Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துப்படம் - 12.12.2007

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bala3.jpg

எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: அனிதா

செய்தி குழுமத்தின் எண்ணதிற்கு போல் ஓவியத்தை மிளிர செய்த அனிதா அக்காவிற்கும் எண்ணகருவை ஏற்படுத்தி கொடுத்த செய்தி குழுமதிற்கும் வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகுழுமத்தினரெ இப்ப என்ன சொல்ல ஆசைப்படுகிறிர்கள்,தேசத்தின் குரலின் படத்தை கார்ள்ஸ் மார்க்சின் படத்திற்க்கு பக்கத்தில் போட்டு பூசைபண்ணும்படியா?அது சரி கந்தப்பு மார்க்சின் படத்திற்க்கு பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் யாரப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு வழமையாக கருத்துபடம் நீங்கள் பதிவதில்லை வழமையாக வலைஞன் தான் பதிவதுண்டு ஏன் தேசத்தின் குரல் அன்டன் பால்சிங்கத்தின் கருத்துபடம் உங்கள் பெயரில் பதிவு செய்யபட்டுள்ளது எனக்கு ஒரு சந்தேகம் அதாவது புலிகள் காலி துறைமுகத்தை தாக்கியபோது பேர்ள்காபரில் படத்தை உங்கள் பெயரில் பிரசுரித்ததின் சதியா???

அதாவது புலிகள் மார்க்சிசவாதிகள் என்பதை உலகிற்கு பறைசாற்றுவதின் முக்கிய காரணம் என்ன?மார்சிகத்தையே கேள்விகேட்டவர் தேசத்தின் குரல் அன்சன் பாலசிங்கம்.மார்க்சிகத்தை ஆசியாவிற்கு அக்குவேர் ஆணிவேராக விளகி விளக்கம் கொடுத்த மாமேதை.

எழுத்தின் மூலமும்,செயலின்மூலமும் விளக்கம் கொடுத்த ஆறறை கோடி தமிழனின் பிரதிநிதி ஆனால் அவனுக்கு இன்னும் 5% தமிழனும் அவன் கருத்தை புகழ்பாட முன்வரவில்லை ஆனால் உளுத்துபோனா ஆன்மீக கருத்துகளை புகழ்பாட ஆறறைகோடி தமிழனும் தயார்.

"அ பழக்கியவன் முக்கியமில்லை

அக்கேனா வரை கொண்டு போனவன் தான் தலை"

நானும் அவரை மணிவண்ணன் எண்டு நினைச்சுப் போட்டு பேசமா இருந்திட்டன் இப்ப புத்தன் சொல்லத்தான் விளங்கு வலைஞனின் சதி. உது அமெரிக்காவை புலிகளிற்கு எதிரா திருப்பிவிட நடக்கிற நாடகத்தின் ஒரு அங்கம் போல கிடக்கு. ஏற்கனவே யாழ்களத்தில் இந்திய விசுவாசிகளின் ஆதிக்கம் கூட எண்டது உண்மை போலான் கிடக்கு.

அது சரி மற்றாக்கள் யார்? கடசியில இருக்கிறவர் அமிதாப்பச்சனோ இல்லை ரஜனிக்காந்தோ? குடுமியோடை இருக்கிறவர் அன்னியன் விக்கிரம் போல கிடக்கு. ஆனா உதுகளிக்கையும் ஏதாவது சதி இருக்கும். ரம்பா வாறாவாம் திருப்பி அவாவை வரவேற்கிறமதிரி அவாவின் படத்தையும் போட்டிருக்கலாம்.

மோகன் சர்வதேசம் மாதிரி கண்ணிருந்தும் குருடா இதுகளை விட்டுட்டு இருக்கிறது தான் யாழ்களத்தின் நடுநிலமையை கேள்விக்குறியாக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தின் மூலமும்,செயலின்மூலமும் விளக்கம் கொடுத்த ஆறறை கோடி தமிழனின் பிரதிநிதி ஆனால் அவனுக்கு இன்னும் 5% தமிழனும் அவன் கருத்தை புகழ்பாட முன்வரவில்லை ஆனால் உளுத்துபோனா ஆன்மீக கருத்துகளை புகழ்பாட ஆறறைகோடி தமிழனும் தயார்.

