"ரயிலோடுது, யாழ் ரயிலோடுது.." எப்படி "மயிலோடுது.. வான் மயிலோடுது.." என மருவியது என மலைக்கிறீர்களா..? எல்லாம் 'உல்டா' தான்..!
பால்ய வயதில் கிராமத்து தெருக்களில் கோலி, கிட்டிப்புல் விளையாட்டுகளை விளையாடும்பொழுது ஆகாயத்தில் சத்தத்துடன் பறக்கும் விமானத்தை பார்த்து அதிசயிப்பது வழக்கம்.
பெரியாளானதும் 'ஒரு நாளாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும்' என்பது கனவாகவே இருந்தது. காலசுற்றலில் அக்கனவு பலமுறை நிறைவேறிவிட்டது..
ஏர்பஸ் 380 யில் சிலறை பறந்தாச்சு, கெலிகாப்டரில் சிலமுறை.. ஆனால் கன்கார்டில் பறக்க முடியவில்லை..
இந்த விமான ஈர்ப்பு சிறுவயதிலேயே ஆழமாக பதிந்துவிட்டதால், விமான தொழிற் நுட்பங்களை ஆர்வத்துடன் யுடுயூபிலும், இணைய குறிப்புகளிலும் சிரத்தையாக பார்த்து ரசிப்பதுண்டு..
அப்படி பார்த்து ரசித்த சில காணொளிகளை பகிர்கிறேன்..!
முதலில் நம்ம 'ஈழ்ஸ்' வசிக்கும் ஊரில்..!! 😉
ஒரே சமயத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் (Parallel landing) அதிசயம்..! 👇