Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    21
    Points
    46979
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    39366
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33844
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    8975
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/12/22 in Posts

  1. தலை நகரின் பிரதான மையத்தில் அமைந்து இருந்தது அந்த அந்தோனியார் கோவில். செவ்வாய்க் கிழமைகளில் மத வேற்றுமை பாராது மக்கள் தம் வேண்டுதலுக்காக அங்கு கூடுவர். சில இளையோர் தம் சோடிகளுடனும் , வேலை தேடும் இளையவர் தமக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் எனும் வேண்டுதலுடனும் , இளம் பெண்கள் தங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்துவிட வேணுமென்றும் வேளையில் இளையோர் வெளிநாட்டுப்பயணம் அமைந்து விட வேணுமெனவும் இன்னும் பல தேவைகளுக்கு நேர்த்தி வைத்து அங்கு கும்பிட வருவார்கள். அந்த வாயிலில் மெழுகு திரிக்க கடை கச்சான் கடலைக் கடை குளிர் பானக கடை என்பன கடைவிரித்து காத்திருப்பார்கள். அவர்களுக்கு அண்மையில் வறுமைப்பட்டோர் சில ர் யாசகம் செய்யவும் கூடி இருப்பார்கள். அங்கு அவர்களுக்கிடையில் வயது முதிர்ந்த , நீண்ட தா டியும் பரடடைத் தலையும் கையில் ஒரு ஊன்று கொள்ளும் , தோளில் ஒரு துணி மூடடையும் கொண்ட முருகேசனும் உட்கர்ந்திருந்தார் . அவரூ க்கு பழக்கமான சிலர் என்ன முருகேசா! நீ வேதமா ? சைவமா? எனக் கேட்ப்பார்கள். அவரும் அப்பா வேதம் அம்மா சைவம் அதனால் நான் முருகேசனானேன். என்பார் ... அப்போது அங்கு ஒரு வெண்ணிறக் காரில் ஒரு வயதான அம்மாள் , தன உதவி பெண்ணுடன் கும்பிட வந்திருந்தார். வாயிலின் அருகே இருந்த முருகேசனின் தட்டில் இருபது ரூபாய் ...வந்து விழுந்த்து ...ஏற்கனவே சில சில்லறைகளை வைத்திருந்தார் . அந்த இருபது ரூபாயை எடுத்து தனியே பாத்திரம் பண்ணி வைத்தார் . இரண்டு நாளாக உணவு சாப்பிட வில்லை . வெறும் தேநீர் மட்டும் அருந்தி பேசிக் களையை போக்கி இருந்தார். . மதிய வெயில் பசி மயக்கம் கண்ணைக் கட்டிடவே மெது வாக அருகில் இருந்த சாப்பாட்டுக்கு கடையை நோக்கி சென்றார் . இவர் தோற்றத்தை பார்த்த்தும் வாயிலில் நிற பையன் ... அப்பாலே போ என விரட்டினான் . தம்பி ..நான் சாப்பிட வந்திருக்கிறேன் என்றதும் ஒரு ஓரமான பலகை யைக் காட்டி அங்கு உட்க்கார்ந்து கொள் என்றான். பணியாளர் (வெயிட்டர் ) அருகே வரவே ..தம்பி எனக்கு ஒரு பார்சல் ..எவ்வ்ளவு என்றான். "மீன் சாப்பாட்டு பார்சல் ஐம்பது ரூபாய்" ..."மரக்கறி பார்சல் முப்பது ரூபாய் " என்றான். அருகே அமர்ந்திருந்த ஒரு இளைஞன் .. அவர் வைத்திருந்த இருபது ரூபாயைக் கண்டு ...தம் பி அவருக்கு ஒரு மீன் பார்சல் கொடு என்றான். பின் அந்த முதியவருடன் பேசத்தொடங்கினான். "ஐயா உங்களுக்கு என்ன ஆனது என் இந்த நிலமை ? என்று கேட்ட்க அவர் கண் கலங்கியது .. அவர் தன்னைப்பற்றி கூறத்தொடங்கினார் . தம்பி நான் கனடா நாட்டுக்கு சென்று ..மனைவி இருமகன்களுடன் வாழ்ந்து வந்தேன் . கஷ்ட பட்டு வேலை செய்தேன். இராப்பகலாய் கண் விழித்து இரண்டு வேலைகள்செய்து பிள்ளை களைப் படிக்க வைத்து ஆளாக்கி கலியாணம் கட்டி வைத்தேன். பின் நானும் மனைவியும் ..