Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    39366
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46979
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33845
    Posts
  4. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1964
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/05/21 in Posts

  1. அவன் : டேய்.. முதுகு சொறியுது கொஞ்சம் சொறிஞ்சு விட்ரா.. இவன் : எங்க ? அவன் : ஆப்கானிஸ்தானுக்கு மேல டா
  2. கருணாவுக்குக் கொடுக்கப்படும் 4 இலிருந்து 6 மாத கால தண்டனைக்குப் பின்னர் அவர் மீண்டும் கிழக்கின் அதியுச்ச தளபதியாக தலைவரால் நியமிக்கப்படுவார் எனும் மூத்த தளபதிகள் பலரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக புலிகளின் மேற்குப் பிராந்தியத் தளபதியும், மாத்தையாவின் நெருங்கிய சகாவும், பிரபாகரன் கொல்லப்படவேண்டும் எனும் சதியில் பங்கு கொண்டவருமான கேர்ணல் ஜெயம் இன்றுவரை புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக தலைவரால் நியமிக்கப்பட்டு செயற்பட்டுவருவதையும் சுட்டிக் காட்டுதல் அவசியம். கருணாவின் துரோகத்தைக் காட்டிலும் படுபாதகத்தனமான துரோகத்திற்குத் துணைபோன கேர்ணல் ஜெயத்திற்கே தலைவர் மன்னிப்பளித்து பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார் என்றால், தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான கருணாவுக்கு நிச்சயம் தலைவர் மன்னிப்பளிப்பார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. மாத்தையாவுடனான துரோக நாடகத்தில் கைதுசெய்யப்பட்ட ஜெயம், சிறையில் அடைக்கப்பட்டு, கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு, புலிகளின் உறுப்பினர் எனும் பதவியும் மீளப் பெறப்பட்டு சாதாரண மனிதராக விலக்கப்பட்டார். ஆனால், இயக்கத்தை விட்டு விலகிச் செல்வதை நினைத்துக்கூடப் பார்க்க விரும்பாத ஜெயம், மீண்டு சாதாரண போராளியாக இயக்கத்தில் இணைந்து , தனது முயற்சியின் மூலம் இயக்கத்தில் முன்னேறி கேர்ணல் எனும் தரத்திற்கு உயர்ந்துவந்தார். ஜெயத்தைக் கேர்ணலாகப் பதவியுயர்த்த வேண்டும் என்கிற வேண்டுகோளினை பிரபாகரனே புலிகளின் மூத்த தளபதிகள் கவுன்சிலிடம் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஜெயத்தின் குற்றத்தோடு ஒப்பிடும்போது, தலைமையின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமை என்பதோ அல்லது இயக்கத்திற்குச் சொந்தமான 50 - 60 மில்லியன் ரூபாய்களை களவாடியதோ பெரும் குற்றங்களாகப் பார்க்கப்படமுடியாவிட்டாலும் கூட, கருணாவின் கேர்ணல் தரம் பறிக்கப்படும் என்றும், அவருக்கு ஒழுக்காற்று தண்டனையாக சில மாதங்கலாவது பணிநீக்கம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவே கருணாவுக்குப் பிரச்சினையாக