Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களை நடுத்தெருவில் அநாதைகளாக அகதிகளாக்கிவிட்டு, கொலைசெய்துவிட்டு, கீரிக்கட்டு உலகக் கோப்பை கனவில் மிதக்கும் சிறீ லங்கா சிங்களப் பேரினவாதம்!

சிறீ லங்காவில் கீரிக்கட்டு விளையாட்டு! 35 members have voted

  1. 1. சிறீ லங்கா முழுவதும் கீரிக்கட்டு விளையாட்டில் மயங்கி இருப்பது தமிழீழத் தாயகத்தில் தமிழர் சிங்களப் பேரினவாதிகளால் கொடுமைகளை அனுபவிப்பதை ஊக்குவிக்கின்றதா?

    • ஆம்
      32
    • இல்லை
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

worldcupdreamnn3.jpg

tamilskilledbycricketloaq1.jpg

Edited by கலைஞன்

ஸ்ரீலங்கா சம்பந்தமான செய்திகள் வெளிவரும்போது, கிறிக்கெட் செய்திகள் முன்னிலைப் படுத்தப்படுகிறது. சர்வதேச செய்தி நிறுவனங்களில் தமிழரின் அவலம் பின்தள்ளப்படுகிறது. இதை சிங்கள அரசு சாதகமாகப் பயன்படுத்தலாம்.

  • தொடங்கியவர்

tamilskilledbycricketloaq1.jpg

worldcupdreamnn3.jpg

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ கடவுளே!

இதை ஒருக்காப்பாத்து தமிழிலை எழுதப்பழகுங்கோ. வலு சிம்பிள். http://www.yarl.com/forum3/index.php?autom...amp;showentry=1

விளங்காட்டிக் கேளுங்கோ.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தேசமெல்லாம்.. முன்னாள் தமிழீழக் குடிமக்களும் இன்னாள் ஐரோப்பிய கனேடிய அவுஸ்திரேலிய குடிமக்களும் ஆகிவிட்ட போராட்டத்தமிழர்கள்... :D

பொன்மாலைப் பொழுது நடத்தலாம்...

தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் இசை ஆடல் நிகழ்சிக்கள் நடத்தலாம்..

மெல்னிய மாலை நடத்தலாம்....

பாட்டுக்குப்பாட்டு நடத்தலாம்....

கோடைக்கு கோடை ஊர் பேர்களில் விளையாட்டு விழா நடத்தலாம்...

கோயில் தேவாலய திருவிழாக்கள் என்று கூடிக் கும்மாளம் அடிக்கலாம்...

இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்யலாம்..

சுதந்திர நாட்டையும் சிங்கக்கொடியையும் வைச்சிருக்கும் சிங்களவன் தன்ர நாட்டு அணியை உலகக் கோப்பை அரங்கில இறக்கிறது ஒன்றும் தப்பாத் தெரியல்ல.

தமிழர்கள் இறக்கினம் என்றதுக்கா புலம்பெயர்ந்த புளுகர்களும் தமிழ் தேசியம் என்று தூசியம் பேசிறவையும் கொண்டாடத கொண்டாட்டங்களையா சிங்களவன் அதுவும் தமிழர்களின் எதிரி கொண்டாடுறான்.

விளையாட்டை விளையாட்டாப் பார்க்க தமிழர்கள் கற்றுக்கொள்ள வேணும். எதுக்குள்ளையும் தமிழ் இனவாதத்தை திணிக்கிறதையும் சிங்களவர்களை விட கொடிய இனவாதிகளாக மாறுவதையும் தமிழர்கள் தவிர்த்து தங்கள் அரசியல் அபிலாசைகளுக்கும் விளையாட்டுக்கும் இடையில் உள்ள வேற்றுமையை உணர வேண்டும்.

