Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிதீவிரவாத அரசியல் எதிரியையே பலப்படுத்தும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிதீவிரவாத அரசியல் எதிரியையே பலப்படுத்தும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

திரு தி வழுதியின் கட்டுரை வாசித்தேன். அவருடைய உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்ளுகிறேன். எனினும் போராட்டம் தொடர்பான அவருடைய மூல உபாயம் தவறானது. இந்திய அரசு (state) இந்திய அரசாங்கங்கள் (Indian government) பற்றிய குழப்பம் மீண்டும் மிகத் தவறான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் சென்றுவிடும். தமிழ் நாட்டின் எழுச்சி காங்கிரஸ் தலைமையிலான தற்போதைய இந்திய அரசாங்கத்துக்கு எதிரான உறுதியான விமர்சனமாகும். அது இந்திய அரசுக்கு எதிரான போர்க்குரல் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திரா காந்தி அம்மையாரின் காலம் வரைக்கும் இந்திய அரசு மற்றும் இந்திய அரசாங்கங்களோடு எமக்கு பெரும் சிக்கல்கள் இருக்கவில்லை. தமிழ் நாட்டின் ஆதரவுடன் எதிர்கொள்ளக் கூடியதாகவே இருந்தது. இந்திராவின் மரணத்துக்குப் பின்னர் ரஜீவ் தலைமையில் இந்தியாவில் தொடர்ந்த காங்கிரஸ் அரசாங்கத்துடன் சிக்கல்கள் முற்றியது. எம்.ஜி.ஆரின் மரணம், கலைஞர் தொடர்பான எங்கள் அணுகுமுறை இரஜீவ் அரசின் ஆதிக்க மனப்பாங்கு எமது அரசியல் எல்லாம் நிலமையை சீர்குலைத்தன. அதன்பின்னர் இரண்டு வரலாற்றுத் தவறுகள் இடம்பெற்றன. ஒன்று இந்தியா தமிழர் பங்குபற்றாத ஒரு உடன்பாட்டை இலங்கை அரசுடன் செய்தமை. இது இந்திய படையின் தக்குதல் நடவடிக்கைகளுக்கு வழி வகுத்தது. இரண்டாவது வரலாற்றுத் தவறாக அரச அடைக்கலமாக தமிழகத்தில் இருந்த பத்மநாபா கொலை, அதனைத் தொடர்ந்த ரஜீவ் கொலை என்பவற்றையே குறிப்பிடுகிறேன். இதன் பின்னர் காங்கிரஸ் அரசுகள் இலங்கை அரச பயங்கரவாதத்துக்குச் சார்பான நிலையே எடுத்தன. கான்கிரஸ் அற்ற அரசுகளுக்கு நீதிமன்ற வளக்கு நிலவரங்கள் தடையாக இருந்த்தது. இன்று பாரதிய ஜனதாவும் கம்யூனிஸ்ட்டுகளும் புதிய நிலைபாடு எடுத்துள்ளனர். இதற்க்கு நமக்கு ஆதரவாகத் தமிழ் நாடில் வளர்ந்துள்ள ஆதரவு மட்டுமே முக்கிய காரணமாகும். அரசியல் ரீதியான நமது பங்களிப்பு இன்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

காங்கிரஸை காங்கிரஸ் தலைவியை எதிர்த்துக் குரல் கொடுப்பது உயர்ந்த பட்ச்சம் இன்றைய இந்திய அரசுக்கு எதிரான குரல் மட்டுமே. அத்தகைய போராட்டம் வேறு. தூதரகங்களை முடகுவது என்பது அடிப்படையில் இரண்டு பாரிய இராஜதந்திரத் தவறுகளை உள்ளடக்கியுள்ளது. மேற்க்குநாடுகளில் அரசியல் ரீதியாகப் போராடுவதையே அது மேற்க்கு நாடுகளின் மனசைப் பாதிக்குமென்று திரு வழுதி சொல்கிறார். எனினும் அத்தகைய ஊர்வலங்கள் அனுமதியுடன் இடம்பெறும் சட்டரீதியான அரசியல் நடவடிக்கைகள் ஆகும். ஆனால் மேற்க்கு நாடுகளின் பாதுகாப்பில் உள்ள தூதரகம் ஒன்றை முடக்க முனைவதுதான் மேற்க்கு நாடுகளை அதிகம் பாதிக்கும் செயலாகும். இத்தகைய முயற்ச்சி மேற்க்கு நாடுகளால் சட்டபூர்வமான அரசியல் அரசியல் எதிர்ப்பாக எடுக்கப்பட மாட்டாது. இது பி.கே.கே போன்ற அமைப்புகளின் மேற்குலக கிழைகளின் மட்டத்துக்கே எங்கள் அமைப்புகளையும் கீழ்ப்படுத்தும்.

சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி என்கிற திரு வழுதியின் கூற்று அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்திய அரசியல் கட்ச்சி ஒன்றுடனான மோதலை இந்தியாவுடனான மோதலாக மாற்றுவது தமிழ் நாட்டின் எழுச்சியின் அடிப்படைகள் பறிய தெளிவின்மையையே காட்டுகிறது. இன்னும் நான்குமாதத்தில் ஆட்ச்சி மாறும்போது இந்தக் கோசம் செம்மைப் படுத்தமுடியாத பாதிப்புகலை ஏற்படுத்தியிருக்கும். இது தமிழக எழுச்சியை வளர்ப்பதற்க்குப் பதிலாக சீர்குலைப்பதற்க்கே உதவும்.

எனவே மக்கள் எதிர்ப்பையும் தமிழக எதிர்ப்பையும் இலங்கை அரசுக்கெதிரான எங்கள் போராட்டமாக்குவது முற்றிலும் சாத்தியம். இந்திய அரசியல் கட்ச்சி ஒன்றின் அணுகுமுறைக்கு எதிரான போராட்டமாக்குவதும் சாத்தியமே. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போராட்டமாக வழர்ப்பது அரசியல் ரீதியாகச் சாத்தியமுமில்லை அவசியமும் இலை.

தமிழ்நாடில் வெண்ணை திரண்டுவரும் சமயத்தில் அதிதீவிர அணுகுமுறைகளால் தாழியை உடத்து விடாதீர்க.

-வ.ஐ.ச.ஜெயபாலன்

அதிதீவிரவாத அரசியல் எதிரியையே பலப்படுத்தும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

வழுதியின் ஆர்வத்தினை பாராட்டுகிறேன் ,ஆனால் பின்வரும் கூற்றுக்களை சரியா என சிந்தியுங்கள்

(1)உலகு எங்கும் - கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக்கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து - எங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக்கொண்டிருக்கின்றோம்.

(2) "வெள்ளை மாளிகை" முன்றலிலும், "டவுணிங் ஸ்ட்றீட்"டிலும், ஒட்டாவாவின் வீதிகளிலும் மற்றும் மேற்குலகின் சாலைகளிலும் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குச் சங்கடங்களையே ஏற்படுத்தும்.

(3)எம் மீது ஒரு வகையான சினத்தைக்கூட - அந்தந்த நாட்டு அரசுகளினதும், அந்தந்த நாட்டு மக்களினதும் மனங்களில் - உருவாக்கப் பார்க்கும். ஒரு வகையில் - தேவையற்ற பகை உணர்வைக்கூட, அது தமிழர்களுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஏற்படுத்தும்

(4)லண்டன் நகர வீதிகளில், ஒரு லட்சம் பேர், ஒரே நாளில் திரண்டு பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வுக்குச் சிரமங்கள் தருவதைத் தவிர்த்து

(5)ரொறான்ரோ நகர வீதிகளில், 80 ஆயிரம் பேர், ஒரே நாளில் திரண்டு கனடிய மக்களின் அன்றாட வாழ்வுக்கு அலுப்புத் தருவதைத் தவிர்த்து

புலம் பெயர் மக்களின் எழுச்சியினை இந்த கூற்று நிச்சயம் பாதிக்கும். மக்கள் புரட்சியை சீரழிக்கும். கடும் குளிரில் மக்களின் அற்பணிப்பு அநியாய மாகிவிடும். ஆகவே அதனை சொல்லாமல் இதனையும் செய்தல் நல்லம் என்று போட்டிருக்கலாம்.

அவருடைய கருத்துக்களில் முரண்பாடில்லை ஆனால் எபோழுதுமே நாம் செய்ததை பிரயோசனமில்லை என்று சொல்வது சரியல்லை.

அத்துடன் ஒட்டுமொத்த இந்தியாவை எமக்கு எதிராக திருப்பக்கூடாது. இது சிலவேளைகளில் தமிழ் நாட்டு எழுச்சியை பாதித்துவிடுமோ என்ற மனபயம் எனக்கு வருகிறது. இந்த கட்டுரையிலே இந்தியவிற்கு பதிலாக சோனியா அல்லது காங்கிரஸ் என்ற பதம் தான் தற்போதைய காலத்தில் பொருந்தும் என்பது எனது நிலைப்பாடு. என்ன சொல்லுகிறீர்கள் ???