இருந்தது. மட்டக்களப்பில் தனக்குக் கீழே இருக்கும் போராளிகளின் முன்னாலும், மொத்த கிழக்கு மாகாணத் தமிழர்களின் முன்னாலும் தனக்கிருப்பதாக கருணா நினைத்திருந்த புலிகளின் ஒப்பற்ற தளபதி எனும் பெயரும் புகழும் தனது குற்றங்களுக்கான தண்டைகள் மூலமும், தனது பதவியிறக்கம் மூலமும் சரிக்கப்படுவதை கருணா ஏற்றுக்கொள்ள மறுத்தார். கருணாவின் கிளர்ச்சி தொடர்பாக தளபதி ரமேஷிடம் பேசிய தலைவர், "இந்தப் பிரச்சினையினை எப்படிக் கையாள்வது என்றே சிந்திக்கிறேன். முன்னைய காலத்தில் இயக்கத்திற்கெதிராக துரோகங்களை நான் சந்தித்திருக்கிறேன், அவற்றை சுலபமாகக் கைய்யாண்டும் இருக்கிறேன். ஆனால் இவனுக்கு வந்திருக்கிற பிரச்சினை என்னவென்றால், அவனுக்கு விசர் பிடிச்சிருக்குதெண்டு நினைக்கிறன்" என்று கூறியிருக்கிறார். ஆக, கருணாவின் கிளர்ச்சியை தலைவர் கருணா மதியீனமாக நடப்பதால் உருவானதென்றே நினைத்திருப்பதாகத் தெரிகிறது. மட்டக்களப்பிற்குச் சென்று கருணாவுடன் சமரசத்தில் ஈடுபட்டு, அவரை மீண்டும் வன்னிக்கு அழைத்துவர தமிழ்ச் செல்வன் முயன்று கொண்டிருக்க, கருணா வெளிப்படையாக தான் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்தார். இதனால், தமிழ்ச்செல்வனின் முயற்சியும் கைவிடப்பட்டது. கருணாவின் தனித்து இயங்குவதான பகிரங்க அறிவிப்பினைம் அடுத்து, அவரை உடனடியாக இயக்கத்திலிருந்து புலிகள் விலக்கினர். ஆனால், அவரது செயல துரோகமாகப் பார்க்க மறுத்த தலைமைப் பீடம், ஜெயசிக்குரு எதிர்ச்சமரில் கருணா ஆற்றிய பங்கிற்காக அவரை பிணக்கின்றி வெளியேறிச்செல்லும் சந்தர்ப்பத்தைத் தருவதாகவும் செய்தியனுப்பினர். அசோசியேட்டட் நியூஸ் எனும் செய்திச் சேவைக்கு கருணா பகிரங்கமாக தான் தனித்து இயங்குவதாக அறிவித்து 5 அல்லது 6 நாட்களுக்குப் பின்னரும் புலிகள் பல தூதுவர்கள் வழியாக கருணாவுக்கான பிணக்கின்றி வெளியேறும் திட்டம்பற்றித் தொடர்ச்சியாகத் தூதுகளை அனுப்பிக்கொண்டே வந்தனர். புலிகள் கருணாவுக்கு வழங்க விரும்பிய சன்மானத்தின்படி, கருணா இயக்கத்திலிருந்து விலகி, தனது குடும்பத்தினரையும் கூட்டிக்கொண்டு பிறிதொரு நாட்டிற்குச் சென்று வாழ முடியும். அத்துடன், கருணா தன்வசம் வைத்திருக்கும் இயக்கத்திற்குச் சொந்தமான பணத்தினையும் அவரே வைத்திருக்கலாம் என்றும் புலிகள் கூறியிருந்தனர். மேலும், மட்டக்களப்பில் புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையிலான தூதராகச் செயற்பட்ட ஒருவர் ஒரு படி மேலே சென்று, "நீங்கள் புலிகளை நம்பவில்லையென்றால், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரூடாக நீங்களும், உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக வெளிநாடு செல்வதை புலிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் கருணாவிடம் கூறியிருந்தார்.
