Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

GTV?.....

Featured Replies

மனிதநேய செயற்பாட்டளாரின் கைதும் கே. பியின் தலையீடும்

gtv_logo.jpg

பிரித்தானியாவில் மனித நேய நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டு வந்தவரான திருமதி. வாசுகி கருணாநிதி என்பவர் அவசரத் தேவை நிமித்தம் இலங்கைக்கு தனது மகளுடன் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வர முற்பட்ட வேளையில் ஒகஸ்ட 6ம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குப் பெயர் போன கொழும்பு 4-ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வாசுகி பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் என்பதால் இவரது கைது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதித் தூதுவர் இலங்கை வெளிநாட்டமைச்சருடன் தொடர்பு கொண்டிருந்தார். ஐந்து நாட்களில் இவர் விடுதலை செய்யப்படுவார் என இலங்கை வாக்குறுதி அளித்திருந்தும் இக்குறிப்பு எழுதும் வரை அவர் விடுதலை செய்யப்படவில்லை.

பிரித்தானியாவில் உள்ள வாசுகியின் நண்பர்கள் வாசுகியின் கைதுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து கே. பி எனப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் பத்மநாதான், வழக்கைத் தொடரந்துள்ளவர்களின் குடும்பத்தினருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வழக்கைக் கைவிடுமாறும், அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர் விடுதலைசெயய்யப்படுவார் என வேண்டிக் கொண்டதாகத் தெரியவருகிறது. இதற்கு அவர்கள் வாசுகியை விடுதலை செய்தால் வழக்கு தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும் என அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிய வருகிறது.

லண்டனில் வாழும் கருணைலிங்கம் என்பவர் மூலமாகவே கே.பி. வாசுகி குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டதாகவும், இரண்டு நிபந்தனைகளுக்கு அவர்கள் உடன்படுவார்களாயின் தம்மால் அவரை விடுவிக்க முடியும் என கருணைலிங்கமும் கேபியும் குறிப்பிட்டுள்ளனர். ஒன்று வழக்கை கைவிடுதல், அடிப்படை உரிமை வழக்கை கைவிடுதல், மற்றயது விடுதலையடைந்து லண்டன் திரும்பியதும், அவர் கைது செய்யப்பட்ட விபரங்களை மனிதவுரிமை அமைப்புகளுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வெளியிடக்கூடாது. இந்த நிபந்தனைகளை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனரா என்பது பற்றி அறிய முடியவில்லை.

சிறிலங்கா அரசபடைகளுடன் சேரந்தியங்கிவரும் கே.பி. கைதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது சிறிலங்கா புலனாய்வுத்துறையின் உயர் மட்டத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளமையும், இவ்விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது. கே.பியிற்கு உள்ளுர் முகவர்களாக கருணைலிங்கம் போன்றவர்கள் செயற்படுவதும் தெரிய வந்துள்ளது.

இது பற்றிய மேலதிக விபரங்களுடன் அடுத்த ஒரு பேப்பரில் சந்திக்கிறேன்.

ஊருளவாளி

http://www.orupaper....af%87%e0%ae%af/

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=90453&hl=&fromsearch=1

... எந்தப் புற்றில் ... எந்தப் பாம்போ!!!!!!!!???????? ... தொடர்ந்து அடிபடுவம்/கேள்வி கேட்பம்/... அப்போதான் உணமைகள் வெளிவரும் ... அதுவரை உந்த "ஒற்றுமை" என்ற கேடுகெட்ட வார்த்தை நமக்கு வேணாம்!!!

சுகிர்தகலா , இவரை பற்றி பலருக்கு தெரியாது . கொஞ்சம் தமிழ் வல்லமை கிடைத்துவிட்டால் எங்கள் சமூகத்தில் யாவரும் ஊடகவியலாளர்கள் தானே. ஐவரும் அன்று கமல் தனம் நாடுகடந்த அரசை கைப்பற்ற வகுத்த திட்டத்தில் ஒரு பங்காளி . ஒரு தேர்தலில் வாக்கு மூலம் வென்று காட்டாமல் கள்ள வாக்கு போட்டு பலரை கமல் தனம் கூட்டம் வெல்ல வைக்க எடுத்தட முயற்சிக்கு ஆதரவு தரும் பொழுதே புரிந்து இருக்க வேண்டும் இவர் எப்படியானவர் என்று. கடைசியில் அந்த முயற்சியில் தோற்று போய் வெளியேறிய யாவருக்கு இன்று கையில் இருக்கும் ஒரே ஆயுதம் அந்த பத்திரிகை. எழுதி தள்ளி கொண்டு இருக்கும் இவர்கள் பார்வையில் இவர்கள் மட்டுமே தேசிய பற்றாளர்கள் ! மீதி பலரும் தேச துரோகிகள் ! களத்தில் களமாடிய வீரர் கூட , லண்டன் இல் சொகுசாக வாழும் சுகிர்தகலாவுக்கு தேச துரோகிதான் !

