Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46798
    Posts
  2. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    9308
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19139
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87993
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/01/22 in all areas

  1. சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்கள், நாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சென்னை மாநகரில் தொழில்துறையின் வளர்ச்சி மிக வேகமாக நடந்து வருகிறது. இதனால் சென்னையை நோக்கி இடம்பெயறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அதிகப்படியான விமான சேவையை சமாளிக்க முடியாமல் திணறும் நிலைக்கு மீனம்பாக்கம் ஆளாகியுள்ளது. எனவே நிர்வாக காரணங்களுக்காக சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது. இதற்கான இடத்தை பரிந்துரை செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, போதிய இடவசதி கொண்ட பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய நான்கு இடங்களில் இந்திய விமான நிலைய ஆணையக் குழுவினர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதுதொடர்பான விரிவான அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. அதன்படி, பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் மத்திய அரசிடம் முன்மொழியப்பட்டன. இதுதொடர்பாக திமுக எம்.பி டாக்டர்.கனிமொழி சோமு மாநிலங்களவையில் இன்று (ஆகஸ்ட் 1) கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங், பரந்தூரில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளதாக தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பரந்தூர் அமைந்துள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க 4,791 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது. இங்கு போதுமான இடம் மற்றும் வான்வெளி இருக்கிறது. விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையின் இரண்டாவது விமான நிலையம் மற்றும் கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருக்கக்கூடிய விமான நிலையங்களுக்கான விரிவானப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான நிதி திரட்ட பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, ’டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், வெளிநாட்டு முதலீடு மற்றும் மத்திய நிதி ஆகியவற்றைக் கொண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் மூலம் முதல் 8 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமயம்
  2. நிச்சயம் வரும். நானும் பங்களூர் செல்லும் வழியில் சென்னைக்கு அண்மித்த பகுதியில் சிறிய காலி மனை ஒன்றை வாங்கிப் போட்டுள்ளேன். கோயம்பேட்டிலிருந்து கூவம் நதி ஓரமாக இன்னொரு மெட்ரோ வழித் தடம் திட்ட வடிவில் உள்ளது, அது இந்த விமான நிலையம் வரை நீட்டிக்கப்படலாம். பார்க்கலாம். 😌
  3. கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது. விமான நிலைய ஊழியர்களின்... சிடுமூஞ்சி தனத்தையும் குறைக்க, விசேட வகுப்புகள் கொடுக்கப் பட வேண்டும்.
  5. 100 தரத்துக்கு மேல்.. இடிந்து விழுந்த, விமான நிலைய கூரையை மறப்பதற்கு... வல்லாரை கீரை தான்... சாப்பிட வேண்டுமென்றில்லை. சாதா... கீரையே போதும். 😂
  6. கணபதி ஐயர்வாள், உங்கள் பேக்கரியிலிருக்கும் பலாலி விமான நிலையத்தையும் சூட்டோடு சூடா இயக்கப் பாருங்கள்..!🤗
  7. படிக்கும் போது ஸ்கூல்ல டூர் கூட்டி போக போராங்கன்னு அப்பா கிட்ட போய் என் தங்கிச்சி காசு கேட்டா ! அப்டியாடா செல்லம் 30 ரூவாயா சரி இந்தா 50 ரூவாயா வச்சிக்கான்னு கொடுப்பாரு. இதே நான் கேட்டா "ஆமா நீ கெட்ட கேட்டுக்கு டூர் ஒன்னுதான் கொறைச்சல் ம்பாரு. அப்புரம் அம்மா அதோட அடுப்பங்கறை சேவிங்ஸ் அது இதுன்னு பக்கத்து வீட்டு அக்காட்டன்னு கடன வுடன வாங்கி தரும். ஆனா அதுக்கப்புரம் தான் க்லைமாக்ஸ்ஸே, பள்ளிகூடம் போன பிறகு அம்மாவிடம் வந்து " ஏன்டி மொவனுக்கு டூருக்கு காசு கொடுத்தியாக்கும்.. அவன் கழுதையாவதே உன்னாலதான்டி. சரி சரி இந்தா இந்த 50 ரூவாயும் நீயே குடுத்ததா குடுத்துரு. டூர் போர இடத்துல எதாவது ஆசபட்டு வாங்குவான் புள்ள..ன்னு அம்மா தந்த 30 தோட சேர்த்து 80 ரூபாய எனக்கு தெரியாம அம்மாவிடம் கொடுக்கும் அந்த அன்பு !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.