Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSCF9853.jpg- சுமித்தி தங்கராசா 

யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதியின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து யுவதியின் உறவினர்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

யுவதியின் மரணத்திற்கு ஆயர் இல்லத்திலுள்ள குருமார்களில் இருவரே காரணம் எனக்கூறி உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். 

இது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யுவதியின் உறவினர்கள் குறிப்பிடுகையில்,  

ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி படிப்பதற்காகச் ஜெரோமி சென்ற போது யாழ். ஆயர் இல்லத்தில் இருக்கும் குருமார்களில் இருவர் தங்களைக் காதலிக்குமாறு ஜெரோமியிடம் வற்புறுத்தியுள்ளனர். அத்துடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தும், மிக நெருக்கமான முறையில் தம்முடன் இருக்குமாறும் தொந்தரவு செய்து வந்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த யுவதி அவரது பெற்றோர்களிடம் இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தினை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

இந்நிலையில் குறித்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) புங்கன்குளம் சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்வில்லை. மறுநாள் திங்கட்கிழமை (14) மகளை காணவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தில் ஜெரோமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஜெரோமி சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குப் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்டார். 

ஜெரோமியின் மரணத்திற்கு காரணமாக இருந்த இரு குருமார்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதும், இரு தினங்களாகியும்,இரு குருமார்களுக்கும் எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில், ஜெரோமியின் மரணத்திற்கு நீதி வேண்டியும் குறித்த இரு குருமார்களை கைது செய்யுமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த யுவதியின் சடலம்  இறுதி கிரிஜைகளுக்காக அவரது சொந்த ஊரான மண்டைதீவுக்கு இன்று (16) கொண்டு செல்லப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

20140416_080732.jpg

20140416_081759.jpg

20140416_083016.jpgDSCF9855.jpg

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க படுகொலை. இந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஜேசுவின் பெயரால் மனிதர்கள் செய்யும் அநியாயங்களுக்கு முடிவு வர வேண்டும். இறை பணியில் இஸ்டமில்லாதவன் அதில் இருக்கப்படாது. இல்லறத்தில் இணைந்து கொள்வதே நல்லது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்பெண்ணின் மரணத்திற்குப் பின்னால் இருந்தவர்களில் ஒருவர் என்று கருதப்படும் நபர்...

 

10155008_700241283347696_104690706214039


http://4tamil.com/?p=22376

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! :( குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அது ஏனைய இளந்தளிர்களின் பாதுகாப்பையாவது கொஞ்சம் உறுதிப்படுத்தும்.

 

 

 

இந்நிலையில், குறித்த யுவதி அவரது பெற்றோர்களிடம் இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த விடயத்தினை பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

பெற்றோரும் கண்டனத்துக்கு உரியவர்களே. பிள்ளையின் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார்கள். :(

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தப்பட்ட இந்த நாய்களை வத்திக்கான் வரைக்கும் இழுத்து செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்ட இந்த நாய்களை வத்திக்கான் வரைக்கும் இழுத்து செல்ல வேண்டும்.

 

 

வத்திக்கானில் இருப்பவர்கள் மட்டும் நல்லவர்களா?? கத்தோலிக்கத் திருச்சபை சிறுவர் மீதான பாலியல் வக்கிரங்களுக்குப் பெயர் போனது. இதில் வத்திக்கானில் இருக்கும் பெரிய பெரிய ஆயர்களும் அடக்கம். இங்கு அவுஸ்த்திரேலியாவில் கூட அநாதைச் சிறுவர் மடத்தில் ஒரு மதகுரு 30 இற்கும் மேற்பட்ட ஆண்குழந்தைகளை பாலியல் வக்கிரத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முதல் ஆளாக்கியதை இப்போது விசாரிக்கிறார்கள். இன்றுவரை அப்படி நடக்கவில்லை என்றுதான் ஆயர் முதல் அனைவரும் சொல்லிவந்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னால் வந்து சாட்சியம் அளித்ததை அடுத்து வேறு வழியின்றி ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

கத்தோலிகத் திருச்சபை என்பது காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளையும், பணத்தையும், காமுகர்களையும் கொண்ட ஒரு மாபியா அமைப்பு. 

 

இலங்கையில் இப்போதுதான் கேள்விப்படுகிறோம். ஆனால் 80 - 90 களின் காலப்பகுதியில் நான் மட்டக்களப்பில் இருந்தபோது இப்படிப் பல குருமார்களின் விளையாட்டுக்கள் பற்றி மக்கள் சர்வசாதாரணமாகக் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். அப்போது என்னாலும் அவற்றை நம்பமுடியவில்லை. ஆனால் நடப்பவை உண்மை என்று இப்போது புரிகிறது.

 

தமது வெள்ளை ஆடைக்குள் எல்லா அழுக்குகளையும் மறைத்துவிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். தமது வெள்ளை ஆடை தமது குற்றங்களில் இருந்து தம்மைப் பாதுகாக்கும் என்று நினைக்கிறார்கள். இப்படியானவர்கள் குருவானவர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக வாழ்வதற்கே தகுதியற்றவர்கள். இவர்கள் போன்றவர்களால் சில நல்ல குருக்களும் அவப்பெயர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

கத்தோலிகத் திருச்சபை என்பது காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளையும், பணத்தையும், காமுகர்களையும் கொண்ட ஒரு மாபியா அமைப்பு. 

 

 

இலங்கையிலும் இந்த பற்றிக்ஸ் கல்லூரி பகுதியிலேயே இது ஐம்பது வருட கால பிரச்சினை. இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க இந்த மத தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் இவர்கள் கொலைவரை போவார்கள் என்று யாரும் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டு வருடத்துக்கு முன்னும் ஒரு முதாட்டி இதே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பந்தப்பட்ட இந்த நாய்களை வத்திக்கான் வரைக்கும் இழுத்து செல்ல வேண்டும்.

குமாரசாமி அண்ணை, நீங்கள் சொல்கிற வத்திக்கான் சரியாக இருந்தால் உலகம் முழுவதும் பாரிய அளவில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்தவர்களா மதகுருமார்கள் மீது குற்றம் வந்திருக்காது. வத்தின கான் தான் மிஞ்சி இருக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.