Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலிய tcc பொறுப்பாளர் காலமானார்

Featured Replies

92.jpg

jeyakumar1.jpg

அவுஸ்திரேலிய tcc பொறுப்பாளரும் முன்னால் ஓசானியா tcc பொறுப்பாளருமான ஜெயக்குமார் அண்ணா மாரடைப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.சிறந்த நிர்வாகியான அவர் காலமாகியது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவே. அவுஸ்திரேலியாவிலும்் நியுஸிலாந்திலும் சிறந்த நிர்வாகத்தை நடத்தி அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்த அவ் நல்ல மனிதருக்கு யாழ்களம் சார்பாகவும் ஓசானியா கண்ட தமிழர்கள் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம்

அன்னாரின் பிரிவால் துயரும் அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்ளுகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

அழ்ந்த அணுதாபங்கள் எப்படி ஈடுசெய்ய போகின்றோமோ தெரியவில்லை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.tamilsydney.com/content/view/495/37/

J Jeyakumar, Leading Tamil Nationalism Activist in Australia passes away in melbourne today ( 29th March 2007 ), sources said. Tamil Australians salute for his decades of great contribution to the betterment of Tamil Community.

He was an Information and Communication Technology (ICT) lecturer attached to Melbourne's Chisholm Institute of TAFE.

He is soft spoken and kind hearted but is determined and courageous in his activities against any form of oppression directed against the Tamil Community by racial fanatics, a close friend said.

He has correctly understood that the basic aim of the Sinhala Chauvenists in Sri Lanka is to eliminate the entire Tamil Community there through systemic genocide of Tamils.His service to the oppressed Tamils in this respect is something unforgettable. Tamils all over the world pay their humble respects and thankful remembrance for his dedicated services, a Community leader in Sydney said.

To this day he stood for the prevention of cruelty against Tamils by the State machinery of Sri Lanka representing the majority Sinhalese. His untimely death has not taken away the cause he stood for.

We dedicate ourselves to continue his peaceful strugle against ethnic clensing until Tamils live in Peace in their homeland unfettered by the shackles imposed by the Sri Lankan state, another Tamil Nationalism Activist in Melbourne said.

May his soul rest in peace.

இலைமறை காயாய் - எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்- தம் இறுதிக்காலம் வரை......

எமக்காகவே - தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.....

அர்ப்பணித்துக்கொண்டு இருப்பவர்கள்... இன்னும் எத்தனை - பேரோ !

சென்று வாருங்கள் - ஐயா!

உங்கள் இழப்பை எம்முடன் பகிர்ந்து கொண்டவர்கள் வாயிலாக - அறிந்து கொள்வதெல்லாம்......

புலத்தில் வாய் திறக்க பயப்படுபவர் பலராய் ஆகிவிட்ட - நிலையில் ........

என்ன சொல்ல- நீங்க - எதுக்குமே பயப்பிடாதவர்.......

இனவிசுவாசத்தை - தவிர்ப்பதை தவிர!

கண்ணீர் அஞ்சலிகள் புலிப்பாசைறை சார்ப்பாக . மனிதருள் மாணிக்கம். இவரை நான் போன ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கதைத்தேன். அவர் புலிகளின் கடைசி அடியில் மகிழ்ந்திருப்பார். ஆகவே வீர மரணம்.

