முனைய பகுதி,
1)கிரிப்டோ வுக்கான உந்துதல்,
2)வங்கித்துறையின் அதிகார துர்ப்பிரயோகம் சமூகத்தை ஆத்திரம் கொள்ளவைத்தது
3)தொழில் நுட்பம், மற்றும்
4) சந்தை கிரிப்டோ ஐ எப்படி பார்க்கின்றன என்பதன் அடிப்படையில்.
இப்பொது, பொருளியல் அடிப்படையில் கிரிப்டோ.
இதை இங்கு நான் எழுத தான் வேண்டும். இதை விளக்குவது, திரட்டி எழுதுவது மிகவும் கடினமாக இருக்கிறது (கதைக்கும் போது இலகு) . இயலுமானவரை முயற்சிக்கிறேன்.
மற்றது, இதை நான் குழப்புவதற்கு எழுதவில்லை. இதை வாசித்து, புரிந்து கொண்டால், கிரிப்டோ இன் ஊன்றுதல், எழுச்சிக்கான பின்புலம், முக்கியமாக பொருளியல் பின்புலம், bitcoin போன்றவை இப்படி விலை எகிறுவதில் பொருளியல் நியாயப்பாடுகள் இருக்கிறதா, எந்தவொரு கிரிப்டோ உம் தக்க பெறுமானம் கொண்டு இருக்கிறதா என்பதை கேல்விக்கு உள்ளாகும் போக்கு என்று பல ஆய்வு கோணங்ககளில் சிந்திக்க தூண்டும்.
எந்தவொரு crypto currency இலும் உள்ளக பெறுமானம் இருக்கிறதா என்றால், crypto currency இன் உற்பத்தி செலவை தவிர்த்து, இல்லை என்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை.
ஆனால், அரசுகள் உற்பத்தி செய்யுயும் நாணயங்களுக்கு உள்ளக பெறுமானம் இருக்கிறதா இருக்கிறதா என்றால், உற்பத்தி செலவை தவிர்த்து, அதற்கும் இல்லை ன்பதே பொருளியல் அடிப்படையில் உடனடியான விடை.
நாணயம் பெறுமானத்தை கடத்தும் கருவிகள் (இதை வேறு திரியில் சொல்லி இருக்கிறேன்).
நாணயத்தின் உள்ளக பெறுமானத்தை அரசுகள் எவ்வாறு, அவற்றின் financial system ஊடக பெறுகிறது, நிர்ணயிக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறேன் (அதைவிட்டு வேறு இலகிய வழியில் கதைப்போம்).
உண்மையில், நாணய உற்பத்தி என்பது, நாணயத்தை உற்பத்தி செப்பவர்களுக்கு வருமானத்தையும், இலாபத்தையும் ஈட்டிக் கொடுக்கிறது.
அரச சேவைகளில், அதி கூடிய, நோகாத வருமானமும், இலாபமும் இருப்பது, நாணய உற்பத்தி, பெறுமான நிர்ணயம், உத்தரவாதம் என்ற, பொதுவாக வெளிப்படையாக (இதில் ஈடுபாடு கொண்டோரை தவிர) தெரியாத, உணரமுடியாத (intangible) சேவையில்.
நாணய உடற்பதியில் அரசு ஈட்டும் இலாபத்தித்திற்கு, குறிப்பாக ஓர் பெயர் இருக்கிறது பொருளியலில், அது Seigniorage (google இல் தேடி பார்க்கவும்). உண்மையில், இந்த Seigniorage ஐ நேரடியாக மத்திய வங்கிகள் உழைப்பதில்லை, அது வட்டி வழியாகவே உழைக்கப்படுகிறது. அனால், அந்த உழைக்கும் முறை இங்கே சொல்வதின் அடிப்படையை மாற்றாது.
ஆகவே, நாணய உற்பத்தியின் ஏகபோக உரிமையம், அதிகாரமும் இருப்பது அரசுகளுக்கு வேண்டும், அதை வேறு எவரும் அசைப்பதை எந்த ஓர் அரசும் விரும்பாது. இங்கே முக்கியமான அரச அலகு மத்திய வங்கிகள்.