பாலா அண்ணா மேலே கொண்டிருக்கின்ற மரியாதை விட, ஆன்மிகத்தில் ஈடுபாடுகாட்டுகின்றவர்களைச் சாடுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. சொல்லப் போனால், பாலா அண்ணாவின் புகழையும், பெருமைகளையும் துஸ்பிரயோகம் செய்கின்ற போக்கிரித்தனமே இது.

செத்துப் போன திராவிடக் கொள்கையை வைத்துக் கொண்டு ஆட்டம் செய்கின்றவர்கள், அதை எல்லா நிகழ்விலும், கொண்டு வந்து பேசி களத்தை நாறடித்துக் கொண்டிருக்கின்றார்கள்

படம் வரையப்பட்ட ஒழுங்கு அவர்கள் வாழ்ந்த காலம்.

Karl Marx http://en.wikipedia.org/wiki/Karl_Marx

Thomas Paine http://en.wikipedia.org/wiki/Thomas_Paine

John Adams http://en.wikipedia.org/wiki/John_Adams

Jean-Jacques Rousseau http://en.wikipedia.org/wiki/Jean-Jacques_Rousseau

Niccolo Machiavelli http://en.wikipedia.org/wiki/Niccol%C3%B2_Machiavelli

நான் யார்? ஒரு மனிதன் என்றைக்கு இந்தக் கேள்வியை எதிர்கொள்ளத் தொடங்குகிறானோ அன்றே சமூகத்தில் அவனுக்கென்று ஒரு இடமும், இருப்பும், தனித்த ஒரு அடையாளமும் சேர்ந்தே உருவாகிவிடுகின்றன.

இன்று உலகம் போற்றும் மாமேதைகளும், தத்துவவாதிகளும், கோட்பாட்டாளர்களும், இறையியலாளர்களும் தமது வாழ்வின் ஒரு தருணத்தில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டதன் விளைவாகத்தான் தோற்றம் பெற்றார்கள் - சமூகத்தில் மேற்படி நிலையை அடைந்தார்கள்.

இந்தக் கேள்வியின் எல்லா இடுக்குகளிலும் பயணம் செய்து அதைத் தீவிரமாக எதிர்கொண்டவர்களே பின்னாளில் உலகம் போற்றும் மேதைகளாயினர். இந்தக் கேள்வியிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் சாதாரண மனிதர்களாகி மறைந்து போயினர். - பரணி கிருஸ்ணரஜினி

"ஆதி மனிதன், தனது உலகானுபவத்தை அர்த்தமுள்ள சப்தங்களாக வார்த்தைகளில் உருவகித்து, பேசும் ஆற்றல் பெற்று சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவனிடம் அந்தக் கேள்வி பிறந்தது.

கேள்விகளுக்கு எல்லாம் மூலக் கேள்வியாக, வாழ்வியக்கத்தின் அர்த்தத்தையே தொட்டு நிற்கும் கேள்வியாக, ஆதி மனிதன் தன்னை நோக்கி அந்த வினாவை எழுப்பினான்.

'நான் யார்?'

எல்லையற்ற பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு முலையிலிருந்து திசை தெரியாது தவித்த மானிடத்தின் அவலக்குரலாக அந்தக் கேள்வி எழுந்தது.