  • தொடங்கியவர்

உணமைதான் வர்ணன்.வயதில் சிறியவர்களை கூட அன்பாக மரியாதை கொடுத்து பழகியவர்.ஒரு சிறிய செயலை செய்திவிட்டு அதற்கு பெரிய விளம்பரம் தேடும் நபர்களுக்குள் இலைமறை காயாய் இருந்தவர்.அவ்வளவு எளிமையானவர்.அவுஸ்திரேலிய அரசால் பயங்கர அழுத்தங்களை சந்தித்தும் கொள்கையில் இறுதி வரை தளராதவர்.தன் குடும்பத்தையே நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணித்தவர்.அவரின் மனைவி குழந்தைகள் கூட அன்பானவர்கள்.எல்லோரிடமும் அனுசரித்து போக கூடியவர்கள்.நன்றாக தமிழ் பேசும் பிள்ளைகள்.ஒரு முறை கண்டாலும் பல மாதங்கள் கடந்தபின் சந்தித்தாலும் அன்பாக நலம் விசாரிப்பவர் ஜெயக்குமார் அண்ணா.சுண்டல் சொன்னது போல தலைவரினால் நம்பிக்கை வைக்கப்பட்ட உத்தமன் அவர்.அவுஸ்திரேலியாவில் நான் அதிகம் மதிக்கும் நபர் இவர்தான்.அவரின் சேவைகளும் அனுசரித்து போகும் தன்மையும்,விமர்சனம் செய்திட்டான் என மூஞ்சையை துக்கி வைக்கும் ஆட்களுள் விமர்சனத்தை தன் முன்னேற்ரத்துக்காக எடுத்து கொள்பவரும் அன்பானவருமான ஜெயக்குமார் அண்ணாவின் இழப்பு ஈடுகட்ட முடியாதது.என் வயதை ஒத்த மகன் அவருக்கு இருந்தாலும் அண்ணா எனவே அவரினை அழைப்பேன்.அவரின் மரணச்சடங்குக்கு மெல்பேன் வாழ்தமிழர்கள் திரண்டு வரவேண்டும் எம் தேச விடுதலைக்காய் உழைத்த சுயநலமற்ற அந்த உத்தமனுக்கு நாம் செய்யும் சிறு நன்றிகடன் அதுவாகத்தான் இருக்கும்.என் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமாகிவிட்ட உணர்வு எனக்கு ஏற்பட்டு இருக்குது ஆம் அவர் எம்மவர் எலோருக்காகவும் உழைத்த எம் தமிழின பற்றாளன்.

இவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த மண்ணில், அன்ரன் பாலசிங்கத்துக்கு பிறகு இடம்பெற்ற மிகப்பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத இழப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலிய தமிழர்களை பொறுத்தவரை மிக பெரிய இழப்பு. தலைவரின் மிக மிக நம்பிக்கைக்கு உரியவர்.

தலைவரை நேரடியாக சென்றுபாக்க கூடிய அணுமதி உள்ளவர்..அழ்ந்த அணுதாபங்கள் ...எப்படி ஈடுசெய்ய போகின்றோமோ மெதரியவில்லை....

RASAN Perth WA

அன்னாருக்கு என் அஞ்சலிகள். அவரை இழந்து துயறுரும் அன்னாரது குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெற்கின்றோம்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் காலமானார்

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 10:42 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் தி.ஜெயக்குமார் இன்று வியாழக்கிழமை காலை தனது 54 ஆவது வயதில் காலமானார்.

20 வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலிய கிளையின் பொறுப்பாளராகவும், அவுஸ்திரேலியாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்களின் உருவாக்கத்திற்கும், ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்து பணியாற்றி வந்தார்.

இறுதி நிகழ்வுகள் தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும்

http://www.eelampage.com/?cn=31272

http://sankathi.org/news/index.php?option=...63&Itemid=1

அவுஸ்ரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் சாவடைந்துள்ளார்

அவுஸ்ரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் மாரடைப்பினால் இன்று சாவடைந்துள்ளார். இவரது சாவு அறிவித்தல் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு என் அஞ்சலிகள். அவரை இழந்து துயறுரும் அன்னாரது குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெற்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாருக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் எமது அஞ்சலிகள் உரித்தாகட்டும்.

அண்ணாருக்கும் அவர்தம் குடும்பத்துக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

செய்தி அறிந்து புத்திக்கு தெரிந்தாலும்..மனது ஒத்துக்கொள்ளவில்லை.. குடும்பத்தாரின் துயரில் பங்குகொள்கின்றோம்

அன்னாரூக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

நிதர்சனத்தின் இவ் செய்தி சம்பந்தமான நிலையை அறிய கீழுள்ள இணைப்பை கிளிக் பண்ணுங்க

http://www.yarl.com/forum3/index.php?showt...t=0#entry277568

எமது கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்தின் மேலதிக இணைப்பு

3 ஆம் இணைப்பு) விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் காலமானார்

[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007, 10:42 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் தில்லைநடராஜா ஜெயக்குமார் இன்று வியாழக்கிழமை காலை தனது 54 ஆவது வயதில் காலமானார்.