முதுமை காரணமாக தாய் நாட்டுக்கு வந்து வாழ ஆசைப்பட்டு . வீடடை விற்று மக்களுக்கு கொடுத்து விட்டு ,மீதிகாசுடன் ..சில வருடங்கள் நலமாக வாழ்த்து வந்தோம். எனக்கு ஓய்வூதியம் பணம் வந்தது ...அதில் சேமித்து ஒரு வீடடை வாங்கினேன். எமக்கு துணையாக ஒரு பையனை வளர்த்தோம். காலம் மிக வேகமாக ஓடியது என் மனைவிக்கு வ யிற்றில் புற்று நோய் வந்து அவதிப்பட்டு, வைத்ய சாலையும் வீடுமாக அலைந்தேன். வளர்ப்பு மகனையும் படிப்பித்து ஒரு வேலையில் யில் அமர்ந்ததும் ..ஒருகலியாணம் கட்டி வைத்தேன். அவனுக்கு இரு பெண் குழந்தைகள் . காலப்போக்கில் மனைவி இறந்து விடடாள் . வந்த மருமகள் மிகவும் கர்வம் பிடித்தவள் . என் முதுமை காரணமாய் .ஒரு கண் பார்வையை இழந்தேன். மற்றையது ஓரளவு பார்வை தெரிகிறது .. ..மனைவி இல்லாத அருமை புரிந்தது .. என்னை கவனிக்கவே மாடடாள் மருமகள். குளிக்க உடைமாற்ற எனக்கு உதவி தேவைப்பட்ட்து ...கை நடுங்க ஆரம்பித்து விட்ட்து ஆதர வின்றி ..கோவிலைக் காட்டி ..இந்த கோவிலே தஞ்சம் என் வாழ்கிறேன். என உணவை மெல்ல மெல்ல உண்டுகொண்டே சொல்லி முடித்தார். இளைஞனும் அவருக்கும் தனக்குமான உணவுக்கு காசைக் கட்டி விட்டு இருவரும் வெளியேறினார். அவர் மீண்டும் கோவிலை நோக்கி புறப்பட ...அந்த இளைஞன் .சற்று பொறுங்கோ என் சொல்லி ...அருகில் இருந் காரை எடுத்து வந்து ..இதில் ஏறுங்கோ என சொல்ல தாத்தா மறுத்தார் . வற்புறுத்தி .. எற வைத்து சில மணி நேர ஓட்ட்த்தின் பின் ...ஒரு கருணை இல்லத்தின் முன்னே நின்றது ...இறங்கி இவரையும் அழைத்து கொண்டு இவரும் முன் வாயிலில் இருந்தா காரியாலயத்தில் ..எதோ ...பேசி விட்டு திரும்ப வந்து தாத்தா இனி இது தான் உங்கள் வீடு என சொல்லி அவருக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்படி பணித்தான். அங்குள்ள உதவியாளர் அவருக்கு குளித்து புத்தாடை உடுத்தி முக சவரம் தலைமுடி கத்தரித்து .. அவருக்கு ஒரு தனியான அடைக்க படட அறை ஒழுங்குபடுத்தி ...ஆதரவளித்தனர் . சில மணி நேர இடைவேளையின் பின் ...அந்த இளைஞன் மீண்டும் வந்து இவரை பார்த்தன். அவரது இருப்பிடமும் வசதியும் திருப்பி அளிக்கவே. மீண்டும் மேலிடத்தில் உள்ள காரியாலயத்தில் சென்று . இன்னும் சில வசதிகள் அவருக்கு தேவைப்படுவதாகி சொல்லி ...ஏற்பாடு செய்து வீடு திரும்ப இருளாகி விட்ட்து . தன் காரை பின்னோக்கி ரெவெர்ஸ் செய்யும் போது ,முன் முகப்பு வெளிச்சத்தில் மின்னியது "அம்மா கருணை இல்லம் :" வீடு சென்று உணவு உண்டு ... மனைவி குழந்தைகளுடன் உரையாடி விட்டு ... உறங்க சென்று தாயின் படத்தை நோக்கி கும்பிட ஒரு வெண்ணிற பூ ..உதிர்ந்தது அவன் முன்னே. "மகனே ஒரு நல்ல காரியம் செய்தாய் " எனும் மலர்ந்த புன்னகையுடன் அவர் அம்மா படத்தில் புன்னகைத்தாள். ஒரு தாயின் கருவில் உருவாகி பூமில் வாழும் மனிதன் ஒரு மரத்துக்கு இணையாகிறான். ஒரு விதை மரமாகி, கிளைபரப்பி பூத்து காய்த்து கனிந்து மீண்டும் விதையாகி மண்ணில் சருகாகி வீழ்கிறான். விதைகளுக்கு தெரிவதில்லை இலைச் சருகுகள் தான் தம்மை வளர்த்த விளை நிலங்கள் என்று.
