Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    18
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    15756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/30/21 in all areas

  1. இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர். படுத்தேன். வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன். குப்புற படுக்காதீங்க என்றார். மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர்.. படுக்கவிடாமல் படுத்தாறங்களே... காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன். நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன். போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் .. கேன்சர் உறுதியாக வராதாம்.!! உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாயு என்றார்.. வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இது மட்டும்தான்... வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்... இனிப்பை தொட்டுவிடாதீர்கள்.. அவ்வளவுதான்.. Sugar ஏற்றிவிடும் என்றார்.. சரி என்று நிறுத்தினேன். நடக்கும் போது நண்பர் சொன்னார்.. low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்.. இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்... ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை... தந்திரமா குளிக்கனும் என்றார். காபி, டீ வேண்டாம், அரிசி கஞ்சி வேண்டாம், பால் வேண்டாம், ஐஸ் வாட்டர் வேண்டாம், பாட்டில் ஜூஸ் வேண்டாம் என்றார்... சரி என்று பழகினேன்.. ஒன்று புரிந்தது.. ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து, அதிகமாகத் தெரிந்தாலும் ஆபத்து.. "Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு.. Too much informations will make you to suffer from distinguishing between useful & useless informations. நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு... எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து.. ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து.. வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே? அதிக விஷயம், விஷம். இயல்பா இருங்க. ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது. *படித்ததில் ரசித்தது..*
  2. வாழ்க்கையில் 'பிடிவாதம்' முக்கியமானது..
  3. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 31, பங்குனி, 2008 மகிந்த கட்சியின் கிழக்கு மாகாணசபை பிரதம வேட்பாளராக கொலைக்குழுத் தலைவன் பிள்ளையான் அறிவிப்பு ராணுவத்தின் பிரதான கொலைக்குழுவின் தலைவரும், தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் எனும் துணைராணுவக் குழுவின் துணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை கிழக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராக மகிந்த அரசாங்கத்தின் கட்சியான ஒன்றுபட்ட மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்திருக்கிறது. இதனை இக்கட்சியின் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்தார். கொலைக்குழுவின் தலைவனான பிள்ளையான் தனது வேட்பாளர் பத்திரத்தினை திங்கள் மாலை 3 மணிக்குத் தாக்கல்செய்தார்.
  4. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 26, பங்குனி, 2008 சித்தாண்டி வீட்டுத்திட்டத்தினைத் தடுத்து நிறுத்திய பிள்ளையான் கொலைக்குழு சுவிட்ஸர்லாந்து செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் சித்தாண்டியில் அமைக்கப்படவிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தினை பிள்ளையான் கொலைக்குழு தடுத்து நிறுத்தியிருக்கிறது என்று இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்திருக்கின்றனர். இந்த இரு அரசு சாரா அமைப்புக்களால் நிர்மாணிக்கப்படவிருந்த குறைந்த வருமானம் கொண்ட சுமார் 375 குடும்பங்களுக்கான வீடுகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி இலங்கை ரூபாய்களில் 750,000 என்பது குறிப்பிடத் தக்கது. மகிந்த அரசின் எந்த உதவிகளும் இன்றி சுவிட்ஸர்லாந்து மக்களின் உதவியோடு நிர்மாணிக்கப்படவிருந்த இவ்வீட்டுத் திட்டத்திற்கான திட்டமிடல், வடிவமைப்பு, பொறியலாளர்கள், கட்டுமானப் பொருட்கள், உபகரணங்கள் அனைத்துமே இந்த இரு அரசுசாரா நிறுவனங்களினாலேயே வழங்கப்படவிருந்தது. அத்துடன், கட்டட நிர்மானத்தில் அவ்வீட்டிற்கான எதிர்கால உரிமையாளர்களே ஈடுபடப்போவதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டத்தினை தடுத்து நிறுத்தியிருக்கும் பிள்ளையான் கொலைக்குழு இத்திட்டம் தமக்கூடாகவே நடைபெறவேண்டுமென்றும், கட்டுமானப் பொருட்கள் முதல் தொழிலாளர்வரை தம்மாலேயே வழங்கப்படும் என்றும், அதற்கான நிதியினைத் தம்மிடமே தரவேண்டும் என்றும் விடாப்பிடியாக நிபந்தனை விதித்து மறுத்துவிட்டிருக்கிறது. எற்கனவே தளவாய்ப்பகுதிய்ல் இவ்வாறான வீட்டுத் திட்டமொன்றினை தமக்குக் கப்பம் தரவேண்டும் என்று பிள்ளையான் குழு வற்புறுத்தியதால் அதிகாரிகள் நிறுத்திவைத்திருப்பதும் தெரிந்ததே.