தாயகத்தில் யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவரான இவர், யோகராணியின் கணவரும், கார்த்திக்கின் தந்தையும் ஆவார்.

20 வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலிய கிளையின் பொறுப்பாளராகவும், அவுஸ்திரேலியாவில் உள்ள பல தமிழ் அமைப்புக்களின் உருவாக்கத்திற்கும், ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்து பணியாற்றி வந்தார்.

1982 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்த இவர், இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், செயற்குழு அங்கத்தவராகவும் பல்லாண்டுகள் கடமையாற்றினார்.

இன்று பாரிய வளர்ச்சி பெற்றிருக்கும் 3CR 'தமிழ்க்குரல்' வானொலியை 1984 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதில் முன்னின்று உழைத்தார்.

1985 ஆம் ஆண்டில் இருந்து இயக்கத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றிய இவர்,

அவுஸ்திரேலியத் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு

தமிழீழ மகளிர் அமைப்பு

சோலைச்சிறுவர் பராமரிப்புச் சங்கம்

போன்ற பல தமிழ் அமைப்புக்களை உருவாக்கி அவுஸ்திரேலிய புலம்பெயர்ந்த தமிழீழ மக்களைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் ஒருங்கிணைப்பதில் வெற்றி கண்டார்.

நியூசிலாந்து, மலேசியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கிளைகள் உருவாகுவதற்கு பெரும் உறுதுணையாக இருந்தார். தில்லைநடராஜா ஜெயக்குமாரின் சிந்தனையும், செயற்பாடும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் முழுமையாகப் பாடுபடுவதிலேயே ஈடுபட்டிருந்தன.

ஆரம்பக் கல்வியை யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியிலும், கணிணித்துறையிலான முதுமானிப் பட்டப்படிப்பை லண்டனிலும் முடித்தார். தொடர்ந்து அவுஸ்ரேலியா மெல்பேர்ணில் Chisholm Institute இல் பேராசிரியராக கடமையாற்றிய இவர், எப்போதும் சிரித்த முகத்துடனும், மனித நேயத்துடனும், அன்புடனும், அடக்கத்துடனும் மற்றவர்களுடன் பழகி வந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தமது தார்மீகக் கடமையை மிகுந்த உத்வேகத்துடன் முன்னெடுத்து வந்த இவர், தமிழீழ தேசியத் தலைவரினை நெஞ்சினிலே நிறுத்தித் தன் பொதுவாழ்வை மேற்கொண்டவர் ஆவார்.

இறுதி நிகழ்வுகள் தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு:

செல்லிடப்பேசி இலக்கம்: 00 61 413 073091

தொலைநகல்: 00 61 3 9803 4932

மின்னஞ்சல்: jayakmr@yahoo.com

  • தொடங்கியவர்

ஜெயக்குமார் அண்னா பற்றி அரசியல் துறை தலைவர் தமிழ் செல்வன் அண்னா வழங்கிய கருத்து பகிர்வை கேட்க இங்கே அழுத்துங்கள்

  • தொடங்கியவர்

இறுதி மரியாதையும் வீரவணக்க நிகழ்வும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03.04.07) மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை இடம்பெறவுள்ளது.

