Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூய தமிழ்ச் சொற்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அறிந்த ஒரு சில தூய தமிழ்ச் சொற்களை இப் பகுதிக்கு எடுத்து வந்துள்ளேன்.

மேலதிகமான தூய தமிழ்ச் சொற்களை அறிந்தவர்கள் இப்பகுதிக்கு எடுத்து வந்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நன்றி

சைக்கிள் - மிதியுந்து

அலாரம் - துயிலெழுப்பி

மோட்டார்ச்சைக்கிள் - உந்துருளி

லொறி - பாரஊந்து

பேக்கரி - வெதுப்பகம்

ஜிவலரி - பொற்தொழிலகம்

ஐஸ்கிறீம் - குளிர்கழி

கூல்பார் - குளிர்பருகை நிலையம்

எயிட்ஸ் - எசகு நோய் (திர்ப்பு க்தி குறைவு)

புகையிரதம் - தொடருந்து

சந்தோசம் - மகிழ்ச்சி

பிசகு களால் (காதல் , இரத்தம், சவரம் போண்ற) வருவது எசகு நோய் எண்று சொல்லலாமா...?? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜிவலரி - பொற்தொழிலகம்

இதற்கு நகையகம், நகைமாளிகை, தங்கமாளிகை, நகைச்சுரங்கம் என்ற சொற்களைப் பாவித்தும் அழைக்கலாம். கட்டாயம் முழுஅர்த்தப்பாட்டோடு தான் அமையவேண்டும் என்றில்லை.

இப்படி நீண்டபெயராக வைத்தால் கடையுரிமையாளர்களுக்கு கடினமாக இருக்கக் கூடும். அத்தோடு நேரடி மொழிபெயர்ப்பும் அவசியமற்றது. சுருக்கமாக, அழகாக, அர்த்தமுள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.

சைக்கிள் - மிதியுந்து 

மிதி+ உந்து = மிதியுந்து இது செயற்பாட்டை குறிக்கிறது

ஓரு பொருளை குறிப்பதானால் மிதியுந்தி என்றல்லவா வரவேண்டும்

எதுசரி?

Edited by vvsiva

  • கருத்துக்கள உறவுகள்

மிதி+ உந்து = மிதியுந்து இது செயற்பாட்டை குறிக்கிறது

ஓரு பொருளை குறிப்பதானால் மிதியுந்தி என்றல்லவா வரவேண்டும்

எதுசரி?

அப்படிப் பார்த்தால்

பாரவுந்து என்பது பாரவூந்தி என்றும், தொடரூந்து என்பது தொடரூந்தி என்றுமல்லவா வரவேண்டும்?

தூயவன் மாளிகை சுரங்கம் இவை தமிழ்ச்சொற்களில்லை. நகை என்பது கூட தமிழ்ச்சொல்லா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாரவூர்தி(பாரம் +ஊர்தி) என பல இடங்களில் வாசித்துள்ளேன்.இது பிழையா?

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் மாளிகை சுரங்கம் இவை தமிழ்ச்சொற்களில்லை. நகை என்பது கூட தமிழ்ச்சொல்லா என்று தெரியவில்லை.

தவறுக்கு வருந்துகின்றேன்.

யாழ்பாணத்தில் பல நகைக்கடைகள் வைத்திருக்கின்ற பெயர்களைத் தான் தந்திருந்தேன்.

நகை என்பது தமிழாகத் தான் இருக்கும் என நினைக்கின்றேன். நகை, நகைப்பு, நகைத்தல் என்ற பிறிதொரு அர்த்தம் தரக்கூடிய சொற்கள் இருக்கின்றனவே!

Edited by தூயவன்

தூயவன் மாளிகை சுரங்கம் இவை தமிழ்ச்சொற்களில்லை. நகை என்பது கூட தமிழ்ச்சொல்லா என்று தெரியவில்லை.

மாளிகை சுரங்கம் போன்ற சொற்கள் தமிழ் இல்லையா? விட்டால் தமிழே தமிழ் இல்லை என்று சொல்லுவீர்கள் போல இருக்குது. இதற்கு எதாவது ஆதாரம் இருக்கின்றதா? சமற்கிருதத்தில் உள்ள சொற்்கள் எல்லாம் தமிழிலிருந்தால் அது தமிழ் இல்லை என்று முடிவு செய்துவிடுவீர்களா? அது தமிழிலிருந்து சமற்கிருத்திற்குப் போன சொல்லாகக் கூட இருக்கலாம். உங்களைப்போல் சமற்கிருத்தில் உள்்ள சொற்கள் எல்லாம் தமிழ் இல்லை என்று முடிவு செய்தா கடைசியில் நாம் ஒன்றும் இல்லைமல் தான் அலைய வேண்டி வரும். ஏற்கனவே இந்துசமயத்தோடு தொடர்புபட்ட எந்த ஒரு சொல்லும் தமிழ் இல்லை என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்குது. இதற்குள் நீங்களும் எழுந்தமானத்திற்கு இது தமிழ் இல்லை இதுதான் தமிழ் என்று மக்களைக் குழப்பாதீர்கள்.