அண்மையில் நான்தான் கள்ளவாக்கு போட்டேன் , அதுவும் தனம் கமலின் உத்தரவுபடி போட்டேன் என்று ஒருவர் ஹாரோ பகுதியில் நடந்த மக்கள் அரங்கத்தில் கூறிய பொது , வந்தது சுகிர்தகலாவுக்கு கோபம். அம்மா , ஏனம்மா ? ஏன் அந்த கோபம் ! அந்த வாலிபன் என்ன அப்படி சொல்லி விட்டான் ? நீங்கள் கள்ளவாக்கில் வந்தவர் என்றா ? இல்லையே. நான் கள்ளவாக்கு போட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் ஒருவர் அழிக்கும் பொது , அங்கே இருந்தவர்களில் ஒருவருக்கும் வராத அந்த கொதி இப்வருக்கு ஏன் வந்தது ? அன்றே புரிந்தது எனக்கு இந்த பெண்மணியின் கூத்து .

இன்று சுகிர்தகலாவின் ஒரே தொழில் எம்மிடையே பிளவுகளை வளர்த்து தானும் தனம் கமல் போன்றோரும் இன்றுவரை தமிழீழ போராட்டத்தின் பெயரில் செய்த வியாபாரத்தை தொடர்ந்து நடாத்த மக்களை அணி சேர்த்தல். சாதாரண மக்கள் என்னை போலவே பத்திரிகையையும் இணைய தளத்தையும் பார்த்து ஏமாறுபவர்கள் தானே ! தனம் யார் கமல் யார் , தலைமைச் செயலகம் என்றால் என்ன , கட்டமைப்பு என்ற பெயரில் சொத்துகளை யார் குவித்து வைத்து இருக்கிறார்கள் என்பது எல்லாம் யாருக்கு தெரியும் ?

இன்று சுகிரதகலா தாக்க தொடங்கி இருப்பது மாவீரர் நினைவேந்தல் அகவத்தை ! ஸ்கந்தா , சுகந்தகுமார் என்பவர்களுக்கும் இந்த நிகழ்வுக்கும் என்ன தொடர்பு என கேட்பவர் தனது அறிவை கொஞ்சம் வளர்த்து கொள்ளவேண்டும் ! வெறுமனே வாக்குக்காக கள்ளத்தனம் செய்யும் இவர்கள் , மக்கள் சேவையில் அன்று தொடக்கம் இன்றுவரை செவ்வனே செய்துவரும் உள்ளங்களை யார் என கேட்பது கேவலமே ! வெறும் பத்திரிகை கொஞ்சம் தமிழறிவு இருந்தால் தங்களை பெரும் மனிதர்களாக நினைந்து கொள்ளும் இந்த சிறுபிள்ளைத்தனம் கொண்ட ஊடகவியலாளர் ஒன்றை புரிந்து கொள்ளட்டும் ! இவரது முகத்திரையை கிழித்தால் மக்களின் பணத்துக்கு என்ன நடந்தது என்பது கூட தெரியவரலாம் ! இல்லையேல் கணக்கு காட்டவேண்டும் என்று கூறியவுடன் கொதித்து எழுந்த தனம் கமலின் கோட்டத்துக்கு ஐவரும் ஏன் வக்களத்து வாங்குகிறார் ?