  2. நல்லதொரு படிப்பினைக்கதை சகோதரி......முதியவர்களிடம் தன்கையில் சொத்து இல்லையென்றால் வெத்து வேட்டாகி வீதிக்குத்தான் வரவேண்டும் என்று கதை சொல்லுது.......! 👍
  3. எங்கே உங்கள் ஆக்கம் ஒன்றையும் காணம்..😃
  4. நிலாக்கா, உங்கள் கதையை வாசித்த போது...ஒரு சினிமாப் பாடல் தான் நினைவுக்கு வந்தது...! மனிதன் நினைப்பதுண்டு...வாழ்வு நிலைக்கும் என்று....! இறைவன் நினைப்பதுண்டு...பாவம் மனிதனென்று....! கூட்டைத் திறந்து விட்டால்....குருவி பறந்து விடும்...! நல்ல ஒரு படிப்பினைக் கதை...!
  5. நீங்கள் ஒரு இதயத்தை காதலித்திருந்தால் அது கைகூடியிருக்கும்......நீங்கள் பல இதயங்களை காதலித்தபடியால் அத்தனையும் உங்களை அண்ணனாக ஏற்றுக் கொண்டு விட்டன போலும்.இது ஒரு வல்லிய சோகமானு ......! 😢 😂
  6. அவர் மேலதிகாரியிடம் சொல்லுகிறார்........! பாஸ் நான் ஒரு விசர் வேலை பார்த்துப்போட்டன் என்று நான் நினைக்கிறன்......! 😂
  7. உனக்கு என்ன.... உட்கார்ந்த இடத்தில, கொம்யூட்டரிலை வேலை........
  8. அதை பார்த்த அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபரிடம்... போட்டு கொடுத்து விட்டார். 😂 ஓ.... அதுதான், சண்டையா... 🤣
  9. பார்வை ஒன்றே போதுமே.......(15). வீட்டுக்கு வருகின்றார்கள். தூரத்தில் வரும்போதே கோழிக்கறியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. முற்றத்தில் நின்ற சேவல் சட்டிக்குள் கொதித்துக் கொண்டிருக்கு. மகேஸ்வரியின் பழகிய கை பக்குவமாய் சட்டியை கிளறுகின்றது.அவள் மனசும் அதுபோல் கொதித்துக் கொண்டிருக்க நினைவுகள் உள்ளே பிராண்டிக் கொண்டிருக்கின்றன. கடவுளே எதோ ஒரு எண்ணம் என்னையும் அறியாமல் என்னை அலைக்கழித்து இந்த மனுஷன் என் மனசுக்குள் புகுந்து விட்டார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற திருப்தி. அது கூட உனக்குப் பொறுக்கவில்லையா. மனம் ரணமாய் வலிக்கிறது. யோசித்துப் பார்க்கிறாள், இது எப்படி......சில கோவில் தீர்த்தக்கிணறுகளில் ஒரு சான் அளவு தண்ணீர்தான் இருக்கும்.அபிஷேகத்தின் பொழுது பத்து குடமா, நூறு குடமா, ஆயிரம், லட்ஷம் குடமா நீர் சுரந்து கொண்டு இருக்கும் வற்றாது, அதுபோல் இப்பொழுது அவர்மீதுள்ள அன்பு பிரவாகித்து வருகிறதே, நான் என்ன செய்வேன். குழம்புபோல் மனமும் கொதிக்கிறது. அவளின் நிலையில்தான் சாமிநாதனும் இருந்தார். சமீபகாலமாக அவளின் நடவடிக்கையில் மாற்றங்களை அவர் பார்த்துக் கொண்டுதான் வருகிறார். இப்போது திண்ணையில் இருந்து மகேஸ்வரியைப் பார்க்க அவளின் பரிதவிப்பு அவரை என்னமோ செய்கிறது. இதற்கெல்லாம் தானும் காரணமாகி விட்ட குற்றவுணர்வு மேலோங்கி அவரை என்னமோ செய்கிறது. கண்கள் பனிக்கின்றன. பிள்ளைகள் வந்து விட்டதால் மறுபுறம் திரும்பிப் புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஆனால் அவர்கள் அதைக் கவனித்து விடுகிறார்கள். மகேஸ்வரி வெளியில் வந்து வாங்கோ பிள்ளைகள் சாப்பாடு தயார். எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். தம்பி முத்து ஓடிப்போய் எல்லோருக்கும் வாழையிலைகள் வெட்டிக் கொண்டு வா அப்பு. பிள்ளை பாய்களை எடுத்து வந்து போடனை என்று சொல்லிக்கொண்டு பம்பரமாய் சுழல்கிறாள். எல்லோரும் சாப்பிடும்போது சாமிநாதனும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழும்புகிறார், மகேஸ்வரிக்கு சாப்பிடவே மனமில்லை வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு எழும்புகிறாள். அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது, இப்படி ஒரு விருந்து சாப்பிட்டு ரொம்ப காலமாச்சுது என்று ரவிதாஸ் சொல்ல நிர்மலாவும் ஓம் அம்மா என்று சொல்கிறாள். கிளம்புகிற நேரம் எல்லோருக்கும் ஒரு தயக்கமாய் இருக்கு. சாமிநாதனுக்கும் தான் எப்படி இனியும் இங்கிருப்பது என்ற தயக்கம் ஆனாலும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு முன்வந்து "முத்தம்மா" ஆம் இதுவரை அவளை அவர் அப்படித்தான் கூப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் விரும்பினால் என் பிள்ளைகளில் ஒருவரையும் உங்களின் பிள்ளைகளில் ஒருவரையும் மணமுடித்து வைக்கலாமே என்று சொல்கிறார். அதற்கு அவளும் அதென்ன புதிதாக இன்றைக்கு உங்க பிள்ளை , என் பிள்ளை என்று பிரித்துப் பேசுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் எது சொன்னாலும் எனக்கு சம்மதம். இவ்வளவு நாளும் இந்தப் பிள்ளைகளுக்கும் எனக்கும் ஒரு அரணாக இருந்து அதுகளை சொந்தக்காலில் நிக்குமளவு ஆளாக்கி விட்டது நீங்கள்தான். அன்று நீங்கள் சொல்லவில்லை யென்றால் முத்துவால் படித்திருக்கவே முடியாது. அந்த நன்றியை நாங்கள் ஒருகாலமும் மறக்க மாட்டோம்.எதுக்கும் பிள்ளைகளையும் ஒரு வார்த்தை கேளுங்கள்.அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்போதும் அவலறியாமல் குரல் கம்முகிறது கண்களில் நீர் தளும்புகிறது. சாமிநாதனும் பிள்ளைகள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ என்று சொல்ல ரவிதாஸ் முன்வந்து அப்பா நீங்களும் இவ்வளவுகாலமாய் வேலை வேலை என்று வீட்டையும் மறந்து எங்களுக்காக உழைத்தீர்கள். அதனாலோ என்னவோ எங்கள் அம்மாவையும் இழக்க