Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87993
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38771
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46798
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    32030
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/02/22 in all areas

  1. தந்தை செல்வாவின் வெற்றியும் "தம்பியின்" வெளிப்படுத்தலும் 1972 ஆம் ஆண்டில் சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட அரசிய சட்டத்திற்கு எதிராகவும், தரப்படுத்தல்களுக்கெதிராகவும் தமிழ் மாணவர் பேரவை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தல்களில் வெற்றிபெற்ற கூட்டணியான சுதந்திரக் கட்சி, சமசமாஜக் கட்சி, கம்மியூனிஸ்ட் கட்சி என்பன இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கியிருந்தன. சமஷ்ட்டிக் கட்சியும் தனது பங்கிற்கு ஒரு அரசியலமைப்பு நகலை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தது. சமஷ்ட்டிக் கட்சியின் அரசியலமைப்பு நகலின்படி இலங்கை ஒரு சமஷ்ட்டிக் குடியரசாக இருப்பதுடன் ஐந்து சுய அதிகாரம் பெற்ற பிரதேசங்களையும் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஐந்து சுயாட்சி பிரதேசங்களாவன, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், ஊவா, சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்கள், வடமாகாணமும், கிழக்கின் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களும், இறுதியாக அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்குப் பிரதேசமும் ஆகும். சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்த யோசனைகளை பாராளுமன்றம் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பின்வரும் அரசியலமைப்பினை அது முன்வைத்தது, "சிறிலங்கா குடியரசு ஒரு ஒற்றையாட்சி நாடாகும். சிங்களமே இந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகும். பெளத்த மதம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களிலும் மேலானதாக போற்றிக் காக்கப்படும்" என்று கூறியது. இதனால் மிகுந்த ஆத்திரமடைந்த தமிழ் இளைஞர்கள், உடனடியாக பாராளுமன்றத்தை விட்டு விலகுமாறு சமஷ்ட்டிக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கவே, அக்கட்சியும் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று விலகிக் கொண்டது. இப்புதிய அரசியலமைப்புக் குறித்துப் பேசிய தந்தை செல்வா, "இது ஒரு அடிமைச் சாசனம்" என்று குறிப்பிட்டிருந்தார். 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு, தமிழ் இளைஞர்களை தமிழர்களுக்கான தனிநாடு ஒன்றிற்கான போராட்டம் நோக்கித் தள்ளிவிட்டிருந்தது. புதிய அரசியலமைப்பு அமுல்ப்படுத்தப்படுவதற்கு சரியாக 8 நாட்களுக்கு முன்பு, வைகாசி 14, 1972 இல் தமிழ்க் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் அமைப்பை உருவாக்கின. இதில் சமஷ்ட்டிக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாட்டுக் கட்சி மற்றும் சில தொழிற்சங்கங்கள் என்பனவும் பங்குகொண்டிருந்தன. ஒருங்கிணைக்கப்பட்ட தமிழர் ஐக்கிய முன்னணி வைகாசி 22, 1972 இல் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்தது. இளைஞர்கள் இப்போராட்டத்தை கிராமங்கள் தோறும் எடுத்துச் சென்றனர். கிராமங்கள் தோறும் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டதோடு சிங்கள பெளத்தத்தை பிரகடனப்படுத்தும் இலங்கைத் தேசியக்கொடியும், அரசியலமைப்பின் மாதிரிகளும் இளைஞர்களால் தமது