எனது கருத்து தமிழ் தேசியத்தினை பாதிக்கும் என்றால் தயவுசெய்து சொல்லுங்கள் இதனை அழித்து விடுகிறேன். ஆவலுடன் உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்"

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51547

Edited by தேசம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்களின் எழுச்சியினை இந்த கூற்று நிச்சயம் பாதிக்கும். மக்கள் புரட்சியை சீரழிக்கும். கடும் குளிரில் மக்களின் அற்பணிப்பு அநியாய மாகிவிடும். ஆகவே அதனை சொல்லாமல் இதனையும் செய்தல் நல்லம் என்று போட்டிருக்கலாம்.

அவருடைய கருத்துக்களில் முரண்பாடில்லை ஆனால் எபோழுதுமே நாம் செய்ததை பிரயோசனமில்லை என்று சொல்வது சரியல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=51547

நண்பரே உங்கள் கருத்துக்கு மறுப்பில்லை. [உங்கள் பெயரை பிரதி பண்ண முடியாததால் ஒட்டி வாசிக்க முடியவில்லை ] இப்போது தொடரும் எழுச்சியை சட்டரீதியாகத் தொடர்வதும் இந்திய எதிர்ப்பில்லாமல் குறித்த இந்திய அரசியல் கட்ச்சிகள் தொடர்பான விமர்சனமாகளை முதன்மைப் படுத்தவேண்டும். இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல இந்திய மீனவர்களையும் கொல்வதையும் நிறுத்து பதிரிகையாலரைக் கொல்லாதே என்கிற வகையில் அணுகுமுறையை விரிவுபடுத்துவது அவசியம். தமிழக எழுச்சியை சட்ட ரீதியாக்கி நான்குமாதம் நாம் தாக்குப் பிடித்துக் காத்திருந்தால் வழி பிறக்கும் என்று நம்புகிறேன்.

நான் மிகுந்த நெருக்கடிகளுக்கும் சிரமங்களுக்குமூடாகச் செயல் படுகிறேன். அதிகம் பேச முடியாது. எழுதுகிறதில் இருந்து நீங்கள்தான் புரிந்து கொள்ள வேணும். என்னால் யாழ் இணையம் வாசிக்கமுடியவில்லை. வெட்டி ஒட்டி வாசிக்க அவகாசமில்லை. டைனமிக் எழுத்துரு இறக்கியும் என் பிரச்சினை தீரவில்லை. யாராவது ஆலோசனை சொல்லுங்கள்

போராட்டம் தொலைநோக்கு அரசியல் சித்தாந்திகளை இப்போதாவது உள்வாங்க வேண்டும்.

எம்முடைய பலவீனமே இதுதான்.

நோர்வே அணுசரணை பேச்சுவார்த்தையின் போது "முதல் தடவையாக தமிழர் தரப்பு சிங்களத்தரப்பை பேய்க்காட்டியுள்ளது" என்று கருத்து எழுதியவர்கள் இருக்க... என்னத்தைச் சொல்ல...

இன்றைய தமிழின அவலத்திற்கு இந்தியாவே முதற் காரணி. அதனையுணர்ந்துதான் தலைவர் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைத் தேடினார். இந்தியா தமிழருக்க ஆதரவாகச் செயற்படாவிடினும் பரவாயில்லை. தமிழினத்தை அழிக்க நினைப்பவர்களுக்க துணைநிற்பதையும், இனப்பிரச்சனைத் தீர்விற்குத் தடையாயிருப்பதையும் இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தியத் தூதரகங்களின் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

எதிரி யாரால் பலப்பட்டிருக்கிறான் என்று வ.ஐ.ச.ஜெ புரியாமல் இருக்கிறாரா?

இப்போது தொடரும் எழுச்சியை சட்டரீதியாகத் தொடர்வதும் இந்திய எதிர்ப்பில்லாமல் குறித்த இந்திய அரசியல் கட்சிகள் தொடர்பான விமர்சனமாகளை முதன்மைப் படுத்தவேண்டும். இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல இந்திய மீனவர்களையும் கொல்வதையும் நிறுத்து பதிரிகையாலரைக் கொல்லாதே என்கிற வகையில் அணுகுமுறையை விரிவுபடுத்துவது அவசியம். தமிழக எழுச்சியை சட்ட ரீதியாக்கி நான்குமாதம் நாம் தாக்குப் பிடித்துக் காத்திருந்தால் வழி பிறக்கும் என்று நம்புகிறேன்.

