Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் மடல்! - பிரதமர் ருத்ரகுமாரன் அறிக்கை .

Featured Replies

இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம்.

தமிழக தோ்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை:

எமது பேரன்புக்கும் பாசத்துக்;குமுரிய தமிழக மக்களே!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எமது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம். இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் உங்கள் தொப்புள்கொடி உறவுகளாக வாழும் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம். ’தானாட மறந்தாலும் தசையாட மறக்காது’ என்பார்கள். உங்களைத்தவிர நமது மக்களின் சோகத்தையும் அவலத்தையும் நாம் யார்க்கெடுத்துரைப்போம்?

நேசத்துக்குரிய தமிழக மக்களே!

நாகரீக உலகை அதிரச் செய்த பெரும் இனப்படுகொலைக்கு ஈழத் தமிழ் மக்கள் ஆளாகியதை நீங்கள் நன்கறிவீர்கள். இந்த இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தில் 80,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே சிங்களத்தால் கொல்லப்பட்டார்கள். வீதிகளில், வீடுகளில், பள்ளிக்கூடங்களில், வழிபாட்டுத்தலங்களில், மருத்துவமனைகளில், திருமணவீடுகளில், இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டார்கள். நடக்கும்போது கொல்லப்பட்டார்கள். படிக்கும்போது கொல்லப்பட்டார்கள். உண்ணும்போது கொல்லப்பட்டார்கள். உறங்கும்போது போது கொல்லப்பட்டார்கள். கூடும்போதும் கொல்லப்பட்டார்கள். ஓடும் போதும் கொல்லப்பட்டார்கள். இயற்கை கழிக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். இயலாது இருக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக்; கொழுத்துவதைப்போல – மூட்டைப்பூச்சிகைள தட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்து காலால் நசுக்குவதைப்போல - நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்று கடற்கரையோரத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.

அதுவும் 21 ஆம் நூற்றாண்டில், நவீன ஊடக உலகம் 24 மணிநேரமும் விழிமூடாது பார்த்திருக்கும் காலத்தில், உலகின் 600 கோடி மக்களின் கண்களின் முன்னால், இந்திய உபகண்டத்தில் தமிழகத்துக்கு அருகாமையில் இப் பெரும் இனப்படுகொலையில் இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அண்டையில், ஜனநாயகப் பாரம்பரியம் கொண்ட 120 கோடி மக்களின் முன்னால் இக் கோரதாண்டவத்தை ஆட சிங்களத்தால் முடிந்திருக்கிறது.

இது இராணுவ உத்தியின் வெற்றி அல்ல. சிங்கள வீரத்தின் வெற்றியுமல்ல. இனப்படுகொலையின் வெற்றி. மக்களைத் தங்குதடையின்றி, மிகப் பெரும் தொகையில் கொன்று குவிக்க முடிந்தமையின் வெற்றி. எந்த அரசு இந்த மக்களைத் தமது சொந்த மக்கள் என்று உரிமை கொண்டாடியதோ அந்த அரசே அந்த நிராயுதபாணியான மக்களை எறிகணைகளாலும், போர் விமானங்களாலும், யுத்த டாங்கிகளாலும் கொன்று குவித்துப் பெற்ற வெற்றி. இப்படியான அபகீர்த்தி உடைய ஒரு வெற்றியைத்தான் தமது வரலாற்றுப் பெரும் வெற்றியென மீசை முறுக்குகிறது சிங்களம்.

இராணுவ அர்த்தத்தில் இது ஒரு கோழைத்தனம் என்றாலும் கூட அரசியல் இராஜதந்திர அர்த்தத்தில் சிங்களம் வெற்றி பெற்றிருக்கிறது. உண்மையில் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்தது சிங்களமும் சீனாவும்தான். தோல்வியடைந்தது இந்தியாவும் ஈழத் தமிழர்களும். தொப்புள் கொடி உறவுகளான இந்திய மக்களையும் ஈழத் தமிழர்களையும் பிரிப்பதில் சிங்களத் தலைவர்களும் இராஜதந்திரிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இது நம்மிரு தரப்பினருக்கும் பெரும் இழப்பாகும். இந்த இழப்புக்கள் நடந்து முடிந்தவை மட்டுமல்ல, எமது உறவு ஒட்டப்படாவிட்டால் இனியும் தொடர்ந்து நடக்கக்கூடியவையும்கூட.