சும்மா போங்கோ நான் போய் இப்படி எல்லாம் சிட்னியில கதைக்க தொடங்கினா :mellow: தமிழ் ஆட்கள் எல்லாம் என்னை கொண்டு போய் வேற ஆஸ்பத்திரியில வைத்தாலும் வைத்துபோடுவார்கள் :unsure: என்றாலும் அறியதந்ததிற்கு மிக்க நன்றி!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

மாளிகை சுரங்கம் போன்ற சொற்கள் தமிழ் இல்லையா? விட்டால் தமிழே தமிழ் இல்லை என்று சொல்லுவீர்கள் போல இருக்குது. இதற்கு எதாவது ஆதாரம் இருக்கின்றதா? சமற்கிருதத்தில் உள்ள சொற்்கள் எல்லாம் தமிழிலிருந்தால் அது தமிழ் இல்லை என்று முடிவு செய்துவிடுவீர்களா? அது தமிழிலிருந்து சமற்கிருத்திற்குப் போன சொல்லாகக் கூட இருக்கலாம். உங்களைப்போல் சமற்கிருத்தில் உள்்ள சொற்கள் எல்லாம் தமிழ் இல்லை என்று முடிவு செய்தா கடைசியில் நாம் ஒன்றும் இல்லைமல் தான் அலைய வேண்டி வரும். ஏற்கனவே இந்துசமயத்தோடு தொடர்புபட்ட எந்த ஒரு சொல்லும் தமிழ் இல்லை என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்குது. இதற்குள் நீங்களும் எழுந்தமானத்திற்கு இது தமிழ் இல்லை இதுதான் தமிழ் என்று மக்களைக் குழப்பாதீர்கள்.

அண்ணை நான் சொன்னது அவை தூய தமிழ்ச்சொற்கள் இல்லை என்று. உங்களைப் போன்றவர்கள் ஆங்கிலக்கலப்பற்ற சொற்களை மாத்திரம் தூய தமிழ் சொற்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழில் பல்லாயிரம் சொற்கள். தூய்மையான தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. நாம் தற்காலத்தில் பயன்படுத்தும் பிறமொழிச்சொற்களை விட எமது தமிழ்ச்சொற்கள் மிகவும் பொருளுடைய சொற்களாக இருக்கின்றன.

தமிழில் களையாக குப்பையாக உள்ள வடமொழிச்சொற்கள் உள்ளிட்ட திசைச்சொற்களை முற்றாக அகற்றி விட்டாலும் அழிந்து போவதற்கு எமது மொழி வளம் குறைந்த மொழியல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்பேயே மிகச்செழுமையான மொழியாக இருந்த மொழி எமது மொழி.

எப்ப வடக்கிலிருந்து மதம் எண்ட பெயரில் கண்ட கண்ட கழிவுகள் எல்லாம் தமிழர் நிலத்திற்கு வரத்தொடங்கியதோ அப்போதே தமிழனுக்கும், அவனது மொழிக்கும் தொடங்கிய அழிவு இன்றும் தொடர்கிறது. இதில் இழிவு என்வென்றால் வேற்று மொழிப் பெயர்களை தமிழ் பெயர் என்று நினைத்து தமிழன் தன் பிள்ளைக்கு வைக்கிறான். தமிழ்ச்சொற்களென நினைத்து கண்ட கண்ட மொழிச்சொற்களையும் தமிழுடன் கலந்து பேசுகிறான். இதுதான் தமிழனின் இழிவு நிலை.

இந்து மதத்தில் எதனைத் தமிழில் காண்கின்றீர்கள். எல்லாமே வடமொழிதானே. கோவில்களில் வழிபாட்டின்போது பூசாரிகளால் ஓதப்படும் மந்திரங்கள் என்ன தமிழா? (அதனைக் கூட தமிழ் என்று நீங்கள் நினைத்துக்கொண்டுகூட இருக்கலாம்). வீபூதி, அர்ச்சனை, அபிஷேசகம், ஆரார்தி, பஞ்சாமிர்தம், கும்பாவிஷேஷம், எண்டு எல்லாம் தமிழில்தானே இருக்கிறது?

