Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    19139
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87993
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20022
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53011
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/14/23 in all areas

  1. நம் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பொதுவாகப் பெரியோர் சொல்வார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி தைமாதம் 14 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் தைப்பொங்கல் வரும். அதுவே தமிழ் நாட்காட்டியில் தைமாதம் முதலாம் திகதியாகும். இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசஸ் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகின்றது. ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உதவியாக இருந்த மாடுகளுக்கும் நன்றி சொல்லும் நாளாகத் தைப்பொங்கலைத் தொன்று தொட்டுக் கொண்டாடி வருகின்றனர். சூரியன் மகரராசிக்குச் செல்லும் தினமே தைப்பொங்கல் தினமாகும். தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல், அல்லது பட்டிப் பொங்கல் என்று சொல்லி, உழவர்களுக்குத் துணையாக இருந்த மாடுகளுக்குப் பொங்கிப்படைப்பர். இலங்கையில் பொதுவாக 2 நாட்களும், புலம்பெயர்ந்த நாடுகளில் கால்நடைகளை வீட்டில் வளர்க்க முடியாது என்பதால் ஒரு நாள் பொங்கலை மட்டும் கொண்டாடுவார்கள், தமிழ் நாட்டில் சில இடங்களில் போகிப்பண்டிகை, தைப்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும் கொண்டாடுகிறார்கள். போக்கி என்ற சொல்தான் மருவி போகி என்றாகியது. போகிப்பண்டிகைக்காகப் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல, வீடு, வளவுகளைச் சுத்தம் செய்வர். தமிழ் நாட்டின் சில இடங்களில் ஜல்லிக்கட்டு, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற பல விதமான விளையாட்டுப் போட்டிகள் இத்தினங்களில் இடம் பெறுகின்றன.
  2. கூடவே உன்ரை குடும்பத்தையும் பார்த்துக்கிறேன்.
  3. Commodity (OTC market) Shares நீங்கள் ஒரு நிறுவன பங்கு வாங்கினால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர், பங்கு இலாபத்தின டிவிடெண்ட் என அழைப்பார்கள் அது சில நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் வழங்குவார்கள் அவுஸில் பெரும்பாலும் ஆண்டிற்கு இரு முறை வழங்குவார்கள், அதுதவிர நிறுவனத்தின் பெறுமதி அதிகரித்தால் ஏற்படும் விலை அதிகரிப்பாலும் பணம் ஈட்டலாம் அல்லது நட்டமடையலாம். Forex உம் OTC market தான் ஆனால் Manipulate செய்வது கடினம் Regulated market (Share market) less manipulation? நீண்ட கால முதலிடுபவர்கள் டிவிடெண்ட் குறிவைத்து முதல் இடுவர், அவ்வாறாயின் நிறுவனத்தின் பங்கு விலைமாற்றத்தினால் எதிர்காலத்தில் விலை குறையலாம் என கருதும் முதலீட்டாளர்கள் தமது பங்குகளை தற்காலிகமாக மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பர் (ஒரு தொகை வாங்கிவிட்டு). விலை மிகைப்பட்டுள்ளது என கருதும் Speculator அந்த பங்குகளை முதலீட்டாளரிடம் கடனாக வாங்கி சந்தை விலையில் விற்பர் (Short selling) விலை குறைந்த பின் அந்த பங்குகளை வாங்கி (Short Cover) மீளவும் முதலீட்டாளரிடம் திரும்ப கொடுத்து விடுவார்கள். உள்வீட்டு தகவலினடிப்படையில் (தவறான) டூக் சகோதரர்கள் தோடம்பழ சாற்றினை வாங்குவார்கள், எடி மேர்பி நண்பரும் தவறான தகவலை மாற்றி வைத்துவிடுவார்கள், பின்னர் டூக் சகோதரர்கள் வாங்கும் போது அவர்களுக்கு அதிக விலையில் எடி மேர்பி விற்கிறார் (Shorting Orange juice). செய்தி வெளியாகி விலை இறங்கியபின் அந்த விற்ற ஒப்பந்தங்களை (Short contract) திரும்பவும் குறைந்த விலையில் மீள வாங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள் (Short cover). குறைந்த விலையில் வாங்கி விற்று இலாபம் ஈட்டலாம் அல்லது கூடிய விலையில் உள்ள பங்கினையோ அல்லது வேறு எந்த உபகரணத்தினையோ விற்று விட்டு திரும்ப அதனை வாங்கி கொடுக்கலாம். Short selling CFD இல் மிக இலகுவானது, குறித்த விலையில் விற்றல் நடவடிக்கையினை தெரிவு செய்து விட்டு பின்னர் அந்த ஓடரினை மூடிவிட்டால் சரி.