இனி இந்த உறவை ஒட்டப்போவது யார் என்பதே இப்போதய கேள்வி. இப் பணி முதலில் தமிழக மக்களையும் அடுத்து இந்திய மக்களையும் தலைவர்;களையும் இராஜதந்திரிகளையும் சாரும். இதற்கான தொடக்கப் புள்ளியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுக்கும் இவ் வேண்டுதலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த காலத்தை ஒரு தடவை திருப்பிப் பார்ப்போம். இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது ஈழத் தமிழர் தேசம் பெருந்துயரில் ஆழ்ந்து போனது. மக்கள் தாமாகவே வீடுகளெங்கும், வீதிகளெங்கும் கறுப்புக் கொடிகளும் கண்ணீருமாக தமது வணக்கத்தை செலுத்தி நின்றார்கள். இதேபோல் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் மறைவின் போதும் ஈழத் தமிழர் தேசமே பெருந்துயரில் தோய்ந்து போனது. காந்தி, நேரு போன்ற இந்தியப் பெரும் தலைவர்களின் படங்கள் ஈழத் தமிழர் வீடுகளில் மாட்டப்பட்டிருந்த காலம் நம் கண் முன்னாலேயே இருந்தது. இப்படியாக இந்திய மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் இடையே பாரம்பரிய நட்புறவு இருந்து வந்தமையினை நாமெல்லோரும் அறிவோம்.

இத்தகையதொரு உறவில் விரிசல் வந்தமை தற்செயலானதல்ல. சிங்கள இராஜதந்திரத்தின் வலைக்குள் இந்தியாவும் ஈழத்தமிழர்களும் சிக்குண்டு பாரிய தோல்விக்கும் பெருந்துயருக்கும் உள்ளாகியிருக்கிறோம். இந்த இராஜதந்திரவலைக்குள் இரு தரப்பினரையும் முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான் இழுத்தி வீழ்த்தி சிக்குண்ட வைத்தார் என்பது ஒரு கசப்பான வரலாற்;றுப் பேருண்மையாகும்.

2400 ஆண்டுக்கு மேலாக சாணக்கிய இராஜதந்திர பாரம்பரியம் கொண்ட இந்திய இராஜதந்திரமும், தொன்மையும் செழிப்பும் மிக்க தமிழ் நாகரிகமும் இங்கு தோல்வி கண்டன. இதனை இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் டிக்சித் தனது Assignment Colombo எனும் நூலில் ஒப்புக் கொள்கிறார். ஜே. ஆர் தம்மை ஏமாற்றிவிட்டார் எனக் கூறும் டிக்சித், பைபிளில் வரும் ’நான் பெரும் பாவி’ எனும் அர்த்தத்தைத் தரக்கூடிய லத்தின் சொல்லாகிய ’Mea Culpa’ எனும் பாவமன்னிப்புக் கோரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தமது தோல்வியை ஒப்புக்கொள்கிறார். இதுவே பிற்காலத்தில் நம் இரு தரப்புகளும் கண்ட தோல்விகளுக்கு அடிப்படையானதாக அமைந்தது.

இது மட்டுமன்றி, சிங்களம் இந்தியாவை எப்போதும் தனக்கு அச்சுறுத்தலாகத்தான் நோக்குகிறது. தமிழர்களை இந்திய விரிவாக்கத்தின் குறியீடாகத்தான் பார்க்கிறது. இந்தியாவிலிருந்து காலத்துக்கு காலம் படையெடுப்புகளும் பண்பாட்டு விரிவாக்கமும் ஏற்பட்டு வந்த பின்னணியில் சிங்களவர்களிடம் இந்திய எதிர்ப்புவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளது. இந்நிலையில் தமிழர்களை இந்திய ஆதிக்க விஸ்தரிப்பின் கருவிகளாக நோக்கும் மனநிலையினை சிங்களவர்கள் கொண்டுள்ளனர். இத்தகைய பண்டைய சிந்தனையைக் கொண்ட மகாவம்ச இதிகாச மயக்கத்தினுள் சிங்களம் தோய்ந்து போயுள்ளது. இம் மனப்பாங்கைக் கொண்ட சிங்கள இனம் தமிழர்களுக்கு எதிராகத் தொடுத்த போரை உண்மையில் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் எதிராக நடாத்திய போராக தமிழ் ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவின் பெயராலேயே சிங்கள ஆட்சியாளர்களால் கொன்று குவிக்கப்பட்டும் சிறுமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர் என்ற கருத்து ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியதொன்று.

