Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாமியோவ், நாம சபரிமலைக்கு போறது நல்லதோ? சாமியோ சரணம் ஐயப்பா!

சபரிமலைக்கு போறது நல்லதோ? 8 members have voted

  1. 1. சபரிமலைக்கு போறது நல்லதோ?

    • ஆம்!
      2
    • இல்லை!
      3
    • தெரியாது!
      2
    • வேறு பதில்!
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்!

இது ஒருவரிண்ட மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படும் கருத்து அல்ல..

எண்ட கேள்வி என்னவெண்டால்.. இப்ப ஏராளம் தமிழர் இலங்கையில இருந்தும், வெளிநாடுகளில இருந்தும் சபரிமலைக்கு யாத்திரை போறீனம்.. அங்க போனா ஆத்மதிருப்தி ஏதும் கிடைக்கிதோ தெரியாது.

ஆனா... இப்ப இது வியாபாரமாகி வருகின்ற மாதிரி இருக்கிது. ஏராளம் பணம் செலவளித்து ஏராளம் ரிஸ்க் எடுத்து.. இந்தியாவுக்கு ஐயப்பனை பார்க்க இந்தியாவுக்கு போகவேணுமோ? வீட்டில இருந்து கும்பிட்டால் ஐயப்பன் அருள் புரிய மாட்டாரோ?

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் சபரிமலைக்கு யாத்திரை போன இடத்தில நோய்வந்து பிறகு இறந்துபோனார்.

எண்ட உறவினர ஐயப்பன் ஏன் காப்பாத்த இல்ல? அவரக்காணப்போன இடத்தில எனது உறவினருக்கு ஏன் ஐயப்பன் வருத்தத்த ஏற்படுத்தி சாக்காட்ட வேணும்?

இப்ப முஸ்லீம்கள் மக்காவூக்கு யாத்திரை போறினம். அப்ப சனநெரிசலில அகப்பட்டு ஆயிரக்கணக்கில ஆக்கள் சாகுறீனம். அப்ப இதுமாதிரி நாங்களும் ஐயப்பன பார்க்க மலையில ஏறி சாகவேணுமோ?

எனது உறவினர் ஐயப்பன பார்க்க மினக்கட்டு இந்தியாவுக்கு போனநேரத்துக்கு பேசாமல் ஒழுங்கா வீட்டில இருந்து ஓய்வு எடுத்து இருந்தால் இந்நேரம் உயிருடன் இருந்து இருப்பார்.

கனடாவிலயும் ஏராளம் ஐயப்பன் அடியார்கள் இருக்கிறீனம். கோயில் ஒண்டும் இருக்கிது எண்டு நினைக்கிறன். இது வெற்றிகரமாக நிறுவனமயப்படுத்தப்பட்டு விட்டது. இதன் இலாபங்கள் ஐயப்பனிற்கு போகிதா இல்லாட்டி எந்த அப்பனுக்கு போகிது எண்டு தெரியாது.

உங்கள் யாருக்கும் இதுகளுக்கு விடை தெரிஞ்சால் அடியேனுக்கு கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ.

ஐயப்பன் அடியார்கள் மன்னித்துகொள்ளவும்..

உங்கட கருத்துக்களிற்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

உது கோடிக்ணக்கான மக்களுடைய நம்பிக்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை பாருங்கோ. உதுகளில தலையக் குடுத்து நமக்கு வரப் போற பிரயோசனம் என்னவெண்டு முதலில பார்க்கவேணும். என்னைப் பொறுத்த அளவில உதவிட வேற வேலையள் சமூகப் பிரக்ஞை கொண்ட ஆக்களுக்கு இருக்குது. அப்படியில்ல எங்கட நேரத்த உப்பிடித்தான் செலவிடப்போறமெண்டு மினக்கெட்டுக்கொண்டு நிண்டால் நில்லுங்கோ. நாம என்ன செய்யிறது தமிழண்ட தலைவிதி உதுதான் எண்டுபோட்டுப் போக வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கலைஞன்

கியுபாவிற்கு பெண் விடயங்களுக்குப் போறதையும், பிறேசிலுக்கு களியாட்டம்(கார்னிவெல்) என்று பெண்களை அவிழ்த்துப் போட்டு, நிர்வாணமாக வீதி முழுக்க கொண்டு திரிகின்ற நிகழ்வுகளையும் பற்றியும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.

இதுவும் தமிழனின் தலைவிதி தான்.

  • தொடங்கியவர்

கோடிக்கணக்கான ஆக்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனா.. பிரச்சனை எங்கட வீடுகளுக்க வரேக்கதானே நாங்கள் இதுகள பற்றி கதைக்கிறம்.

