Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46818
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/09/21 in all areas

  1. நன்றி மறக்காத மனிதம் ......! 💐
  2. இலங்கையில் தமிழர்களுக்கென்று பிரச்சினை இருக்கவில்லை. புலம்பெயர் தமிழர்களே தாம் தொடர்ந்தும் அந்நாடுகளில் வாழ்வதற்காக பிரபாகரனுக்குப் பணம் அனுப்பி வன்முறையினை வளர்த்துவந்தார்கள் - கருணா மூலம் : சண்டே ஒப்சேர்வர் மற்றும் ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் காலம் : வைகாசி 23, 2010 புலிகளின் முன்னாள் தளபதியும், இந்நாள் அரச அமைச்சருமாக விளங்கும் கருணா எனப்படும் முரளீதரன் அவர்கள் "புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தமக்குள் பிளவுபட்டுப் போயுள்ளதாகவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் மாயைபற்றி அவர்கள் வெகுவாகக் குழம்பிப்போயிருப்பதாகவும்" கூறியுள்ளார். "தமக்குள் ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்துவார்கள் என்பது அறிவீனமானது" என்று மீள்குடியேற்ற அமைச்சரான கருணா தெரிவித்தார். 2004 ஆம் அண்டில், புலிகள் இயக்கத்தினை இரண்டாக உடைத்துக்கொண்டு வெளியேறிய கருணா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பினை உருவாக்கியிருந்தார். பின்னர் அக்கட்சியும் இரண்டாக உடைந்ததையடுத்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அமைச்சராகவும், அக்கட்சியின் உப தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டார். "புலம்பெயர் தமிழர்கள் தமக்குள் மூன்று பிரிவுகளாக உடைந்துபோயிருக்கிறார்கள். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் விஸ்வநாதன் ருத்திரகுமார், நோர்வேயினைத் தளமாகக் கொண்டியங்கும் நெடியவன், இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் இன்னொரு பிரிவினர் என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வொருவரும் தத்தமது சிந்தனைகளில் நாடுகடந்த அரசாங்கம் பற்றிப் பேசுகிறார்கள். தோல்வியடைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஈழக் கனவுபோல இவர்களின் நாடுகடந்த தமிழீழ அரசுக் கனவும் உடைந்து சுக்குநூறாகிப் போகும்" என்று அவர் மேலும் கூறினர். "இலங்கையில் வாழும் தமிழர்களின் சிறியளவு ஆதரவுகூட இல்லாமல் புலம்பெயர் தமிழர்களால் எவ்வாறு ஒரு நாட்டை நிறுவிட முடியும்? தம்மை அழித்ததாற்காகப் புலிப் பயங்கரவாதிகளை இலங்கையிலிருக்கும் தமிழர்கள் வெறுத்து ஒதுக்கியுள்ளார்கள். இலங்கையில் புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான எந்த அமைப்போ அல்லது கட்சியோ தமிழர்களுக்கு என்று தனியான நாடொன்றினை உருவாக்க நினைத்தால் தமிழர்கள் நிச்சயம அவர்களைத் தோற்கடிப்பார்கள்". "வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் எமது ஜனாதிபதி கெளரவ மகிந்த ராஜபக்ஷ மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தமது கவலைகளுக்கெல்லாம் அவர் தீர்வுகளைத் தருவார் என்று முழுமையாக நம்புகிறார்கள். அவர்களுக்கான அப்விருத்தியென்பது கடந்த 30 ஆண்டுகளாக முன்னைய அரசாங்கங்களினாலும் , புலிகளாலும் மறுக்கப்பட்டிருந்தது" என்று அரச ஆதரவுப் பத்திரிக்கையான சண்டே ஒப்சேர்வருக்கு அவர் தெரிவ்fத்தார். "முன்னைய அரசுகளின் தவறுகள் எவ்வாறாக இருந்தபோதும், தமிழர்களின் குறைகளை நீக்கப்போவதாக எமது ஜனாதிபதி உறுதியளித்திருக்கிறார். அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதுமே இலங்கைக்கு