Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    12
    Points
    46808
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87997
    Posts
  3. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9976
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/12/22 in Posts

  1. இது கொஞ்சம் சுவாரசியமானது. 😁
  2. நன்றி ஈழப்பிரியன், இது ஒரு முன் திட்டமிடப்படாத வர்த்தக நடவடிக்கை, வேலைமுடிவின் பின்னார் வரைபடத்தினை பார்த்த போது அதிக பட்ச வெற்றியினை தரக்கூடிய நிகழ்தகவுள்ள ஒரு வர்த்தக நடவடிக்கையாகக்காணப்பட்டது, அதனால் அவசரமாக பதிவிட்டேன் அதனால் எதிர்பார்ர்கும் விலையினை சரியாக கணிக்க முடியவில்லை. பதிவிடும்போது தங்கத்தின் விலை 1762, விலை பெரும்பாலும் 1758 இல் கீழ் இந்தவகை வர்த்தகத்தில் செல்லாது (38.2). அதனால் அவசரமாகப்பதிவிட்டு, பின்னர் 15 நிமிட வரைபடத்தில் தங்கத்தினை வாங்கினேன், ஆனாலும் எனது எதிர்பார்க்கும் இலக்காக 1827 இனை இட்டிருந்தேன், இரண்டொரு நாளின் பின்னரே மீள பார்த்தபோது 1803 அதன் இலக்க்காக உள்ளதாக அறிந்து கொண்டேன். தங்கம் 1827 இற்கு செல்லாது என்று கூறவில்லை, இந்த வகை ஆய்வில் 1803 ஒரு எதிர்பார்க்கும் இலக்காக உள்ளது. தங்கம் 1827 இற்கும் மேலாகக்கூட போகலாம் அல்லது போகாமலும் விடலாம், தற்போது நேரமின்மையினால் அதனை பார்க்கவில்லை, முடிந்தவரை தவறற்ற தரவினை கூற முயற்சிக்கிறேன். அத்துடன் மற்ற திரிகள் போலல்லாமல், எனது கருத்து எனக்கு சரியாக இருக்கலாம், ஆனால் நடைமுறயில் தவறு என்பதினை சந்தை உடனுகுடன் நிரூபித்துவிடும். இப்பகுதியில் பதியப்படும் கருத்துக்கு குறைந்த பட்சமாவது பொறுப்புணர்வுடன் பதிவிட வேணும் என நினைக்கிறேன். நேரமின்மைக்கு காரணம் Technical analysis இல் எனது புரிதலினடிப்படையில் இந்த திரியில் இலகுவாகவும் அதே நேரம் சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் பதிவிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன், அதற்காக பல நூல்களை உசாத்துணையாக பயன்படுத்த, வாசிக்க உள்ளது.
  3. கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் எழுதப்படுமா என்பது சந்தேகமே!! ஆனாலும் கொழும்பின் சூட்டை தணித்தது இந்த மண்ணின் குளிர்மை.. கிட்டதட்ட 27/28 வருடங்களாக மனிதர்களின் காலடி படாமல் காடு போல கிடந்த இடத்தை மாற்றிபயனுள்ள தோட்டமாக்கியதைப் பார்த்து ஒரு சந்தோஷம்!! தொடரும்…
  4. தொடர்ந்து எழுதுங்கள். ஈழபிரியன் சொன்னதுபோல் யாரும் சரியாகக் கணிக்க முடியாது. தங்கம் 1730 இல் இருந்து ஏறியபோது எந்த இடத்தில் நுளைவது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோதே 5 நாட்களில் 1800 இனை நெருங்குகிறது. மேலும் தொடர முடியாமல் தங்க முதலீட்டை நிறுத்திவிட்டேன். இதற்கும் மேல் சென்று குறைய ஆரம்பித்தால் முதலிடலாம் என்றிருக்கிறேன்.