  3. முதல்ல சொறியிறவருக்கு ஆப்கானிஸ்தான் எங்க இருக்கு என்று தெரியவேணும்.....அநியாயத்துக்கு அண்டார்டிக்காவில சொறியப் போகிறார்......! 😂
  4. வணக்கம் வாத்தியார்.....! பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய்........! ---முதல் கனவே---
  5. கருணாவுக்குப் புலிகளால் அனுப்பப்பட்ட பொதுமன்னிப்புப் பற்றிய தகவல்களை கருணாவிடம் கொண்டுவந்து சேர்த்தவர்களில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதியான அலிசாஹீர் மெளலானாவும் ஒருவர். இந்தவிடத்தில் கருணாவின் பிரிவின் பின்னாலிருந்த அலிசாஹீர் மெளலானா - ஐக்கிய தேசியக் கட்சியின் சதிபற்றியும் நான் புரிந்துகொள்ளுதல் அவசியம். கருணாவும், அலிசாஹீர் மெளலானாவும் பள்ளிப்பருவத்திலிருந்தே தோழர்கள் என்கிற தவறான கட்டுக்கதைகள் பரப்பட்டு வந்தன. ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையிலான சிநேகம் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே ஆரம்பமானது என்பதே உண்மை. மெளலானா நெடுங்காலமாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலே படித்தவர். கருணாவுக்கு பல வருடங்கள் வயதில் மூத்தவர். கருணாவோ கிரானில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் உயர்தரத்திற்காக மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்கும் சென்றவர். ஆகவே இவர்கள் இருவரும் பள்ளித்தோழர்கள் என்பது தவறான தகவல். 2001 இல் கருணா கிழக்கு மாகாணத்தின் சிறப்புத் தளபதியாகப் பதவியேற்று கிழக்கில் செயற்பட ஆரம்பித்திருந்த வேளை, புலிகளின் புலநாய்வுத்துறை தமது அன்றாட தகவல் அறியும் செயற்பாடுகளில் கருணாவுக்கும் இயக்கத்திற்கு வெளியில் இருக்கும் சக்திகளுக்கும் இடையிலான சில தொடர்புகள் பற்றி அறிந்துகொண்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சில மாதங்களுக்கிடையில் கிழக்கிலிருக்கும் ஒரு பலம்வாய்ந்த ஐ தே க அரசியல்வாதியூடாக அரசாங்கம் கருணாவுடன் நேரடியாகத் தொடர்பொன்றினை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்ததும், இத்தொடர்பிற்கு தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியினை அரசு கோறியிருந்ததும் புலிகளுக்குத் தெரியவந்தது. அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதி என்று கட்டிக் கொண்டாலும், ஐ தே க அரசின் உயர் மட்ட தலைவர்களுடன் நெருக்கமான நட்பினையும் கொண்டிருந்தவர். ஆனால், தன் மூலம் கருணாவுக்கும் அரசுக்கும் இடையே உருவாகவிருக்கும் நேரடித் தொடர்பின் தாக்கத்தினை உணர்ந்துகொண்ட அந்த பாராளுமன்ற உறுப்பினர் இறுதிநேரத்தில் ஐ தே க அரசினால் தனக்கு விடுக்கப்பட்ட "கருணாவுடன் நேரடித் தொடர்பு" எனும் வேண்டுகோளினை ஏற்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ தே க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும், கொழும்பிலேயே தொடர்ச்சியாக வாழ்ந்துவந்தவரும், ஐ தே க வின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவருமான ஒரு அரசியல்வாதி கொக்கட்டிச்சோலைக்கு சில கிலோமீட்டர்கள் மேற்கே அமைந்திருக்கும் மறைவிடம் ஒன்றில் கருணாவுடன் ரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக நன்கு அறிந்துவைத்திருந்த புலிகள், சில மாதங்களுக்குப் பின்னர் ஐ தே க