சுகிர்தகலா போன்றவர்களை இனம் காணும் நேரம் . மக்களே தயவு செய்து எங்கள் போராளிகள் பங்குபெறும் மாவீரர் நினைவேந்தல் அகவத்தின் கூட்டங்களுக்கு வாருங்கள். முப்பதுக்கும் அதிகமான கூட்டங்கள் நடைபெற்று விட்டது . கமல் தனம் துக்கு வக்க்லாளத்து வாங்கும் சுகிர்த கலா ஏன் மக்கள் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்து என்னை போல பலரது கேள்விகளுக்கு பதில் தர கூடாது ? ஏன் கள்ளவாக்கு என்ற வசனம் கேட்டவுடன் கொதித்து எழுகிறார் ? இவரை போன்ற எழுத்து வீரரின் உள்நோக்கத்தை புரிந்து கொள்வோம் ! களத்தில் ஆடிய போர்வீரர்கள் ஆற்றிய பணிக்கு முன்னாள் தியாகத்துக்கு முன்னால் சுகிர்தகலா எம்மாத்திரம் ?

தமிழ் உறவுகளே , போராத்தின் பெயரால் பிரித்தானியாவில் பலர் உழைத்தாகி விட்டது . பத்திரிகை , இணையத்தளம் என்று பலருக்கு உழைப்பு தேடி கொடுத்தாகியும் விட்டது . ஆனால் தேசிய தலைவரின் அமைதியில் இன்று கழுகு கூடமாய் பலர் மக்கள் பலத்தை கொத்தி செல்ல துடிக்கின்றனர். இன்று கணக்கு வழக்கு என்று ஒன்றை கேட்டால் இவர்கள் அச்சப்பட தொடங்கி உள்ளனர். இம்முறை கணக்கு காட்டினால் மக்கள் சென்ற முறைகளில் எவ்வளவு பணம் சேர்ந்து இருக்கும் என ஊகிக்க கூடும் ! சாதாரண தேர்தலிலேயே கள்ளவாக்கு மூலம் வர துடித்து தோற்றவர்கள் இன்று தங்கள் கடைசி உழைப்புக்கு பத்திரகையை நம்பி இருகின்றனர் . இவர்கள் இன்று போராடுவது தமது இருப்புக்காக ! தமது குட்டை வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மண்ணில் களமாடிய வீரர் நடாத்தும் அமைப்புகளையே சிதைக்க தொடங்கி விட்டனர் ! எம் முன்னால் இன்றுவரை தேசிய பணி ஆற்றிய உள்ளங்களையே சாட தொடங்கி விட்டனர் !

வாருங்கள் மக்களே ! வாயை கொஞ்சம் திறப்போம் ! கேள்விகள் கொஞ்சம் கேட்போம் ! வெறும் பத்திரிகை நடாத்துகிறார் என்பதற்கு அப்பால் இவர் என்ன செய்கிறார் என கொஞ்சம் அலசி ஆராய்வோம் ! ரகசியமாகவேனும் பின் தொடர்ந்து கொஞ்சம் ரகசியத்தை கண்டறிவோம் ! மக்கள் முன்னால் வர மறுக்கும் இவர்களை ஏன் என்று தட்டி கேட்போம் ! இல்லையேல் எங்கள் போராடத்தை வைத்து பிழைக்க இன்னமும் பல சுகிர்த கலாக்கள் உருவாக கூடும் !

சுகிர்தகலாக்கள் இருக்கும் வரை ஒரு பேப்பர் வெறுமனே சொந்த பிழைப்புக்காக போராட்டத்தை சிதைக்கும் ஊடகங்களே ! பகிரங்கமாய் மக்கள் முன்னால் வந்து நிற்கும் மாவீரர் நினைவேந்தல் அகவத்தை ஆதரித்து சரியான சக்திகளை இனம் காணும் ! மண்ணில் உயிரை கொடுத்த , போராடிய அவயங்களை இழந்த போராளிகள் பெரிதா ! உங்கள் முன்னால் தேசிய பணி ஆற்றிய உள்ளங்கள் தூய்மை ஆனவையா ? இல்லேயேல் இந்த போராடத்தை வைத்து பத்திரிகை நடாத்தி , கள்ளவோட்டு மூலமேனும் வர துடிக்கும் அற்ப அம்மணிகள் சரியா ?

ஒரு பேப்பர் பத்திரிகையை கொஞ்சம் கவனிப்போம் ! வார்த்தைகளில் மயங்காமல் உணமைகளை கண்டறிவோம்..!

உற்றுப்பார் ஊளையிடும் ஊத்தையின் உள்விவகாரம் உணர்வாய்

ஊருக்குபதேசம் உனக்கல்லடி என்கிறாயா? உழுதிதளி சுகி

  • தொடங்கியவர்

எங்கை அடிக்க எங்கே நோகின்றது .. பாருங்கள்! ... ஆமா ஏன் நா.க.த.அ இற்கு வலிக்கிறது?? என்ன தொடர்பு?? ..