இடம்: Springvale Town Hall

முகவரி: 397 - 405 Springvale Road, Springvale

என்ற இடத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் அனைவரும் திரண்டு வந்து ஜெயக்குமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: 00 61 413 073 09

தொடர்புகளுக்கு:

செல்லிடப்பேசி இலக்கம்: 00 61 413 073091

தொலைநகல்: 00 61 3 9803 4932

மின்னஞ்சல்: jayakmr@yahoo.com

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயக்குமார் அண்னா அவர்களின் இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், விடுதலை உணர்வு என்றால் எப்படியிருக்க வேனும் என்பதை நடைமுறையில் செய்து காட்டி எங்களை சிந்திக்க வைத்த அண்ணனின் வழியில் செயல்பட முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைகுடம்

அளவை ரவீந்திரன் - 31-3-2007

களத்தில் போராட்டம் கையிலே ஆயுதங்கள்

புலத்தில் போராட்டம் கையில் உயிருடன் – பெயர்ந்த

புலத்தில் போராட்டம் எதில் என்று தேடுகிறேன்

எது எது என்று வரைந்து விட்டுப் பார்க்கிறேன்

மாமனிதன் ஜெயக்குமார் உருதான் வரைந்துள்ளேன்.

மாமனிதர் பலர் கண்டோம் - மறைந்தபின்

மாமலையாய் எழுந்ததைக் கண்டோம்

மறையாது இருப்பதைக் கண்டோம் - எம்

உயிரோடு கலந்ததைக் கண்டோம்

அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் பலர்

தலைவருக்கு வாழுமிடம் சமைத்தவர் சிலர்

சட்ட நுணுக்கங்கள் கொடுத்தவர் சிலர்

அம்மாமனிதர் பலருள்ளே தனித்தவர் இவர்

ஊரைவிட்டு வேரோடு வந்தவரெல்லாம்

ஊதியம் தரும் உழைப்புடனே மகிழ்ந்திடுவர்

மண்ணிண் மணத்தின் சுகத்தில் மிதப்போரோ

செய்தியைத் தேடி வெறுவாய் மென்றிடுவர்

மண்ணிண் அவலத்தின் தாக்கம் இருப்போர்

அவலம் வரும்போது ஆக்கமாய் செய்திடுவர்

உயிரை ஊரிலேயும் உடலை இங்கேயும் வைத்ததனால்

மாமனிதர் பலருள்ளே தனித்தவர் இவர்

தாய் மண்ணுக்கும் வேலை

வாழ் மண்ணுக்கும் வேலை - உன்வரையில

ஓய்வுக்கும் இல்லை வேலை

குழுவாய்ப் பேசுவாய்

தெளிவாய்ப் பேசுவாய் - இடையில்

தொலைபேசி அழைத்தால் - அதற்கும்

தெளிவாய்ப் பதில் தருவாய்

விட்ட இடத்தில் மீண்டும் தொடங்குவாய்

கோபமும் களைப்பும் செயல் முனைப்புள் மறைவதனால்

மாமனிதர் பலருள்ளே தனித்தவர் இவர்

போட்டி பொறாமை - இம்மண்ணின்

பாதுகாப்புக் கெடுபிடிகள்

அந்த அரசின் கைக்கூலிகள் காலடியில்

பறித்த பொறிக் கிடங்குகள்

9-11ன் பின் உலகம் விரித்த வலைகள்

மழையா? புயலா? சூறாவளிதானா?

ஆடாமல் நின்ற ஆலமரம் ஆனதனால்

மாமனிதர் பலருள்ளே தனித்தவர் இவர்

என்றும் எதற்கும் தளும்பாத நிறைகுடம்

இன்று உடைந்து விட்டது - இந்த வெற்றிடம்

என்றும் எவராலும் நிரப்ப முடியாது.

வெண்ணெய் திரண்டு வருகின்றது - இந்த நிறைகுடத்தை

உடைக்க அவசரப் பட்டதேன் இறைவா?

http://www.tamilbrisbane.com/content/view/446/1/

  • தொடங்கியவர்

மாமனிதர் ஜெயக்குமார் அண்னாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பெருந்தொகையானவர்கள் கலந்து தம் மாமனிதருக்கு தம் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகள் சிறப்புரை ஆற்றினர்.புகைப்படம் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியதால் படங்கள் எடுக்க முடியவில்லை புதினம் இணையத்தில் வந்த சில படங்களை இங்கே இணைக்கின்றேன்

20070403001.jpg

20070403002.jpg

20070403003.jpg

20070403004.jpg

20070403005.jpg

20070403006.jpg

20070403007.jpg

20070403008.jpg

20070403009.jpg

20070403010.jpg

'மாமனிதர்' ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு: கிழக்குத் தீமோர் தூதரகம் இரங்கல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு, இன்று மாலை மெல்பேல்பேண் ஸ்பிறிங்க்வேலில் உள்ள நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 2.25 மணியளவில் அவருடைய புகழுடல் அடங்கிய பேழை ஊர்தியில் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.

