறைசாற்றுகிறது.

 

விகடன் குழுமத்தின் கனத்த மவுனம்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இவர் ஒரு ஈழத்தமிழர். ஆனால் இந்தியாவில் வாழ்கிறார் என நினைக்கிறேன். :rolleyes:

 

தமிழக உறவு ஒருவர் இவருடைய blog ஐ முகநூலில் பகிர்ந்துள்ளார். http://magatamizh.blogspot.in/

 

அதில் ஒரு கவிதை இவ்வாறு உள்ளது.

 

ஒரு பிடி மண்

-  மகா.தமிழ்ப் பிரபாகரன்

 

orupidiman.jpg

 

குண்டடிப்பட்ட கரங்களுடன்
குருதி கறையுடன்
ஒரு பிடி மண்!
தப்பி வந்த நடுநிசியில்
யாழ்ப்பாண மீன்பிடி தோணியில்
ஏறியவுடன் சட்டைப் பையில்
நிரப்பிக்கொண்டேன் தாய்மண்ணை.
சமுத்திரமே ஓய்ந்தாற் போல
அலைகள் சலனமின்றி
குண்டுகளின் ஓலமே
காதில் விழ
விடியற்பொழுதில் சிற்றோடம் கரைத்தட்டி
தமிழ்நாட்டில் சாய்ந்தது
அகதியெனும் பெயர் தாங்கி
தடுமாறி எழுந்தேன்...
குருதி வாடையே மீதமிருந்தது
சுமந்து வந்த
ஒரு பிடி தாய் மண்ணையும்
பிடுங்கிக் கொண்டது, அலை.

 

நன்றி : யூத்புல் விகடன்

 

பி.கு: இன்னொரு தமிழக உறவு இவர் இந்திய குடியுரிமை பெற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.

Edited by துளசி

இளம் வயதினராக இருக்கின்றாரே.

 

இவருடைய துணிவுக்கும் முயற்சிக்கும் இவர் ஒருநாள் உச்சியை தொடவீண்டும்.

 

இந்த சூழலில் இருந்து விரைவில் விடுபட்டு பாதுகாப்பாக வீடு செல்ல பிராத்திப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு ஈழத்தமிழர். ஆனால் இந்தியாவில் வாழ்கிறார் என நினைக்கிறேன். :rolleyes:

 

தமிழக உறவு ஒருவர் இவருடைய blog ஐ முகநூலில் பகிர்ந்துள்ளார். http://magatamizh.blogspot.in/

 

அதில் ஒரு கவிதை இவ்வாறு உள்ளது.

 

ஒரு பிடி மண்

-  மகா.தமிழ்ப் பிரபாகரன்

 

orupidiman.jpg

 

குண்டடிப்பட்ட கரங்களுடன்

குருதி கறையுடன்

ஒரு பிடி மண்!

தப்பி வந்த நடுநிசியில்

யாழ்ப்பாண மீன்பிடி தோணியில்

ஏறியவுடன் சட்டைப் பையில்

நிரப்பிக்கொண்டேன் தாய்மண்ணை.

சமுத்திரமே ஓய்ந்தாற் போல

அலைகள் சலனமின்றி

குண்டுகளின் ஓலமே

காதில் விழ

விடியற்பொழுதில் சிற்றோடம் கரைத்தட்டி

தமிழ்நாட்டில் சாய்ந்தது

அகதியெனும் பெயர் தாங்கி

தடுமாறி எழுந்தேன்...

குருதி வாடையே மீதமிருந்தது

சுமந்து வந்த

ஒரு பிடி தாய் மண்ணையும்

பிடுங்கிக் கொண்டது, அலை.

 

நன்றி : யூத்புல் விகடன்

 

பி.கு: இன்னொரு தமிழக உறவு இவர் இந்திய குடியுரிமை பெற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilauthors.com/writers/india/Maga.Tamilpirabaharan.html

 

நன்றி. பிறந்த இடம் சேலம், தமிழ்நாடு என்றுள்ளது. :)

 

இவ் இணையதளத்திலும் அந்த கவிதை உள்ளது. http://www.tamilauthors.com/03/380.html

 

நான் நினைக்கிறேன். அவர் தன்னை ஈழ தமிழர் போல் நினைத்து அவர்கள் துயரை இக்கவிதையாக எழுதியிருப்பார் போலிருக்கு. :rolleyes:

 

மேலே உள்ள "விகடன் குழுமத்தின் கனத்த மவுனம். " என்ற கட்டுரை துரோக நோக்கத்துடன் எழுதப்பட்டது போன்று இருக்கு. விபரம் தெரிந்தவர்கள் உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். விகடன் பதியாமல் விட்டதற்கு காரணம் அவர் இலங்கை சென்றது தனிப்பட்ட சுற்றுலா காரணமாக இருப்பதாலாகும்.  அது அவர்களின் பாடாக இல்லாமைலிருந்திருக்கலாம். 

