Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    8910
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19144
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/24/23 in all areas

  1. அங்கீகரிக்கப்பட்ட மக்கள் ஆணை தந்தை செல்வாவின் இறுதிப் பிரகடணம் ஐந்து காரணங்களுக்காக "1977" ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வருடத்திலேயே இலங்கையின் இரு முக்கிய சிங்களக் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையில் தமிழருக்கு இனப்பிரச்சினை என்று ஒன்று இருக்கிறது என்பதனை ஏற்றுக்கொண்டன. இந்த வருடத்திலேயே தந்தை செல்வா இலங்கைத் தமிழருக்கிருக்கும் ஒரே தெரிவு சுதந்திரமான தனிநாடு மட்டுமே என்று பிரகடணம் செய்திருந்தார். இந்த வருடத்திலேயே இலங்கைத் தமிழர்கள் தனிநாட்டிற்கான தமது விருப்பத்தினை ஏகமனதோடு தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். இந்த வருடத்திலேயே ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பொலீஸ் ராணுவ அமைப்புக்களையும், காடையர்களையும் வைத்துக்கொண்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கும் கைங்கரியத்தினை ஆரம்பித்திருந்தார். இந்த வருடத்திலேயே தமிழ் ஆயுத அமைப்புக்கள் அரச ராணுவத்திற்கெதிரான தமது ஆயுத நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. இது ஒரு தேர்தல் ஆண்டாகும். இந்த வருடத்திலேயே சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்பின் மூலம் நடைமுறைக்கு முரணாக தனது 5 வருட ஆயுட்காலத்தை இன்னும் இரு வருடங்களால் நீட்டித்து, ஏழு வருடங்களை நிறைவு செய்திருந்த ஆண்டு. ஜெயவர்த்தனாவிற்கு சிங்கள மக்களிடையே அதிகரித்துவரும் செல்வாக்கினைக் கண்ணுற்று அச்சமடைந்த சிறிமாவோ, தமிழ் மற்றும் முஸ்லீம் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட முயற்சித்துக்கொண்டிருந்தார். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக பாராளுமன்றத்தில் இவ்வின மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, அம்மக்களின் குறைகளையும், தேவைகளையும் அறிந்துகொள்ள கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பினை இளைஞர்கள் மிகுந்த எரிச்சலுடனேயே பார்த்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழ் மக்களால் தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி ஒன்றுதான். அது தம்மை ஒருவிடுதலைப் போராட்ட அமைப்பாக உருவாக்கி தனிநாட்டிற்கான வரைபினை வரைவது மட்டும்தான், நீங்கள் சிறிமாவின் கூட்டத்தில் பங்கேற்க எந்தத் தேவையுமில்லை என்று அவர்கள் வாதாடினர். தமிழ் இளைஞர் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எந்தவொரு அரசியற் கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாதென்றும், தனிநாட்டினை உருவாக்கும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று கேட்டிருந்தது. தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளை இந்தப் பிரச்சினையினை தந்தை செல்வாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தது. சுமார் 79 வயது நிரம்பிய, அனுபவம் மிக்க சிவில் வழக்கறிஞரான தந்தை செல்வா தன்னைச் சந்திக்க வந்திருந்த தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்களிடம் பின்வருமாறு கூறினார்.