அந்தக் கேள்வி பிறந்த கணத்திலிருந்து இன்று வரை, ஒரு நீண்ட முடிவில்லாத சுயவிசாரணைத் தேடலாக மனிதன் தன்னைத்தானே தேடிக்கொண்டிருக்கிறான். அந்தத் தேடுதல் இன்னும் முடியவில்லை." - அன்ரன் பாலசிங்கம்

"எமது ஈழத்தமிழ்ச் சமுகம் இறுகி இயக்கமற்று கெட்டிப்போயிருக்கிறது. அதுதான் விடுதலை மீதான நம்பிக்கையீனங்களும், துரோகங்களும் என்று அல்லற்படுகிறது. மரபான சில சமுகத் தளைகளிலிருந்து அது தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். விடுதலை பற்றிய கருத்தியலை பல தளங்களிலும் வளர்த்தெடுக்கவேண்டும். இதை யார் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை" என்று சொல்லிப் புலம்பியிருக்கிறார். - பரணி கிருஸ்ணரஜினி

மேலும் வாசிக்க விரும்பினால்: விடுதலையின் விரிதளங்கள்

---

தத்துவார்த்த உலகில் வரலாறு தேடல் கொள்ளும் ஒரு மனிதனாக, வரலாறாய் படிக்கப்படப்போகும் மனிதனாக அன்ரன் பாலசிங்கத்தை கருதலாம். எமது சமூகம் அவரை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும், பிரபாகரனின் உரைக்கு விளக்கவுரை கொடுக்கும் பாலா அண்ணையாகவும் மட்டுமே பார்த்திருக்கிறது. அதற்கப்பால் சென்று, தத்துவார்த்த வழியில் அவரை அணுகவும் தத்துவார்த்த சிந்தனைகளூடாக அவரை அறியவும் முற்படவில்லை என்றே சொல்லவேண்டும். வரலாறு கார்ல் மார்க்சைக் கொண்டாடுகிறது. ஈழத்தின் விடுதலைக்கு பின்னாலும், அப்பாலும் அன்ரன் பாலசிங்கம் கொண்டாடப்படுவார். ஈழம் தந்த தத்துவாசிரியன்.

இம்முறை மாவீரர்நாள் உரையின் பின் தமிழ்ச் சமூகத்தில் அதனை சரியான புரிதலுக்கு உட்படுத்த ஒரு அறிவுஜீவியும் முன்வரவுமில்லை அல்லது அவர்களால் முடியவுமில்லை. இந்நேரத்தில் தான் பாலசிங்கம் என்கிற ஒரு தத்துவாசானின் தேவை எழுகிறது. இந்நேரத்தில் தான் அவரின் இழப்பும் இருப்பும் தெளிவாகிறது. இட்டுநிரப்பப்பட முடியாத இடம். இட்டுநிரப்பப்பட வேண்டிய இடம்.

"பாலசிங்கம் என்னும் பகுத்தறிவாளன்"

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தமிழ்த் தலைவர்கள் பலர் தோன்றியுள்ளார்கள். தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களையெல்லாம் அவர்கள் இனம் கண்டார்கள். அவற்றைக் களைந்தெறிந்து விடுவது தமிர்களைப் பூரண சுயநிர்ணயமுள்ள சுதந்திர மனிதர்களாக்குவது எனக் குறிப்பிட்டு தமிழினத்தை எழுச்சி கொள்ள வைத்தார்கள்.

ஆனால், காலப்போக்கில் அவர்கள் அப்பிரச்சினைகளுடன் வாழப் பழகிக் கொண்டார்கள். அவற்றின் ஆழ அகலங்களையே தொடர்ந்து விமர்சித்தும் வியாக்கியானம் செய்தும் வந்தார்கள். அவர்களின் இப்போக்கிற்கு அவர்கள் கொண்டிருந்த கல்வி கேள்விகளும் துணை போயின.

ஆயினும் அவர்கள் இனங்கண்ட பிரச்சினைகளும் அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அவர்களின் ஆற்றல்களையும் மீறிப் பூதாகாரமெடுத்தன. இந்தத் தருணத்திலேயே இலங்கைத் தமிழர் மத்தியிலிருந்து ஒரு புதிய வீரவரலாற்றில் தோன்றிய ஓர் உதாரண புருசனே 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் எனும் பகுத்தறிவாளன்.

...

.....

http://www.tamilnaatham.com/articles/2007/...yan20071218.htm

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கம்: தூயவன்

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.