இன்று ஈழத்தமிழ் மண் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பகுதியாகவே உள்ளது. அது இராணுவத்தினருக்குப் போகபூமியாகவும் தமிழ் மக்களுக்கு நரகபூமியாகவுமே காட்சியளிக்கிறது. இராணுவத்தினர், கடற்படையினர், காவற்துறையினர், துணைப்படையினர் எனத் தமிழ் மண்ணில் நிலை கொண்டுள்ள ஆயுதப்படையினரின் தொகையை மொத்தத் தமிழ் குடும்பங்களின் தொகையால் வகுத்தால் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆயுதப்படையினன் என்ற வீதத்தில் ஈழத் தமிழ்மண் மொத்த இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மை பச்சையாகப் புலப்படும். எந்நேரத்திலும் இராணுவத்தால் மக்கள் இம்சைப்படுத்தக்கூடியவகையிலான இராணுவ ஆட்சியே அங்கு நிலவுகிறது. இன்னும் சில வருடங்கள் தாமதித்தால் இலங்கைத்தீவில் முழுத் தமிழ் மண்ணும் சிங்களமயப்பட்டுவிடும் ஆபத்து துல்லியமாக உள்ளது. அவ்வாறு ஈழத் தமிழ் மண் சிங்களமயமாகி விட்டால் இலங்கைத்தீவு முழுமையாக தமிழக, இந்திய எதிரி நாடுகளின் கொல்லைப்புறமாக மாறிவிடும் ஆபத்தும் அதேயளவு துல்லியமானதாக உள்ளது.

அன்புக்குரியவர்களே!

உலகில் ஒரு மக்கள் கூட்டம் சுதந்திரமாக வாழ்வதா அல்லது அடிமைகளாக வாழ்வதா என்பதை உள்நாட்டு நிலைமைகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. உலக அரசுகள் அதுவும் சக்தி மிக்க அரசுகள் ஒரு பிரச்சினையில் எடுக்கும் முடிவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் எதிர்காலத்தை தீர்மானித்து விடுகின்றன. ஈழத் தமிழ் மக்களாகிய நாம் இன்று சிங்களத்திடம் தோல்வியடைந்து சிறுமைப்படுவதற்கும் உலக அரசுகள் எடுத்த முடிவுகளே முக்கிய காரணம். இது ஈழத் தழிழ் மக்களின் தோல்வி மட்டுமல்ல தமிழக மக்களின் தோல்வியும்கூடத்தான் என்பதனையும் உங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம்.

இதனால் இந்நிலையினை மாற்றியமைத்து இந்தியா உட்பட உலக அரசுகளின் ஆதரவினை நமது பக்கம் வென்றெடுப்பதனைத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் முக்கியமானது என நாம் கருதுகிறோம். அதேவேளை சுயநலன்கள் என்ற அச்சில் சுழலும் இன்றைய உலக ஒழுங்கில் நியாய தர்மங்களை விட உலக அரசுகளின் நலன்களே வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டிருக்கின்றன என்பதனையும் நாம் நன்கு அறிவோம்.

உலக அரசுகளை நம் பக்கம் வென்றெடுப்பதற்கு தமிழக மக்களின் முதன்மைப் பாத்திரம் இன்றியமையாதது என்பதனை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இதேவேளை உள்நாட்டு நிலைமைகள் ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்தனையும் நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.