எதிர்ப்பினைக் காட்டும் முகமாக எரிக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பிற்குத் தமிழர்களிடத்திலிருந்த எதிர்ப்பினை அரசு புரிந்துகொள்ளச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காக தந்தை செல்வா தனது பாராளுமன்ற பதவியினை ராஜினாமாச் செய்திருந்தார். செல்வாவின் தொகுதிக்கான இடைத்தேர்தலை 1975 வரை அரசு பின்போட்டுக்கொண்டே வந்தது. தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டத்தை அடக்க சிங்களத் தலைமை தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. அதன்படி இந்த ஆர்ப்பாட்டங்களில் முன்னால் நின்று செயற்பட்ட 70 இளைஞர்களை அது கைதுசெய்தது. இது அரச காவல்த்துறையுடனும், ராணுவத்துடனும் தமிழ் இளைஞர்கள் நேரடியாக மோதும் நிலையினை உருவாக்கியது. தரப்படுத்தலினால் மிகுந்த விரக்திக்கும், கோபத்திற்கும் உட்பட்டிருந்த இளைஞர்கள் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ராணுவ அடக்குமுறைக்கெதிராகத் தீவிரமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அத்துடன், அகிம்சை ரீதியிலான போராட்டமும், அரசுடன் ஒத்துழைத்துச் செயற்படும் வழிமுறையும் முற்றாகத் தோற்றுவிட்டதனையும் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்கத் தலைப்பட்டனர். வங்கதேசத்தில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சியையும், தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆயுதக் கிளர்ச்சியையும் முன்னுதாரணமாகக் காட்டி, ஆயுதப் போராட்டம் ஒன்றினாலன்றி தமிழருக்கான சுதந்திரம் சாத்தியமில்லை என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக ரகசிய தமிழ் ஆயுத அமைப்புக்கள் உருப்பெறத் தொடங்கின. அவற்றுள் ஒன்றே பிரபாகரனின் புதிய தமிழ்ப் புலிகள் எனும் அமைப்பாகும். 1974 ஆம் ஆண்டு தமிழர் ஆராய்ச்சி மாநாடு மீது சிங்கள அரசு நடத்திய மிலேச்சத்தனமான படுகொலைகள் தமிழ் இளைஞர்களை வெகுவாக ஆத்திரம் கொள்ள வைத்திருந்தது. சிவகுமாரன் அடங்கலாக பெருமளவு இளைஞர்கள் இத்தாக்குதலை அரசு திட்டமிட்டே நடத்தியதாக வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து வந்தனர். இதன் ஒரு கட்டமாக பெருமளவு ஆர்ப்பாட்டங்களை இளைஞர்கள் ஒழுங்குசெய்தனர். தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கு பழிவாங்கியே தீர்வேண்டும் என்கிற வெறி சிவகுமாரன் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டிருந்தது. அவரின் இலக்குகளாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சி. குமாரசூரியர், யாழ்ப்பாண மேயர் அல்பிரெட் துரையப்பா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர சந்திரசேகர ஆகியோரே இருந்தனர். ஆனால், 1974, ஆனி 4 ஆம் திகதி கோப்பாய் மக்கள் வங்கிக் கொள்ளையில் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்ப வழியின்றி சிவகுமாரன் தனது சயனைட் வில்லையினை உட்கொண்டு மரணமாக வேண்டி ஏற்பட்டது. அவரது மரணம் வடபகுதி மக்களிடையே ஆற்றொணாத் துயரத்தையும், ஆத்திரத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. 