  2. "தயவுசெய்து ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறார்கள் என்றால் ஒருபோதும் அதனை நிராகரிக்க வேண்டாம். அக்கூட்டத்தில் பங்குபற்றுவதனால் மட்டுமே அவர்கள் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகிவிடாது. ஒரு கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் கூற விரும்புவதைக் கூறுவதற்கான சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் எங்கள் கவலைகளை செவிமடுக்கத் தயாரில்லாததனால், நாம் எம் வழியில் செல்லப்போகிறோம் என்பதை இந்த அரசாங்கத்திற்கு நான் சொல்லப்போகிறேன். எமக்கான தனிநாடான தமிழ் ஈழத்தை அமைப்பதில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் இடமில்லை என்பதையும் நான் அங்கு சொல்லப்போகிறேன்" என்று அவர் கூறினார். பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்க சிறிமாவோ தலைமையில் 1977 ஆம் ஆண்டு மாசி 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தந்தை செல்வா இதனையே கூறினார். தமிழருக்கான தனிநாடு என்கிற பேச்சினை கேட்கவே அரசு தயாரில்லை என்று கடும் தொணியில் அமைச்சர் பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்கா பேசியதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த தந்தை செல்வா அவர்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் ஈழம் எனும் தமது இலட்சியத்தில் எதனையும் விட்டுக் கொடுக்க தாம் தயாரில்லை என்றும், ஆனால் இடைக்கால ஒழுங்காக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அவலங்களுக்கான தீர்வுகளை ஆராய ஒரு கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார். அன்று நடந்த கூட்டத்திலும், அதற்குப் பின்னர் பங்குனி 16 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திலும் பங்குபற்றிய சிறிமாவோ தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அவலங்களை செவிமடுக்கத் தயாராகவே இருந்தார். இவ்விரு இனங்களையும் பாதித்து வந்த முக்கியமான ஆறு விடயங்கள் அடையாளம் காணப்பட்டன. தமிழ் மொழியின் பாவனை பல்கலைக்கழக அனுமதி வேலையில்லாப்பிரச்சினை தமிழ் அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆதிகாரப் பரவலாக்கப்பட்ட நிர்வாகம் இந்தியத் தமிழர்கள் மலையகத் தோட்டங்களில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் சிறிமாவோ இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தான் தர விரும்புவதாகக் கூறினார். தமிழ் மொழியினை தேவைக்கேற்றாற்போல் பாவிக்கும் அனுமதியை யாப்பினூடாக உருவாக்குவது, பல்கலைக்கழக அனுமதி முறையினை மாற்றுவது, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வேலையில்லாப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது, தமிழ் அரச ஊழியர்களின் பிரச்சினைக்கான தீர்வு, மலையகத் தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்று பல விடயங்களில் சாதகமான சிந்தனையினை அவர் கொண்டிருந்தவராகக் காணப்பட்டார். மேலும், அதிகாரப் பரவலாக்கம் என்பது தனது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் கூறினார். தந்தை செல்வா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி சாதகமான மனநிலையினைக் கொண்டிருந்தபோதும், ஏனையவர்கள் அதனை நம்பத் தயாராக இருக்கவில்லை. கூட்டத்தின் முடிவுபற்றி கருத்துத் தெரிவித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் செல்வா பின்வருமாறு கூறினார்,
  3. றோயல் கல்லூரி, கொழும்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான தனது சந்திப்பு ரகசியாமக இருக்கவேண்டும் என்று ஜெயவர்த்தனா விரும்பினார். ஆகவே கொழும்பு றோயல் கல்லூரிக்கு முன்னால் அமைந்திருந்த தனது தொடர்மாடி வீட்டிற்கு தோசை விருந்தொன்றிற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் தொண்டைமான் அழைத்திருந்தார். ஜெயவர்த்தனா, எம் டி பண்டா மற்றும் எஸ்மொண்ட் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியையும், அமிர்தலிங்கம் , சிவசிதம்பரம் மற்றும் கதிரவேற்பிள்ளை ஆகியோர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட்டால் சிறிமாவின் அரசாங்கத்தினை வீழ்த்த முடியும் என்று தொண்டைமான் கூறவும் அங்கிருந்த அனைவரும் அதனை ஆமோதித்தனர். "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைக் காத்திட வேண்டும்" என்று ஜெயவர்த்தனா கூறினார். இதற்குப் பதிலளித்த