வரப்போவதில்லை. தாம் தொடர்ந்தும் அந்த நாடுகளில் வாழ்வதற்காக அங்கிருந்துகொண்டு இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த அவர்கள் முயன்று வருகிறார்கள்" என்றும் அவர் கூறினார். "புலம்பெயர் தமிழர்கள் புலிகளின் கைகளில் அல்லற்படவில்லை. புலிகளால் கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் இருப்பவர்கள் இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களே. ஆகவே, தாம் தொடர்ந்தும் வெளிநாடுகளில் சொகுசாக வாழ்வதற்காகப் பயங்கரவாதப் புலிகளுக்குத் தொடர்ந்தும் பணம் அனுப்புவதன்மூலம் இலங்கையில் வன்முறைகளை புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் வளர்த்துவந்தார்கள்" என்று கருணா கூறினார். புலம்பெயர் தமிழர் பற்றி தொடர்ந்தும் பேசிய கருணா, "ஆனால், சில புலம்பெயர் தமிழர்களுக்கு உண்மை இப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது. பயங்கரவாதிகளை ஊக்குவித்து, சுகபோகங்களை அனுபவிக்கும் இந்த புலம்பெயர் தமிழர்களிடமிருந்து அவர்கள் தம்மை அந்நியப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். நான் எமது ஜனாதிபதி மகிந்தவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்றம், புணர்வாழ்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்கள் பற்றி இந்த புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறேன்" என்றும் அவர் கூறினார். https://www.hindustantimes.com/world/tamil-diaspora-divided-over-transnational-govt-karuna/story-SCcX4YVMKJ5gi2KmrwXnHK.html
  3. சிறிலங்காவிலிருந்து எப்போது தமிழீழம் பிரிக்கப்படும்?
  4. இந்த அடுப்பை பாவித்த அல்லது கண்டு இருக்கீங்களா?
  5. மனிதகுலத்திற்கெதிரான போர்க்குற்றங்களைப் புரிந்த கருணா எனும் குற்றவாளியை தப்பிக்க விட்டது இங்கிலாந்து அரசின் திட்டமிட்ட தவறாகும் - கருணா இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அதிகாரிகள் சகிதம் வந்திறங்கியவேளை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட கண்டனம் காலம் : ஆடி, 5, 2008 மூலம் : ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் புலிகளைப் பிளவுபடுத்தி, பிரிந்து சென்று இயங்கி, பின்னர் இங்கிலாந்திற்குப் போலியான கடவுச் சீட்டுடன் சென்று பிடிபட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மீண்டும் இலங்கையினை வந்தடைந்திருக்கிறார். கடந்த கார்த்திகை மாதம், இலங்கையின் ராஜதந்திரிகளுக்கு வழங்கப்படும் கடவுச் சீட்டினைப் பாவித்து, பாதுகாப்புச் செயலாளரின் உதவியுடன் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்ற கருணா, அங்கு குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது பலருக்கும் நினைவிலிருக்கலாம். கொழும்பிலிருந்துவரும் ஊடகச் செய்திகளின்படி கருணாவோடு இங்கிலாந்து அதிகாரிகள் சிலரும் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது. புலிகளின் தலைவருக்கு அடுத்ததாக அமைப்பில் மிகச் செல்வாக்குள்ளவராக விளங்கிய கருணா 2004 இல் புலிகள் இயக்கத்தை பிரதேச ரீதியாகப் பிளவுபடுத்திக்கொண்டு அரச ராணுவத்துடன் சேர்ந்துகொண்டார். பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எனும் பெயரில் தனது குழுவைப் பதிவு செய்திருந்தார். பின்னர் அக்கட்சியும் இரண்டாகப் பிரிந்தபின்னர், கருணா இலண்டனுக்கு பாதுகாப்புச் செயலாளரின் அறிவுருத்தலின்பேரில் உருவாக்கப்பட்ட போலிக்கடவுச் சீட்டினைப் பாவித்து