 

சிறிதரன் தனது நண்பன் என்ற முறையில் அழைத்திருக்கிறார். அதன் படி அவர் சிறிதரனுடன் இடங்களை சுற்றி பார்க்க போயிருக்கிறார். சிறிதரனுடன் இருந்ததால் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாஸ் போட்டில் ஊடகவியலார் என்ற குறிப்பு இருப்பதால் நாடுகடத்தப்பட போகிறார். 

 

இது தடுத்து நிறுத்தப்பட முடியாவிட்டால் சிறீதரன் இனிமேலைய காலங்களில் தனது உறவினர்களை, நண்பர்களை ஊர் பார்க்க அழைப்பது சிக்கலாக போகிறது. எந்த ஊடகவியலாரும் தமது நண்பர்கள், உறவுகளிடம் கூட பயணிக்க முடியாமல் போய்விடும். 

 

முக நூல் உள்ளவர்கள் செய்தியை பரப்புங்கள்.

Edited by மல்லையூரான்

மே 17 இயக்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=133879

 

நாளைக்கு தான் முழு விபரமும் தெரியும்.

மகா தமிழ் பிரபாகரனை விடுவிக்க தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும். தமிழக ஊடக அமைப்புக்களும் குறிப்பாக அவர் பணியாற்றிய விகடனும் தலையிட வேண்டும். ஏனென்றால் மிகவும் இக்கட்டான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னை ஊடகவியலாளராக அடையாளம் காட்டாமல் சுற்றுலா பயணிகளின் விசா எடுத்தே அங்கு சென்றுள்ளார். ஏனென்றால் ஊடகவியலாளர் என்றால் நுழைவு அனுமதி கிடைத்திருக்காது.

நடக்கும் அவலங்களை வெளிக்கொணர துணிச்சலாக அவர் மேற்கொண்ட பயணம் அவரை இக்கட்டில் தள்ளிவிட்டது. உலக வரலாற்றில் இது ஒன்றும் புதிதல்ல. ஊடக அடக்குமுறைகள் நடக்கும் நாடுகளில் பல ஊடகவியலாளர்கள் தமது அடையாளத்தை மறைத்து போய் வந்த வரலாறு நிறையவே உண்டு. இது குற்றமல்ல. அறத்தின் பால் நின்று சிந்திக்கும் ஒரு ஊடகவியலாளனின் உன்னத அர்ப்பணிப்பு இது.

லீனா மணிமேகலை போன்றவர்களுக்கு திறக்கும் கதவு மகா பிரபாகரன் போன்றவர்களுக்கு ஏன் மூடப்படுகின்றது என்பதை அறிய அதன் நுண்ணிய அரசியல் பின்புலம் பற்றிய அறிதலும் புரிதலும் வேண்டும். இதற்குள் நாம் போகத்தேவையில்லை. அது சிந்துபாத் கதையை விட நீளமானது. எழுதித் தீராது.

அண்மையில் சிறீலங்காவில் ஒருவரை கைது செய்தல் என்ற போர்வையில் அரசு விருந்தினர் போல நடத்திய ஒருவருக்காக பொங்கிய தமிழகம் மகா தமிழ் பிரபாகரன் விடயத்தில் காக்கும் மவுனம் அதிர்ச்சியளிக்கிறது.

பல ஊடக - மனித உரிமை வாதிகளின் உண்மை முகம் அம்பலமாகி கிழிந்து தொங்குகிறது.