முத்தையா முரளிதரன் வன்னி போய் யாழ்ப்பாணத்தில கோம் விளையாடேக்க புலிகளும் கூட நின்று போட்டோ எடுத்தவர்கள். அவர்கள் எப்பவும் விளையாட்டை அரசியலுக்க கலக்கிறதில்ல. உந்தப் புலம்பெயர்ந்துள்ள பித்துப் பிடிச்சதுகளுக்கு எதுக்கு எதுகுள்ள பனர் படிக்கிறது என்றே இல்லாமல் போட்டுது.

ஒன்று செய்யுங்கோ உந்த பனரை முடிஞ்சா உலகக் கிண்ணக் கோப்பை நடக்கும் மைத்தானங்களில வைச்சுப் பிரச்சாரம் செய்யுங்கோ. அல்லது காசைக் கட்டி விளம்பரங்களோடு மைதானத்தில வையுங்கோ. விளையாட்டை எதிர்க்க அல்ல சிறிலங்காவின் மனித உரிமை மீறலைக் காட்ட.. சர்வதேச பார்வையாளர்களின் கவனயீர்ப்புக்காக என்று இருக்கலாம்..அது பறுவாயில்லை..! வடிவமைப்பு ரகசிகர்கள் கிரிக்கெட்டை அரசியல் ஆக்கிறதா நினைக்கக் கூடாத வகையிலிருக்க வேண்டும். இங்க யாழில ஒட்டி.. இணையத்தில ஒட்டி.. அதில அரசியலைக் கலந்து தமிழர்களின அரசியலை உலகம் சீ சீ என்று செய்து ஒதுக்கிற அளவுக்கு தயவுசெய்து கொண்டு போயிடாதேங்கோ..! :unsure:

விளையாட்டை விளையாட்டாகத் தான் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் இங்கே இன அழிப்பைச் செய்து கொண்டு அந்த அநிதீயை அக்கிரமத்ததை இவை போன்ற காரணிகளை முதன்மைப்படுத்தி மறைத்து உலகஅரங்கில் தன்னை ஒரு உத்தமன் என்று காட்டிக் கொள்வதையே வெறுக்கின்றோம். இந்த கிரிக்கட்டினால் சென்ற வருடங்களில் உழைப்பாக கிரிக்கட் சபை பெற்ற பெருந் தொகை பணம் எம் தலைகளின் மேல் குண்டுகளாக கொட்டப்பட்டதை வெறுக்கின்றோம். முரளி வன்னி சென்றது ஐ.நா உணவு க்கான அமைப்பின் அதிகாரியாக.சென்ற சமயம் இங்கு அவரைக் கண்ட இளசுகள் அவருடன் விளையாட விரும்பியதை கூறியதாலேயெ விளையாடினார். அதையும் கொழும்பு எதிர்கட்சி அரசியல் வாதிகள் அன்று அரசியலாக்க நினைத்தது மறந்து விட்டதா? சிங்களவன் அவன் எந்தக் கட்சியோ தமிழனை அழிக்க நினைக்கும் போது ஒன்று சேர்கின்றான். ஆனால் எம் தமிழினத்தில் ஒரு சில புல்லுரூவிகள் அஹிம்சாவாதம் பேசி தில்லு முள்ளு பண்ணித் தாம் ஏதோ புத்தனின் புனிதர்களாக காட்டிக் கொண்டு திரிகின்றனர்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

தமிழர்கள் கீரிக்கட்டு விளையாட்டை எதிர்க்கவில்லை. தமிழர்கள் எதிர்ப்பதெல்லாம் சிங்களப் பேரினவாதிகள் கீரிக்கட்டு விளையாட்டில் மயங்கி தமிழர்களை வதைக்கிறார்கள் என்பதையேயாகும்.