வினர் உங்களோடு தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம், ஆகவே அவதானமாக இருங்கள் என்று கருணாவை எச்சரித்திருந்தனர், ஆனால் இதற்கான காரணத்தை அவர்கள் அப்போது கருணாவிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், புலிகளின் புலநாய்வுத்துறையின் இந்த "ஐ தே க தொடர்பு" எச்சரிக்கையினை கருணா சட்டை செய்யவில்லை. அவரைப்பொறுத்தவரை தலைவர் தன்னை முழுவதுமாக நம்புவதால், தன்பற்றிய புலநாய்வுத்துறையினரின் தகவல்களை தலைவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றே அவர் நம்பினார். "கருணா அம்மாண் எதைச் செய்தாலும் புலிகளின் நண்மைக்காகவே செய்வார் என்பதை தலைவர் நன்கு அறிவார். அம்மான் பற்றி புலநாய்வுத்துறை காவிச் செல்லும் செய்திகளை தலைவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று கருணாவுக்கு நெருக்கமான கிழக்கு மாகாண போராளி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, கருணாவுக்கும், ஐ தே க வின் தலைவர் ரணிலின் ஆலோசகரான மெளலானாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்களாகப் பழகத் தொடங்கினர். கருணாவின் மனைவி நிராவும் அவரது இரு பிள்ளைகளும் மெளலானாவின் மனைவியான தனுஜாவைச் சந்திக்க அடிக்கடி கொழும்பிற்குச் சென்றுவரத் தொடங்கினர். இவர்களுக்கிடையிலான நெருக்கம் நாளடைவில் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்ட சர்வதேச பாடசாலை ஒன்றினைத் திறந்துவைக்கும் நிகழ்விற்கு திருமதி மெளலானாவைக் கருணா குடும்பம் அழைத்துவந்ததுவரை நீண்டு சென்றது. இந்தச் சர்வதேசப் பாடசாலையின் மிக பிரபலமான மாணவர்களாக கருணாவின் பிள்ளைகளும், அவரின் சகாக்களான துரை மற்றும் ராபேர்ட் ஆகியோரின் பிள்ளைகளும் இருந்தனர் என்பதும், இவ்விரு சகாக்களும் தற்போதுவரை (2004) அங்கேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது. கருணாவின் பிள்ளைகளும், ஏனைய தலைவர்களின் பிள்ளைகளும் சொகுசு வாகனங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மட்டக்களப்பின் மேற்குப்புற காட்டுப்பகுதியிலிருந்து இந்தப் பாடசாலைக்கு வந்துசெல்லத் தொடங்கினர். இந்த நிகழ்வு கருணாவினாலும், அவரது சகாக்களாலும் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரைக் கடுமையாகப் பாதித்திருந்தது. பல பெற்றோர்கள் இதுதொடர்பான முறைப்பாடுகளை புலிகளின் தலைமைப் பீடங்கள் அமைந்திருந்த கிளிநொச்சிக்கும், புதுக்குடியிருப்பிற்கும் தொடர்ச்சியாக அனுப்பி வந்தனர். கிளிநொச்சியிலும் புலிகளால் ஒரு ஆங்கில மூலப் பாடசாலை ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இயக்கத்தின் தளபதிகளினதோ அல்லது மூத்த உறுப்பினர்களினதோ பிள்ளைகளை இப்பாடசாலையில் அனுமதிப்பதில்லையென்கிற கடுமையான கட்டுப்பாடும் அங்கு நிலவிவந்தது. சமர்களில் கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பங்களிலிருந்து திறமையுள்ள பிள்ளைகள் தெரிவுசெய்யப்பட்டு இந்தப்பாடசாலைக்குச் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆகவே, மட்டக்களப்புச் சர்வதேச பாடசாலையில் தனது பிள்ளைகளைக் கருணா இணைத்துக் கற்பித்துவருவது பற்றி கருணாவிடம் பேசிய தலைவர், இது இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், கருணாவின் பிள்ளைகள் மற்றும் அவர்களைக் கொண்டு