Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46808
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20023
    Posts
  4. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33035
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/07/22 in all areas

  1. janhvi kapoor ன் அழகிய நடனம்......! 😍
  2. நீங்கள் ஓ.எல் விஞ்ஞானம், ஏ.எல் பெளதிகவியலில் படித்த விடயங்கள் தான். விமானம் 37,000 அடி உயரத்தில் பறக்கும்போது வெளி வெப்பநிலை மைனஸ் 40 50 என்று குறையும். ஈரப்பதன் உள்ள வெப்ப காற்று குளிரான முகப்புடன் தொடுகையை ஏற்படுத்தி நீர் துளிகள் உருவாகலாம்.
  3. உஸ்.........8 கட்டையில் பயிற்சி செய்கிறார்கள்.....! 😂
  4. முதற்கண் மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்...... அப்படியே பெற்றோருக்கும்......! 💐 அதுதான் மகனது திருமணம் இனிதே நிறைந்து விட்டதே ......இனி படித்து கருத்திடுவதுதானே......!
  5. வந்த வாகனம்.. ஆட்டோ. வரவேண்டிய வானோ.. காரோ கடைசி நேரத்தில் கழுத்தறுத்துவிட்டதால்.. ஆட்டோ தான் வந்திக்கோனும் என்று நினைச்சுக் கொண்டே... சரி.. எனியும் இதில காத்துக் கொண்டிருக்க ஏலாது.. வந்த ஆட்டோவில என்றாலும்.. போய் வீடு சேருவம் என்றிட்டு.. பெட்டிகளை எல்லாம் ஆட்டோவில் ஏத்த ஆயத்தமாக.. ஆட்டோவில் வந்த உறவு சொல்லிச்சு.. கார் கொஞ்சம் தள்ளி நிப்பாட்டி இருக்குது. புக் பண்ணின வான் வராத படியா.. பிரன்டின்ட காரைத் தான் கூட்டிக்கொண்டு வந்தன். அவருக்கு எயார்போட் றைவ் சரியா வராத படியால்.. கொஞ்சம் வெளிய நிப்பாட்டி இருக்குது. சரி.. ஏதோ வந்திச்சேன்னு ஆட்டோவில் ஏறி.. பின் காரில் ஏறி.. களைச்சு விழுந்தவனை இன்னும் களைக்கப் பண்ணி கூட்டிக்கிட்டே போனாய்ங்க. ஒருவாறு.. கொழும்பை அடைந்ததும்.. ரபிக்கை குறைக்க.. கடற்கரை வீதியால் பயணிக்கும் போது தான்..கொஞ்சம் வெளில விடுப்புப் பார்க்கும் எண்ணோட்டமே வந்தது. அப்ப கே எவ் சி தான் முதல்ல கண்ணில் பட்டிச்சு. உடன அதில நிறுத்தி.. சாப்பிடுவம் என்றால்.. அந்த ரபிக்குக்குள்ள போய் பார்க்கிங் தேடுவது பெரும்பாடாகி விட்டது. கே எவ் சி யில்.. விலைப்பட்டியலில் பெரிய மாற்றமிருக்கேல்ல. ஆனால் அளவு சிறிதாகி இருக்குது. அதே தான் பின் நாட்டில் எல்லா இடமும் என்பதையும் காண முடிஞ்சுது. கிலோ கணக்கிற்கு இருந்த விலை எல்லாம்.. இப்ப 100 கிராம்.. 250 கிராம் என்றிருக்குது. ஒரு மாம்பழம்.. 250 ரூபா போகுது. ஆனால் மஞ்சள் தொடங்கி எல்லாம் கிடைக்குது. பெட்டிக்கடையிலும் மஞ்சள் இருக்குது. அங்கர் பால் மாவுக்கும் காஸூக்கும் தான் அப்ப தட்டுப்பாடு. அதிலும்.. காஸ் வரத் தொடங்கி இருந்தது. வர்த்தக செல்வாக்குள்ளவை உள்ளால எல்லாம் பெற்றுக் கொள்ளினம். இல்லாத சனம் கியூவில நின்று ஏமாறுவதும் போவதும் வருவதுமா அவஸ்தைப் படுகுது. எங்கட நல்ல காலம் உயர்தரப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால்.. மின்வெட்டு அதிகம் நேரம் இருக்கவில்லை. ஆனால்.. நுளம்புத் தொல்லை மட்டும் மிக அதிகமாக இருந்திச்சு. மற்றும்படி பயணம்.. சுமூகமாகவே அமைஞ்சுது. முற்றும்.
