Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7055
    Posts
  2. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    7596
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46818
    Posts
  4. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1866
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/24/19 in all areas

  1. ஆச்சிக்கு... என்ன கவலையோ... ஆருக்கு தெரியும்.
  2. கீழடி - சிந்து சமவெளி - சங்க இலக்கியம்: இணைக்கும் புள்ளி எது? விவரிக்கிறார் ஆர். பாலகிருஷ்ணன் கீழடி அகழாய்வு முடிவுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தைய்யா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் கௌரவ ஆலோசகரும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவருமான ஆர். பாலகிருஷ்ணனிடம் கீழடி ஆய்வு முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசியினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து: கே. கீழடி முடிவுகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக அரசு வெளியிட்டிருக்கும் முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? ப. இப்படி பரபரப்பாக விவாதிக்கப்படுவதற்குக் காரணமே, சமீப காலமாக இம்மாதிரி அகழாய்வு முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை என்பதுதான். ஆதிச்ச நல்லூரில் 1904ல் அலெக்ஸாண்டர் ரீ ஆய்வு மேற்கொண்டதற்குப் பிறகு, மீண்டும் 2004ல்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அதனுடைய விரிவான விளக்கங்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், கீழடி துவக்கத்திலிருந்தே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், இப்போது வெளியாகியிருக்கும் முடிவுகள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. 2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா முன்பாக நான் சிந்துவெளி தொடர்பாக ஒரு ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தேன். Image caption ஆர். பாலகிருஷ்ணன் கொற்கை - வஞ்சி - தொண்டி போன்ற தமிழகத்தில் உள்ள இடப்பெயர்கள், சிந்துவெளிப் பகுதியில் அடையாளம் தெரியாத இடப்பெயர்களாக இப்போதும் இருப்பதைக் கண்டறிந்து, என்னுடைய ஆய்வை அப்போது முன்வைத்தேன். அஸ்கோ பர்போலா, சங்காலியா, ஐராவதம் மகாதேவன், சவுத்வர்த் ஆகிய அறிஞர்கள் ஏற்கனவே இடப்பெயர்களை வைத்து சிந்துவெளி ஆய்வுகளை நடத்த முடியும் எனக் கூறியவர்கள்தான். அதைத்தான் நானும் பின்பற்றினேன். அப்போதுதான் கொற்கை - வஞ்சி - தொண்டி இடப்பெயர்கள் இருந்தன. ஆனால், அப்போதும்கூட வெறும் இடப்பெயர் சார்ந்த ஒரு ஆய்வாகத்தான் இது இருந்ததே தவிர, அகழ்வாராய்ச்சி சார்ந்த ஆதாரம் ஏதும் இருந்திருக்கவில்லை. அம்மாதிரியான ஒரு ஆதாரத்தை கீழடி கொடுத்திருக்கிறது. கே. கீழடியையும் சிந்து சமவெளி நாகரிகத்தையும் நீங்கள் எப்படி தொடர்புபடுத்துகிறீர்கள்? ப. சிந்து சமவெளி நாகரீகத்தின் முதிர்ச்சியான காலகட்டம் கி.மு. 2500. அது நலிவடைய ஆரம்பிப்பது கி.மு. 