வேண்டி வந்து விட்டது. பின் வந்த இடத்தில் இவர்களின் குடும்பத்தையும் ஒரு மேல் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறீங்கள். அதுபோல்தான் இந்த அம்மாவும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இனி நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் ஆசைப்படுகின்றோம் என்று சொல்ல, சித்ரா முன்வந்து ஓமம்மா அண்ணா சொல்வதுதான் சரி என்கிறாள். சற்றுமுன் நாங்கள் தோட்டத்தில் இதை பற்றித்தான் கதைத்தோம் என நிர்மலாவும் சொல்லிவிட்டு ஓம்....நீங்கள் "பார்வை ஒன்றே போதுமே" என்று பார்வையால் வாழ்ந்தது போதும் மகேஸ்வரியின் கையைப் பிடித்து நீங்கள் எங்களுக்கும் அம்மாவாக வேணும் இதை நீங்கள் மறுக்கக் கூடாது என்கிறாள். மகேஸ்வரி வெட்கத்துடன் சாமிநாதனைப் பார்க்க அவரும் மௌனமாக ஓம் என்று தலையசைக்கிறார். கொஞ்ச நேரத்தில் ஆடைகள் மாற்றிக்கொண்டு வந்த முத்துவும் சித்ராவும் அம்மா இன்று நாங்கள் அண்ணாத்தை படம் பார்த்துவிட்டு அண்ணாவின் பங்களாவில்தான் இரவு தங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே ஆடி காரில் ஓடிப்போய் ஏற அது கோர்ன் அடித்துக் கொண்டு சீறிச் செல்கின்றது. திண்ணைத் தூணைப் பிடித்தபடி ஒருக்களித்து நின்று கொண்டு மகேஸ்வரி வெட்கமும் காதலும் கலந்து காலால் நிலத்தை கீறிக்கொண்டு நிக்கிறாள். "காணாத உறவொன்று கண்முன் நிற்க வாழாத பெண் ஒன்று வழி கண்டதுபோல்" தலை தாழ்திருக்க விழிகளை அசைத்து மேற்கண்ணால் அவரைப் பார்க்கிறாள். சாமிநாதனும் மெல்ல நெருங்கி வந்து அவள் தோளைத் தொட்டு முத்தம்மா என்று மெல்ல சொல்ல ..... ம்.....என்கிறாள். சற்று மௌனம்..... பின் ஏன் நீங்கள் ரஜினி படம் பார்க்க போகவில்லையா...... இல்லை...... ஏனாம் ..... நாங்கள் வலிமை பார்க்கலாம் என்று ...... அப்படியா எனக்கு அஜித் படமும் பிடிக்கும். அப்படியென்றால் இருவரும் சேர்ந்தே பார்க்கலாம். தோள் மீதிருந்த கையை மெதுவாக அழுத்துகின்றார். அவளறியாமலே உடல் இசைவாக குழைகிறது.கூடவே மேனியெங்கும் சிறு நடுக்கமும்......இவ்வளவு காலமும் இருவருக்குள்ளும் தூங்கிக் கிடந்த ஹார்மோன்கள் சலனமடைந்து கிளர்ச்சியுற்று ஹார்மோனியம் வாசிக்கத் தயாராகின்றன. இதற்கு மேலும் தாங்க முடியாமல் "அரங்கனின் தோளில் ஆண்டாள் மாலைபோல்" கைகளை அவர் கழுத்தில் போட்டு மார்பில் மலர்கிறாள். துவளும் அவளது இடையை தன் இரு கைகளால் இறுக்கி அந்த மலரை தன்னுடன் சேர்த்தணைத்தபடி திண்ணையில் அமர்கிறார் சாமிநாதன்......! யாவும் கற்பனை......! யாழ் 24 அகவைக்காக அன்புடன் சுவி......!