சிறீ லங்கா கீரிக்கட்டு சபையைச் சேர்ந்தவர்கள், பல கீரிக்கட்டு விளையாட்டு வீரர்கள் தீவிர சிங்களப் பேரினவாதிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சிறீ லங்கா 1996 ல் கீரிக்கட்டு உலககோப்பையை வென்றபோது அப்போதைய சிறீ லங்கா கீரிக்கட்டு அணியின் தலைவராக இருந்த அர்ச்சுனா ரணதுங்கா ஒரு திவிர சிங்கள பேரினவாதியாவார். சிறீ லங்கா கீரிக்கட்டு அணியில் முத்தையா முரளிதரன் எனும் ஒரு தமிழர் விளையாடுகின்றார் என்பதற்காக சிறீ லங்கா கீரிக்கட்டின் பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் அவலங்களை நாம் மறந்துவிடமுடியாது.

இதைவிட சிங்களப் பேரினவாதிகள் கீரிக்கட்டு விளையாட்டினால் மனநோயாளிகளாக மாறியுள்ளார்கள் என்பது எனது தனிப்பட்ட ஆராய்ச்சில் கண்ட அவதானிப்பு. அதாவது சிறீ லங்கா கீரிக்கட்டு விளையாடும்போது நன்றாக விளையாடினால், அல்லது வெற்றி பெற்றால் சிங்களப்பேரினவாதிகள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் சிறீ லங்கா அணி மோசமாக விளையாடும்போது, அல்லது தோல்வியடையும்போது தமிழர் பகுதிமீது விமானக்குண்டு வீச்சு தாக்குதல்களை நடாத்துகின்றார்கள். இதை நான் சுமார் 10 வருடகாலமாக அவதானித்து வந்துள்ளேன். நீங்களும் வேண்டுமானால் இந்த அவதானிப்பு உண்மையா என பரிசோதித்து பார்க்கலாம். அதாவது சிறீ லங்கா கீரிக்கட்டு அணி மோசமாக விளையாடும் நாட்களில் நிச்சயமாக ஆட்டம் முடிந்தபின் அல்லது முடிவடையும் நேரத்தில் அல்லது மறுநாள் காலையில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது விமானக்குண்டு வீச்சு தாக்குதல் நடாத்தப்படுவதை அவதானிக்கலாம். இதற்கான காரணம் சிறீ லங்கா கூலிப்படையிலுள்ள சாதாரண சிப்பாயிலிருந்து, கொழும்பில் உள்ள உயரதிகாரிகள், அமைச்சர்கள் வரை கீரிக்கட்டு ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பாக பார்த்து, கீரிக்கட்டு விளையாட்டுக்கு அடிமையாக இருக்கின்றார்கள் என்பதாகும். சிறீ லங்காவின் முன்னைநாள் அமைச்சர் கதிர்காமர் கூட தான் கீரிக்கட்டு விளையாட்டுக்கு அடிமை என்பதை பகிரங்கமாக கூறியுள்ளார்.

மேலும், சிறீ லங்கா பேரினவாத அரசு கீரிக்கட்டை அப்பாவி தமிழ்மக்களை வதைப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்துகின்றது. இதைவிட தமிழீழ விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுவதற்கும் கீரிக்கட்டு சிறீ லஙகா பேரினவாத அரசால் பிரச்சாரமாக பயன்படுத்தப்படுகின்றது. இதை எவரும் மறுக்க முடியாது!

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ தெரியேல்லை நெடுக்கு சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு.எதுக்கும் எல்லாரும் ஒருக்கால் நல்லவடிவாய் யோசிச்சுப் பாக்கலாந்தானே?மனுசனுக்கு ஒரு மனச்சாட்சி ஒண்டு இருக்கெல்லே?????

மகாவம்ஸ்சத்தின் புனையல்கள் அது முன்னிறுத்தும் தேரவாத பொளத்தமும் தான் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதற்கான நியாயப்பாடுகளும் ஊக்குவிப்புகளும். கிரிக்கெட்டின் பெயரால் அவர்கள் தமிழர்களை அழிக்க ஊக்குவிப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் இன அழிப்பு செய்யவில்லை என்ற பிரச்சாரம் அவ்வப் போது தேவைப்படும் பொழுது ராதிகா கதிர்காமர் நீலன் ஆனந்தசங்கரி சித்தார்த்தன் போல் கிரிக்கற் உம் பயன்படுகிறது.