1975, மாசி 6 ஆம் திகதி காங்கேசன் துறையில் நடந்த இடைத்தேர்தலில் தந்தை செல்வா அமோகமான வெற்றியடைந்ததையடுத்து, தனிநாட்டிற்கான கோரிக்கையும், விருப்பும் தமிழ் மக்களிடையே வெகுவாக அதிகரித்திருந்தது. தனது தேர்தல் வெற்றியினையடுத்து மக்களிடம் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், " சரித்திர கால்கம்தொட்டு இந்த நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனி இறையாண்மையுள்ள இன மக்களாக வாழ்ந்தே வந்தனர். அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிக்கும்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. கடந்த 25 வருடங்களாக இந்த நாட்டில் சிங்களவருக்கு நிகரான அரசியல் உரிமைகளை தமிழர்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற நோக்கிலேயே போராடி வருகிறோம். ஆனால், துரதிஷ்ட்டவசமாக ஆட்சிக்கு வரும் அனைத்துச் சிங்களத் தலைவர்களும் தமது பலத்தினைப் பாவித்து தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்தி வருகின்றனர். எமது அடிப்படை உரிமைகளைத் தரமறுப்பதுடன், எமது உணர்வுகளையும் நசுக்கி வருகின்றனர். எனக்கு நீங்கள் இன்று தந்திருக்கும் மகத்தான வெற்றி கூறும் செய்தி ஒன்றுதான், அதாவது, தமிழ்மக்களுக்கு சரித்திரகாலம் தொட்டு இருந்துவரும் இறையாண்மையினைப் பாவித்து, எமக்கான தனியான நாடான தமிழீழத்தை உருவாக்கி, நம்மை மீண்டும் விடுதலைபெற்ற இனமாக உருவாக்க வேண்டும் என்பதுதான். தமிழர் ஐக்கிய முன்னணியினரின் சார்பாக நான் உங்களுக்குக் கூறும் உறுதிமொழி என்னவெனில், உங்களின் ஆணையான சுதந்திரத் தமிழீழத் தனிநாட்டினை உருவாக்கியே தீருவோம் என்பதுதான்". கூடியிருந்த இளைஞர் வெற்றிமுழக்கம் செய்ததோடு, தமிழீழம் மட்டுமே எமக்கு வேண்டும், வேறெதுவும் வேண்டாம்" என்று வானதிரக் கோஷமிட்டனர். ஒருசிலர் தமது சுட்டுவிரலை ஊசிகளால் துளைத்து, வெளிக்கசிந்த குருதியெடுத்து தந்தை செல்வாவின் நெற்றியில் இரத்தத் திலகமிட்டு, தாம் தமது இலட்சியத்தை அடைய எத்தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதை வெளிப்படுத்தினர். இந்த ஒன்றுபட்ட விடுதலை உணர்வே 1976 இல் செய்யப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோட்டமாக அமைந்தது. 1976, வைகாசி 5 ஆம் நாளன்று, வட்டுக்கோட்டைத் தீர்மான நடைபெறுவதற்கு சரியாக 9 நாட்களுக்கு முன்னர், 21 வயதே நிரம்பிய, எல்லாராலும் தம்பி என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட பிரபாகரன் தனது ஆயுத அமைப்பான புதிய தமிழ்ப் புலிகளுக்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று பெயர் சூட்டி வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிதர்சனமாவதற்கான அனைத்தையும் செய்வேன் என்று சபதமெடுத்தார்.
  2. தமிழர்கள் பொறுமையிழந்த காலம் 1961 இல் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு தமிழ் சிங்கள இனங்களிடையிலான உறவில் ஒரு பாரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழர்கள் அரசியல் ஞானம் பெற்றவர்கள் என்பதும், அரசியல் ரீதியாக தீவிரமாகச் செயற்படக் கூடியவர்கள் என்பதனையும் இந்நிகழ்வு சுட்டிக் காட்டியது. அதுவரை காலமும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த இளைஞர்களையும், மாணவர்களையும் தீவிரமான அரசியலில் ஈடுபட இந்த நிகழ்வு உந்தித் தள்ளியிருந்தது. அன்றிலிருந்து இளைஞர்கள் அரசியல் ரீதியான கேள்விகளைத் தமது தலைவர்களிடம் முன்வைக்கத் தொடங்கியதோடு, தமது கோரிக்கைகளுக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவும் தலைப்பட்டனர். டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றுவிடலாம் என்கிற தந்தை செல்வாவின் முயற்சி தோற்றுப்போனதையடுத்து, தமது உரிமைகளுக்காக தாமே போராடவேண்டும் என்கிற மனநிலைக்கு இளைஞர்கள் அபோது வந்திருந்தனர். 