  5. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 10, பங்குனி, 2008 50 வீதமான வாக்காளர்களே வாக்களிப்பில் பங்கேற்பு, துணை ராணுவக் கூலிகள் தேர்தலில் அட்டகாசம் மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் மிக குறைந்தளவிலேயே வாக்களிப்பில் ஈடுபட்டதாக பிற்பகல்வரை வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், கிராமப் புறங்களில் சுமார் 50 வீதமான வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீனத் தேர்தல் கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்திற்கு மத்தியிலும் இத்தேர்தல்களில் பரவலான வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது. கிராமப்புறங்களில் பலரை தமது வாகனங்களில் வாக்குச் சாவடிகளுக்கு பிள்ளையான் கொலைக்குழுவினர் பலவந்தமாக ஏற்றிச் சென்றதை பலரும் பார்த்திருக்கின்றனர். முஸ்லிம்களுக்கெதிரான கடுமையான பிரச்சாரத்தினை முன்னெடுத்துவரும் பிள்ளையான் கொலைக்குழுவினர், தமிழர்கள் தமக்கு வாக்களிக்காத பட்சத்தில் முஸ்லீம்களிடம் அதிகாரம் சிக்கிவிடும் என்றும் கூறிவருகின்றனர். வீடுவீடாகச் சென்று வாக்காளர்களைப் பலவந்தமாக தமக்கு வாக்களிக்கும்படி பிள்ளையான் கொலைக்குழுவினர் வாக்குச் சாவடிகளுக்கு இழுத்துவந்ததாக மக்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர். வந்தாறுமூலை, சித்தாண்டி, பேத்தாழை, கல்மடு, கும்புறுமூலை மற்றும் கல்குடா ஆகிய வாக்குச் சாவடிகளில் அதிகளவான வாக்குமோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்க் கண்காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறாது சில இடங்களில் பிள்ளையான் கொலைக் கூலிகளும் பொலீஸாருடன் வாக்குச் சாவடிகளின் அருகில் நின்றதாகவும், பலர் அடையாள அட்டையின்றியே வக்களிப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. காலை 7 மணியிலிருந்து 9:30 மணிவரை அடையாள அட்டைகளைப் பரிசோதித்த பொலிஸார் அதன்பின்னர் அவற்றினைப் பரிசோதிப்பதைத் நிறுத்திவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சித்தாண்டி, கறுவாக்கேணி ஆகிய வாக்குச் சாவடிகளுக்கு பிள்ளையான் கொலைக்குழுவினரே வாக்காளர்களைத் தமது வாகனங்களில் ஏற்றிவந்து தமக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையான் குழுவினர் மக்களை ஆயுதமுனையில் பயமுறுத்தி தமக்கே வாக்களிக்குமாறு பல வாக்குச் சாவடிகளில் நிலகொண்டிருந்ததாகவும், இதனால் தமக்கு ஆதரவானவர்கள்கூட பிள்ளையான் குழுவுக்கே வாக்களித்ததாக இன்னொரு துணை ராணுவக் குழுவான ஈ பி டி பி குற்றஞ்சாட்டியிருக்கிறது. வெள்ளைநிற இலக்கத்தகடற்ற வான்களில் வந்த பிள்ளையான் கொலைக்குழுவினரே இவ்வாறான அச்சமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஈ பி டி பி துணைக்குழு முறைப்பாடு செய்திருக்கிறது.
  6. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 09, பங்குனி, 2008 "எனக்கு வாக்களியுங்கள், இல்லையேல் உங்கள் பிள்ளைகளைப் பலவந்தமாக எமது குழுவில் இணைப்போம்" பிள்ளையான் கொலைக்குழு முக்கியஸ்த்தர் பகிரங்க மிரட்டல் பிள்ளையான் கொலைக்குழுவின் முக்கியஸ்த்தரும் வந்தாறுமூலையில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வருபவருமான இராசையா சதீஷ்குமார் என்பவர் அப்பகுதி மக்கள் கட்டாயம் தனக்கே வாக்களிக்கவேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் அப்பகுதியிலுள்ள குடும்பங்களில் இருந்து கட்டாயம் வீட்டிற்கு ஒரு பிள்ளையென்று தான் கடத்தப்போவதாக பகிரங்க அச்சுருத்தலினை விடுத்திருக்கிறார் என்று வந்தாறுமூலை மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் வந்தாறுமூலையினையும் உப்போடைப் பகுதியினையும் இணைக்கும் பாதையினைத் தான் நிரந்தரமாக மூடிவிடப்போவதாகவும் மிரட்டியுள்ள இவர், இத்தேர்தலில் தனக்கு வாக்களிப்பதைத் தவிர அம்மக்களுக்கு வேறு தெரிவுகள் இல்லையென்று கூறியிருக்கிறார். ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட புலிகள் ராசையா சதீஷ்குமார் எனும் இக்கொலைக்குழு முக்கியஸ்த்தரின் பெயரினை குறித்து விபரங்களை வெளியிட்டிருந்ததுடன் இவரால் கடத்திச் சென்று கொல்லப்பட்ட பலரின் விபரங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