நியூயோர்க்கில் தேவயானி கோப்ராகடே தவறிழைத்துவிட்டார் என்று அறிந்தவுடன் ஐநாவில் பதவியுயர்வு கொடுத்து அவரது ராஜீய - சட்ட பாதுகாப்பை அதிகரித்து அவரை காப்பாற்றியது போல் பிரபாகரனை இந்திய அரசு காப்பாற்றாது. ஏனென்றால் தேவயானி இந்தியர். மகா தமிழ் பிரபாகரன் தமிழர்.

எனவே தமிழக அரசும் தமிழக ஊடக அமைப்புக்களும் அழுத்தங்களை கொடுத்தால்தான் மகா தமிழ் பிரபாகரன் விடுவிக்கப்படுவார்.

 

Parani Krishnarajani

(facebook)

தமிழ் பிரபாகரன் எனது நண்பர்தான் என்றாலும், அவர் ஊடகவியலாளர் என்பது எனக்கு தெரியாது - சிறிதரன் Top News
[Friday, 2013-12-27 08:11:31]
News Service
இலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரனை புலனாய்வுப்பிரிவினர் விசாரித்து வருவதாக கூறுகிறார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன. இந்த விசாரணைகள் முடிந்ததும் அவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இது நடந்து முடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும் என்றும் கூறினார் அஜித் ரோஹன. இவரை கைது செய்தபோது அவருடன் இருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அவர் சுற்றுலாப்பயணியாக மட்டுமே வந்தார், சுற்றுலாப்பயணியாக மட்டுமே நடந்துகொண்டார் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறாரே என்று கேட்டபோது, அவர் அதை மறுத்தார்.

 
தமிழ் பிரபாகரன் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தாலும், தமிழ் பிரபாகரனிடம் தாங்கள் கைப்பற்றிய கேமராவை ஆராய்ந்தபோது, அதில் அவர் ராணுவ நிலைகளை மட்டும் தேர்ந்தெடுத்து படம் பிடித்திருந்ததை தாங்கள் கண்டதாகவும், குறிப்பாக நாவற்குடா பகுதியில் இருக்கும் இராணுவ முகாம், அந்த பகுதியின் இராணுவ நடமாட்டங்கள், இராணுவ வாகனங்களின் நடமாட்டங்களையெல்லாம் அவர் படம் பிடித்திருந்தார் என்றும் கூறிய அஜித் ரோஹன, ஒரு சுற்றுலா பயணியான அவர் எதற்காக இராணுவ இலக்குகள், இராணுவத்தினரை மட்டும் குறிவைத்து படம் பிடிக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

அவரது கேமராவில் வேறு எந்த படங்களும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், பாதுகாப்பு விவகாரங்களை மட்டும் அவர் குறிப்பாக படம் பிடித்தது ஏன் என்பதுதான் தங்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாக கூறுகிறார். இவரது கைது குறித்தும், இலங்கையில் இவரது நடத்தை குறித்தும் இந்திய தூதரகத்திற்கு உரிய முறையில் தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

தமிழ் பிரபாகரன் விஷயத்தில் இரண்டு வழிகள் இருப்பதாக தெரிவித்த அஜித் ரோஹன, தாங்கள் அவரிடம் தற்போது விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் இலங்கைக்குள் வந்து சட்டவிரோத செயல்களை செய்திருந்தாலோ, அல்லது அவரது குற்றச்செயல்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருந்தாலோ, அதற்கான இலங்கை சட்டங்களின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அப்படியில்லாத பட்சத்தில் அவர் குடிவரவு குடியகல்வு விதிகளை மீறியிருப்பதாக தெரிந்தால் அவரை அந்த துறையிடம் கையளிப்போம் என்றும், குடிவரவு குடியகல்வுத்துறை ஆணையர் தமிழ் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கையை எடுப்பார் என்றும், பெரும்பாலும் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.

மறைப்பதற்கு ஒன்றுமில்லையென்றால் இந்த கைது ஏன்? ஒருபக்கம் இலங்கையில் நிலைமைகள் முன்னேறிவிட்டது, யார் வேண்டுமானாலும் வந்து நேரில் பார்க்கலாம் என்கிறீர்கள், ஆனால் அப்படி வந்த இவரை கைது செய்திருக்கிறீர்களே, இது இலங்கை அரசு முன்னுக்குப்பின் முரணாக செயற்படுவதாக இல்லையா என்று அவரிடம் பிபிசி தமிழோசை கேட்டதற்கு பதிலளித்த அஜித் ரோஹன, இந்த ஆண்டில் மட்டும் 12 லட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றிருப்பதாகவும் அதில் ஆறு பேர் மட்டுமே தாங்கள் கைது செய்திருப்பதாகவும் கூறினார் அவர்.