வரும் புலிகளின் போராளின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலான விடயமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். புலிகளின் மூத்த தளபதியொருவரின் பிள்ளைகள் பூரண அரச கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குச் சென்றுவருவதும், அரச புலநாய்வுத்துறையினால் அவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதும் பாரதூரமான விடயம் என்பதையும் தலைவர் கருணாவிற்குச் சுட்டிக் காட்டியிருந்தார். ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தரமான பாடசாலைகள் இல்லாமயினாலேயே தான் தனது பிள்ளைகளை சர்வதேசப் பாடசாலைக்கு அனுப்பிவருவதாகக் கருணா கூறியபோது, "உனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாடொன்றிற்கு அனுப்பி அங்கு படிக்கவை, நாட்டில் நிலமை சுமூகமாகி, பிள்ளைகளின் படிப்பிற்குச் சரியான ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர் அவர்களை மீண்டும் இங்கு அழைத்து வா" என்று தலைவர் கருணாவிடம் கூறியிருக்கிறார். கருணாவுக்காக இயக்கத்தின் விதிகளை அவ்வப்போது தளர்த்திய தலைவர், தொடர்ச்சியாக கருணாவின் மனம் கோணாதபடி பார்த்துவந்தார் என்று அவருடன் நெருங்கியவர்கள் கூறுகிறார்கள். தலைவரால் வெளிநாடொன்றிற்கு பிள்ளைகளையும் மனவியையும் அனுப்புமாறு கோரப்பட்டதன் பின்னரே கருணா தனது குடும்பத்தினை மலேசியாவுக்கு அனுப்பிவைத்தார் என்றும், ஆனால் இது தவறுதலாக கருணா இயக்கத்திற்குத் தெரியாமல் குடும்பத்தை அங்கு அனுப்பியதாகவும், செல்லையா ராசதுரை இதற்கு உதவியதாகவும் சில செய்திச் சேவைகள் செய்திவெளியிட்டு வந்திருந்தன.
  6. டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு, இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...." மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள். கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு. மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு. இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான். மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்ததும் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும். சுடுகாட்ல புக் பண்ணனும். உங்களுக்கென்ன காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல. ஜாலியா போயிருவீங்க!! கணவன்:
  7. பயமா எங்களுக்கா .....ஹா......ஹா ........ஹா......! 😂
  8. கருணாவைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் தமது நோக்கத்திற்காகப் பாவிப்பது எந்தளவு தூரத்திற்கு வெற்றிகரமானதாக இருக்கும் எனும் ராணுவத்தினரின் கேள்விக்கான பதிலை நான் சற்று விளங்கப்படுத்த முயல்கிறேன். கருணாவின் பிளவானது புலிகளியக்கத்திற்கு முன்னர் ஏற்பட்ட ஏனைய பிளவுகளைக் காட்டிலும் வித்தியாசமானது என்று சிலர் கூறலாம். இதில் முதலாவதாக 1978 இல் பிரபாகரனுடன் முரண்பட்டுக்கொண்டு உமா மஹேஸ்வரன் பெருமளவு வளங்களையும் எடுத்துக்கொண்டு பிரிந்து சென்றது. பின்னர் பிரபாகரனின் இரண்டாம் நிலைத் தளபதியாகவிருந்த ராகவன் 1985 இல் பிரிந்து சென்றார். 