உண்மை!!!

:icon_idea::rolleyes:<_<

இந்திய அரசங்க தலைவர்களுடந்தான் எமக்கு பிரச்சினை இந்திய அரசுடன் இல்லை என்பதுதான். அரசாங்கம் மற்றும். பலஸ்தீனியருக்கும் இஸ்ரவேலருக்கும்போல எமக்கும் சிங்களவருக்கும் இடையிலான பகமையும் தலைவர்கள் அரசாங்க மட்டங்களையும் தாண்டியது. நாமும் பலஸ்தீனர்கள் இஸ்ரவேல் அரசை நிராகரிப்பதுபோல இணைந்த இலங்கை அரசை நிராகரிக்கிறோம். அதனால் நாம் அடிப்படையில் இலங்கை அரசை நிராகரித்தே போராடுகிறோம். இந்தியா பொறுத்து இந்திரா-எம்ஜிஆர் அரசாங்கங்கள் எமக்கு பாதகம் இல்லாமல் இருந்தன. அதன் பின்னர் வந்த சில அரசாங்கங்கள் எமக்கு பாதகமாக செயல் பட்டன. எனவே எமது போராட்டம் அடிப்படையில் இலங்கை அரசுக்கும் மக்ந்த அரசாங்கத்துக்கு மட்டுமன்றி இலங்கை அரசுக்கே எதிரானது. ஆனால் இந்தியாவைப் பொறுத்து குறித்த கட்ச்சி அரசாங்கத்துடந்தான் எமக்கு பிரச்சினை. இந்திய அரசுடன் பிரச்சினை எமக்குப் இல்லை. எனவே போராட்டங்கள் இந்த அடிப்படையிலேயே வகுக்கப் பட வேண்டும்

தற்போதைய இந்திய மத்திய அரசுடன் எமக்கு கடுமையான மனக்கசப்பு இருந்த்தாலும், எமது விடுதலைப்போர் இந்திய நலனுக்கோ ஒருமைப்பாட்டுக்கோ எதிரானதல்ல என்பதை இந்திய மக்களுக்கு தெளிவாக்கும் விதத்தில் இந்தியாவில் எமக்காக நடத்தப்படும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது முக்கியம்.

ஈழத்தமிழர்களின் விடிவுக்காக மட்டும் அல்லாது தமிழக மீனவர்களின் உயிர்களை காக்கவும், மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சிங்கள அரசால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படும் பத்திரிகை சுதந்திரத்தை காக்கவும் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இவை என இந்திய மக்களுக்கு தெளிவு படுத்துவது, தமிழகத்தில் தற்போது நடத்தப்படும் போராட்டங்கள் மீது சேறு வாரி வீசும் தங்கபாலு போன்ற கேடிகளின் வாயை அடைக்கவும், மிதவாதிகளையும் பல பத்திரிகை நண்பர்களையும் நம் பக்கம் இழுக்கவும் உதவும்.

அப்போது உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவுகளையும் எந்த கொம்பனாலும் வாங்கிவிட முடியாது.

இந்தியாவின் நீதிநிர்வாக அமைப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதை புரிந்து கொள்வோம்!!!

If You Fail to Plan, You Plan to Fail

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் அமைதி கடைப்பிடிப்பு, பின்னகர்வு போன்றவற்றின் பலாபலன்களை இப்போது எங்களால் உணரக்கூடியதாக இருக்கின்றது.

இதை மரணவெறிபிடித்த ஸ்ரீலங்கா அரசு பயங்கரவாதிகளும் இப்போது அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள், அதன் வெளிப்பாடே இன்றைய இவர்களின் சர்வதேசம் நோக்கிய சீற்றத்தின் தோற்றம்.

இந்த வெளிப்பாடுதான் இன்று இந்திய ஆளும் அரசகூட்டத்தையும் திணறவைத்துள்ளது.

இப்படிப்பட்ட அனுகூலங்களை திசைதிருப்பு முகமாக பலதரப்பட்ட கவர்சியான செய்திகளை இனிமேல் அதிகமாக எங்களால் காணக்கூடியதாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.