Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87993
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  3. Nathamuni

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    13720
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19144
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/27/22 in all areas

  1. நீங்கள் உடனே கண்ணூறு கழித்து விட்டு தொடர்ந்திருக்க வேண்டும்........! 😂
  2. முந்தியெல்லாம் நான் பழகிற ஏரியா எல்லாம் குமாரசாமி எண்டால் அந்தமாதிரி உறைப்புக்கறி வேணும் எண்டொரு வரலாறு இருந்தது. ஆர்ரை கண் பட்டுதோ கடவுளுக்குத்தான் தெரியும்...ஓக்கம டமேச்ஜ் 😂
  3. எத்தினை கரண்டி... தூள் போட்டு சாப்பிட்டாலும், வயித்து பிரச்சினை இதுவரை வரவில்லை. ப்ளீஸ்... நாவூறு படுத்தி போடாதீங்க. 😂 🤣 😜
  4. ஆஹா .....ரூக்பீ வீரர்களின் ரௌத்திரத்தை கண்டோம்.......சூப்பர் ........! 💪 😂 நன்றி சகோதரி.......!
  5. நாங்கள் kings தான் பாவிப்பது.......உங்களின் சிபாரிசில் அடுத்தமுறை கடைக்கு செல்லும்போது எடுத்துப் பாவித்துப் பார்க்கிறேன்......! 😁
  6. எங்க வீட்டு ராமாயணம்(1987) ☺️..😊
  7. திருக்குறள் அரங்கேற்றம் வசன நடை பாடல்.. படம் : ஒவ்வையார் (1953) இசை : மாயவரம் .வேணு நடிப்பு & பாடியவர் : K.B.S
  8. ■ நாவடக்கம் யாதெனில்......... முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் குருக்கள்.. அவரும் .. முடிவெட்ட எழுபது ரூபாய்.. சவரம் பண்ண ஐம்பது ரூபாய் சாமி ! என்று பணிவுடன் கூறினார்.. குருக்கள் சிரித்தபடியே, அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் குருக்கள்.. வயதில் பெரியவர் என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. வேலையை ஆரம்பித்தார் நாவிதர்.. நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த குருக்களுக்கு.. சற்று ஏமாற்றந்தான்.. பின்னர், குருக்கள் அடுத்த கணையைத் தொடுத்தார்.. ஏன்டாப்பா.. உன் வேலையோ..! முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம.. உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி "நாவிதன்னு" சொல்றாங்க..? இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் குருக்கள்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை.. நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான்..! நாங்க நாவிதர்கள்.. எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..? இந்த அழகான பதில் குருக்களை மேலும் கடுப்பேற்றியது.. அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..? இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து.. சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க.. என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்.. இதிலும் குருக்களுக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்.. எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..? இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது.. அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்.. இதைத்தானே குருக்களும் எதிர்பார்த்தார்.. கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.. இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்.. குருக்களின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்.. சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..? குருக்கள் உடனே, ஆமாம் என்றார்.. கண்ணிமைக்கும் நேரத்தில் குருக்களின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து.. மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க.. என்றார். பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்.. அதிர்ச்சியில் உறைந்து போனார் குருக்கள்.. நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.. அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார், சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..? இப்போது குருக்கள் சுதாரித்தார்.. _வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையில குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்.. இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. என்றார் குருக்கள்.. நாவிதர் உடனே குருக்களின் புருவங்களையும் வழித் தெடுத்தார்.. சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்.. சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது.. என்றபடி கண்ணாடியை குருக்களின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.. நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்.. முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்.. அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது.. கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஐம்பது ரூபாயை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் குருக்கள். நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் - அந்தஸ்தும் - பொருளும் - மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல.. இதை உணராதவர்கள் - இப்படித்தான் அவமானப்பட நேரும் ... முகநூலிருந்து......
  9. பங்கு சந்தையில் தாக்குபிடிக்க முக்கிய விடயமாக உளவியலை புரிந்து வைத்திருக்கவேண்டியது முக்கியம் என்பார்கள், ஆரம்பத்தில் சக மனிதர்களை புரிந்து கொள்வதுதான் கடினமான விடயம் என நினைத்ததுண்டு, பின்னர் பங்கு வர்த்தகத்திலீடுபட ஆரம்பித்த பின்னரே என்னைபற்றியே என்னால் இதுவரை காலமும் புரிந்து கொள்ளவில்லை என எண்ணத்தூண்டும். எமது சிந்தனையில் கடுமையாக உழத்தால்தான் பணம் வரும் என நினைப்போம் இலகுவாக வரும் பணத்தினை தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். அதனால் அதனை எப்படியாவது திரும்பவும் இழந்து விடுவோம், கட்டு கோப்பாக சிறிது சிறிதாக அனைத்து trading Rules ஐயும் பின்பற்றி கட்டியெழுப்பும் கணக்கினை கண்மூடித்தனமாக ஒரு நாளிலே இழந்து விடுவோம். trading இல் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது அதன் process மட்டும் முக்கியத்துவம் கொடுக்க சொல்வார்கள், ஆனால் நடைமுறயில் பணத்தின் வருகையும் இழப்புமே பெரும்பாலும் என்னை ஒவ்வொரு வர்த்தகத்தினையும் தூண்டி தவறான முடிவுகளை எடுக்க வைத்துள்ளது. உதாரணமாக சொந்த பணத்தில் இழப்பு ஏற்பட்டால் அதனை குறுகிய காலத்தில் மீட்டு விட பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு இன்னும் பாதகமான நிலையினை அடைதல். சாதாரணமாக வர்த்தகத்தில் ஆண்டிற்கு மொத்த முதலீட்டில் 10 இலிருந்து 20 வீதம் வரையான இலாபம் யதார்த்தமானது அதனையே எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் முதலிடுவார்கள், ஆனால் பங்கு வர்த்தகத்தில் மட்டும் 5000 முதலினை ஒரு வருடத்திற்குள் 100000 ஆக வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் நீங்கள் மிக தெளிவாகவே ஆரம்பத்தில் செயற்படுவது போல் உள்ளது உங்களது வர்த்தகங்களை பார்க்கும் போது, என்னை பொறுத்தவரை அவசரப்பட்டு பின்வாங்க தேவையில்லை என கருதுகிறேன். இழப்புகள் ஏற்படும் பொழுது உங்களது Risk இனை பல மடங்காக குறையுங்கள் என துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.