1970 இல் டட்லியின் அரசைத் தொடர்ந்து சிறிமாவின் அரசு ஆட்சிக்கு ஏறிய தருணமே தமிழர்கள் தமது போராட்ட வழிமுறையினை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையினை ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழர்கள் வெகுவாகக் காயப்பட்டுப் போன உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிறிமாவின் அரசு வேண்டுமென்றே தமிழர்களைக் மேலும் மேலும் காயப்படுத்தும் நோக்கில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அரச வேலைவாய்ப்பிற்கு கட்டாயமாக சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் தமிழர்கள் தமது பிரதேசங்களில்க் கூட அரச வேலைகளைப் பெற்றுக்கொள்வதை சிறிமாவோ அரசு முற்றாகத் தடுத்தது. அதுமட்டுமல்லாமல் மொழி அடிப்படையிலான தரப்படுத்தல்களை பல்கலைக்கழக அனுமதிக்கு கட்டாயமாக்கியதன் மூலம் பெருமளவு தமிழ் இளைஞர்களின் பல்கலைக்கழக தகுதியினை இல்லாமலாக்கியது. தமது கல்வியில் பாரிய தாக்கத்தை சிங்கள அரசு ஏற்படுத்தியமை தமிழ் மாணவர்களை சிங்களவர்களிடமிருந்து அந்நியமாக்கியதுடன், தமது தமிழ் அரசியல்த் தலைமைகளிடமிடுந்து அந்நியப்பட வைத்தது. தரப்படுத்தலின் பாதிப்புப் பற்றி தமிழ் அரசியல்த் தலைமைகள் காட்டிய அசமந்தப்போக்கும், அதன் தாக்கம் குறித்த போதிய அறிவின்மையும் தமிழ்த் தலைமைகளை இளைஞர்களிடமிருந்து அந்நியப்படுத்தக் காரணமாகின. தமிழர்களில் பலர் சமஷ்ட்டிக் கட்சியின் ஆதரவுடன் அரச அதிகாரிகளாக, ஆசிரியர்களாக பதவிவகித்து வந்தனர். பல தமிழர்கள் சமஷ்ட்டிக் கட்சியில் இணைவதன் மூலம் தமது வேலைவாய்ப்பு வசதிகளைப் பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு தரப்படுத்தல்பற்றி அதிக்க அக்கறைப்படாமல் இருந்ததுடன், தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களில் அது ஆறில் ஒன்று மட்டுமே என்கிற நிலைப்பாட்டிலும் செயற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தமது அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு தமக்கான பிரச்சினைகளை தாமே தீர்க்கும் முடிவிற்கு வந்தனர். அதன் முதற்படியாக தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக பொன்னுத்துரை சத்தியசீலன் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் இவ்வமைப்பின் முக்கிய பொறுப்புக்களில் பிரபாகரன், சிறிசபாரட்ணம், சிவகுமாரன் ஆகியோரும் செயற்பட்டனர். பின்னர் இவ்வமைப்பு தமிழ் இளைஞர் பேரவை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  3. பாதுகாப்பும் பந்தோபஸ்த்தும் 1968 ஆம் ஆண்டு, தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்ட தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் மிகுந்த விரக்தியோடும், ஆத்திரத்தோடும், டட்லி சேனநாயக்கவின் அரசின் பங்காளிகள் எனும் நிலையிலிருந்து வெளியேறிச் சென்றனர். தந்தை செல்வாவின் கட்சி மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமுமே தாம் தொடர்ச்சியாக சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டுவருவது குறித்து இதே காலப்பகுதியில் மிகுந்த சினங்கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது குறிப்பிடத்தக்களவு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதற்கு தமது அரச அதிகாரத்தையும், ராணுவ பலத்தையும், கூடவே சிங்களக் குண்டர்களையும் சிங்களத் தலைவர்கள் பாவிக்கத் தொடங்கியிருந்தனர். காலிமுகத்திடலில் தமிழ்த்தலைவர்கள் நடத்திய சத்தியாக்கிரக நிகழ்வினை குண்டர்களைக் கொண்டு அடித்து அழித்த சிங்களத் தலைவர்கள், அதனைத் தொடர்ந்து கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தில் வேலை செய்துவந்த தமிழ் அதிகாரிகள் மீதும், தமிழ் விவசாயிகள் மீதும் கடுமையான