1992 இல் மாத்தையாவின் கலகம் நடந்தது. இவை மூன்றுமே பிரபாகரனை "தம்பி" என்று அழைத்த காலகட்டத்துப் போராளிகளால் நடைபெற்றவை. இவர்கள் அனைவருமே பிரபாகரனைக் கொல்ல விரும்பியிருந்தனர். அதற்கான மிகவும் தெளிவான திட்டங்களும் அவர்களிடம் இருந்தன. என்னைப்பொறுத்தவரை கருணாவின் பிரிவென்பது ஆரம்பம் முதல் இறுதிவரை தற்செயலாக நடந்தது என்றே நினைக்கிறேன். இப்பிரிவினைக் கருணா நீண்டகாலமாகத் திட்டமிட்டு வந்தார் என்று நான் நம்பவில்லை. அவர் பிரபாகரனின் தலைமைத்துவத்தை நிராகரிக்கவில்லையென்றும், விடுதலைக்கான பாதையினை விட்டு அகலப்போவதில்லையென்றும் தனது 42 நாள் கிளர்ச்சியின்போது தனது ஆதரவாளர்களிடமும், சமாதானம் செய்ய முன்வந்த பலரிடம் தொடர்ச்சியாகக் கூறிவந்திருந்தார். பிரபாகரனை "அண்ணை" என்று அழைக்கும், பிரபாகரனின் ஆளுமையினை, வெற்றியினினைக் கண்டு தரிசித்த, அவரால் வளர்க்கப்பட்ட போராளிகளின் காலகட்டத்தில் இருந்தே கருணாவும் வந்திருக்கிறார். கிழக்கில் தனித்து இயங்குவதாக கருணா பிரபாகரனுக்கு எழுதிய முதலாவது கடிதத்தில், "நீங்கள் எனக்குக் கடவுளைப் போன்றவர்" என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆரம்பத்தில் கருணாவின் கிளர்ச்சியென்பது, தன்னை சுதந்திரமாக, பிரபாகரனுக்கு நேரடியாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தளபதியாக செயற்பட அனுமதிக்கும் வேண்டுகோளாகவே அமைந்திருந்தது. அத்துடன், புலிகளியக்கத்தின் ஏனைய தலைவர்களோ, தளபதிகளோ தனது நிர்வாகத்தில் தலையிடுவதனை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் பிடிவாதமாகக் கூறியிருந்தார். ஆனால், பிரச்சினை மாசி மாதம் 16 ஆம் திகதியே தொடங்கியது. புலிகளின் ராணுவத் தலைமைச் செயலகம் கருணாவை வன்னிக்கு வருமாறு அழைத்தபோது, அதனை கருணா வெளிப்படையாக நிராகரித்தப்பதாக பிரபாகரனுக்கு அறிவித்தபோதே அது ஆரம்பமாகியது. தான் வன்னிக்குச் சென்றால், புலிகளின் தலைவைரின் கோரிக்கையினை நிராகரித்ததற்குத் தண்டனையாக தனது பதவி பறிக்கப்படும் என்று நிச்சயமாக கருணா தெரிந்து வைத்திருந்தார். ஐரோப்பாவில் கருணா சென்ற இடங்களிலெல்லம் தமிழ் மக்கள் அவரை பெரிய வீரனாகவே பார்த்தார்கள். கூடச் சென்ற தமிழ்ச் செல்வனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. கருணா சிறிது சிறிதாக, ஆனால் தவிர்க்கமுடியாமல் யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியே தான் என்றும், அந்தவிடுதலை தன்னால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் அவர் நம்பத் தொடங்கினார். தனது கிழக்கு மாகாண தாளபதிக்கும் தனக்கும் இருந்த நெருங்கிய நட்பினாலும், நம்பிக்கையினாலும், பிரபாகரன் தனது உளவுத்துறையும், கணக்காய்வுத்துறையும் கருணா பற்றிய முறைகேடுகளை அவரிடம் முன்வைத்தபோது அவற்றை ஏறெடுத்துப் பார்க்கக் கூட விரும்பியிருக்கவில்லையென்றும், கருணா கூறுவதுபோல நிர்வாகத்தில் தலையீடுகள் இருப்பின் அவற்றினை நிவர்த்திசெய்து கருணாவை கிழக்கின் தளபதியாகத் தொடர்ந்து பணியாற்ற பிரபாகரன் விரும்பியிருந்ததாகவும் தெரியவருகிறது. போராட்டத்தின் மீதும், இயக்கத்தின்மீதும் கருணா வைத்திருந்த விசுவாசத்தை ஆணித்தரமாக நம்பியிருந்த பிரபாகரன், கருணா கேட்பவற்றை வழங்கும் விருப்பினைக் கொண்டிருந்தார் என்றும் தெரியவருகிறது. கடந்தவருடம் கருணா வன்னிக்குச் சென்றிருந்தவேளையில், கிழக்கில் தமிழீழ நீதித் துறை மற்றும் காவல்த்துறை நடவடிக்கைகளுக்கு கருணாவின் போராளிகளால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பாக பிரபாகரன் கருணாவைக் கடிந்துகொண்டதாகத் தெரியவருகிறது. இதனால் கருணா அவமானப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல, மட்டக்களப்பு சர்வதேச பாடசாலை விவகாரத்தில் கருணாவின் செயற்பாடு தலைவருக்குத் தெரியவந்தபோது, அதனைக் கூட தோழமையுடனான அறிவுருத்தலினையே பிரபாகரன் கருணாவுக்கு வழங்கியிருந்தார். கருணா மிக உயர் தளபதியாகப் பிரகடணப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து தலைவரிடமிருந்து கருணாவுக்கு பாராட்டுதல்களும், கணிவான அறிவுருத்தல்களும் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தன என்றால் மிகயில்லை. ஆனால் தற்போதோ, தலைவரின் கட்டளையினை வெளிப்படையாக நிராகரித்தமை, பாரிய நிதிமுறைகேடுகள் ஆகிய குற்றங்களுக்காக கருணா தனது தகைமையினை இழக்கப்போவது உறுதியென்று அவர் தெரிந்துவைத்திருந்தார். கருணாவைப் பொறுத்தவரை தனது தலைவரின் முன்னால் இவ்வாறான குற்றவுணர்வுடன் நிற்பது தாங்கொணாத, மிகப்பெரிய அவமானம் என்று கருதினார். ஆகவே இதற்கான ஒரே பரிகாரமாக, "வீட்டுவேலையினைச் செய்யவில்லையென்றால், பள்ளிக்கு ஒழிப்பது போல " தலைவரிப் பார்ப்பதைத் தவிர்ப்பதே ஒரே முடிவென்று அவர் கருதினார். முதலில், கருணாவின் நிராகரிப்பின் பின்னால் வெளிச்சக்திகள் இருக்கின்றனவா என்று புலிகள் ஆராயத் தொடங்கினர். ஆரம்பத்தில் தலைவரின் கட்டளையினை நிராகரிக்கும் கருணாவின் முடிவின் பின்னால் இலங்கை ராணுவத்தின் உளவுப்பிரிவோ அல்லது வெளிநாட்டுச் சக்திகளோ இல்லையென்பதை புலிகள் அறிந்துகொண்டார்கள். கருணாவின் பின்னால் அமெரிக்கா இருக்கலாம் என்று கரிகாலன் கூறியது, செய்தியாளர் ஒருவரினால் அவர் மீண்டும் மீண்டும் துருவப்பட்டு சங்கடத்திற்கு உள்ளானபோதுதான் என்பது வெளிப்படை. இக்கட்டத்தில், தமிழ்ச் செல்வன் மட்டக்களப்பிற்குச் சென்று, கருணாவுடன் சுமூகமாகப் பேசி, அவரை வன்னிக்கும் அழைத்துவரும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்வந்தார். புலிகளின் மூத்த தளபதிகளின் கருத்துப்படி, கருணாவை விசாரித்து, தனது நியாயப்படுத்தமுடியாத செலவுகளுக்கான காரணங்களை வெளிப்படுத்தத் தவறிய குற்றத்திற்காக 4 இலிருந்து 6 மாதாங்கள் தண்டனைக்குப் பின், அவரை மீண்டும் சகல அதிகாரங்களுடனும் கிழக்கு மாகாணத்தின் தளபதியாக நியமிக்கும் யோசனையில் பிரபாகரன் இருந்ததாகத் தெரியவருகிறது.
  9. அம்மாவை மாத்த வேண்டும்.....என்ன ஒரு அறிவு........எங்களுக்கும் பிறந்திருக்குதுகள் ஒன்றுக்கும் இவ்வளவு அறிவு கிடையாது......! 😂
  10. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும் நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு அள்ளி அள்ளித் தந்து உறவாடும் அன்னமடி இந்த நிலம் போல சிலருக்குத் தான் மனசு இருக்கு உலகம் அதில் நிலைச்சு இருக்கு நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல யாரோ வழித்துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல ஆண் : இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே......! ---இளங்காத்து வீசுதே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.