  4. பச்சை புள்ளிகளை இடுபவர்களை யாரென காட்டாதபடி நிர்வாகம் செய்துள்ளது.
  5. எனது வர்த்தகத்தின் இன்றைய நிலை. NATGAZ நேற்றுவரை கிடைத்த இலாபம் இன்றைய 5.5 வீத வீழ்ச்சியுடன் இழக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நிச்சயமாக மீண்டும் உயரும். Weight Watchers நேற்று ஏதோ காரணத்துக்காக பாரிய சரிவைச் சந்தித்தது. இதன் கடந்தகால தரவுகளைப் பார்த்துவிட்டு மலிவாக இருந்ததால் வாங்கியது. ஒரே நாளில் நல்ல இலாபம் தந்துள்ளது. COTTON தொடர்ந்தும் சரிந்தவாறு உள்ளது, பொறுத்துப் பார்க்கலாம். UK100 என்னுடைய கணிப்புத் தவறு. திங்கள் பார்த்துவிட்டு விற்க வேண்டும்.
  6. முதலாவது கேள்விக்கு மட்டுமான பதில். பங்குவர்த்தகத்துக்கு பெரிய கணணித் திரையே உகந்தது. நீங்கள் முதலிட்ட OIL இல் அழுத்தினால் இப்படி வரும் (மன்னிக்கவும் பிரெஞ்சில் உள்ளது). 1. எண்ணை வர்த்தகத்தின் தற்போதைய விலை 2. நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு இன்றைய விலை ஏற்ற இறக்க வீதம் 3. வர்த்தகச் சந்தை மூடப்பட்டுள்ளதா திறந்துள்ளதா என்ற விபரம். திறக்கும் மூடும் நேரங்களை இதனை அழுத்தி அறியலாம். 4. நீங்கள் முதலீடு செய்த தொகையும் வாங்கப்பட்ட பங்கு எண்ணிக்கைகளும் 5. வாங்கியபோது ஒரு பங்கின் விலையும் வாங்கப்பட்ட திகதியும் 6. தற்போது OIL வர்த்தகம் மூலம் உங்களுக்குக் கிடைத்துள்ள இலாபம் (அல்லது நட்டம்) 7. SL - உங்களது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக நீங்கள் தீர்மானிக்கும் எல்லை. 99 டொலர்களுக்கு மேல் நட்டம் ஏற்பட்டால் வர்த்தகம் தானாகவே மூடிக் கொள்ளும். இதன்மூலம் நீங்கள் முதலிட்ட தொகையில் 101 டொலரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். பங்கு வாங்கிய பின்னரும் இதனை மாற்றிக் கொள்ளலாம். 8. Leverage - இங்கு X5 என்று இருப்பது முதலிட்ட தொகை 5 மடங்கு போன்று கணிக்கப்படும். அதாவது இலாபம் 1000 டொலர் முதலிடப்பட்டது போன்று இருக்கும். இழப்பும் மிக ஆழமாக இருக்கும். உதாரணமாக Forex வர்த்தகத்தில் X30 ஆக முதலிட்டிருந்தால் வர்த்தகம் 3.3 வீதம் வீழ்ச்சியடைந்தால் மொத்த முதலீட்டையும் இழந்துவிடுவீர்கள். கவனமாகக் கையாள வேண்டும். ஒரு தடவை முதலிட்டால் மாற்றம் செய்ய முடியாது. 9. TP - நட்டம் வரும்போது தானாக மூடப்படுவது போன்று இலாப எல்லையையும் தீர்மானிக்கலாம். இந்த எல்லையை எட்டும்போது வர்த்தகம் தானாக மூடிக் கொண்டு முதலும் இலாபமும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றலாம். உங்கள் வர்த்தகத்துக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாளி. சில நிமிடங்களில்கூட உங்கள் முதலில் பெரும் பகுதியை இழக்கலாம். அப்படி ஏற்பட்டால் எந்த மாற்றீடும் கிடையாது. யாரும் உதவிக்கு வரப்போவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்த்துகள்.🙂
  7. சைக்கிள் ஓடும் பாதை என நினைத்து... "டிராம்" சாரதியை பேசிய ஒருவர். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.