"12 லட்சம் பேரில் வெறும் ஆறுபேரை மட்டுமே நாங்கள் கைது செய்திருக்கிறோம். அந்த ஆறு பேரைக்கூட குறிப்பிட்ட இலங்கை சட்டங்களை மீறி செயற்பட்டதற்காக மட்டுமே கைது செய்திருக்கிறோம். இதை நாங்கள் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்யும் நடைமுறை தான் இது", என்றார் அஜித் ரோஹன. உதாரணமாக இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நின்று சுற்றுலாப்பயணிகள் யாரும் படம் எடுக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மாதிரியான விதிகள், கட்டுப்பாடுகள் இலங்கையிலும் இருக்கிறது என்றும் எனவே இலங்கை விதிகளை மதித்து நடக்கும் சுற்றுலாப்பயணிகள் யாரையும் தாம் கைது செய்வதில்லை என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.

அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பிரபாகரன் தம்முடன் தங்கியிருந்த தமது நண்பர்தான் என்றாலும், அவர் ஊடகவியலாளர் என்பது தனக்குத் தெரியாது என்கிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

(பிபிசி)

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100019&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக நிருபரின் உயிரை காக்கவேண்டும்: பிரதமருக்கு வைகோ கோரிக்கை.

 

சென்னை: இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மதிமுக பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று பிரதமருக்கு வைகோ எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

 

சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

 

27-vaiko24234-600-jpg.jpg

 

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி பிள்ளை ஆகியோருடன், மகா தமிழ் பிரபாகரன் பொன்னாவிழி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கிருந்து வலைப்பாடு கிராமத்துக்குச் சென்று, புனித அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, நேற்று (25.12.2013) பகல் 1.30 மணி அளவில், இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். மூவரையும் கைது செய்த இராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தரனையும், பசுபதி பிள்ளை அவர்களையும் மாலையில் விடுவித்தனர்; மகா தமிழ் பிரபாகனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர்.

 

செய்தியாளர்கள், உலகம் முழுமையும் பயணிப்பதற்கும், மக்களோடு கலந்து உரையாடுவதற்கும் உரிமை பெற்றவர்கள். ஆனால், இலங்கைத் தீவில், மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதையும், செய்தியாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை; உயிர் ஆபத்தை எதிர்கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் உலகம் அறியும். சண்டே டைம்ஸ் ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கே, அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்; மேலும் பல செய்தியாளர்களும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

 

அண்மையில் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவர்கள், இக்கூற்றை உறுதிப்படுத்தி உள்ளார். எனவே, மகா தமிழ் பிரபாகரனின் உயிருக்கு இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையில் ஊறு நேரக்கூடும் என அஞ்சுகிறேன்.

 

தாங்கள் உடனடியா நமது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு, செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுவித்திட ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

தம்பி தமிழ் பிரபாகரன் கைது குறித்து இன்று தின மலர் வெளியிட்டுள்ள செய்தி..

இதில் அவர் பெயர் குறிப்பிடப்படவே இல்லை மற்றும் அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்பதும் மறைக்கப்பட்டுள்ளது.

 

1515047_10201069199161210_559243990_n.jp

 

(facebook)

 

 


தினமலரின் epaper இணைப்பு http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2013/12/27/ArticleHtmls/27122013018005.shtml?Mode=1

Edited by துளசி

இவரை விசாரணைக்காக நான்காம் மாடிக்கு கொண்டு சென்றுள்ளார்கள் என்று முகநூலில் பார்த்தேன். இந்த செய்தி உண்மையா என யாரும் உறுதிப்படுத்துங்கள்.

 

இது தொடர்பான செய்தி கிடைத்தால் இணையுங்கள்.

தம்பி தமிழ் பிரபாகரன் கைது குறித்து இன்று தின மலர் வெளியிட்டுள்ள செய்தி..

இதில் அவர் பெயர் குறிப்பிடப்படவே இல்லை மற்றும் அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்பதும் மறைக்கப்பட்டுள்ளது.