அதை சாத்தியமாக்குபவர்கள் கிரிக்கெட்டில் மெய்மறந்து தாயகத்தில் இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகளில் தமிழரிற்கு நடக்கும் அவலங்களை மறந்து சிறீலங்காவிற்கு கொடி பிடிக்கும் தமிழர்கள்.

இதற்கு சிங்களவனைக் குற்றம் சொல்லிப் பயன் இல்லை.

எமது வெளி உலகிற்கு கொண்டு செல்லும் பிரச்சார தந்திரம் போதாதவரைக்கும்

அவன் கிறிக்கட் என்ன எல்லா விளையாட்டுகளும் செய்வான். கொக்கரிப்பான். எப்போது உலகத்திற்கு இவன் செய்யும் அ நியாயங்கள் ஆதாரங்களுடன் நிருபித்து காட்டுறோமோ அன்று தொடக்கம் முக்காடு போட்டு வெளி நாடுகளுக்கே போகப்பயப்படுவான். உங்கள், எங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது.....

  • தொடங்கியவர்

தமிழர்கள் விளையாட்டை விளையாட்டாகத் தான் நினைக்கின்றார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் அப்படியல்ல. எல்லாவிதமான சந்தர்ப்பங்களிலும் தமிழீழ விடுதலைப் பேராட்டத்தை கொச்சைப்படுத்தி அடக்கி ஒடுக்கவே வழி தேடுகின்றார்கள். சர்வதேச மீடியா வலையமைப்பும் அவ்வாறானதே! இதற்கான சில சான்றுகள் கீழே ஒட்டப்படுகின்றது.

Sample 01. "Although cricket and football matches are sometimes disrupted by heavy rains or security concerns owing to the LTTE militancy, Sri Lanka has hosted the Asia Cup tournament on numerous occasions." - Wikipedia

Sample 02 - "Playing cricket is no easy pastime in Sri Lanka. Colombo and other towns resembled mini fortresses. Security is always tight but the LTTE cadres were able to penetrate the armed forces and perpetrate atrocities. On many occasions, the security forces had failed to contain the LTTE. Not a day passed without any bomb attacks from different parts of the island. Sri Lanka, along with the West Bank in the Middle East, were two of the most dangerous and sensitive regions in the world. No one was safe and anything could happen any time. It is quite remarkable that Sri Lankan cricket had thrived under such circumstances. The game is played all over the island and so far, mercifully, had been spared by the LTTE terrorists." - The Tribune

Sample 03 - "The independent report comes to the same conclusion as that of our own security consultant's report. The Olive Group report says, inter alia, that the current risk to the team is at an unacceptable level, and the Sri Lankan Government is unable to guarantee the physical security of the team given the current security situation in Colombo. Though the report accepted that the team was not directly a target of the LTTE, it confirmed that "there is a real situational threat to the team." - CricInfo