1900 காலகட்டத்தில். இப்போது கீழடியில் கிடைத்த தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்து கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட தெர்மோலூமிசென்ஸ் உள்ளிட்ட ஆய்வுகளில் அது கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. நாம் சங்ககாலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என வரையறுக்கிறோம். அதிலிருந்துதான் தமிழகத்தில் வரலாற்றுக் காலம் துவங்குகிறது. இப்போது ஒரு கேள்வி நியாயமாகவே எழுகிறது. சிந்துச் சமவெளி நாகரிகம் நலிவடைந்தது கி.மு. 1,900ல். தமிழக வரலாற்றுக் காலம் கி.மு. 600ல் துவங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் கி.மு. 1,900க்கும் கி.மு. 600க்கும் இடையில் சுமார் 1,300 ஆண்டுகால இடைவெளி இருக்கிறது. அதேபோல, மொஹஞ்சதாரோ - ஹரப்பா போல, குஜராத்தில் சிந்துவெளி நகரங்களாக தேசல்பூர், லோதல், தோலாவிரா ஆகிய இடங்கள் இருக்கின்றன. அதற்குத் தெற்கே மகாராஷ்டிராவில் தைமாபாத் என்ற இடம் இருக்கிறது. 1960களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம்தான் சிந்துவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லையாகக் கருதப்பட்டது. அதற்குத் தெற்கே சிந்துவெளி தொடர்பாக எந்த இடமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சிந்துவெளி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த இடம். அவர்கள் எங்கே போனார்கள் என்பது முக்கியமான கேள்வி. அந்த நாகரீகம் ஏன் அழிந்தது, எப்படி அழிந்தது என்ற விவாதம் இப்போது தேவையில்லை. ஆனால், அங்கு வாழ்ந்தவர்கள் என்ன ஆனார்கள்? சிலர் அங்கேயே தங்கியிருந்திருப்பார்கள். சிலர் வேறு இடங்களுக்குப் போயிருப்பார்கள். வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்திருப்பார்கள். வேறு பண்பாடுகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பார்கள். அப்படி வெளியேறியவர்கள் அப்போதிருந்த அடையாளங்களைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பார்கள். அல்லது எடுத்துப் போயிருப்பார்கள். ஆனால், கட்டடங்களைஅவர்களால் எடுத்துச் சென்றிருக்க முடியாது. நினைவுகளையும் பெயர்களையும்தான், குறிப்பாக இடப்பெயர்களை எடுத்துப்போயிருப்பார்கள். நம்பிக்கைகள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவையும் மாறாமல் இருந்திருக்கும். இந்தியாவில் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் புரியாத புதிராக இருக்கிறது. முதல் கேள்வி, சிந்து வெளி மக்கள்பேசிய மொழி என்ன, அவர்கள் யார், அவர்கள் நாகரிகம் எப்படி அழிந்தது? இரண்டாவது கேள்வி, இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியமான கேள்வி இல்லையென்றாலும் தமிழர்களுக்கு முக்கியமான கேள்வி. தமிழர்களுக்கு எப்போதுமே தம்முடைய தோற்றம், தாம் எங்கிருந்து வந்தோம் என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது. சிலர் மத்திய தரைக்கடல் என்று சொல்வார்கள். சிலர் குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று சொல்வார்கள். ஆனால், தோற்றம் குறித்து தமிழர்களிடம் ஒரு கூட்டு மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது. முதல் சங்கம், கடைச் சங்கம், கடற்கோள், அழிவு, புலம்பெயர்வு என தங்கள் தோற்றம் குறித்த கேள்வி அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. சிந்துவெளி எப்படி அழிந்தது, தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் ஆகிய இரண்டு கேள்விகளுமே வெவ்வேறான, தொடர்பில்லாத கேள்விகளைப் போல இருக்கின்றன. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டு கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதில் ஒரு புதிருக்கு தெளிவான விடை கிடைத்தால், இன்னொரு புதிருக்கும் விடை கிடைத்துவிடும். கே. இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, சங்க காலம் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்? ப. நாம் வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் எனப் பிரிப்பது எழுத்து தோன்றியதைவைத்துதான். எழுத்தின் தோற்றம்தான் இரண்டையும் பிரிக்கிறது. தமிழகத்தில் வரலாற்றின் துவக்க காலம் என்பது தமிழ் பிராமி என்ற தமிழி எழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்ற கருதுகோள் இருந்தது. சங்க இலக்கியத்தையும் இந்த காலகட்டத்தைச் சேர்ந்ததாகத்தான் கருதினார்கள். ஆனால், இம்மாதிரி ஒரு இலக்கியம் எழுதப்படுவதற்குப் பின்னணியில் ஒரு சிறப்பான மரபு இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்தில் பல நூல்கள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அந்த நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. ஒரு பெரிய இலக்கிய மரபு இருந்தால்தான் தொல்காப்பியம் போன்ற ஒரு நூலை எழுத முடியும். சங்க இலக்கியம்கூட திடீரெனத் தோன்ற முடியாது. சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவது நிகழ்காலப் பதிவுகள் அல்ல. கடையேழு வள்ளல்களைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், அவர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்ததாக அர்த்தமல்ல. சமகாலப் பதிவாகவும் இருந்திருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நினைவுகளாகவும் இருந்திருக்கலாம். ஆக, அந்த நிகழ்வுகளுக்கு, அது பற்றி இலக்கியத்திற்கு வயதை நிர்ணயிப்பது மிகக் கடினம். இப்போது கீழடியில் கிடைத்த பொருட்கள்,குறிப்பாக எழுத்துகள் கிடைத்த அதை படிவத்தில் கிடைத்த சில பொருட்கள் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் வயது கி.மு. 580 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே எழுத்தறிவு இருந்த காலம் அல்லது சங்க காலம் என்பது கங்கைச் சமவெளியில் வரலாறு துவங்கிய காலத்திற்கு சமமாக இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியை இந்தியாவில் எந்த இலக்கியத்தில் அதிகமாக பார்த்தறிய முடியும் என்ற கேள்வியை முன்வைத்தால், அதாவது சிந்துவெளி தொடர்பான நினைவுகளைக் கொண்ட இலக்கியம் எங்கிருக்கிறது என்று பார்த்தால் சங்க இலக்கியத்தில்தான் இருக்கிறது. சங்க இலக்கியத்தைப் போல நகரங்களைக் கொண்டாடிய இலக்கியம் வேறு இல்லை. நகர வாழ்க்கை மட்டுமல்ல, ஒரு வகையான பல்லின மக்கள் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வாழ்க்கை, கடல் வணிக மரபு, தாய்த் தெய்வ வழிபாடு, விளையாட்டுக்கான முக்கியத்துவம் ஆகியவை அந்த நாகரீகத்தின் குணாதிசயங்களைக் குறிப்பிடும் குறீயீடாக நம் முன் நிற்கின்றன. அப்படி சிந்துவெளிக்கென்று சில விஷயங்களை நாம் அடையாளமாகக் குறிப்பிட்டால், அந்த நான்கைந்து விஷயங்கள் காத்திரமாகப் பேசப்பட்டது சங்க இலக்கியத்தில்தான். அதற்குப் பிறகு இதுபோன்ற குணாதிசயங்களுடன் பொருட்கள் கிடைப்பது கீழடியில்தான். அதனால்தான் சிந்துச் சமவெளி - சங்க இலக்கியம் - கீழடி ஆகிய மூன்றையும் ஒரு புள்ளியில் இணைக்கிறோம். பத்தாண்டுகளுக்கு