  5. விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை மிகவும் அதிகம். எனவே விமானங்களில் சாப்பிடுவதை பலரும் தவிர்த்து விடுவார்கள். ஆனால் ஒரு சில செல்வந்தர்களும் கூட விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளை சாப்பிட மாட்டார்கள். சுவை நன்றாக இருக்காது.. என்பதுதான் இதற்கான காரணம். ஆம், உண்மைதான். விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் சுவையாக இருக்காது. நீங்கள் தரையில் சாப்பிடும் ஒரு உணவு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அதே உணவை விமானத்தில் சாப்பிட்டால் சுவை மிகவும் மோசமாக இருக்கும். எனவே விமானத்தில் சாப்பிடுவதை பலரும் விரும்புவதில்லை. விமானங்களில் விற்பனை செய்யப்படும் உணவின் சுவை மோசமாக இருப்பதற்கு விமான நிறுவனங்கள்தான் காரணம் என்ற பொதுவான எண்ணம் பலரிடம் காணப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நம் உடல்தான் இதற்கு காரணம். விமானங்களில் பயணம் செய்யும்போது, மனிதர்களின் சுவையை உணரும் திறனில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். விமானங்களில் உணவின் சுவை மிகவும் மோசமாக இருப்பதற்கு இதுதான் உண்மையான காரணம் ஆகும். விமானங்களில் மனிதர்களின் சுவையை உணரும் திறன், பல்வேறு காரணிகளால் மாற்றம் அடைகிறது. தரையில் இருக்கும் காற்றை காட்டிலும், விமானங்களின் கேபினில் இருக்கும் காற்று சுமார் 15 சதவீதம் வறண்டதாக இருக்கும் என்பது முதல் காரணி. ஒரு சில சமயங்களில் பாலைவனங்களில் இருக்கும் காற்றை விட, விமானங்களின் கேபினில் இருக்கும் காற்று வறண்டதாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், நமது சுவை மற்றும் வாசனையை உணரும் சக்திகள் நம்மிடம் இருந்து விலகி சென்று விடும். விமானங்களின் கேபினில் உள்ள காற்று மிகவும் வறண்டதாக இருப்பதால், நமது உடலில் நீரிழப்பு ஏற்படும். அத்துடன் வாய் வறண்டு விடும். இதன் காரணமாக நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்களின் உணர்திறன் பாதிக்கப்படும். எனவே உணவு நமக்கு சுவையாக இருக்காது. அதேபோல் தரையில் இருப்பதை காட்டிலும், விமானங்களின் கேபினில் அழுத்தம் மிகவும் குறைவாக இருக்கும் என்பது, விமானங்களில் நமது சுவையை உணரும் திறனில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு இரண்டாவது காரணி ஆகும். உணவு நமக்கு சுவையாக இருக்க வேண்டுமென்றால், நாம் வாசனையை நுகர்வது மிகவும் முக்கியமானது. ஆனால் விமான கேபினில் அழுத்தம் குறைவாக இருப்பதால், நமது உடல் வாசனைகளை கண்டறிவதில் பிரச்னைகள் ஏற்படும். அதாவது குறைவான கேபின் அழுத்தம் காரணமாக, நமது ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்து விடும். இதன் விளைவாக உடலில் இருக்கும் 'ஆல்ஃபாக்டரி ரிசப்டர்கள்' (Olfactory Receptors), வாசனைகளுக்கு எதிர்வினையாற்றும் விஷயத்தில் குறைந்த உணர்திறன் கொண்டதாக மாறி விடும். அதாவது உங்கள் உடல், வாசனையை உணரும் திறன் பாதிக்கப்படும். விமானங்களில் உணவு நமக்கு சுவை இல்லாததாக தோன்றுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. விமானங்களில் சத்தம் அதிகமாக இருக்கும் என்பதுதான், நமது சுவை உணரும் திறன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் மூன்றாவது காரணி ஆகும். உணவின் சுவைக்கும், சத்தத்திற்கும் என்ன தொடர்பு? என நீங்கள் நினைப்பது புரிகிறது. உணவின் சுவை மோசமாக இருப்பதற்கு சத்தம் ஒரு காரணம் என்பது வித்தியாசமாகவும் தோன்றலாம். ஆனால் இது உண்மைதான் ஏனெனில் இனிப்பு சுவைகளை பாராட்டும் நமது திறனை அதிக சத்தம் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது அதிக சத்தம் காரணமாக, இனிப்பு சுவைகளை உணரும் நமது திறன் பாதிக்கப்படுகிறது. விமானங்களில் உணவின் சுவை மோசமாக இருப்பதற்கு இவை மூன்றும்தான் முக்கியமான காரணங்கள். எனவே விமானங்களில் உணவு சுவையில்லாமல் இருப்பதற்கு, விமான நிறுவனங்கள் மட்டும் காரணமல்ல. நம் உடல்தான் மிக முக்கியமான காரணம். விமானத்தில் உணவின் சுவையை நாம் உணர்வதில் இப்படி பல்வேறு பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், அதற்கு மாற்று வழிகளை கண்டறிவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செய்தி
  6. வசி பங்குச் சந்தையில் எவருமே சரியான புள்ளி விபரங்களை முதலே சொல்ல முடியாது. ஆனபடியால் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.
  7. 1758.72 entry 1754.10stop தங்கத்தின் எதிர்பார்ப்பு விலை 1827 தவறான கணிப்பு அதன் உண்மையான இலக்கு 1803 (1:9 R&R) எனது வர்த்தகத்தினை மூடிவிட்டேன், தவறான இலக்கினை கூறியமைக்கு மன்னிக்கவும்.