சென்றார். இதேவேளை, சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களில் ஒன்றான ஹியூமன் ரயிட்ஸ் வொட்ச் அமைப்பு கருணாவை சிறையிலிருந்து விடுவித்தமைக்காக இங்கிலாந்து அரசை சாடியிருப்பதுடன், போர்க்குற்றங்களைச் செய்தவர் என்று நம்பப்படும் ஒரு குற்றவாளியினை விசாரணையெதுவும் இன்றி மீண்டும் இலங்கைக்கே திரும்பிச் செல்ல அனுமதித்தது குறித்தும் கடுமையான கண்டனங்களை முன்வைத்திருக்கிறது. இந்த மனிதவுரிமை அமைப்பு இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கருணாவின் கட்டளையின் கீழ் அவரின் ஆயுதக் குழு இலங்கையில் நடைபெற்றுவரும் சிவில்யுத்தத்தில் மிகவும் கொடிய மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், சிறுவர்களையும், இளைஞர்களையும் கடத்திச் செல்வது, சித்திரவதை செய்வது, பொதுமக்க்களையும், எதிரணிப் போராளிகளையும் கூட்டாகச் சுட்டுக் கொல்வது ஆகிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது. "இங்கிலாந்து அரசிடம் ஒரு ஒரு பேர்போன போர்க்குற்றவாளி கடந்த 6 மாதங்களாக அடைக்கலமாகியிருந்தார், ஆனால் அவர்மீது குற்றங்களைப் பதிவுசெய்து விசாரிக்க இங்கிலாந்து அரசு முயலவில்லை. கொடூரமான மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒருவரைத் தண்டிக்கும் சந்தர்ப்பத்தை இங்கிலாந்து அரசு தெரிந்தே தவறவிட்டு விட்டது" என்று அவ்வமைப்பின் அதிகாரி பிரட் அடம்ஸ் தெரிவித்தார். https://www.hindustantimes.com/search?q=TMVP
  6. பிரபாகரனை வீழ்த்தி, இப்போரில் வெல்வதற்கு நாம் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறோம் - கருணா காலம் : 5, ஆடி, 2008 மூலம் : ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் புலிகளை இரண்டாகப் பிளவுபடுத்தி, வெளியேறிச் சென்ற கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் , "பிரபாகரன் தலைமையிலான புலிகள் குழு தற்போது மிகவும் பலவீனமான நிலையினை அடைந்து விட்டது. ஆனால், அவர்களை முற்றாக அழிக்க சில மாதங்கள் ஆகலாம்" என்று கூறியுள்ளார். "பிரபாகரனின் புலிகள் குழு தற்போது ஒரு பாதுகாப்பு முன்னரங்கினையே அமைத்துவருகின்றது. அவர்களால் தற்போது வலிந்த தாக்குதல் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளமுடியாதவாறு மிகவும் பலவீனமான நிலையினை அடைந்திருக்கின்றனர்" என்று அவர் கூறினார். "ஆனாலும், அவர்களை முற்றாக அழித்து, போரினை வெற்றிகொள்ள ராணுவத்தினருக்கு ஒரு சில மாதங்களாவது தேவைப்படலாம். அது வருகிற மாதமோ அல்லது அதன்பின்னரோ நடக்க வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இப்போரினை வெல்லும் நோக்கில் செயற்பட்டு வருகிறோம்" என்று பிரபாகரனின் முன்னாள் தளபதியும் நெருங்கிய சகாவுமான கருணா பி பி சியின் சிங்களச் சேவையான சந்தேஷயவுக்குத் தெரிவித்தார். இங்கிலாந்திற்குப் போலிக் கடவுச் சீட்டுடன் உள்நுழைய முயன்று, குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, 9 மாதங்கள் சிறப்பு தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் இலங்கை - இங்லிலாந்து அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம் மீளவும் இலங்கைக்கு வந்துசேர்ந்த கருணா, தற்போது பரவலாக பல செய்திச் சேவைகளிலும் பேட்டியளித்துவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால், கருணாவின் இங்கிலாந்துப் பயணத்திற்கோ அல்லது அவர் மீண்டும் நாடு திரும்பியதற்கோ தாம் உதவவில்லை என்று அரசாங்கம் தொடர்ச்சியாக