  6. 1989 ஆண்டு, எனக்கு அப்பொழுது 17 வயது நான் சாதரணதரம் எடுத்து விட்டு இருந்த காலம். ஒரு மருந்தாளராக வரும் ஆர்வம் என்னிடமிருந்தது. மேலும் குடும்பத்தின் வறுமை நிமித்தமாக கொழும்பில் ஒரு பிரதான வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சிறிய கிளினிக்கில் என்னுடன் சேர்த்து நாங்கள் நான்கு பேர் வேலை செய்தோம். இரண்டு நர்ஸ், ஒர் டாக்டர். ஒரு நர்ஸ் நடிகை சரிதா போல் இருப்பர். மற்றவர் இளமைகாலங்கள் பட நடிகை சசிக‌லா போல் இருப்பார். காலை 8 மணிக்கு திறக்கும் இந்த சிறிய க்ளினிக் மதியம் 1 மணிவரை பின்பு 3 மணிமுதல் இரவு 9 மணிவரை. இப்பொழுது நான் செய்யும் தொழில் கணனியில் முன் உட்கார்ந்து வேலை செய்வது அது ஒரு இயந்திரம் மனித உணர்வுகளை வெளிப்ப்டுத்தாது. மனிதர்களை தொட்டு வேலை செய்யும் போது கிடக்கும் திருப்தி அலதியானது. காலபோக்கில் இங்கு நான் வேலை செய்து பழகியதில் ஒரு சிற‌ந்த நான் மருந்து கட்டுபவராக மாறினேன். பல்வேறு காயங்களை கண்டுளேன். சில வெட்டுக்காயங்களாக இருக்கும், சில எரிகாயம் இதற்கு நெட் போன்ற ஒரு களிம்பை வைத்து திறந்து காற்றுப்பட வேண்டும். சிலர் அடிபட்டு வீக்கத்துடன் வருவார்கள், சிலர் விளையடும் போது காயம் ஏற்பட்டு வருவார்கள். சிலர் விபத்தில் அடிபட்டு தோல் உரிந்து வருவார்கள், சிலரோ கை / கால் சுளுக்க்கி / மூட்டு விலகி வருவார்கள் இன்னும் சிலர் கற‌ல் பிடித்த தகரம் வெட்டி / ஆணி குத்தி இரத்தத்துடன் வருவார்கள். இவர்களுக்கு டெட்னஸ் ஊசி அடிக்கப்படும். இவர்களுடன் அன்பாக பேசிக்கொண்டே வலி தெரியாமல் நான் மருந்து போடுவேன். கத்திரி கோலால் பஞ்சை பிடித்து ஸ்பிரிட்டில் முக்கி எடுத்து இலேசாக துடைப்பேன் சீழ் வெண்ணிறத்தில் பொங்கி வரும், வலியாலும் / வேதனையினாலும் துடிப்பார்கள். பின்பு புண்ணிற்க்கு ஏற்ப களிம்பு அல்லது பவுடர் போட்டுவிட்டு,பிளாஸ்டர் அல்லது பன்டேஞ் கட்டப்படும். ஆண் பெண் சிறுவர்கள் என பலருக்கு நான் மருந்திட்டுள்ளேன். விசேடமாக நீரிழிவு நோயளிகளுக்கு புண்கள் ஆறாது. ஒருவித தூர் நாற்றம் அடிக்கும். பல்லை கடித்து கொண்டு பொறுமையாக போடுவேன் . 15 வயது மீன் விற்கும் சிறுமியும் என்னிடம் வந்து மருந்து போடுவாள். மீன் நாற்றம் இவள் கூடவே வரும். இவள் வந்தால் மீனம்மா வருகின்றாள் என பட்டப்பெயரால் அழைப்போம். நர்சும் உதோ உன் ஆள் வந்து விட்டள் போய் போய் களிம்பை தடவி மருந்தை கட்டு என கூறி சிரிப்பார்கள். அதே நேரத்தில் பக்கத்தில் உள்ள மினி தியெட்டரில் இருந்த்து மீனம்மா..