இத்தகைய ஒரு சூழலில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் தமிழகத்துக்கு மிக முக்கிமான பங்கு உண்டு. ஈழத் தமிழர் தேசத்தை விழுங்கி விடத் துடிக்கும் சிங்கள இனவாதப்பூதத்திடம் இருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தமிழக மக்களிடத்தில், தமிழக அரசியற் தலைவர்களிடம் உள்ளது என்பதனயும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

சுதந்திரத் தமிழீழம் என்ற தனியரசு இலங்கைத்தீவில் அமைக்கப்படுவதே ஈழத் தமிழ், தமிழக, மற்றும் இந்திய மக்களது நலன்களை ஒரேநேர்கோட்டில் சந்திக்க வைக்கக்கூடியது என்பதனையும் உறுதியாக வெளிப்படுத்த விரும்புகிறோம்.

இத்தகையதொரு வரலாற்றுச் சூழலில், இன்றைய தேர்தல் காலத்தில் நாம் சில வேண்டுதல்களை முன்வைக்கிறோம். எம்மால் முன்வைக்கப்பட்டிருக்கும் பின்வரும் கோரிக்கைகளுக்கு தமிழகக் கட்சிகளும் மக்களும் ஆதரவு வழங்க வேண்டுமென மனதார வேண்டிக் கொள்கிறோம்.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய முடியும் என்பதனை வலியுறுத்தியும் தமிழீழத் தனியரசினை அங்கீகரித்தும் தற்போதைய தேர்தலில் தெரிவு செய்யப்படும் தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்தல்.

சிறிலங்கா அரசின் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசினை வலியுறுத்தும் வகையில் தமிழகச் சட்டசபையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றச் செய்தல்.

சுதந்திரத் தமிழீழ அரசினை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில் இந்திய அரசிடம் முன்வைத்து அதனை வென்றெடுப்பதற்காகச் செயற்படல்.

தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வு உறுதிப்படுத்தப்படுவதுடன் இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் ஈழத் தமிழ் மக்களுக்கும் வழங்கப்படுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி தமிழக மற்றும் இந்தியச் சிறைக்கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைத்திருக்கப்படும் தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கு மாநில, மத்திய அரசுகளைத் தூண்டுதல்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை மீளக்கட்டியெழுப்பப் படுவதற்குத் தேவையான உதவிகள் மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும் மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுத்தல்.

துயர் தோய்ந்த எமது ஈழத் தமிழர் பிரச்சினையினை தேர்தற்களத்தில் முதன்மைப்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான கௌரவமான வாழ்வுக்கு தோள்கொடுப்பீர்கள் என்ற மேலான நம்பிக்கையுடன் தங்களின் மேலான கவனத்துக்கு இதனைப் பணிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.

நன்றி

என்றும் அன்புடன்

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

.face book l irunthu....

என்ன சொல்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசினை வலியுறுத்தும் வகையில் தமிழகச் சட்டசபையில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றச் செய்தல்.

'அகூதா' அண்ணாவும் நெல்லையும் இதற்கு வித்தியாசமான விளக்கம் அளிக்கக்கூடும்.ஆயினும் 'முகாமைத்துவத்தில் நீண்ட காலம் அனுபவம் உள்ள படியால் சில விளக்கங்களை அவர்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன்.

முதலில், நாங்கள் ஒரு 'நோக்கத்தை'(Objective ) வரையறுக்கும் போது, அதை எம்மால் அடைய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.இது வரை காலமும், இந்தியாவை அனைத்துச் செல்வதால் எமது நோக்கத்தை அடைய முடியும் என்ற ஒரு கருத்து இருந்தது.இதைத் தான் எமது தலைவரும் திரும்பத் திரும்பக் கூறினார்.இதை அவர் நம்பினாரா என்பது விவாதத்துக்கு உரிய ஒன்று.ஆனால், ,முள்ளி வாய்க்காலில் நடந்ததை நாம் அறிவோம்.'இந்தியா' ஒரு போர்க்குற்றவாளி. இது வரை, இந்தப் போர்க் குற்றங்களை மறைக்கவும், அது சர்வ தேசத்தின் கவனத்திற்கு வராமல் தடுக்கவும் இந்தியா படாத பாடு பட்டிருக்கின்றது.லிபியாவில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதற்கு சில மணித்தியாலங்களே தேவைப் பட்டது.'ஐவோரி கோஸ்ட் ' இல் பிரெஞ்சுப் படைகள் இறங்குவதற்கு சில நாட்களே தேவைப்பட்டது.இந்தியாவின் ராஜதந்திரமான காய் நகர்த்தல்களே, எங்கள் மக்கள் துடி துடிக்கக் கொல்லப் படவும், உயிரோடு புதைக்கப் படவும் காரணமாக அமைந்தது.இது இந்தியாவுக்கும், சர்வ தேச சமூகத்திற்கும் நன்றாகவே தெரியும்.இந்த நிலையில் இந்தியா எவ்வாறு, எந்த வகையில் போர்க் குற்றங்களை விசாரிக்க உதவி செய்யும்? நாங்கள் இந்தியாவை அதன் காந்தீய முக மூடியுடன் பார்த்தோம்.அதற்காகப் பாரிய விலையையும் கொடுத்தோம்.

