கோசான் அந்தகாலகட்டத்தில் நீங்கள் கூறிய கருத்துகளை பொருளாதார விற்பன்னர்களுடன் முற்றும் முரண்பாடாக இருந்த காரணத்தினால் அதனை கவனத்தில் கூட எடுக்கவில்லை என்பதனை இப்போது உணருகிறேன்.
பாராட்டுக்கள் அதனை நீங்கள் குறிப்பிட்டு காட்டியிருக்காவிட்டால் இந்த விடயம் கவணத்திற்கு வந்திருக்காது.
பொதுவான மக்கள் பெரும்பாலும் இந்த பிரபலங்களின் கருத்துகளை கண்ணை மூடிக்கொண்டு பின் தொடர்பவர்களாக இருப்பதனாலேயே பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
நான் பெரும்பாலும் இந்த வகையான பெரும்பாலான மக்கள் கூட்டத்தில் இருப்பதாக உணர்வதுண்டு (Herd mentality).
நீங்கள் இதில் விதிவிலக்காக உள்ளீர்கள்.
முதலீடுகள் என்று வரும்போது எமது மூளைகூட எமக்கு ஒத்துழைக்காது.
ஜோன் கார்டரின் Mastering the trade எனும் புத்தகத்தில் என நினைக்கிறேன் கனடிய ஆராய்சியாளர் கண்டிபிடித்த ஒரு விடயத்தினை குறிப்பிட்டிருந்தார், அதாவது குதிரை பந்தயத்தில் சூதாடுபவர்கள் ஒரு குதிரையில் பணம் இட்ட பின் முன்னரை விட அதிகமாக அந்த குதிரைதான் வெல்லும் என நம்புவார்கள்.
இதனை மார்க் டக்லஸ் Blind perception என அழைக்கிறார், எமது மூளை வேண்டுமென்றே எமக்கு வலி தரக்கூடிய விடயங்களை தவிர்த்துவிடுகிறது, அதாவது பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலை குடிப்பது போல.
இதனை ஒரு சிலரால்தான் தவிர்க்கமுடிகிறது அவர்களால்தான் சிறந்த முதலீட்டாளர்களாக உருவாக முடிகிறது.
முன்பு நான் இங்கு குறிப்பிட்ட எனது குஜராத்திய நண்பர் எனது தகவலின் அடிப்படையில் என்னை விட சிறப்பாக முத்லீடுபவர் எனகுறிப்பிட்டிருந்தேன் அல்லவா, அக்கால கட்டத்தில் நாளாந்த வர்த்தகத்தில் ஈடுபடுவதுண்டு அவர் என்னிடம் கேட்ட விடயம் நாளின் ஆரம்பத்தில் என்ன பங்கு என்ன விலையில் வாங்க உள்ளேன் என்ற விபரத்தினை தனக்கு தெரிவிக்குமாறு கூறியிருந்தார்.
பொதுவாக எல்லா வர்த்தகத்திலும் என்னை விட சிறப்பாக செயற்பட்டிருப்பார், அதனை பெருமையுடன் என்னிடம் கூறுவார் (உண்மையில் அவரிடம் மிக கட்டுகோப்பான மனநிலை காணப்படும், இலகுவில் குறைந்தவிலைக்கு விற்கமாட்டார், இலக்குகளை தாண்டி அதிகபட்ச விலையில் விற்பார் )
2014 ஆண்டின் நடுப்பகுதியென நினைக்கிறேன் WHN எனும் எரிசக்தி நிறுவனத்தில் முதலிட்டிருந்தார் (எனது கருத்தினடிப்படையில்தான்).
தலா ஒவ்வொரு பங்கும் 0.09 சத விலையில் வாங்கியிருந்தார், அந்த பங்குகள் 0.19 அடைந்திருந்த போது எனது நண்பரிடம் சொன்னேன் 0.20 இல் விற்றுவிடுங்கள் அதுதான் இதுவரைகாலமும் உள்ள அதிக பட்ச விலை (Resistance),அத்துடன் அது ஒரு பாதுகாப்பான நடவடிக்கையும் கூட.
அதற்கு அவர் சொன்னார் விலை 14 வரை செல்லும், நீங்கள் கவலைப்படவேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார், மறுநாள் விலை 0.20 தாண்டி 0.22 சென்ற போது சந்தை நடவடிகையில் மாற்றம் தெரிந்தது.
http://justfintech.com/wp-content/uploads/2015/12/VSA_Phases.jpg
இதனை Buying climax என அழைபார்கள் பெரிய நிறுவனங்கள், விலை குறைந்த விலையில் வாங்கிய பங்குகளை, சந்தையில் அதிகபட்ச விலையில், விலை வீழ்ச்சி அடையாமல் அதிகளவான பங்குகளை அப்பாவி பொதுமக்களிடம் விற்றுவிடுவார்கள், இந்த நடவடிக்கையில் விலை மாற்றம் இருக்காது ஆனால் அதிகளவான பங்குகள் கைமாற்றப்பட்டிருக்கும், இதனை சந்தை நடவடிக்கை நடைபெறும்ப்போது விலை விலகலையும் பங்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரைபடத்தினூடு வெற்றுக்கண்ணாலேயே இலகுவாக அடையாளம் கொள்ளலாம்.
எனது நண்பருக்கு உடனடியாக ஒரு குறுஞ்செய்தியினை அனுப்பி என்னை தொடர்பெடுக்குமாறு கூறினேன், என்னை தொலைபேசியில் அழைத்த நண்பரிடம் நிலமையினைகூறி முடிவு உங்கள் கையில் எனக்கூறினேன், அவர் மிகவும் நிதானமாக கூறினார் கவைலைப்படாதீர்கள் நான் பார்த்துகொள்கிறேன் என்றார், அவர் எதிர்பார்த்த விலைக்கு குறைவாக ஒரு சதத்தினை கூட இழக்க அவர்விரும்பவில்லை அதனை விற்கவில்லை.
அதற்கு பின்பு நிகழ்ந்த விடயத்தினை நான் கூறவிரும்பவில்லை அது ஒரு சோகமான முடிவாகிவிட்டது.
சில சமயம் பங்கு சந்தை நடவடிக்கையில் கீரைக்கடைக்கு எதிர்கடை வேணும் என்பதுபோல எதிர்கருத்து இருப்பது அத்தியாவசியமாகிறது.
ஆனாலும் சில எனது மனதில் படும் கருத்துகலை; உண்மையான எந்தவித உள்நோக்கமும் இன்றி, மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனும் அடிப்படையில் கூறப்பட்ட போதும்; அவர்கள் தமது முதலீட்டில் கொண்ட காதலால் ( குதிரை பந்தய மனப்பான்மை) எனது கருத்து அவர்களை பாதித்ததாகக்கருதுகிறார்கள் (காழ்ப்புணர்ச்சி).
இதற்கு நானும் விதிவிலக்கில்லைதான், அதனால்தான் என்னால் அவர்களை புரிந்து கொள்ளமுடிகிறது.
http://justfintech.com/wp-content/uploads/2015/12/VSA_Phases.jpg