வன்முறைகளை அவிழ்த்துவிட்டிருந்தனர். இருவருடங்களுக்குப் பின்னர், 1958 இல் தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகள் இலங்கையின் பல பாககங்களிலும் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்டன. இத்தாக்குதல்களில் முதலாவது பொலொன்னறுவையூடாகச் சென்றுகொண்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு ரயில் மீது பதவியா குடியேற்றத்தில் வசித்துவந்த சிங்களக் குண்டர்களால் நடத்தப்பட்டது. பின்னர் இத்தாக்குதல்கள் அநுராதபுரம், தலைநகர் கொழும்பு, கண்டி உட்பட பல மலையகத் தமிழ்ப்பகுதிகளுக்கும் பரவியது. தமிழர்கள் சகட்டுமேனிக்குத் தாக்கப்பட்டதுடன், குழந்தைகள் கொதிக்கும் தார்ப் பீபாய்க்களுக்குள் வீசிக் கொல்லப்பட்டனர். பலர் தாம் உடுத்திருந்த உடைகளுடன் அவர்களின் வீடுகளிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்ட அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இப்படித் தஞ்சம் புகுந்த தமிழர்களை அரசு கப்பல்கள் மூலமும், ரயிகள் மூலமும் வடக்குக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தமிழர்கள் மீது சிங்களக் காடையர்களும், அரச இயந்திரமும் திட்டமிட்ட வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்க, இந்த வன்முறைகளுக்கான காரணம் தமிழ் சமஷ்ட்டிக் கட்சியினர் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டதுதான் என்றும் குற்றஞ்சாட்டிய பண்டாரநாயக்கா, சிங்களவர்களின் ஆத்திரத்தைத் தணிப்பதற்கு ஒரே வழி சமஷ்ட்டிக் கட்சியினரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் என்று கூறியதுடன் அவர்களை 1958 ஆனி 4 ஆம் திகதிலிருந்து 1958 புரட்டாதி 4 வரை சிறையில் அடைத்தார். அவ்வாறே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு சமஷ்ட்டிக் கட்சியினர் இலங்கையில் தமிழருக்கென்று தனியான நாடொன்றினை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்கிற குற்றஞ்சாட்டி 1961 ஆம் ஆண்டு சித்திரை 17 இல் மீண்டும் சிறையில் அடைத்தது. அவர்கள் சிறையிலடைக்கப்பட்ட தருணத்தில் அரச வானொலியில் உரையாற்றிய சிறிமாவோ பின்வருமாறு கூறினார், "கடந்த வாரம் சமஷ்ட்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் தமிழர்களுக்கென்று தபால் சேவை ஒன்றினையும், காவல்த்துறை ஒன்றினையும், காணி கச்சேரியையும் உருவாக்கி, தமிழர்களுக்கு காணிகளுக்கான அதிகாரத்தினையும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது சட்டபூர்வமாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அவமத்திக்கின்ற, அதன் அதிகாரத்திற்குச் சவால் விடுகின்ற நடவடிக்கையாவதோடு, தமிழர்களுக்கென்று தனியான நாடொன்றினை இலங்கையில் உருவாக்குவதனை நோக்காகக் கொண்டே இது நடத்தப்பட்டுவருகின்றது என்பதும் தெளிவு". சிறிமாவின் முக்கிய மந்திரிகளில் இருவரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா மற்றும் சி பி டி சில்வா ஆகியோர் டட்லியின் அரசைத் தோற்கடிக்க தந்தை செல்வாவின் உதவியினை முன்னர் நாடியிருந்தனர். பின்னர் 1960 இல் தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் இருவரும் தனிச் சிங்களச் சட்டத்தினை தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் அமுல்ப்படுத்த 1961 இல் முன்னின்று செயற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனைத் தொடர்ந்து, யாழ் கச்சேரிக்கு முன்பாக சமஷ்ட்டிக் கட்சியினர் இன்னொரு சத்தியாக்கிரக நிகழ்வினை 1961, மாசி 20 