.. ஆமா, அவன் இவன் சொல்லி கள்ள வோட்டு போட்டனான்!!! .. மண்டைக்குள் சரக்கில்லாததா கள்ள வோட்டு போட்டது??? இன்று அவன் இவன் கேட்டுத்தான் இதைச் சொன்னனான் என சொல்ல எவ்வளவு நேரமாகும்??? .. அதற்கு மேல் கள்ளவோட்டுக்கும், தோண்டிக்குழி பறித்து புதைப்பதற்கும் வித்தியாசம் இல்லையோ?? ஏனய்யா பெண்களை இழுக்குறீர்கள், உங்கள் பெண்களை மற்றவர்கள் இழுக்க எவ்வளவு நேரமாகும்?? மற்றும் யார் இழுத்தது என்று தெரியாது என்றும் நினைக்கிறீர்களா??

இவைகளுக்கு மேல் ...

... இங்கு ஒரு பேப்பரில் வந்தது, மிகப்பெரிய குற்றச்சாட்டு! ... தமிழ்த்தேசியத்துக்கு நாம் உழைக்கிறோம் என உரக்கக்கூறி ஓயாது உழைத்து வரும் .. ஓர் ஐரோப்பாவில் இருந்து இயங்கும் தொலைக்காட்சியின் நிறுவனர் மீதான, அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் குற்றச்சாட்டு!!! .. இக்குற்றச்சாட்டு பொய்யாயின் ... மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர முடியும்!!!! ... தொடர்வார்களா???????????

... ஆனால் ...

... இந்தப் புத்துக்குள், இந்தப் பாம்பு தான் .. சீறியதற்கான .. ஒலிப்பதிவு ஆதாரங்கள் வெளிவரப் போகின்றதாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டாங்கையா. தங்கட தங்கட சந்தேகங்களை செய்தி ஆக்கி சும்மா இருக்கிற சனத்தையும் குழப்பி.. சிங்களவனுக்கு சேவை செய்யுறதுக்கெண்டே.. கொஞ்சம் அலையுதுகள். அதெல்லாம் யாழில வரும்...! அதில நம்ம நெல்லையருக்கு.. நா. க. த. அ என்றால்.. சரியான அலேஜி..! முடியல்லடா சாமி. எப்ப தான் அடங்குமோ.. தமிழரின் இந்தத் தாகம்..! இன்னும் ஒரு 400,000 சனம் செத்தா..??????! :o:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இன்னொன்றையும் கவனியுங்கள்.

GTV? என்ற தலையங்கம் ஏன்?

அதையும் கெடுப்பதற்கா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் G TV க்கு வக்காளத்து வாங்க வரவில்லை ஆனால் G TV யை தவிர எந்த தொலைக்காட்சியும் தேசியத்துக்கு உழைக்கேல்லையே குறிப்பாக வெளிச்சம் செய்திவீச்சு போன்ற நிகழ்வுகள் சோர்ந்து போகும் தேசிய உணர்வுகளை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தேசிய உணர்வுடனும் பொறுப்புடனும் நடத்தப்பட்டு வரும் தொலைக்காட்சி G TV தான் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

நான் GTVஇன் ஆரம்பகாலத்திலிருந்தே ஒரு அங்கத்தவர். வருட சந்தா 130 € செலுத்துபவன் .

ஆனால் வீட்டில் பார்க்கமுடியாதநிலையால் பார்ப்பதில்லை.

என்னுடைய இந்த பங்களிப்பு என்பது எமக்காக ஒரு தொலைக்காட்சியாவது இயங்கணும் என்ற அடிப்படையிலானது.

இன்றைய நிலையில் இது போன்ற நிறுவனங்களை நிர்வகிப்பதோ இயக்குவதோ எவ்வளவு கடினமானது என்பதனை நான் நன்கு அறிவேன்.

இதில் இன்னொன்றையும் கவனியுங்கள்.

GTV? என்ற தலையங்கம் ஏன்?

அதையும் கெடுப்பதற்கா?

நெல்லையன் ஏன் இந்த தலையங்கம் கொடுத்தீர்கள்? செய்திக்கு தொடர்பில்லையே?