வாயிலில் இருந்து மேடை வரை, செங்கம்பளம் விரிக்கப்பட்ட, மண்டபத்தின் பிரதான வாயிலில் 'மாமனிதர்' ஜெயக்குமாரின் தமிழ்ப் பாராம்பரிய உடையணிந்த உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.

அவருடைய உருவப்படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்ததோடு, படத்தின் அருகாமையில் தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகைப் பூ வைக்கப்பட்டிருந்தது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த மகளிர் தொண்டர்கள், செம்மஞ்சள் - சிவப்பு நிறத்தில் சேலை உடுத்தி, தீபச்சுடருடன் முன்செல்ல, அவர்களைத்தொடர்ந்து 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் புகழுடல் மண்டபத்துக்குள் அணிவகுத்து எடுத்து வரப்பட்டது.

இதன் பின்னர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுத் தொண்டர்களினால் தமிழீழ தேசியக் கொடி அவரது புகழுடல் மீது போர்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த பொதுமக்களும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளும், கல்விமான்களும் தமது இறுதி வணக்கத்தை செலுத்திச் சென்றனர்.

தொடர்ந்து சிறப்பு பேச்சாளர்கள், இரங்கலுரைகளை நிகழ்த்தியதோடு, தாயகத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணனின் இரங்கல் உரை திரையில் ஒளிபரப்பப்பட்டது.

அத்தோடு 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் கடந்த கால நினைவுகளை பிரதிபலிக்கும் முகமாக ஒளிப்படக்காட்சிகளும் சோக இசையுடன் ஒளிப்பரப்பப்பட்டிருந்தது.

உலகெங்கிலும் இருந்து பெறப்பட்ட, இரங்கல் செய்திகளை தாங்கிய நினைவு மலர் இன்றைய இறுதி வணக்க நிகழ்வில் வழங்கப்பட்டிருந்தது. இதில் சிட்னியில் உள்ள கிழக்குத் தீமோர் நாட்டுத் தூதரகம் அனுப்பியிருந்த அனுதாபச் செய்தியும் உள்ளடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ் இறுதி வணக்க நிகழ்வுகள் தாயகத்தில் புலிகளின் குரல் வானொலி ஊடாக நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டதுடன் அவுஸ்திரேலியாவிலும் ஒலி-ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது.

இரவு 8 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் நிறைவுற்று, மாமனிதரின் புகழுடல் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தது.

அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இருந்தும், நியூசிலாந்தில் இருந்தும், மலேசியாவில் இருந்தும் வருகை தந்திருந்த பிரதிநிதிகளோடு 2000-க்கும் மேற்பட்ட மக்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.

http://www.eelampage.com/?cn=31338

திரு.ஜெயக்குமார் அவர்கள் மாமனிதராக மதிப்பளித்து தேசியத் தலைவர் விடுத்திருக்கும் அறிக்கை

f_leaderm_5b3b3c3.jpg

உலகத் தமிழர் பேரரை சார்பாக பழ.நெடுமாறன் விடுத்திருக்கும் அறிக்கை

f_nedumaranm_54c2b1b.jpg

  • தொடங்கியவர்

மாமனிதர் ஜெயக்குமார் அவர்களை கௌரவித்து இன்று கிளிநொச்சியில் அஞ்சலி.

- பண்டார வன்னியன் வுரநளனயலஇ 03 யுpசடை 2007 11:44

தாயக விடுதலைக்காக உழைத்து அவுஸ்ரேலியாவில் உயிர் நீத்த மாமனிதர் ஜெயக்குமார் அவர்களிற்கான அஞ்சலி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.தாயகவிடுதலைக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.