இன்றிருக்கும் தமிழரின் அரசியத் தெரிவுகள் யார்?
1. அரசுக்குச்சார்பானவர்கள்
2. அரசையும் சாராமல், தமிழ் மக்களையும் சாராமல் ஆனால் தமிழ்த் தேசியம் எனும் பெயரில் அரசியல் செய்பவர்கள்
அரசுக்குச் சார்பானவர்கள்
டக்கிளஸ், கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், ஆனந்த சங்கரி போன்றவர்கள். இவர்களால் தனித்து ஒரு முடிவினையோ, தமிழ் மக்கள் நலன் சார்ந்து ஒரு தீர்வினையோ எடுக்க முடியாது. சிங்கள பேரினவாதத்திற்குச் சேவகம் செய்யும் இவர்களினால் இவர்களுக்கும், இவர்களோடு கூடவிருக்கும் ஒரு சில தமிழருக்கும் நண்மைகள் கிடைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவர்களால் தமிழருக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் மிகவும் பாரதூரமானவை. போர்க்காலத்தில் மக்களினதும், போராட்டத்தினதும் அழிவோடும் நேரடியாகத் தொடர்புபட்டிருந்த இவர்கள், போரின் பின்னரான அரசின் எஜென்ட்டுகளாக செயற்பட்டு வருகின்றனர். இவர்களைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பிலும், வளங்களைச் சூறையாடுவதிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் சர்வதேசத்தில் இவர்களைக் காட்டியே தான் தமிழ் மக்களுக்கு அரசியலில் சம அந்தஸ்த்தினை வழங்கிவருவதாகவும் அரசினால் காட்ட முடிகிறது. உள்நாட்டில் தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை சிறிது சிறிதாகக் குரைத்து, தமிழர்களின் அரசியல்ப் பலத்தினை அழிப்பதில் இவர்களை முன்னிறுத்தியே அரசு செயற்பட்டு வருகிறது. தமிழர்கள் என்பதற்கு அடையாளமாக பெயர்களை மட்டுமே கொன்டிருப்பதைத்தவிர இவர்களால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்று எவையுமே இல்லை.
2. தமிழ்த் தேசியம் பேசும் ஏனைய அரசியல்வாதிகள்.
சுமந்திரன், சம்பந்தன், சிறிதரன், அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், மணிவண்ணன், சித்தார்த்தன் போன்றவர்கள்.
புலிகளால் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அழைக்கப்பட்டவர்கள் இவர்கள். அன்று எதற்காக அழைக்கப்பட்டார்களோ, அதற்கு நேர்மாறாக தமிழ்த் தேசிய அரசியலை, அதன் பலத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நொறுக்குவதில் மட்டுமே தமது நேரத்தையும் வளங்களையும் பாவித்து வருபவர்கள். எடுப்பார் கைப்பிள்லைகளாக பிரிந்து நின்று உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நூற்பொம்மைகளாக ஆளாளுக்கென்று ஒவ்வொரு திசையில் பயணிப்பவர்கள். சம்பந்தன் சுமந்திரன் கூட்டு செய்யும் அரசியல் தமிழ்த் தேசியத்திற்கு அமைவானதில்லை என்பது கண்கூடு. புலிகளை விமர்சிப்பதிலும், அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவத்ன் மூலம் மட்டுமே சிங்களவர்களௌக்கு தமிழரின் பிரச்சினைகளை எடுத்துரைக்கமுடியும் என்று நம்புபவர்கள். இந்தியாவினதும், மேற்குலகினதும் தேவைகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் தமிழரின் உண்மையான கோரிக்கைகளைக் கைவிடவும், அல்லது விட்டுக் கொடுக்கவும் தயங்காதவர்கள். ஐ தே க கட்சியுடனான இவர்களின் நெருக்கத்தினைப் பாவித்து 2015 இலிருந்து 2019 வரையான காலப்பகுதியில் தமிழருக்குச் செய்யக்கூடிய சிறு உதவிகளான கைதிகளை விடுவித்தல், மாகாணசபை தேர்தலினை நடத்துதல், அரசியலமைப்பினை மாற்றுதல் ஆகிய எந்தவித முயற்சியினையும் எடுக்க விரும்பாது வாளாவிருந்தவர்கள். இன்றுவரை இவர்களின் பின்னால் நின்று ஆட்டுவிக்கும் சக்தியெது என்பதை மிகவும் லாவகமாக மறைத்து அரசியல் செய்பவர்கள்.
இவர்களுடன் அண்மையில் அணிசேர்ந்திருக்கும் சாணக்கியனின் அரசியல் பின்புலம் அலாதியானது. அரச ராணுவத்தின் துனைக்குழுவான பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக, பிள்லையானின் பேச்சாளராக தனது அரசியலை ஆரம்பித்தவர் இவர். தனது முன்னைய நிலைப்பாட்டிலிருந்து 180 பாகை திரும்பி தமிழ்த் தேசிய அரசியலினையும், முஸ்லீம்களுடனான நட்பையும்பற்றிப் பேசும் கெட்டிக்காரன். சிங்கலத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் பரீட்சயமுள்ள இவர் செய்யும் அரசியல் தனக்கானது மட்டும்தான். கிழக்கு மாகானசபை அல்லது இணைந்த வட - கிழக்கு மாகாணசபை முதல்வராகும் கனவில் வாழ்பவர்.