சுகிர்தகலாவைப் பற்றிய விமர்சனம் இங்கே வந்தது ஏன்?

ஒண்ணுமே புரியல உலகத்தில

  • தொடங்கியவர்

ஏன் GTV? ... உண்மைகள் வெளிவரட்டும் ...

... புத்தம் புதிய அணி!! சகலகலாவல்லவர்களை அடக்கிய அணி!! ஆட களத்துக்கு வந்த அணியில் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவர்!!! முன்பும் பல முறை பந்துகள் வீடப்பட்டு ... கச்சுகள், ரண் அவுட்டுகள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், சரியான தொழில்நுட்பமிக்க கமராக்கள் இல்லாததினால் தப்பி விட்டார்!!! இந்த முறை பந்து வீசப்பட்டிருக்கிறது ... கிளீன் அவுட் என்கிறார்கள் .. ஐ.சி.சி அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பத்தில் அகப்பட்டு விட்டாராம் .. ஆனால் பின் பக்கத்தில் மூன்றாம் நடுவரோடு சமரச பேச்சுவார்த்தை நடக்குது போல் ... என்ன நல்லதுக்கு தான் பாற்றை கொடுத்தேன், ஏதோ தட்டித்தடுமாறி பட்டு விட்டது என்று!!! ...

இந்தா பந்தா ஆடப்போகிறோம் என்று வந்த அணியிக்கு தொடர்ந்து சரியான போலிங்குகளாம்!! முக்கியமானதெல்லாம் கொல கொலத்துப் போச்சாம்!! ... ... பார்ப்போம் எதுவரை தாக்குப் பிடிக்கப் போகுதென்று!!!

மூன்றாம் நடுவரின் பேச்சுவார்த்தையில் என்ன முடிபு வரப்போகிறது??? தொழில்நுட்பத்தில் அகப்பட்டதை மக்களுக்கு முன்றாம் நடுவர் போட்டுக் காட்டுவாரா??? அப்படி போட்டுக்காட்ட இப்புது அணி இடம் கொடுக்குமா??? தொழில்நுட்பத்தில் அகப்பட்டதையும் பொருட்படுத்தாது, நடுவர் மேல் குற்றங்களை, புது அணி வெற்றிகரமாக சுமத்துமா??? ... பல கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்போம்!!!!!!!??????

Edited by Nellaiyan

ஜயோ தலை சுத்துது

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ தலை சுத்துது

சிகிச்சை வெற்றி

நோயாளி மரணம் :lol::D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகண்ணா உங்களது சந்தா இல்லாவிட்டாலும் கே.பி. அண்ணா GTV ஐ தொடா்ந்து நடத்துவார்.

  • தொடங்கியவர்

... ஒன்பதுகளின் சிரிப்புக்களை புறம்தள்ளி விட்டு ...

ஜயோ தலை சுத்துது

இவர் சிங்களத்தினால் கடத்தப்பட்டு/கைது செய்யப்பட்டு இன்றொ 90 நாட்கள் கடந்து விட்டன. இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. விடுவதாயின் ..

1) இங்கு தொடரப்பட்டிருக்கும் வழக்கு கைவிடப்பட வேண்டும்

2) லண்டன் வந்தபின், முன்பு வாணிகுமார் ஊடகங்களுக்கு உண்மைகளை கொட்டியதுபோல், கொட்டக்கூடாது.

... இரண்டும் கடினம் ... ஆனால் சிங்களம்-கேபி-விசுவாசிகள் ஊடாக டீல் போட முயற்சி!.. ஆனால் டீலோ? நோடீலோ? வருவதற்கு முன் றீலில் பதியப்பட்டு விட்டது ... என்கிறார்கள் ... ரீலில் பதிந்தவர்கள்!!!!

.... றீலில் உள்ளதோ? இச்செய்தியில் உள்ளதோ? ... பொய்யாயின் ... சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்!!! ... இது கேள்வி கேட்கப்ப்டவில்லை, மாறாக ஆதாரங்கள் இருக்கின்றது என்று கூறி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது!!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

According to information, Mrs Karunanithy was put under pressure to sign an agreement to disassociate herself with the TNGTE and keep silence about her experience after her release which had refused to comply with.

http://www.srilankag...i-released.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மனித நேய செயற்பாட்டார்கள் எந்த மனிதவுரிமை அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.