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப்புலிகளால் உயிருக்கு ஆபத்து என்று கூறி சிறீ லங்கா அரசும், இந்தியாவும் தமது கீரிக்கட்டு விளையாட்டு வீரர்களை கண்காணிக்கவென சிறப்பு படைகளை உருவாக்கியுள்ளோம் என்று கூறி படங்காட்டும் விடயங்களும் நாம் அறிந்ததே! இவை சர்வதேச மீடியாக்களில் கீரிக்கட்டு வீரர்களைச் சுற்றி நவீன ஆயுதங்களுடன் கமாண்டோப் படைகள் விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பு கொடுப்பதுபோல் பாசாங்கு செய்யும் படங்களுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டும் வருகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட சிங்களப் பேரினவாதிகள் கீரிக்கட்டு விளையாட்டினால் மனநோயாளிகளாக மாறியுள்ளார்கள் என்பது எனது தனிப்பட்ட ஆராய்ச்சில் கண்ட அவதானிப்பு. அதாவது சிறீ லங்கா கீரிக்கட்டு விளையாடும்போது நன்றாக விளையாடினால், அல்லது வெற்றி பெற்றால் சிங்களப்பேரினவாதிகள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் சிறீ லங்கா அணி மோசமாக விளையாடும்போது, அல்லது தோல்வியடையும்போது தமிழர் பகுதிமீது விமானக்குண்டு வீச்சு தாக்குதல்களை நடாத்துகின்றார்கள். இதை நான் சுமார் 10 வருடகாலமாக அவதானித்து வந்துள்ளேன். நீங்களும் வேண்டுமானால் இந்த அவதானிப்பு உண்மையா என பரிசோதித்து பார்க்கலாம். அதாவது சிறீ லங்கா கீரிக்கட்டு அணி மோசமாக விளையாடும் நாட்களில் நிச்சயமாக ஆட்டம் முடிந்தபின் அல்லது முடிவடையும் நேரத்தில் அல்லது மறுநாள் காலையில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது விமானக்குண்டு வீச்சு தாக்குதல் நடாத்தப்படுவதை அவதானிக்கலாம். இதற்கான காரணம் சிறீ லங்கா கூலிப்படையிலுள்ள சாதாரண சிப்பாயிலிருந்து, கொழும்பில் உள்ள உயரதிகாரிகள், அமைச்சர்கள் வரை கீரிக்கட்டு ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பாக பார்த்து, கீரிக்கட்டு விளையாட்டுக்கு அடிமையாக இருக்கின்றார்கள் என்பதாகும். சிறீ லங்காவின் முன்னைநாள் அமைச்சர் கதிர்காமர் கூட தான் கீரிக்கட்டு விளையாட்டுக்கு அடிமை என்பதை பகிரங்கமாக கூறியுள்ளார்.

முன்பு இந்திய இராணுவ காலத்திலும் இந்தியா தோற்கப்படும் போது ஈழத்தமிழர்கள் இந்தியா இராணுவத்தினால் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

இலங்கை தேசியக்கொடியில் வேண்டா வெறுப்பாக தமிழர்களைக் குறிப்பதற்காக பச்சை நிறம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் துடுப்பாட்ட கொடியில் வாளை ஏந்தும் சிங்கத்தினை மட்டுமே காணலாம். டில்சன் என்ற வீரர் இலங்கை அணியில் இருக்கிறார். அவர் ஒரு முஸ்லிம் இனத்தினைச் சேர்ந்தவர். இலங்கை அணிக்கு சேருவதற்காக பெளத்த மதத்துக்கு மாறினார். 83,84 அவுஸ்திரெலியா அணி இலங்கையில் அஸ்கிறிய மைதானத்தில் விளையாடும் போது அப்பொழுது தமிழ் விளையாட்டு வீரரான வினோதன் ஜோன் தமிழர் என்பதினால் புனித கண்டியில் விளையாடக்கூடாது என்று அஸ்கிறிய பீடம் அறிவித்ததினால் அப்போட்டியில் வினோதன் ஜோன் விளையாடவில்லை. ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற எதிர் வீரசிங்கத்தினை அந்தக்காலத்தில் சிங்கள ஊடகங்கள் எதிர் வீரசிங்க என்று செய்திகள் இட்டார்கள். அதாவது தமிழர் ஒருவர் வெற்றி பெற்றதினை சிங்களவர் ஒருவர் வெற்றி பெற்றது போல செய்திகள் வெளியிட்டார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் மானம் கெட்ட கெடு கெட்ட தமிழர்களில் சிலர் சிங்கக்கொடியுடன் இலங்கை அணி விளையாடும் மைதானங்களில் போட்டிகளைப் பார்ப்பதுண்டு. இவர்கள் சண்டை என்றால் புலிகள் வெல்ல வேண்டும் என்றும், துடுப்பாட்டம் என்றால் இலங்கை வெல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள். இதனால் தான் இந்தப்புகைப்படங்களை வைத்துக் கொண்டு இலங்கை சிங்கள ஆங்கில ஊடகங்களில் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இருப்பதாக பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. இலங்கை துடுப்பாட்ட வாரியமும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தில் இராணுவ நிதிக்கு ஒரு பகுதியினை வழங்குகிறது. அன் நிதி தமிழர்களை அனாதைகள் ஆக்கப் பயன் படுத்த உதவி புரிகிறது.

