மென்மையான குரல் மட்டுமல்ல மெலடியான பாடல்களுக்கும் பொருத்தமானது ஏ.எம்.ராஜாவின் குரல்.
தனது அமைதியான குரலால் பல உள்ளங்களில் புகுந்து இசையால் ஒரு ராஜ்ஜியம் அமைத்த ஏ.எம்.ராஜா திடீரென “ஓகோ என்தன் பேபி” என்று ஒரு துள்ளல் பாட்டைப் பாட அது அன்றைய இளைஞர்களை ஆட்டிப் படைத்து. இன்று எழுபது வயதுக்கு மேல் இருக்கும் அன்றைய இளைஞர்கள் இப்பொழுது இந்தப் பாடலைக் கேட்டால் போதும் அன்றைய காதல் நினைவுகளுக்குள் மூழ்கிப் போவார்கள்.
வீதியில் தங்களுக்கு விருப்பமான பெண்கள் போனால் சைக்கிளில் வரும் அன்றைய இளைஞர்களுக்கு பாட வருகின்றதோ இல்லையோ வாயில் இந்தப் பாடல் கண்டிப்பாக விசில் வடிவமாக (எங்கள் ஊரில் அதை ‘சீக்காய் அடிப்பது’ என்பர்கள்) வரும்.
“மாசிலா உன்மைக் காதலே”, “மயக்கும் மாலை பொழுதே”, “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்”என்று ஏ.எம்.ராஜா அன்று பாடிய பல மெலடிப் பாடல்கள் காலம் கடந்தும் வாழ்கின்றன.
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடலுக்கு நடிகை ஜமுனா பிடிக்கும் அபிநயம் சிரிக்கவைக்கும்.
ஆனால் பாடல் எவ்வளவு ரசிக்கப்பட்டது என்பதற்கு சீனா பெண்கள் பங்கு கொள்ளும் இந்த வீடியோ ஒரு சாட்சி
A