முன்பாக கொற்கை - வஞ்சி - தொண்டி குறித்துப் பேச ஆரம்பிக்கும்போது இப்படி கீழடி போல ஒரு இடம் கிடைக்குமென யாரும் நினைக்கவில்லை. தவிர, கீழடி கிடைத்திருக்கும் இடத்தைப் பார்ப்போம். இந்த இடம் மதுரைக்கு அருகில் இருக்கிறது. மதுரை ஒரு சாதாரணமான நகரமல்ல. சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சி என ஒரு தனி இலக்கியம் இருக்கிறது. அதில் மட்டுமல்லாமல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் மதுரையும் நான்மாடக் கூடலும் பேசப்படுகிறது. பரிபாடல் வைகையைப் பற்றிப் பேசுகிறது. தமிழுக்கும் மதுரைக்கும் இடையிலான தொடர்பு சங்க இலக்கியத்தில் பேசப்படுகிறது. சங்கப் புலவர்களின் பெயர்கள் ஊர்களை வைத்தே அறியப்பட்டன. அப்படி அதிக புலவர்கள் இருந்தது மதுரையில்தான். "மாங்குடி மருதன் தலைவன் ஆக, - உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாதுவரைக என் நிலவரை" என புறநானூறில் ஒரு பாடல் வருகிறது. அப்படியானால், ஒரு புலவரை தலைவனாக வைத்து மற்ற புலவர்கள்கூடி, கவிதைகள் குறித்து பேசுவது, விவாதிப்பது என்பது சங்க இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறது. மதுரையைச் சுற்றி நிறைய இடங்களில் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அந்த நகரம் இடைக்கால இலக்கியத்திலும் பக்தி இலக்கியத்திலும் வருகிறது. ஆகவே அந்த நகரத்திற்கு 2600 வருட தொடர்ச்சி இருக்கிறது. அப்படி ஒரு நகரத்திற்கு அருகில் அகழாய்வில் ஒரு நகர நாகரீகம் கிடைப்பது சாதாரணம் கிடையாது. ஆகவே, நம் தொன்மத்திலிருக்கும் சில மரபுகளை இந்த ஒற்றுமை இணைக்கிறது. அதுதான் இதில் முக்கியம். கே. கீழடியில் பெரும் எண்ணிக்கையில் பானை ஓடுகளில் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. 1001 பானை ஓடுகள் இப்படிக் கிடைத்திருக்கின்றன. இதற்கு என்ன முக்கியத்துவம்? ப. எழுத்து வடிவத்தை எடுத்துக்கொண்டால், இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப் பழைய எழுத்துவடிவம் சிந்துவெளி எழுத்துவடிவம்தான். சிந்துவெளி எழுத்துகளை இன்னும் நம்மால் படிக்க முடியவில்லை. பொதுவாக, படிக்க முடிந்த எழுத்துகளுக்கு அருகில், படித்தறிய முடியாத எழுத்துகள் கிடைத்தால், இதைவைத்து அதைப் படிக்க முடியும். சுமேரியாவில் அப்படித்தான் படிக்க முடிந்தது. ரொஸட்டா ஸ்டோன் என்ற இருமொழி கல்வெட்டின் உதவியுடன் அவை படிக்கப்பட்டன. ஆனால், சிந்துவெளியில் அப்படி ஒரு விஷயம் கிடைக்காததால், சிந்துவெளியைப் படிக்க முடியவில்லை. அதற்கடுத்து, அசோகன் பிராமியும் தமிழ் பிராமியும் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் படிக்க முடியும். இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு இணைப்புச் சங்கிலி இருந்திருக்க வேண்டும். அவைதான் பானையில் செய்யப்பட்ட கீறல்கள் (Graffiti markers). இந்தக் கிறுக்கல்கள் இரண்டுவிதமாக இருக்கும். பானையைச் செய்தவர் எழுதியிருப்பார். அது பானை ஈரமாக இருக்கும்போதே எழுதப்பட்டிருக்கும். வாங்கியவர் எழுதியிருந்தால், பானை சுடப்பட்ட பிறகு எழுதப்பட்டிருக்கும். கீழடியில் கிடைத்திருப்பது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அப்படி எழுதக்கூடியவர்கள் நிறையப் பேர் இருந்திருக்க வேண்டும். அவர்கள் பெரிய அளவில் கற்றறிந்தவர்களாகவோ, புலவர்களாகவோ இருந்திருக்க வேண்டியதில்லை. சாதாரண மக்களாகவும் இருக்கலாம். இந்த பானைக் கீறல்களை சிந்துவெளி முத்திரைகளுக்கும் தமிழ் பிராமி எழுத்துகளுக்கும் இடையிலான ஒரு இணைப்புச் சங்கிலியாக நாம் பார்க்க முடியும். இந்தப் பானைக் கீறல்களில் சிந்துவெளியில் உள்ள கீறல்களைப் போன்ற கீறல்களும் சில பானை ஓடுகளில் கிடைத்திருக்கின்றன. ஆகவே அதன் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்க முடியும். மேலும், இம்மாதிரி கீறல்களுடன் கூடிய பானை ஓடுகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்திருக்கின்றன. அவற்றில் 75 சதவீதம் தமிழகத்தில்தான் கிடைத்திருக்கிறது. கீழடியில் மட்டுமல்ல, கொற்கை, அழகன் குளம் ஆகியவற்றிலும் இம்மாதிரி பானை ஓடுகள் கீறல்களுடன் கிடைத்திருக்கின்றன. கீழடியில், தமிழ் பிராமி கிடைத்த படிநிலைக்குக் கீழே இவை கிடைத்திருக்கின்றன. ஆகவே, அவை தமிழ் பிராமிக்கு முந்தைய காலமாக இருக்கலாம். ஆகவே இந்தக் கீறல்கள் மிக முக்கியமானவை. கே. கீழடியில் சமய வழிபாடு சார்ந்த பொருட்கள் கிடைக்கவில்லையென ஆய்வறிக்கை கூறுகிறது. ஆகவே அங்கு வாழ்ந்த மக்கள் சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எனச் சொல்ல முடியுமா? ப. அப்படிச் சொல்ல முடியாது. கீழடியில் அகழாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இடம் 110 ஏக்கர். வைகை நதிக்கரையில் இதுபோல 293 இடங்கள் இப்படி அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இதுவரை கீழடியில் மூன்று - நான்கு ஏக்கர்கள்தான் தோண்டப்பட்டிருக்கின்றன. மீதியைத் தோண்டும்போது என்ன கிடைக்குமெனத் தெரியாது. இப்போதுவரை வழிபாட்டுக்கூடம் போன்றவற்றுக்கான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால், இது சங்க காலத்துடன் தொடர்புடைய இடம் என்பதால் இதை எச்சரிக்கையுடன்தான் அணுக விரும்புவேன். சங்க கால மக்களை வழிபாடு அற்றவர்கள் எனச் சொல்ல முடியாது. சங்க இலக்கியமே, குறிஞ்சி, முல்லை, மருதம் என ஐவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு இடத்திற்கு ஒரு கடவுள் இருந்தார்கள். தவிர, நடந்து செல்லும் பாதையைப் பாதுகாக்கும் தெய்வங்கள், மரத்தில் இருக்கும் தெய்வங்கள், காட்டில் உள்ள தெய்வங்கள் இருந்தன. பெரும்பாலும் தாய்த் தெய்வ வழிபாடு இருந்தது. இதற்கான ஆதாரம் பிறகு கிடைக்கலாம். ஆனால், நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இம்மாதிரியான வழிபாடு அந்த சமூகத்தின் மையப்பொருளாக இல்லை என்பதைத்தான். சங்க இலக்கியத்தை முழுதாகப் படித்துப் பார்த்தால், அந்தக் கால வாழ்க்கை என்பது, Celebration of lifeஆகத்தான் இருந்திருக்கிறது. அந்த இலக்கியம் வாழ்க்கையைக் கொண்டாடுகிறது. தினசரி வாழ்வைக் கொண்டாடுகிறது. இப்போது கிடைத்திருக்கும் பொருட்கள் அந்த வாழ்வை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், எதிர்கால ஆகழாய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும். கே. கீழடியில் விளையாட்டுப் பொருட்கள் அதிகம் கிடைத்திருப்பது குறித்து அதிகம் பேசப்படுகிறது. அதில் என்ன முக்கியத்துவம்? ப. அதில் இரண்டு மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அந்த மக்கள் நிலையான வாழ்வை வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் பொருளாதாரம் உபரிப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். உள்நாட்டு