எமது பயன்பாட்டில் உள்ள வடமொழிச்(சமஸ்கிரத) சொற்கள் அந்த மொழியில் நாம் பயன்படுத்துவது போன்று இருக்காது. ஓசைகள் மாறுபட்டோ அல்லது பொருள் மாறுபட்டோ இருக்கும்

Sujeenthan, தூய தமிழ் என்பது ஆங்கிலமில்லாத தமிழல்ல. ஆங்கிலமோ வடமொழியோ எந்த மொழிச் சொல்லையும் எமது மொழிக்குள் பயன்படுத்தாது முழுமையாக எமது மொழிச்சொற்கள் மூலம் எழுதுவது, பேசுவது. இதுவே தூய தமிழ் பயன்பாடு.

தமிழைத் தூய்மைப் படுத்துவது என்பது நீங்கள் காதல் கொண்டிருக்கும் இந்து மதத்திற்கோ அல்லது சமஸ்கிரத மொழிக்கோ எதிரானதல்ல. முற்று முழுதாக எமது மொழியைத் தூய்மைப் படுத்துவது மாத்திரமே.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழைத் தூய்மைப் படுத்துவது என்பது நீங்கள் காதல் கொண்டிருக்கும் இந்து மதத்திற்கோ அல்லது சமஸ்கிரத மொழிக்கோ எதிரானதல்ல. முற்று முழுதாக எமது மொழியைத் தூய்மைப் படுத்துவது மாத்திரமே.

<<

மின்னல் அவர்களே,

மிக அழகாக எடுத்தியம்பி இருக்கின்றீர்கள். தூய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்வதில் என்ன தவறு

வங்கி - வைப்பகம்

ஐஸ்கீரிம்- குளிர்களி என்றுதான் வரவேண்டும் "ழி" வராது. அப்படி எனில் கழித்துவிடு என்ற பொருள்.

நன்றி.

வெதுப்பி, வெதுப்பகம் - சரி. வெதுப்பியை சமைக்கும் அடுப்புக்கு - அவன் என்று சொல்லப்பயம்- வெண்ணிலா அக்காவுக்கு கோபம் வரும்- என்ன பெயர்?

சான்ட்விச், பேர்கர், சிக்கன் நக்கட் - தமிழில் எப்படி எழுதுவது? :rolleyes:

உதவி தேவை!

மச்சான், இதென்னடா புது சேட் ரவுசர் எண்டு வலு ஸ்டைலா கிடக்கு? என்ன பிளான்?

ஒண்டுமில்லையடாப்பா, சும்மா பிரண்ஸ்சோடை டவுனுக்கு போனனான், பேமன்டில போட்டு வித்தாங்கள், நல்ல சீப் அதான் எடுத்தனான்!

டேய் சும்மா பம்ஸ் விடாத, எப்ப உன்டை பேத்டே? டிசம்பரில தானே? எங்க பேசை தா ஐசியை பாப்பம்!

உந்த அரியண்டத்தால தான் நான் இஞ்சால பக்கம் வாரேல, நான் வாரன் மச்சான்!

போடா போ....டேய் நீ ஏன் கழண்டிட்ட எண்டு தெரியும், அவா வாற நேரம் தானே! கூ.... கூ.....

யாராவது இந்த யாழ்ப்பாண இளவட்ட சம்பாசனையை தூய தமிழில் பேச்சு மொழியாக்கி தர முடியுமா? (பல்லுக் கொழுவாம)

  • கருத்துக்கள உறவுகள்

உதவி தேவை!

யாராவது இந்த யாழ்ப்பாண இளவட்ட சம்பாசனையை தூய தமிழில் பேச்சு மொழியாக்கி தர முடியுமா? (பல்லுக் கொழுவாம)

வாசிக்கவே நாக்கு திக்குது. இதில் மொழிபெயர்ப்பு வேறா?

உதவி தேவை! யாராவது இந்த யாழ்ப்பாண இளவட்ட சம்பாசனையை தூய தமிழில் பேச்சு மொழியாக்கி தர முடியுமா? (பல்லுக் கொழுவாம)

உது என்ன யாழ்ப்பாண தமிழ் என்றுறியள் உது ஊருல எல்லாப் பெடியளும் உப்படித்தான் கதைக்கிறவை. நீங்கள் ஏன் யாழ்ப்பாண,ம் வன்னி என்டு பிரிச்சுப் பறையிறியள் :lol::rolleyes:

Edited by Rasikai

உது என்ன யாழ்ப்பாண தமிழ் என்றுறியள் உது ஊருல எல்லாப் பெடியளும் உப்படித்தான் கதைக்கிறவை. நீங்கள் ஏன் யாழ்ப்பாண,ம் வன்னி என்டு பிரிச்சுப் பறையிறியள் :lol::rolleyes:

மற்ற வட்டாரங்கள் எப்படி எண்டு எனக்கு தெரியாது ரசிகை அக்கா!

டவுனும் டவுன் சார்ந்த இடம் தான் எனக்கு பூர்வீகம்!

வாசிக்கவே நாக்கு திக்குது. இதில் மொழிபெயர்ப்பு வேறா?

அது சரி கொழும்பில 10 வருசம் இருந்தா சுளுக்காம விட்டதே பெரிய விசயம்!

வெதுப்பி, வெதுப்பகம் - சரி. வெதுப்பியை சமைக்கும் அடுப்புக்கு - அவன் என்று சொல்லப்பயம்- வெண்ணிலா அக்காவுக்கு கோபம் வரும்- என்ன பெயர்?

:lol::D:lol::rolleyes:

சாணக்கியன் அண்ணா நான் தூய தமிழில மொழி பெயர்த்து தருவோ. :rolleyes: .........கண்டிப்பா பல்லு கொழுவாம நான் மொழி பெயர்பேன் சரி இப்ப பெயர்கிறேன்!! :wub:

மச்சி என்னடா இன்னைக்கு புது ஜீன்ஸ் எல்லாம் போட்டு கலக்குறாய் என்ன நைனா இன்றைக்கு சம்திங் ஸ்பேசலோ :o .........நத்திங் ஸ்பேசல் பசங்களோட டவுண் பக்கம் ரவுண்ட்ஸ் போனனாங்க அப்ப பேமர்ண்டில நம்ம துட்டிற்கு ஏற்ற மாதிரி இருந்தது அது தான் தூக்கிட்டோம் :icon_mrgreen: .........சும்மா பிலிம் காட்டாதே எப்படா உன்ட பேர்டே......நெஸ்ட் மந் தானே எங்க சாக்கில இருந்து பர்சை எடுடா எங்கே ஜசியை காட்டு நமக்கு :rolleyes: .......இது தான் இந்த ஏரியா பக்கமே வாரதில்லை நான் விடுங்கடா சும்மா.........நான் கிளம்புறேன்.........டேய் போடா போடா துண்டு வாற நேரம் என்றவுடனே ஆள் நமக்கே அல்வா தாரான்!! :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு உங்களுடைய தமிழை வாசிக்க எங்கேயோ இடம் மாறி வந்துட்டேன் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்கோ நான் போய் இப்படி எல்லாம் சிட்னியில கதைக்க தொடங்கினா :o தமிழ் ஆட்கள் எல்லாம் என்னை கொண்டு போய் வேற ஆஸ்பத்திரியில வைத்தாலும் வைத்துபோடுவார்கள் :lol: என்றாலும் அறியதந்ததிற்கு மிக்க நன்றி!! :unsure:

ஏன் இப்போது எந்த ஆஸ்பத்திரியில் இருக்கின்றீர்கள்

ஜம்மு உங்களுடைய தமிழை வாசிக்க எங்கேயோ இடம் மாறி வந்துட்டேன் போல இருக்கு.

நிலா அக்கா அவ்வளவு நல்லாவோ :o இருக்கு சா மாறி எல்லாம் வரவில்லை சரியா தான் வந்திருகிறியள் :unsure: என்னை பார்த்து நீங்களும் கொஞ்சம் டிரை பண்ணுங்கோவேன்!! :D

"என்னைத்தை எல்லாம் செயிறோம் இதை செய்யமாட்டோமா"

அப்ப நான் வரட்டா!!

ஏன் இப்போது எந்த ஆஸ்பத்திரியில் இருக்கின்றீர்கள்

என்ன இப்படி கேட்டுபோட்டியள் தூயவன் நானா :lol: நீங்க இருகிற ஆஸ்பத்திரியில உங்களுக்கு டொக்டரா நான் தானே இருகிறேன் அதையே மறந்துபோட்டியளோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது பார்த்தாலும் உம்மை வைத்தியராக நினைத்துக் கொள்ளும் வருத்தம் தெளியவில்லையா? நீங்கள் சொன்னது மாதிரி வேற வைத்தியசாலைக்கு மாத்தத் தான் வேணும் போல

எப்போது பார்த்தாலும் உம்மை வைத்தியராக நினைத்துக் கொள்ளும் வருத்தம் தெளியவில்லையா? நீங்கள் சொன்னது மாதிரி வேற வைத்தியசாலைக்கு மாத்தத் தான் வேணும் போல

என்ன செய்யிறது என்ட பேஷ்ன்ட் என்ன செய்தாலும் கேட்கதானே வேண்டும் :o சரி கூல்டவுண் இப்ப என்ன ஊசி போடுற நேரமோ சரி சரி வாரேன் :unsure: .........என்றாலும் இப்ப நல்ல இம்புருமன்ட் கவலைபடவேண்டாம் :lol: இப்ப தான் தொடக்கம் குணபடுத்திடலாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.