யாழ்கள அதிமேதாவியான நெடுக்ஸுக்கும் எனக்கும் தெரியாத பல கிறிக்கெட் தொடர்பான விபரங்களைத் தந்ததற்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

இங்கு சிறீ லங்கா கீரிக்கட்டு அணிக்காக விளையாடும் உலகப் புகழ் பெற்ற சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை காரணம் காட்டி சிறீ லங்கா கீரிக்கட்டு வியாதிக்கு வக்காளத்து வாங்கும் நண்பர்களிடம் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். தெரிந்தால் பதில் கூறுங்கள்.....

1. 15 வருடங்களாக சிறீ லங்கா கீரிக்கட்டு அணிக்காக விளையாடும் முத்தையா முரளிதரனுக்கு ஏன் ஆகக்குறைந்தது சிறீ லங்கா கீரிக்கட்டு அணியின் உப தலைவர் பதவியாவது வழங்கப்படவில்லை?

2. சிறீ லங்காவின் மகேல ஜெயவர்த்தனாவா, அல்லது உலகப் பந்து வீச்சாளர்களின் வரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தில் நிற்கும், 1996 இல் சிறீ லங்கா கீரிக்கட்டு அணி உலகக் கோப்பையை வெல்லவதற்கு காரணமாக இருந்த முத்தையா முரளிதரனா இந்த முறை சிறீ லங்கா உலகக் கோப்பையில் விளையாடும் கீரிக்கட்டு அணியை தலைமை தாங்கிச் செல்வதற்கு மிகக்கூடிய தகுதியை உடையவர்?

3. ஒவ்வொரு முறையும் ஏதாவது சுற்றுக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் 15 பேர்களைக் கொண்ட சிறீ லங்கா கீரிக்கட்டு அணியில் விளையாடும் வீரர்களின் பெயர் விபரம் அறிவிக்கப்படும் போது, ஏன் எப்போதும் முத்தையா முரளிதரனின் பெயர் ஏதோ ரிசேர்வ் பிளேயரைப் போல் 14 அல்லது 15 வதாக அறிவிக்கப்படுகின்றது? சமிந்த வாசின் பெயரை அல்லது சங்கக்கடைகாரனின் பெயரை (சங்குகாறை) இப்படி கடைசியாக அறிவிப்பார்களா?

விழுந்து, விழுந்து சிங்கிளவர்களின் கு** துடைத்த கதிர்காமருக்கு ஏன் சிறீ லங்கா அரசில் பிரதம மந்திரி பதவி வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் இந்தக் கேள்விக்கும் பதில் அளிப்பது சுலபம்!

reserveplayermuralivi7.jpg

உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில் தமிழன் கருவேப்பிலை என்பதே.

நாளை இன்னும் சில கோடரிக் காம்புகளும் இந்த பட்டியலில் இடம் பெறலாம்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

muralicaptionod0.jpg

:P :P :P

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகள் Amnesty International இன் பிரச்சாரத்திற்கு ஆதரவு தந்திருப்பதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் முழு இலங்கையிலும் சகல விளையாட்டுக்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என புலிகள் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இப்பிரச்சாரம் சிங்களப் பெரும்பான்மை மக்கள் சிறீ லங்கா அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களை கொடுமைப்படுத்துகின்றது என்பதை அறிந்து விழிப்படைவதற்கு உதவிபுரியும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்னாபிரிக்காவில் 'வெள்ளையர்களின் சர்வாதிகாரம்', தென்னாபிரிக்காவுடன் மற்றைய நாடுகள் விளையாட்டில் ஈடுபடுவதை தவிர்த்ததன் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும் புலிகளின் மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி மூலம் உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் ஏ.எப்.பீ இன் முழுச்செய்தி:

Tamil Tigers call for sporting boycott of Sri Lanka

COLOMBO (AFP) - Tamil Tiger rebels Tuesday backed an Amnesty International campaign to shame Sri Lanka's government during the cricket World Cup and said it should be extended to a full sporting boycott of the island.