  8. எவ்வளவோ நிறைய விடயங்கள் உங்களிடம்......அவற்றில் ஒரு துளி இதுவென்று நினைக்கின்றேன் தனி.......அருமையான பதிவு........! 👍
  9. போராட்டம் பற்றிய புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்கும், போர்க்களத்தில் நேரடியாக நின்றவர்கள் கருத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன! எமது மாணவப் பருவக் காலங்களில்...நாம் தனி நாடு கோரிப் போராடுவது சாத்தியாமனதா, னாம் தனியாகப் போகும் சந்தர்ப்பம் ஏற்படும் போது எம்மால் பொருளதார ரீதியில் தாக்குப் பிடிக்க முடியுமா, எமது சிறிய நாட்டை எத்தனை உலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடும், இந்திய தேசத்திந் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று பல கேள்விகளும் பதில்களும் பொதுவான சந்திப்புக்களில் எப்போதுமே அலசப் பட்டுக் கொண்டுமிருக்கும்! அந்தக் காலத்தில் பி.பி.சி போன்ற செய்திகளில் ஏதாவது ஒரு செய்தி வந்தாலே, அது மிக முக்கிய செய்தியாகவும், சர்வ தேச அளவில்..எமதினத்தின் சிறு வெற்றியாகவும் பார்க்கப் பட்டது! நீங்கள் நம்பினால் நம்புங்கள்...மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்ற பேதமானது எனக்குத் தெரிந்து அப்போது இருந்தது இல்லை! அப்போதைய விடுதி கல்லூரி நண்பர்களுடன் ஒரே தட்டில் சாப்பிட்டும், ஒரே கட்டிலில் படுத்து உறங்கியும் உள்ளோம் என்பதை,இப்போது வெளிவரும் கருத்துக்களைப் பார்த்து நம்ப முடியவில்லை! ஆக மட்டக்களப்பு ஆக்கள் மந்திரம் போட்டுப் பாய்களில் ஒட்ட வைத்து விடுவார்கள் என்று பகிடியாகக் கூறுவார்கள்! இதன் உண்மையான கருத்தானது மட்டக்களப்பு மான் வளமும், மீன் வளமும் நிறைந்த மண்! மட்டக்களப்புப் பெண்கள் கொஞ்சம் குளுமையாக இருப்பார்கள்! அதனால் மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் தொழிலின் நிமித்தமாகச் செல்லும் யாழ் இளைஞர்கள் அங்கேயே திருமணம் செய்து செட்டிலாகி விடுவதால்,அந்தப் பாயோடு ஒட்ட வைக்கும் சொல்லடை ஏற்பட்டதாக மட்டக்களப்பு நண்பனே என்னிடம் விளங்கப் படுத்தியிருக்கிறான்! உங்கள் கதையின் ஆரம்பத்தில்....தமிழர்களைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மையானவை தான் எனினும் அதற்கும் பின்னணனியான காரணங்கள் உண்டு தான்! ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரந்திருந்த ஒரு இனம், நகரமைப்பு, கட்டிடக்கலை, யோகக் கலை, பரதக் கலை, வானியல் சாத்திரம் போன்ற துறைகளில் அதிகமான நிபுணத்துவம் கொண்டு வாழ்ந்த ஒரு இனம் எந்தத் தனித்துவமான மதத்தையும் தனது மதமாக ஏற்றுக்கொள்ளாது ஒரு சமாதானமான வாழ்வை வாழ்ந்திருந்தது! சமாதனமே நீண்ட காலங்கள் நிலவியதால்...போருக்கான ஒரு பெரும்படையையோ, பெரும் ஆயுதங்களையோ அது தன்னிடம் கொண்டிருக்கவில்லை! பெரிதாக எதிரிகளும் பெரிதாக இருந்திருக்க நியாயமில்லை! வட திசையிலிருந்து பட்டுப் பாதை வழியாக முதலில் உள் நுழைந்தவர்களால் , அந்த இனக்குழுமம் ஓரளவுக்கு அழிக்கப் பட்டதுடன் தெற்கு நோக்கிய அதன் புலம் பெயர்வும் ஆரம்பித்தது! ஓட,ஓடத் துரத்தப் பட்ட அந்த இனம் ஓட இடமில்லாமல்.....கடலணை மூலம் இலங்கை வந்து சேர்ந்து ஒரு வரண்ட பூமியில் வாழத் துவங்கியது! அதனிடம் வேறு என்ன குணாதிசங்களை எதிர் பார்க்கலாம்! உங்கள் கதையில் ஒரு வரலாறே பொதிந்து போய் இருந்ததால் ..சிறியதாக நான் எழுத நினைத்த கருத்து ஒரு கதயாக நீண்டு போனது! நன்றி...!
  10. கதைத் தொடரைக் கொண்டு செல்லும் விதம் அருமை..! மட்டுத் தமிழ் தனித்துவமானது போல உள்ளது! நேரம் கிடைக்கும் மட்டுத் தமிழைப் பற்றிக் கொஞ்சமாவது அறிந்து கொள்ள அவா! தொடருங்கள், தனி...! மகளுக்கு மட்டு மண்ணில் ...ஆனா, ஆவன்னா எழுதிப் பழக்குங்கள்! உங்கள் தட்டச்சுப் பலகையை அடிக்கடி உடைக்க மாட்டாள்! மண்ணில் எழுதி விளையாடிக் கொண்டிருப்பாள்...!😃
  11. தொடர் நன்றாக உள்ளது. ஊரில் இருந்து கொண்டு எழுதும் போராட்டக் கதைக்கும் வெளி நாட்டில் இருந்து கொண்டு அதில் பங்கு கொள்ளாமல் போர்காலம் பற்றி எழுதும் கதைக்கும் சூழ்நிலை சார்ந்த யதார்த்தம் , சார்ந்த வேறுபாடுகள் உள்ளன. அது உங்கள் கதையில் தெரிகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.