வணிகம் - வெளிநாட்டு வணிகம் ஆகிய இரண்டுக்கும் கீழடியில் ஆதாரம் கிடைத்திருக்கிறது. ஆகவே, இங்கு வேளாண்மை சார்ந்த, கால்நடை வளர்ப்பு சார்ந்த, வணிகம் சார்ந்த ஒரு பொருளாதாரம் இருந்திருக்க வேண்டும். அதில் உபரி இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம். அப்போதுதான் விளையாட்டிற்கு நேரம் கிடைக்கும். அது நாகரிகத்திற்கான முக்கியமான அடையாளம். சிந்துவெளியிலும் இதுபோல விளையாட்டுப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. தவிர, சங்க இலக்கியம் விளையாட்டுகள் குறித்து நிறையப் பேசுகிறது. அதை உறுதிப்படுத்துவது போல இந்தப் பொருட்கள் இருக்கின்றன. கே. கீழடி குறித்துப் பேசும்போது ஆதிச்சநல்லூர் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. அந்த இடம் தொல்லியல் ரீதியில் எவ்வளவு முக்கியமான இடம்? ப. அலெக்ஸாண்டர் ரீ முதன் முதலில் 1904ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வைத் துவங்கியபோது, சிந்துச்சமவெளியே கண்டறியப்படவில்லை. 1920களில்தான் சிந்துவெளியில் ஆர்.டி. பேனர்ஜி, எம்.எஸ். வாட்ஸ் ஆகியோர் அகழாய்வில் ஈடுபட்ட பிறகு, சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி குறித்த ஒரு அறிக்கையை கொண்டுவருகிறார். அலெக்ஸாண்டர் ரீ அந்த காலகட்டத்தில் அதை ஒரு புதைமேடாகத்தான் பார்த்தார். அதாவது, இறந்தவர்களைப் புதைப்பதற்கான ஒரு இடமாகப் பார்த்தார். ஆனால், அப்போதே அவர் 30 இடங்களில் இங்கு அகழாய்வு மேற்கொள்ள முடியுமென கண்டறிந்தார். ஆனால், அதற்குப் பிறகு 100 வருடம் அங்கு ஏதும் ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது ஆச்சரியகரமானது. 2004ல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆய்வு முடிவு தற்போதுவரை வெளியாகவில்லை. ஆனால், கீழடி, ஆதிச்சநல்லூர் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்க்க வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள பல நதிக்கரைகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழக அரசைப் பொறுத்தவரை ஆதிச்சநல்லூரிலும் ஆய்வுகள் நடக்குமெனச் சொல்லியிருக்கிறார்கள். அது மகிழ்ச்சியளிக்கிறது. https://www.bbc.com/tamil/india-49802510
  3. 😁😂 இந்த‌ காமெடி சின்ன‌ பெடிய‌னாய் இருக்கேக்க‌ பார்த்த‌ காமெடி , இணைப்புக்கு ந‌ன்றி புர‌ட்சி அண்ணா / 2004ம் ஆண்டில் இருந்து த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்ப்ப‌து இல்லை , அதுக்கு முத‌ல் பார்த்த‌ ந‌ல்ல‌ ப‌ட‌ங்க‌ள் நிறைய‌ இருக்கு 🤞
  4. ஓடு மீன் ஓடி உறு மீன் வந்தாலும் பார்த்து நிக்குமாம் இக் கொக்கு.......! 🦢
  5. வணக்கம் வாத்தியார்......! கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்கல்யாணம் என்னும் தெய்வீக பந்தம்,காலங்கள் தோறும் வாழ்கின்ற சொந்தம்விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல,விதி என்னும் காற்றில் பறிபோகவல்ல.....! ---கங்கை நதி ஓரம்----
  6. ஐந்து தலைமுறை பெண்மணிகள்.
  7. நான்பாட்டுக்கு சிவனேன்னு தானேடா செத்து கிடக்கிறேன். கீழடிய தோண்ட தோண்ட என்ன ஏண்டா தூக்கிபோட்டு மிதிக்குறீங்க...
  8. லெக் தாதா - பகிடி துணை தலைவர் செந்தில் ..☺️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.