The London-based rights watchdog has been asking Sri Lanka to improve its rights record and has urged thousands of fans in the Caribbean to sign special white cricket balls marked "play by the rules."

Amnesty says the Colombo government, the Tamil Tiger guerrillas and other armed groups must commit themselves to allowing independent human rights monitors to oversee the island's long-running ethnic conflict.

The Liberation Tigers of Tamil Ealam (LTTE) said the Amnesty campaign would raise international awareness among the majority Sinhalese population about "the brutality of their government against the Tamil population."

The Tigers have been fighting for a separate state for the Tamil minority in a bloody war that has claimed more than 60,000 lives since 1972.

"The apartheid South African regime was brought to its knees by using sports to raise political awareness among the white South Africans," Tiger spokeswoman Selvy Navaruban told AFP.

"I hope in a similar fashion the campaign started by Amnesty International will evolve into an international sports boycott against the Sri Lankan cricket team," she said.

However, Amnesty said the campaign was not aimed at the Sri Lankan cricket team, though the government and Sri Lanka Cricket, the sport's governing body, have already lodged a protest with the International Cricket Council.

Last week, the influential Free Media Movement (FMM), which consists of journalists and rights activists, said Amnesty's use of the tournament could anger moderates and help the government take a more hardline stance.

"To mix sports in general, and cricket in particular, with human rights advocacy, is a gross error and strategic blunder in a Sri Lankan context," the FMM said.

Cricket is hugely popular in Sri Lanka and cuts through political and ethnic lines.

"Amnesty International's actions at the Cricket World Cup, for the best of intent, may well result in the worst of outcomes for human rights activists in Sri Lanka," the FMM said.

However, the guerrillas thought otherwise.

"Anyone who thinks cricket can be used to gloss over their government's brutality is utterly ignorant," Navaruban said.

Rights activists have said that more than 750 people have disappeared in the island in the past year as government troops battle Tamil Tiger rebels.

In recent months, bodies have been found of people shot dead "execution-style" and dumped in swamps and roadsides.

Sri Lanka are due to host a high-profile cricket series against England later this year.

சரி இதில எத்தனை பேர் கிறிக்கட் மட்ச்சே பார்க்காது புறக்கணிக்கிறீர்கள். முன்பு ஒரு கட்டத்தில் நாம் புறப்பணிப்பதாக முடிவெடுத்தோம் அல்லவா?கிருபன் கமான்..

எனக்கு இப்ப மட்ச் என்ன நிலவரம் என்று கூட தெரியாது. நான் பார்க்கவேயில்லை அதற்காக வசதியில்லை என்று மட்டும் நினைக்கவேன்டாம். புறக்கணிப்பு ஒரு சுய கட்டுப்பாடு அவ்வளவு தான்.

எனக்கு பிளேன் அடிச்சது தான் உலக கின்ணம். அதில நாம் தான் சம்பியன்...

  • தொடங்கியவர்

இதைப்பற்றிய விரிவான செய்தி (விளையாட்டு புறக்கணிப்பு) தமிழ்நெட் இணையத்தளத்தில் வெளிவிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி

n_selvy_140.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21849

LTTE urges sports boycott of Sri Lanka

[TamilNet, Tuesday, 10 April 2007, 09:11 GMT]

The Tamil Tigers Tuesday backed an Amnesty International awareness campaign that has embarrassed Sri Lanka's government during the cricket World Cup and urged a full sporting boycott of the country, AFP reported. Amnesty’s campaign to build support for international human rights monitoring in Sri Lanka, using the topical theme of cricket, has drawn the fury of the Colombo government as well as the main opposition Sinhala parties.