மருத்துவருவத்ரும் குறிப்பிடத் தக்கது. இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியிருக்கும் கருணா சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு விடுத்துவரும் வேண்டுகோளில் மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளான புலிகளை முற்றாக அழித்து இப்போரில் வெற்றியீட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என்று கூறிவருகிறார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்த கருணா, தனது முன்னாள் சகாவான பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும், தனது கட்சியின் தலைவராகவும் இயங்குவது தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். https://www.hindustantimes.com/search?q=karuna amman
  7. ரஜீவ் காந்தியின் படுகொலையினை திட்டமிட்டு நடத்தியவர்கள் பிரபாகரனும் பொட்டு அம்மானுமே. பிரபாகரனினாலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பின. சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பியபோது நான் மிகவும் மனவேதனையடைந்தேன் - கருணா காலம் : சித்திரை 29, 2009 மூலம் : பிரஸ் டஸ்ட் ஒப் இந்தியா & ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், அவ்வியக்கத்தின் உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுமே முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தினைத் தீட்டி, இயக்கத்தினுள் எவருமே அறியாவண்ணம் நடைமுறைப்படுத்தினார்கள் என்று புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியும், பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவருமாக இருந்து பின்னர் இயக்கத்திலிருந்து விலகி இலங்கை ராணுவத்தில் இணைந்து தற்போது மகிந்த ராஜபக்ஷவின் அரசில் அமைச்சராகவிருக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். "அவர்கள் இருவரும் , இயக்கத்தில் வேறு எவரும் அறிந்திடாவண்ணம் இந்தப் படுகொலைக்கான திட்டத்தினை வகுத்துச் செயற்பட்டார்கள்" என்று அவர் கூறினார். புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த கருணா, "நான் எப்போதும் சமாதானத்தையே விரும்பி வந்தேன். பல்லாண்டுகளாக நடைபெற்றுவந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சாத்தியமானது என்று முழுவதுமாக நம்பியிருந்தேன். ஆனால், மாயையான உலகில் வாழ்ந்துவந்த பிரபாகரனுக்கு நான் சொல்லிவந்தது புரியவில்லை" என்று கூறினார். "ராஜீவைக் கொல்லும் நாசகாரத் திட்டத்தினை அவர்கள் இருவருமே மிகவும் ரகசியாமத் தீட்டினார்கள். வேறு எவரையும் அவர்கள் நம்பவில்லையென்பதையே இது காட்டுகிறது. எனக்கு இவ்வாறான நாசகாரப் படுகொலைகளில் நம்பிக்கை இருக்கவில்லை, இவ்வாறான அவர்களின் செயல்களை நாம் எப்போதும் எதிர்த்தே வந்திருந்தேன்" என்று இன்று அமைச்சராகவிருக்கும் கருணா பி டி ஐ செய்திச் சேவைக்குக் கூறினார். ராஜீவ் காந்தி 1991, மே மாதம் 21 ஆம் திகதி தமிழ்நாடு சிறிபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தவேளை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். அவரைக் கொல்ல உத்தரவிட்டது பிரபாகரனும் பொட்டு அம்மானும் தான் என்கிற முடிவினை கருணாவும் உறுதிப்படுத்தினார். 