ஒரு வேளை, தனது நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியா எமக்கு உதவ முன் வந்தாலும், சர்வதேத்தின் முன் போர்க் குற்றங்களை எடுத்துச் செல்ல, இந்தியாவின் உதவியை நாடுவது சரி போல எனக்குத் தெரியவில்லை.ஒரு மிகச் சிறிய நாடான இலங்கை, இந்தியாவை ஆட்டி வைக்க முடியுமானால் நாங்கள் ஏன் இந்தியாவையும் சர்வ தேச நீதி மன்றத்துக்கு இழுக்கக் கூடாது.எங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை.ஆனால் 'அஹிம்சை' முகமூடியும் காந்தீய முக மூடியும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.இந்த வழியில் போனால், இந்தியா எமக்கு உதவ வாய்ப்பு உண்டு.இந்தியா என்றைக்குமே ஒரு எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதில்லை.முதலில் எங்கள் நோக்கங்களில் தெளிவு இருக்க வேண்டும்.'இளிச்ச வாயர்களாக' நாங்கள் இருப்பதால் தான் எங்கள் மீது, எங்கள் இனத்தின் மீது எல்லோரும் குதிரை ஓடுகின்றார்கள்.

இதில் ஏதாவது பெரிய 'ராஜ தந்திரம்' மறைந்திருந்தால் என்னை மன்னிக்கவும்!

மற்றவர்கள் மனம் கோணாது வாழ்ந்த படியால் தான் இன்றைக்கு எமக்கு இந்த நிலை.எம் பக்கம் நியாயம் இருக்கின்றது.அதை உலகத்தின் முன் 'தெளிவாக'எடுத்துச் செல்வோம்.இதையே புலம் பெயர் தமிழர்கள் பலர் செய்தார்கள்.முள்ளி வாய்க்காலில் உறவுகள் கொல்லப் பட்ட போது, அவர்கள் எவ்வாறு துடித்தார்கள் என்பதைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.ஏன்? தீயில் கூட எரிந்தார்கள். இதை விட அவர்கள் என்ன செய்திருக்க முடியம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுகவும், அதிமுக ரெண்டுமே கள்ள கூட்டம் வேற ஆருமே அங்க வரமுடியாது, இந்த கள்ள கூட்டம் சொல்ல போற பொய்யை மீண்டும் நம்பிக்கொண்டு முதலில் இருந்து வர போகினமோ? தமிழகத்தால் எதுவும் முடியாது என்பதுதான் காலம் எமக்கு கற்று தந்த பாடம், அரசிலுக்கு வேணுமென்றால் கொஞ்ச காலம் ஓட்டலாம். உதை விட இந்தியாவின் அதிகார வர்கத்துடம் ராஜதந்திர முறையில் பேசிப்பார்கலாம், உள்ளால பேசிகொண்டு போற்குற்ற விசாரனைக்குள் இந்தியாவை இழுக்க வேணும், இந்தியாவை உதில் இருந்து விடுறது என்றால் எம்மக்களுக்கு சுபிற்சமான ஒரு தீர்வை இந்தியா வலியுறுத்தி இலங்கையை செய்ய சொல்ல வேண்டும், பேச்சு வார்த்தையை ஒரு அமைப்பும், இந்தியாவை போர்குற்ற விசாரனைகளுக்குள் இழுப்பதை வேறு ஒரு அமைப்பும் செய்ய வேண்டும் ஒரு அமைப்பே டபிள் கேம் ஆடுகிறது என்ற எண்ணத்தை உருவாக்கி விடக்கூடாது. அதையே இலங்கைக்கும் செய்யலாம். வெறும் அறிக்கைகள் பயன் தர போவது இல்லை, சொல்லுக்கு முன் எப்போது செயல் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நாடு கடந்த அரசாங்கதிற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 10,000 ....