1515047_10201069199161210_559243990_n.jp

(facebook)

தினமலரின் epaper இணைப்பு http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2013/12/27/ArticleHtmls/27122013018005.shtml?Mode=1

ஒன்று மட்டும் தெரிகிறது. தமிழ் நாட்டில் தமிழருக்கான ஒரு இதழும் இல்லை.

தமிழக பத்திரிக்கையாளர் மகா பிரபாகரனை இலங்கை அரசு விடுவித்து அவர் தற்போது 'குடியேறல்' அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் ...

 

(facebook)


சில தமிழக அமைப்புக்களின் சில ஊடகவியலாளர்களின் அழுத்தங்களினால் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மகா. தமிழ் பிரபாகரன் குடிவரவு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளார். இனி பெரிதாக ஆபத்து இல்லை. இருந்தபோதிலும் அவர் தமிழ்நாடு திரும்பும்வரை அழுத்தம் கொடுக்கப்படவேண்டியது மிக முக்கியம். துரிதமாக செயற்பட்ட அனைவருக்கும் நன்றி..

 

Parani Krishnarajani

(fcebook)

Edited by துளசி

about an hour ago

 

தோழர் மகாதமிழ்ப் பிரபாகரன் தொடர்பாக பலரும் அரசிற்கு நெருக்கடி அளித்திருக்கிறார்கள். அவரை இலங்கை அரசு விரைவில் விடுவிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.. விடுதலை நிகழாத பட்சத்தில் தோழர்கள் போராட்டக்களத்திற்கு வர தயாராகவேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்..

 

Thirumurugan Gandhi

(facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரபாகரன் எனது நண்பர்தான் என்றாலும், அவர் ஊடகவியலாளர் என்பது எனக்கு தெரியாது - சிறிதரன் 

 

tamil-prabhakaran-seithy-150.jpg

இலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரனை புலனாய்வுப்பிரிவினர் விசாரித்து வருவதாக கூறுகிறார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன. இந்த விசாரணைகள் முடிந்ததும் அவர் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இது நடந்து முடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும் என்றும் கூறினார் அஜித் ரோஹன. இவரை கைது செய்தபோது அவருடன் இருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அவர் சுற்றுலாப்பயணியாக மட்டுமே வந்தார், சுற்றுலாப்பயணியாக மட்டுமே நடந்துகொண்டார் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறாரே என்று கேட்டபோது, அவர் அதை மறுத்தார்.

  

தமிழ் பிரபாகரன் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்தாலும், தமிழ் பிரபாகரனிடம் தாங்கள் கைப்பற்றிய கேமராவை ஆராய்ந்தபோது, அதில் அவர் ராணுவ நிலைகளை மட்டும் தேர்ந்தெடுத்து படம் பிடித்திருந்ததை தாங்கள் கண்டதாகவும், குறிப்பாக நாவற்குடா பகுதியில் இருக்கும் இராணுவ முகாம், அந்த பகுதியின் இராணுவ நடமாட்டங்கள், இராணுவ வாகனங்களின் நடமாட்டங்களையெல்லாம் அவர் படம் பிடித்திருந்தார் என்றும் கூறிய அஜித் ரோஹன, ஒரு சுற்றுலா பயணியான அவர் எதற்காக இராணுவ இலக்குகள், இராணுவத்தினரை மட்டும் குறிவைத்து படம் பிடிக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

அவரது கேமராவில் வேறு எந்த படங்களும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், பாதுகாப்பு விவகாரங்களை மட்டும் அவர் குறிப்பாக படம் பிடித்தது ஏன் என்பதுதான் தங்களின் சந்தேகத்தை அதிகரிப்பதாக கூறுகிறார். இவரது கைது குறித்தும், இலங்கையில் இவரது நடத்தை குறித்தும் இந்திய தூதரகத்திற்கு உரிய முறையில் தாங்கள் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

தமிழ் பிரபாகரன் விஷயத்தில் இரண்டு வழிகள் இருப்பதாக தெரிவித்த அஜித் ரோஹன, தாங்கள் அவரிடம் தற்போது விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் இலங்கைக்குள் வந்து சட்டவிரோத செயல்களை செய்திருந்தாலோ, அல்லது அவரது குற்றச்செயல்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருந்தாலோ, அதற்கான இலங்கை சட்டங்களின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அப்படியில்லாத பட்சத்தில் அவர் குடிவரவு குடியகல்வு விதிகளை மீறியிருப்பதாக தெரிந்தால் அவரை அந்த துறையிடம் கையளிப்போம் என்றும், குடிவரவு குடியகல்வுத்துறை ஆணையர் தமிழ் பிரபாகரன் மீது உரிய நடவடிக்கையை எடுப்பார் என்றும், பெரும்பாலும் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.