கதிரவேற்பிள்ளை, "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, அதனைக் காப்பாற்றும் உங்களின் முயற்சிக்கு நாம் ஆதரவாய் இருப்போம்" என்று கூறினார். இதனால் மகிழ்ந்த ஜெயவர்த்தனா, "நாங்கள் இருவரும் ஒரே ஆவர்த்தனத்தில் பேசுகிறோம்" என்று கூறினார். பின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப்பார்த்து, "நான் பதவியேற்றதும் எந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் ஜே ஆர். அப்போது தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்னவென்பதை இரு பகுதியினரும் ஆராய்ந்தார்கள். அதன்படி பின்வரும் பிரச்சினைகள் அவர்களால் அடையாளம் காணப்பட்டன. தமிழ் மொழியின் பாவனை தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியிருப்புக்களை நிறுத்துவது வேலைவாய்ப்பு பல்கலைக்கழக அனுமதி இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தந்தை செல்வா கைக்கொண்ட அணுகுமுறைக்கும் அமிர்தலிங்கம் கைக்கொண்ட அணுகுமுறைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருந்தது. செல்வா அவர்கள் 1957 இல் பண்டாரநாயக்காவுடன் பேசும்போதும், 1977 இல் சிறிமாவுடன் பேசும்போதும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றைப்பற்றியே அவர் பேசினார். தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்காது ஆனால், தமிழ்மக்கள் எதிர்கொண்டு நிற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளைப்பற்றி அவர் பேசினார். இதன்படி பண்டாரநாயக்காவுடன் சமஷ்ட்டி அலகு அடிப்படையிலான தீர்வு பற்றியும், சிறிமாவுடன் தனிநாட்டுக்கான அமைப்புப் பற்றியும் அவர் பேசியிருந்தார். ஆனால், அமிர்தலிங்கமோ தனிநாட்டிற்கான தேவை பற்றி ஒருபோதும் ஜெயவர்த்தனாவுடன் பேசியதில்லை, மாறாக பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி மட்டுமே அவர் பேசினார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தொண்டைமானின் இல்லத்தில் அன்று நடந்த சம்பாஷணைகளில் ஒரேயொரு முறை மட்டுமே தனிநாடு எனும் பதம் பாவிக்கப்பட்டது. அதுகூட ஜெயவர்த்தனாவினாலேயே கூறப்பட்டது. அனைவரும் இந்திய கோப்பிப் பாணத்தை அருந்திவிட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்து பின்வருமாறு கூறினார் ஜெயவர்த்தனா, " நீங்கள் தனிநாட்டிற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எனக்குத் தேவையானதெல்லாம் நீங்கள் 15 ஆசனங்களை வெல்வது மட்டும் தான். அப்படி வென்றால் மட்டுமே என்னால் அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியும்" என்று கூறினார். தனிநாட்டிற்கான தேவையினை அந்தச் சந்திப்பில் முன்வைப்பதில் அமிர்தலிங்கம் தோல்விகண்டிருந்தாலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சி தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவைப்பதில் வெற்றி கண்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவை தமது 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழருக்குப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்ததுடன், அவற்றுக்குத் தீர்வு காணவேண்டிய அவசியம் பற்றியும் கூறியிருந்தன. தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை, அவர்கள் சிங்களவரைக் காட்டிலும் அதிக சலுகைகளை அனுபவிக்கிறார்கள், தாம் அனுபவிக்கும் சலுகைகளைத் தொடர்ச்சியாக தக்கவைக்கவே கூக்குரலிட்டு வருகிறார்கள் என்று உலகின் முன் பிரச்சாரம் செய்துவந்த சிங்களவர்களின் கடும்போக்கில் இது பாரிய திருப்பம் என்றால் அது மிகையில்லை.
  4. தாய் ஒரு சுமை தாங்கி.
  5. ரத்தம் குறைவானவர்கள் ( ஹீமோகுளோபின் ) ஈரல் சமைத்து உண்டால் பயன் கிடைக்கும்.
  6. சுவையான மசாலா அரைத்த ஆட்டு ஈரல் பிரட்டல் .......! 👍