சித்தனின் கருத்தே எனது கருத்தும். ஏறத்தாள நாட்பதினாயிரம் படுகொலைகளுக்கு ,இந்தியாவின் ஆளும் வர்க்கம் மட்டுமல்ல முழு இந்தியாவும் பதில் சொல்லவேண்டும். நாராயணன்,நம்பியார் போன்றவர்கள் 'நுரம்பெர்க்; நீதிமன்றம் போன்ற ஒரு நீதிமன்றத்தில் தோன்ற வேண்டும்! இந்தக் கறை நீக்க முடியாத கறையாகப் பாரதத்தின் வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

'அகூதா' அண்ணாவும் நெல்லையும் இதற்கு வித்தியாசமான விளக்கம் அளிக்கக்கூடும்.ஆயினும் 'முகாமைத்துவத்தில் நீண்ட காலம் அனுபவம் உள்ள படியால் சில விளக்கங்களை அவர்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன்.

முதலில், நாங்கள் ஒரு 'நோக்கத்தை'(Objective ) வரையறுக்கும் போது, அதை எம்மால் அடைய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.இது வரை காலமும், இந்தியாவை அனைத்துச் செல்வதால் எமது நோக்கத்தை அடைய முடியும் என்ற ஒரு கருத்து இருந்தது.இதைத் தான் எமது தலைவரும் திரும்பத் திரும்பக் கூறினார்.இதை அவர் நம்பினாரா என்பது விவாதத்துக்கு உரிய ஒன்று.ஆனால், ,முள்ளி வாய்க்காலில் நடந்ததை நாம் அறிவோம்.'இந்தியா' ஒரு போர்க்குற்றவாளி. இது வரை, இந்தப் போர்க் குற்றங்களை மறைக்கவும், அது சர்வ தேசத்தின் கவனத்திற்கு வராமல் தடுக்கவும் இந்தியா படாத பாடு பட்டிருக்கின்றது.லிபியாவில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதற்கு சில மணித்தியாலங்களே தேவைப் பட்டது.'ஐவோரி கோஸ்ட் ' இல் பிரெஞ்சுப் படைகள் இறங்குவதற்கு சில நாட்களே தேவைப்பட்டது.இந்தியாவின் ராஜதந்திரமான காய் நகர்த்தல்களே, எங்கள் மக்கள் துடி துடிக்கக் கொல்லப் படவும், உயிரோடு புதைக்கப் படவும் காரணமாக அமைந்தது.இது இந்தியாவுக்கும், சர்வ தேச சமூகத்திற்கும் நன்றாகவே தெரியும்.இந்த நிலையில் இந்தியா எவ்வாறு, எந்த வகையில் போர்க் குற்றங்களை விசாரிக்க உதவி செய்யும்? நாங்கள் இந்தியாவை அதன் காந்தீய முக மூடியுடன் பார்த்தோம்.அதற்காகப் பாரிய விலையையும் கொடுத்தோம்.

ஒரு வேளை, தனது நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியா எமக்கு உதவ முன் வந்தாலும், சர்வதேத்தின் முன் போர்க் குற்றங்களை எடுத்துச் செல்ல, இந்தியாவின் உதவியை நாடுவது சரி போல எனக்குத் தெரியவில்லை.ஒரு மிகச் சிறிய நாடான இலங்கை, இந்தியாவை ஆட்டி வைக்க முடியுமானால் நாங்கள் ஏன் இந்தியாவையும் சர்வ தேச நீதி மன்றத்துக்கு இழுக்கக் கூடாது.எங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை.ஆனால் 'அஹிம்சை' முகமூடியும் காந்தீய முக மூடியும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.இந்த வழியில் போனால், இந்தியா எமக்கு உதவ வாய்ப்பு உண்டு.இந்தியா என்றைக்குமே ஒரு எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதில்லை.முதலில் எங்கள் நோக்கங்களில் தெளிவு இருக்க வேண்டும்.'இளிச்ச வாயர்களாக' நாங்கள் இருப்பதால் தான் எங்கள் மீது, எங்கள் இனத்தின் மீது எல்லோரும் குதிரை ஓடுகின்றார்கள்.இதில் ஏதாவது பெரிய 'ராஜ தந்திரம்' மறைந்திருந்தால் என்னை மன்னிக்கவும்!