மீனம்மா கண்கள் மீனம்மா, தேனம்மா தேனம்மா என பாடல் ஒடும் எனக்கோ மிகவும் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் வியாழக்கிழமை மதியம் 6:30 அளவில். பக்கத்தில் இருந்த கத்தோலிக்க தேவாலய ஒலிப்பெருக்கியில் திருப்பலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. "அண்டவர் உங்களோடு இருப்பராக என பாதர் சொல்ல உமது ஆன்மாவோடும் இருப்பாரக என சனம் பதிலுரைத்தது". அப்பொழுது அவர் உள்வந்தார் ஒர் 27 அல்லது 28 வயதிருக்கும். கருத்த நிறம், மெலிந்த தேகம். போதைவஸ்துவிற்கு அடிமையான ஒருவருரின் கண்கள் போல் காணப்பட்ட்டது. டாக்ட‌ரிடம் போய்வந்த பிறகு, மருந்து கட்ட என்னிடம் வந்தார். புறங்கை பக்கம், காலில் காயங்கள் இருந்தன. காயம் சிறிது வித்தியாசமாக காணப்பட்டது. ஆறாமல் நீண்டகாலமாக‌ இருக்கின்றது. நான் பேச்சை கொடுத்தவாரே காயங்களை டெட்டோலினால் துடைத்தேன். முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. குத்திட்ட‌ பார்வை. இவனுக்கு வலிக்கவேயில்ல்லையா.. பெயரும் சொல்கின்றார் இல்லை.. எந்த ஊர் என்றும் சொல்கின்றான் இல்லை. இப்படி போதை வஸ்துவுக்கு அடிமைகியுள்ளானே என நினத்த்துக்கொண்டேன். வராத்தில் இரண்டு முறை வருவார். வருமுன் அவரை குளித்து விட்டு, காயத்தை கழுவி சுத்தப்படுத்தி விட்டு வரச்சொன்னேன். சில வார்ங்களின் பின் அவருடைய ஒரளவு குணமடைய தொடங்கியது. அனாலும் இவர் ஏன் சகஜாமாக பேசாமாட்டேன் என்கின்றார் என தெரியவில்லை. சில வாரங்கள் இப்படி ஓடியது. கடைசி நாள் நான் அவரது காயத்தை கழுவிவிட்டு, இப்பொழுது காயம் ஆறிவிட்டது இனி மருந்து போட தேவையில்லை இதுவே கடைசி நாள் என்றேன். உங்களை பற்றி எதுவுமே சொல்லவில்லையே என கேட்டு சிரித்தேன். கூர்ந்து பார்த்தார் என்கைகளை பற்றிக்கொண்டார். கண்ணீல் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது, ஆழ அரம்பித்துவிட்டார். தம்பீ நான் யாழ்பாணத்தில் வீட்டில் இருக்கயில் ஆமி எங்கள் குடும்பத்தை சித்திரவதை செய்தது. எனது இரண்டு அக்காமர்களை ஆமி என் கண் முன்னால் கதற‌ கதற‌ அடித்து, துன்புறுத்தி வன்புனர்வு செய்தது. எங்கள் குடும்பத்தை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். அவர்களில் சில தமிழர்களும் இருந்தார்கள். என்னையும் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சேர்டை திறந்து உடலில் பல்வேறு பாகங்களை காட்டினார். உடல் நிறைய தழும்புகள் காணப்பட்டன. அதை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். பலவீனமான அவரது உடல் நடுங்கியது. அவரது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தினேன். (இக்காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் களமிரக்கப்ட்டிருந்தது) மேலும் அவர் கூறினார் "நான் இங்குதான் அருகிளுள்ள லொட்சில் தங்கியுள்ளேன், ஒருவாறு நான் தப்பி வந்துவிட்டேன். வெளிநாடு போவதற்காக இங்கு வந்துள்ளேன். இன்னும் சில நாட்களில் நாட்டை விட்டு போய்விடுவேன் என்றார்". என்கையில் சில ரூபாய் நோட்டுக்களை வைத்து அழுத்தினார். அப்போது வேண்டாம் என மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டேன். அந்த வறுமையான காலப்பகுதில் அது எனக்கு டியுஸன் பீஸ் கட்ட தேவைப்ப்ட்டது. ட்ரெஸ்ஸிங் ரூம் திரை போட்டு மறைக்கப்ப்ட்டிருந்தபடியால் இருட்டில் எங்கள் உரையாடலை யாரும் கவனிக்கவில்லை. அவரை ஆசுவசப்ப்டுத்தி தன்னம்பிக்கையூட்ட்டினேன். இப்பொழுது உற்சாகத்துடன் எழுந்தார் ட்ரெஸ்ஸிங் ரூம் திரையை தூக்கினேன் அறையினுள் வெளிச்சம் வந்தது. என மனதிலும் ஓர் வெளிச்சம் பரவியது. கொழும்பன் ‍ அனுபவம்-1
  7. ஈழத்திருநாடே என் அருமைத் தாயகமே, உன் நிலைகண்டு வருந்துகிறேன் கொடிய நோய் கொடுத்த துயர் மறையும் முன்னே கொடும் பசி வாட்டுகிறதே பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் துயர் கூடுகிறதே. கோல் உயர்ந்தால் குடி உயரும் கோலேந்திய ராஜ பக்சேக்களின் சுயநலமும் சொத்து சேர்ப்பும் தமிழ் ஈழத்தின் மீதான கொடும் போரும் உலகை துணைக்கழைத்து சாம்பல் மேடாக்கிய ஈழ விளைநிலமும் மக்களின் சாபமும் கண்ணீரும் அளவுக்கு மீறிய கடனும் கடனுக்கு வட்டி கட்டிட மேலும் கடனும் சீனனுக்கு கொடுத்த தாரை வார்ப்பும் என் நில மக்களை வாட்டி வதைக்கிறதே தலைநகரில், கடையில் வாங்கி உலையில் போடும் மக்கள் பேப்பர் கட்டுக்களாய் பணத்தை வாரி வீசினாலும் அரைவயிறு நனைகிறதா ? பதுக்கி வைத்த சொத்துக்களையெல்லாம் உனது கூட்டுக குழுவுடன் சற்று தானம் செய்தல் ஓரளவு உயர்வாய். மனசு வருமா ? நாட்டை நடத்த தெரியாமல் வீண் வீம்பும் , ராணுவத்துக்கு செலவிடட பணமும் அளவுக்கு மிஞ்சிய ராணுவ படையும் பலமும் (?) .. உன் சொந்த மக்களை இந்நிலைக்கு கொண்டு சென்றது உன்னை தேர்வு செய்த சிங்க( ள)இனமே உன்னை வெறுக்கையில் உன் ஆடசியின் நீட்ச்சி தேவையா ? வரலாற்றில் இல்லாத வறுமையும் துயரமும் ஏன்? உன் அடக்குமுறை போரில் அடிமைபட்டுக் கிடந்த என் ஈழத்தமிழினம் எப்படியாவது வாழ்க் கற்று விட்ட்து . மண்ணை கிண்டி வலையை வீசி விறகடுப்பில் வெந்து வாழ்க்கையை ஓட்டும் ஆனால் தற்பெருமைத் தலைநகரில் கட்டிடக் கூடுகளில் சஞ்சரிக்கும் புறாக்களாக வாழும் கொலோம்போ மக்கள் தான் பாவம். கிராமத்தான் ஓரளவு வாழ்ந்து விடுவான் ஏனையவ்ர் நீண்ட கியூ வரிசையில் விரக்தியின் விளிம்பில் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிசையில் நிற்கும் மனிதனின் மனதில் உதிக்கும் ஒரு வெறுப்பு அது ராஜபக்சேக்களின்கொடுங்கோல் சுயநல ஆடசியை மன்னிக்காது. வரலாறாய் வரிப்படுத்தப்படும். நான் புலம்பெயர்ந்து ஆண்டுகள் முப்பது ஆனாலும் என் நாட்டு மக்களை எண்ணும்போது ஏற்படட துக்கம் என்னை மேலுள்ளவாறு கிறுக்க வைத்துவிட்ட்து. .
  8. சுட்டிகளின் சூப்பர் டான்ஸ்.......வைத்த கண் எடுக்க முடியவில்லை.......! 😍 தாங்ஸ் அன்புத்தம்பி......! 🌹

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.