ஆம் நாள் ஒழுங்குசெய்தனர். ஆரம்பத்தில் சமஷ்ட்டிக் கட்சியினரால் மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியது. யாழ் கச்சேரியின் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் சிங்களத்தில் நிர்வாகம் நடத்தப்படுவதனை தடுக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் ராணுவச் சரித்திரத்தில் முதன்முறையாக பங்குனி 30 அன்று ஒரு தொகுதி கடற்படை வீரர்களை இலங்கையரசு வான்வழியாக யாழ்ப்பாணத்தில் தரையிறக்கியது. யாழ் கச்சேரியினைச் சுற்றிவளைத்து தமிழர்கள் இப்பகுதிக்கு வருவதனைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. ஆனால், தனியார் காணிகளுக்கூடாகவும், சிறுவீதிகள், ஒழுங்கைகளுக்கூடாகவும் பெருமளவு தமிழர்கள் கச்சேரிநோக்கி திரள் திரளாக வந்துகொண்டிருந்ததால் சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது. அகிம்சை ரீதியிலான தமது ஆர்ப்பாட்டத்தை ராணுவ ரீதியில் அடக்க அரசு முனைந்ததற்குப் பதிலடியாக சமஷ்ட்டிக் கட்சி தமது சத்தியாக்கிரக நடவடிக்கைகளை ஏனைய தமிழ்ப் பகுதிகளான வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இருந்த கச்சேரிகளுக்கு முன்னாலும் விஸ்த்தரித்துக் காட்டியது. தமது அகிம்சை ரீதியிலான போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் வலுத்துவரும் ஆதரவினை உணர்ந்துகொண்ட சமஷ்ட்டிக் கட்சியினர், சில குறிப்பிட்ட சட்டங்களை வேண்டுமென்றே மீறுவதன்மூலம் சிறை செல்ல எத்தனித்தனர். அதன்படி சித்திரை 14 இல் தமிழ் அரசு தபால்ச் சேவை எனும் நடவடிக்கையினை அவர்கள் ஆரம்பித்தனர். தபால் அதிபராக தன்னை அமர்த்திக்கொண்ட தந்தை செல்வா அவர்கள் ஆயிரக்கணக்கான தபால்த் தலைகளை விநியோகித்தார். மேலும் சித்திரை 16 ஆம் திகதி தமிழ் அரசு காணிக் கச்சேரியையும் அவர் ஆரம்பித்தார். இதன்மூலம் தமிழ் விண்ணப்பதாரிகளுக்கு அரச காணிகள் உரிமையாக்கப்பட்டன. சமஷ்ட்டிக் கட்சி தனது சத்தியாக்கிரக போராட்டத்தை, அரசுக்கு அடிபணியாமைப் போராட்டமாக முன்னெடுத்திருப்பதைக் கண்ட சிறிமா அரசு இதற்குப் பதிலடி கொடுக்க நினைத்தது. உடனடியாக அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திய சிறிமா, தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க ராணுவத்திற்கு சகல அதிகாரங்களையும் வழங்கி அனுப்பிவைத்தார். இதன் முதற்படியாக சமஷ்ட்டிக் கட்சியின் சத்தியாக்கிரக ஏற்பாட்டாளர்களையும், அதற்குத் துணையாக பணிபுரிந்த பல தொண்டர்களையும் ராணுவம் கைதுசெய்தது. சத்தியாக்கிரகப் போராட்டங்கள் அரச அடக்குமுறையினால் செயலிழக்க வைக்கப்பட்டாலும் கூட தமிழ் மக்களிடையே விடுதலைக்கான வேட்கை சிறிது சிறிதாக பற்றியெரிய இச்சத்தியாக்கிரக நடவடிக்கை காரணமாகியது. மேலும், தமது அகிம்சைவழிப் போராட்டத்தை கொடூரமாக அடக்க இறக்கப்பட்டிருக்கும் அரச ராணுவத்துடன் நேரடியாக மோதுவது எனும் மனநிலையினை தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் இது ஏற்படுத்திவிட்டிருந்தது.
  4. @ரஞ்சித், @nochchi, @நன்னிச் சோழன் 👉 https://www.facebook.com/30sec2remember 👈 தமிழர் படுகொலை சம்பந்தமான பதிவுகள்... மேலே உள்ள இணைப்பில் உள்ளது. தகவல்களை திரட்ட, உங்களுக்கு உதவியாக இருக்கும் என எண்ணியதால் பதிந்துள்ளேன்.
  5. அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும் அன்றே வாடிடுமேஏ பண்புடன் பழகும் பலநாள் கிளியும் பறந்தே ஓடிடுமே இதுதான் வாழ்வின் அனுபவமே இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே இதுதான் வாழ்வின் அனுபவமே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.