மற்றவர்கள் மனம் கோணாது வாழ்ந்த படியால் தான் இன்றைக்கு எமக்கு இந்த நிலை.எம் பக்கம் நியாயம் இருக்கின்றது.அதை உலகத்தின் முன் 'தெளிவாக'எடுத்துச் செல்வோம்.இதையே புலம் பெயர் தமிழர்கள் பலர் செய்தார்கள்.முள்ளி வாய்க்காலில் உறவுகள் கொல்லப் பட்ட போது, அவர்கள் எவ்வாறு துடித்தார்கள் என்பதைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.ஏன்? தீயில் கூட எரிந்தார்கள். இதை விட அவர்கள் என்ன செய்திருக்க முடியம்?

எனது கருத்தும் நிலையும் இதுதான்

ஆனால் தலைவராலேயே முடியாத ஒன்றை யார் பொறுப்பெடுத்து செய்யப்போகின்றார்கள்.........??????????????????????? :(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்தும் நிலையும் இதுதான்

ஆனால் தலைவராலேயே முடியாத ஒன்றை யார் பொறுப்பெடுத்து செய்யப்போகின்றார்கள்.........??????????????????????? :(:(:(

அப்போது இல்லாத ஒரு வலிமையான ஆயுதம் இப்போது எங்களிடம் இருக்கிறது, அதுதான் இந்தியா இலங்கையுடன் கூட்டு சேர்ந்து செய்த போர் குற்ற ஆயுதம், ஆயுதத்தை எப்படி பாவிக்கிறோம் என்பதில்தான் நம் வெற்றி இருக்கிறது.

உண்மைதான்

ஆயுதம் கூர்மையானதும் பலமானதும்தான்

அதைக்கொடுத்தவரும் பலமாகத்தான் கொடுத்தார்

ஆனால் அதைப்பிடிக்கும் கைகள் தான் பலவீனமாக உள்ளன. அல்லது தனித்து நிற்கின்றன.

பலம் சேர்ப்போர் அல்லது கரம் கொடுப்போர் உணர்வாரோ...?

Edited by விசுகு

'அகூதா' அண்ணாவும் நெல்லையும் இதற்கு வித்தியாசமான விளக்கம் அளிக்கக்கூடும்.ஆயினும் 'முகாமைத்துவத்தில் நீண்ட காலம் அனுபவம் உள்ள படியால் சில விளக்கங்களை அவர்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன்.

முதலில், நாங்கள் ஒரு 'நோக்கத்தை'(Objective ) வரையறுக்கும் போது, அதை எம்மால் அடைய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.இது வரை காலமும், இந்தியாவை அனைத்துச் செல்வதால் எமது நோக்கத்தை அடைய முடியும் என்ற ஒரு கருத்து இருந்தது.இதைத் தான் எமது தலைவரும் திரும்பத் திரும்பக் கூறினார்.இதை அவர் நம்பினாரா என்பது விவாதத்துக்கு உரிய ஒன்று.ஆனால், ,முள்ளி வாய்க்காலில் நடந்ததை நாம் அறிவோம்.'இந்தியா' ஒரு போர்க்குற்றவாளி. இது வரை, இந்தப் போர்க் குற்றங்களை மறைக்கவும், அது சர்வ தேசத்தின் கவனத்திற்கு வராமல் தடுக்கவும் இந்தியா படாத பாடு பட்டிருக்கின்றது.லிபியாவில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதற்கு சில மணித்தியாலங்களே தேவைப் பட்டது.'ஐவோரி கோஸ்ட் ' இல் பிரெஞ்சுப் படைகள் இறங்குவதற்கு சில நாட்களே தேவைப்பட்டது.இந்தியாவின் ராஜதந்திரமான காய் நகர்த்தல்களே, எங்கள் மக்கள் துடி துடிக்கக் கொல்லப் படவும், உயிரோடு புதைக்கப் படவும் காரணமாக அமைந்தது.இது இந்தியாவுக்கும், சர்வ தேச சமூகத்திற்கும் நன்றாகவே தெரியும்.இந்த நிலையில் இந்தியா எவ்வாறு, எந்த வகையில் போர்க் குற்றங்களை விசாரிக்க உதவி செய்யும்? நாங்கள் இந்தியாவை அதன் காந்தீய முக மூடியுடன் பார்த்தோம்.அதற்காகப் பாரிய விலையையும் கொடுத்தோம்.