ஏன் கலைஞன்

கியுபாவிற்கு பெண் விடயங்களுக்குப் போறதையும், பிறேசிலுக்கு களியாட்டம்(கார்னிவெல்) என்று பெண்களை அவிழ்த்துப் போட்டு, நிர்வாணமாக வீதி முழுக்க கொண்டு திரிகின்ற நிகழ்வுகளையும் பற்றியும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.

இதுவும் தமிழனின் தலைவிதி தான்.

இதுவரை எனக்கு தெரிஞ்ச யாரும் உதுகளுக்கு போறதா தகவல் இல்ல. இரகசியமா போறீனமோ தெரியாது. தகவல் கிடைச்சால் இதுகள பற்றியும் கட்டாயம் எழுதுறன் பொன்னையா அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கே ஈழத்தில் சனங்கள் வாழ்வா சாவா என்று இருக்கும் போது புலத்தில் வாழும் நீங்கள் இரண்டு பியர் அடித்தவுடன் சாதி அல்லது சமயம் என்று தொடங்க வேண்டியது தான். இது எல்லாம் இந்த நிலையில் தேவையா கட்டாயம்.

அப்ப ஒண்டு செய்யுங்கோ. நீங்கள் இதுக்க இருந்து கருத்தாடல் செய்யாமல் தாயகத்தில போய் போராடுங்கோ. :rolleyes:

கருத்தாடல் தளம் கருத்தாடல் செய்யத்தானே இருக்கிது? இது பற்றிகதைக்ககூடாது... அதுபற்றி கதைக்ககூடாது எண்டால் பிறகு ஏன் இதுகளுக்க நிண்டு நீங்கள் மினக்கெடுறீங்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன்.. இஸ்லாம் இந்து மதங்களில உதாரணம் காட்டிட்டீங்கள்..

எனக்குத் தெரிஞ்ச ஒராள் ஜெருசேலம் பாக்க போய் துண்டை காணம் துணிய காணம் எண்டு வந்தார். அதெல்லாம் தேவையோ.. எண்டதையும் இதுக்கை இணைத்து விடுறன் உம்மட சார்பில. பிறகு உமக்கு மத முத்திரை குத்திப்போடுவாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்தாடல் தளம் கருத்தாடல் செய்யத்தானே இருக்கிது? இது பற்றிகதைக்ககூடாது... அதுபற்றி கதைக்ககூடாது எண்டால் பிறகு ஏன் இதுகளுக்க நிண்டு நீங்கள் மினக்கெடுறீங்கள்?

அப்போ தமிழரை குழப்பி விடுறது என்றே அடம் பிடிக்கிறியள். Ok

ஜரோப்பாவில் ஏதோ லுட்ஸ் மாதா என்ற கோயில் இருக்காம் அதுக்கு தமிழர் எல்லாம் போவினமாம் அதை பற்றி என்ன நினைக்கிறியள்

***

*** - தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இணையவன்

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

கலைஞன்.. இஸ்லாம் இந்து மதங்களில உதாரணம் காட்டிட்டீங்கள்..

எனக்குத் தெரிஞ்ச ஒராள் ஜெருசேலம் பாக்க போய் துண்டை காணம் துணிய காணம் எண்டு வந்தார். அதெல்லாம் தேவையோ.. எண்டதையும் இதுக்கை இணைத்து விடுறன் உம்மட சார்பில. பிறகு உமக்கு மத முத்திரை குத்திப்போடுவாங்கள்.

ஓம் உங்களுக்கு தெரிஞ்சத தாரளமா இணையுங்கோ. எனக்கு யாராவது ஜெரூசலம் போனதா தெரியாது.

அப்போ தமிழரை குழப்பி விடுறது என்றே அடம் பிடிக்கிறியள். Ok

ஜரோப்பாவில் ஏதோ லுசு மாதா(லுட்ஸ் மாதா) என்ற கோயில் இருக்காம் அதுக்கு தமிழர் எல்லாம் போவினமாம் அதை பற்றி என்ன நினைக்கிறியள்

*******

கண்ணால கண்டத கேட்டத நான் எழுதினன். நீங்கள் சொன்ன விசயங்கள நான் கேள்விப்படவில்ல.

மூல கருத்தில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது- யாழ்பாடி

Edited by yarlpaadi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு!இது தேவையில்லாத வேலை நைசாய் இடத்தை விட்டு மாறும்

  • தொடங்கியவர்

மாப்பு!இது தேவையில்லாத வேலை நைசாய் இடத்தை விட்டு மாறும்

உங்கட நல்லதுக்குத்தான் கு.சா அண்ணை சொல்லிறன். நாளைக்கு சபரிமலைக்கு போய் உங்களுக்கும் என்னவும் பிரச்சனை எண்டால் பிறகு நாங்கள் கவலைப்படவேண்டி வருமல்லோ?