  10. பார்வை ஒன்றே போதுமே......... (12). அன்று வக்கீல் தவராசாவின் அலுவலகத்துக்கு கையில் பைலுடன் நிர்மலா வருகிறாள். அங்கு சித்ரா போன் பேசிக் கொண்டு இருக்கிறாள். பேசி முடித்ததும் போனை மேசையில் வைத்து விட்டு நிர்மலாவிடம் நலம் விசாரித்து விட்டு என்ன விடயம் நிர்மலா, ஒரு போன் செய்திருந்தால் நானே அங்கு வந்திருப்பன் என்கிறாள். நிர்மலாவும் பரவாயில்லை சித்ரா, இந்த ஒரு கேசில் உங்களின் ஆலோசனை தேவை என்று சொல்லி பைலை எடுத்து நீட்ட அதனுள் இருந்த பேப்பர்கள் சில கீழே விழுகின்றன. அடடா என்று நிர்மலாவுடன் சித்ராவும் குனிந்து அவற்றைப் பொறுக்குகின்றாள். அப்பொழுது சித்ராவின் ப்ளவுசுக்குள் இருந்து சங்கிலி டாலருடன் நழுவி கீழே தொங்குகிறது. அதைக் கவனித்த நிர்மலாவுக்கு அது தனது தந்தையின் செயின் போல் தோன்ற என்ன சித்ரா உங்களின் செயினும் டாலரும் அழகாய் இருக்கிறது, ஆனால் ஆண்களுடையது போல் இருக்கிறது என்ன. ஆமாம் நிர்மலா இது என் அப்பா நான் பட்டம் பெற்றபோது பரிசளித்தவர். ஓ ....அப்படியா நல்லாயிருக்கு என்று சொல்கிறாள். அப்படியே தற்செயலாக மேசைமேல் இருந்த போனைப் பார்த்ததும் அதுவும் தனது தந்தையுடையது போல் இருக்கவும் அங்கு அவளால் நிக்க முடியவில்லை. நீங்கள் இவற்றைப் பாருங்கள் நான் மாலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கிளம்ப, சித்ராவும் பரவாயில்லை நிர்மலா நானே கொண்டுவந்து தருகிறேன் என்றதும் சரி என்று சொல்லி உடனே கிளம்பி அவர்களுடைய அலுவலகத்துக்கு வந்து நேராக தமையனின் அறைக்கு சென்று நடந்ததை சொல்கிறாள். உடனே ரவிதாசும் வா போய் விசாரிப்பம் என்று வெளிக்கிட அவனை நிர்மலா தடுத்து அவள் மாலை இங்கு வருகிறாள் அப்பொழுது பக்குவமாய் விசாரிக்கலாம் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று தோன்றுகின்றது. அன்று மாலை சித்ரா பைலுடன் அங்கு வரும்போது நிர்மலாவோடு ரவிதாசும் வரவேற்பறையில் அங்கிருந்தான். இருவரும் கோப்பி குடித்துக் கொண்டிருந்தனர். சித்ராவிடம் நீங்களும் ஒரு கோப்பி குடிக்கலாமே என்று சொல்ல சித்ராவும் வேண்டாம் நன்றி என்கிறாள். அப்போது நிர்மலா தமையனிடம் அண்ணா சித்ராவின் செயினைப் பாரேன் வித்தியாசமாக அழகாக இருக்கிறது என்கிறாள். ரவிதாசும் எங்கே பாப்போம் என்று அவன் ஜாடையாய் கேட்டு அவள் மார்பை நோக்க, ம்....இருங்கள் கழட்டித் தருகிறேன் என்று சித்ராவும் செயினைக் கழட்டி அவனிடம் தருகிறாள்.அதை கையில் வாங்கி நன்றாகப் பார்த்த ரவிதாஸ் நானும் இதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அதை அவளிடம் தந்து விட்டு உங்களின் போன் நம்பரைத் தர முடியுமா எனக் கேட்கிறான். அவளும் அதுக்கென்ன என்று சொல்லி தனது போனால் அவனது நம்பரைக் கேட்டு அதுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைக்கிறாள். அப்போது அவர்கள் இருவரும் அந்தக் கைபேசியை நன்றாக உற்றுப் பார்க்கின்றனர். பின்பு பொதுவாக அவன் அவளை விசாரிப்பதுபோல் விசாரித்து அவளது இருப்பிடத்தையும் அறிந்து கொள்கிறான். அதன்பின் சித்ரா கிளம்பி செல்கிறாள். அப்போது நிர்மலா என்ன அண்ணா ஒன்றும் விசாரிக்காமல் அவளை அனுப்பி விட்டாய் என்று சொல்ல அதற்கு ரவிதாசும் இந்தப் பெண்ணைப் பார்த்தால் பொய்யானவள் போல் தெரியவில்லை, ஒருவேளை நமது அப்பா இவைகளை இவளது தந்தைக்கு விற்றிருக்கலாம். இவளின் தந்தையை சந்தித்தால் அப்பாவின் விபரம் தெரியவரும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல நிர்மலாவும் ஓம்...