அரசுக்கள் தமது நாணய உற்பத்தி செலவை குறைப்பதை நோக்கமாக கொண்டு, தங்கம், வெள்ளி, ஈயம், செப்பு என்று வரலாற்றின் வழியாக இப்பொது plastic notes இல் வந்து நிற்கிறது.
crypto இலும், உற்பத்தி செய்பவர்களுக்கு வருமானம், இலாபம். ஆனால், crypto ஐ உற்பத்தி செய்பவர்கள் தனியார்கள்.
அரசுகளுக்கு போட்டியாக இப்பொது தனியார்கள் நாணயத்தை கிரிப்டோ வடிவில் உற்பத்தி செய்கிறார்கள், அரசின் ஏகபோக நாணய உற்பத்தி, அதன் வருமானம், இலாபத்தை, தனியார்கள் பங்கு போடுகிறார்கள்.
மத்திய வங்கிகள் மற்றும் அரசுக்கள் ஒன்றும் வெளிப்படையாக சொல்லவில்லை ஆயினும், ஒருபக்கம் அவர்களுக்கு பயமும், மறு பக்கம் ஆத்திரமும்; அவர்களை மீறி, தனியார் நாணயம் ஊன்றி, வலுப்பெற்று
வருகிறது, விட்டது என்று.
இப்போது, மத்திய வங்கிகள் இடம் இருந்து, crypto உம் அதன் பகுதியான stable coins உம் இறுக்கமாக regulate பண்ணுபடவேண்டும் என்ற குரலும்ம் கருதும் ஓங்கி ஓலிக்கிறது. கிரிப்டோ இல் regulation தேவை தான், ஆனல் அது செய்யப்பட்டு இருக்க வேண்டியது 5 - 6 வருடங்களுக்கு முதல். இப்பொது, ரெகுலேஷன் என்று சொல்லப்படுவல், public பாதுகாப்பது முன்னிறுத்தப்பட்டாலும், உண்மையான கரிசனை crypto க்கள் தேசிய நாணயம் மற்றும் மத்திய வங்கிகளை அசைக்கது சவால் விடும் நிலைக்கு வந்துள்ளதால்.
இதை, ஓர் நாட்டின் தேசிய நாணயம் (குறிப்பாக major currencies usd, gbp, eur, போன்றவை) நாணயம் ஒப்பீட்டளவில் அளவுக்கு அதிகமாக பெறுமானம் கூடும்போது எங்காவது இந்த குரல் கேட்டு இருக்கிறதா? இல்லை. ஏனென்றால், அது மத்திய வங்கிகளுக்கு, மற்றும் அரசுகளுக்கு வருமானமும், இலாபமும் கூடுகிறது.
ஆனா, மத்திய வங்கிகளுக்கு ஓர் கரிசனை இருக்கிறது, மனனயப் பெறுமதி கூடும் பொது, ஏற்றுமதியை தாக்கும் என்று; இதை fiscal policy வழியாக சமாளிக்க முற்படும்
கிரிப்டோ பெறுமதி கூடுவதில், இந்த கரிசனைகள் இல்லை, ஏனெனில், ஒன்று தனியார் வசம், மற்றது நாட், எல்லை கசடைந்து அநேகமாக எல்லா பொருளியல் பலம் கொண்ட நாடுகளில் பெம்பான்மையாக பரவி இருப்பது.
அனால், அரசுகளின் நாணயம் உள்ளக பெறுமதியின் நிர்ணயமும், crypto இந்த நாணய பெறுமதி நிர்ணயமும் வேறு படுகிறது.
அரசுகள் தமது ஏகபோக அதிகாரத்தை பாவித்து, நாணயத்தின் பெறுமதியை நிர்ணயிக்கின்றன.
நாணயதாய் உருவாக்கிய பின், அரசுகள் தமது இறைமை அதிகாரத்தை பாவித்து, legal tender என்று பிரகடனப்படுத்தினாலும், அந்த நாணயத்தை கொண்டு ஏதாவது யில் பெறுமானம் கொண்ட பொருளை, சேவைகளை அல்லது பொருட்களளை வாங்காத அல்லது விற்கத இடத்தில், அந்த நாணயத்துக்கு பெறுமதி என்பது அவற்றின் தாட்கள், குற்றிகள், மற்றும் அவற்றை உருவாக்குவாதத்திற்கு செலவு செய்யப்பட்ட உழைப்பு, மின்சாரம் போன்றவை.