  7. "இவ்வளவு காலமும் தமிழர்களுக்கென்று எந்தப் பிரச்சினையுமில்லை என்று சிங்களவர்கள் உலகத்தை ஏமாற்றி வந்திருக்கின்றனர். சிங்களவர்களை விடவும் தமிழர்களே அதிக சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் என்றும் கூறிவந்தனர். ஆனால், அவர்களால் இதனை இனிமேல் கூறமுடியாது. ஏனென்றால், அரசாங்கம் தமிழர்களுக்குத் தனியான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அவற்றினை அடையாளம் காணவும் அவர்களால் முடிந்திருக்கிறது. ஒரு தனிநாட்டிற்கான முயற்சியினை ஆரம்பிப்பதற்கு எமக்குப் பலமான அடித்தளம் ஒன்று கிடைத்திருக்கிறது" என்று கூறினார். ஆனால் தமிழ் இளைஞர்களோ இந்தப் பதிலினால் திருப்தியடையவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனிநாட்டிற்கான முயற்சிகளை எடுக்காமல் தாமதித்துவருவதாக இளைஞர்கள் குற்றஞ்சாட்டினர். ஆகவே, அவர்களை பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறு கோரிய தந்தை செல்வா, வரப்போகின்ற தேர்தலினை ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகக் கணித்து, தனிநாட்டிற்கான ஆணையினை மக்களிடமிருந்து பெற்றுவிட வேண்டுமென்றும், பின்னர் படிப்படியாக தனிநாட்டிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்றும் கூறினார். தந்தை செல்வா தனது இரண்டாவது செயற்பாட்டினை திருகோணமலை இந்துக் கல்லூரியில் பங்குனி 1977 இல் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் முன்னெடுத்தார். அங்கு பேசிய தந்தை செல்வா அவர்கள், "1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் தொடர்பான மாற்றப்படமுடியாத தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு விட்டது. சிங்களத் தலைவர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால், எங்களை எமது வழியில் செல்ல விடுங்கள் என்பதுதான். எமக்கிடையே கசப்புணர்வு ஏதுமின்றி, அமைதியாகப் பிரிந்துசெல்ல எம்மை அனுமதியுங்கள். சம அந்தஸ்த்துள்ள இரு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பின்மூலம் இந்த நாடுகளின் இருப்பினை நாம் மேம்படுத்திக்கொள்ளலாம். தமிழர்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் கிடையாது. எமது இளைய சந்ததியினரிடம் கசப்புணர்வு வளர்ந்து வருகிறது. இந்தக் கசப்புணர்வினை மேலும் வளரவிட்டு, மோதல்களாக்கி, ஈற்றில் வேற்று நாட்டு தலையீட்டினை இந்த நாட்டில் உருவாக்குவதைக் காட்டிலும் சமாதான முறையில் எமக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கும் வழிவகைகளை நாம் கையாள வேண்டும். இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை நாம் நம்புவதோடு, இந்தக் கடுமையான பயணத்தில் நாம் வென்றே தீருவோம் என்பதையும் இக்கணம் கூறிக்கொள்கிறேன்" என்று கூறினார். தமிழரின் பிரச்சினைக்கான அங்கீகாரம் 1977 ஆம் ஆண்டு, சித்திரை 29 ஆம் திகதி தந்தை செல்வா மரணமானார். அவருக்குப் பின்னர் அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக வந்தபோதும் தந்தை செல்வாவினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட தந்தை எனும் ஸ்த்தானத்தை அவரால் நிரப்ப முடியவில்லை. தந்தை செல்வா அவர்கள் தனக்கு முன்னால் வைக்கப்படும் சகல விவாதங்களையும் அமைதியாகக் கண்களை மூடிச் செவிசாய்த்துவிட்டு, அவற்றுக்கான தனது தீர்வுகளை அவர் முன்வைக்கும்போது எல்லோருமே கேள்வியின்றி அதனை ஏற்றுகொண்டார்கள். ஆனால், அமிர்தலிங்கம் வித்தியாசமானவர். பிரச்சினைகளைக் கிளப்பிவிடுவதும், மக்கள் முன் தன்னை பிரபலப்படுத்துவதும் அவருக்கு பிடித்திருந்தது. மக்கள் தந்தை செல்வா மீது வைத்திருந்த மரியாதையும், மக்கள் மீது செல்வா அவர்கள் கொண்டிருந்த கட்டுப்பாடும் அமிர்தலிங்கத்திற்கு எரிச்சலை ஊட்டியிருந்தது. அமிர்தலிங்கம் ஒரு மக்கள் தலைவன் என்பதை விடவும் ஒரு அரசியல்வாதியாகவே செயற்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டபின்னர் அமிர்தலிங்கத்தின் ஒரே கரிசணையாக இருந்தது தேர்தலினை எதிர்கொள்வது எவ்வாறு என்பதும், தேர்தலின் பின்னர் தான் செயற்படவேண்டிய முறை என்னவென்பது பற்றி மட்டும் தான். ஜெயவர்த்தன தேர்தலில் அமோக வெற்றியீட்டுவர் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தினைச் செய்யலாம் என்று அமிர்தலிங்கம் விரும்பியிருந்தார். வெளிப்படையாகவும், ரகசியமாகவும் ஜெயவர்த்தனவின் விருப்பினை நாடிபிடித்தறிய அமிர்தலிங்கம் சில செயல்களைச் செய்தார். வெளிப்படையாக அவர் செய்த விடயம் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் ஊடாக பேச்சு ஒன்றுனை வழங்கியது. நாளிதழான வீரகேசரிக்குப் பேட்டியளித்த துரைரட்ணம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வினை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆலோசிக்கவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி விரும்புவதாகக் கூறியிருந்தார். இதே மாதிரியான கருத்தையே அமிர்தலிங்கம் ஊர்காவற்றுரையில் தான் பேசிய கூட்டத்திலும் தெரிவித்தார். ரகசியமான செயற்பாட்டினை தொண்டைமான் ஊடாக அவர் நடத்தினார்.
  8. ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான பாட்டு. இணைப்புக்கு நன்றி சுவி.
  9. செந்தாமரையே செந்தேன் இதழே..........! 😍
  10. வலையில் விழும்வரை வளமாக வாழ்ந்திருந்தேன்......! 🤔
  11. 1921 இல் தங்கத்தினை விற்றிருந்தேன் Stop loss 1929 இனை அடைந்ததால் நட்டத்துடன் வர்த்தகம் மூடப்பட்டது, தங்கம் அடுத்த எதிர்ப்பு வலயத்தில் (Resistance level) 1976 இல் தங்கத்தினை விற்கபோவதில்லை. தங்கம் தொடர்பாக எனது Bearish கண்ணோட்டம் தவறானது என்பதை சந்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக கருதுகிறேன்(குறைந்த பட்சம் தற்காலிகமாகவாவது). Markets are never wrong opinions often are. Back your judgment and don't trust your opinion, until the action of the market itself confirms your opinion - Jesse Livermore 1900 தற்காப்பு வலயம் (Support tested) உறுதி செய்யப்பட்டுள்ளமையால் விலை 1900 கீழிறங்கினாலேயே விற்பது அதிக பாதுகாப்பான வர்த்தகமாக இருக்கும். ஆனால் முக்கிய வலயமாக தற்போது 1926 உள்ளது இந்த வலயத்தில் தங்கம் தனது தற்காப்பு வலயமாக உறுதி செய்தால் தற்காலிகமாக தங்கத்தினை வாங்கவுள்ளேன், எதிர்பார்ப்பு இலக்கு விலை இறுதி உயர்விலை (குறுங்கால வர்த்தகம்).
  12. முன்பு ஏற்கனவே கூறியதுபோல தங்கம் 1926 வலயத்தினை மீள பரிசோதிக்கும் போது (Re - Test the level) விற்பதாக இருந்த திட்டத்தினை 1921 இல் Doji candle in hourly (Entry signal for short) சிறு தயக்கம் காரணமாக விட்டு விட்டேன் தற்போது 1908 இல் விற்பனையாகிறது. விலை 1926 இற்கும் 1900 இடையே பக்கவாட்டாக தற்காலிகமாக நகரும் என நம்புகின்றேன், மீண்டும் 1926 இற்கு விலை அண்மையாக வரும்போது விற்கதீர்மானித்துள்ளேன். Break out ஏற்பட்டு விலை தற்காலிகமாக அதிகரிக்கலாம் ஆனால் தங்கத்தினை வாங்குவதில்லை விற்பது எனும் முடிவில் உள்ளேன். சாதகமான நிலையில் விற்கத்தீர்மானித்துள்ளேன். விலை மீண்டும் 1926 வரை உயராமல் 1900 கீழிறங்கினால் அந்த விலையில் விற்க தீர்மானித்துள்ளேன்.
  13. அழகான இளவெயில் நேரம்......அசைந்தாடும் மரங்களின் கூட்டம் ........! 👍
  14. கருணாவின் கூட்டாளியான பிள்ளையானின் துரோகச்செயலகளைப் பட்டியலிடும் முன்னாள் போராளி: தகவல்களைச் சேகரப்படுத்திக்கொள்ளவும். குறிப்பாக சாவொறுப்புப்பெற்ற தேசவஞ்சகன் இனிதனின் ஆட்கள் மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதலொன்றையும் குறிப்பிடுகின்றார். https://eelam.tv/watch/க-ல-க-ள-ள-கப-பம-ஆள-கடத-தல-ல-ஈட-பட-ட-ப-ள-ள-ய-ன-உண-ம-ய-உட-த-த-ம-ன-ன-ள-ப-ர-ள_xgNP1eckFfP4vRh.html (தங்களின் திரிக்கு வலுச்சேர்ப்பதாக இருக்குமென்று எண்ணுகிறேன். )

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.