இந்தியா வித்தியசமான இடம். இதின்ட காலநிலையும் எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளுமோ தெரியாது. வெளிநாடுகளில குளிர்வீடுகளுக்க இருந்துபோட்டு இந்தியாவில வெய்யுலுக்கபோய் காய்ஞ்சு வியாதி தேட விருப்பம் எண்டால் தாராளமா போங்கோ.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலைப் பிரதேசம் சீசனில் மிகவும் அருவருப்பான நிலையில் மலக்குவியல்கள் நிறைந்து கால்வைக்கவே இடமில்லாமல் இருக்குமாம். கதிர்காமத்திலும் இந்த நிலையுண்டு. காசியில் கங்கையில் குளிக்கும்போது அரைகுறையாக எரிக்கப்பட்ட பிணங்களின் பாகங்கள் குளிப்போரை இடித்துக்கொண்டு மிதந்து செல்லுமாம். இவையெல்லாம் அறிந்தும் மக்கள் கோடி கோடியாய் அங்கு போகிறார்கள். காலங்காலமாக மக்களின் இத்தகைய நம்பிக்கைகள் விமர்சிக்கப்பட்டே வருகின்றன. மகாத்மா காந்திகூட காசியின் அசுத்தச் சூழல்பற்றி எழுதியிருக்கிறார். மாறாகச் சிலபேர் கங்கைத்தண்ணீர் நோய்க்கிருமிகளற்ற சுத்தமான நீர் என்று ஆராய்ச்சிகள்மூலம் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தமது வாதத்தைச் சொல்கிறார்கள். மொத்தத்தில் இது புது விடயமல்ல. ஏற்கனவே பலராலும் கருத்திலெடுக்கப்பட்ட விடயம்தான். இந்திய அரசினாலேயே இந்த நெரிசல் மிக்க சுகாதாரமற்ற சமயச் சூழல்களுக்கு ஏதாவது ஒரு தீர்வைக் காணமுடியவில்லை. நாம் இவற்றை வாதத்திற்கெடுத்து எதைச் சாதித்து விடப்போகிறோமென்று தெரியவில்லை.

நன்றி கரு அண்ணை தகவலுக்கு. நீங்கள் சொன்னதில சில விசயங்கள் இண்டைக்குத்தான் எனக்கு தெரியும். போகும் இடங்களில் உள்ள சுகாதாரசீர்கேடுகள் பற்றி எங்கட டமிழ்ஸ் அறிஞ்சு இருந்தால் கொஞ்சம் கவனமா இருப்பீனம் எண்டு நினைக்கிறன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதின்ட காலநிலையும் எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளுமோ தெரியாது. வெளிநாடுகளில குளிர்வீடுகளுக்க இருந்துபோட்டு இந்தியாவில வெய்யுலுக்கபோய் காய்ஞ்சு வியாதி தேட விருப்பம் எண்டால் தாராளமா போங்கோ.

கடவுளே.. தமிழீழம் கிடைச்சு திரும்பி போக விரும்பிற ஆக்களுக்கும் இதே அறிவுரையை சொல்லுவீங்களோ..

  • தொடங்கியவர்

கடவுளே.. தமிழீழம் கிடைச்சு திரும்பி போக விரும்பிற ஆக்களுக்கும் இதே அறிவுரையை சொல்லுவீங்களோ..

காவடி அண்ணை, தமிழீழம் கிடைச்ச கையோட ரெண்டு, மூண்டு மாதத்தில தமிழீழத்த நாங்கள் குட்டி சிங்கப்பூர் ஆக்கிப்போடுவம் எண்டு எங்கட வெளிநாட்டில இருக்கிற சனம் சொல்லிக்கொண்டு இருக்கிது. தமிழீழம் கிடைச்சு எங்கட தாயகம் குட்டி சிங்கப்பூராகினாப்பிறகு பயமில்லாமல் போகலாம். அதுக்கு முன்னம் அவசரப்பட்டு போறது ஆபத்து. தமிழீழத்தில இருக்கிற மிதிவெடிகள், பொறிவெடிகள், இப்ப வச்சு இருக்கிற கடல்கண்ணிகளையெல்லாம் முதலில அகற்றவேணும். சுருக்கமா சொல்லப்போனா தமிழீழம் கிடைக்கிறதுக்கு கஸ்டப்படுவதை விட, தமிழீழம் கிடைச்சாப்பிறகு அதை கட்டி எழுப்புவதில கஸ்டப்படப் போவதிலதான் எங்கட போராட்டத்தின் வெற்றி தங்கி இருக்கிது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.