அதாவது, நாணயத்தின் உண்மையான face value என்பது, நாணயம், சேவைகளுக்கு, பொருட்களின் விற்றபிணையில் கைமாறும் போதே பெறுகிறது.
இந்த வட்டம் (உருவாக்குதல், legal tender, கைமாறுதல்) ஏற்கனவே இருப்பதால், அரசு உருவாக்கியவுடன் நாணயம் legal tender இன் face value ஐ உடனடியாக பெறுகிறது.
உ.ம். ஆக குறைந்த வருமானத்தை எடுத்து, அரசு எவ்வாறு பெறுமானத்தை தீர்மானிக்கிறது, நாணய உற்பத்தி யில் இலாம் ஈட்டுகிறது எனபதை பார்த்தால் இது அநேகமாக எல்லோருக்கும் புரியும்.
London இல் ஒருநாள் குறைந்த வருமானம் £100 என்று எடுத்து கொண்டால், அந்த £100 ஐ பெறுவதற்கு வேலை செய்பவர் ஆக குறைந்தது 7.5 மணித்தியாலம் முறிய வேண்டும். அனால், அந்த £100 ஐ உற்பத்தி செய்யும் செலவு அரசுக்கு மிக குறைவு. மறுவளமாக, அந்த £100 ஐ குறைந்த சம்பளமாக வேலை செய்பவர்கள் ஏற்க மறுத்தால், அந்த £100 க்கு என்ன பெறுமானம்? சொல்ல முடியாது. அது 5 மணி நேர வேலைக்குதாதான் ஏற்கப்படும் என்றால், இப்பொது அந்த £100 என்பதன் பெறுமானம் அதனது பெருமான இடத்தை மீள் கண்டு கொண்டது (value discovery).
£100 இ பெறுவதத்திற்கு வேலைசெய்பவர் செலவளிக்கும் நேரத்தையும், அரசு £100 ஐ உற்பத்தி செய்யும் நேரத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டால், அரசின் இலாபம் இப்பொது கிரிப்டோகள் ஏறும் 1000 கணக்கான வீதத்திலும் மிகவும் கூடியது.
மாறாக, கிரிப்டோ இன் உள்ளக பெறுமானத்தை market தீர்மானிக்கிறது.
Bitcoin இன் பாவனை, ஒன்று செலவுக்கு நாணயமாக உபயோகம் மற்றது wealth ஐ காத்து வைக்கும் கருவியாக வளர வளர, bitcoin இன் விலையும் (உள்ளக பெறுமானம்) கூடியது.
இப்போது, bitcoin உம், அரசுகளின் நாணயங்கள் speculation இல் இருப்பது போல (இது ஒவ்வொரு கணப்பொழுதிலும் currency சந்தையில் நடப்பது, அது தான் trading, சாதாரண பொதுமக்களும் தங்களை அறியாமல் speculate பண்ணுகிறார்கள், பணவீக்கம் என்ற கரிசனையின் தோறற்றமும், விளைவும் speculation), bitcoin உம் speculation இல் இருக்கிறது 24 மணிகள், ஏனெனில் கிரிப்டோ மார்க்கெட் 24 / 7 / 52 / 365.
அதனால், bitcoin, கிரிப்டோ ஐ உற்பதி செய்பவர்கள், அரசுகள் போல இலாபத்தை எடுத்துவிட்டார்கள். வாங்குபவர்கள் , விற்பவர்கள், speculation செய்கிறார்கள்.
அதனால், bitcoin மற்றும் பிற கிரிப்டோ களின் பெறுமானம் சரியா என்பதே இப்போதைய கேள்வி.
இன்னொரு கரிசனையனான tangibility of the currency எனபதில், முதல் கேள்வி அரசுகள் உற்பத்தி செய்யும் நாணயத்தில் எங்கு tangibility இருக்கிறது. அவற்றின் பெறுமானத்தை நிர்ணயிப்பதத்திற்கு, உத்தரவாதம் அளிப்பதத்திற்கு பாவிப்பது கண்ண்ணுக்கு தெரியாத இறைமை அதிகாரம்.
வேறு எதாவது விடுபட்டு நினைவு வந்தால் பதிகிறேன்.