மறைப்பதற்கு ஒன்றுமில்லையென்றால் இந்த கைது ஏன்? ஒருபக்கம் இலங்கையில் நிலைமைகள் முன்னேறிவிட்டது, யார் வேண்டுமானாலும் வந்து நேரில் பார்க்கலாம் என்கிறீர்கள், ஆனால் அப்படி வந்த இவரை கைது செய்திருக்கிறீர்களே, இது இலங்கை அரசு முன்னுக்குப்பின் முரணாக செயற்படுவதாக இல்லையா என்று அவரிடம் பிபிசி தமிழோசை கேட்டதற்கு பதிலளித்த அஜித் ரோஹன, இந்த ஆண்டில் மட்டும் 12 லட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றிருப்பதாகவும் அதில் ஆறு பேர் மட்டுமே தாங்கள் கைது செய்திருப்பதாகவும் கூறினார் அவர்.

"12 லட்சம் பேரில் வெறும் ஆறுபேரை மட்டுமே நாங்கள் கைது செய்திருக்கிறோம். அந்த ஆறு பேரைக்கூட குறிப்பிட்ட இலங்கை சட்டங்களை மீறி செயற்பட்டதற்காக மட்டுமே கைது செய்திருக்கிறோம். இதை நாங்கள் மட்டும் செய்யவில்லை. எல்லா நாடுகளும் செய்யும் நடைமுறை தான் இது", என்றார் அஜித் ரோஹன. உதாரணமாக இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நின்று சுற்றுலாப்பயணிகள் யாரும் படம் எடுக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மாதிரியான விதிகள், கட்டுப்பாடுகள் இலங்கையிலும் இருக்கிறது என்றும் எனவே இலங்கை விதிகளை மதித்து நடக்கும் சுற்றுலாப்பயணிகள் யாரையும் தாம் கைது செய்வதில்லை என்றும் கூறினார் இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹன.

அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பிரபாகரன் தம்முடன் தங்கியிருந்த தமது நண்பர்தான் என்றாலும், அவர் ஊடகவியலாளர் என்பது தனக்குத் தெரியாது என்கிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

(பிபிசி)

 

tamil-prabhakaran-seithy-20131227-337.jp

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100019&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரனை மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்! 

 

 

tHIRUMAVALAVAN_150kl.jpg

இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் என்பவர், கிளிநொச்சிப் பகுதியில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிலிருந்தபோது சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழீழத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடன் சுற்றுப் பயணத்திலிருந்தபோது அவரைக் கைது செய்துள்ளனர். எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில் அவரை சிங்களப் படையினர் கைது செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மகா தமிழ்பிரபாகரன் ஏற்கனவே இலங்கைக்குச் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  

பொதுவாக, ஊடகவியலாளர்கள் எவரையும் இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்ற சனநாயக விரோத நடவடிக்கையில் இராஜபக்சே அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. சர்வதேச ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும், மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும், இலங்கைத் தீவினுள் நுழையவே விடாமல் தடுக்கப்படுவதும் அங்கே தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. தற்போது மகா தமிழ்பிரபாகரனும் அவ்வாறே சிங்களப் படையினரால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

சிங்களப் படையினரின் இத்தகைய சனநாயக விரோதப் போக்கை அனைத்துலக ஊடகவியலாளர்கள் வன்மையாகக் கண்டித்திட முன்வரவேண்டும். இப்பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். இந்தியத் துணைத் தூதர் தேவயானி விவகாரத்தில் அமெரிக்க அரசின் நடவடிக்கையை உடனடியாகக் கண்டித்ததைப் போல சிங்கள அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்பதுடன், தமிழ் பிரபாகரனை விரைவாக மீட்க உரிய நடவடிக்கைகளை

 

மேற்கொள்ள வேண்டும்.

இவண்

தொல்.திருமாவளவன்

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100073&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.