  7. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 04, பங்குனி, 2008 காணாமல்ப்போன தமிழர்களின் வாக்கு அட்டைகளைச் சேகரித்துவரும் பிள்ளையான் கொலைக்குழு பிள்ளையான் கொலைக்குழுவைச் சேர்ந்த ஆயுததாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பலகிராமங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களின் வீடுகளில் இருந்து காணாமற்போன, மரணித்த, வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் வாக்கு அட்டைகளைப் பலவந்தமாக பறிக்கத் தொடங்கியிருக்கின்றனர் என்று மக்கள் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றனர். மக்களின் வீடுகளுக்குச் சென்ற இக் கொலைக்குழுவினர் அவ்வீடுகளில் இருக்கும் மக்களது விபரங்களைத் தருமாறு வற்புறுத்தி வருவதுடன், அவர்களிடமிருக்கும் வாக்காளர் அட்டைகளையும் பறித்தெடுப்பதில் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு வீட்டில் வசிக்கும் குடும்பத்தவர்களுக்கு மேலதிகமாக வாக்காளர்கள் அட்டைகள் இருக்குமிடத்து அவற்றைப் பறித்தெடுக்கும் இக்கொலைக் குழுவினர், அப்படி மக்கள் தரமறுக்குமிடத்து கொலைசெய்துவிடுவதாக துப்பாக்கிகளைக் காட்டிப் பயமுறுத்தியும் வருகின்றனர் என்று பாதிக்கப்பட்ட பலர் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றனர்.. மட்டக்களப்பில் 9 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்கள் 2006 ஆம் ஆண்டு சர்வஜனக் கணக்கெடுப்பின் அடிப்படையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் சிங்கள ராணுவம் இம்மாவட்டத்தில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையினையடுத்து பலர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் காணமல்ப் போயுள்ளார்கள். இவற்றிற்கு மேலதிகமாக பலநூற்றுக்கணக்கானவர்களை சிங்கள ராணுவம் கைதுசெய்தும் வைத்திருக்கிறது. பங்குனி மாதம் 10 ஆம் திகதி தேர்தல்கள் நடைபெறும் என்று முடிவானதையடுத்து இப்பகுதியில் பல அரசியற்கட்சிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் திடீர் திடீரென்று சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ராணுவம் வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் பற்றித் துருவித் துருவி விசாரிப்பதுடன், அவற்றில் உள்ளவர்கள் பற்றித் தமக்கு அறியத்தருமாறும் வற்புறுத்திவருவதாகத் தெரிகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் 101 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட இருப்பதோடு சுமார் 285 வாக்களிப்பு நிலையங்களில் 270,471 வாக்களார்கள் வாக்களிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
  8. துரோகத்தின் நாட்காட்டி: நாள் 25, மாசி, 2008 புலிகளின் முன்னாள்ப் போராளிகளை தம்முடன் இணையுமாறு துன்புறுத்திவரும் பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் சிங்கள ஆக்கிரமிப்பு ராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரையைக் கைப்பற்றியதையடுத்து, புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி சாதாரண வாழ்வில் ஈடுபட்டுவரும் முன்னாள்ப் போராளிகளை தமது கொலைக்குழுவில் இணையுமாறு பிள்ளையான் துணைப்படைக் கூலிகள் வற்புறுத்திவருவதாக இப்போராளிகள் உள்ளூர் மனிதவுரிமை அமைப்புக்களிடம் முறையிட்டிருக்கின்றனர். கடந்தவருடம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பலபகுதிகளை ராணுவம் ஆக்கிரமித்தபோது பலபோராளிகள் வன்னிக்குச் சென்றுவிட்ட நிலையில் இன்னும் சிலர் இப்பகுதியிலேயே இருப்பதாகத் தீர்மானித்திருந்தனர். இவ்வாறு தொடர்ந்தும் இப்பகுதியில் வாழ முடிவெடுத்த பல முன்னாள்ப் போராளிகள் திருமணம் முடித்து பொதுவாழ்க்கைக்கும் திரும்பியிருந்தனர். கிண்ணையடி, கிரான், சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, சித்தாண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவ்வாறான முன்னாள்ப் போராளிகளை பிள்ளையான் கொலைக்குழுவினர் பலவந்தமாக தமது கொலைக்குழுவில் இணைத்துவருவதாகத் தெரியவருகிறது. இவ்வாறு தம்முடன் இணையாத முன்னாள்ப் போராளிகள் பற்றி ராணுவத்திற்கு தகவல் வழங்குவோம், அதன்பின்னர் உங்களை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று பயமுறுத்தியே இப்போராளிகளை பிள்ளையான் கொலைக்குழுவினர் தம்முடன் இணைத்துவருவதாக இப்போராளிகள் பொலீஸாரிடமும் மனிதவுரிமை அமைப்புக்களிடம் புகார் அளித்துள்ளனர்.
  9. அழகழகான கண்டுபிடிப்புகள்.......! 👍
  10. முழுமதி அவளது முகமாகும்
  11. சொய் .....சொய் ...... யெஸ் ......யெஸ்.....! 😁
  12. கோழி ஈரல் பிரட்டல்...... சாப்பிட்டு சந்தோசம் அடையுங்கள்.....! 👍
  13. சிறப்பான நகைச்சுவை காட்சி.....! 🤣
  14. ஒரு நாய்க்குட்டி மூன்று சிங்கங்களுக்கு சமன்.....! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.