Capitalising on the interest around the World Cup, Amnesty International last week launched a publicity campaign - using the slogan ‘Play by the Rules’ - to urge Sri Lanka’s warring parties to respect human rights and consent to an international body to monitor abuses.

Amnesty says the Colombo government, the Tamil Tigers and other armed groups must commit themselves to allowing independent human rights monitors to oversee Sri Lanka’s long-running ethnic conflict.

Ms. N. Selvy, LTTE's Spokesperson for Humanitarian and Human Rights Affairs

LTTE spokeswoman Selvy Navaruban Tuesday welcomed the Amnesty campaign, saying it would raise awareness abroad and also among the majority Sinhalese population about "the brutality of their government against the Tamil population."

"The apartheid South African regime was brought to its knees by using sports to raise political awareness among the white South Africans," Ms. Navaruban told AFP.

"I hope in a similar fashion the campaign started by Amnesty International will evolve into an international sports boycott against the Sri Lankan cricket team," she said.

Amnesty International’s efforts to promote international human rights monitoring using the topical theme of cricket has drawn the fury of the Colombo government and, in a rare moment of southern solidarity, the main opposition UNP party joined the Sinhala hardline JVP and the ruling SLFP in denouncing the group’s move.

Amnesty has said the campaign was not aimed at the Sri Lankan cricket team, though the government and Sri Lanka Cricket, the sport's governing body, have already lodged a protest with the International Cricket Council.

Interestingly, also last week, the Free Media Movement (FMM), which consists of journalists and rights activists, expressed anxiety Amnesty's campaign could anger Sinhala moderates and help the government take a more hardline stance.

"To mix sports in general, and cricket in particular, with human rights advocacy, is a gross error and strategic blunder in a Sri Lankan context," the FMM said.

"Amnesty International's actions at the Cricket World Cup, for the best of intent, may well result in the worst of outcomes for human rights activists in Sri Lanka," the FMM said.

Cricket is hugely popular in Sri Lanka and is seen to cut through political and ethnic lines.

Sinhala nationalists have begun campaigning against Amnesty, arguing Sri Lanka’s cricket team is multi-ethnic.

However, the LTTE spokesperson dismissed the argument.

"Anyone who thinks cricket can be used to gloss over their government's brutality is utterly ignorant," Navaruban told AFP.

Sri Lanka is due to host a high-profile cricket series against England later this year.

I don't know how many of you know that Russel Arnold is an original Jaffna Tamil from Chavakacheri.

When its come to Srilankan team many think that Murali is the only Tamil. Arnold's father & uncles

studied @ Driberg College in Chava.

இலங்கையை பொறுத்தவரையில் உலகம் விளங்காமல் ஆதரித்தாலும் மன்னித்தாலும்,தமிழ் மக்களாகியா நாம் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம், மன்னிக்கவும் மறக்கவும் கூடாது எமது அப்பாவி தமிழ் மக்களுக்கு

செய்யும் கொடுமைகள்...தமிழனாக பிறந்தது குற்றம் ...... இவனை மன்னிப்பவன் தமிழனா என்பது கேள்வி?

அவங்கள் என்ன விளையாடட்டும், எதுவும் நடத்தட்டும் எல்லாம் நமது எதிரி நாட்டின் நிகழ்வுகளே..... இவனைப்பொறுத்தவரையில் நாம் அவனுக்கு எதிரி, ஆனால் நாம் மட்டும் ஏன் நட்பாக இருக்கவேண்டும்?

எவனையும் உலகில் மன்னிக்கலாம் ஆனால் இவங்களை வைக்கிற இடத்தில் தான்..........

சிறுபான்மை மக்களை அழித்துக்கொண்டு உலகிற்கு ஒரு விளையாட்டு அதற்கு ஒரு ரசனை.....

நீ விளையாடு........ நமது நாடு விளையாடும் நேரம் வரும் போது விளையாடும்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.