1987 இல் இலங்கைக்கு இந்திய ராணூவத்தினரை அனுப்பியதற்குப் பழிவாங்கவே பிரபாகரன் ராஜீவைக் கொன்றார் என்று பரவலாக நம்பப்படுகிறது. "வன்முறைகளைக் கைவிட்டு, சமாதானத்தில் ஆர்வம் காட்டுமாறும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் நான் அவருக்குத் தனிப்பட முறையில் எழுதிய கடிதத்தை என்முன்னாலேயே கிழித்துப்போட்ட பிரபாகரன், என்னை அவமானபடுத்தினார். புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பியபோது நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். பிரபாகரனின் ஒத்துழைக்காமை எனும் அகம்பாவத்தாலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் குழம்பின என்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே". "பிரபாகரன் ஒருபோதுமே இனப்பிரச்சினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டுமவிடும் என்று நம்பியிருக்கவில்லை. யுத்தத்தினாலும், வன்முறையாலுமே தீர்வு காணலாம் என்று அவர் இறுதிவரை நம்பியிருந்தார். அவர்களின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் கூட எனது நிலைப்பாட்டிலேயே இருந்தார், ஆனால் பிரபாகரன் அவரைக் கூட மதிக்கவில்லை" என்று கருணா கூறினார். புலிகளிடமிருந்து விலகி ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட கருணா, தனது குழுவை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்னும் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்துகொண்டிருந்தார். ஆனால், அவரின் கீழ் செயற்பட்டுவந்த இன்னொரு ஆயுததாரியான பிள்ளையான் கட்சியின் தலைமைப் பொறுப்பினைக் கைப்பற்றியதையடுத்து கருணா ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணியில் இணைந்துகொண்டதுடன், அக்ககட்சியின் உபதலைவர்களில் ஒருவராகவும் பதவியேற்றார். கருணா இலங்கையின் நீர்ப்பாசண அமைச்சராகவும், மீலிணக்க அமைச்சராகவும் பதவிவழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட அதேநேரம், அவரது வைரியான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக அரசு ஆதரவுடன் பதவியேற்றார். https://www.hindustantimes.com/world/prabhakaran-pottu-amman-hatched-rajiv-killing-plot-karuna/story-8dfdZvaONlTbBWCv1fFSAP.html
  8. ஒத்தைக்கல்லு மூக்குத்தி ......! 💞
  9. அண்ணை, அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களை தாங்களே முன்னின்று கொன்றும், கொல்லவும் உதவியதை எப்படி ஏற்றுக்கொள்வது? குடும்பிமலை (தொப்பிகல) பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தளத்தை அழிப்பதற்கு கருணாவே முதலில் தனது போராளிகளை தயார்ப்படுத்தி வந்தார். ஆனால், பிள்ளையான் இடையில் முறித்துக்கொண்டு ஓட, வெறும் 300 சிறுவர்களை மட்டுமே வைத்துக்கொண்டிருந்த கருணாவால் புலிகளின் தளத்தைக் கைப்பற்ற முடியாது என்று உணர்ந்த ராணுவம் அத்தாக்குதல் திட்டத்தினை பிள்ளையானிடமே வழங்கியிருந்தது. ஆனால், தன்னிடமே அந்தத் தாக்குதல் திட்டம் தரப்படவேண்டும் என்று கருணா மங்களன், இனியபாரதி போன்றவர்களை தூதுக்கு மேல் தூதாக அனுப்பி ராணுவத்தினரிடன் இரைஞ்சியதாக ராணுவம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டும்தான்.
  10. இன்று ஞாயிறு .......வித்தியாசமாக இதுபோன்ற ஒரு உணவை செய்து சாப்பிடலாமே.அருமையாக இருக்கும் ......பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.......! 👍
  11. காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.." கலெக்டர் தலை குனிந்தார்... நமது அப்பனும் பாட்டனும் இந்த நல்ல மனிதரைத் தோற் கடித்த பாவத்துக்கு தான் நாம் இப்போது இந்த பாவிகளிடம் சிக்கிச் சீரழிகிறோம் ( முன்னோர் செய்த பாவம் பிள்ளைகளைத் தானே சேரும்)?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.