ஒரு வேளை, தனது நலன்களைக் கருத்தில் கொண்டு இந்தியா எமக்கு உதவ முன் வந்தாலும், சர்வதேத்தின் முன் போர்க் குற்றங்களை எடுத்துச் செல்ல, இந்தியாவின் உதவியை நாடுவது சரி போல எனக்குத் தெரியவில்லை.ஒரு மிகச் சிறிய நாடான இலங்கை, இந்தியாவை ஆட்டி வைக்க முடியுமானால் நாங்கள் ஏன் இந்தியாவையும் சர்வ தேச நீதி மன்றத்துக்கு இழுக்கக் கூடாது.எங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை.ஆனால் 'அஹிம்சை' முகமூடியும் காந்தீய முக மூடியும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.இந்த வழியில் போனால், இந்தியா எமக்கு உதவ வாய்ப்பு உண்டு.இந்தியா என்றைக்குமே ஒரு எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதில்லை.முதலில் எங்கள் நோக்கங்களில் தெளிவு இருக்க வேண்டும்.'இளிச்ச வாயர்களாக' நாங்கள் இருப்பதால் தான் எங்கள் மீது, எங்கள் இனத்தின் மீது எல்லோரும் குதிரை ஓடுகின்றார்கள்.

இதில் ஏதாவது பெரிய 'ராஜ தந்திரம்' மறைந்திருந்தால் என்னை மன்னிக்கவும்!

மற்றவர்கள் மனம் கோணாது வாழ்ந்த படியால் தான் இன்றைக்கு எமக்கு இந்த நிலை.எம் பக்கம் நியாயம் இருக்கின்றது.அதை உலகத்தின் முன் 'தெளிவாக'எடுத்துச் செல்வோம்.இதையே புலம் பெயர் தமிழர்கள் பலர் செய்தார்கள்.முள்ளி வாய்க்காலில் உறவுகள் கொல்லப் பட்ட போது, அவர்கள் எவ்வாறு துடித்தார்கள் என்பதைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.ஏன்? தீயில் கூட எரிந்தார்கள். இதை விட அவர்கள் என்ன செய்திருக்க முடியம்?

1+

உருத்திரகுமரனின் ராஜதந்திர அறிக்கையை முதலில் பாராட்டும் அதேவேளை,

தமிழீழ மக்கள் ஹிந்திய அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கைளை எப்போதும் மறக்கமாட்டார்கள் என்பதையும் இந்த அறிக்கையைப் பார்த்து துள்ளிக் குதிக்கும் ஒருசிலர் கவனத்தில் கொண்டால் நலம்.

ஈழத் தமிழருக்கு இந்தியக் காட்டுமிராண்டிகளின் ஆதரவே தேவை என மீண்டும் உற்சாகம் பெற்று உளற முற்படும் இந்திய அரச பயங்கரவாதிகளின் அடிவருடிகளும்,

ஈழத் தமிழர் மீண்டும் இந்தியக் காட்டுமிராண்டிகளின் ஆதரவை நாடுகிறார்களே என மீண்டும் குழப்பம் அடைந்து உளற முற்படும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் அடிவருடிகளும்,

தமிழீழ மக்கள் ஹிந்திய - சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கைளை எப்போதும் மறக்கமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டால் நலம்.

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள அரச பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கைளை எப்போதும் மறக்கமாட்டார்கள் என்பதை அடிவருடிகள் கவனத்தில் கொண்டால் நலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.