அதுவும் நல்ல யோசனைதான் என்று சொல்கிறாள். நாளைக்கு நானே நேரில் சென்று இவர்களை நோட்டம் விடப்போகிறேன் என்கிறான். அடுத்தநாள் ரவிதாஸ் மிகவும் சாதாரண உடுப்பு அணிந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சித்ராவினது வீட்டருகே சென்று நிறுத்தி விட்டு வேலியால் எட்டி எட்டி இவர்களது வீட்டை நோட்டம் விடுகிறான். அங்கே பட்டியில் மாடுகள் நிக்கின்றன. இரண்டு கன்றுக்குட்டிகள் முற்றத்தில் செல்லமாக முட்டி முட்டி விளையாடுகின்றன. அங்காலே வீட்டு விறாந்தையில் ஒருவர் இருக்கிறார்.மறுபுறம் திரும்பி அவர் இருப்பதாலும் தாடி மீசையுடன் இருப்பதாலும் அவனால் அந்த ஆளை மட்டுக்கட்ட முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து அவருக்கு தேனீர் குடுத்து விட்டு அவர் அதை அருந்தும் அழகை ரசிப்பதுபோல் ஆர்வமாக பார்த்துக் கொண்டு அருகில் நிக்கிறாள். அவன் தனக்குள் நினைக்கிறான் இவர்கள் சித்ராவின் பெற்றோராய் இருக்க வேண்டும் என்று. ரவிதாசுக்கு அந்தப் பெண்மணியின் வசீகரமான சாந்தமான முகம்தான் தெரிகிறது. இன்னும் அவரைத் தெரிய வில்லை. அதனால் அங்கும் இங்குமாக நடந்து வேலியால் எட்டி எட்டி அவர் முகத்தைப் பார்க்க முயன்று கொண்டிருக்கிறான். அப்போது பேப்பர், பால் எல்லாம் வீடுகளுக்குப் போட்டு விட்டு சையிக்கிளில் வீட்டுக்கு வந்த முத்து தனது வீட்டருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ரவிதாசைக் கண்டு மறித்து அண்ணே நீங்கள் யார் வேலியால எட்டி எட்டி பார்க்கிறீங்கள். இதற்குமுன் உங்களை நான் இங்கு பார்த்ததில்லையே என்று கேட்க ரவிதாசும் அவசரத்துக்கு என்ன சொல்வதென்று யோசித்து சட்டென்று தம்பி நான் மாடு வாங்க வந்தனான். முத்தத்தில் மாடுகளைக் கண்டதும் நின்று பார்க்கிறன். வீட்டுக்காரர் விப்பினமோ தெரியேல்ல என்று சொல்கிறான். ஓ....அப்படியா இது எங்களுடைய வீடுதான். ஆனால் நாங்கள் மாடுகள் விக்கிறதில்லை என்று சொல்லிவிட்டு சைக்கிள் ஹாண்டிலில் கை வைத்து திருப்ப முயல அவன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்த ரவிதாசும் உங்களின் கடிகாரம் அழகாய் இருக்கு, என்ன விலையிருக்கும் என்று இயல்பாகக் கேட்கிறான். தெரியவில்லை இது அப்பா எனக்கு பரிசாகத் தந்தது என்று சொல்லிவிட்டு, என்ன நீங்கள் மாடு வாங்க வந்ததாக சொல்லுறீங்கள். பின் கடிகாரம் பற்றி விசாரிக்கிறீங்கள், உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் என்று கொஞ்சம் கடுமையாக கேட்கிறான். முத்துவின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது........! பார்ப்போம் இனி ...................! ✍️
  11. கோவணத்தானை சுரண்டாமல் புத்தனின் கதை இல்லை வாழ்த்துக்கள் அண்ண
  12. பழைய குழம்பு..☺️
  13. வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும் *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க. கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது? கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு. கணவன்: சரி வெட்டிக்காதே. மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன். கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை. கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன். கணவன்: சரி, வெட்டிக்காதே. மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு? கணவன்: சரி, வெட்டிக்காதே. . . . . இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் "வெட்டிக்கோ", "வெட்டிக்காதே" அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம் -ஆஃபாயில்ஸ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.